தமிழக தேர்தலில் யார் ஜெயிக்கக் கூடாது?

இந்தத் தேர்தல் களத்திலும் மதச்சார்பின்மை தனது துர்மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல, மதச்சார்பின்மை என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளை தங்கள் அணியில் அரவணைக்க இரு பிரதான திராவிடக் கட்சிகளும் தயங்கவில்லை.

திமுக, அதிமுக என்ற இரு பிரதான அணிகளிலும் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் எப்படியும் தங்கள் பிரதிநிதியை சட்டசபைக்குள் அனுப்ப, திட்டமிட்டுச் செயல்படுகின்றன. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்திலிருந்தே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசியல் கூட்டணிகளில் இடம் பிடித்து வந்துள்ளது. சுதந்திரத்துக்கு முன் தேசம் பிரிக்கப்பட வேண்டுமா என்பதற்கான கருத்துக் கணிப்பு நடந்தபோது, பாக்.பிரிவினையை ஆதரித்து வாக்களித்தவர்கள் தான் தமிழக முஸ்லிம் லீகினர். அவர்களை தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டு மதசார்பின்மை குறித்து பிரசங்கித்து வந்தார் கருணாநிதி.  முஸ்லிம் லீகின் தலைவர் இஸ்மாயிலை  ‘கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்’ என்று அழைத்து, இஸ்லாமியர்களை வசப்படுத்தினார் அவர். வார்த்தை வித்தகராயிற்றே!

எம்ஜிஆர் வருகைக்குப் பின், அக்கட்சியும் இரு கூறாகப் பிரிந்தது. அதுவும் ஒருவகையில் அரசியல் திட்டமே. எந்த அணியில் முஸ்லிம் லீகின் ஒரு பிரிவு இருந்தாலும், அவர்களின் பிரதிநிதி சட்டசபைக்குள் நுழைவது உறுதியாகிவிடும். அப்துல் லத்தீப் திமுகவுக்கும் அப்துல் சமது அதிமுகவுக்கும் சாதகமாக இருந்தார்கள். ஒருவகையில் இஸ்லாமியர்களின் அரசியல் பிரதிநிதிகளாக இவர்கள் செயல்பட்டார்கள்.

Slide10

சென்னையில் தமுமுக கலவரம்- 2012: மறக்க முடியுமா?

 

ஆனால், காலப்போக்கில் முஸ்லிம் லீகின் தீவிரத் தன்மை, தமிழகத்தில் வளர்ந்த அதிதீவிர இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் போட்டியிடும்  அளவுக்கு இல்லாததால், புதிய முஸ்லிம் கட்சிகள் தோன்றின. அவற்றில் பெரும்பாலானவை, பயங்கரவாத அமைப்புகளான ஜிகாத் பேரவை, அல் உம்மா போன்றவற்றின் வேரிலிருந்து  கிளைத்தவை. தற்போது தமுமுக, தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஆகியவை பிரதான இஸ்லாமிய இயக்கங்களாக உருவெடுத்துள்ளன. இவை பாரம்பரியமான முஸ்லிம் லீகின் ஆதரவுத் தளத்தை காலி செய்துவிட்டன. இவர்கள் அனைவருமே வாஹாபியசத்தை நிலைநாட்ட விரும்பும் இஸ்லாமிய அகிலவாதிகள். இவற்றின் செயல்பாட்டில் தான் வேறுபாடுகள்.

இவற்றில் தமுமுகவின் (ஜவாஹிருல்லா) மனிதநேய மக்கள் கட்சி,  அதிலிருந்து பிரிந்த (தமிமுன் அன்சாரி) மனிதநேய ஜனநாயகக் கட்சி, பாப்புலர் ஃப்ரன்டின் எஸ்.டி.பி.ஐ. கட்சி (தெஹ்லான் பாகவி),  தவ்ஹீத் ஜமாதின் இரு கூறுகள் (ஜெயினுல் ஆபிதீன் தமிழக தவ்ஹீத ஜமாத், எஸ்.எம்.பார்க்கரின் இந்திய தவ்ஹீத ஜமாத்) ஆகியவை அரசியல் களத்தில் உள்ளன. அதேபோல, முஸ்லிம் லீகும் பல பிரிவுகளாக உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (கே.எம்.காதர் மொய்தீன்), இந்திய தேசிய லீக் (தடா அப்துல் ரஹீம்), தமிழ் மாநில முஸ்லிம் லீக் (ஷேக் தாவூத்) ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

இவ்வாறு முஸ்லிம் கட்சிகள் பலவாறாகப் பிரிந்திருந்தாலும், அவற்றின் திட்டமிட்ட நோக்கம் ஒன்றே.   கூட்டணி அரசியலில் தங்கள் சமுதாயத்தின் இருப்பை நிலைநாட்டுவதும், பாஜகவை  கூட்டணிகளில் சேர விடாமல் தடுப்பதும், சட்டசபையில் பிரதிநிதித்துவம் பெறுவதும் தான் இக்கட்சிகளின் ஒரே செயல்திட்டம்.

அந்த அடிப்படையிலேயே, இக்கட்சிகள் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி காண்கின்றன. தங்கள் கூட்டணியில் இஸ்லாமிய முகம் வேண்டும் என்பதற்காக, முக்கிய கட்சிகளும் இவற்றை நாடுகின்றன. அதற்காக பெருமளவில் பணப் பரிமாற்றமும் நடப்பதுண்டு. அதற்காகவே பல புதிய இஸ்லாமியக் கட்சிகள் தோன்றியதும் உண்டு.

தற்போதைய தேர்தல் களத்தில், அதிமுக அணியில் மனிதநேய ஜனநாயக கட்சி (வேலூர், நாகப்பட்டினம்- 2 தொகுதிகள்), தமிழ் மாநில முஸ்லிம் லீக் (கடையநல்லூர்) ஆகிய முஸ்லிம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணியில் இடம்பெறுவதாக அறிவித்த இந்திய தவ்ஹீத் ஜமாத்துக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

அதேபோல, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (விழுப்புரம், கடையநல்லூர், பூம்புகார், வாணியம்பாடி, மணப்பாறை- 5 தொகுதிகள்), மனிதநேய மக்கள் கட்சி (ராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர்- 4 தொகுதிகள்) இடம் பெற்றுள்ளன.

ஆரம்பத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி அதிலிருந்து விலகி, திமுக அணியில் சேர்ந்தது. அதனால் ஏற்பட்ட மதச்சார்பின்மை இழப்பை, இந்திய தேசிய லீகின் ஆதரவு சமன்படுத்திவிட்டது.

இந்த மூன்று அணிகளும் தான் மதச்சார்பின்மையைக் காப்பதாக முழங்குகின்றன. ஒட்டுமொத்த சிறுபான்மை இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைக் கவர்வதற்காகவே இந்த நாடகம். உண்மையில் முஸ்லிம் மக்களின் முன்னேற்றமல்ல இக்கட்சிகளின் லட்சியம். அவர்களின் வாக்குவங்கி தான் இவர்களின் ஒரே இலக்கு. இதில் விந்தை என்னவென்றால்,  மிகவும் தீவிரமான மதவெறிக் கோட்பாடுகளைக் கொண்ட இந்த இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளை தங்கள் அணியில் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், பாரதிய ஜனதா கட்சியை மதவாதக் கட்சி என்று விமர்சித்து கூப்பாடு போடுவதுதான்.

ambur news

செய்தியைச் சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்.

 

இவர்களில் கருணாநிதியின் தாராள மனம் யாருக்கும் வராது. அவர் தான் 10 தொகுதிகளை இஸ்லாமிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். அவற்றில் உளுந்தூர்பேட்டையில் நிற்க விரும்பாமல் அத்தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி திமுகவுக்கே திருப்பி அளித்தது!

அதிமுக அணியில் மூவருக்கு தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மக்கள் நலக்கூட்டணியில் தனிப்பட்ட இஸ்லாமியக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இப்போது விஷயத்துக்கு வருவோம்.  இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் நான்கிற்கு 12 தொகுதிகள் இரு திராவிடக் கட்சிகளால் அளிக்கப்பட்டுள்ளன. ஆகவே இரு அணிகளில் எவர் வென்றாலும்,  இஸ்லாமியக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமேனும், தேச நலனைக் கருத்தில் கொண்டு மாற்று அரசியல் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது நமது கடமை. ஆம்பூரில் அதிமுக ஆதரவுடன் வென்ற மனிதநேய மக்கள் கட்சியால் அங்கு சமூகப் பதற்றமும், காவல்துறையினரையே ஓட ஓடத் துரத்தி தாக்கிய கலவரமும் நடைபெற்றதை மறந்துவிடக் கூடாது. அக்கட்சி எந்த வெட்கமும் இன்றி அணி மாறி இருக்கிறது. அதை விமர்சிக்கவும் அதிமுக தயாரில்லை என்பதே, மமக குறித்த அச்சம் அக்கட்சிக்கு இருப்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த 12 தொகுதிகளில் விழுப்புரம், பூம்புகார், வாணியம்பாடி, மணப்பாறை, ராமநாதபுரம்,  ஆம்பூர், தொண்டாமுத்தூர், வேலூர் ஆகிய 10 தொகுதிகளில் இக்கட்சிகள் தவிர்த்த மாற்றுக் கட்சியினர் வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால், நாகப்பட்டினம், கடையநல்லூர் தொகுதிகளில் போட்டியே இரு இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளிடையில் தான். நாகப்பட்டினத்தில் மமக- மஜகவும், கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- தமிழ் மாநில முஸ்லிம் லீகும்  மோதுகின்றன.  அத்தகைய அபத்தமான நிலையை திமுகவும் அதிமுகவும் ஏற்படுத்தியிருக்கின்றன. இத்தொகுதிகளில் இவர்களைத் தவிர்த்த மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் வெல்வது நாட்டுக்கு நல்லது.

இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பொதுவான அரசியல் கட்சிகளில் வேட்பாளராகப் போட்டியிடும் இஸ்லாமியர்கள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் கட்சிகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள்.

எந்தக் கட்டுப்பாடும் இல்லாத மதவெறி மிகுந்த அடிப்படைவாத இஸ்லாமியக் கட்சிகள் வெல்வதென்பது, தமிழகத்தில் உள்ள முஸ்லிம்  மக்களை  மேலும் தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்து,  பொதுமக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடும். எனவே இந்தக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் வாக்காளர்கள், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது என்பதை விட,  இவர்கள் வெல்லக் கூடாது என்பதில் தீர்மானமாக இருப்பது அவசியம்.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டோம். விழித்துக் கொள்வது மக்களின் பொறுப்பு.

வெல்ல வேண்டியவர்கள் யார்?

இந்தத் தேர்தலில் பாஜக  சட்டசபை பெரும்பான்மைக்குத்  தேவையான  அளவு எண்ணிக்கையுள்ள தொகுதிகளில்  வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் களத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கீழ்க்கண்ட குறிப்பிட்ட தொகுதிகளை அடையாளம் காண முடியும்.

தமிழிசை சௌந்தர்ராஜன் (விருகம்பாக்கம்), ஹெச்.ராஜா (தியாகராய நகர்), ம.வெங்கடேசன்  (எழும்பூர்), கே.டி. ராகவன் (கொளத்தூர்) காங்கயம் (உஷாதேவி),  நேதாஜி (நாகப்பட்டினம்), வேதரத்தினம் (வேதாரண்யம்), கதிர்வேல் (கடையநல்லூர்), பரமக்குடி (பொன்.பாலகணபதி), கன்னியாகுமரி (எம்.மீனாதேவ்),   நாகர்கோவில் (எம்.ஆர்.காந்தி),  குளச்சல் (பி.ரமேஷ்),  பத்மநாபபுரம் (எஸ்.ஷீபா பிரசாத்),  விளவங்கோடு (சி.தர்மராஜ்),  கிள்ளியூர் (பொன்.விஜயராகவன்), கோவை தெற்கு (வானதி சீனிவாசன்),  கோவை வடக்கு (கண்ணன்), சிங்காநல்லூர் (சி.ஆர்.நந்தகுமார்), பல்லடம் (தங்கராஜ்),  கவுண்டம்பாளையம் (ஆர். நந்தகுமார்),  தொண்டாமுத்தூர் (தியாகராஜன்), சூலூர் (மோகன் மந்திராசலம்), ராமநாதபுரம் (துரை கண்ணன்),  தென்காசி  (பி. செல்வி), ஓசூர் (ஜி.பாலகிருஷ்ணன்), தளி (பி.ராமச்சந்திரன்).

மேற்கண்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ளவை, வெல்ல வேண்டியவை ஆகிய இரு அம்சங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.  திட்டமிட்ட அணுகுமுறையுடன், தெளிவான இலக்குடன் செயல்பட்டால், நிச்சயம் வெல்ல முடியும்.

(தொகுதிகள் பட்டியல் கட்டுரையாசிரியரின் தனிப்பட்ட கருத்து)

.

 

Tags: , , , , , , , , , , ,

 

8 மறுமொழிகள் தமிழக தேர்தலில் யார் ஜெயிக்கக் கூடாது?

 1. saranathan on May 14, 2016 at 11:46 am

  என்னைப் பொருத்தவரை, அதிமுக, திமுக இரண்டில் ஹாலகால விஷமானது திமுகவே! ஆகையால், நான் கடவுளிடம் வேண்டிக் கொள்வது, எப்பாடு பட்டேனும் திமுக ஆட்சி அமைக்கக் கூடாது.

 2. premathasan thirumeni on May 14, 2016 at 12:17 pm

  கட்டுரைஆசிரியர் குறிப்பிட்டுள்ள வெல்ல வேண்டியவர்கள் வெற்றியடைய எனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன் . இந்துமக்கள் அதிகமாக வாழும் நாட்டில் நாத்திகவாதிகள் வெற்றியடைவது பெரிதும் வேதனைஅடைய செய்கிறது . வளர்க இந்துஒற்றுமை,! வாழ்க இந்தியத்திருநாடு ! வெல்க நல்லோர் ஆட்சி !——–பிறேமதாசன் திருமேனி .

 3. hariprasath on May 15, 2016 at 11:04 am

  Thoughtful post. Now BJP have a good chance, but who is there for rulling like JJ as daring personality.

 4. k.v.k.swami on May 15, 2016 at 12:13 pm

  இஸ்லாமியர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களோடு ஒன்றி வழுவதைத்தான் விரும்புகின்றனர். மிக குறைந்த எண்ணிக்கை கொண்டோரே இஸ்லாமிய மத தீவிரவாதத்தை கடைபிடிக்கின்றனர். கிருத்துவ மிழினரிகளின் இந்துக்களுக்கு எதிரான பொய் பித்தலாட்ட அடிச்சுவட்டை(ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மிழினரிகளின் இந்து மதத்திற்கு எதிரான கட்டுகதைகள்) பின்பற்றி ஆங்கிலேயரின் அடிவருடிகளின் நீதி கட்சியிலிருந்து உருவான திராவிட கழகமும், அதிலிருந்து உருவான தி.மு.க., அ.தி.மு.க.கட்சிகள், ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி உத்தியை கடைபிடித்துதான் சிறுபான்மையினரை உசுப்பி, தங்களுக்கு சுக வாழ்கை அமைத்துக்கொண்டு, சிறுபான்மையோர்- பெரும்பான்மையோர் ஆகிய இரு வகையினரையும் ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடித்து இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்கள் திட்டத்திற்கு வலு சேர்த்துக்கொள்கின்றனர். அவர்களின் வாக்கிற்கு பங்கம் வந்துவிட கூடாதே என்று இரு நாசக்கார கழகங்களும் இஸ்லாமிய தீவிரவாத அரசியல்வாதிகளின் அட்டூழியத்தை கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றனர். தமிழகம் தலை நிமிர வேண்டுமானால் இந்த இரண்டு திராவிட நாசக்கார கட்சிகள் மட்டுமல்ல இவர்களிடமிருந்து பிரிந்து சென்ற அல்லது இவர்கள் பாணியில் செயல்படும் “கழகம்”களையும் தமிழக அரசியலிலிருந்து விரட்டினால் மட்டுமே முடியும்.

 5. George on May 16, 2016 at 12:19 pm

  // இஸ்லாமியர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களோடு ஒன்றி வழுவதைத்தான் விரும்புகின்றனர். மிக குறைந்த எண்ணிக்கை கொண்டோரே இஸ்லாமிய மத தீவிரவாதத்தை கடைபிடிக்கின்றனர். //

  – k.v.k.swami on May 15, 2016 at 12:13 pm

  திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
  தெளிந்த சிந்தனை வேண்டும்,

 6. George on May 16, 2016 at 1:21 pm

  திரு.k.v.k.சுவாமி,

  தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
  தீரா இடும்பை தரும்.

  மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
  சொல்லினால் தேறற்பாற்று அன்று.

  ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
  தான்சாம் துயரம் தரும்.

  குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
  இனனும் அறிந்தியாக்க நட்பு.

  மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
  ஒருவுக ஒப்பிலார் நட்பு.
  (ஒன்றுக்கு இரண்டாக ஈந்தாகிவிட்டது)

 7. George on May 16, 2016 at 1:29 pm

  // but who is there for rulling like JJ as daring personality. //
  – hariprasath on May 15, 2016 at 11:04 am

  கட்டுரை ஆசிரியர் திரு.சேக்கிழான் அவர்கள் மிகத்தெளிவாக எழுதயுல்லாரே:

  “அதை விமர்சிக்கவும் அதிமுக தயாரில்லை என்பதே, மமக குறித்த அச்சம் அக்கட்சிக்கு இருப்பதை வெளிப்படுத்துகிறது.”

 8. அத்விகா on May 30, 2016 at 7:26 pm

  ஆம்பூர் நிகழ்ச்சிக்கு பிறகு வன்முறை குழுக்களை ஜே தனது அணியில் சேர்க்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ராமநாதபுரம் தொகுதியில் பேராசிரியர் ஜவஹருல்லா வுக்கு எதிராக இஸ்லாமியர் அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தி , அனைத்து மதவாக்காளர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார் ஜெயலலிதா என்பதே உண்மை.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*