வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?

June 22, 2016
By

வேளாங்கண்ணி முதலிலிருந்தே ஒரு கிறித்தவத் தலம் என்றே நம்மில் பெரும்பாலானோர் நம்பவைக்கப்பட்டுள்ளனர். நாம் நினைப்பதுபோல் இது கிறித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம்.

‘கண்ணி’ என்பது அழகிய விழிகள் பொருந்திய பெண்ணைக் குறிக்கும் சொல். ‘காமக்கண்ணியார்’ குறிஞ்சித் திணை சார்ந்த அகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் பெண்பாற் புலவரது பெயர்.

தமிழ்ச்சைவ வரலாற்றில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. சமய குரவர் காலத்திற்குப்பின் எழுந்த சிவாலயங்களிலும் தேவார மூவர் அமைத்த முறையில் இறைவர் – இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது. தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் இத்தகைய பெயர்கள் பல தெரியவருகின்றன.

வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.

”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
‘வேலனகண்ணி’யொடும் விரும் பும்மிடம்………” (திருஞானசம்பந்தர்)

சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”, வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது. வேலன கண்ணி, சேலன கண்ணி என்பன உவமையால் அமையும் பெண்பாற் பெயர்கள்.

meenakshi1”கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு. ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. ”இருமலர்க் கண்ணி” இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர். மதுரையம்பதியின் மங்காப்புகழுக்குக் காரணம் மலயத்துவசன் மகளார் அன்னை அங்கயற்கண்ணியின் ஆளுமை. திருக்கற்குடி எனும் தலத்தில் அம்மையின் பெயர் “மையார் கண்ணி” , ”மைமேவு கண்ணி” [அஞ்ஜனாக்ஷி]; கோடியக்கரை – குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் ’மையார் தடங்கண்ணி’. சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டப்படுகிறது. இதுவும் ஒரு கடற்கரைச் சிவத்தலம். “வாள்நுதற்கண்ணி” என்பது மற்றோர் பெயர். அன்னையின் கடைக்கண்பார்வை வீச்சு தவத்தில் ஆழ்ந்திருந்த ஐயனைச் சலனமடையச் செய்தது. விளைவு ? உலகம் உய்ய ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன். இதே ரீதியில் காவியங்கண்ணி, நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி,வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி என்று இன்னும் சில பெயர்களும் உண்டு.

“மானெடுங்கண்ணி” என்று ஒரு திருநாமம். ’மான்போன்ற மருண்ட பார்வையை உடையவள்’ என்பது பொருள்.

’மானெடுங்கண்ணி’ மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்…..

அம்பிகையின் கயல் போன்ற விழிகளைக் காழிப்பிள்ளையார் பாடுகிறார்:

’நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
”சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்…..’

இவ்வாறு, அழகியலில் தோய்ந்த அடியார்கள் இது போல அம்மையின் கண்ணழகையும், கண்களின் கருணையையும் வைத்தே பல இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும். சிவாலயங்கள்தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின் கடமை. அப்போது தான் தேவாரப் பதிகங்களுக்கும் ஊர்களுக்கும் உள்ள பிரிக்க முடியாத இணைவு மக்களுக்குத் தெரிய வரும்.

கடற்கரைச் சிவாலயங்கள்: 

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் சைவம் செழிப்புற்றிருந்தது.

”மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்……”

என்று சம்பந்தர் முன்பு கடலோரம் அமைந்திருந்த கபாலீஸ்வரர் கோயிலின் மாசிமகத் திருவிழாவை வர்ணிக்கிறார். கடற்கரைத் தலங்களில் எல்லாம் மாசி மகம் தீர்த்தவாரிக்கு இறைத் திருமேனிகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று தீர்த்தவாரி செய்விப்பது இன்றுவரை நடைபெற்று வருகிறது.

velankanni-sivan-templeகீழைக் கடல் சார்ந்த பல ஆலயங்கள் – திருவொற்றியூர், மயிலைக் கபாலீசுவரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம், நாகபட்டினம் காயாரோஹணேசுவரர் ஆலயம், கோடியக்கரைக் குழகர் ஆலயம், வேதாரண்யம் -காரைக்கால் – புகார் ஆலயங்கள் போன்றவை முக்கியமானவை. வேளாங்கண்ணி ஆலயமும் இவற்றுள் ஒன்று.

மயிலையில் மட்டும் வாலீசுவரர், மல்லீசுவரர், வெள்ளீசுவரர், காரணீசுவரர், தீர்த்த பாலீசுவரர், விரூபாக்ஷீசுவரர் எனும் தலங்கள்; கபாலீசுவரர் ஆலயம் தவிர. தருமமிகு சென்னையில் பேட்டைகள் தோறும் இன்னும் பல சிவாலயங்கள். இங்கு அவற்றைப் பட்டியலிடவில்லை.

திருவதிகை வீரட்டானம் – அப்பரடிகள் வரலாற்றோடு தொடர்புடையது; சமய குரவர் பாடல் பெற்ற தலம்.
சுவாமி – வீரட்டானேசுவரர்
அம்மை – பெரியநாயகி

திருச்சோபுரம் – சம்பந்தர் பாடிய கடல் தலம். கடலூர் அருகில்.
சுவாமி – சோபுரநாதர்
அம்மை – வேல்நெடுங்கண்ணி

திருச்சாய்க்காடு – காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தே அமைந்துள்ள ஒரு கடல் தலம்.கோச்செங்கட் சோழர் செய்த மாடக்கோயில். இயற்பகை நாயனார் வழிபட்டு, முத்தி பெற்ற திருத்தலம். நாவுக்கரசரும், காழிப்பிள்ளையாரும், ஐயடிகள் காடவர்கோனும் பாடியுள்ளனர். போருக்குத் தயாராக வில்லேந்திய வேலவரை இவ்வாலயத்தில் காணலாம். எதிரிகள் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளானோர் முருகனை வழிபட்டுத் துயர் நீங்கப்பெறலாம்.

சுவாமி : சாயாவனேச்வரர்

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே !

– திருஞானசம்பந்தர்

நாகூர் – நாகவல்லி அம்மை உடனுறை நாகநாத ஈசுவரர் கோயில் கொண்ட கடல் தலம்.நாகநாத சுவாமியால் நாகூர் எனும் பெயர். காமிகாகமத்தை ஒட்டியதாக அமைந்த மிகப் பழமையான ஆலயம் இது. நாகூர் தர்கா பின்னர் மராட்டிய மன்னர் ஆட்சிக்காலத்தில் தோன்றியது. நாகவல்லி அம்மை உடனுறை நாகநாதரே உண்மையான ‘நாகூர் ஆண்டவர்’.

நாகப்பட்டினம் பகுதியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்துதித்த அதிபத்த நாயனார் வாழ்ந்த நுழைப்பாடி என்ற கிராமக் கடல் கோயில்.

முருகப்பெருமான் போருக்குப் புறப்படுமுன்பாக முக்கட்பிரானை வழிபட்ட கடல் தலம் திருச்செந்தூர்;

இராமேசுவரம் இராமபிரான் வழிபட்ட உலகப்புகழ் பெற்ற கடல் தலம்.

இது போன்ற ஒரு கடல் தலம் தான் வேளாங்கண்ணியும்.

 

velankanni-many-statues-unearthed

 

இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அப்போது இப்பகுதி குறித்த சரித்திர உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

அருள்மிகு ரஜதகிரீஸ்வரர் சிவன் கோயில், வேளாங்கண்ணி

அருள்மிகு ரஜதகிரீஸ்வரர் சிவன் கோயில், வேளாங்கண்ணி

சில நூற்றாண்டுகளுக்குமுன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறி அவற்றைக் கைப்பற்றிய போர்த்துகீசியர், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் அங்கிருந்த பல இந்து ஆலயங்களை அழித்தனர். அவ்விடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுகளையும் அமைத்தனர். சென்னை கபாலீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம் இவை இரண்டும் இந்த கிறித்தவ “சகிப்புத்தன்மைக்கு” மிகச் சிறந்த சான்றுகளாகும். ‘கோவா’ கடற்கரைப் பகுதியிலும் பல ஆலயங்களை போர்ச்சுகீசியர் அழித்தனர். 1567ல் போர்த்துகீசிய மிஷநரிகள் கோவாவில் தரைமட்டமாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கை 350. அக்காலகட்டத்தில் இந்துக்கள் துளசிச்செடி வளர்ப்பதற்குக்கூட அங்கு தடை இருந்தது.

கிறித்தவ மிஷநரிகளின் கலாசாரத் திருட்டு:

காவி உடை அணிதல், ஆலய விமானங்களின் பாணியில் சர்ச் எழுப்புதல், சர்ச்சுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவுதல், ’வேதாகமம்’,‘சுவிசேஷம்’ ‘அக்னி அபிஷேகம்’ , ‘ஸர்வாங்க தகன பலி’ போன்ற சங்கதச் சொற்களை வலிந்து புகுத்துதல், கொடியேற்றுதல், தேரிழுத்தல் போன்ற சடங்குகளைத் தம் சமயத்துக்குள் புகுத்தி இந்துக்களைக் கவர்ந்து மதம் பரப்பும் முயற்சிகளைப் பல நூற்றாண்டுகளாகவே கிறித்தவ மிஷநரிகள் தமிழ்நாட்டில் செய்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகவே மேரி மாதாவுக்குத் தமிழர் முறையில் சேலை அணிவித்து , ‘வேலன கண்ணி’ எனும் பெயர் வேளாங்கண்ணி என்று ஆக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

உமையன்னைக்கே உரியது ‘பெரிய நாயகி’ எனும் நாமம். புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில், இறைவன் பெயர் பிரகதீஸ்வரர் (பெருவுடையார்), இறைவி பெயர் பிரகன்னாயகி (பெரிய நாயகி) என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பெயரை வெட்கமில்லாமல் களவாடி, ‘பெரியநாயகி மாதா’ எனக் கிறித்தவ மிஷநரிகள் மேரியினுடையதாக மாற்றிக்கொண்டு விட்டனர்.

உண்மை சுடும் . கிறித்தவர் கொதிப்படைவதில் நியாயம் இல்லை. இந்து தெய்வங்களைச் சாத்தான், பிசாசு என ஒருபுறம் இகழ்ந்துகொண்டு, மறுபுறம் இந்து தெய்வப் பெயர்களைக் கவர்ந்து ஏசுவுக்கும் மேரிக்கும் சூட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை குறைந்தபட்ச மனச்சாட்சியுள்ள தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

velankanni-churchசில கேள்விகள்:

வேளாங்கண்ணி இப்போது மிகப் பிரபலமான கிறித்தவப் புனிதத் தலம் என்றே நிலைநிறுத்தப் பட்டுவிட்டது. ஆனால், இது எப்படி கிறித்தவத் தலமாகிறது என்பதற்கான அடிப்படையான சில கேள்விகள் அப்படியே தான் உள்ளன.

’வேளாங்கண்ணி’ கிறித்தவப் பெயரா ? விவிலிய ஆதாரம் உள்ளதா ?

இல்லையெனில், வேளாங்கண்ணி என்ற பெயரை சூட்டியது யார்? போர்த்துகீசிய மாலுமிகளா, வாத்திகனில் உள்ள போப்பரசரா அல்லது பின்னால் வந்த மிஷநரிகளா? ஐரோப்பிய மிஷநரிகள் இதே போன்று வேறு தூய தமிழ்ப் பெயர் எதையாவது சூட்டியுள்ளார்களா?

திரித்துவத்துக்குப் [Trinity] புறம்பாக மேரியைத் தனியாக பெண் தெய்வமாக வழிபடுவது விவிலியத்திற்கும் கிறித்தவ இறையியலுக்கும் ஏற்புடையதா?

இது ஒரு பொதுவான கிறித்தவ வழிபாட்டுத் தலம் என்றால், கிறித்தவரில் எல்லாப் பிரிவினரும் ஏன் வேளாங்கண்ணிக்கு வந்து வழிபடுவதில்லை ?

ஆரோக்கியத்துக்கும் வேளாங்கண்ணி எனும் பெயருக்கும் என்ன தொடர்பு ?

வேளாங்கண்ணிக்கும் கிழக்குத் தேசத்து லூர்து (Lourdes of the East) என்ற கருத்தாக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? லூர்து மேரி (Lourdes) தலத்தில் கொடியேற்றமும், தேர் பவனியும் உண்டா ? ஐரோப்பியர் மொட்டையடித்துக் கொள்வார்களா ? வேளாங்கண்ணியில் உள்ள மேரி மாதாவின் திருத்தோற்றங்களுக்கு (apparitions) எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பது கிறித்தவர்களாலேயே ஒப்புக் கொள்ளப் படுகிறது. இவ்வாறிருக்க, இந்த சர்ச் ‘கிழக்கின் லூர்து’ ஆனது எப்படி ?

லூர்து மேரியை ஆரோக்கிய மாதாவாக ஏன் வழிபடுவதில்லை ?

பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?

இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இந்த முரணுக்கு என்ன காரணம்?

மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்த கிருஷ்ண பிள்ளை (இரட்சணிய யாத்திரிகம் எழுதியவர்), மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற தொடக்க காலக் கிறித்தவத் தமிழ் அறிஞர்கள் கூட வேளாங்கண்ணி திருத்தோற்றம் குறித்து எழுதியுள்ளதாகவோ வேளாங்கண்ணியில் மொட்டைபோட்டு வழிபட்டதாகவோ குறிப்புகள் இல்லை. 1981ல் மறைந்த தேவநேயப்பாவாணர் கூட‘கிறித்தவக் கீர்த்தனைகள்’ நூலில் ஆரோக்கிய மாதாவைக் குறித்துப் பாடல்கள் இல்லை. இதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

ஏராளமான இந்தியக் கிறிஸ்தவர்கள் குழுமிக் கும்பிடும் வேளாங்கண்ணி சர்ச் ஆலயத்தில் இதுவரை எந்தப் போப்பும் ஆரோக்கிய மாதாவை மண்டியிட்டு வணங்கியுள்ளதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆதாரபூர்வமாக விடைகாண முற்பட்டால், வேளாங்கண்ணியின் உண்மையான சரித்திரம் தெரியவரக்கூடும்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

35 மறுமொழிகள் வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?

 1. க்ருஷ்ணகுமார் on June 22, 2016 at 7:03 pm

  வேளாங்கண்ணி க்றைஸ்தவ ஸ்தலமாகுமா என சம்சயம் எழுப்பும் இந்த வ்யாசம் ஐயா அவர்களால் ஃபேஸ்புக்கில் முன்னமேயே பகிரப்பட்டுள்ளது. ஐயா அவர்களால் பகிரப்பட்டுள்ள அந்தக் குறும்பதிவு கிட்டத்தட்ட 3000 முறை ஃபேஸ்புக்கில் share செய்யப்பட்டுள்ளது.

  மிக முக்யமான தகவல்களைப் பகிரும் மற்றும் சம்சயங்களை எழுப்பும் இப்படிப்பட்ட ஒரு பதிவு மேலதிகத் தகவல்களுடன் தொகுக்கப்பட்டு ஒரு வ்யாசமாகப் பகிரப்பட வேண்டும் என்பது சிறியேனின் விக்ஞாபனம். அதைச் செவிசாய்த்து தமிழ் ஹிந்துவில் இந்தப் பதிவை ஒரு வ்யாசமாகப் பகிர்ந்தமைக்கு ஐயா அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

  ஐயா அவர்கள், சைவ வைஷ்ணவத் தமிழ்ப்பனுவல்களில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர் என்பது மட்டுமல்ல. ஸம்ஸ்க்ருத மொழியிலும் ஐயா அவர்கள் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். மற்ற பல பாரதீய மொழிகளிலும் ஐயா அவர்களுக்கு ஈடுபாடும் பரிச்சயமும் உண்டு. பல வருஷங்களுக்குப் பின்னர் ஐயா அவர்களிடமிருந்து தமிழ் ஹிந்துவுக்கு பங்களிப்பு வந்துள்ளது. பழனியாண்டவர் அருளால் அது தொடர வேண்டும்.

  ஹிந்து அறிவியக்கம் வெகு முனைப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இப்போது. நம் தேசத்தின் ஒற்றுமையை முன்னோர்கள் மொழி, பண்பாடு போன்ற காரணிகளால் பிணைத்திருந்தனர். பாலைவனத்திலிருந்து ஹிந்துஸ்தானத்துக்கு வந்தேறிய மதங்களின் கொடுங்கோன்மையாளர்கள் மிஷ நரிகள் போன்றோரால் நம்மை ஒற்றுமை செய்ய முன்னெடுக்கப்பட்ட காரணிகளே நம்மைப் பிளக்க ஹேதுவாக நரித்தனமாக உபயோகிக்கப்பட்டுள்ளன.

  ஹிந்து மதத்தினர் நம்பும் ஒவ்வொரு விஷயமும் முறையான திட்டமிடலின் பாற்பட்டு சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு இழித்துப் பழிக்கப்படுகின்றன. அதே போன்று ஆப்ரஹாமியம் பற்றிய …………….எந்த ஒரு ஆதாரமும் இல்லாத…………. பொய்களும் புளுகுகளும் ஆன விஷயங்கள் ……………. உண்மைகள் போல ஆப்ரஹாமியர்களால் பொதுமக்களின் முன் வைக்கப்படுகின்றன.

  காசுக்கு விலை போயுள்ள ஊடகவேசிகள் ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட உண்மைகளை மறைத்து அல்லது அவைகளை பொய் போலச் சித்தரிக்கும் வேலையில் முனைந்து ஈடுபடுகின்றன. ஆப்ரஹாமிய மதங்களைப் பற்றிய சிறுமைகள் மறைக்கப்படுகின்றன; அந்த மதங்கள் சம்பந்தப்பட்ட பொய்கள் உண்மைகள் போல சித்தரிக்கப்படுகின்றன.

  இப்படிப்பட்ட சூழலில் இந்த வ்யாசம் நிறைய கேழ்விகளை எழுப்புகிறது.

  தேவாரப்பனுவல்களை ஆராய்ந்து அதில் சிவாலயங்களில் வழிபடப்படும் அம்மையினை தேவார நால்வர் ***கண்ணி*** என்ற விகுதியினால் எங்கெங்கு அழைக்கின்றனர் என்ற செய்திகளை………..தேவாரச் சான்றுகளுடன் பகிருகிறது.

  கிழக்குக் கடற்கரை முழுதும் சைவ சமயம் தழைத்து வந்திருக்கிறது. அதை இந்த வ்யாசம் பட்டியலிட்டிருக்கிறது.

  மிஷநரிகளால் உண்மை பொய் கலந்து பித்தலாட்ட முறைமைகளின் பாற்பட்ட மதமாற்றத்தை உத்தேசமாகக் கொண்டு எழுப்பட்டு செயற்பட்டு வரும் ஸ்தலம் வேளாங்கண்ணி.

  அப்படி இருக்கையில் இந்த வ்யாசம் வேளாங்கண்ணி என்ற ஸ்தலத்தினை முன்னிறுத்தி க்றைஸ்தவர்கள் முன்னெடுக்கும் பல ஹிந்து மதத்தை ஒத்த பல பழக்க வழக்கங்களை பட்டியலிட்டு க்றைஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளையும் பட்டியலிட்டு ………. வேளாங்கண்ணி வழமைகள் பல………..க்றைஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக இருப்பதை சுட்டிக்காடுகிறது.

  ஹிந்துஸ்தானத்தில் கோவா தமிழகம் மட்டுமின்றி மற்ற மாகாணங்களிலும் மேலும் ஈழத்திலும் கூட பரங்கியர் அழித்த ஆலயங்களுக்கு கணக்கு வழக்கில்லை.

  நம்முடைய பொதுப்புத்தியில் ஹிந்துஸ்தானமுழுதும் ஆலயங்களை பெரும்பாலும் அழித்து ஒழித்தவர் இஸ்லாமிய அரசர்களே என்ற புரிதல் உள்ளது. இஸ்லாமிய அரசர்களில் பலரே எழுதியுள்ள பல நூற்களில் ஆலயங்களை அழித்தொழித்த வீரப்ரதாபம் பகிரப்பட்டுள்ளது. அன்பர் அ.ரூபன் அவர்கள் எழுதியுள்ள தொடரை வாசகர்களுடைய நினைவுக்குக் கொணர விழைகிறேன்.

  ஈழத்தில் போர்த்துகீசியர்கள் அழித்தொழித்த ஆலயங்களைப் பற்றிய விபரங்கள் தமிழ் ஹிந்துவில் முன்னமேயே பகிரப்பட்டுள்ளது.

  இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல இப்பகுதியில் பூமியினைத் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் ஒன்றன் பின் ஒன்றாக இறைவனுடைய மூர்த்தங்கள் கிட்டியிருக்கின்றன.

  இவையெல்லாம் சேர்ந்து இந்த ஸ்தலத்தைப் பற்றிய மர்மங்கள் ஆராயப்பட வேண்டும் என்று உரத்த குரலெழுப்புகின்றன.

  உத்தரபாரதத்தில் ஹிந்துக்களுடைய நம்பிக்கைகள் சார்ந்து பற்பல ஆய்வுகள் மேலெடுக்கப்பட்டு ஹிந்து நம்பிக்கைகள் பல நிரூபிக்கப்பட்டுள்ளன. ஸரஸ்வதி நதி, த்வாரகா நகரம்……… என்பவை சில.

  தமிழகச் சூழலில் ஹிந்து நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் இழித்துப்பழிக்கப்படுதல் என்பதே வாடிக்கை. அப்படியிருக்கையில் இங்கு பகிரப்பட்ட பன்முகத் தகவல்கள்………….. மதம் சார்ந்து, இலக்கியம் சார்ந்து, தொல்பொருள் ஆராய்ச்சி சார்ந்து முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுமா என்பது மிலியன் டாலர் கேழ்வி. ஆயினும் இப்படி ஒரு வ்யாசம் தமிழ் ஹிந்து எனும் ஹிந்து நலம் பேண விழையும்………….. தமிழ் மற்றும் தமிழக நலம் பேண விழையும்………….. நமது தளத்தில் நிரந்தரமாக ஆர்கைவ்ஸில் இருக்கும் படிக்கு…………….. ஆர்வமுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கலங்கரை விளக்காக இருக்கும்.

  எதிர்காலத்திலாவது இதை வாசிக்கும் யாருக்காவது ஆர்வம் மேலிட்டு இங்கு பேசப்பட்ட விஷயங்கள் முறையான ஆய்வுக்கு உட்படுத்தபட்டால் நிறைய விஷயங்கள் வெளிவரலாம். வெளிவரும் என்ற நம்பிக்கை உண்டு.

  நம்பினார் கெடுவதில்லை இது நான் கு மறைத் தீர்ப்பு.

 2. தேவ் on June 22, 2016 at 8:02 pm

  அன்புள்ள ஸ்ரீ க்ருஷ்ண குமார் அவர்களுக்கு,

  வணக்கம்.
  தாங்கள் காட்டிய ஆர்வமும், அளித்த ஊக்கமும்தான் எளியேனது கட்டுரையை
  தமிழ் ஹிந்து தளத்துக்கு அனுப்ப வைத்தது; ஜடாயு ஜீ நன்றாக எடிட் செய்து
  ரத்தினச் சுருக்கமாக்கி வெளியிட்டுள்ளார்கள். நான் ஒவ்வொரு தகவலுக்கும்
  ஆதாரம் காட்டி எழுதியிருந்தேன். அனைத்தையும் வெளியிட்டால் கட்டுரை மிகவும் நீளமாகிவிடும்.

  கடற்கரைப் பகுதி என்றாலேயே கிரித்தவம் சார்ந்தது எனும் எண்ணப்பதிவில் நம்மை ஆழ்த்தி விட்டனர் வெகுகாலமாக. தேவாரத் தலங்கள் ஒவ்வொன்றாகப் பார்வையிட்டு வருகையில்தான் கீழைக் கடற்கரை சைவத்துக்கானது எனும் உண்மை புலப்பட்டது. நாகூருக்கும், வேளாங்கண்ணிக்கும் செல்லும் ஹிந்துக்களுக்கு உண்மையை எடுத்துச்சொல்ல ஹிந்து இயக்கங்கள் முனைதல் வேண்டும். குறைந்த பட்சம் அப்பகுதிகளில் அந்தந்த சிவாலயங்கள் குறித்த தகவல் பலகைகளையாவது நிறுவுதல் வேண்டும்.

  போற்றுதற்குரிய அருமையான தலங்களை ஒவ்வொன்றாக நாம் இழந்து வருகிறோம் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஹிந்துக்கள் மேலும் உறங்காமல் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து தல மீட்பு முயற்சிகளிலும், பாழ்பட்ட தலங்களின் மீட்டுருவாக்கத்திலும் ஈடுபட வேண்டும்.

  முக்கியமாக ஹிந்து ஆலய வருமானம் ஹிந்து ஆலயப் பராமரிப்புக்கே செலவாதல் வேண்டும்

  அன்புடன்
  தேவ்

 3. க்ருஷ்ணகுமார் on June 22, 2016 at 9:09 pm

  ஹிந்துக்கள் இன்னொரு விதத்திலும் செயல்படலாம்.

  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது பழமொழி.

  காசியில் க்ஞானவாபி மஸ்ஜித் விஸ்வநாதரின் ப்ராசீன ஆலயம். அதை பாதி இடித்துவிட்டு ஔரங்கசீப் ஹிந்துக்களின் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்த வேண்டும் என்ற குயுக்தியுடன் கீழ் பாதி ஆலயக் கட்டிடங்களாகவும் மேல்பாதி மஸ்ஜிதின் கும்பத் ஆகவும் ஒரு இழிவு நிர்மாணத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.

  ஆயினும் கூட ஹிந்துக்கள் சளைக்கவில்லை. அருகாமையிலேயே உள்ள நூதன விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டில் அகில ஹிந்துஸ்தானத்து ஜனங்க்ளும்………… ஏன் த்வீபாந்தரத்திலிருந்து வரும் பக்தர்களும் கூட கலந்து கொள்ளுகின்றனர்.

  ரஜதகிரீச்வரர் ஆலயத்தில் இருக்கும் ஸ்வாமி ப்ராசீன வேளாங்கண்ணியுரை ஈசனாகவும் இருக்கலாமே. அந்த ஆலயத்தில் ஹிந்து இயக்கங்கள் ப்ரதி மாஸம் ப்ரதோஷம் ப்ரதி மாஸம் சிவராத்ரி என சிவபர்வங்களை தேவாரம் ஓதுதல்……….. கூட்டு வழிபாடு என்று இறைப்பணியிலும்………கூட்டாக உழவாரப்பணியிலும் ஈடுபட்டால்………… ஹிந்து ஒற்றுமையும் பெருகும். ஆலய வழிபாடும் மேன்மையுறும். ப்ராசீனமான வேளாங்கண்ணியும் ப்ரசன்னமாவாள். அப்படியே நாகூரில் இருக்கும் சிவாலயத்திலும்.

 4. rani balakrishnan on June 22, 2016 at 11:59 pm

  உத்தம வ்யாசம் . என்னுடைய மாமனார் பெயர் நாகர் என்பதே . ஆனால் பேச்சு வழக்கில் நாகூர் என்றே ஆகிவிட்டது . என் கணவர் சான்று இதழ்களில் எனது மாமனார் பெயர் நாகூர் என்றே பதிவாகி உள்ளது .இது வரை நாகூர் தர்காவிற்கும் , வேளாங்கண்ணி கோயிலுக்கும் மட்டும் ஒரு முறை போய் வந்திருக்கிறேன் . இந்த வ்யாசம் படித்த பின்பு. தான் வேலன் கன்னி. அம்மையையும் , நாகநாத அப்பனையும் பார்க்கவில்லையே என்று குற்றமாக உள்ளது . அம்மையப்பன் க்ஷமிக்க வேண்டும். அவன் அருளாலே அவன் தாள வணங்க கடாக்ஷித்து. அருள வேண்டும் . ஓம் நமசிவாய .தென் நாடு உடைய. சிவனே போற்றி , எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி .

 5. vijay kumar on June 23, 2016 at 8:13 am

  இந்திய பன்பாட்டிலும் கலாச்சாரத்திலும் நுழையும் அந்நிய ஆதிக்கங்களின் மோசடியை இந்திய மக்களுக்கு உணர்த்தவேண்டும். அதற்கு நம் உறவினர்கள், மற்றும் நண்பர்களிடம் மத மாற்றத்தின் தீமையை விளக்கிகூறவேண்டும். பிறகு அவர்க்ளும் தங்கள் நண்பர்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்தவேண்டும்.

 6. Geetha Sambasivam on June 23, 2016 at 9:37 am

  அருமையான கட்டுரை. பற்பல ஆதாரங்களையும் கூடவே கொடுத்திருந்தால் இன்னும் ஆய்வாளர்கள் பயன் அடையும்படி இருந்திருக்கும். பகிர்வுக்கு நன்றி.

 7. தேவ் on June 23, 2016 at 8:54 pm

  கருத்துரைத்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி;
  கீதாம்மாவின் பார்வையும் பதிந்துள்ளது, அடியேன் செய்த பேறு.

  தேவார மூவர்தான் அம்மையின் கண்ணழகைப் பாட வேண்டுமா ?
  மாணிக்க வாசக சுவாமிகளும் பாடியுள்ளார் –
  ”மாவடு வகிரன்ன கண்ணி பங்கா நின் மலரடிக்கே கூவிடுவாய்”
  -திருவாசகம்
  மேலும் ஒரு முக்கியமான கடல் தலம் –
  திருவலம்புரம் :
  சுவாமி : வலம்புரநாதர்.
  அம்மை : வடுவகிர் கண்ணி.

  அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி
  யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
  வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
  வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே !

  இது ஒரு கடல்தலம் என்பது அப்பரடிகளின் பாடல் வாயிலாகவே தெரிகிறது.
  தற்காலத்தில் இத்தலம் ‘மேலப்பெரும்பள்ளம்’ எனும் பெயரால் அழைக்கப்ப்டுகிறது.
  புகாருக்கருகில் அமைந்த தலம். தேவார முதலிகள் மூவரும் பாடியுள்ளனர்.

  பழைய புகார்ப்பதியில்
  ”பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
  அறு முகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்..”
  இருந்ததாகச் சிலம்பு கூறும்.

  இன்றைய புகார்ப்பதியில் –
  சுவாமி : பல்லவனேசுவரர்.
  அம்மை : சவுந்தரிய நாயகி.

  “வாரா திருந்தால் இனிநானுன்
  வடிவேல் விழிக்கு மையெழுதேன்
  மதிவாள் நுதற்குத் திலகமிடேன்
  மணியால் இழைத்த பணிபுனையேன்…”
  [காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]

  அம்மையின் கண்ணழகுக்கும் இணையில்லை;
  கடல்தல ஆய்வுக்கும் ஓய்வில்லை;
  அயல் சமயத்தினரின் அடாவடிகளுக்கும் முடிவில்லை.

  வேலனகண்ணி [வேளாங்கண்ணி] நிச்சயம் கிரித்தவப் பெயரில்லை என்பது உறுதியாகி விட்டது. அத்தரப்பிலிருந்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக எந்த ஒரு பதிலும் இல்லை.

  தலங்களை ஆக்கிரமிப்பதோடு குன்று – பாறைகள் கண்ணில் பட்டால் குறியீடுகள் போட்டுக் கிரித்தவத்துக்கு உரிமையாக்கி விடுகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரட்டன ஹள்ளிக்கருகில் புஷ்பகிரி எனும் குன்றைக் குறியீடு போட்டு ஆக்கிரமித்து விட்டார்கள். திரு ஸதானந்தம் கிருஷ்ணகுமார் எனும் அன்பர்
  இத்தகவலைத் தெரிவிக்கிறார். விஷ நரிகளின் மோசடிகளில் ஒன்று.

  இரும்புலியூரில் பென்டகோஸ்டல் மிஷனின் ஆக்கிரமிப்பு –
  பென்டகோஸ்டல் மிஷன் என்ற கிருத்துவ நிறுவனம் தாம்பரம் இரும்புலியூர் ஏரியின் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு பல ஆண்டுகளாக கன்வென்ஷன் என்று கூட்டத்தை நடத்தி வருகின்றது. சுவரமைத்துக் கட்டிடமும் எழுப்பி விட்டார்களாம். காஞ்சி வேகவதி ஆற்றினுள் கிரித்தவக் கூடம் அமைந்திருக்கும் விழியம் ஒன்றைப் பார்த்தேன்.

  மதச்சார்பற்ற இந்தியாவில் ஆட்டயப்போடுவது துருக்க – கிரித்தவரின் உரிமையாகி விட்டது; கோட்டை விட்டுக் கொட்டாவி விட்டுக்கொண்டு சகிப்புத்தன்மையைக் காப்பது இந்துக்களுக்குக் கடமையாக்கப்பட்டு விட்டது.

  தேவ்

 8. T. Ramadass on June 23, 2016 at 9:11 pm

  தங்களது கட்டுரை அருமை! எனினும் முயற்சி செயது ப,ஜெ. க மூலமாக மேலிடத்துக்கு விஷயத்தை தெரிவித்தால், இந்த உண்மை நாடெங்கும் பரவும்!எனக்கும் சிக்கல் கிராமம் தான், ஆனால் எனக்கு இந்த விஷயம் இதுவரை தெரியாது!.
  நன்றி!

 9. k.v.k.swami on June 23, 2016 at 10:01 pm

  கிருத்துவர்கள் பயணம் செய்த கப்பல் ஒன்று புயலில் சிக்கியதாகவும், அந்த கப்பல் இன்றைய வேளங்கண்ணி கோயிலுக்கருகில் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியதாகவும், அப்போது அந்த கப்பலின் கேப்டன் ‘வேலனகண்ணி’ அம்மனை வணங்கி பக்தி கொண்டான் என்றும், அதன் பிறகே பித்தலாட்டக்கார கிருத்துவ மிஷினரிகள் அதை ஆக்ரமித்து ‘வேளாங்கண்ணி மாதா’ என்று பெயர் மாற்றம் செய்து கிருத்துவ கோவில் ஆக்கிவிட்டார்கள் என்று சரித்திரம் சொல்கிறது. ஆராயவேண்டும்.

 10. Ramesh Srinivasan on June 24, 2016 at 4:04 pm

  தஞ்சை மாவட்டக் கோவில்களில் முருகன் அல்லது சம்பந்தரைச் சுமந்து இருக்கும் ” பிள்ளை இடுக்கி அம்மன்” சந்நிதி பல கோவில்களில் உள்ளது.

  மற்றும் தேவாரம் அன்னையை ” வேல் நெடுங் கன்னி” என்கிறது. ரெண்டையும் சேர்த்தால் வேளாங்கண்ணி.

 11. பா. சேஷாத்ரி ஜெய்ராஜா on June 24, 2016 at 7:06 pm

  கடற்கரை நெடுகிலும் அன்னையின் மாயா ஸ்வரூபத்தின் வடிவமாக “இசக்கி” – என்ற தெய்வ வழிபாடு காணப்படும். இத்தேவி குழந்தையைக் கையில் தாங்கியபடி இருப்பது இயல்பு. என்ற விஷயத்தையும் இன்றைய வேளாங்கன்னிமாதா கொவிலின் பின் அன்னை கோவில் கொண்டிருப்பதையும் கருத்திலிருத்த வேண்டுகிறேன்

 12. K.Devaraj on June 25, 2016 at 5:26 am

  சிவாயநம ,
  மிக நல்ல ஆதாரங்களுடன் கூடியது தகவல்,
  காலத்தின் கோலம் நமது வழிபாட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மாற்றப்பட்டது.
  தற்போது நாம் செய்யவேண்டியுள்ளது என்ன?,அவற்றை மீட்டெடுத்து என்ன செய்யப்போகிறோம்?நமது மூதாதையர்கள் இது போன்ற பல பிரமாண்டமான திருக்கோயில்கள் நம்ஆன்மீக வளர்ச்சிக்காக உருவாக்கி வைத்தனர் ஆனால் காலப்போக்கில் அதனை சரியான முறையில் பராமரிக்கத்தவறியதன் விளைவே இதுபோன்ற ஆக்கிரமிப்பு,,,இது தொடருகின்றது,
  இன்றும் பலதிருக்கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து சிலைகள் திருட்டு போய் வழிபாடில்லாத நிலையிலும் புதையுண்டு மண்மேடாகிய நிலையிலும் உள்ளது.
  ஆகவே நமது சனாதன தர்மத்தை பின்பற்ற, தனிமனித ஒழுக்கத்தையும் ,மேம்பட்ட நமது கலாச்சாரத்தையும் கட்டிக்காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், ,இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். விழிப்புடன் செயல்பட வேண்டும்.
  இனியும் இழக்க வேண்டாம், ,எஞ்சியுள்ளதையாவது முழுமையாக நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்வோம்.
  வருத்தத்துடன் சிவ.கரு.தேவராசு,பழநி சிவநெறித் திருக்கூட்டம், பழனி.

 13. கைலாசம் on June 26, 2016 at 12:29 am

  தாங்கள் உண்மைதான் உரைத்துள்ளீர. நன்றி.

 14. கைலாசம் on June 26, 2016 at 12:46 am

  வேள்னெடுங்கண்ணீ என்பதெ வேளாண்கன்னி என்று திரிந்ததாக என் அப்பா சொல்லியிருக்கிரார். உண்மையில் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் போலும் .கந்தனொடு சம்ப்பந்தம் கொண்டதாஹவெ இதுவும் அரியபடுஹிரது. கடற்கரை எப்படி திருசெந்துரொ அப்படியெ வேளாஆண்கன்னியும் இருந்திருக்ககூடும்.

 15. தேவ் on June 26, 2016 at 6:11 pm

  திரு கணபதி சுப்ரமண்யம் , காரைக்கால் :

  வேளாங்கண்ணிக்கு சுமார் 2கிமீ வடக்கில் இருப்பது ‘பரவை’ எனும் சிற்றூர். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனையாளான பரவை நாச்சியார் அவதரித்த தலம். உபமந்யு பக்த விலாஸம் அந்த அம்மையை ‘ஸாகரிகா’ எனும் பெயரில் சொல்கிறது. கடல் உள்வாங்கியதால் இத்தலம் சற்று உள்ளடங்கியதாகி விட்டது.கடற்கரையில் அமைந்திருக்கவில்லை

 16. Geetha Sambasivam on June 27, 2016 at 3:26 pm

  திரு தேவ் அவர்களே,

  திரு கணபதி சுப்ரமணியத்திற்கான உங்கள் பதிலைப் பார்த்தேன். மதுரைக்கு மேற்கே உள்ள பரவை என்னும் ஊர் தான் பரவை நாச்சியாரின் ஊர் என இதுகாறும் நினைத்திருந்தேன். இப்போது தான் வேளாங்கண்ணிக்கு வடக்கேயும் ஓர் “பரவை” இருப்பதை அறிந்தேன். மிக்க நன்றி.

 17. தேவ் on June 28, 2016 at 10:01 am

  இச்செய்தி ஆய்வுநிலையில் உள்ளது;
  உறுதி செய்யப்படவில்லை.அவர் சொல்லும் பரவை
  திருவாரூருக்கு அருகில் உள்ளதால் அது சரியாக
  இருக்கலாம்.

  தேவ்

 18. velumani on June 28, 2016 at 11:38 am

  Tamils believe in everything without cross checking what was told. They get easily cheated for this reason alone by many others including the christian missionaries. It has become a chronic disease now among Tamils to follow whatever being said from abroad.

 19. Madhavan on June 29, 2016 at 11:14 am

  மதுரை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற பெயர் போல, நாகை நீலாயதாக்ஷிக்கு கருதடங்கண்ணி என்ற பெரும் உண்டு. மேலும் தங்கள் காட்சிபடுத்திய ராஜத கிரீஸ்வரர் ஆலயம், ராஜத என்ற பேருக்கு வெள்ளியின் பெயராகும். சென்னை மயிலாபுரியில் வெள்ளீஸ்வரர் என்ற கோவில் கபாலி ஆலயத்திற்கு பக்கத்தில் உள்ளது

 20. Surrender S on June 30, 2016 at 12:11 am

  You have millions of god with millions of names. So its not a steal. Stop being imaginary and worship the true God who came and died for us

 21. Muthukumar on July 2, 2016 at 9:06 pm

  surrender,

  Why somebody should die for other’s sin? It is foolish to think that Jesus died for sinners.If so why did he cry -” god -why you have forsaken me?. A man who could not protect himself and crying out of pain. how can save others. If so why many christians are still sinners? Hinduism says- god is one – You christian fools cannot understand- you can only understand money and your clergy will understand only women. Hope you will understand at least this . If you really manliness you should have written your answers to Sattambi swamigal’s arguments given in this website.

 22. k.v.k.swami on July 3, 2016 at 4:59 pm

  ஜீசஸ் ஒரு சாதாரண மனிதன் தானே? அவர் எப்படி கடவுளாக முடியும்? கடவுளுக்கு பிறப்பு இறப்பு இரண்டும் கிடையாதே. பின் எப்படி ஜீசஸ் கடவுளாக முடியும். நாற்பது கோடி இந்தியர்களை பிரிட்டிஷாரின் அடிமை ஆட்சியிலிருந்து விடுதலையடைய லட்ச கணக்கான உயிர்கள் மாய்ந்தனவே! அவர்களை நாம் தியாகிகளாகத்தானே கொண்டாடுகிறோம்! அவர்களை விட இந்த ஜீசஸ் எந்த விதத்தில் உசத்தி? ஜீசஸ் என்று ஒருவர் இருந்தாரா என்கிற ஆராய்ச்சியே கிருத்துவ நாடுகளில் “JEESUS IS GOD OR FRAUD’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி நடந்துக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் பல லட்ச கிருத்துவர்கள் de-baptize செய்துவிட்டு கிருத்துவத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தங்கள் வயிற்று பிழைப்புக்காக கிருத்துவம் என்கிற மத வியாபாரத்தை மிஷ-நரி கூட்டம் இங்கு செய்துக்கொண்டிருக்கிறது. ஹிந்துக்களின் சில ஆன்மீக வழக்கங்களை காபி அடித்து பெயரில் சற்றே மாறுதல் செய்து அதை கடைப்பிடித்து, அந்த வழக்கங்கள் கிருத்துவ மதத்தை சார்ந்தது, ஹிந்துக்கள்தான் தங்களுடைய ஆன்மீக வழக்கங்களை காப்பியடிக்கிறார்கள் என்றும் அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் பிராமணர்கள் என்போர் ஆரியர்கள் என்றும் அவர்கள் திராவிடர்களை அடிமைபடுத்தி விரட்டினார்கள் என்றும் பொய்யான கதை ஒன்றை பரப்பி இங்கு ஜாதி துவேஷத்தை கிளப்பினார்கள். அவர்களே, நான்கு ஆண்டுகளுக்கு முன் “கிருத்துவ பிராமண சங்கம்” என்ற ஒன்றை ஆரம்பித்தார்கள். என்னே பித்தலாட்ட மதம் இந்த கிருத்துவ மதம்?

  டச்சு கப்பல் கேப்டன் கண்ட வேலனகன்னியம்மனை “வேளாங்கண்ணி” என்று பெயர் மாற்றி அதை கிருத்துவ தெய்வமாக்கிவிட்டர்கள். ஏமாளி தமிழர்களும் அதை ஏற்று கொண்டாடுகிறார்கள். “நான் அமைதி ஏற்படுத்த வரவில்லை உலகில் அமைதியை கெடுக்கத்தான் வந்தேன் – குடும்பங்களில் தந்தையையும் மகனையும், சகோதர சகோதரிகளையும் பிரிக்கத்தான் வந்தேன்” என்கிறது பைபிள். அது தெய்வ வாக்காக இருந்தால் அந்த அசரீரிக்கு உரியவனை தெய்வமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? கிறித்துவம் ஒரு பித்தலாட்ட மதம். இரண்டாயரம் ஆண்டு கிருத்துவ சரித்திரத்தை ஆராய்ந்தால் இன்றைய உலகளாவிய பயங்கரவாதத்திற்கு கிருத்துவ மதம்தான் மூல காரணம் என்பது புரியும்.

 23. Devanathan on July 9, 2016 at 6:09 pm

  Super ji

 24. தேவ் on July 19, 2016 at 10:31 am

  கீழ்க்கடற்கரைத் தேவாரத் திருத்தலங்கள்

  ஆசிரியர் : திரு சேகர்

  திருத்தங்கூர், கச்சனம் [கைச்சினம்], திருவாய்மூர் [திருச்சிற்றேமம்], தண்டலைச்சேரி [தண்டலை], கற்பகநாதர் குளம் [திருக்கடிக்குளம்] , இடும்பாவனம், கோயிலூர் [திரு உசாத்தானம்] ஆகிய திருத்துறைப்பூண்டி
  வட்டத்தில் அமைந்துள்ள கடற்கரையை ஒட்டிய ஏழு தேவாரத் திருத்தலங்களை ஆசிரியர் விவரித்துள்ளார்

  உசாத்தான சம்பந்தர் தேவாரம் இராமாயணச் செய்தியையும்
  சொல்கிறது –

  நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான்
  போருடைச் சுக்கிரீ வன்அநு மான்றொழக்
  காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
  சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே !

  file:///C:/Users/a/Desktop/thevaara.pdf

 25. தேவ் on July 27, 2016 at 11:20 pm

  சம்பந்தர் பெருமான் பாடிய பழைய மயிலைத் தலத்தின் கல்வெட்டுக்கள் –
  http://thamilkalanjiyam.blogspot.in/2014/03/blog-post_1725.html

 26. anbu on August 29, 2016 at 2:11 pm

  இசக்கி அம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வமாவார். இவர் பெரும்பாலான இந்து சமயக் கோயில்களில் கையில் குழந்தையுடன் காட்சிதருகிறார். குழந்தைப் பேறில்லாத பெண்கள் இவரை வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பதும், மாதவிடாய்ப் பிரட்சனையுள்ளவர்கள் இவரை வழிபட்டால் அப்பிரட்சனை தீரும் என்பதும் நம்பிக்கையாகும். இந்து சமய பெண் தெய்வக் கோயில்களில் பிரதானமாக இவருடைய சன்னதி அமைந்துள்ளது. தென் தமிழகத்தில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம் இருந்தது, இருப்பினும் தற்போது தமிழகம் முழுவதும் இசக்கியம்மன் வழிபாடு காணப்படுகிறது.
  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.jpg

 27. அருள்மாணிக்கம் on August 30, 2016 at 1:44 pm

  வேளாங்கண்ணி ஒரு கிறிச்தவ கடவுள் அல்ல. கிறிஸ்து மட்டுமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே தேவன். கத்தோலிக்கர் கிறிஸ்தவர் அல்ல. அவர்களுக்கு கிறிஸ்துவைவிட மேரிதான் முக்கிய தெய்வம். சிலை வழிபாடு, சப்பரம் தூக்குதல், தேர் இழுத்தல், கொடியேற்றுதல், தூபம் காட்டுதல் எல்லாம் கிறிஸ்தவத்தில் கிடையாது. இன்றும் வேளாங்கண்ணிக்கு பல இந்துக்கள் பரம்பரையாய் காவி உடையுடன் பாத யாத்திரை செல்கிறார்கள். அது இந்துக்கள் வழிபட்ட தெய்வம்தான். இதை எழுதும் நான் கிறிஸ்துவை வணங்கும் உண்மைக் கிறிஸ்தவன்.

 28. தேவ் on August 31, 2016 at 3:44 pm

  நன்றி ஐயா. உண்மையை உள்ளபடி தெரிவித்தமைக்கு.
  முகநூலில் மே14ம் தேதி வேளாங்கண்ணி பற்றிப் பதிவிட்டேன்.
  சுமார் மூன்றரை மாத காலமாக எந்த ஒரு கிரித்தவரிடமிருந்தும்
  பதில் இல்லை.நீங்கள் மட்டுமே கருத்துத் தெரிவித்துள்ளீர்கள்

  https://www.facebook.com/permalink.php?story_fbid=10154160232309719&id=684889718&notif_t=like&notif_id=1464197316130164

  தேவ்

 29. k.v.k.swami on September 1, 2016 at 10:14 pm

  அருள்மாணிக்கம் அவர்களுக்கு பாராட்டு. உண்மையான கிருத்துவன் உண்மையிலேயே ஏசுவை தவிர வேறு யாரையும் வழிபடக்கூடாது. உண்மையான கிருத்துவர்களுக்கு காவி உடுத்துவதோ, துளசிமாலை அணிவதோ, பௌர்ணமி உபவாசம் என்பதோ, அக்னி ஹோமம் என்பதோ, கிரி வலம் என்பது எதுவும் கிடையாது. இவை யாவும் ஹிந்துக்களுடைய வழிபாட்டு முறையாகும். ஹிந்துக்களின் இந்த வழிபாட்டு பெயர்களை வைத்து விவரம் அறியாத தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை அவர்கள் கடைப்பிடிப்பதின் காரணம் இன்னும் சில வருடங்கள் கழித்து இவை யாவும் கிருத்துவ வழிபாட்டு முறையே. இதை ஹிந்துக்கள் காப்பியடித்து தங்கள் பாரம்பர்ய வழிபாட்டுமுறை என்று கூறி திராவிடர்களை ஏமாற்றினார்கள் என்று கதை திரிப்பதற்க்காகத்தான். ஆக, இது ஹிந்து மதத்தை இழிவு படுத்த கிருத்துவ மிஷி(நரி)னரிகளின் கையாளும் யுக்தியே.

  இந்தியா ஆன்மீக நாடு. மக்கள் அனைவரும் ஆன்மீகத்தில் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை ஆன்மீகத்தில் கட்டுகோப்பாக வைத்திருப்பது பிராமிணர் என்கிற வகுப்பினர். ஆகையால் அந்த பிராமண வம்சத்தை ஒழித்தால் தான் நமது கிருத்துவ மதத்தை பரப்பியும் நாட்டின் ஆட்சியையும் பிடிக்கமுடியும் என கூறி அதற்க்கு போர்சுகல் அரசின் அனுமதியும் 1545ம் ஆண்டில் பெற்றான் சேவியர் எனும் கோவை வைசிராய். அதன் பிறகு, தொழில் ரீதியாக ஜாதிகள் இருந்தாலும் ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்த ஹிந்துக்களுக்குள் ஜாதி விரோதத்தை விதைத்து சமூகத்தியே துண்டாடிவிட்டது இந்த கிருத்துவ மத வியாபார நிறுவனமான கிருத்துவ மிஷி(நரி)னரிகள். அன்று பிராமிணர்களை அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிய இந்த கிருத்துவ மத வியாபாரிகள் சமீபத்தில் “கிருத்துவ பிராமண சங்கம்” என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தியது.

  எப்படி கிருத்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற போராட்டங்கள் நடந்ததோ அதுபோல் இப்போது கிருத்துவ மதம் என்பதை தவிர்த்து, பொய், பித்தலாட்டம், ஏமாற்றுவேலை என்று உழலும் கிருத்துவ மிஷி(நரி)னரிகளின் பிடியிலிருந்து விடுதலை பெற போராடும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

 30. விஜயராகவன் on September 30, 2016 at 1:28 pm

  நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது பல உள்ளன. ஆதாரம் இருந்தும் ஏன் நாம் எதுவும் செய்ய முடியாது இருக்கிறோம். சிந்திக்க வேண்டும். திடமாண எண்ணம், செயல் வேண்டும்

 31. k.v.k.swami on October 2, 2016 at 2:03 pm

  “நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது பல உள்ளன. ஆதாரம் இருந்தும் ஏன் நாம் எதுவும் செய்ய முடியாது இருக்கிறோம்.சிந்திக்க வேண்டும்” ஆழமாக சிந்தித்து வேகமாக செயல்படவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

  என் கருத்து பலருக்கு கோபத்தை உண்டாக்கலாம் – சிலருக்கு உடன்பாடு இருக்கலாம் – பலருக்கு நாத்திகவாதத்தை ஆதரிக்கிறேன் என்று என்மேல் வெறுப்பு உண்டாகலாம். ஆனால் தீர்கமாக சிந்தித்தால் உண்மை புரியம்.

  ஆதி சங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர் போன்ற மகான்கள் பல தத்துவத்தையும் மக்கள் வாழவேண்டிய முறைகளையும் போதித்தனர். ஆனால் அவர்கள் யாரும் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கவில்லை. அவர்கள் போதனையை ஊன்றி படித்தால் அம்மகான்கள் சாதி வேறுபாடுகளை வேரறுக்க முயன்றுள்ளனர் என்பது தெளிவாகும். அவர்களின் ஆன்மீக வழிபாடு வழிமுறைகள் வெவ்வேராயினும் விரோதத்தை போதிக்கவில்லை. அதுதான் நமது ஹிந்து மார்கத்தின் சிறப்பு. யாருக்கு எது மேன்மையானது என்று தோன்றியதோ அதை அவர் பின்பற்ற முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அந்த அதீத சுதந்திரமே இன்று ஹிந்து மார்கத்தின் அழிவுக்கு காரணமாகிவிட்டதோ என்கிற ஐயப்பாடு எழுகின்றது. ஆயிரவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் நம் வழிபாடும் வேண்டுதலும் போய் சேருமிடம் ஒன்றுதான் என்கிற ஒருமித்த கருத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.

  அன்று மக்கள் தங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப பல இனமாக வாழ்ந்தனர். நாளடைவில் அதுவே சாதியாக பரிணமித்துவிட்டது. ஆயினும், அந்நிய மதத்தினர்
  நம் நாட்டிற்குள் காலடி வைக்கும்முன் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்தனர் என்பது சரித்திரம். இஸ்லாமியர்கள் நம்மவர்களை கொன்றும், கொள்ளையடித்தும் பயமுறுத்தியும் மதமாற்றம் செய்தனர். ஆனால் நமது பண்பாட்டிற்குள் அவர்கள் நுழையவில்லை. ஆனால் கிறித்துவர்களோ தங்கள் மதத்தை பரப்பி வேரூன்றவும் ஆட்சியை பிடிப்பதற்கும் குள்ளநரிதனத்தை கையாண்டு நமக்குள் சாதி விரோதத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும் கண்டு நம்மை சுரண்டினர். அந்த சாதி விரோத அமைப்பில் மேல்மட்டத்திலிருப்பவர்கள் பல சுகத்தினை அனுபவித்து சாதி விரோதத்தை விரிவுபடுத்திவிட்டனர். அதே கிறித்துவரின் குள்ளநரி வியூகத்தை பின்பற்றி, சுதந்திரத்திற்குப்பின் நம்மவர்களே நம்மை சுரண்டிக்கொண்டிருக்கின்றனர். ஆதியில்,அன்றைய ஆன்மீக குருக்களால் ஆன்மீக வழிப்பாட்டில் மக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதே பிறகு “எம்மதமும் சம்மதம்” என்கிற நிலையை எட்டி இன்று ஹிந்து மார்கம் அழிவை நோக்கி வெகு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கியது.

  ஹிந்து மார்க்கம் மட்டுமல்ல, இந்திய என்கிற நாடு மேலும் துண்டாடப்பட்டு சிதறாமல் இருக்கவேண்டுமானால் இப்போதாவது ஹிந்துக்கள் ஒன்றுபடவேண்டும். அதற்கு இன்றைய அனைத்து பிரிவு ஆன்மீகவாதிகளும் ஒன்று சேர்ந்து ஒரு குடையின் கீழ், தங்கள் இன வழிபட்டிற்கு குந்தகமில்லாமல், ஹிந்துக்கள் அனைவரும் ஓர் இனமே என்கிற பண்பாட்டை வளர்த்த முன்பட்டார்களானால், ஹிந்து மார்க்கமும் காப்பாற்ற படும், ஹிந்துக்களுக்குள் சாதி வேற்றுமை ஒழிந்து ஒற்றுமை ஏற்பட்டு இந்தியாவும் காப்பாற்றப்படும். இல்லையேல் சுயநல அரசியல்வாதிகள் சாதி-மதம்-சிறுபான்மையினம் என்கிற கோழத்தை மட்டுமே முன் வைத்து நம் நாட்டை அந்நியருக்கு அடகு வைத்துவிடுவார்கள். ஹிந்துக்களுக்கு எதிரி மாற்று மதத்தினர் அல்ல ஹிந்துக்களேதான். ஏற்படுமா மாற்றம்?????????????

 32. ராஜ் குமாா் on April 21, 2017 at 4:14 pm

  நம் உலகில் உள்ள அனைத்து வழிபாட்டு முறைகளிலும் பழமையானது நமது இந்து மதம். இதற்க்கு யாரும் தலைவா் கிடையாது. நமது ஈசனுடைய பெருமைகளைை. கூற வந்த மனிதா்களை நாம் பல மதங்களாக சித்தாித்து சில வழிபாட்டு முறைகளையும். ஏவி விட்டு விளையாட்டுகள். செய்து. கொண்டிருக்கிறோம்

 33. ராஜ் குமாா் on April 21, 2017 at 4:26 pm

  ரஜதகிரீ ஈஷ்வரன் திருக்கோவிலின். சக்தி வழிபாட்டு கோவிலாகதான் வேலனகண்ணி. அம்மன் இருந்திருக்க வேண்டும். இதை ஆய்வுக்கு உட்படுத்தினால் நிச்சயம் பல உண்மைகள் வெளியே. வரும்

 34. ராஜ் குமாா் on April 24, 2017 at 10:59 pm

  வேல் போன்ற கண் உடையவள். ஆதலால் வேலனகண்ணி என்றும் வேலன் முருகன்னை. கையில். கொண்டதால். வேலனகண்ணி. என்றும் திருஞானசம்பந்தர் பெயரிட்டுள்ளார்.அதுவே. வேலாங்கண்ணி. ஆயிற்று என்பது. உண்மை

 35. ROSAIAH on July 24, 2019 at 12:03 pm

  இது ஒரு கட்டுக்கதை வரலாறு கிருஸ்துவ இந்து மத மக்களிடயே பகைமை தான் இது உருவாக்கும் !! யாருமே நம்ப முடியாத கட்டுக்கதைகளை ஆதார சான்றுகளாக சித்தரித்து உள்ளார்கள் !! இதை எழுதியவர் ஒரு இந்து மத தீவிரவாதி என்றே அழைக்கபடவேண்டும் !!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*