வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2


<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

ஜைன ராமாயணங்கள் :-

ஸ்ரீ ராமானுஜன் அவர்களுடைய வ்யாசம் ஜைன ராமாயணத்தைப் பற்றிய விபரங்களை அதன் பின்னணியுடன் பகிருகிறது. மேலதிகமான தகவல்கள் டாக்டர் ஹெர்மன் ஜார்ஜ் ஜேக்கபி அவர்களுடைய நூலாகிய பௌமாசரியம் என்ற நூலின் வாயிலாகவும் கிட்டுகிறது. டாக்டர் ஜேக்கபி அவர்களுடைய இந்த நூல் இணையத்தில் கிட்டுகிறது. டாக்டர் ஸ்ரீ ஜேக்கபி அவர்கள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை படைப்பாய்வுக்கு உட்படுத்திய மூத்த ஆய்வாளர்களில் முக்யமானவர் என்பது தமிழ் ஹிந்து தளத்தின் வாசகர்களுக்கு வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் என்ற வ்யாசத்தொடர் மூலமாக முன்னரே பரிச்சயம் ஆன விஷயம்.

ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாக டாக்டர் ஜேக்கபி அவர்களுடைய நூலின் வாயிலாகத் தெரிகிறது. மூன்று ஆசிரியர்களின் வெவ்வேறு கதைக்களன்களை ஒட்டி இவை சமைக்கப்படதாக ஸ்ரீ ஜேக்கபி கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி, ஸ்ரீ குணபத்ரர் என்ற இருவரின் வெவ்வேறான கதைக்களனும் அவையல்லாமல் ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனருடைய வேறான மூன்றாவது கதைக்களன்கள் ஜின ராமாயணக் கதைக்களன்கள்.

ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனர் இருவருடைய ராமாயணக் கதைக்களன்கள் ஆதிகவி ஸ்ரீ வால்மீகியின் ராமாயணக் கதைக்களனை பெரும்பாலும் ஒட்டியவை என்றும் மற்ற இருவருடைய கதைக்களன்களும் ஆதிகாவ்யமான ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திலிருந்து வேறுபடுவதாகவும் கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி மற்றும் பிந்தையவர்களது ராமாயணம் ப்ராக்ருதத்திலும் குணபத்ரருடைய ராமாயணம் சம்ஸ்க்ருதத்திலும் இயற்றப்பட்டுள்ளது.

jaina_ramayanaஸ்ரீ விமலசூரி அவர்களில்ன் பவுமாசரிஅ (प उ मा च रि अ — पद्म चरित) எனும் ராமாயணம் மற்றெல்லா ஜைன ராமாயணங்களுக்கும் மூத்தது. இலக்கணங்களால் செம்மைப்படுத்தப்படாத புராதனமான ப்ராக்ருத சைலியில் ஸ்ரீ விமலசூரியின் ராமாயணம் இயற்றப்பட்டிருப்பதாக ஸ்ரீ ஜேக்கபி தெரிவிக்கிறார். இதனை ஜைன மஹாராஷ்ட்ரீ (சுருக்கமாக JM) என்று அடையாளப்படுத்துகிறார். ஸ்ரீ விமலசூரி பொது யுகம் 3ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஜேக்கபி நூலின் அகச்சான்றுகள் வாயிலாக நிறுவுகிறார்.

அவர் காலத்தில் புழக்கத்தில் இருக்கும் ஆதிகவி ஸ்ரீ வால்மீகியின் ராமாயண நூலின் விவரணைகளையும் நிகழ்வுகளையும் கேழ்விக்கு உட்படுத்துவதன் மூலம் ஸ்ரீ விமலசூரியின் பவுமாசரிஅ துவங்குகிறது. பவுமாசரிஅ என்ற ப்ராக்ருத சொற்றொடருக்கு இணையான சம்ஸ்க்ருத சொற்றொடர் பத்ம சரிதம். பத்ம என்ற சொல்லால் சுட்டப்படுபவர் ராமபிரான். ஆக ராமபிரானின் சரித்ரத்தை சொல்லும் ப்ராக்ருத நூல் பவுமாசரிஅ.

ச்ரேணிகன் என்ற மஹாராஜா கௌதம முனிவரை அணுகி ராமாயணம் பற்றிய தன்னுடைய சம்சயங்களைக் கேழ்க்கிறான்.

ஐராவதம் மற்றும் வஜ்ராயுதம் போன்ற பெரும் ஐச்வர்யங்களுடைய இந்த்ரனை ராவணன் யுத்தத்தில் ஜெயித்து கைது செய்ததாக ராமாயணம் பகிரும் கதைகளை எப்படி நம்புவது? கொல்லாமை போன்ற ஜைனக் கோட்பாடுகளுடன் வாழும் ராவணன் என்ற ஜைனச் சான்றோனாகிய ராஜனை நரமாம்சம் சாப்பிடுவதாக ராமாயணம் சித்தரிப்பதை எப்படி ஏற்பது? இந்த்ரனையே வென்றவன் என்று அடையாளப்படுத்தும் ராவணனை குரங்குகளின் படை சமர் செய்து வென்றது என்பதை எப்படி ஏற்பது? கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்குகிறான் என்பதையும் அப்படித் தூங்குபவனின் காதினில் கொதிக்கும் எண்ணையை ஊற்றியும் போர்க்கால பேரிகைகளை முழக்கியும் அவனை எழுப்ப இயலவில்லை என்பதனையும் எப்படி ஏற்பது? ராவணனுக்கு பத்து தலைகள் இருந்தன என்பதை எப்படி ஏற்பது ……… என்று பல வினாக்களை முன்வைப்பதன் மூலம் பௌமாசரியம் துவங்குகிறது.

புழக்கத்தில் இருக்கும் ராமாயணம் பொய்க்கதைகளால் ஆனது என்றும் உண்மையான ராமாயணத்தை நான் சொல்லுகிறேன் என்று கௌதம முனிவர் சொல்லுவதாகவும் பௌமாசரியம் துவங்குகிறது. பௌமாசரியம் ராமனுடைய வம்ச வர்ணனையிலிருந்து துவங்காமல் ராவணனுடைய வம்ச வர்ணனையிலிருந்து துவங்குகிறது. ராவணன் பிறந்த போது அவனுடைய கழுத்தினை அலங்கரிக்க அவனுடைய தாயார் ஒரு நவரத்ன மாலையை அவனுக்கு அணிவிக்கிறாள். அதில் ஒவ்வொன்றிலும் ராவணனுடைய முகம் தெரிகிறதாம். ஒரேசமயத்தில் பத்து முகங்கள் தெரிந்ததால் தசமுகன் (பத்து முகங்கள்) என்று சொல்லப்பட்டானாம்.

ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. 24 தீர்த்தங்கரர்கள், 12 சக்ர்வர்த்திகள், 9 பலபத்ரர்கள், 9 வாஸுதேவர்கள் மற்றும் 9 ப்ரதிவாஸுதேவர்கள் என்று அறுபத்துமூவர் காலசக்ரத்தில் திரும்பத் திரும்பத் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவர் என்பது ஜைனக்கோட்பாடு. வாஸுதேவர்கள் ப்ரதி வாஸுதேவர்களை அழிப்பவர் என்பதும் ஜைனக்கோட்பாடு.

ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். சீதை ராவணனுக்கு மகளாகப்பிறந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளால் ராவணனுக்கு அழிவு என்பதால் ராவணன் பிறந்ததுமே அவளை அப்புறப்படுத்தி விடுகிறான். பின்னாளில் தன் மகள் தான் அவள் என்று அறியாது சீதையைக் கவர்ந்த ராவணனுடன் யுத்தம் நிகழ்கிறது.

ப்ரதிவாஸுதேவனாகிய ராவணன் லக்ஷ்மணன் மீது சக்ராயுதத்தை வீசுகிறான். ஆனால் லஷ்மணன் வாஸுதேவனானதால் அது அவனைத் தாக்கவில்லையாம். வீசப்பட்ட ஆயுதம் அவனைத் தாக்காது அவன் வசமகிறதாம். வாஸுதேவனாகிய லக்ஷ்மணன் தன்னுடைய ஆயுதத்தால் தாக்குவதன் மூலம் அழிக்கப்படவேண்டிய ப்ரதிவாஸுதேவனாகிய ராவணன் அழிக்கப்படுகிறான். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ……..ஜைன சமயம் விதந்தோதும் நற்பண்புகளின் இருப்பிடமாகிய……. பலபத்ரனான ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான்.

மற்ற ஜைன புராணங்களைப் போன்று இந்த ஜின ராமாயணமும் ஒரு ப்ரதி புராணம் ( Anti – Counter – Purana) என்று ஸ்ரீ ராமானுஜன் கருத்துப் பகிர்கிறார். வைதிக சமயத்தில் படைக்கப்பட்ட ராமாயணத்தில் சொல்லப்பட்ட பகுத்தறிவுக்கு முரணான கருத்துக்களை மறுதலித்துச் சமைக்கப்பட்டது ஜின ராமாயணம் என்று வ்யாசமும் பவுமசரிஅ என்ற நூலின் விவரணைகளும் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தையதாகிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பகுத்தறிவிற்கு ஒவ்வாததான பற்பல நிகழ்வுகளையும் விவரணைகளையும் உடையதாகவும் அவற்றையெல்லாம் துலக்கி பகுத்தறிவின் பாற்பட்டு சமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ஜைனராமாயணம்.

லங்காபுரியின் மக்கள் நரமாமிசம் உண்ணும் ராக்ஷசர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை. அதே போல குரங்கினத்தவர்களாக வானரர்களும் சித்தரிக்கப்படுவதில்லை. இவர்கள் மனிதர்களும் இல்லாது தேவர்களும் இல்லாத வித்யாதரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த ராமாயணத்திலும் கூட விவரிக்கப்படும் சாஹசம் மிகுந்த நிகழ்வுகளின் பாற்பட்டு பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யமான சக்திகளை தம் வசம் உடையவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். (Courtesy : Dr.Jacobi’s work…….. Chapter 15………Vanaras in reality are a race of Vidyadharas. A class of beings endowed with many supernatural qualities, if not human beings in the correct sense of the term) ஸ்வர்க்கம், நரகம், மறுபிறவி, மோக்ஷம் போன்ற கருத்தாக்கங்கள் இந்த ஜைன ராமாயணத்தில் காணக்கிட்டுகின்றன. பற்பல மொழிகளில் ஆன வைதிக சமய ராமாயணங்களில் விதந்தோதப்படுவதான ஏகபத்னீவ்ரதன் என்ற ராமனுக்கு எதிரான ஒரு கருத்தாக்கமாக ராமனுக்கு 8000 மனைவிகள் இருந்ததாகவும் லக்ஷ்மணனுக்கு 16000 மனைவிகள் இருந்ததாகவும் இவர்களுடையே வம்ச மூத்தவர்களாகிய சகரன் மற்றும் ஹரிஸேனர்களுக்கு தலா 64000 மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அன்றைய காலத்து பகுத்தறிவு என்ற அலகீட்டின்படி ஒருக்கால் இவையெல்லாம் பகுத்தறிவின் பாற்பட்டவையாக இருந்திருக்கலாம். இன்றைய காலப் பகுத்தறிவு என்ற அலகீட்டின் படி அமானுஷ்யமான சக்தி என்பதோ கண்ணுக்குப் புலப்படாத ஸ்வர்க்கம் மற்றும் நரகம் போன்றவையோ மோக்ஷம் போன்ற கோட்பாடுகளோ பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று சொல்லிவிடலாம்.

jains24வது தீர்த்தங்கரரான மஹாவீரர் இந்த்ரபூதி கௌதமர் என்ற சான்றோருக்கு அளித்த ஒரு பெயர்ப்பட்டியிலின் அடியொட்டிச் சமைக்கப்பட்டது பௌமாசரியம் என்பது ஸ்ரீ விமலசூரியின் கூற்று. அப்பட்டியல் குருவானவர் சிஷ்யனுக்குச் சொல்லி அப்படியே வாய்வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. மஹாவீரரின் நிர்வாணத்துக்கு 530 வருஷங்களுக்குப் பிறகு பௌமாசரியம் என்ற தன்னுடைய நூல் படைக்கப்பட்டதாக ஸ்ரீ விமலசூரி சொல்லுகிறார். ராமபிரானுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த கண்ணனுடைய சரித்ரம் ஜைன சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கையில் ராமசரிதம் சொல்லப்படவில்லை என்பதனால் இந்த கூற்று சந்தேஹாஸ்பதமானது என்று ஸ்ரீ ஜேக்கபி அபிப்ராயப்படுகிறார். நூலில் ஜைன தீர்த்தயாத்ரை ஸ்தலங்கள் வர்ணிக்கப்படுகின்றன. ஜைனக்கோட்பாடுகள் ஆழ்ந்து விவரிக்கப்படுகின்றன.

வ்யாசத்தொடர் எழுத முற்படுதற்கு முன் பவுமசரிஅ ஜைனராமாயண மூலமும் அதன் ஆங்க்ல அல்லது ஹிந்தி மொழியாக்கம் கிடைக்குமா என்று முயற்சி செய்தேன். இந்த நூலில் சொல்லப்படும் விஷயங்கள் என்ன என்பதனை முறையே ஸ்ரீ ராமானுஜன் வ்யாசத்தில் சொல்லப்படும் விஷயங்கள் மற்றும் டாக்டர் ஸ்ரீ ஜேக்கபி அவர்களது நூலில் குறிப்பிடப்படும் விஷயங்கள் இதன் பாற்பட்டே பகிர்ந்துள்ளேன். மூல நூலாகிய பவுமசரிஅ நான் பகிரும் விஷயங்களிலிருந்து மாறுபட்டிருக்குமானால் அதைக் கண்ணுறும் அன்பர்கள் அவற்றை நிச்சயமாகப் பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

பின்னிட்டும் மேற்கண்ட விவரணைகளை ஒருசேரப்ப பார்க்குங்கால் இந்த நூல் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளினை விவரிக்க வேண்டி அதனையொட்டி அதனுடன் ஒப்பக்கூடிய ஒரு கதைக்களனைப் பகிர முனைவது துலங்குகிறது.

******

தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசிய தேசங்களின் ராமாயணங்கள்:

தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் என்று இந்த வ்யாசம் சொல்லுகிறது.

தாய்லாந்து தேசத்திய ராமகதை கம்பநாட்டாழ்வாரின் ராமாவதாரம் என்ற கதையிலிருந்து கரந்துரையப்படுவதை ராமானுஜன் வ்யாசம் பகிருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்கள். வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது ஒரு காட்டு. மானுட, ராக்ஷஸ, குரங்கின என்ற படிக்கு ராமகீர்த்தியில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் விவரிக்கப்படுகின்றன என்று வ்யாசம் பகிருகிறது. கதைக்களனைப் பார்க்கையில் ராம ஜனனம் துவங்கி, சீதாராம விவாஹம், வனவாஸம், சீதையை ராவணன் அபகரித்து லங்காபுரிக்கு எடுத்துச் செல்லுவது, ராமராவண யுத்தம், ராமபிரான் அயோத்திக்கு திரும்பி அரசாளுவது, உத்தரராமாயண நிகழ்வுகள் என்று தாய்லாந்திய ராமாயணங்களின் நிகழ்வுப் பட்டியல் நீளுகிறது.

வைதிக சமயத்தைச் சார்ந்த ராமாயணங்கள் விஸ்தாரமாக மனதில் பதியும் வண்ணம் சொல்லும் நிகழ்வுகளாகிய திவ்ய தம்பதிகளின் பிரிவு அதையொட்டிய சம்பவங்கள் பின்னர் அவர்கள் ஒன்றிணைவது என்ற நிகழ்வுகள் தாய்லாந்திய ராமாயணத்தில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களல்ல. மாறாக தாய்லாந்து ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லுதல் அதையடுத்து நிகழும் யுத்தம் போன்றவை மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுவதாக வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள், யுத்தத்தில் கையாளப்படும் யுக்திகள் அதில் கையாளப்பட்ட அதிசயத்தக்க யுத்த தளவாடங்கள் போன்றவை தாய்லாந்திய ராமாயணத்தில் வெகு விஸ்தாரமாகச் சொல்லப்படுவதாக ராமானுஜனுடைய வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள் தாய்லாந்திய ராமாயணத்தில் விஸ்தாராமாகச் சொல்லப்படுவதன் பின்னணியை ஸ்ரீ சந்தோஷ் தேசாய் அவர்கள் குறிப்பிடுவதை ராமானுஜனின் வ்யாசம் தெரிவிக்கிறது. முற்காலத்திய தாயாலாந்திய சரித்ரம் யுத்தங்களால் வடிக்கப்படும் ஒரு சரித்ரம் என்பது கவனிக்கத் தக்கது. யுத்தங்களுக்கிடையே பிழைத்து வாழ்தல் என்பது அவர்களுடைய அக்கலத்திய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது.

Hanuman on his chariot, a scene from the Ramakien in Wat Phra Kaew, Bangkok (courtesy: Wikimedia commons)
Hanuman on his chariot, a scene from the Ramakien in Wat Phra Kaew, Bangkok (courtesy: Wikimedia commons)

கதாபாத்திரங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது ராமரை விட ஹனுமான் என்றும் தாய்லாந்திய ஹனுமான் உறுதியான ப்ரம்மசாரி இல்லையென்றும் பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று ராமானுஜன் வ்யாசம் சொல்லுகிறது. லங்காபுரிவாசிகளின் படுக்கையறைகளுக்குச் சென்று அங்கு துயிலும் தையலார்களைக் கண்ணுறுவதை கம்பநாட்டாழ்வாரோ வால்மீகியோ காட்டும்படிக்கு அல்லாமல் ……… அதார்மிகமாக தாய்லாந்திய ஹனுமான் கருதாதவாறு…….. தாய்லாந்திய ராமாயணம் படைக்கப்பட்டுள்ளது என்று வ்யாசம் தெரிவிக்கிறது.

வ்யாசம் சித்தரிக்க முனையும் சில முரண்களைப் பார்க்கையில் தாய்லாந்திய ராமாயணம் அல்லது பல தாய்லாந்திய அரசர்கள் எழுதிய ராமாயணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் பகிரப்படுதல் நன்று என்று படுகிறது.

அவை என்னென்ன?

1. தாய்லாந்திய மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பது ராமனின் கதாபாத்திரம் அல்ல மாறாக ஹனுமனின் கதாபாத்திரம் என்று வ்யாசம் சொல்லுகிறது. தாய்லாந்திய ராமனின் பாத்திரப்படைப்பு வ்யாசத்தில் அடக்கி வாசிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படிப்பட்ட ஒரு வெகுஜன மக்கள் திரளின் தலைவனாக சதாப்தங்களாக தாய்லாந்தினை ஆளும் அரசர்களின் பெயர்களில் ஏன் **ஹனுமன்** என்ற விகுதி காணப்படாது **ராம** என்ற விகுதி காணப்படுகிறது என்று சம்சயம் எழுகிறது.

2. ஒரு புறம் தாய்லாந்திய ராமகீர்த்தி மானுட, ராக்ஷஸ மற்றும் குரங்கின என்ற படிக்கு மூன்று கதாபாத்திரங்கள் தாய்லாந்திய ராமாயணத்தில் காணக்கிட்டுவதைக் கவனமாக வகை தொகை சார்ந்து வ்யாசம் பகிருகையில் ஹனுமனை பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று வ்யாசம் சுட்ட விழைவதை கவனிக்காது போக முடியவில்லை. இங்கு மனிதன் என்று சொல்லப்படுவதற்கு அர்த்தம் கற்பிக்கலாம் அல்லது சால்ஜாப்பு சொல்லலாம் தான். பின்னிட்டும் ஒரு குரங்கினத்தவன் ladies man என்று சுட்டப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. ஆயினும் ஒரு முழுமையான சித்திரம் தாய்லாந்திய ராமாயணங்களிலிருந்து காய்த்தல் உவத்தல் இல்லாமல் பகிரப்படுவது முறையாகும்.

3. பெயர்களைக் கையாளுதல் என்ற படிக்கு கம்பராமாயணத்திலிருந்து பெரும்பாலும் கரந்துரையப்பட்டது தாய்லாந்திய ராமாயணம் என்று வ்யாசத்தில் ஒரு புறம் பகிரப்படுகையில்……….. கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை. வ்யாசத்தின் சித்தரிப்பினைச் சார்ந்து தாய்லாந்திய ராமாயணம் பெயர்களைக் கையாள்வதில் கம்பநாட்டாழ்வாரைக் கைக்கொள்வதை ஒரு புறம் அவதானிக்கையிலேயே மறுபுறம் நிகழ்வுப் பட்டியலைப் பார்க்கையில் ஆதிகாவ்யமான மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தையும் அடியொற்றுவது தெளிவாகத் தெரிகிறது. சித்தரிப்பு ஒருவைகயாக இருக்கையில் பகிரப்படும் முடிபுகள் வேறாகக் காணப்படுவது வ்யாசத்தின் சித்தரிப்பு காய்த்தல் உவத்தல் கொண்டதோ என்று சம்சயம் ஒரு புறம் எழுகிறது.

4. கோரக்பூர் கீதாப்ரஸ் என்ற ஸ்தாபனத்தினால் பதிக்கப்பட்ட ஸ்ரீமத் வால்மீகி ராமாயணப் பதிப்பின் ஏழாவது பதிப்பின் பாற்பட்டு ஒவ்வொரு காண்டமும் அதில் காணப்படும் ஸர்க்கங்களின் (அத்யாயம்) எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-

1. பாலகாண்டம் ………………………77
2. அயோத்யாகாண்டம்…………….119
3.ஆரண்யகாண்டம்…………………75
4.கிஷ்கிந்தாகாண்டம்……………..67
5.ஸுந்தரகாண்டம்………………..68
6.யுத்தகாண்டம்…………………….128
7.உத்தரகாண்டம்……………………111  (பிற்சேர்க்கை என்று 2 அதிகப்படி ஸர்க்கங்கள் தனி)

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண யுத்தகாண்டத்து விவரணைகளை முழுதாக வாசிக்கையில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் யுத்த களமும், யுக்திகளும் அதில் உபயோகிக்கப்பட்ட யுத்த தளவாடங்களும் அஸ்த்ர சஸ்த்ரங்களும் வெகு விஸ்தாரமாக ஆதிகவி வால்மீகி முனிவரால் சொல்லப்பட்டிருப்பது துலங்குகிறது. தாய்லாந்திய ராமாயணத்தின் மாறுபாடான கதையம்சமாக வ்யாசம் சுட்டப்படும் கருத்து அப்படி அந்த வாசிப்புக்கேயான ஒரு மாறுபாடான அம்சம் இல்லை என்பது இதன் மூலம் துலங்குகிறது.

இவை மேம்போக்காகத் தோன்றும் சம்சயங்கள் தான். முழுமையான சித்தரிப்பு மற்றும் முழுமையான புரிதல் தாய்லாந்திய ராமாயணத்தை முழுமையாக வாசித்து அறிவதன் மூலம் மட்டிலும் தான் கிட்டும் என்பது திண்ணம்.

தக்ஷிணபாரதத்து நாட்டார் வழக்கியலில் காணப்படும் ராமாயணக் கதைக்களன் களில் சில ஆதிகாவ்யத்தை ஒத்தும் சில அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. சில கதைக்களன் களில் ஆதிகாவ்யத்துக்கு மாறாக கதாபாத்ரங்கள் தாறுமாறாக சித்தரிக்கப்படுவதும் புலனாகிறது.

ராமாயண காவ்யம் ஹிந்துஸ்தானமுழுதும் பற்பல மொழிகளிலும் பற்பல வட்டாரங்களிலும் ப்ரசித்தி ஆன பிறகு அந்தந்த ப்ரதேச உள்ளூர் மொழிகளில் பிற்காலத்தில் இயற்றப்பட்டவை இந்த மாறுபட்ட கதைக்களன் களைக் கொண்டவை என்பது சதாவதானி டாக்டர் ஆர்.கணேஷ் அவர்கள் தெரிவிக்கும் கூற்று.

மேலும் பார்ப்போம்.

(தொடரும்)

46 Replies to “வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2”

  1. க்ருஷ்ணகுமாரின் நடை எப்போதுமே ரொம்பப் படுத்துவது. அந்தக் கால மணிபிரவாளத்தை விட வலிந்து சமஸ்கிருத வார்த்தைகளைப் புகுத்துகிறார். ‘ஸ்ரீ ராமானுஜன் அவர்களுடைய வ்யாசம்’ என்று முதல் நான்கு வார்த்தைகளைப் படிக்கும்போதே அயர்வு ஏற்பட்டுவிடுகிறது. ஏன் க்ருஷ்ணகுமார், கட்டுரை என்ற வார்த்தையை நீங்கள் அறிய மாட்டீர்களா? ஏன் இவ்வளவு விடாமுயற்சியோடு செயற்கையான மொழியில் எழுதுகிறீர்கள்? வ்யாசம் என்ற வார்த்தை எல்லாம் சபாபதி (1941) திரைப்பட காலத்தோடு தமிழில் ஒழிந்துவிட்டது!

    க்ருஷ்ணகுமார் பின்னூட்டம் எழுதும்போது அவர் பயன்படுத்தும் நடை, மொழி அவரது சுதந்திரம். அதை தமிழ் ஹிந்து தளத்தின் பொறுப்பாளர்கள் அப்படியே அனுமதித்தால் புரிந்து கொள்கிறேன். ஆனால் தமிழ் ஹிந்து தளத்தில் பதிக்கப்படும் கட்டுரைகளுக்கு சில அடிப்படை தகுதிகளாவது இருக்க வேண்டும், இந்த மாதிரி மொழியை அனுமதிக்கக் கூடாது என்று நான் கருதுகிறேன். இந்த நடையை, மொழியை பயன்படுத்துவதில் தமிழ் ஹிந்து தளத்தின் பொறுப்பாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் நான் பீட்டர் தமிழில் ஒரு கட்டுரையை – இல்லை இல்லை எஸ்ஸேவை – அனுப்பலாமா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

  2. சற்று நீண்ட உத்தரம் இது. க்ஷமிக்கவும்.

    ஜைன ராமாயணங்களைப் பற்றி ஸ்ரீ ராமானுஜன் தன்னுடைய வ்யாசத்தில் தெரிவித்திருக்கிறார்,. மேலும் டாக்டர் ஸ்ரீ ஹெர்மன் ஜார்ஜ் ஜேக்கபி அவர்கள் பவுமாசரிஅ நூலின் பதிப்பாசிரியராகப் பகிர்ந்த கருத்துக்களும் ஜைன ராமாயணங்களைப் பற்றி விரிவாக விளக்குகின்றன.

    வ்யாசத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தில் ஜேக்கபி அவர்கள் ஜைன ராமாயணங்கள் பற்றியும் அதுவும் மிகக் குறிப்பாக அவற்றில் மிகப்பழையதான ஸ்ரீ விமலசூரி அவர்கள் இயற்றிய ஜைன ராமாயணம் பற்றியும் குறிப்பிட்டதைப் பார்த்தோம்.

    ஸ்ரீ ஜடாயு அவர்கள் இந்த வ்யாசத்தினை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்கையில்

    \\\\ 1980-90களில் ராமஜன்மபூமி விவகாரத்தின் போது அயோத்தி இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக வேண்டுமென்றே இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் ஜைன ராமாயணம் தான் மையமானது, வால்மீகத்தை விட ஆதாரபூர்வமானது போன்ற பொய்யுரைகளைப் பரப்பினார்கள். இன்றுவரை அந்தத் திரிபுவாதங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. \\\\

    என குறிப்பிட்டிருக்கிறார்.

    ஆய்வாளர்களின் கருத்துக்களின் பாற்பட்டு ஜைன ராமாயணம் தான் மையமானது என்பது அடியோடு புறந்தள்ளப்பட வேண்டிய கருத்து.

    ஜைன ராமாயணங்களில் மிகத் தொன்மையானதாக அடையாளம் காணப்படும் ஸ்ரீ விமலசூரி அவர்களால் இயற்றப்பட்ட பவுமசரிஅ பொதுயுகம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்தது (டாக்டர் ஸ்ரீ ஜேக்கபி)

    வால்மீகி ராமாயணம் 2500 வருஷங்கள் பழமையான காவ்யம் (இந்தியவியல் ஆய்வாளர்கள்). ஆக ஜைன ராமாயணங்களுக்கு காலத்தால் மிகவும் முந்தையது ஆதிகவி வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்பது கவனிக்கத் தக்கது.

    ஸ்ரீ ராமானுஜன் அவர்கள் தன்னுடைய வ்யாசத்தில் மிகக் குறிப்பாக ஜைன ராமாயணங்களை ****ப்ரதி புராணம்**** என்று அடையாளப்படுத்தி இருக்கிறார். அதாவது வைதிக சமயத்து புராணங்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் புராணம். ஸ்ரீமத் வால்மீகி ராமாயண க்ரிடிகல் எடிஷன் பதிப்பாசிரியர் குழுவில் அங்கம் வகித்த பதிப்பாசிரியர்களுடைய கருத்ததுக்களையு இங்கு உள்வாங்க வேண்டியது மிகவும் அவச்யம்.

    ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகளுக்கு ………… ஹிந்துஸ்தானத்தில் புழங்கி வந்துள்ள பாஷாந்தர ராமாயண நூற்களை தமது ஆய்வில் எடுத்துக்கொண்ட பதிப்பாசிரியர் குழுவினர் பௌத்த மற்றும் ஜைன ராமாயணங்களை எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குக் காரணமாக அவர்கள் தெரிவித்த கருத்து ………..இவை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக எழுதப்பட்டவை; மாற்றுக் கதைக்களனைக் கொண்டவை

    “The various versions of Ramakatha contained in the Jaina and Budhist traditions have been ignored for, as Dr.G.H.Bhat remarks, “they have an altogether different setting, with a special purpose and are, therefore of little help”.

    மேலும் ஸ்ரீ ராமானுஜன் அவர்களது வ்யாசத்தில் குறிப்பிட்ட படிக்கும் ஸ்ரீ ஜேக்கபி அவர்களது நூலிலும் காணப்படும் படி, ஸ்ரீ விமலசூரியின் ஜைன ராமாயணமான பவுமசரிஅ ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஆதிகவி ஸ்ரீ வால்மீகியின் ராமாயணத்தைப் பற்றி ப்ரஸ்தாபிக்கிறது; மேலும் அதை எதிர்மறையாக ப்ரஸ்தாபிக்கிறது. அதற்கு எதிராக………… மாற்றாக இந்த ஜைன ராமாயணம் படைக்கப்படுவதையும் ப்ரஸ்தாபிக்கிறது.

    ஆக மிகக் குறிப்பாக………… புழக்கத்தில் இருக்கும் ஆதிகவி ஸ்ரீ வால்மீகி முனிவரின் ராமாயண காவ்யத்திற்கு எதிராகவே ………. குறிப்பிட்ட குறிக்கோளுடன் ஜைன ராமாயணம் படைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

    இவ்வாறிருக்க இந்த நூலின் / ஜைன ராமாயணங்களின் குணாதிசயங்கள் யாவை என்பதை ஸ்ரீ ஜேக்கபி அவர்கள் நூலின் வாயிலாகப் பார்ப்போம் :-

    1. ஸ்ரீ விமலசூரியின் பவுமசரிஅ என்ற ப்ராக்ருத ராமாயணம் துவங்கி ப்ராக்ருதத்திலும் சம்ஸ்க்ருதத்திலும் ஸ்ரீ ஜேக்கபி அவர்கள் 15 ஜைன ராமாயணங்களைப் பட்டியலிடுகிறார். இதைத் தவிர ராமாயண கதையைப் பேசும் 30 ப்ராக்ருத மற்றும் சம்ஸ்க்ருத நூற்களை ஜின ரத்னகோசம் பட்டியலிடுகிறது. (பத்தி 2)

    2. சரி………….. எல்லா ஜின ராமாயணங்களும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் கதைக்களனிலிருந்து வேறுபடுகிறதா? இல்லை என்னுகிறது ஸ்ரீ ஜேக்கபி அவர்களது நூல். ஸ்ரீ சங்கதாஸார் மற்றும் ஸ்ரீ ஹரிசேனர் போன்ற படைபாளர்களுடைய ஜின ராமாயணங்கள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் கதைக்களனை ஒத்ததாகவும் மற்றும் ஸ்ரீ விமலசூரி (ப்ராக்ருதம்) ஸ்ரீ குணபத்ரர் (சம்ஸ்க்ருதம்) இவர்களுடைய ராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் கதைக்களனிலிருந்து வேறுபடுவதாகவும் தெரிவிக்கிறார். (பத்தி 2)

    3. பத்தி 3ல் எல்லா ஜின ராமாயணங்களையும் ஒப்பிடுகிறார்.

    4. பத்தி ஐந்தில் நியமன ஜைன சாஸ்த்ரங்களில் ஸ்ரீ க்ருஷ்ணரின் கதை பேசப்படுகையில் ராமகதை பேசப்படாததை ஸ்ரீ ஜேக்கபி குறிப்பிடுகிறார். அதையொட்டி ஸ்ரீ விமலசூரியின் பகிர்வுகள் சிலவற்றை கேழ்விக்கு உள்ளாக்குகிறார்.

    5.பத்தி ஏழில் நூலின் காலக்கணக்கு விவாதிக்கப்படுகிறது. ஸ்ரீ மஹாவீரர் நிர்வாணமான வருஷத்திலிருந்து 530 வருஷங்கள் கழித்து தன் நூலை இயற்றியதாக ஸ்ரீ விமலசூரி குறிப்பிடுகிறார். அதையொட்டி மிகவும் முந்தைய காலமான பொதுயுகம் 1ம் நூற்றாண்டு என ஒரு கணக்கும் பொதுயுகம் 4ம் நூற்றாண்டு என இன்னொரு கணக்கும் இந்த ஜைன ராமாயண இயற்றப்பட்ட காலமாக கணிக்கப்படுகிறது.

    6. பத்தி பதினொன்றில் நூலின் காவியத் தன்மை விரிவாக விசாரிக்கப்படுகிறது. ஸ்ரீ விமலசூரி அவர்கள் தன்னுடைய நூலின் அவதாரிகையிலும் அறுதியிலும் தன்னுடைய நூலை புராணம் என அடையாளப்படுத்துகிறார். இந்த நூலின் ப்ரதான உத்தேசம் ஜைன தர்ம ப்ரசாரம் என்பது தெளிவாகிறது.

    ஆக முதன்மையாக ஸ்ரீ விமலசூரி என்ற ஜின தர்ம ப்ரசாரகரே இங்கு முன்னிற்கிறார். ஸ்ரீ விமலசூரி என்ற கவி இரண்டாம் பக்ஷம் தான். ஜைன தர்மத்தின் அறவிழுமியங்கள், ஜின புராணங்கள் பகிரும் தத்வார்த்தம், ப்ரபஞ்சம் போன்றவற்றை வெகு விரிவாக இவருடைய நூல் விவரிக்கிறது. படுபாதகமான ஹிம்சை / கொலை போன்றவற்றின் மற்றும் மாம்சாஹாரம் உண்ணுதலின் விளைவுகள், நரக யாதனைகள், உலகவாழ்வின் நிலையாமை, பெண்களை இழிவு படுத்தும் செயற்பாடுகள், கர்மா எனும் கொள்கையின் விளக்கங்கள், கதாபாத்ரங்களின் முற்பிறவிகள் எதிர்காலப்பிறவிகள் என விஸ்தாரமாக பவுமசரிஅ எனும் நூல் விளக்குகிறது.

    இப்படியான வரட்டு வேதாந்த விளக்கங்களினூடே கவிதையெழில் எனும் அம்சத்தை பார்க்க முயல்வது கடினம் என்று துலங்கும் எனவும் இலக்கியம் என்ற அந்தஸ்தை இந்த நூல் எட்டவில்லை என்று சொல்லலாம் (Keith ……….. history of sanskrit literature). ஸ்ரீ ஜேக்கபி அவர்களும் இந்த நூலில் கவிதையம்சம் சொற்பமாகக் காணப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.

    அதே சமயம் ஆதிகவி ஸ்ரீ வால்மீகியை ஸ்ரீ விமலசூரியுடன் ஒப்பிடுவது முறைமையாகாது என்பதனையும் குறிப்பிடுகிறார். ஆதிகவியின் ராமாயணம் ஒருங்கே காவியமும் ஆகும் ………..பொலிவான கவிதையும் ஆகும் என்னுகிறார்.

    ஸ்ரீ விமலசூரியை காளிதாசன், பாரவி, மாக கவி போன்றோருடன் ஒப்பிடுவது தான் முறையாகும் என அபிப்ராயப்படுகிறார். அவர்களுடைய மஹாகாவ்யங்கள் இலக்கியத்தை அனுபவிக்கும் இன்பத்தினை அளிப்பவை. ஆனால் இங்கு நாம் விமர்சிக்கும் ஸ்ரீ விமலசூரியின் நூல் ஒரு காவியமன்று. மாறாக புராணமாகும். அதனுடைய ப்ரதான உத்தேசம் தர்மோபதேசம்.

    பவுமசரிஅ நூலை ஆழ்ந்து வாசிக்கையில் ஸ்ரீ விமலசூரியின் கவித்துவ மேன்மையோ ஆற்றொழுக்காக விளக்கும் தன்மைகளோ தென்படுவதில்லை. முழு புராணத்திலும் எந்த காண்டத்திலும் கவிச்சுவை என்பது விகசிதமாக எங்கும் தென்படவில்லை. ஆயினும் புராணம் நெடுகிலும் நகரங்கள், சமுத்ரங்கள், நதிகள், மலைகள், ருதுக்கள், ஜலக்ரீடை,ச்ருங்காரம் பேசும் நிகழ்வுகள் போன்றவை ஆங்காங்கு எளிமையான கவிதைகளாக அழகுற காணப்படுகின்றன.

    விமலசுரியின் கதை சொல்லும் பாங்கு வாழ்வு, சமயம், அறவிழுமியங்கள் இவற்றை விவரிக்கையில் விகசிதமாக வெளிப்படுகின்றன. புராணம் நெடுகிலும் சுபாஷிதங்களை ( அற நெறி பரப்புரை செய்யும் பாக்கள்) தொடர்ந்து வழங்குகிறார்.

    ஜனரஞ்சகமாகத் தன் படைப்பினை சமைக்க வேண்டும் என்பதற்காக வெகுவாக நாட்டார் மொழியினை ஸ்ரீ விமலசூரி கையாண்டிருக்கிறார். செம்மைப்படுத்தப்பட்ட ப்ராக்ருதம் என்று கூட இல்லாமல் அபப்ரம்சமான பல நாட்டார் வழக்குகளையும் பழமொழிகளையும் கையாண்டிருக்கிறார்.

    ச்ருங்காரம், வீரம், கருணை போன்ற ரசங்கள் இந்த புராண நூலில் ஆங்காங்கு அழகுற காட்டப்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஆனால் ப்ரதானமாகக் காட்டப்படும் விஷயம் வைராக்யம் என்பது கவனிக்கத் தக்கது.

    ஸ்ரீ விமலசூரி சரளமாக, தெளிவாக மற்றும் அழுத்தம் திருத்தமாகத் தன் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். 355 பக்கங்களில் 106 பக்கங்கள் வறட்டு வேதாந்தாம் பேசும் பக்கங்கள் மேலும் மந்தமான விவரணங்களை கொண்டவையாக அமைந்தவையாகக் காணப்படுகிறது. இவை இவர் தேர்ந்த ஒரு கதாசிரியர் அல்ல என நிரூபிக்கிறது.

    இந்த நூல் 118 அத்யாயங்களை உள்ளடக்கியிருக்கிறது. 8651 பாக்களைக் கொண்டதாக சமைக்கப்பட்டுள்ளது.

    7. பத்தி 19ல் இந்த புராணத்தில் கையாளப்பட்டுள்ள பாவடிவங்களை விளக்குகிறது ஸ்ரீ ஜேக்கபி அவர்களது நூல். பெருமளவில் இந்த புராணத்தில் பாக்கள் ஆர்யா வ்ருத்தம் (gAthA) என்ற பாவடிவத்தில் இயற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் ஸ்ரீ ஜேக்கபி அவர்கள் இந்தப் புராணத்தில் இந்த ஆர்யா வ்ருத்தம் இலக்கண சுத்தமாகக் கையாளப்பட்டுள்ளதை விதந்தோதியிருக்கிறார். பஞ்சசாமரம், இந்த்ரவஜ்ரா, உபேந்த்ரவஜ்ரா, உபஜாதி, தோடகம் போன்ற அழகான பாவடிவங்கள் கையாளப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறார். 84 மாத்ரைகளுள்ள தண்டகம் என்ற பாவடிவத்தினை இந்த புராணத்தில் கையாண்டதையும் குறிப்பிடுகிறார்.

    8. பத்தி இருபதில் ஜைன முனிகள் தானமாக ஏற்காத கோதானம், ஸ்த்ரீதானம், ஸுவர்ண தானம் போன்றவற்றை இந்தப் புராணம் கண்டிப்பதைக் குறிப்பிடுகிறார். ஜினரை விதந்தோதும் போது ஸ்வயம்பு சதுர்முகன் என்றும் விஷ்ணு என்றும் சங்கரன் என்றும் விதந்தோதுகிறார். இது ஒரு புறம் கதாசிரியரின் பெருந்தன்மையை தெரிவிப்பதாக அமைந்தாலும் அக்காலகட்டத்தில் மும்மூர்த்திகளின் வழிபாடு எந்தளவு வழமையில் இருந்திருக்கிறது என்பதனையும் படம் பிடித்துக் காட்டுகிறது என்பதனையும் அவதானிக்க வேண்டும்.

    இவையெல்லாவற்றையும் பார்க்கையில் சில முடிபுகளை எட்ட முடிகிறது.

    1. ஸ்ரீ விமலசூரியின் பவுமசரிஅ ஜைன ராமாயணங்களில் மூத்தது. காலத்தால் ஆதிகாவ்யம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்திற்கு மிகவும் பிற்பட்டது.

    2. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை ஒரு பொய்க்கதை என்று சாடும் ஸ்ரீ விமலசூரி அதற்கு எதிராகத் தன் ராமாயணத்தை சமைக்க விழைகிறார். ராமாயண நிகழ்வுகள் பல பகுத்தறிவுக்குப் புறம்பான நிகழ்வுகள் என வெளிப்படையாக நிந்தனை செய்கிறார்.

    3. ஜைன சமயம் ஹிந்து மதத்தின் ஒரு முக்யமான அங்கம் என்பது ஹிந்துத்வக் கருத்தாடல்களில் அவதானிக்கப்பட வேண்டிய விஷயம்.

    4. காலக்கணக்கினை அனுசரித்துப் பார்க்கையில் ஜைன ராமாயணங்களே மைய ராமாயணம் என்ற இடதுசாரிக் கருத்துக்கள் புறந்தள்ளப்பட வேண்டிய கருத்துக்கள் என சித்தமாகிறது. மேலும் வைதிக சமயம் மற்றும் ஜைன சமயம் என்ற ஹிந்து மதத்தின் இரு வேறு சமயங்களுக்கிடையே வேறுபாடுகள் மட்டிலும் இருப்பது போலவும் இவற்றினிடையே ஒற்றுமைகள் என்பது அறவே இல்லை என்பது போலவுமான ஒரு பலவந்தமான கருத்தை திணிப்பதற்கு இப்படிப்பட்ட போட்டி பொறாமை அம்சத்தினை அளவுக்கு அதிகமாக முன்வைக்க விழைகின்றது இழிவான இடதுசாரிக்கருத்துக்கள்.

    5. ஒட்டு மொத்தமான ஜின ராமாயணங்களும் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்திலிருந்து வேறுபடுபவை அல்ல. விமலசூரி மற்றும் குணபத்ரர் இருவருடைய ப்ராக்ருத மற்றும் சம்ஸ்க்ருத ராமாயணங்கள் ஆதிகாவ்யத்திலிருந்து வேறுபடுபவை. ஆயினும் சங்கதாஸர் மற்றும் ஹரிஸேனர் போன்றோருடைய ப்ராக்ருத ராமாயணங்கள் ஆதிகாவ்யத்துடன் வெகு அணுக்கமானவை என்று ஸ்ரீ ஜேக்கபி அபிப்ராயப்படுகிறார்.

    6. ஸ்ரீ விமலசூரியின் ராமாயணம் ஆதிகாவ்யத்தில் பகுத்தறிவுக்குப் புறம்பான நிகழ்வுகள் காணப்படுகின்றன என்று சுட்டிக்காட்டி நிந்தனை செய்தாலும் அவர் சமைத்த ராமாயணமும் முற்று முழுதாகப் பகுத்தறிவுக்கு உடன்படும் நிகழ்வுகளால் சமைக்கப்பட்டதுஅன்று என்று தெரிகிறது. அமானுஷ்யமான சக்திகள் வித்யதரர்களான வானரர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் இருந்ததாம். ஸ்வர்க்கம், நரகம், மோக்ஷம் என்ற வைதிக சமயச் சொல்லாடல்கள் எல்லாமும் இந்த ஜைன ராமாயணத்திலும் காணப்படுகின்றன. இவையெல்லாம் எப்படி பகுத்தறிவின் பாற்பட்டவை என்பதை வாசிக்கும் வாசகர்களது முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

    7. ஸ்ரீ விமலசூரி தேர்ந்த ஒரு கதாசிரியரோ அல்லது கவியோ அல்ல என ஸ்ரீ ஜேக்கபி அபிப்ராயப்படுகிறார். ஆனால் அவர் ப்ராக்ருத / சம்ஸ்க்ருத பாஷைகளில் ப்ரசித்தமான பாவடிவங்களைக் கையாண்டமையையும் குறிப்பிடுகிறார். எளிமையான கவிதைகளும் வர்ணனைகளும் காணப்பட்டாலும் ஒரு தேர்ந்த கதையோ கவிதையோ காணப்படவில்லை என்று குறிப்பிடுகிறார்.

    8. இந்த புராணத்தின் ப்ரதான உத்தேசம் ஜைன தர்மத்தின் தத்வார்த்தம் மற்றும் அறவிழுமியங்களை உபதேசம் செய்வது என்றும் அதை ஸ்ரீ விமலசூரி தெளிவாகவும், சரளமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் செய்தமையை ஸ்ரீ ஜேக்கபி குறிப்பிடுகிறார். ஆனால் ஒட்டு மொத்த வடிவத்தை அவதானிக்கையில் விவரணைகள் மந்தமாகச் செல்வதையும் பதிகிறார்.

    9. ஜைன சமயத்தைப் பின்பற்றும் அன்பர்களைப் பொறுத்த வரையில் ஜைன ராமாயணங்கள் ஜைன நியமன சாஸ்த்ரங்களில் பேசப்படும் பேசுபொருள் அன்று என்று பத்தி ஐந்தில் குறிப்பிடப்பட்டதைப் பார்த்தோம். ஆயினும் இவற்றை ஜைன தர்மங்களை விளக்குமுகமாக ஜைன சமயத்தின் முக்யமான நூற்களுள் ஒன்றாகக் கருத முகாந்திரம் இருக்கிறது. ஆக இவற்றை ப்ரத்யேகமாக ஜைன தர்மப்ரசார நூலாக மட்டிலும் கருதுதல் முறையாகும்.

    10. ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணக் கதைக்களனிலிருந்து மாறுபடும் ஜைன ராமாயணங்களை ……………பொதுவினில் ஒப்பிடப்படும் ராமாயணக் கதைகளின் ஒரு பகுதியாக ஏற்க முடியாது. ஏனெனில் இவை மிகக் குறிப்பாக ஆதிகாவ்யத்தை மறுத்துப் பேச வேண்டும் என்ற வெளிப்படையான நோக்கத்துடன் சமைக்கப்பட்டவை என்பதனால். ஆயினும் ஆதிகாவ்யத்தின் கதைக்களனுடன் அணுக்கமான ஜைன ராமாயணங்களை ………….. பொதுவினில் ஒப்பிடப்படும் ராமாயணக் கதைகளுடன் ஏற்கலாம். ஏனெனில் இவை ஆதிகாவ்யத்தின் கதைக்களனுடன் பெருமளவு அணுக்கமானவை என்பதனால்.

    11. ஆதிகாவ்யமான ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்துடன் உடன்படும் ராமாயணமாக இருந்தாலும் சரி அதற்கு எதிர்மறையான ராமாயணமாக இருந்தாலும் சரி…………. ஜைன ராமாயணங்கள் ஹிந்து மதத்தின் முக்யமான நூற்கள். ஜைன தர்மப்ரசார சாதனங்கள். ஆக ஹிந்து மதத்தின் மதிப்பு மிகுந்த நூற்தொகுப்பில் முக்யமானவை.

    12. ஆயினும் ராமகதை என்று பேசப்படுகையில் முக்யமான அலகீடு ஆதிகாவ்யமான வால்மீகி ராமாயணத்தின் கதைக்களனுடன் உடன்பாடு அல்லது முரண் என்பது முக்யமாக அவதானிக்க வேண்டிய விஷயம்.

    ஜெய் ஸ்ரீராம்

  3. ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயர் அவர்கள் எப்போதும் போல ஒரு முக்கியமான விடயத்தை எடுத்துக்கொண்டு ஆழ்ந்து ஆய்ந்து இரண்டுக்கட்டுரைகளை வரைந்திருக்கின்றார். ஒருமுறை வாசித்தேன். அருமை. இன்னும் பலமுறை வாசித்து, ஆழ்மனதில் வைக்கவேண்டிய செய்திகள் பல உள்ளன.
    அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம் இரு ஆண்டுகளுக்கு முன்னே ரொமிளா தாப்பரின் பேட்டி ஒன்றை இணையத்தில் வீடியோவாகக்கண்டேன். அதில் அவர் வான்மிகி ராமயணத்தின் ஆரம்பத்திலேயே பௌத்த ஜைன ராமயாணம் பற்றிய குறிப்பு இருப்பதாகவும் அதனால் அவையே காலத்தே முற்பட்டவை என்று அந்த ஐரோப்ப மையவாதி மார்க்சிய வரலாற்றுப்புனைஞர் சொல்லியிருந்தார். இதைக்கொஞ்சம் விவாதிக்க வேண்டுகின்றேன்.
    சிவசிவ

  4. தமிழ் இந்துவின் தமிழ்ப் பணி பாராட்டுக்குரியது. இதில் வரும் கட்டுரைகள் தமிழில் இருப்பதே இயல்பானது.

  5. பேரன்பிற்குரிய சிவஸ்ரீ விபூதிபூஷண் மஹாசய,

    வால்மீகி ராமாயணத்தை பாராயணம் செய்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து ஜைன பௌத்த சமயங்களைப் பற்றி வால்மீகி ராமாயண நூலில் குறிப்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை ஐயா.

    ஜைன ராமாயணங்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டன் என்று வ்யாசத்தொடரின் இந்தப்பாகம் தெளிவு படுத்தியிருக்கிறது என்று எண்ணுகிறேன். சதாவதானி டாக்டர் ஸ்ரீ கணேஷ் அவர்கள் முன்னூறு ராமாயண வ்யாசத்தை மறுத்து எழுதிய ஆங்க்ல வ்யாசத்தின் மொழியாக்கம் அடுத்த பாகம். பௌத்த ராமாயணமும் காலத்தால் பிற்பட்டது என்ற கருத்தை சம்ஸ்க்ருத மொழி மற்றும் இலக்கியத்தில் பாரங்கதம் பெற்றுள்ள ஸ்ரீ கணேஷ் அவர்கள் பகிர்ந்துள்ள படிக்கு அதில் பார்ப்போம், ஐயா.

    அதுமட்டுமன்று.

    நாட்டார் வழக்கியலில் பற்பல மொழிகளில் மறு வாசிப்பு என்ற படிக்கு அந்தந்த ப்ரதேசத்தின் வழமைகளை ராமாயண கதைக்களனில் ஏற்றி அழகியல் குன்றாது ராமாயண கதை பொலிவு மிக வடிக்கப்பட்டுள்ளது. இது மறு வாசிப்பு என்று ஸ்ரீ ராமானுஜன் சுட்டும் இரண்டாவது வாசிப்பு ஆகும்.

    மறுப்பு வாசிப்பு என்றபடிக்கு ராமாயண கதாபாத்ரங்களை வைத்து எழுதப்படும் ……….ஆனால் மைய ராமாயண கதைக்களனிலிருந்து மாறுபட்ட ஒரு கதைக்களனைக் கொண்ட நூற்களையும் இருகூறாகப் பிரிக்க வேண்டும் என்ற கருத்து பகிரப்பட வேண்டும்.

    அக்கருத்து இந்த வ்யாசத்தின் பகுதியாக இருந்திருக்க வேண்டும். பின்னிட்டும் இந்த வ்யாசத்தை ஒட்டிய விவாதங்களுள் ஒரு பகுதியாக அக்கருத்தைப் பகிர்ந்து விடுகிறேன்.

    ஒரு கூறு ஜைன பௌத்த ராமாயண நூற்கள். இவை ராமாயண கதாபாத்ரங்களைக் கோர்த்து ஆனால் மாறுபட்ட கதைக்களனை தங்கள் சமய ப்ரசாரம் செய்யும் முகாந்தரமாக வைத்து சமைக்கப்பட்ட நூற்கள்.

    இன்னொன்று மிகவும் பிற்பட்ட காலத்தில் நாட்டார் வழக்கியலில் இதே ராமாயண கதாபாத்ரங்களைக் கோர்த்து இந்த கதாபாத்ரங்களை இழிவு செய்யும் படிக்கு ………….. மைய ராமாயண கதைக்களனை சிதைத்து அக்கதைக்களனுடன் ஒட்டியும் வெட்டியும்…………. சமைக்கப்பட்ட நூற்கள். ராமானுஜன் வ்யாசத்தில் இப்படிப்பட்ட நாட்டார் வழக்கியல் ராமாயணம் பற்றிய குறிப்புகளும் காணக்கிட்டுகின்றன. அதைப்பற்றி நான் விஸ்தாரமாக என் வ்யாசத்தொடரில் எழுத முனையவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் நான் முதல் பாகத்தில் கொடுத்திருக்கும் ராமானுஜன் வ்யாசத்தின் உரலைச் சொடுக்கி மூல ஆங்க்ல வ்யாசத்தில் அதை வாசித்தறியலாம்.

    முந்தைய கூறு ஒரு சமயத்தினுடைய சமயப்ரசார நூல் என்று கருதப்பட்டு மதிக்கப்படலாம். மாற்றுக்கதைக்களனானாலும் கூட மைய ராமாயணக் கதைக்களனில் ஆர்ஜவம் உள்ள அனைத்து அன்பர்களாலும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் மைய ராமாயண கதைக்களனைப் பற்றிய கருத்தாடலில்…………. பெயரளவுக்கு கதாபாத்ரங்களில் மட்டிலும் ஒற்றுமை கொண்டு ஆனால் மாறுபட்ட கதைக்களனை குறிப்பிட்ட சமய ப்ரசார நோக்கத்துக்காக வேண்டி முனைந்து திரித்து சமைக்கப்பட்ட………. இப்படிப்பட்ட நூற்களுக்கு இடம் கிடையாது.

    இரண்டாவது கூறான……..இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த கருத்துக்களை ப்ரதிபலிக்கும் நூற்களை எழுதுவதற்கு அதை எழுதும் அன்பர்களுக்கு உரிமை உண்டு ஆனால் அதே போல மாற்று மதத்தின் நாயகர்களை இழிவாகச் சித்தரிக்கும் நூற்களை எழுதுவதற்கு ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு உரிமை இல்லை என்னும் கருத்துப் பரப்புரை செய்வது போலி முற்போக்கு வாதம் போலி செக்குலரிஸ வாதம் பேசும் அன்பர்களது செயற்பாடு.

    வால்மீகி ராமாயணத்தைப் பற்றி புரட்டுகளும் பொய்யுரைகளும் சகட்டு மேனிக்கு பரப்புரை செய்யப்பட்டுள்ளன.

    அவற்றைப் புரிந்து கொள்ளுவதற்கு முன்னர் முன்னூறு ராமாயணம் என்னும் புரட்டுரையை புரிந்து கொள்ள வேண்டியது அவச்யம் என்ற படியால் இந்த வ்யாசத்தொடரை நமது தள வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

    வால்மீகி ராமாயணம் பற்றிய புரட்டுரைகளை வால்மீகி ராமாயணச் சான்றுகள் சார்ந்து கட்டுடைத்து பிறிதொரு சமயம் என்னுடைய கருத்துக்களைப் பகிர்கிறேன்.

    தங்களது கருத்துக்களுக்கும் என்னுடைய உழைப்பை அங்கீகரித்தமைக்கும் உளமார்ந்த நன்றிகள் அன்பின் சிவஸ்ரீ விபூதிபூஷண் மஹாசய.

  6. என்றும் அன்புக்கினிய ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசயர் அவர்களுக்கு. நன்றி. உங்களை அங்கீகரிக்கின்ற அளவுக்கு பெரியவன் அல்லன். என்றாலும் ஹிந்து தர்மத்தை ர்க்ஷிக்க முயலும் ஸக ஹிந்துத்துவன் என்றும் ஆராய்ச்சியாளன் என்றுமே அடியேனைக்கருதுகின்றேன்.
    ஆதி கவி வால்மிகி முனிவரின் ஸ்ரீ மத் ராமாயணத்தின் ஆரம்பத்திலேயே ஜைன பௌத்த ராமாயணங்களைப்பற்றி சொல்லி, அதற்கு மாற்றாக இராமகதையை சொல்லப்போவதாக அவரே சொல்வதாக மார்க்சியர்கள் சொல்வதை ஆதாரமற்றப்புனைவு என்ற தங்கள் மறுமொழிக்கு நன்றி.

  7. RV on June 17, 2016 at 9:37 pm
    “க்ருஷ்ணகுமாரின் நடை எப்போதுமே ரொம்பப் படுத்துவது. அந்தக் கால மணிபிரவாளத்தை விட வலிந்து சமஸ்கிருத வார்த்தைகளைப் புகுத்துகிறார்”.
    ஆர்வி ஐயா அவர்களே ஸ்ரீ க்ருஷ்ண குமார் மஹாசயர் பயன்படுத்தும் மணிப்பிரவாளத்தைப்புரிந்து கொள்ளுவதில் எனக்கு எந்த சிரமும் இல்லை. திராவிடியத்தை ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு மணிப்பிரவாளம் ஒரு பாடாய் படுத்தலாம். வேதாந்த சித்தாந்த சமன்வயம், வைதீக ஆகம சமன்வயத்தை சிரமேற்கொள்ளுகிற தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டையும் சிவனார் துடியில் தோன்றிய மொழி என்று நம்புகிற எனக்கு அது ஆனந்தமாகவே இருக்கின்றது. இன்னும் ஸ்வதேசிய ஹிந்துத்துவம் என்னும் பண்பாட்டு தேசியத்தில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்ட எனக்கு அது அமிர்தமாகவே தெரிவதில் வியப்பில்லை.
    மணிப்பிரவாளம் என்பது பொன்னாபரணத்தில் மணிகளை பதிப்பது போன்றே அழகானதாகவே இருக்கின்றது. பொன்னும் சரி மணியும் சரி தமது தனித்தன்மைகளை அழகினை இழந்துவிடுவதில்லை. அப்படியே ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசயருடைய மணிப்பிரவாள நடையும் அழகாகவும் ஆழ்ந்தப்பொருள் உள்ளதாகவும் அமைந்திருக்கின்றது.
    மணிப்பிரவாள நடையிலே எழுதுவதற்கு இன்னமு அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்பதே ஒரு மகிழ்ச்சிக்குரிய விடயமாக எனக்குத்தோன்றுகின்றது. ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசயர் தமது தமிழ் ஹிந்துக்கட்டுரைகளைத்தொகுத்து நூலாகவும் வெளியிடவேண்டுகிறேன். அவற்றை பேச்சாக, உரையாக வீடியோவில் பதிவு செய்து யூடியூபில் பதிவேற்றும் படியும் வேண்டுகிறேன்.
    தத்துவம், வழிபாட்டுமுறை, சாதனை இயல் மற்றும் மொழி ஆகியவற்றைப்பொருத்தவரையில் பாரத நாட்டில் பன்னெடுங்காலம் தனிமனிதருக்கு ஸ்வதந்திரம் இருக்கின்றது. இவற்றில் ஒற்றைத்தனத்தை நமது பண்பாடு வலியுறுத்துவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றை தமக்கு இயைந்த பொருந்தும் வகையில் கலந்து பயன்படுத்துவோரை நமது வரலாற்று நெடுகிலும் காண முடியும். அந்தப்பாரம்பரியத்தினைப்போற்றுகின்ற அடியேன் ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் அவர்களின் மணிப்பிரவாள நடையைப்போற்றுகின்றேன், பாராட்டுகின்றேன்.
    ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசயரின் மணிப்பிரவாளம் வெற்றி நடைபோடட்டும்.
    சிவசிவ

  8. Form and content அதாவது வடிவமும் உள்ளீடும் கலை, பண்பாடு, நாகரிகம், இலக்கியம் ஆகியவற்றின் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இந்த இரண்டும் ஒன்றை ஒன்றைச்சார்ந்தவை, அவற்றில் உள்ளீடு மிக முக்கியமானது என்றாலும் கூட வடிவமும் அழகியல் நோக்கில் அவசியமானது. நம்முடைய பாரம்பரிய ப்பார்வையில் ஆழ்ந்து நோக்கில் வடிவம் ஆழ்ந்த அதன் உள்ளீட்டின் விழுமியங்களின் அழகிய வெளிப்பாடு என்றே தோன்றும். அந்த வகையில் மணிபதித்த பொன்னாபரணம் ரத்தினங்களைப்பதிக்காமல் தங்கத்தால் செய்யப்பட்ட நகையைக்காட்டிலும் அழகாகத்தெரிவது இயல்புதானே.
    மணிப்பிரவாளம் என்பது ஒரு அழகிய வடிவம். அது தொடரட்டும். தனித்தமிழிலே எழுதுவோரும் தமது முயற்சியைத்தொடரட்டும். சமஸ்கிருதத்தில் புதிய இலக்கியங்களைப்படைப்போருடைய முயற்சியும் தொடரட்டும்.

  9. சிவஸ்ரீ விபூதிபூஷண், இப்படி அதீத மொழிக்கலப்பு உங்களை பூரிக்க வைப்பது மகிழ்ச்சி. அடுத்தபடி ‘அண்ணன் வுட்ட லுக்கு – அவ திருப்பி வுட்ட லுக்கு’ என்று ஒரு கட்டுரை கம்பன் பாடல் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் வருவது உங்களுக்கு சம்மதமா?

  10. RV on June 20, 2016 at 10:07 pm
    “சிவஸ்ரீ விபூதிபூஷண், இப்படி அதீத மொழிக்கலப்பு உங்களை பூரிக்க வைப்பது மகிழ்ச்சி. அடுத்தபடி ‘அண்ணன் வுட்ட லுக்கு – அவ திருப்பி வுட்ட லுக்கு’ என்று ஒரு கட்டுரை கம்பன் பாடல் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் வருவது உங்களுக்கு சம்மதமா?”
    மகிழ்ச்சிக்கு நன்றி ஆர்வி ஐயா.
    தீதம் அதீதம் – அளவு அளவுக்கதிகம் என்பதை நிர்ணயிப்பது யார்? படைப்பாளியா? படிப்பாளியா? திராவிடியரா? கிறிஸ்தவரா? ஐரோப்பிய மையவாதிகளா? மரபார்ந்தவர்களா?
    அதீதம் என்ற பதமே கூட சமஸ்கிருதம் தானே? பூரித்தல் என்ற பதம் தமிழா வடமொழியா?
    வட்டார மொழி வடிவங்களில் இலக்கியங்கள் வெளிவருவதை ஆதரிக்கின்றேன். வரவேற்கின்றேன். எனக்குப்புரிந்தால் படிப்பேன். புரியவில்லையேல் படிக்கமாட்டேன். அவ்வளவுதான்.

  11. தமிழ் வலைத்தளத்தில் தமிழில் எழுதுவதே சிறந்தது. கலப்பு நடையை உயர்த்திப் பிடிக்க ஏதேதோகூற வேண்டாம்.

  12. “S Dhanasekaran on June 21, 2016 at 12:12 pm
    தமிழ் வலைத்தளத்தில் தமிழில் எழுதுவதே சிறந்தது. கலப்பு நடையை உயர்த்திப் பிடிக்க ஏதேதோகூற வேண்டாம்”.
    ஐயா தன சேகரரே மொழியை எப்படிப்பயன்படுத்துவது என்பது அவரவர் உரிமை. ஸ்ரீ க்ருஷ்ணகுமார் தமக்குப்பிடித்தமான மொழி நடையில் எழுதுகிறார். அது அவரது விருப்பம், அவரது உரிமை. எனக்கு அது புரிகிறது. அதன் அழகில் ஈடுபடுகின்றேன். பல அருமையா சமஸ்கிருதச்சொற்களைக்கற்றுக்கொள்ளவும் இந்த மொழி நடை உதவுகிறது.
    தூய தமிழில் கட்டுரைகள் எழுதப்பட்டாலும் இந்த தளத்தில் அவை வெளியிடப்படுகின்றன.
    மணிப்பிரவாளத்தில் அமைந்த இலக்கியங்கள் வைணவத்தில் அதிகமாகவும், சைவத்தில் குறைவாகவும் இருக்கின்றன. அது இன்னும் வாழ்கிறது என்பதற்கு ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயரின் தமிழ் ஹிந்துக்கட்டுரைகள் ஆதாரமாக இலங்குகின்றன. திருமாலின் அனந்தக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து ஆழ்வார்கள் வழங்கிய ஆயிரமாயிரம் தெய்வப்பாசுரங்களுக்கு மணிப்பிரவாளத்தில் உரைகள் செய்யப்பட்டுள்ளன. சந்தச்சக்கரவர்த்தி அருணகிரி நாத சுவாமிகளின் சொற்சுவையும், பொருட்சுவையும், இசை நலனும் நிறைந்த திருப்புகழும் மணிப்பிரவாளம்தான். அத்தகைய மணிப்பிரவாளம் என்பது அழகிய இலக்கியவடிவம். அந்த வடிவம் தொடர்ந்து வாழ வேண்டும் என்பது எமது விருப்பமாகும்.
    வள்ளல் அருணகிரி நாதரிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயர் அவர்கள் வைணவ உரையாசிரியர்களை ஆழ்ந்து கற்றவர். வடமொழியிலும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடும் அனுபவம் உண்டு. அவரது ஆன்மிகத்தொண்டும், தமிழ்ப்பணியும், தேச சேவையும் தொடரட்டும்.
    மணிப்பிரவாளத்தினை நிராகரிப்போர் சமஸ்கிருதத்தில் பெயரைவைத்துக்கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. சமஸ்கிருத வெறுப்பை த்வேஷத்தை நிராகரிப்பதோடு மணிப்பிரவாளத்தை ஒழிக்கமுயலும் அபிராஹாமிய நோக்கினையும் நிராகரிக்கின்றேன்,

  13. “S Dhanasekaran on June 21, 2016 at 12:12 pm
    “தமிழ் வலைத்தளத்தில் தமிழில் எழுதுவதே சிறந்தது. கலப்பு நடையை உயர்த்திப் பிடிக்க ஏதேதோகூற வேண்டாம்”.
    கட்டுரை தமிழில் தான் எழுதப்பட்டுள்ளது. மணிப்பிரவாளத்தின் சிறப்பை அடியேனும் சொல்லியிருக்கின்றேன். அதைப்பிரயோகப்படுத்துவதற்கு தனிமனிதர்களுக்கும் உரிமை உள்ளது என்பதும் எனது வாதம். விவாதிப்பது நல்லது. ஏதேதோ கூறவில்லை. உண்மையை உரிமையை வலியுறுத்தி இருக்கின்றேன். தமிழ் மட்டும் வேண்டுமா? சமஸ்கிருதம் வேண்டாமா? மணிப்பிரவாளம் வேண்டாமா? அது உங்கள் விருப்பம் உரிமை. எமக்கு தமிழ் வேண்டும், சமஸ்கிருதம் வேண்டும். மணிப்பிரவாளமும் வேண்டும். பக்தி,யோகம், வேதாந்தம், யக்ஞம் எல்லாம் வேண்டும். அபிராகாமியரைப்போன்று ஒற்றை வழி, ஒற்றை குரு, ஒற்றை நூல் என்பதை வலியுறுத்தவோ ஏற்கவோ யாம் தாயாரில்லை. அது தவறு, அபத்தம், ஆதிக்கப்போக்கு.

  14. கிருஷ்ணகுமார் அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெகு தொலைவில் காஸ்மீர் ல் பல ஆண்டுகளாக வசிப்பவர் . அவரின் நடை இதுதான் . இது தெளிவுபடுத்த பட்ட பின்பும் இதை சொல்லி சொல்லி காண்பிப்பது என்ன என்று புரியவில்லை. மறைந்த மலர்மன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனி கட்டுரை எழுதும் கிருஷ்ணகுமாரின் இந்த மாதிரி கட்டுரகைகள் அவரின் திறமையை எங்கோ கொண்டு செல்கின்றது . மலர்மன்னன் மற்றும் இருந்தால் கிருஷ்ணகுமாரின் திறமையை , கட்டுரையை வெகுவாக சிலாகித்து இருப்பார் . இதை போல தனி கட்டுரைகளில் , கிருஷ்ணகுமார் அவர்கள் தனி முத்திரைப்பதிக்க வாழ்த்துகள்

  15. திரு பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து சரியானது. திரு கிருஷ்ணகுமார் அவர்கள் தமிழகத்தினை விட்டு மிக்க தொலைவில் இருந்த போதும், அதுவும் மிக நெடுங்காலமாக காஷ்மீர் போன்ற பகுதிகளில் இருந்தபோதும், தமிழ் இந்துவில் அவ்வப்போது தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்துவருகிறார். தற்காலத்தமிழ் சிறிது குறைவாகவே அவர் அறிந்திருந்த போதும், அவரது நடை எங்களுக்கு புரிகிறது. அவரது பதிவுகளில் ஏராளம் சிறந்த கருத்துக்களும், தகவல்களும் பொதிந்து உள்ளன. திரு கிருஷ்ணகுமாரின் எழுத்துக்கள் தமிழ் ஹிந்துவில் தொடரட்டும் என்று அவரையும் , தமிழ் ஹிந்து தள குழுவையும் வேண்டுகிறேன்.
    ஹிந்து தளத்தின் அமைப்பாளர்களையும் வேண்டுகிறோம். நன்றி.

  16. பாண்டியன்,

    க்ருஷ்ணகுமார் காஷ்மீரில் வசிப்பதால் சமஸ்கிருத வார்த்தைகளை வலிந்து புகுத்தலாம் என்றால் பெங்களூருவில் வசிக்கும் ஜடாயு கன்னட வார்த்தைகளை வலிந்து புகுத்துவதிலோ அமெரிக்காவில் வசிக்கும் நான் இங்கிலீஷ் வோர்ட்சை மிக்ஸ் பண்ணி எஸ்ஸே ரைட் செய்தால் என்ன மிஸ்டேக்?

  17. தமிழகத்தைவிட்டு வெகுநாட்களாக தள்ளி இருப்பதால் பேச்சில் தமிழ்ப்புழக்கம் குறைவாக இருப்பின் அதை புரிந்துகொள்ள இயலும். ஆனால் கட்டுரை வடிவிலான எழுத்தில் ? அதுவும் புதிதாக இப்போதுதான் எழுத ஆரம்பிப்பவர் என்றால்கூட புரிந்துகொள்ளலாம். திரு.க்ருஷ்ணகுமார் அப்படி இல்லை எனும்போது எதற்காக வ்யாசம், உத்தரம் என்று படுத்தவேண்டும் ? அதுவும் அந்த “கேழ்வி” ? கடவுளே !

    அவரது உரிமைதான், மறுக்கவில்லை. ஆனால் பலர் படிக்கும் ஒரு ஊடகத்தில் எழுதும்போது ? அவரது கருத்துக்கள் பலபேரை சென்று சேரவேண்டும் என்பதற்காகத்தானே எழுதுகிறார் ? அப்படி இருக்கையில் “அது அவர் விருப்பம், நீ இஷ்டமிருந்தால் படி, இல்லாவிட்டால் படிக்காதே” என்பதெல்லாம் சரியான வாதமாக தெரியவில்லையே. அப்படி இருப்பின் அவரது மணிப்பிரவாள நடையை புரிந்துகொள்வோர் / சிலாகிப்போரோடு மட்டும் தனிக்க்குழுவில் உரையாடலாமே ?

    தமிழில் எழுதப்படும் ஒரு கட்டுரையைக்கூட மண்டைக்குள் ஒரு அகராதி வைத்துக்கொண்டு வாசிப்பது சிரமமாக இருக்கிறது என்பதைமட்டும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

  18. ஸ்ரீமதி அத்விகா அவர்களுக்கு

    \\ அவரது பதிவுகளில் ஏராளம் சிறந்த கருத்துக்களும், தகவல்களும் பொதிந்து உள்ளன \\

    அம்மணி, விஷயமே அங்கு தான்.

    இந்த முன்னூறு ராமாயணம் விஷயம் பற்றி எதிராகக் கருத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாரும் பிற்போக்கு என்று ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார்கள்.

    ஆனால் ஆதரவாகக் கருத்துக்கொண்டிருப்பவர்கள் குறைந்த பக்ஷம் இந்த முன்னூறு ராமாயண வ்யாசம் பற்றி அடிப்படை விஷயங்களையாவது அறிந்திருப்பார்களோ என்று நினைத்தால் இல்லை. இல்லவே இல்லை. இல்லவே இல்லை. என்று அடித்துச் சொல்லி விடலாம்.

    ஒரு விஷயத்தைப் பற்றி அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் சகட்டுமேனிக்கு கருத்துப்பதிவது கூட உரிமை தான். ஆனால் அதை மறுத்து……….. என்று கூட இல்லை……….அந்த விஷயத்தைப் பற்றி ஒரு முழுமையான பார்வையை அளிப்பதற்கு ப்ரயாசை செய்தால் கூட……….. அது முற்போக்கு வாதிகளுக்கு ஏற்கவே ஏற்காது.

    அதான் முயலுக்கு மூன்று கால் என்று சொல்லிவிட்டாயிற்றே. அதற்குப் பின்னர்……. ஒன்று காலை எண்ணிப் பாக்கணும். இன்னொன்று நாலு கால் என்று சொல்ல வருபவரின் வாயை மூடி விடுவதற்கு ப்ரயாசை செய்யணும்.

    ரெண்டாவது ரொம்ப சுலபம் என்று எண்ணுவது ரொம்ப முற்போக்கான விஷயம் போலும்.

  19. ஆர்வி யார்
    “க்ருஷ்ணகுமார் காஷ்மீரில் வசிப்பதால் சமஸ்கிருத வார்த்தைகளை வலிந்து புகுத்தலாம்”.
    சமஸ்கிருத வார்த்தைகளை ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயர் வலிந்து திணிக்கின்றார் என்பது சரியல்ல. அதை அவர் இயல்பாகவே கையாள்கின்றார். ஐரோப்பிய மையவாத சிந்தனைகளில் மூழ்கிய, மிஷ நரிகளிடம் இருந்து சமஸ்கிருத வெறுபையும் காழ்ப்பையும் உள்வாங்கிக்கொண்டவர்களுக்கு வேண்டுமானால் சமஸ்கிருதத்தை வலிந்து திணிப்பதாகத்தோன்றலாம். மணியைப்பொன்னில் பத்தித்தாற்போல் மிக அழகாக நளினமாக இருக்கின்றது ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயரின் நடை. அவரது கட்டுரைகளைப்படித்தால் பல அழகிய சமஸ்கிருதப்பதங்களைக் கற்கக்கூடிய அருமையான அனுபவம் நிகழ்கிறது.
    மணிப்பிரவாளம் என்ற சந்த நயம் மிக்க அழகிய நடையில் தொடர்ந்து ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயர் எழுதவேண்டும்.
    தூய தமிழிலே எழுதுவோரும் தொடர்ந்தும் எழுதவேண்டும்.
    எல்லாரும் தூய தமிழில்தான் எழுதவேண்டும். சமஸ்கிருத மொழியையும், பதங்களையும் யார்? எப்போது? எப்படிப்பயன்படுத்தவேண்டும்? என்று சட்டமெல்லாம் இங்கே போடமுடியாது?

  20. பொன். முத்துக்குமார்
    “அது அவர் விருப்பம், நீ இஷ்டமிருந்தால் படி, இல்லாவிட்டால் படிக்காதே”
    ஒருவருடைய மொழி நடை என்பது நிச்சயமாக அவரது உரிமைதான். அதில் தலையிடாதீர்கள் என்று பலமுறை சொன்னபின்னாலும், அதையே திரும்பத்திரும்ப வலியுறுத்துவது அராஜகமாகவே எனக்க்தோன்றுகிறது. ஸ்ரீ க்ருஷ்ண குமார் மஹாசயருக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதுபோலவே எனக்குத்தோன்றுகிறது.

  21. ஆர்வி யார்
    “அமெரிக்காவில் வசிக்கும் நான் இங்கிலீஷ் வோர்ட்சை மிக்ஸ் பண்ணி எஸ்ஸே ரைட் செய்தால் என்ன மிஸ்டேக்?”
    தாராளாம எழுங்களேன். படிக்கிறவர்கள் படிக்கட்டும். புரிந்துகொள்வோர் புரிந்துகொள்ளட்டும்.
    ஆங்கிலத்தை தமிழோடு கலப்பதையும் தமிழோடு வடமொழியைக்கலப்பதற்கும் உள்ளவேறுபாட்டைப்புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். ஆங்கிலமும் சமஸ்கிருதமும் ஒன்று என்பது போன்று எழுதுவது உங்களது சமஸ்கிருத வெறுப்பைக்காழ்ப்பையே காட்டுகிறதா? இல்லை ஆங்கிலப்பற்றைக்காட்டுகிறதா? அடியேனுக்கு விளங்கவில்லை.
    சமஸ்கிருதப்பதங்களைத்தமிழ்ப்படுத்துவது என்பதற்கு இலக்கணம் உண்டு.சமஸ்கிருதத்தைக்கலந்து மணிப்பிரவாளத்தில் செய்யப்பட்ட இலக்கியங்களும் பல உண்டு. இன்னும் நாம் பேசுகிற மொழியிலே சமஸ்கிருதப்பதங்கள் பலவும் உண்டு. பலப்பல வார்த்தைகளின் மூலம் சமஸ்கிருதமா இல்லைத்தமிழா என்று கண்டறியமுடியாத அளவுக்கு இரண்டும் நெருங்கியவை. அத்தகைய சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் பூசல் உருவாக்க முனைந்த மிஷ நரிகளின் முயற்சியின் விளைவுதான் திராவிடியரிடம் காணப்படும் சமஸ்கிருதக்காழ்ப்பு. அந்தக்காழ்ப்பினை வெறுப்பினை துவேசத்தினை தமிழ் ஹிந்துவில் விதைத்துவிட முடியாது.

  22. //மணிப்பிரவாளம் எனக்குப்பிடிக்கிறது. மகிழ்கிறேன்
    அவரவருக்கு அவரவருக்குப் பிடித்த நடையில் எழுதுவது உரிமை. அதை நாம் தடுக்க முடியாது.//

    மேலே கண்ட வாதங்கள் பொது நலத்தில் அக்கறை கொள்ளாதவர் வைப்பது.

    மணிப்பிரவாளம் ஒரு சிலரால் எழுதப்படுகிறது. அதைப்படித்து மகிழ்வோர், விரும்புவோர் இன்றைய தமிழகத்தில் சொற்பமே. ஒரு சிலருக்கு மட்டுமே போய்ச்சேரும் அந்நடை.

    அக்காலத்தில் வைணவ உரைகாரர்கள் மணிப்பிரவாளமே எழுதி தம் கருத்துக்களை விளக்கினார்கள் என்று ஆதரவு தேடுவது குறைபாடுள்ள வாதம். அவர்கள் எழுதியது பண்டிதருக்கு மட்டுமே. பொதுமக்களுக்கன்று. சரி. ஆயினும் அவர்கள் பொதுநலத்தில் அக்கறை கொள்ளாதவரென்று எடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் எழுதியதைப் படித்த பண்டிதர்கள் பொதுமக்களுக்கு பொதுத்தமிழில் விளக்கினார்கள். இதற்காகவே காலட்சேபங்கள் நடைபெற்றன.

    கிருஸ்ணகுமார் தன் மணிப்பிரவாலத்தை பண்டிதர்கள் பொதுத்தமிழில் எடுத்தியம்ப இத்தளம் இன்னொரு கட்டுரை போடவேண்டுமென எதிர்பார்க்கிறாரா? முடியுமா?

    உரிமை எனப்து தனிநபருக்கு மட்டுமே. உரிமைகளை பொதுமக்கள் மேல் திணிக்க முடியா. இந்துமதம் பொதுமக்களுக்கு எடுத்தியம்ப்பபட வேண்டும். எனவே பொதுத்தமிழிலேயே அதைச்செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உரிமை என்பது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்லது பயனில்லை. உரிமை என்று போனால் இம்மதம் குறுகி ஒரு சிலருக்கு மட்டுமே போய்ச்சேரும்.

    இந்துமதத்துக்கு உள்ளார தொண்டு செய்து வாழ விழைவோர், இந்நடையை விடுவதே நன்று. ஓர் நல்ல இந்து பொதுமக்களுக்காகவே வாழ்வான்.

    ஒரு தமிழர் பிறப்பு முதல் பள்ளி அல்லது கல்லூரிப்பருவம் வரை தமிழகத்தில்தான் வாழ்கிறார். பின்னரே தொழில் நிமித்தம் புலம்பெயர்கிறார். வெளிமாநிலம், அல்லது நாட்டில் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தாலும், பிற்ப்பில் ஒட்டு 20 வயது வரை வந்த தமிழ் மறக்கவே மறக்காது. எனவே கிருஸ்ணகுமாருக்கு மறந்துவிட்டது எனப்து நம்ப் முடியாத கதை. பத்தாம் வயதில் கற்ற சைக்கிள் விடுதல் என்றுமே மறக்காதே! இல்லையா? மொழியும் அப்படித்தான்.

    மேலும், கிருண்ஸ்குமார் தூய தமிழில் அழகாக எழுதும் வல்லமை உடையவர் என்பது அவர் எழதியவைகளைப்படித்தவருக்குத் தெரியும். இக்கட்டுரையில் கூட ஆஙகாங்கே அப்த்மிழ் வெளிப்படுகிற்தல்ல்வா?

    வேண்டுமென்றே மணிப்பிரவாளம். வேண்டுமென்றே கேழ்வி போன்ற தமிழ்ப்பிழைகள்.

    இதில் என்ன கிடைக்கிறது அவருக்கு என்றுதான் புரியவில்லை.

    — பால சுந்தர விநாயகம்

  23. சிவஸ்ரீ விபூதிபூஷன், கட்டுரைக்கு பதிலாக வ்யாசம் என்று எழுதுவது இயல்பாக வருவது என்று நீங்கள் கருதினால் நமக்குள் இனி பேச எதுவுமில்லை.

    என் கண்ணோட்டத்தில் விக்கியில் வலிந்து கிரந்த எழுத்துக்களை விலக்கி இசுபெய்ன் என்றும் சேக்சுபியர் என்றும் சடாயு என்றும் எழுதுபவர்களுக்கும் க்ருஷ்ணகுமாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

    தமிழ் ஹிந்து தளத்தின் வழிகாட்டுதல் என்ன என்பதை பொறுப்பாளர்கள் தெளிவாக்க வேண்டும். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் ஏனென்று புரியவில்லை.

  24. பாலசுந்தர விநாயகம்
    “மேலே கண்ட வாதங்கள் பொது நலத்தில் அக்கறை கொள்ளாதவர் வைப்பது”.
    பொது நலம் என்பதை யார் எப்படி வரையறுப்பது என்பதுதான் யாம் இங்கே எழுப்புகிறவினா? தமிழோடு சமஸ்கிருதம் கலந்து எழுதுவது நலம், பொது நலம் என்பது எமது நிலை. சமஸ்கிருதம் தமிழோடு கலக்கப்படக்கூடாது, சமஸ்கிருதமே செத்துப்போன மொழி. அதை ஆர்கைவில் வைப்பதே பொது நலம் என்பது அபிராஹாமிய சார்புள்ள ஐரோப்பிய மையவாத சிந்தனையாளரின் கருத்து.
    இரண்டாவது நிலைப்பாடு உலகம் முழுவதையும் ஐரோப்பாவைப்போல அபிராஹாமிய வயமாக்க, மயமாக்க முனைவோரின் சமஸ்கிருத த்வேஷத்தை, வெறுப்பைக்காழ்ப்பினை முற்றிலும் நிராகரிக்கின்றோம். சமஸ்கிருதத்தைப்படிப்பதன் மூலம் எமக்கு எல்லா நலமும் வளமும் கூடும் என்பதே எமது நிலை.
    ஐரோப்பிய மையவாதிகளுடைய நலன், அபிராஹாமிய ஒற்றைசிந்தனையாளர்களின் நலன், உலக அளவில் ஐரோப்பியரின் ஆதிக்கம் ஆகியவை எமக்கு மட்டுமல்ல, உலகத்தின் பெரும்பாலான மக்களின் நலனுக்கே கெடுதல் என்பதும் எமது புரிதல்.
    பாசுவி
    “மணிப்பிரவாளம் ஒரு சிலரால் எழுதப்படுகிறது”.
    சிலர் எழுதுவதால் அது மலினமாகிவிடாது.மணிப்பிரவாள நடையிலே எழுதுவோர் பலரும் உலகில் செழிக்கவேண்டும். மணிப்பிரவாள நடை என்பது ஓர் அற்புதக்கலைவடிவம். அது அழியக்கூடாது. இதுவும் யாம் மணிப்பிரவாளத்தைப்போற்றுவதற்கு ஒரு முக்கியக்காரணமாகும்.
    பாசுவி
    “அதைப்படித்து மகிழ்வோர், விரும்புவோர் இன்றைய தமிழகத்தில் சொற்பமே. ஒரு சிலருக்கு மட்டுமே போய்ச்சேரும் அந்நடை. மணிப்பிரவாளம் ஒரு சிலரால் எழுதப்படுகிறது. அதைப்படித்து மகிழ்வோர், விரும்புவோர் இன்றைய தமிழகத்தில் சொற்பமே. ஒரு சிலருக்கு மட்டுமே போய்ச்சேரும் அந்நடை”.
    இந்தத்தளத்திலே பலக்கட்டுரைகளை ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயர் எழுதியுள்ளார். அதைப்படித்தவர்களின் எண்ணிக்கையும் சரி மறுமொழிகளும் சரி பலப்பல. ஆகவே மணிப்பிரவாளத்தைப்படிப்போர், படித்து மகிழ்வோர், அதனை நேசிப்போர் ஆகியோர் சொற்பம் என்பது ஆதாரமற்றக்கற்பனை.
    ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயர் எழுதுகிறக்கட்டுரைகள் என்னைப்போல வடமொழி அறியாதவர்களுக்கும் புரிகிறது. பல அருமையான சம்ஸ்கிருத சொற்களும் எமக்கு பரிச்சயமாகின்றன. சமஸ்கிருதம் கற்பிப்பதற்கும் மணிப்பிரவாளம் ஒரு சிறந்த எளிமையான யுக்தி என்பதாக எனக்குத்தோன்றுகின்றது.

    எனக்கு இங்கே ஒரு சந்தேகம் எழுகிறது.
    சமஸ்கிருத வெறுப்பு, மணிப்பிரவாள துவேசம் இவற்றையெல்லாம் கொண்டவர்களைப்பார்த்தால் அவர்கள் பெயர்கள் மட்டும் சமஸ்கிருதத்திலே இருக்கின்றது. கருணாநிதி, திராவிடம் ஆகியவை மட்டுமல்ல பால, சுந்தர, விநாயகம் எல்லாமே சமஸ்கிருதம்தான். ஆர்வி அவர்களின் முழுப்பெயர் எனக்குத்தெரியாது. முத்துக்குமாரில் குமார் கூட வடசொல்தான்.

  25. பால சுந்தர விநாயகம்
    “வேண்டுமென்றே மணிப்பிரவாளம். வேண்டுமென்றே கேழ்வி போன்ற தமிழ்ப்பிழைகள். இதில் என்ன கிடைக்கிறது அவருக்கு என்றுதான் புரியவில்லை”.
    ஐயா வேண்டும் என்றே மணிப்பிரவாளம் எழுதாமல் வேண்டாவெறுப்பாக எழுதினால் தானே அது பிழையாகும். ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயருக்கு மணிப்பிரவாள நூல்களைப்படித்து அதில் ஈடுபட்டதனால் மணிப்பிரவாள நடை மிக இயல்பாக அமைந்திருக்கின்றது. சமஸ்கிருத வெறுப்பு, மணிப்பிரவாள த்வேஷம் இல்லாமல் பார்த்தால் அது எம்மைப்போன்றவர்களுக்கு அழகாக தோன்றுகிறது, இனிமையாக இருக்கின்றது. அதில் உள்ளக்கருத்தாளமும் விளங்குகிறது.

  26. இந்த வ்யாசத்தில் முக்யமாகப் பேசப்படும் பவுமசரிஅ ஸ்ரீ விமலசூரி அவர்களால் பொதுயுகம் மூன்றில் இயற்றப்பட்டது. இந்த வ்யாசத்தில் மிகவும் அழகான பொருத்தமான சித்திரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் காணப்படும் ஜின ராமாயண நூலைக் கூர்ந்து கவனித்தபோது……… அதில் பவுமசரியு என்ற பெயரைக் கண்டேன். இதுவும் ஜின ராமாயணம் தான். ஆனால் காலத்தால் மிகவும் பிற்பட்ட நூல். சற்றேறக்குறைய பொதுயுகம் 8ம் நூற்றாண்டு. ஸ்ரீ ஸ்வாயம்பு என்ற ஜைனர் இயற்றிய நூல் இந்த பவுமசரியு. இந்த நூலும் ப்ராக்ருதத்திலேயே இயற்றப்பட்டுள்ளது.

  27. எனது பேரன்பிற்குரிய பெருந்தகை அன்பர் பீ எசு அவர்களுக்கு ஸ்வாகதம். ஸுஸ்வாகதம்.

    ஸ்வாமின்! தேவரீரது வ்யாக்யானங்களை வாசித்து இறும்பூதடைந்துள்ளேன்.

    தமிழ் ஹிந்து தளம் ஹாஸ்ய ரஸம் இன்றி பாலைவனம் போல வெகுகாலமாக வெறிச்சோடிக்கிடந்திருக்கிறது. அதில் தங்களது ஜாதிக்காழ்ப்புக்கருத்துக்கள் (ராம்சாமி நாயக்கருக்கு ஜே) பயங்கரவாத ஆதரவுக்கருத்துக்கள் (யாகூப் மேமனுக்கு ஜே) ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்கள் ( சைவத்தை நீங்கள் வெறுப்பது) போன்றவற்றை அறிவுசீவித்தனமாக ….. தங்களது இயல்பான தமிங்கில / தங்க்ளீஷ் நடையில் வாசிக்காது வாசகர்கள் மெய்யாலுமே தவிக்கிறார்கள். புன: ஸ்வாகதம்.

    ஐயன்மீர், தேவரீர் விக்ஞானி ஜெயபாரதன் அவர்களது சீதாயண அலக்கியம் தொடர்பான விவாதங்களில் தங்களுடைய ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்கள் ………… ராமாயணத்தில் சொல்லப்படாத………. ஆனால் க்றைஸ்தவ தேவாலயங்கள் சாணிப்பேப்பரில் சல்லிசாக அச்சிடும்………… வக்ரமான கருத்துக்களை …………ராமாயணத்தின் மீது வலிந்தேற்று தாண்டவமாடிய போது…………. தேவரீர்……….. நொடிக்கு நூறு தடவை ஜெபித்த சொற்றொடர் முன்னூறு ராமாயணம்.

    கந்தசஷ்டி கவசம் இயற்றியது அருணகிரிநாதர்………….நாயன்மார்கள் அறுபத்திநாலுபேர்……….தொல்காப்பியர் எழுதிய திருக்குறள் ……….. என தேவரீர் பூந்து விளையாடியிருக்கிறீர்கள் இணையத்தில். ஆனபடியாலே தேவரீர் முன்னூறு ராமாயணம் என்று ஜெபித்துக்கொண்டு ஹிந்து மதத்தின் மீது காழ்ப்புக்கருத்துக்களை………… மெனக்கெட்டு தேவ ஊழியமாகச் செய்து வருகையில்………. ……… ஸ்வாமின் முன்னூறு ராமாயணாதிகள் என்னென்ன என்று கேட்டிருக்கிறேன்……… ஆனால் தாண்டவ தசையில் இருந்த தேவரீர் முன்னூறு முன்னூறு என்ற ஜெபத்திலேயே தேவ ஊழியத்திலேயே ஆழ்ந்து அமிழ்ந்து விட்டதால்………… ராமசந்த்ரப்ரபோ………… அப்படி என்னதான் இந்த முன்னூறு ராமாயணம் என்று அறிய விழைந்தேன்.

    அந்த உழைப்பின் பாற்பட்ட தகவற்பேழை இந்த வ்யாசத் தொடர்.

    நன்றாகப் புரிகிறது. இப்படிப்பட்ட ஒரு முழுமையான தகவல்களைப் பகிரும் ஒரு வ்யாசம் தேவரீரது தேவ ஊழியத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் தான். ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்களை சகட்டு மேனிக்கு பரப்புரை செய்வதற்கு தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் தான்.

    ஆயினும் தங்களது அடக்கத்தை மெச்சுகிறேன். இப்படி க்ரியாஊக்கியான தேவரீர் தங்களுடைய தேவ ஊழிய முன்னூறு ராமாயண ஜெப யக்ஞத்தை அடக்கி வாசிக்கும் அழகை மெச்சத் தான் வேண்டும்.

    ஆயினும் இந்த வ்யாசத்தின் தகவற்பேழையின் எல்லாப்புகழும் ………… ம்……….. ஒரு 70 சதமானம் தேவரீருடைய தேவ ஊழிய முன்னூறு ராமாயண ஜெப யக்ஞத்திற்கே. பொலிக. பொலிக.

    தேவரீருடைய செந்தமிழ் நடைக்கு ஒரு சாம்பிள் :-

    “”””””” இங்கு ஏறகனவே திரு பெருமாள் எழுதிவிட்டார்: பார்ப்பனர்கள் பாரதியாரை கொண்டாடுகிறார்கள். What is your opinion about that? திரு கண்ணன் பார்ப்பன பாஷை தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்றார். What is your opionion about that? இன்னொருவர் சொல்கிறார்: இங்கு எழுதும் சிலர் தங்கள் ஜாதி விசுவாசத்தை உள்வைத்துக்கொண்டே எழுதுகிறார்கள். நானே அதைச் சொல்கிறேன். Do you deny it? “”””””

    தங்களுடைய வ்யாக்யானாதிகளையும் வாசித்து தங்களுடைய மேற்கண்ட செந்தமிழ் நடையினையும் வாசிக்கும் யாரொருவரும் தங்களை மெச்சாமல் இருக்கவே முடியாது.

    என்னுடைய மொழிநடை கலப்பு மொழிநடை என்று நான் வெளிப்படையாகச் சொல்லுவேன். மேலே தாங்கள் எழுதும் மொழிநடை செந்தமிழ் என்று நீங்கள் துண்டு தாண்டி சத்யம் செய்வீர்கள். இதுக்கு மேலயும் சொல்ல வேண்டும்?

    மீதி முப்பது சதமானப் புகழ் யாருடையது என்று சம்சயம் எழும் தான். அதையும் தான் பார்க்க வேண்டும்.

  28. பொது நலம் என்பதற்கு இங்கே வரையறை தேவையில்லை. பார்த்தாலே புரியலாம்.

    எப்படி? தமிழ்ஹிந்து. காம் என்பது அனைத்துத் தமிழ் இந்துக்களுக்கும் போய்ச்சேர நினைந்து நடாத்தப்படுவது. இதில் போடப்படும் கட்டுரைகளை அனைத்துத் தமிழ் இந்துக்களும் படித்து அறிந்து தெளியவே அவர்கள் அவாக்கொண்டுள்ளார்கள்.

    மணிப்பிரவாளம் என்ற தனிநடைக்கு எவருமே எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. முத்தும் பவளமும் கலந்த தமிழுக்கு ஓர் அணிகலனாகுமது என்று பல்லாண்டுகளுக்கு முன்னரே தமிழறிஞர்கள் தலைக்கட்டிவிட்டார்கள். நீங்கள் ரொம்ப லேட். நன்றி சார்.

    ஆக, பின் என்னதான் பிரச்சினை? ஆம், எழுதப்படும் இடம்தான் பிரச்சினை. இடம்,பொருள், ஏவல் என்பார்கள் இல்லையா? எதை எங்கு செய்யவேண்டுமோ அப்படி செய்யும்போது அதன் சிறப்பு இரசிக்கப்படும். பயனும் தரும்.

    இங்கு மணிப்பிரவாளம் தேவையில்லை. காரணம்: அது எல்லாருக்கும் போய்ச்சேராது.

    சமஸ்கிருதமா? தமிழா? என்ற பிரச்சினையே இங்கு எழப்பப்படவில்லை. தேவையா? இடம் பொருத்தமா என்பதே கேள்வி (அல்லது நீங்கள் இரசிக்கும் மொழியில் கேழ்வி)

    எ.காட்டாக, பல சமூகவியலாளார்கள் பொதுதளங்களிலும் (பத்திரிக்கைகள், வாரந்திரிகள்) சமூகவியல் சஞ்சிகைக்களிலும் எழுதுவர். சிலசமயங்களில், ஒரே மையக்கருத்தையொட்டி. பொதுதளத்தில் எழுதும் நடை தனித்தளத்தில் எழுதும் நடை வெவ்வேறாக இருக்கும்.

    கருநாநிதி, திராவிடவியலாளர், சமஸ்கிருத எதிர்ப்பாளர்கள், அவர்கள் பெயர்கள் எல்லாம் என் வாதத்திற்குப் பொருந்தாதவை. அப்படிப்பட்ட எவரேனும் இங்கெழுதினால் அவர்களிடன் கேட்டுக்கொள்ளுங்கள்.

    மணிப்பிரவாளத்தைப்படித்து மகிழ்வோர் ஏராளம் என்று நீங்கள் கருதினால், உங்களிடம் எனக்கு வாதமே இல்லை. மன்னிக்கவும். (அல்லது நீங்க இரசிக்க, ச்சமிக்கவும்)

    சம்ஸ்கிருதமே வேண்டாமென்றிருந்தால் என் மேற்கண்ட எழுத்துக்களில் எப்படி பல சமஸ்கிருத சொற்கள் நுழைந்திருக்கும்?

    பொதுத்தமிழ் கற்றல் கடினமன்று

    யானேதவம்செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
    யானேதவம் உடையேன்; எம்பெருமான் – யானே
    இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
    பெருந்தமிழன் நல்லேன் பெரிது

    (இப்பாடலின் ஆசிரியருக்கு சமஸ்கிருதம் கிருஸ்ணக்குமாரைவிட பன்மடங்கு நன்கு தெரியும்)

  29. மீதி முப்பது சதமானப் புகழ் யாரைச் சென்றடைய வேண்டும் என்று வாசகர்களுக்கு நிச்சயமாக ஆவல் இருக்கும்.

    ஸ்ரீ ஜடாயு அவர்களது ஃபேஸ் புக் பக்கத்தில் இந்த விஷயம் சம்பந்தமாக ஸ்ரீமான் ஆர் வி அவர்களுடைய விவாதத்தை வாசிக்கையில் *****வெறுங்கையில் முழம் போடுவது***** என்ற தமிழ் சொலவடையின் தாக்கத்தை புரிந்து கொண்டேன்.

    கிட்டத்தட்ட அண்ணனுக்கு ஜே. ராமானுஜனுக்கு ஜே. என்ற ரீதியில் ராமானுஜன் வ்யாசம் என்ன தான் சொல்ல வருகிறது என்ற அடிப்படைப்புரிதலும் கூட இல்லாமல் ……….. ராமானுஜன் வ்யாசத்தை எதிர்க்க விழைபவர்கள் ………… எதிர்க்காத விஷயங்களையெல்லாம்………. அவர்கள் எதிர்ப்பது போல பாவலா செய்து………… ராமானுஜன் என்ன தான் சொல்ல வருகிறார் என்பது பற்றி லவலேசமும் அறியக்கூட விழையாது……………வெகு முற்போக்காக சகட்டுமேனிக்குக் கதையாடிய பெருமைக்கு உரியவர் …………. தமிழ் ஹிந்து தளத்தின் மூத்த வாசகரான ஆர்.வி ஸ்வாமின் அவர்கள்.

    முற்போக்குகள் ஒரு ப்ராண்ட் இமேஜை உருவாக்கிக் கொண்டு சகட்டுமேனிக்கு கதையாட முடியுமா என்று எனக்கு ஒரு காலத்தில் ஆச்சரியம் உண்டு. ஆனால் ஆர் வி அவர்களது கருத்துக்களை வாசிக்கையில் அதெல்லாம் பணால். வெள்ளத்தனைய மலர்நீட்டம்.

    ஆர் வீ யின் அண்ணனுக்கு ஜே ரீதி கருத்துக்களை வாசித்து நொந்து நூடுல்ஸ் ஆன (ஆர் வீ ………. குறித்துக்கொள்ளவும்……….. மேகி நூடுல்ஸ் இல்லை………… பதஞ்சலி நூடுல்ஸ் 🙂 ) நான் …………… ஆர் வி எப்படி இந்த மாதிரியெல்லாம் ரூம்பு போட்டு யோஜனை செய்திருக்கிறார் என்று அவருடைய காய்த்தல் உவத்தலகளையும் அவதானித்து இந்த வ்யாசத் தொடரை வடிவமைத்திருக்கிறேன்.

    ஆர் வி ஸ்வாமின் சகட்டு மேனிக்கு கதைத்திருப்பது என்ன? என்று ஆவலாக இருக்குமல்லவா.

    வரும் பாகங்களில் பார்ப்போம்.

    ஆக மீதி முப்பது சதமானப் புகழுக்கு உரித்தானவர் யார் என்று வாசகர்களுக்கு புரிந்திருக்கும். தமிழ் ஹிந்து தளத்தின் மூத்த வாசகரான ஸ்ரீமான் ஆர் வி.

    அவருடைய கமுக்கமான அடக்கத்தையும் கூட நிச்சயமாக மெச்சத் தான் வேண்டும்.

    எங்கேயாவது அவருடைய சகட்டுமேனிக் கதையளத்தல் எங்கு வெளிப்பட்டு விடுமோ என்று பையப்பைய விவாதத்தை வேறு திசைக்கு சாமர்த்யமாக மாற்றும் அவரது கரிசனம்………..சாதுர்யம் புரிகிறது…………. பாட்டுடை நாயகனல்லவா? பொலிக உமது சாதுர்யம்.

  30. சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய, ஸ்ரீமதி அத்விகா, ஸ்ரீ பாண்டியன் ………….. உங்களுடைய கரிசனம் மிகுந்த கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

    வ்யாசத்தில் பகிரப்பட்டிருக்கும் கருத்துக்களை நீங்கள் அவதானித்த படிக்கும்………அவற்றை உள்வாங்கியமையை நீங்கள் பகிர்ந்த படிக்கும்………… மேலும் பகிரப்பட்டுள்ள கருத்துக்கள் பயனுள்ள கருத்துக்கள் என்று தாங்கள் பகிர்ந்த படிக்கும்……….

    இந்த வ்யாசத் தொடரை ………. பல மாதக்கணக்கான உழைப்பின் பாற்பட்டு பற்பல சம்பந்தமுடைய கருத்துக்களை வாசித்து பகிர முனைந்த என்னுடைய உழைப்பிற்கான வெகுமானமாகக் கொள்கிறேன்.

    ஸ்ரீ பொன் முத்துகுமார் அவர்கள் என்னுடைய பெருமதிப்பிற்குரிய நண்பர். என்னுடைய வ்யாசத்தை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ள………. என்னுடைய உழைப்பைப் புறந்தள்ள………… என்னுடைய மொழிநடையை மிகைப்படுத்தலின் பாற்பட்டு பூதாகாரமாகக் காண்பிக்க அன்பர் அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அவருடைய கருத்து சுதந்திரம் அது. மொழிநடை வெற்றிடத்தில் இருந்து உருவாவதல்ல என்பதனை மட்டிலும் அன்பர் அவர்களுக்கு சொல்ல விழைகிறேன். ஒரு சொல், சொற்றொடர் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்…….. ஆனால் அந்த சொல் அதனால் மட்டிலும் இழிவான சொல்லாகி விடாது என்பதனை மட்டிலும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    நான் எழுத்தாளனும் கிடையாது. எழுத்து என்னுடைய தொழிலும் கிடையாது. ஆனால் சமூஹத்தில் புளுகுக் கருத்துக்கள் அறிவுஜீவித்தனம் என்ற போர்வையில் உலா வருவதை என்னால் சஹித்துக்கொள்ள முடியவில்லை. உங்களால் ஒருக்கால் முடியலாம்.

    ஒட்டு மொத்த ஹிந்து சமயத்தை தரம் தாழ்ந்து கண்டவர்களும் ஆதாரங்களோ அல்லது புரிதல்களோ கூட அறவே இல்லாமல் விமர்சிக்கும் காலம் இது. இந்தக் காலத்தில் ஹிந்து மதம் என்ற தேரை இழுப்பதற்கு எண்ணிறந்த அன்பர்கள் தேவை. அவர்களுடைய உழைப்பு தேவை. அன்பர் ஸ்ரீ பொன் முத்துகுமார் அவர்களால் இந்த காரியத்தை மேம்படச் செய்ய முடியும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு. ஆயினும் அதற்கு முனைப்பும் கூடத் தேவையில்லவா? இதற்கு அவருடைய முனைப்பு என்ன? அவருடைய பங்களிப்புகள் என்ன என்று அறிய நான் ஆவலாக இருக்கிறேன். அறியாவினா இது. குறைகூறுவதாக எண்ண வேண்டாம்.

    அத்தி பூத்தாற்போல வருஷத்துக்கு ரெண்டு முறை நாலைந்து வரிகளில் கருத்துப் பகிர்வதுடன் உங்களது காரியம் முடிந்து விட வேண்டும் என்று நீங்கள் கருதலாம். தெளிவாக அழகான தமிழ்நடையில் எழுத முடிந்த நீங்கள் அரசியல் சம்பந்தமாக, சமயம் சம்பந்தமாக, மொழி சம்பந்தமாக……….. நீங்கள் வாசித்து அறிந்த எவ்வளவு விஷயங்களை ………….. தீய சக்திகள் முனைந்து திரித்து வருதலை மறுதலித்து எழுத முடியும்தானே? தமிழ் ஹிந்துவில் ஏன் அப்படிப்பட்ட உங்களது பங்களிப்புகள் இல்லை. வேறேதாவது தளத்தில் தாங்கள் அப்படி எழுதியிருந்தால் என்னை க்ஷமிக்கவும். அதன் உரலைச் சுட்டவும். என்னுடைய புரிதல் தவறென்றால் திருத்திக்கொள்வதில் எனக்குத் தயக்கமேதும் இல்லை.

    தமிழ் ஹிந்துவில் அநீதிகளை எதிர்த்து பற்பல வ்யாசங்களாக உங்களது பங்களிப்புகள் இருந்தால்…………. எழுத லாயக்கில்லாத நான் ………… என்னைப்போல கலப்பு மொழிநடை உடையோர்………ஏன் எழுத முனையவேண்டும் சொல்லுங்கள்.

    ஒரு இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் தமிழ் ஹிந்துவில் பதிக்கப்பட்ட வ்யாசங்கள் எவ்வளவு. இப்போது பதிப்பிக்கப்படும் வ்யாசங்களின் எண்ணிக்கை எவ்வளவு சொல்லுங்கள்? உங்களது பங்களிப்பு ஏன் அதில் இருக்கக் கூடாது.

    நேர்மையாகக் கருத்துப் பகிர விழைந்தால் சொல்லுங்கள்………… இந்த வ்யாசத் தொடரில் சொல்லப்படும் பேசுபொருள் …………. முழுமையான கருத்துக்களைப் பகிர விழையவில்லை? வ்யாசம் தரவுகளை அடக்கியதாக இல்லை? பேசுபொருள் காய்த்தல் உவத்தல் அன்றி இல்லை? சொல்லப்படும் விஷயத்திற்கான ஆதாரங்கள். வ்யாசகர்த்தாவிற்கு சொல்லப்படும் பொருள் பற்றிய புரிதல்…………அதில் அவருடைய ஆழம்……… ஆழமின்மை போன்றவை ………….. நேர்மையாகச் சொல்லப்படவில்லை? மொழிநடை தவிர வேறு ஏதும் உங்களுக்குத் தென்படவில்லை என்றால் உங்களது கருத்து நேர்மையானதா அல்லவா என்று உங்களுடைய தீர்மானத்துக்கே விட்டு விடுகிறேன்.

    நானும் எழுத மாட்டேன். யாராவது எழுத முனைந்தால் அதில் உள்ள குணங்களைப் பற்றி கபள சோற்றில் முழுப்பூசணிக்காயை மறைப்பது போல மறைத்து அதில் உள்ள கடுகளவு குறைகளை மலையளவு மிகைப்படுத்தி சொல்லுவேன். மேலும் அப்படியான அநீதிக்கு எதிரான மாற்றுக்கருத்துக்கள் அதன் வடிவு உங்களுக்கு ஒப்பவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவை பொதுவெளியிலேயே உலா வரக்கூடாது என்றும் சொல்லுவேன் …………என்றெல்லாம் சொல்லும் நீங்கள் கருத்து சுதந்திரம் பற்றியெல்லாம் கூடப் பேச விழைவது ஆச்சரியம் அளிக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லுவேன்.

    மொழிநடை பற்றி இதற்கு மேல் கருத்துப் பகிர மாட்டேன். வ்யாசம் சொல்லும் பேசுபொருள் பற்றி உங்களது கருத்துக்களுக்கு மட்டிலும் ………. வ்யாசத்தை நீங்கள் நேர்மையாக வாசித்து அதன் குணதோஷங்களை விவாதிக்க விழைந்தால் மட்டிலும் உங்களுடனான இந்த வ்யாசம் சம்பந்தமான என் சம்வாதம் தொடரும்.

  31. இந்த கட்டுரை ஒட்டிய விவாதம் இங்கு இல்லை. எப்படியாவது க்ருஷ்ணகுமாரை தனி கட்டுரைகளில் இருந்து விரட்டி அடிக்கும் முயற்சிதான் தெரிகின்றது .குறிப்பிட்ட ஒரு format இல் இருந்தால் தான் கட்டுரை படிப்பேன் என்பதுகூட ஒரு வகை வன்முறை தான் .

  32. // எங்கேயாவது அவருடைய சகட்டுமேனிக் கதையளத்தல் எங்கு வெளிப்பட்டு விடுமோ என்று பையப்பைய விவாதத்தை வேறு திசைக்கு சாமர்த்யமாக மாற்றும் அவரது கரிசனம் // டியர் க்ருஷ்ணகுமார், யுவர் ரைட்டிங் அவ்வளவுக்கு வொர்த் நோ.

    தமிழ் ஹிந்து தளத்தின் பொறுப்பாளர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். உங்கள் வழிகாட்டுதலை தெளிவாக்குவதுதான் இப்போதையத் தேவை. ஜடாயு?

  33. சிவஸ்ரீ விபூதிபூஷன்,

    தமிழில் ‘பிற மொழிச்’ சொற்கள் அறவே கூடாது என்று என் போன்றவர்கள் சொல்வதாக நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வலிந்து புகுத்தப்படும் கலப்பு நடையைத்தான் எதிர்க்கிறோம். (எதிர்க்கிறேன்.) தமிழில் பழக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு பதிலாக வலிந்து வேறு மொழி வார்த்தைகளை புகுத்துவதைத்தான் எதிர்க்கிறேன். கட்டுரை, வ்யாசம் இரண்டில் எது பழக்கத்தில் உள்ள வார்த்தை என்பதை உங்கள் தீர்மானத்துக்கே விட்டுவிடுகிறேன்.

    இலக்கண சுத்தமான தமிழில் எழுதுவதானால் க்ருஷ்ணகுமார் என்ற பேரையே கிருஷ்ணகுமார் என்றுதான் எழுத வேண்டி இருக்கும். ஆனால் அவர் பேரை எப்படி எழுதுவது என்று தீர்மானிக்கும் உரிமை அவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு, அவர் விரும்பும்படி மற்றவர்கள் எழுதுவதுதான் அடிப்படை மரியாதை அல்லவா? இலக்கணத்தை விட அதையே முக்கியம் என்று கருதுகிறேன். உங்கள் பேரை ‘சிவத்திரு நீறணி’ என்று யாராவது தனித்தமிழ் கிறுக்கர்கள் எழுதினால் அதையும் எதிர்க்கத்தான் செய்வேன்.

    தமிழில் பல பிற மொழி வார்த்தைகள் கலந்திருப்பதை தாங்களும் அறிவீர்கள். அவற்றில் சமஸ்கிருதத்திலிருந்து வந்த சகோதரன், காவியம், தர்க்கம் போன்ற வார்த்தைகளுக்கு மட்டும் ஆதரவு, ஆங்கிலத்திலிருந்து வந்த காப்பி, கார் மாதிரி வார்த்தைகளுக்கும் உருதுவிலிருந்து வந்த கசாப்பு, ஜிமிக்கி போன்ற வார்த்தைகளுக்கும், போர்த்துகீசிய மொழியிலிருந்து வந்த ஜன்னல் போன்ற வார்த்தைகளுக்கும் எதிர்ப்பு என்பது என்னைப் பொறுத்த வரை தர்க்க முரணாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையை நீங்கள் எடுக்கவில்லை என்று நம்புகிறேன்.

    உங்கள் தகவலுக்காக – என் முழுப்பெயர் ராமஸ்வாமி வைத்யநாதன் சுப்ரமணியன் (ஆர்.வி. சுப்ரமணியன்)

  34. //குறிப்பிட்ட ஒரு format இல் இருந்தால் தான் கட்டுரை படிப்பேன் என்பதுகூட ஒரு வகை வன்முறை தான் .//

    ஒருசிலருக்கே போய்ச்சேரும் நடையை எல்லார் மீதும் திணிப்பதும் ஒரு வகை வன்முறைதான் 🙂

    அந்நடையிலும் “கேழ்வி” போன்ற‌ தமிழ்ப்பிழைகளைச் சரிக்கட்டுவது தமிழன்னையை மானபங்கபடுத்தும் வன்முறையே.

  35. //தங்களுடைய வ்யாக்யானாதிகளையும் வாசித்து தங்களுடைய மேற்கண்ட செந்தமிழ் நடையினையும் வாசிக்கும் யாரொருவரும் தங்களை மெச்சாமல் இருக்கவே முடியாது.

    என்னுடைய மொழிநடை கலப்பு மொழிநடை என்று நான் வெளிப்படையாகச் சொல்லுவேன். மேலே தாங்கள் எழுதும் மொழிநடை செந்தமிழ் என்று நீங்கள் துண்டு தாண்டி சத்யம் செய்வீர்கள். இதுக்கு மேலயும் சொல்ல வேண்டும்?//

    நான் கட்டுரையாசிரியன்று. நீங்கள்தான் கட்டுரையாசிரியர். உங்களிடமிருந்துதான் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தமிழை வேண்டுமென்றே பிழை போட்டு ஏன் எழுதுகிறீர்கள்? மொழிக்கலப்பு என்பதும் வேண்டுமென்றே திணிக்கப்படுகிறது. வ்யாசம் என்ற சொல்லுக்கு கட்டுரை என்று அனைவருக்கும் தெரிந்த தமிழ் இருக்கிறது. ச்மிக்கவும் என்ற சொல்லுக்கு மன்னிக்கவும் என்று தெரிந்த சொற்கள் இருக்க் சமஸ்கிருதமேன்? இவையெல்லாம் செந்தமிழா?

    செந்தமிழில் எழுதவேண்டுமென என எவருமே கேட்கவில்லை.

    அனைவருக்கும் போய்ச்சேரும்படி பொதுத்தமிழில் எழுதுங்கள் என்றுதான் விண்ணப்பிக்கிறோம். அப்படிச்செய்தால் எல்லாரும் படிப்பார்களல்லவா?

    தெரிந்தே தமிழ்ப்பிழைகள் போடாதீர்கள் என்பதும் விண்ணப்பம்.

    பின்னூட்டங்கள் வேறு. கட்டுரை வேறு. இரண்டும் ஒன்றாகா. பின்னூட்டத்தில் கல்ந்து எழுதுகிறார்கள். எனவே நான் கட்டுரையிலும் அப்படித்தான் செய்வேன் என்பது என்ன பிடிவாதம்?

    உங்களால் முடியும். பலவிடங்கள் நல்ல தமிழ் எழுதிவருகிறீர்கள். இராமாயணத்தைப்பற்றி எல்லாரும் படிக்கும்படி செந்தமிழில் எழுத வேண்டாம். பொதுத்தமிழில் எழுதினால் போதும்.

  36. \\ டியர் க்ருஷ்ணகுமார், யுவர் ரைட்டிங் அவ்வளவுக்கு வொர்த் நோ. \\

    டியர் ஆர் வி உங்களது அரைவேக்காட்டுத்தனமான புரிதல்களை ஒப்பிடும் போது அதற்கு நூறு மடங்கு தெளிவு இந்த வ்யாசத்தில் உள்ளது.

  37. அன்பின் ஆர் வி………அடுத்த பாகத்தில் ப்ரத்யேகமாக நீங்கள் அட்ச்சுவுட்ட சமாசாராதிகள் என்ன? அதற்கு மாற்றான கருத்துக்கள் என்ன என்பதை விவாதங்களினூடே நிச்சயமாகப் பகிர்வேன். நீங்கள் ஃபேஸ் புக் விவாதத்தில் பங்கு பெற்று பகிர்ந்த கருத்துக்களிலிருந்து நீங்கள் ராமானுஜன் வ்யாசம் என்ற சமாசாரத்தின் திசைப் பக்கம் கூட தலை வைத்து படுக்காது………. ஆனால் கருத்துக் கந்தசாமியாக கருத்துதிர்ப்பது தெளிவாகப் புலனாகியிருக்கிறதே 🙂

  38. அன்பின் ஸ்ரீ பாண்டியன் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ காலத்திலிருந்து தமிழ் என்ற பெயரை குசும்புத்தனமாக Tamil என்று எழுதி ……… காவ்யா, திருவாழ் மார்பன், பாலசுந்தரம் க்ருஷ்ணா, பாலசுந்தரவிநாயகம்……….. என சகட்டுமேனிக்கு எல்லையற்ற பெயர்களில் ஹிந்துமதக்காழ்ப்பை பொழிந்த அன்பர் பீ எசு……….. எப்போது வ்யாசத்தின் பேசுபொருளோடு சம்பந்தப்பட்டு பேசியிருக்கிறார்.

    உப்புமாவைக் கிண்டுவது எப்படி என்று ஒரு வ்யாசம் எழுதப்பட்டாலும் அதன் விவாதங்களிலே ஜாதிக்காழ்ப்பு கந்தறகோளாதிகளைப் பகிரும் மாட்சிமை உடையவரன்றோ தேவ ஊழியத்திற்கு வாக்குதத்தம் செய்துள்ள பாட்டுடைநாயகன்………ஆப்ரஹாமியத்துக்குக் கொடிதூக்கும் இவர் தமிழன்னையைப் பற்றிப் பேசும் தகுதிஉடையவராகக் கருதிக்கொள்ளுவது கோரகலிகாலத்தின் கோலம்.

    அமரர் மலர்மன்னன் மஹாசயர் அவர்களது வ்யாசத்தின் விவாதங்களிலும் ஸ்ரீ வெ சா அவர்களது வ்யாசங்களிலும் வ்யாசம் 200 வரின்னா இவருடைய சம்பந்தா சம்பந்தமே இல்லாத காழ்ப்புக்கருத்துக்கள் 400 வரி என்பது தானே இவரது வாடிக்கை. இவர் அப்போதெல்லாம் செய்யாத இம்சையையா இங்கு செய்யப்போகிறார் மாதத்துக்கு ஒரு பெயரில் உலாவரும் பெருந்தகையார்.

    இந்த அன்பர் ராமாயணத்தைப் பற்றி ………….. முன்னூறு ராமாயண ஜெபம் செய்து கொண்டே …………… வக்ரமான கருத்துக்களைப் பகிர்ந்த அவல தாண்டவத்தை பார்த்திருப்பதால்……….. இவருடைய ஆதங்கம் புரிகிறது. ராமாயணம் பற்றிய இவருடைய புளுகு மூட்டைகள் பொது தளத்தில்………….. அதுவும் முன்னூறு ராமாயண ஜெபம் என்பது அரங்கேறாது அல்லவா.

  39. க்ருஷ்ணகுமாருக்கு கடைசியாக ஒரு வார்த்தை:
    // மொழிநடை தவிர வேறு ஏதும் உங்களுக்குத் தென்படவில்லை என்றால் உங்களது கருத்து நேர்மையானதா அல்லவா என்று உங்களுடைய தீர்மானத்துக்கே விட்டு விடுகிறேன். //
    பூ என்றும் எழுதலாம்; the seed-bearing part of a plant, consisting of reproductive organs (stamens and carpels) that are typically surrounded by a brightly coloured corolla (petals) and a green calyx (sepals) என்றும் எழுதலாம். எது செயற்கையான நடை, எப்படி எழுதினால் படிக்க வசதியாக இருக்கும் என்பதை உங்கள் தீர்மானத்துக்கே விட்டுவிடுகிறேன்.

  40. க்ருஷ்ணகுமாரின் மொழிநடை குறித்த விசாரத்தில், எனது தனிப்பட்ட கருத்து என்பது ஆர்.வி.யின் கட்சி தான். ஏற்கனவே முன்பும் க்ருஷ்ணகுருமாருக்கு இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். க்ருஷ்ணகுமார் எக்கச்சக்கத்துக்கு வாசிக்கிறார் என்று தெரிகிறது. நிறைய நீளநீளமாக எழுதவும் செய்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் கொஞ்சம் முயன்றால் மொழிநடையை மாற்றிக் கொள்வது என்பது கடினமானதே அல்ல. சொல்லப் போனால் தனது கருத்துக்களின் மீது உறுதியும், தன் எழுத்து பரவலாகச் சென்று சேர வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட ஒருவர், தனது மொழிநடையைச் செதுக்கிச் செம்மை செய்து கொண்டே இருக்க வேண்டும், இருப்பார். என் விஷயத்தில் 2002ல் திண்ணை இதழில் நான் எழுதிவந்த நடைக்கும் இப்போதுள்ளதற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் காண முடிகிறது.

    நடையைப் பார்க்காதே, கருத்தை *மட்டும்* பார் என்ற வாதம் அர்த்தமற்றது. ஒரு கட்டுரையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் நடை உடலாக நின்று கொண்டிருக்கிறது. க்ரு.கு. எழுதுவது போன்ற ஒரு விநோதமான மொழிநடையை ஒன்றிரண்டு இடங்களில் அதன் தனித்தன்மைக்காக ரசிக்கலாம், ஆனால் எல்லாவற்றையும் அப்படித்தான் எழுதுவேன் என்றால், பிறகு அது ஒருவித கோமாளித்தனமாகவே பார்க்கப் படும். அத்தகைய நடையில் எழுதப் படும் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட வாசக வட்டத்தைத் தாண்டி வெளியே செல்லாது. அதற்குள்ளேயே முடங்கி விடும். க்ரு.கு அவர்களின் மொழிநடையின் மீதான இந்த விமர்சனம் அவரது கருத்துக்களின் மீதான மதிப்பினால், அது பரவலாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தால் கூறப்படுவது என்பதைக் கூட அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார். விமர்சிப்பவர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுக்கிறார். இது ஆரோக்கியமானதல்ல. அவர் முயன்று தனது நடையை சீராக்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கையுமாகும்.

    ஆயினும் மொழிநடையைக் காரணம் காட்டி, இத்தகைய கட்டுரைகளைப் பதிப்பிக்காமலிருப்பது சரியான நிலைப்பாடல்ல என்பதே தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவினுடைய (மற்றும் அதில் உறுப்பினனாக உள்ள என்னுடைய) கருத்துமாகும். எனவே, க்ருஷ்ணகுமாரின் கருத்துக்கள் இத்தளத்தில் தொடர்ந்து வெளிவரும். அவராக முயன்று அவரது நடையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

  41. தமிழில் எழுதும்பொழுது வடசொற்களைக் கலக்கலாமா வேண்டாமா எனும் சர்ச்சையில் மொழிநடையில் செயற்கை இருக்கலாகாது என்பதெ என்கருத்து. தத்துவம் சமய்ம் போன்ற பொருள்களை விவாதிக்கும்போது கலைச்சொற்களாக வடசொற்கள் கலந்தே தீரும். அதனைத் தவிர்க்க முடியாது. செய்யுளில் வடசொற்கள் பாட்டோசைக்கும் இலக்கியச் சுவைக்கும் சிலசமயங்களில் இன்றியமையாதவை ஆகின்றன. ‘ சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம்மீ ஈ” என அருணைப் பிரான் வேண்டும் கந்தரலங்காரப் பாடலில் செந்தமிழால் பகர் ஆர்வ்ம் ஈ” என்னும் சொற்களைத் தவிர பிறவனைத்தும் வடசொற்களே” வடசொற் கலப்பு பாயசத்திலுள்ள முந்திரிப்பருப்பு, திராடசை போல இருக்க வேண்டுமேயொழிய சர்க்கரையில் கலந்துவிட்ட பருக்கைக் கற்களைப் போல இருக்கக் கூடாது. ஒருகாலத்தில் செய்யுளைச் செந்தமிழில் யாத்தவர்களும் உரைநடை யில் வடசொற்களை மிகுதியும் பயன்படுத்தினர். திருப்போரூர் சிதம்பரசுவாமிகள், அருட்பெருஞ்சோதி வள்ளற் பிரான் ஆகியோர் உரைநடைகளைக் காண்க. கிருஷ்ணகுமாருக்கு இது இயல்பான நடை என்றால் தொடரலாம். என்போன்றவர்களின் சமஸ்கிருத அறிவுக்குச் சோதனையாகலாம்.

  42. ஜடாயு எழுதியது மெத்தவும் சரி.

    எப்படிப்பட்ட நடையாயினும், அதன் கருத்துக்கள் பிறறிய வேண்டுமெனெற நிலைப்பாட்டில், கட்டுரைகள் வெளியிடப்படவேண்டுமென்பதில் இருவேறு கருத்துக்கள் இல. கிருஸ்ணகுமார் எக்கச்சக்கமான கருத்துக்களை தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளார். அவற்றைப்பிறருக்குத் தெரியப்படுத்தவேண்டுமென்ற அவாக்கொண்டுள்ளார். இத்தளம் அவருக்கு உதவி புரியுமாயின் நன்றி. அவரின் இன்னொரு ஆதங்கமும் வெளியிட்டுவிட்டார்: நீங்களெல்லாம் செய்யத்தயங்கி வருவதால் நான் செய்யவேண்டிய கடப்பாடு என்று முடிக்கிறார். நன்றி. வாழ்த்துக்கள். தொடர்ந்து செய்யுங்கள். இத்தளம் அவரின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு உதவட்டும்.

    ஆக, அவரின் கட்டுரைகள் விமர்சிக்கப்படவேயில்லை. அவரின் நடைதான் விமர்சிக்கப்படுகிறது. அவ்விமர்சனமும் இப்படித்தான் எழுதவேண்டுமென்ற கட்டாயப்படுத்தப்படவில்லை. தயைசெய்து முயற்சி செய்யுங்கள் என்ற விண்ணப்பம்தான் செய்யப்படுகிறது.

    கொஞ்சம் கொஞ்சமாக கிருஸ்ணகுமார் அப்படிசெய்வார். இன்னும் சில்லாண்டுகளின் தமிழ்மணக்க இராமாயணம் பற்றி நமக்கெல்லாம் சொல்வார் என்ற நம்பிக்கை வீண் போகாது.

    தன்னேரில்லா தமிழ் – கம்பன்.

    யாரிந்த கம்பன்? தமிழ்கூறும் ந்ல்லலகத்துக்கு இராமாயணத்தை நல்கியவன். கம்பனிடம் கறக்வேண்டிய பாடமே அவன் சொற்றொடரின் திரண்ட பொருள்- தன்னேரில்லா தமிழ்.

    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

    அந்தரலோ கத்தின்மே லானதிரு வாலவாய்ச்

    சுந்தர மீனவன்நின் சொற்படியே – வந்து

    துறவாதே சேர்ந்து சுகானந்தம் நல்க

    மறவாதே தூது சொல்லி வா

    இதை எழுதியவர் மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர்களுள் ஒருவர். சொக்கநாதரின் காதலைப்பெற தமிழை தூது விடும் வியப்பைத்தந்தவர்.

    “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்றெழுதிய பாரதியாருக்கு – தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சி என்று பல மொழிகள் தெரியும்.

    – பால சுந்தர விநாயகம்.

    (My argument is cllosed)

  43. ஸ்ரீராமஜெயம். இன்று ஏகாதசி நன்னாள்.

    என்னுடைய கருத்துக்களை வ்யாச சமாப்தியில் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

  44. https://www.facebook.com/photo.php?fbid=10206536059219831&set=a.3507118196271.126776.1221294625&type=3&theater

    இந்த இதழின் ஃபோட்டோகாப்பி பிரதி என்னிடம் இருக்கிறது. முகப்பில் இருக்கும் பெயரை விடுங்கள். “குடி அரசு” இதழின் நோக்கம் “தேஷாபிமானம்”, “பாஷாபிமானம்” என்ற குறிப்புகள் இருப்பதுடன் “ஸ்ரீமகான் காந்தி வாழ்க” என்ற வாசகமும் இருக்கிறது. (அவர் இருந்தது அப்போதைய காங்கிரஸில்…)

    1925 மே மாதத்தில் முதல் இதழ் வெளியான நடத்தப்பட்ட விழாவில் சிறப்புறையாற்றியவர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள். அந்த வருட இதழ்கள் பலவற்றில் பெண்ணுரிமை வேண்டி எழுதப்பட்ட பல கட்டுரைகள் இருக்கின்றன (1920ல் தான் ஆனானப்பட்ட அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்தது என்பதை நினைவு கொள்க)

    1934க்குப்பின் வெளிவந்த குடி அரசு பிரதிகளில்தான் அவரது தீவிர சாதி/கடவுள்/காங்கிரஸ் மறுப்பு கொள்கைகளை படிக்க முடிகிறது. மணிபிரவாள நடை முற்றிலும் ஒழிந்து, அவர் கொண்டுவந்த சீர்திருத்த தமிழ் நடை பின்பற்றப்பட்டிருப்பதும் தெரியும்.

    பெரியாரின் ஒரிஜினல் எழுத்துக்களை படிக்க விரும்பினால் தெரிவியுங்கள். அனுப்பி வைக்கிறேன். முழுக்க படித்தபின்னரும் திட்ட வேண்டுமென்றால் பயன்படலாம்; இல்லை, மனம் மாறி “ஷொட்ட” வேண்டுமென தோன்றினாலும், ஓகே!

    மேல உள்ள ஒரு லின்க் அதில் உள்ள ஒரு படம் அதனின் ஒரு பின்னூட்டம் எல்லாம் இங்கு. யாரோ ஒருவர் ஜாதி வெறியில் தமிழ் மொழியை இப்படித்தான் என்பதை டியூன் பண்ணியது . இங்கு இப்படி முடிந்து இருக்கின்றது. என் கருத்து நான் க்ரிஷ்ணகுமாரின் கட்சி . இதில் துக்ளக் வசனமும் நினைவுபடுத்துவோம் ;

    Why not ?what was illegal yesterday is legal today and what is illegal today shall be legal tomorrow !!

  45. //Why not ?what was illegal yesterday is legal today and what is illegal today shall be legal tomorrow !!/

    EVR should not be a model for you.

    No legality, or illegality.

    No today, tomorrow or yesterday.

    At all times if a person respects his mother tongue, he will take care not to distort it.

    This is the basic point. It is stupidity to think manippravalam reaches all. It is only for a select group. Essays here are put up to reach all Tamil hindus who like to read everything in their mother tongue.

    You have not understood these basic points. Better late than never.

  46. மொழி நடையைப்பற்றி இனியும் பேசமாட்டேன் என்றபிறகும் பதில் சொல்வதை அசௌகர்யமாக கருதமாடீர்கள் என்ற நம்பிக்கையில் எனது தரப்பை மேலும் விளக்கிவிட்டு முடித்துக்கொள்கிறேன்.

    // ஸ்ரீ பொன் முத்துகுமார் அவர்கள் என்னுடைய பெருமதிப்பிற்குரிய நண்பர். என்னுடைய வ்யாசத்தை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ள …. அதனால் மட்டிலும் இழிவான சொல்லாகி விடாது என்பதனை மட்டிலும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.//

    அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திரு.க்ருஷ்ணகுமார், மிகவும் நன்றி. உங்களது உழைப்பையோ கட்டுரையையோ நான் புறந்தள்ளவேயில்லை. மாறாக உங்களது உழைப்புக்கும் பரந்துபட்ட அறிவிற்கும் வணங்குகிறேன். அதேபோல உங்களது மொழிநடையை மிகைப்படுத்தலின்பொருட்டு பூதாகரமாக்குகிறேன் என்பதையும் மறுக்கிறேன். மொழிநடை என்பது வெற்றிடத்தில் உருவாவதில்லை என்பதையும் புரிந்துகொள்கிறேன். ஆனால் அது சில நியாயமான மற்றும் நேர்மையான தேவைகள் கருதி மாற்றத்திற்கு உள்ளாகவேண்டியதும் அவசியமே என்பதை நீங்களும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    கேழ்வி என்பதை இழிவாக நினைக்கவில்லை. ஆனால் கேள்வி என்று எழுத இயல ஒரு வாய்ப்பு இருக்கும்போது (கவனிக்கவும், பேச அல்ல, எழுத) கேழ்வி என்றே பிடிவாதமான எழுதுவேன் என்ற மனப்பான்மைதான் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

    // ஒட்டு மொத்த ஹிந்து சமயத்தை தரம் தாழ்ந்து கண்டவர்களும் ஆதாரங்களோ அல்லது புரிதல்களோ கூட அறவே இல்லாமல் விமர்சிக்கும் காலம் இது. …. குறைகூறுவதாக எண்ண வேண்டாம். //

    என்மேல் உள்ள நம்பிக்கைக்கு நன்றிகள் பல. ஆனால் அதற்கு அறுபடாத, தொடர்ச்சியான வாசிப்பும் முனைப்புடன் கூடிய உழைப்பும் தேவை. எனது வாசிப்பு அதற்கெல்லாம் தாங்காது :)) மேலும் நான் அதியதி வாழைப்பழ சோம்பேறி. எனவே இது தொடர்பாக எனது பங்களிப்பு வெறும் பூஜ்யமே.

    ஆனால் பாருங்கள் தேரை இழுக்கவேண்டுமென்றால் வீட்டுக்குள்ளேயே இழுத்துக்கொண்டிருக்க இயலாதல்லவா ? தெருவுக்கு வரவேண்டுமே ?

    // அத்தி பூத்தாற்போல வருஷத்துக்கு ரெண்டு முறை நாலைந்து வரிகளில் கருத்துப் பகிர்வதுடன் … என்னைப்போல கலப்பு மொழிநடை உடையோர்………ஏன் எழுத முனையவேண்டும் சொல்லுங்கள்.//

    எனக்கும் ஆசைதான் நண்பரே. நான் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கிறேன் ? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் ? தொடர்ச்சியான வாசிப்பும் வாசித்தவற்றை உரையாடி, எழுதி, விவாதித்து என்னை தொகுத்தும் வளர்த்தும் கொள்ள சஹ்ருதயர்கள் என எனக்கும் ஒரு கனவு உண்டு. ஆனால் என்ன பண்ண ? பெருமூச்சுதான் வருகிறது (ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க :)) )

    திண்ணை தளத்தில் சில ஆண்டுகள் முன் (அப்போது கொஞ்சம் பறந்துகொண்டிருந்ததாய் நினைவு, :)) இரண்டோ மூன்றோ கட்டுரைகளும் (அழகி திரைப்படம் குறித்து, விஜய்காந்த்தை முன்வைத்து நடிகர்களின் அரசியல் அப்செஷன்கள் குறித்து, கிசுகிசு என்ற பெயரில் ஊடகங்கள் செய்யும் தனிமனித அந்தரங்க நுழைவு குறித்து என) சில கவிதைகளும் (பிற்பாடு, ஜெயமோகன், திண்ணை வெளியிடும் “கவிதை”களுக்காக அவர்களை பலமுறை கொல்லலாம் என்று தனது நகைச்சுவை நாவலில் குறிப்பிட்டது எனது கவிதை குறித்தல்ல என்று சமாளித்துக்கொண்டது வேறுகதை) எழுதியிருக்கிறேன். அவ்வளவே. ஒரு நெருப்புக்குச்சி போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

    தேர்தலுக்கு முன் “தி.மு.க ஏன் புறக்கணிக்கப்படவேண்டும்” என்று ஒரு கட்டுரை எழுத எண்ணியிருந்தேன். ஆனால் திருமலை அவர்கள் மிக காத்திரமாகவும் அழகாகவும் தொடர்கட்டுரையே எழுதிவிட்டார். எனவே விட்டுவிட்டேன். தேர்தலுக்குப்பின் “தமிழக பா.ஜ.க தவறவிட்ட தருணங்கள் / வாய்ப்புகள்” குறித்து எனது எண்ணங்களை எழுத நினைத்திருந்தேன். எனது ”வா.ப.சோ” குணத்தாலும், அயற்சியாலும் விட்டுவிட்டேன். (இவ்வளவு தூரம் நீங்களே கேட்டபிறகாவது, ஏதாவது பீராய முடிகிறதா பார்க்கிறேன் :))

    // நேர்மையாகக் கருத்துப் பகிர விழைந்தால் சொல்லுங்கள்………… இந்த வ்யாசத் தொடரில் சொல்லப்படும் பேசுபொருள் …… உங்களது கருத்து நேர்மையானதா அல்லவா என்று உங்களுடைய தீர்மானத்துக்கே விட்டு விடுகிறேன். //

    நான் உங்களது கட்டுரையின் உள்ளடக்கத்தைப்பற்றி பேசவே இல்லை. நீங்கள் ஆதாரமில்லாமல் எழுதுபவர் என்றும் நினைக்கவில்லை. நான் சொல்வது உங்களது மொழிநடையை மட்டுமே. உங்களது கட்டுரைக்குள் நுழைவதற்கே சற்று சிரமமாக இருப்பதை மட்டும்தான் (மண்டைக்குள் அகராதி) பேசுகிறேன்.

    // நானும் எழுத மாட்டேன். யாராவது எழுத முனைந்தால் அதில் உள்ள குணங்களைப் பற்றி கபள சோற்றில் முழுப்பூசணிக்காயை மறைப்பது போல மறைத்து அதில் உள்ள கடுகளவு குறைகளை மலையளவு மிகைப்படுத்தி சொல்லுவேன். மேலும் அப்படியான அநீதிக்கு எதிரான மாற்றுக்கருத்துக்கள் அதன் வடிவு உங்களுக்கு ஒப்பவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவை பொதுவெளியிலேயே உலா வரக்கூடாது என்றும் சொல்லுவேன் …………என்றெல்லாம் சொல்லும் நீங்கள் கருத்து சுதந்திரம் பற்றியெல்லாம் கூடப் பேச விழைவது ஆச்சரியம் அளிக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லுவேன்.//

    நண்பரே, வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும், இந்த தளத்தில் உங்களது பங்களிப்பு அதிகம். ஆனால் ஒரு பின்னூட்டனான நானோ உங்களது மொழிநடை குறித்து ஒருசில வரிகள் – அதுவும் நீங்கள் பல கட்டுரைகள் எழுதிய பின்னரே – எனது கருத்தாய் வைத்தேன். அவ்வளவே. அதற்காக நான் உங்களது கட்டுரையின் குணங்களை மறைக்கிறேன் ; கடுகளவு குறைகளை மலையளவு மிகைப்படுத்துகிறேன்; உச்சமாக உங்களது கட்டுரை பொதுவெளியில் வரக்கூடாது என்று சொல்கிறேன் என்றெல்லாம் சொல்வது அபாண்டமாக இருந்தாலும் எனக்கு நகைச்சுவையாய்த்தான் படுகிறது.

    இறுதியாக இப்படி சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.

    – சமூஹத்தில் புளுகுக் கருத்துக்கள் அறிவுஜீவித்தனம் என்ற போர்வையில் உலா வருவதை எதிர்த்தும் ;
    – ஒட்டு மொத்த ஹிந்து சமயத்தை தரம் தாழ்ந்து கண்டவர்களும் ஆதாரங்களோ அல்லது புரிதல்களோ கூட அறவே இல்லாமல் விமர்சிப்பதை எதிர்த்தும் ;
    – அரசியல் சம்பந்தமாக, சமயம் சம்பந்தமாக, மொழி சம்பந்தமாக தீய சக்திகள் முனைந்து திரித்து வருதலை மறுதலித்தும்

    தொடர்ச்சியாக இந்த தளத்தில் எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டால், அது நிறையபேரை சென்றடையவேண்டும் என்று விரும்பினால் (எனது பின்னூட்டமே நான் அப்படி உண்மையாக விரும்புகிறேன், அ.நீ, ஜடாயு வரிசையில் நீங்களும் இந்த தளத்தின் வலுவான படைப்பாளியாக இருக்க இயலும் என்ற எனது ஆதங்கத்தின்பாற்பட்டதுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்) நீங்கள் பெரும்பாலானோர் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் மொழிநடைக்கு மாறவேண்டும். இல்லையெனில் மிகச்சிறு வட்டத்திற்குள்ளேயே (நீங்கள், திரு.சிவஸ்ரீ விபூதிபூஷன் போன்றர் அடங்கிய) உங்களது கட்டுரைகள் முடங்கிப்போகும் அபாயம் இருக்கிறது.

    கட்டுரையின் மணிப்பிரவாள நடையா – கட்டுரை இன்னும் நிறைய பேரை சென்று சேர்வதா ?

    தேர்வு உங்களுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *