அண்டிவரும் ஐ.எஸ். அபாயம்

isis terrorists
உலகை அழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.

 

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் அண்மையில் மேற்கு வங்க காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்களால் தமிழக காவல்துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அந்த இளைஞர் கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பூரில் குடியிருந்த தகவல்தான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

மோஸி (எ) மஜ்னு (எ) மொஸிருதீன் என்ற 27 வயது இளைஞர், மேற்கு வங்கம் செல்லும் வழியில் பர்துவான் ரயில்நிலையத்தில் கடந்த ஜூலை 3—இல் கைது செய்யப்பட்டார். தனது சொந்த ஊரான பிர்பும் மாவட்டத்திலுள்ள லாம்பூர் செல்லும் வழியில் அவர் சிக்கினார். அவரது சொந்த ஊர் அதுதானா, அல்லது பங்களாதேஷிலிருந்து ஊடுருவியவரா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.

mosirudeen
மொஸிருதீன்

இந்தக் கைதுக்குப் பின்புலத்தில் தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) உளவுத் தகவல் இருந்துள்ளது. அவர்கள் கடந்த ஏப்ரலிலிருந்து அவரைப் பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பங்களாதேஷ் உள்பட பல வெளிநாடுகளுக்கு பல்வேறு மொபைல் எண்களில் அவர் பேசியது கண்டறியப்பட்டது. அவர் கைதானபோது, அவரிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ். (இராக் மற்றும் சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு – சுருக்கமாக ஐ.எஸ்.) அமைப்பின் இந்தியப் பொறுப்பாளரான ஷாஹ்பி அர்பருடன் மொஸிருதீன் தொடர்பு வைத்திருந்தது உறுதியாகி உள்ளது. பங்களாதேஷில் செயல்படும் ஜமாத் –உல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) பயங்கரவாத அமைப்புடனும் அவருக்கு தொடர்பு உள்ளது. இந்தக் கும்பல் இந்தியாவில் நடத்த உத்தேசித்திருந்த நாசவேலை என்ன என்ற கோணத்தில் இப்போது என்.ஐ.ஏ. விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது.

அவர் திருப்பூர்,  ஆண்டிபாளையத்தில் மளிகைக்கடை நடத்தி வந்திருக்கிறார். அவர் அடிக்கடி வெளியூர் செல்வார் என்றும், யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டார் என்றும் அண்டை வீட்டினர் கூறுகின்றனர். அவருக்கு, காதலித்து மணம் புரிந்த ஷாகிரா பானு என்ற மனைவியும், 3, 5 வயதில் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர் (குழந்தைகளின் பெயர்களைக் கவனியுங்கள்: தமிழரசி (எ) மார்ஜியம், இளவரசி (எ) ஆபியா ). அவருடன் சகோதரர் ஆஷ்துல்லாவும் வசித்துள்ளார். மற்றொரு சகோதரர் மினாஸ்ருதீன், திருப்பூர் அருகிலுள்ள மங்கலத்தில் வசிக்கிறார். மங்கலம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்க தகவல். அவர்களிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

மொஸிருதீன் திருப்பூரில் வசித்த வீடு.
மொஸிருதீன் திருப்பூரில் வசித்த வீடு.

அவரது வீட்டை சோதனையிட்ட மேற்குவங்க தீவிரவாத தடுப்பு காவல்துறையினர், மடிக் கணினி, வாள், ஆயுதங்கள், பல மொபைல் போன்கள், டைரி, 6 சிம் கார்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். மொசிருதீனின் ஐ.எஸ். தொடர்பு குறித்து எதுவுமே தெரியாமல் அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர் என்பது நம்பும்படியாக இல்லை.

மொஸிருதீன் ஒவ்வொருமுறை மேற்கு வங்கம் சென்று திரும்பும்போதும் பத்துக்கு மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்துள்ளார். அவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட ஆட்களை அவர் திருப்பூரில் குடியேற்றி இருக்கிறார். அவர்கள் பல பின்னலாடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவதாகத் தகவல். அவர்களில் எத்தனை பேர் தீவிரவாதிகள் என்பது திகிலான கேள்வி.

யார் வந்தாலும் எந்த விசாரணையுமின்றி, குறைந்த கூலிக்கு ஆள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் வேலைக்கு ஆட்களை அமர்த்திக்கொள்ளும் திருப்பூர் தொழில்துறையினர், இப்போது தங்கள் அபத்தத்தை உணர்ந்திருக்கிறார்கள். காவல்துறையும், ‘விசாரிக்காமல் யாரையும் பணியில் சேர்க்காதீர்கள்’ என்று தொழில் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மோஸியிடமிருந்து இரு போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், அவர் திருப்பூர் முகவரியில், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளைப் பெற்றுள்ளார். உள்ளூர் மக்களே இவற்றைப் பெற முடியாமல் தவிக்கும்போது, வெளிமாநிலத்தை சேர்ந்த மோஸி குடும்பத்துடன் இவற்றைப் பெற்றிருப்பதிலிருந்து உள்ளூர் அதிகார வர்க்கத்தின் ஊழல் லட்சணம் புரிகிறது.

கேரள இளைஞர்களால் பரபரப்பு:

cartoonஇந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்த இரு இஸ்லாமிய இளைஞர்களான சமீர் (19), சல்மான் (19) ஆகியோர், திருப்பூர்- பாண்டியன் நகரில் ஜூலை 14-இல் கைதானார்கள். போதைக்கு அடிமையான நிலையில் இருந்த அவர்கள், மோஸிருதீனுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பிரகு கேரள காவல்துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்புலம் வேறுமாதிரியானது.

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்திலிருந்து 17 பேரும், பாலக்காடு மாவட்டத்திலிருந்து 4 பேரும் திடீரென மாயமாகினர். இவர்களில் நால்வர் பெண்கள். அதிலும் இருவர் கர்ப்பிணிகள். சில நாட்கள் கழித்து, அவர்களின் உறவினர்களுக்கு ‘டெலிகிராம் செயலி’ என்ற மொபைல் அப்ளிகேஷனில் குறுந்தகவல் வந்தது. தாங்கள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதாகவும், இஸ்லாமிய நாடு ஒன்றில் இருப்பதாகவும், தங்களை யாரும் தேட வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அதுகுறித்து காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த குறுந்தகவல் சில நிமிடங்களில் தானாகவே அழியும் வகையில் அனுப்பப்பட்டிருந்தது.

ஹபுசுதீன், இஜாஸ், ஷிகாஸ், ரசீத் உள்ளிட்ட அந்தக் குழுவினரில் பலரும் உயர் படிப்பு படித்தவர்கள். ஐ.எஸ். பயங்கரவாதம் மீது ஆர்வம் கொண்டு அவர்கள் சிரியா அல்லது அதன் ஏதோ ஒரு அண்டை நாட்டுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேரள சட்டசபையில் விவாதம் (ஜூலை 9) எழுந்தபோது, இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாநில முதல்வர் பினறாயி விஜயன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாயமான இஸ்லாமியக் குழுவினர் பல ஆண்டுகளாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெலியுலகத் தொடர்பு வைத்திருந்ததும், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மூளைச்சலவைக்கு அவர்கள் பலிகடா ஆனதும் தெரியவந்தது. ஆனால், இதை மூடி மறைக்கவே கேரள அரசு முயல்கிறது.

ஏற்கனவே, கேரளத்தைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ். அமைப்பில் அங்கம் வகித்த செய்திகள் உள்ளன. இஸ்லாமிய அகிலம் என்ற கனவுடன் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதன் கொடிய விளைவு இது. இதனை நமது மதச்சார்பற்ற வியாதியஸ்தர்கள் எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர் தான் திருப்பூரில் பிடிபட்டார்களோ என்ற சந்தேகமே, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர்கள், குடும்பத்துடன் கோபித்துக்கொண்டு வேலை தேடி திருப்பூர் வந்த அப்பாவி இளைஞர்கள் தான் என்று கூறி, அவர்களை பாலக்காட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்து, வழக்கை முடித்துக் கொண்டுவிட்டனர் உள்ளூர் காவல்துறையினர்.

இப்படித்தான், 1991-இல் திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய திருவிளக்கு பூஜையின்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில், ஆயுதத்துடன் நடமாடிய இஸ்லாமிய இளைஞனை இ.மு. தொண்டர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவன் மனநிலை பிறழ்ந்தவன் என்று கூறி, அவனை எதுவும் விசாரிக்காமலே (கையூட்டு பெற்றுக்கொண்டு?) விடுவித்தனர் திருப்பூர் தெற்கு காவல்நிலைய போலீஸார். பின்னாளில், அவன்தான் 1993-இல், 11 பேர் உயிரிழக்கக் காரணமான சென்னை ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலக குண்டுவெடிப்பை நிகழ்த்தினான். அவனது பெயர் இமாம் அலி. பிறகு அவனை தமிழக காவல்துறை மிகவும் சிரமப்பட்டு பெங்களூரில் தேடிக் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றது. அதேபோல இப்போதும் நிக்ழ்ந்துவிடக் கூடாது.

தமிழகத்துக்கு எச்சரிக்கை:

tamilnadu_isis
ஐ.எஸ். பெருமிதத்துடன் ராமநாதபுரம் இஸ்லாமிய இளைஞர்கள்.

கேரளத்திலிருந்து 21 பேர் ஐ.எஸ். அமைப்பில் சேரச் சென்றிருப்பது தமிழகத்துக்கு ஓர் எச்சரிக்கையாகும். ஏனெனில் முதன்முதலில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக அச்சிடப்பட்ட பனியன்களை  திருப்பூரில் தயாரித்தனர். அதை அப்படியே கண்டுகொள்ளாமல் கைகழுவியது காவல்துறை.

கேரளத்தில் அப்துல் நாஸர் மதானி நடத்திய  ‘ஐ.எஸ்.எஸ்.’ அமைப்பின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாகவே உண்டு. அதன் நீட்சியாகவே அல் உம்மா கோவையில் 1998-இல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி 60-க்கு மேற்பட்டோரைக் கொன்றது. கேரளம் செல்லும் ரயிலில் 1997 டிச. 6-இல் நடந்த குண்டுவெடிப்புகளும் கேரள- தமிழக மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூட்டணியை அம்பலப்படுத்தின.

தவிர, தமிழகத்தில் உள்ள இந்து இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். அதிலும் கேரள இஸ்லாமிய அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது. சில கோயில் கொள்ளைகளிலும், சிலை உடைப்புகளிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பின்புலம் தெரிய வந்துள்ளது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக த்மிழக அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள், பயங்கரவாதிகளையோ, அவர்களை ஆதரிப்பவர்களையோ கண்டும் காணாமல் உள்ளனர்.

தொழில் நகரமான கோவை 1998 குண்டு வெடிப்புகள், தொடர்கொலைகளுக்குப் பிறகு இப்போதுதான் இயல்பு நிலைக்கு மீண்டுள்ளது. அடுத்து பயங்கரவாதிகளின் இலக்கு, பல்லாயிரம் கோடி அந்நியச் செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தரும் பின்னலாடை ஏற்றுமதித் தொழில் நகரமான திருப்பூர் மீது திரும்பி உள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு, இதனை சாதாரண விஷயமாகக் கருதாமல், உண்மையான ஈடுபாட்டுடன் உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம்.

முகநூல் வாயிலாக ஐ.எஸ். அமைப்புடன் பல ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்த மொஸிருதீனைப் பிடிக்க இத்தனை காலம் ஆகியிருக்கிறது என்பது, நமது காவல்துறையின் பலவீனமாகும். இப்போதும்கூட, மத்தியில் பாஜக ஆட்சியில் இல்லாது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், என்.ஐ.ஏ. இத்தனை வேகமாகச் செயல்பட்டிருக்காது என்பது உண்மை.

சிரியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் மொஸிருதீன் நீண்டகாலமாக தொடர்பில் இருந்துள்ளார். உள்ளூர் இஸ்லாமியர்களுக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது. ஆடிட்டர் ரமேஷ் கொலையில் கைதான பயங்கரவாதி பன்னா இஸ்மாயில் திருப்பூரில் சில நாட்கள் பதுங்கி இருந்ததும், அங்குள்ள மசூதிக்கு வந்து சென்றதும் புலன்விசாரணையில் தெரிய வந்ததை மறந்துவிடக் கூடாது.

தற்போதும், முகநூலில் தேச விரோதப் பிரசாரங்களும், இந்து எதிர்ப்பு என்ற பெயரில் வக்கிரமான கொக்கரிப்புகளும், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றன. மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் அதை திசைதிருப்ப முயலும் சக்திகள் அப்பட்டமாகவே தங்களை அடையாளம் காட்டிக்கொள்கின்றன. எனவே முகநூல் பதிவுகளையும் காவல்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 .

5 Replies to “அண்டிவரும் ஐ.எஸ். அபாயம்”

  1. அந்நிய மதத்தைப் போற்றி ஹிந்து மதத்தை தூற்றி போலி ‘மத சார்பற்ற’அரசாட்சி செய்யும் ஆட்சியாளர்கள் தங்கள் காவல் துறைக்கு அந்நிய மத பயங்கர வாதிகளுக்கு சலாம் அடித்து விட்டுவிடுங்கள், அப்பாவி ஹிந்துவுக்கு இம்சை கொடுங்கள் என்று எழுதப்படாத உத்திரவு போட்டுள்ளார்கள் போலும். நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று மக்கள் நினப்பதற்காக கைது செய்வார்கள் பிறகு போதிய ஆதாரம் இல்லை என்று விட்டு விடுவார்கள்.

    உண்மையான மத சார்பற்ற ஆட்சி செய்ய கடுமையான மதமாற்ற தடை சட்டம் இயற்றபடவேண்டும். அதை செய்ய அரசியல் புரட்சி தேவை. அதற்க்கு சாமி விவேகானந்தர் வேண்டியதுபோல் இளைஞர்கள் முன் வரவேண்டும். தேவை அமைதியான அரசியல் புரட்சி.

  2. தமிழகம் முழுவதும் அறிய வேண்டிய தகவல்கள் இந்த கட்டுரையில் உள்ளது. பிற பத்திாிகைகளில் வெளியிட ஆவன செயயலாம்

  3. The effect of terrorism by ISIS has already come to India, especially to TN. With ever growing corruption , the spread of these forces will be manifold.easily. Co ordinated action by all including Muslims ( more than 90% of them oppose ISIS) is the need of the hour.

  4. Mr.Dhanasekaran is correct. ISIS terrorism has set its foot in our land. Though 90% of the Muslims are against ISIS, all politicians including Muslim political parties will be silent spectators of the events with selfish motive to bank votes. If any person or any small Hindu parties raise their voice they will be branded as saffron terrorist.

  5. Dear Concern,

    I’m very much pressurized to hear such news. Firstof all please note, the main crimes are being staged by the out state persons. Because while comparing Tamil Nadu, no law and order is being strictply followed by other north states. So, the culprits came from there never care and never fear about the local crimes. they simply organize their crimes in Tamil Nadu and gone away to their respective native places. So, each and every other state labors and other should be carefully monitored by the police. Besides, the brokers who is bringing such persons, should be keep a record about the group of labors. Each and every brokers and agents should be in full response who ever they bring here. Above all, a strict law shold be framed like Saudi country. Here if one be killed by one, one will be in death sentence, who killed the one. Lot of safety for ladies in this holy country.
    Even if I’m a Hindu, I love the rules of the king in this kingdom.
    So, it should be severly condoled such terrerism.

    Rgd
    Venkat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *