முகப்பு » அரசியல், சமூகம், பிறமதங்கள்

மதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது


மூலம்: துஃபாயில் அகமது Indiafacts.org தளத்தில் எழுதிய கட்டுரை

தமிழில்: ர.ஹரிபிரசாத்

ஒவ்வொரு வருஷமும் மழைக்காலத்தில் தவளைகள் வெளிவந்து எதையோ சத்தமாக சொல்ல முயற்சிக்கும். அவ்விதமாக, தேர்தல் சமயங்களிலும் சில தவளைகள் இந்தியாவில் பிரகடனபடுத்தும் : “இஸ்லாமியர்களின் வாக்குகள் மதச்சார்பற்றவை; ஹிந்துக்களின் வாக்குகள் வகுப்புவாதம் நிறைந்தவை;” “இந்தியா வாழ்க; அரசியல் சாசனம் வாழ்க.” ஜாமியத்-இ-இஸ்லாமி ஹிந்த், அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம், ஜாமியத் உல்மா-இ- ஹிந்த் ஆகிய அமைப்புகள்தான் இப்போது அரசியல் சாசனத்துக்காக வாதிடுபவர்கள். அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் அல்ல. கடந்த ஒரு வருஷத்தில் ”அரசியல் சாசனத்தை காத்திடுங்கள், மதத்தை காத்திடுங்கள்” என்ற தலைப்பில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை, இஸ்லாம் ஆபத்தில் இருந்தால், அரசியல் சாசனமும் ஆபத்தில் இருக்கிறது என்று பொருள்.  இஸ்லாமும் அரசியல் சாசனமும் அவர்களுக்கு வெவ்வேறல்ல.

பிப்ரவரி 10 அன்று வெளிவந்த ‘ரோஸ்னாமா இன்குலாப்’ என்ற உருது தினசரி இப்படியொரு தலைப்பு செய்தியை வெளியிட்டிருந்தது – “உத்தர பிரதேச தேர்தல் முஸ்லிம்களுக்கான பரீட்சை”. ஒருவேளை  ”உ.பி. தேர்தல் ஹிந்துக்களுக்கான பரீட்சை ” என்று ஹிந்தி பத்திரிகைகள் ஏதேனும் செய்தி வெளியிட்டிருந்தால், அரசாங்கம் அப்பத்திரிகைகளை தடைகூட செய்திருக்கலாம். நீங்கள் கட்டாயம் அப்பத்திரிகைகளுக்கு வகுப்புவாத முத்திரை குத்தியிருப்பீர்கள். ஆனால் இதே வேலையை உருது தினசரிகள் செய்யும்போது, அவை மதச்சார்பற்றவை என்று நினைக்கிறீர்கள். ஏனென்றால், உங்கள் மனம் ஒரு சிந்தாந்தத்தின் நரம்புகளால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த சிந்தாந்தத்துக்கு இந்தியாவில் “மதச்சார்பின்மை” என்று பெயர்.

மதச்சார்பின்மை இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. செக்யூலரிஸம் எனப்படும் மதச்சார்பின்மை இந்தியாவின் ஆத்மாவை அழிக்கிறது என்று ஒவ்வொரு அரசியல்வாதி, பத்திரிகையாளர், காவல்துறை அதிகாரி,  ஆன்மித் தலைவருக்கும்  தெரியும். ஆனால் எல்லாம் சரியாக இருப்பது போல எல்லோரும் நடிக்கிறார்கள். போலீஸ்காரர்கள் மதச்சார்பின்மையை சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கான வழிகாட்டிக் கையேடாகவே பார்க்கிறார்கள்.  இஸ்லாமிய இறைத்தூதர் குறித்து ஏதோ கூறினார் என்பதற்காக கமலேஷ் திவாரியை காவல்துறை கைது செய்தது. ஆனால், கமலேஷ் திவாரியின் தலையை சிறைக்குள்ளோ, வெளியிலோ சீவுகிறவர்களுக்கு 51 லட்சம் பரிசு அறிவித்த பிஜ்னோரின் இஸ்லாமிய குருமார்களை தொடக்கூட காவல்துறைக்கு துணிவில்லை. மதச்சார்பின்மை இப்போது இந்தியாவின் தேசிய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. எல்லோரும் பங்கேற்கிறார்கள், நடிக்கிறார்கள், கைத்தட்டுகிறார்கள், யதார்த்தத்திற்கு முன் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

ஆனால், யதார்த்தம் வலிமையானது. அதுதான் மக்களின் மனங்களைக் கட்டுப்படுத்துகிறது. ’உருது டைம்ஸ்’ பத்திரிகையில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியான கட்டுரையில் செக்யூலரிஸத்தை ஒரு சுவாரஸ்யமான உதாரணத்துடன் விளக்குகிறார் எழுத்தாளர் முஹமது ஜசீமுதீன் நிஜாமி.  ஒரு திருடன்  குளித்துவிட்டு சுத்தபத்தமாக  பயபக்தியுடன் ராத்திரியில் கோவிலுக்குள் நுழைகிறான். அவனுடைய உண்மையான  நோக்கம் கோயிலில் உள்ள தெய்வ விக்ரஹங்களைக் கொள்ளையடிப்பது. காலடித்தடம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, வேறொருவன் செருப்புடன் கோவிலுக்குள் நுழைந்ததை காண்கிறான். உடனே திருடன் எச்சரிக்கிறான் – “நான் மட்டும் இப்போது வேலையில் மும்முரமாக இல்லாதிருந்தால், ஆலயத்தை அவமதித்தற்காக உன்னை தண்டித்திருப்பேன்!” அந்த திருடன் மதச்சார்பற்றவன். இதுதான் இந்திய சமூகத்தின் யதார்த்தநிலை.  இப்படித் தான் மதச்சார்பின்மை என்ற சிந்தாந்தம் திருடர்களால் தூக்கிப் பிடிக்கப்படுகிறது.

இப்போது மதச்சார்பின்மை உயிர் பிழைத்திருப்பதற்கான அத்தியாவசிய காரணியாக தலித்-முஸ்லிம் ஒற்றுமை பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் 21ஆம் தேதி, மும்பையில் நடந்த ஒரு கருத்தரங்கில், இஸ்லாமிய குரு மவுலானா கலீலூர் ரஹ்மான் நோமானி, தலித் தலைவர் வாமன் மேஷராமுடன் இணைந்து பொது சிவில் சட்டத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்தார். 1986ல் ஷா பானோ வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கே எதிராக மதச்சார்பின்மை எழுந்து நின்றது.  பிப்ரவரி 6ல் வெளிவந்த உருது தினசரி ‘ரோஸ்னா சஹாஃபத்’ தற்போதைய மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கான தேசிய கமிஷனின் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான நீதியரசர் சுஹைல் சித்திக்கியை மேற்கோள் காட்டுகிறது : “முஸ்லிம்கள் தலித்களுடன் இணைந்து தங்கள் பிரச்சனைகளுக்கு வழி தேடுவது தான் தற்போதைய உடனடித்தேவை.” சித்திக்கி தற்பெருமையுடன் சொல்கிறார், “எந்தப் பத்திரிகைக்கும் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் நூற்றுக்கணக்கான சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மைனாரிட்டி அந்தஸ்தை நான்  அளித்துள்ளேன்.”

பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான ‘ரோஸ்னா சஹாஃபத்’ பத்திரிகையில் சூஃபி மதத்தலைவர் சையது ஆலம்கீர் அராஃபத் சில கசப்பான உண்மைகளை தெரிவிக்கிறார். “இனம், நிறம் மற்றும் மதத்தின் அடிப்படையில் தேர்தல் நடக்கக்கூடாது என்பது இந்திய சமூகத்தின், இந்த தேசத்துடைய ஜனநாயகத்தின் சாராம்சம். ஆனாலும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் ஆபத்தில் இருக்கும். ஹிந்துக்களும் கஷ்டத்தில் இருப்பார்கள். தேர்தல் மட்டுமே முஸ்லிம்களின் இஸ்லாமை காக்கிறது. ஹிந்துக்களையும் ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது.” தலித் முஸ்லிம் ஒற்றுமை பற்றி அவர் சொல்கிறார் : “இப்படியொரு கூட்டணி உண்மை, நீதி, முன்னேற்றம் மற்றும் மனிதநேயத்தின் வெற்றிக்காக இருக்க வேண்டும். தனியொரு மனிதரோ, கட்சியோ வெல்வதற்காக இருக்க கூடாது.”

மதச்சார்பின்மை என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று, சமூகத்திலிருந்து மதத்தின் அதீத செல்வாக்கை நீக்குவதற்கான இயக்கம். இந்த அர்த்தத்தில், மதச்சார்பின்மை மதம் சார்ந்த ஆசாரவாதத்தைக் மட்டுப்படுத்துகிறது. தனிநபர்களை மத சங்கிலிகளிலிருந்து விடுவிக்கிறது. மக்கள் பகுத்தறிவுடன் வாழ வழிவகை செய்கிறது. இரண்டாவது,  நமதுஅரசியல் சாசனத்தில் உள்ள  அர்த்தம்.  இதன்படி,  இந்திய அரசின் எந்தக் கொள்கை வகுத்தல்களும் மதத்தைச் சார்ந்து இருக்காது.  இந்த இரண்டு அர்த்தங்களிலிருந்தும் நீங்கள் உடன்படாமலிருக்க முடியாது. ஆனால் இந்தியச் சூழலில் மதச்சார்பின்மைக்கு மூன்றாவது அர்த்தம் ஒன்றும் உண்டு. நடைமுறை அர்த்தத்தில், சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதிலும் மதச்சார்பின்மை செல்வாக்கு செலுத்துகிறது.  கொள்கைவகுப்போர், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என்று பலரது எண்ணங்களிலும்  அது ஆதிக்கம் செலுத்துகிறது.

நடைமுறை அர்த்தத்தில், மதச்சார்பின்மை தேசிய பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக எழுத்துள்ளது. என்னுடைய பேரக்குழந்தைகளின் தலைமுறைக்கு சொல்ல ஒரு விஷயம் என்னிடம் உண்டு. உங்கள் காலத்தில்  கேரளா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்து  ஹிந்துக்கள் முற்றிலுமாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை மதச்சார்பின்மை உருவாக்கும்  – காஷ்மீரீலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது போல. நான் இதை எழுதும்போது, 1986ல் உச்சநீதிமன்றத்துக்கு எதிராக எழுந்தது போல், இப்போது மேற்கு வங்கத்தில் மதச்சார்பின்மை எழுந்துள்ளது. ஷா பானோ வழக்கில்  மதச்சார்பின்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த தீர்மானத்தையே ஒதுக்கித்தள்ளி மேலெழுந்தது.  இப்போது, தங்களை மதச்சார்பின்மை காவலர்கள் என்று அறிவித்துக்கொள்பவர்கள் காவல்துறையினரை குண்டர்களை போல் நடத்துகிறார்கள் என்று மால்டாவிலிருந்தும், பிற மேற்குவங்க பகுதிகளிலிருந்தும் செய்திகள் வருகின்றன. அரசாங்கத்திடம் மதச்சார்பின்மைக்கு எந்த தீர்வும் இல்லை. கறையான்களைப் போல, மதச்சார்பின்மை என்னும் கிருமி இந்தியக் குடியரசின் வேர்களைத் தின்று கொண்டிருக்கிறது , தேர்தல் சமயங்களில் இன்னும் தீவிரமாக.

கட்டுரையாசிரியர் துஃபாயில் அகமது (Tufail Ahmad) பீகாரைச் சேர்ந்தவர். பிபிசியில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்.  தற்போது புது தில்லியில் Open Source Initiative என்ற ஊடக அமைப்பின் இயக்குனராக இருக்கிறார்.  இஸ்லாமிய பயங்கரவாதத்தை இந்திய முஸ்லிம்கள் முனைந்து கட்டுப்படுத்தவேண்டிய வழிமுறைகள் குறித்து Jihadist Threat to India – The Case for Islamic Reformation by an Indian Muslim என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

 

14 மறுமொழிகள் மதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது

 1. vedamgopal on March 10, 2017 at 3:03 pm

  The Indian concept of Secularism is full of contradictions and therefore is unable to provide a clear, un-ambiguous guidelines either to the individual or to the state.

  நமது பாரதத்தின் மதசார்பின்மை என்ற கருத்து முழுவதுமாக முரண்பாடுகள் நிறைந்தது அதனால் இந்த கருத்தாங்கம் தெளிவான குழப்பங்கள் இல்லாத வழிகாட்டுதல் எதையுமே ஒரு தனி நபருக்கோ, மாநிலத்திற்கோ ஏன் தேசத்திற்கே அளிக்கவில்லை, விளங்கவும் இல்லை.

 2. vedamgopal on March 10, 2017 at 3:31 pm

  மோடிக்கு ஒட்டுமொத்த ஹிந்துக்களும் ஆதரவு அளித்து பதவியில் அமர்த்தியதற்கான பல காரணங்களில் ஹிந்துகளுக்கு மிகவும் முக்கியமானது

  1. செக்யூலரிசம் என்பது உண்மையை மறைக்க போடும் புர்கா வேஷம் ! ?
  2. சிறுபான்மை பெரும்பான்மை என்பதும் – செக்யூலரிசம் என்பதும் ஒரு ஓட்டுவங்கி
  அரசியல்
  3. நான் ஒரு ஹிந்து தேசியவாதி

  (Justice for all and appeasement of none, minimum government and maximum governence – Making a distinction of Majority and Minority is nothing but vote bank politics)

  மோடி பதவி ஏற்று ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பதவி ஏற்கும்முன் மேலே சொன்னதை அடிக்கடி பல பொதுகூட்டங்களில் சொல்லியுள்ளார் ஆனால் அதை நடைமுறையில் இன்றுவரை வெளிபடுத்தவில்லை என்பது போலி மதசார்பின்மை என்ற போர்வையை காங்கிரஸ் இடம் பெற்று தானும் போற்றிக்கொண்டு சுற்றுகிறார் என்பது மதசார்பின்மைக்கும் ஹிந்துகளுக்கும் பெரும் ஏமாற்றம். இந்த முறை பட்ஜெட்டில் சிறுபான்மையினரின் பங்கு காங்கிரஸ் ஒதிக்கிய தொகையை காட்டிலும் பன் மடங்க அதிகம். சலுகைகள் தொடர்ந்தால் சிறுபான்மையினரின் திமிர் காங்கிரஸ் ஆட்சியில் துளிர்விட்டு செடியாகி மரமாகி வேர்ஊன்றியது மேலும் பல்கி பரவினால் ஹிந்துகள் அன்னியற்களாக ஆக்கபடுவார்கள் என்ற ஆபத்து காத்திருக்கிறது ?

 3. BSV on March 11, 2017 at 1:49 pm

  //The Indian concept of Secularism is full of contradictions and therefore is unable to provide a clear, un-ambiguous guidelines either to the individual or to the state.//

  It is there in the Constitution.

  Like God and Man. God gave him a fine earth; but man damaged it.

  Likewise, the Constitution gave a clear unambiguous secular concept of nation.

  We have just walked over the Constitution and created our own definition of secularism.

  That is called political expediency in Political Science. It is impossible to stop politicians do things on such expediencies, for immediate gains for e.g. seeking votes by appealing to religion and caste i.e. in other words, a clear pot-shot on secular concept.

  I expect from you a well thought-out analytical response. Not a few emotional sentences.

 4. Manuneethi on March 11, 2017 at 3:16 pm

  சரிதான், சாரசரி இந்திய மக்களிடைய இருக்கும் மதநம்பிக்கை என்பது நாக்கின் நுனியளவில் தான். ஆனால் இன்று கவனிக்க வேண்டியது, சர்வதேச அளவில் மிகத்தீவிரமாக பரவி வரும் மதவாதத்தைதான். இன்று வெவ்வேறு மதத்தை பின்பற்றும் பலரிடம் இருந்து அவர்களின் கைபேசியை பரிசோதித்து பார்க்க வேண்டும். அதில் அந்த குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர் அனைவரும் வைத்திருக்கும் மதச்சார்ந்த வீடியோ பேச்சுக்கள், விசயங்களை ஆராய்ந்து பார்த்தால் யார் தீவிர மதவாதிகள், அவர்களின் தீவிரம் லட்சியம் என்னவென்று புரிந்து விடும்.

  “நான்குபுற கல் சுவற்றுக்குள், வாரம் ஒருமுறை உட்கார்ந்து குனிந்து எம்மை வணங்கும் போது, உங்கள் பாவங்களை கெட்ட அசுத்த காற்றாக, உங்களின் பின்புறம் வழியாக வெளியேற்றி விடுகிறோம். புர்ர்ர்..டர்ர்..டமால்… இப்படியாக எல்லாம் வல்ல நாம் உங்கள் பாவங்களை மன்னித்தோம். உடனே சொர்க்கலோக கனவில் மிதக்கும் முட்டாள்கள் சிலர் எம்மை நோக்கி கேள்வி எழுப்பக் கூடும். நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று. அப்போது நாம் சொல்வோம், எம்மை மட்டுமே தொடர்ந்து குனிந்து வணங்கி வரும் நீங்கள், மற்ற மனிதர்களை போல் அல்லாமல், கூடுதலாக குறைந்தது 2000 வயது வரையாவது உயிருடன் இருக்கலாமே. எம்மை வணங்கியும் கூட ஏன் மற்ற மனிதர்களைபோலவே துன்பத்தையும், வேதனையும் அனுபவித்து, அவர்களை போலவே சீக்கிரம் மரணித்தும் விடுகிறிர்கள். எம்மை வணங்கியும் எந்த வித்தியாசமும் காண முடியவில்லையே உங்களிடம்.
  why? …
  feel சொர்க்கம்…
  how?…

  “இல்லாத ஊருக்கு என்னென்ன பெயரோ… நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ.”

  “மதத்தீவிரவாதிகள் தானாக திருந்தினால்தான் உண்டு. மற்றபடி சொல்வதற்கு எதுவுமில்லை எம்மிடம்.”

 5. Mariappan on March 12, 2017 at 10:44 am

  I remember several bjp leaders promising the Hindus to give education scholarships to the Hindus as given to the Muslims but nothing has happened until now.Its really painful that this promise has not been approved.Those who are in close touch with bjp leaders must emphasise it and get it done.

 6. Mariappan on March 12, 2017 at 10:47 am

  If bjp is more concerned of Hindus they must implement this first otherwise Hindus will not trust the bjp govt in the future

 7. vedamgopal on March 15, 2017 at 2:29 pm

  Mr.BSV
  // It is there in the Constitution. // Where ?????????
  // Like God and Man. God gave him a fine earth; but man damaged it. // There is no connection between GOD and Constitution. Costitution is man made policy – பாரினில் இயற்கை படைத்ததை எல்லாம் பாவி மனிதன் பிரித்து வைத்தான் என்பது பாமரனுக்கும் தெரியும் உண்மை.
  // Likewise, the Constitution gave a clear unambiguous secular concept of nation. // The Magic word “SECULAR” was not mentioned in our constitution. Secularism in India means equal treatment of all religions by the state. With the 42nd Amendment of the Constitution of India enacted in 1976, the Preamble to the Constitution asserted that India is a secular nation. However, neither India’s constitution nor its laws define the relationship between religion and state. So it is by true sense ambigous only

 8. vedamgopal on March 15, 2017 at 2:31 pm

  1950 இல் அரசியல் அமைப்ப சட்டத்தில்(Sovereign Democratic Republic) என்று இருந்ததை 1976 இல் இந்திராகாந்தி தனது அரசியல் ஆதாயத்திற்காக (Sovereign Socialist Secular Democratic Repbuplic) என்று மாற்றினார். ஆனால் நமது பாரதம் ஆரம்ப காலத்திலிருந்தே மதசார்பற்ற நாடாகதான் இருந்து வந்திருக்கிறது. இங்கே பல வேற்று மதங்கள் தோன்ற இடம் அளித்ததோடு விதேசி மதங்களுக்கும் அடைக்கலம் அளித்து அவர்கள் அதை பாதுகாக்கவும், வழிபாட்டுதலங்கள் கட்டுவதற்கு இடமும், பணமும் அளித்து ஆதரித்துள்ளது. எனவே உலகறிந்த மதசாற்பற்ற நாடான பாரதத்தை சட்டத்தின் மூலம் மதசார்பற்ற நாடு என பிரகடனபடுத்த தேவையேயில்லை. அதுவும் மதசாற்பற்ற (Secular) என்றால் என்ன என்று விளக்காமலும் என்ன என்று புரிந்து கொள்ளாமலும் முட்டாள்தனமான சட்டம் பின் கதவு வழியாக போடப்பட்டது.

  மதசார்பற்ற என்றால் எந்தமதத்தையும் சாராமல் எல்லா மதங்களையும் ஒன்றுபோல் பாவித்து அரசு தன் மத தலையீடுகளின் எல்லையை உணர்ந்து எல்லா மதங்களையும் பாதுகாத்து ஜனசமூகத்தில் ஒற்றுமை நிலவ செய்வதே ஆகும். ஆனால் என்று இந்த சட்டம் வந்ததோ அன்றிலிருந்து மதசார்பற்ற என்றால், ஹிந்து மதத்தை தவிர்த்து மற்ற மதங்களை போஷிப்பதுதான் செக்யூலரிசம் என்றும், எவராவது ஹிந்து மதத்தைப் பற்றி உயர்வாக பேசினாலோ அதன் கொள்கைகளை ஆதரித்தாலோ, அவர்கள் எல்லாம் கம்யூனல் வியாதிகள் என்றும், ஹிந்து மதத்தின் மூடபழக்கங்களை கேலி செய்தும், சிறுபான்மை மதங்களின் மூடபழக்கங்களை கண்டுகொள்ளாமலும், அவர்களது புனிதவிழாக்களில் மட்டும் அவர்களது மதசின்னங்களை அணிந்துகொண்டு, எச்சில் கஞ்சிக்கும், கேக் சாப்பிடவும் கலந்துகொள்வதுதான் மதசார்பின்மை என்ற, கேவலமான அரசியல் இந்தநாட்டில் தான் நடந்துகொண்டிருக்கிறது..

  உலகில் செக்யூலர் ஸ்டேட் என்று பிரகடனபடுத்திய எல்லா நாடுகளும் தனது நாட்டின் பெருன்பான்மை மதத்தை ஸ்டேட் ரிலிசன் என்று அறிவித்து அதை விஷேஷமாக போஷிக்கிறது மேலும் அங்கெல்லாம் மத அடிப்படையில் சிறுபான்மையினர் என்ற பிரிவும் இல்லை. ஆனால் விதிவசமாக விசித்திரமாக நமது பாரதத்தில் மட்டும் செக்யூலர் என்று அறிவித்து பெருன்பான்மையான மதத்தை ஸ்டேட் ரிலிசன் என்று அறிவிக்காமல் ஓட்டு பொறுக்குவதற்காக மத சிறுபான்மையினர் என்று பிரித்து அவர்களுக்கு விஷேஷ சலுகைகள் அளிக்கும் கேடுகெட்ட செயல் நடந்து கொண்டிருக்கிறது.
  இதன் தொடர்சியாக மேலும் பாரத அரசு ஒரு சட்டத்தை அதாவது (National Commission for Minority Act 1992 ) என்பதை ” Minorities – இங்கேயும் சிறுபான்மையினர்” என்றால் என்ன என்ற விளக்கம் அளிக்காமல் மத அடிப்படையி்ல் இஸ்லாமியர், கிருஸ்துவர், சீக்கியர், பௌதர்கள் மற்றும் பாரசீகர்களை சிறுபான்மையினர் என்று அறிவித்துள்ளது.

  ஆனால் நமது அரசியல் அமைப்பு சட்டம் ஆர்டிகில் 15 (1) சொல்வது என்னவென்றால் ( The State Shall not discriminate against any citizens on the grounds only of relligion, race, cast, sex, place of birth or any of them ) ஓரு மாநில மக்களை மதம், இனம், ஜாதி, பால், பிறந்த இடத்தின் அடிப்படையில் பிரிவுபடுத்தகூடாது என்று வலியுறுத்தியுள்ளபடியால், மத அடிப்படை சிறுபான்மை என்பது சட்ட விரோதமானது. எனவே இந்த சட்டம் (NCM Act 1992) அரசியல் சாசனப்படி செல்லுபடியாகாது.

 9. க்ருஷ்ணகுமார் on March 16, 2017 at 11:54 am

  \\ It is there in the Constitution. \\

  Oh!!!!!!!!!!!! How holy then it should be!!!! is it not?

  But from when it was incorporated? Is it in the constitution that was drafted by Babasaheb Ambedkar?………. did that include this clause?

  nope!!!!!!!!!!!!

  Then when ………. under what circumstances…….and by whom it was ****loaded**** into it ……..

  This **undefined**……..**widely misinterpreted concept**…….. was ****inserted**** into the constitution……… as The Constitution (Forty-second amendment) Act, 1976…….during emergency…….

  The tail ***secularism*** has a head too…….. ***Socialist****

  That’s a brief narrative of this vichitra jantu **socialist secular** which entered the constitution through a side window.

  There is nothing so holy about the insertion of this **cunning** phrase **inserted** into the constitution. And it is history that this phrase was inserted into the constitution during one of the worst dictatorial regimes in the history of Hindustan with lot of ill intentions. The acts of Anti National Congress speak volumes about its intentions about the insertion of this so unholy and cunning phrase.

  Hope this much would suffice regarding constitutional mumbo jumbo.

  unbiased and compassionate treatment of various schools of thoughts is a well enshrined principle under vaidika sanatana dharma.

  And before ever the people of Hindustan were even introduced to the so called secularism……the existing broad *****Hindu Mind*** of hindustanis and hindu samskruti…….. demanded them to give shelter to zorastrians who were driven out by Islamic Terrorists from Iran and to jews who were hounded through out the world by Islamic and Christian terrorists.

  And today this so called secular nonsense is a tool in the hands of separatists, anti national elements hell bent to break the country and in the hands of jihadi elements and agents of white church for their unholy intentions.

 10. vedamgopal on March 17, 2017 at 6:56 pm

  தமிழ் நாட்டின் சமூக காப்பாளர் பொன்னார் மேனியன் என்று வாரி அணைத்து கொண்டுள்ள திராவிட வியாதிகளின் கவனத்திற்கு. பல சிவன் கோவில் முன் இந்த போலி பொன்னார் மேனியனுக்கு (கோவில் வாசலில் எல்லாம் அமர்ந்திருக்கும் பிச்கைகாரர்கள் போல் ) சிலை வைத்து பூஜிக்கும் கழக கண்மணிகளின் பார்வைக்கு ஆசான் சொன்ன அறிவுரை –

  மைனாரிடிகளை போட்டுத் தாக்கிய பெரியார் !!! ( அகடவிகட அக்கப் போர் – 15.11.2013)
  கீழே கொடுத்திருப்பது 6.3.1962 நாளிட்ட விடுதலை இதழில் ”பெரியார்” என்று கருணாநிதி அழைக்கும் ஈ.வெ.ராமசாமி நாயகர் எமுதிய தலையங்கம். ”நாட்டு லட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிடி சமுதாயம், மைனாரிடி மதம், மைனாரிடி கலாசாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொதுவளர்ச்சிக்கு கேடாக முடியும்.” ”இன்றைய சுதந்திரம் சுதந்திரமே அல்ல. வெள்ளையன் ஆட்சிகால சுதந்திரத்தை விட மோசமான நிலை என்பது சுதந்திர உதயநாள் முதல் எனது கருந்து”. ”இதற்கு உதாரணம் இந்த நாட்டில் இன்று மைனாரிடிகளாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் ஆதிக்கமும் நடப்பு வசதிகளுமே போதுமானதாகும்”

  ”100க்கு 6 வீதம் உள்ள முஸ்லீம்கள் ஒரு கூலி உடலுழைப்பும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் “கண்களுக்கே தென்படக்கூடாது” என்ற நிலையில் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உட்பட ”கோஷா” முறையை இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள். அதே நேரத்தில் நம் ஆண்களும், பெண்களும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள், வேலைக்காரிகளாக இருக்கிறார்கள். இது அவரவர்கள் மத தர்மம், மத ஆசாரம் என்றால் யார் யாருடைய மத தர்மம் யாரை இந்த நிலையில் இழிவுபடுத்துவது என்பதை சிந்தித்தால் தமிழனின் சுதந்திரம் சுயமரியாதை அளவு விளங்கும்.

  நமது நாட்டில் மைனாரிட்டிகள் உரிமை அவர்களது சமய, கலாசாரம், பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே. இன்று நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடையவேண்டியவர்கள் ஆகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும், உரிமையும் துரோகம்- பச்சைத் துரோகம் என்கிற குழந்தைகளைத் தான் ஈனும் ஈன்று வருகிறது. இது இயற்கையான பண்பு. அதனாலேயே நம் நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக் கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். ”

  இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளும் பயன்பட்டு வாழக் காத்துக் கிடக்கிறார்கள்.. ”இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு நாட்டுப்பெருவாசி மக்கள் சமுதாயத்திற்குக் கேடு என்பதை விளக்கவேயாகும் என்று எழுதினார் ஈ.வே.ரா.

 11. vedamgopal on March 17, 2017 at 6:59 pm

  அதைபோல் இந்தியாவின் சமூக காவலர் என்று போற்றப்பட்ட பாபா சாகிப் அம்பேத்கர் சொன்ன அறிவுரை –
  The brotherhood of Islam is not the universal brotherhood of man. It is brotherhood of Muslims for Muslims only. There is a fraternity but its benefit is confined to those within that corporation. For those who are outside the corporation, there is nothing but contempt and enmity.
  இஸ்லாத்தில் சகோதரத்துவம் என்பது, உலகில் அனைத்து ஜனங்களுக்குமான சகோதரத்துவம் அல்ல. அது முஸ்லீம்களுக்கு மட்டுமே இடையே உள்ள சகோதரத்துவம். அது ஒரு தனி கார்பரேஷன் போன்ற கட்டுபாடன அமைப்பு அந்த கார்பரேஷனுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு வெறுப்பை தவிற வேறு எதுவும் கிடையாது.

  Appeasement means buying off the aggressor by convincing at his act of murder, rape, arson and loot against innocent persons who happen for the moment to the victims of his displeasure… the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslim interpret these concessions as a sign of defeatism on the part of the Hindus and the absence of the will to resist. This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards Hitler. This is another malaise, no less acute than the malaise of social stagnation. Appeasement will surely aggravate it.
  அடிப்படைவாதிகளை தாஜா செய்து மனதில் திருப்தியை ஏற்படுத்துவது என்பது காசுகொடுத்து வாங்கி அவர்களது வெறுப்பினால் நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீ வைத்தல் போன்ற கொடுமைகளுக்கு ஆளானவர்களின் மனம் நோகும் படி எதிராளியை சாமாதானப்படுத்துதாகும். சலுகைகள் அளிப்பது என்பது இஸ்லாமியர்களின் அடிப்படைவாதத்தை தீவிரபடுத்துகிறது. இதைவிட மோசம் இப்படி தாஜா செய்வதினால் இஸ்லாமியர்கள் இந்துகளுக்கு எதிர்கும் திராணியில்லை என்ற கேவல எண்ண மனபோக்கால் எள்ளி நகையாடுகிறார்கள். ஹிட்லரின் கொடுமைகளை பலர் மறைமுகமாக ஆதரித்ததால் உலகில் பலதேசங்களை சேர்ந்தவர்கள் செய்வது தெரியாமல் திண்டாடிய நிலையைப்போல் தான் ஹிந்துக்களும் உள்ளனர். தெளிந்த சமூகசூழலை சலுகைகள் என்ற சாக்கடை நீரால் நிரப்பி குழப்பும் செயல்தான், தாஜா செய்வது என்பது. இதனால் தீவிரவாதம் தலைதூக்குமே அன்றி குறையாது.
  BODHI STTVA BAASAHEB AMBEDKAR

 12. c.sugumar on March 20, 2017 at 9:25 pm

  We can read some other article of this author in new age islam web. He is highly national and critical of Arabian imperialists/Jihdists.Islam seeks to Arabianise the whole world. All non-Arab civilisations/culture are treated with contempt and intolerance.Annihilation of Non-muslims is the basic principle of Islam.There are very easy and never hesitate to own it in public.Web new age islam aims to reform Arabian imperialists/Jihadists.Another web IRAIYILLA ISLAM ,anwar sheikh exposes the evil character of Islam. All our readers must read that two Web also.

 13. c.sugumar on March 22, 2017 at 2:45 pm

  Mahiraa Jaan Pasha, the First Muslim Woman to Launch “Bhagvad Gita on Wheelchairs” Across the World

  Mar 17, 2017

  New Delhi [India], Mar 17 (ANI-BusinessWireIndia): Mahiraa Jaan Pasha, the first Muslim Woman to launch “Bhagavad Gita on Wheelchairs” across the globe. This is a unique, first of its kind initiative in the world, to showcase the “Bhagavad Gita” through innovative choreography using Wheelchairs and Crutches.

  The 18 chapters of Bhagavad Gita comprising of 700 verses in Sanskrit, is a

  part of the great epic Mahabharata. In this performance wheelchairs transform into chariot, horses, the crutches transform into bow and arrows, showcasing the ultimate purpose of human life. In this production, one can see the Cultural Equality, Social Inclusion and in the end carry back a message of ‘ Vasudeva Kutumbakam’ meaning the whole world is one family. It reaches beyond the conventional imagination and familiar world of television or film.

  Mahiraa Jaan Pasha, is the dynamic force in discovering, nurturing and showcasing outstanding abilities of Persons with disabilities across the Nation for more than two decades. Trained in Indian classical dance, Mahiraa Jaan Pasha is a creator and a visionary in the arts who sees unity within the diversity of all of her “Miracle On wheels Dance Company’s” artistic endeavours. In India, Mahiraa Jaan Pasha is acclaimed as a pioneer in Inclusive Arts.

  Join hands to spread the message of The Gita, by organising our shows to celebrate the extraordinary abilities of specially abled artists which has transformed millions of lives across the world, which will be a life changing experience for every individual who witnesses it. (ANI-BusinessWireIndia)

  http://www.aninews.in/newsdetail-Mw/MzA0NTgz/mahiraa-jaan-pasha-the-first-muslim-woman-to-launch-bhagavad-gita-on-wheelchairs-across-the-world.html
  – See more at: http://www.newageislam.com/islam,-women-and-feminism/stop-%E2%80%98un-islamic%E2%80%99-divorce-by-social-media,-says-omani-imam/d/110446#sthash.kj9oBdIv.dpuf

 14. c.sugumar on March 22, 2017 at 2:59 pm

  Islam – cruel dimentions

  What if Mahershala Ali visited Pakistan?

  By Kashif Chaudhry

  March 01, 2017

  History was made at the Oscars last night. Mahershala Ali – who identifies as a proud African American Muslim – was crowned “the first Muslim actor” to win an Oscar award. At a time when Muslim Americans are facing a hostile regime and increasing Islamophobia across the country, Mahershala’s win has brought smiles to many in the Muslim community.

  Mahershala Ali, first ever Muslim actor to win an Oscar award

  —–

  Mahershala, a Christian by birth, spoke about his journey to Islam in his SAG award speech a few weeks back, when he said:

  “My mother is an ordained minister. I’m a Muslim… We love each other, the love has grown. And that stuff (different faiths) is minutia — it’s not that important.”

  Despite his extraordinary feat at the Oscars, many prominent Muslim activists refrained from celebrating Mahershala, with some even issuing outright condemnations because of his beliefs. Mahershala also identifies as an Ahmadi, a sect that faces severe persecution at the hands of Sunni supremacists across the Muslim world.

  As I witnessed the spectrum of reactions on social media, I wondered what would happen if the celebrated artist decided to pay Pakistan a visit tomorrow?

  1) In Pakistan, if Mahershala Ali identified himself as a Muslim, he’d be jailed for three years under the Pakistan’s anti-Ahmadi laws (Ordinance XX) introduced by General Zia ul Haq in 1984. Hundreds of Ahmadis have been jailed for their self-identity.

  2) If Mahershala read the Holy Quran in public, he would face the possibility of being arrested for “hurting the sentiment of Muslims” under the same anti-Ahmadi laws. Many Ahmadis have spent years of their lives in jail for this “crime,” including this British doctor who returned to Pakistan to help its poor a few years ago.

  3) If Mahershala said “Salam” to the Prime Minister of Pakistan in a public meeting, a mischievous Mullah could have him arrested for hurting the Muslims of the country and ‘Ummah.’ Ahmadis are banned from using Islamic epithets in Pakistan. My distant uncle Mr. Tahir Mehdi is currently in a high-security prison, charged with using Quranic verses in an Ahmadiyya publication. 82 year old Shakoor Bhai also remains in jail.

  4) Meeting with the Prime Minister? I don’t think so. If Mahershala visits Pakistan, the country’s public officials will likely ignore him, like they ignored Dr. Abdus Salam for his faith and denied him a state funeral. The same officials who received Angelina Jolie with state honours would pretend not to know Mahershala at all. Being associated with an Ahmadi is a huge taboo in Pakistani society. This is why Pakistan’s ambassador to the United Nations, Ms. Maleeha Lodhi had to delete a tweet congratulating Mahershala Ali after his win.

  5) If Mahershala went to pray, and referred to his place of worship as a mosque, he’d potentially risk facing a 3 year sentence and heavy fine again.

  6) If Mahershala made the speech he made at the SAD awards, he’d be accused of blasphemy for referring to himself as a follower of Islam.

  7) If Mahershala decided to say the Adhan (call to prayer) in Lahore one day, he’d again risk a three year jail term under the country’s anti-Ahmadi laws. Many Ahmadis have been jailed for saying the call to prayer.

  8) If Mahershala recited the Islamic Kalima, proclaiming the oneness of God and truth of Prophet Muhammad (pbuh), the law could potentially spring into action again. He’d be accused of hurting Muslim sentiment and be jailed and fined. Three of my uncles went to jail for this “crime” in the 1980s. Numerous Ahmadi ‘places of worship’ have had the Kalima effaced by state authorities since then.

  9) If Mahershala said his prayer (Salaat) in public, he’d risk facing a similar prison sentence.

  10) If Mahershala visited Pakistan, the chance that he would return without being declared “worthy of being killed” or “Wajib-Ul-Qatal” in a sermon or religious conference by extremist Sunni clerics is close to zero.

  With all these potential consequences of a potential visit to Pakistan, Mahershaala would probably never want to visit Pakistan. And this is painful. Imagine what it says about our international image when the man dubbed by world media as the “first Muslim actor” to win on Oscar is unable to visit Pakistan because of threats by state laws and constitutional amendments, and rampant religious bigotry.

  It is time we look into ourselves and change track, taking the path where the self-identity, human rights and religious freedom of all peoples is equally honored. In trying to hurt a minority faith community, we have only made a mockery of ourselves on the international stage.

  Hopefully one day Mahershala Ali will find these obstacles a chapter of history, and will be able to visit the beautiful Pakistan that is our mother. Let us all work for that day. Let us work for a pluralistic, tolerant and inclusive Pakistan. Amen.

  Kashif Chaudhry is a physician, writer and human rights activist. He is currently completing his cardiology fellowship in Boston, USA. Kashif is a strong proponent of a tolerant and pluralistic Pakistan, and regularly writes on issues related to Islam, human rights and freedom of conscience.

  Source: nation.com.pk/blogs/01-Mar-2017/what-if-mahershala-ali-visited-pakistan

  URL: http://www.newageislam.com/islam-and-sectarianism/kashif-chaudhry/what-if-mahershala-ali-visited-pakistan?/d/110243
  – See more at: http://www.newageislam.com/islam-and-sectarianism/what-if-mahershala-ali-visited-pakistan?/d/110243#sthash.PW9fBu4F.dpuf

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*