முகப்பு » இலங்கைத் தமிழர், நிகழ்வுகள்

இந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்


இலங்கையில் பெரும்பான்மையாகத் தமிழர்கள் வசிக்கும் வடமாநிலத்தில் திருக்கேதீஸ்வரத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் சாலையில் பாதி தூரத்தில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளம் கிராமமும் அதற்கு மேற்கே தேவன்பிட்டி கிராமமும் உள்ளன.

…இரண்டு கிராமங்களிலும்சேர்த்து 250 தமிழ் இந்துச் சைவக்குடும்பங்களும், 200 கத்தோலிக்கக் கிறித்தவக்குடும்பங்களும் கூட்டுறவுடனும், நல்லிணக்கத்துடனும் வசித்துவந்தனர்.

இந்த நல்லிணக்கத்தைகு குலைக்கும்வகையில் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் வெள்ளங்குளம் கிராமத்தில் பிள்ளையார்கோவிலருகில் ஜனவரி பதினான்காம் தேதி, தமிழர்தம் திருநாளான பொங்கலன்று இரண்டு மீட்டர் உயரமுள்ள சிலுவையை சட்டவிரோதமாக தேவன்பிட்டி கத்தோலிக்கப் பாரிஷ் பாதிரியார் நட்டார்.

மன்னார் மாவட்டத்து அதிகாரிகளின் அனுமதியின்றி இது செய்யப்பட்டதால், ஏப்ரல்15ம் தேதி காலை அடம்பன் பிரதேசச் செயலரிடம் முறையிடப்பட்டது. அன்று மன்னார் திரு. தினேசருடன் சென்று ஆட்காட்டிவெளி பிரதேச சபைச் செயலரிடம் மறவன்புலவு சச்சிதானந்தம் முறையிட்டார். நடவடிக்கை ஏதும் இல்லை.

திடீர்ச் சிலுவையைக் கண்ட இந்து மாணவர் மிரண்டனர். அடுத்து என்ன நடக்குமோ, கிறித்தவ தேவாலயம் இந்துக்கள் நடுவே வந்து விடுமோ, விவிலியத்துடன் இயேசுசபையார் வருவார்களோ என்ற வினாக்கள் முழுக்கமுழுக்க இந்துக்கள் வாழும் வெள்ளாங்குள மக்களிடையே எழுந்தது.

மாநில காவல்துறை இயக்குநரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டும், இந்துசமயக் கலாசார அலுவலர் சேதங்களைக் கண்ணுற்றும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கைதுசெய்யவோ, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவோ எந்தவிதமான முயற்சியுமோ எடுக்கப்படவில்லை…

…மூன்று மாதமாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்தும் சட்டமீறல் சிலுவையை அவர்கள் அகற்றவில்லை. எனவே ஏப்ரல் 23 அன்று வெள்ளாங்குள இந்துக்கள் அச் சிலுவையை அகற்றினார்கள்.

23ம் தேதி நள்ளிரவில் தேவன்பிட்டிக் கிறித்தவ பாதிரியார் தலைமையில் வந்த கத்தோலிக்கர் பிள்ளையார் சிலையை உடைத்தனர். கற்களை வீசி இந்துக்களின் வீடுகளைத் தாக்கினர். 12 வீடுகள் உடைந்தன. பெரிய கல் ஒன்று வீழ்ந்ததால் கைக்குழந்தைக்குப் படுகாயம். முதியவர் பலர் காயமுற்றனர். யாவரும் மருத்துவமனை சென்றனர்.

வௌளாங்குளம் மக்கள் முறையிடக் காவலர் வந்தனர்.

அடுத்தநாள், 25ம் தேதி இரவில் தேவன்பிட்டி கத்தோலிக்கப் பாரிஷ் பாதிரியார், சில குடிகாரர்களுடன் சேர்ந்துகொண்டு, வெள்ளாங்குளத்திலிருக்கும் முனீஸ்வரன் கோவிலையும் இடித்துத் தகர்க்க வந்தார்.  இதையறிந்த இந்துக்கள் ஒன்றுசேர்ந்து கத்தோலிக்கப் பாதிரியாரையும், அவருடன் வந்த குடிகாரக்கும்பலையும் விரட்டியடித்தார்கள்.

25.4.17 இரவு கத்தோலிக்க பாதிரியார் தலைமையில் வந்த குடிபோதைக் குழு

வெள்ளாங்குளம் முனியப்பர் கோயிலைத் தாக்க முனைந்தது. முன்னதே செய்தி தெரிந்த இந்துக்கள் அங்கு கூடியிருந்தனர். வந்தவரை விரட்டினர். காவல் துறையும் சேர்ந்து விரட்டியது.

மறவன்புலவு சச்சிதானந்தம் ஏப்ரல் 26 காலை வெள்ளாங்குளம் சென்று இந்துக் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இலுப்பைக்கடவைக் காவல் நிலையம் சென்றேன். இந்துக்களுக்குப் பாதுகாப்புக் கேட்டேன்.

மன்னார் மாவட்டம், இலுப்பைக்கடவைக் காவல் நிலையத் தலைமை ஆய்வாளர் கூறியதாவது:

வெள்ளாங்குளம் இந்துக்கள் மென்மையானவர்கள். பண்பட்டவர்கள்.  அவர்களைத் தாக்க வந்த கத்தோலிக்கர் குடிவெறியில் வந்தனர். ஏப்ரல் 25 இரவு வெள்ளாங்குளம் முனியப்பர் கோயிலைத் தாக்க வந்தனர். நான் நேரில் சென்று அவர்களை விரட்டினேன். தப்பி ஓடினர். அவர்களைக் கைது செய்வேன்.  வெள்ளாங்குளம் இந்துக்களையும் கோயில்களையும் பாதுகாப்பது என் கடமை.”

மன்னார் மாவட்டம் முழுவதுமே இந்துக்களைக் குறிவைத்துக் கிறித்தவராக்கும் நிலை இருந்துவருகிறது.  நாற்பது விழுக்காடு [%] இந்துக்கள் அங்கிருப்பினும், அவர்களது நெருக்கடியை நீக்க, அவர்களுக்காக வாதாட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்பிரதிநிதிகள் யாரும் இல்லை.  அனைவரும் கிறித்தவர்களே! மேலும், மாவட்ட நிர்வாக, நீதித்துறை அதிகாரிகள் அனைவரும் அவர்கள்தாம்.  காவல் துறையோ பௌத்தர்கள் கையில்…

ஐயாயிரம் ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்துவந்தபோதும் — படையெடுத்துவந்த  போர்த்துகீசியர் கட்டாயமாக் கத்தோலிக்கக் கிறித்தவர்களாக மாற்றாதவரை –மன்னார் மாவட்டம் முழுக்கமுழுக்க இந்துக்களாகவே இருந்தது.

2009ல் போர் முடிந்தவுடன் குப்பையில் முளைக்கும் காளான்கள்போல பெந்தகோஸ்தே மிஷன், ஜிஹோவாவின் சாட்சிகள், சவுண்ட் ஆஃப் டிரம்பெட்ஸ், மேற்கத்தையக் கிறித்தவச் சர்ச்சுகளால் நிதியுதவி பெற்றுவரும் இன்னும்பல நிறுவனங்கள் இந்துக்களைக் கிறித்தவர்களாக்க முனைந்துவருகின்றன.

இப்படிப்பட்ட சமயமாற்றத்திற்கு இந்துக்களின் எதிர்ப்பிற்கு வெள்ளாங்குளத்தில் சட்டவிரோதமாக ஊன்றப்பட்ட சிலுவையை அகற்றிய நிகழ்ச்சி சாட்சியமாக அமைகிறது.

வெள்ளாங்குளத்தைப் போன்று, இலங்கைமுழுவதும் இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நீக்கவேண்டும், அவர்கள் கட்டாயச் சமயமாற்றத்திற்கு உள்ளாக்கப்படக்கூடாது, அவர்களின் தொழுகைத்தலங்களான கோவில்கள், அவர்களின் உடமைகள், உயிர் இப்படிப்பட்ட வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றப்படவேண்டும், அதற்கான வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசுக்கு விண்ணப்பம் விடுமாறு உலக இந்துக்கள் அனைவரும் ஒருமனதாக, ஒரேகுரல் எழுப்பவேண்டும்.

(இப்பதிவில் உள்ள தகவல்கள் அனைத்தையும்  நமக்கு அளித்தவர் வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த  திரு. விக்கினேஸ்வரன்)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

 

5 மறுமொழிகள் இந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்

 1. sanjay on May 3, 2017 at 12:04 pm

  This is happening in India itself.

  The Santhome church in mylapore was originally the location of the kapaleeswarar temple. You can still see the inscription there.

  It was demolished & shifted to the current location near the tank.

 2. SANKAR on May 4, 2017 at 10:11 pm

  All Hindus will save our religion

 3. dr.A.Anburaj on May 10, 2017 at 12:08 pm

  In India too not only the government but also the public are salve to christian and Muslim minorites. In Government Sec.Gr.Teachers training centre 1000/1200 mark is essential to get admission for BC students.Those who come out of such Institutions are brillaint and efficient.But in Teacher”s training Institutes run by Minority managements christians who get 700/1200 marks also gets admission. In christian Minority community mediocrite students would become teachers.
  To arrest this pathetic trend Govt.of India had introduced Teachers eligibilityTest.All TET qualified teachers alone are eligible for employment.But minority Institution filed litigation against that Act and obtained exception for them also. In minority Managed Edu.Institutions TET is not a precondition for employment. The Tamilnadu Govt.also accepted it. The Govt.of India headed by Mr.Narendra Modi has not yet appealled against that.They do not have gut to challenge minorities indicipline/special rights.Hindu Managements are obeying the ACT faithfully..

 4. Rishi on May 12, 2017 at 12:39 am

  மத மாற்றம் மன்னாரில் மாத்திரம் இடம்பெறவில்லை. இலங்கை முழுவதும் பல வருடங்களாக இடம்பெற்று வருகிறது.முக்கியமாக யுத்தம் முடிவடைந்ததன் பின் மிகவும் வேகமாக இடம்பெறுகிறது.வெளி நாடுகளில் இருந்து பணத்துடன் வரும் கிறிஸ்தவ மதப் பிரிவுகள் யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதுவுகிறோம் என்ற ரீதியில் உள்நுழைந்து மக்களின் மனங்களைக் கவர்ந்து படிப்படியாக அவர்களை கிறிஸ்தவத்துக்கு மாற்றிக் கொள்கிறார்கள். பணக்கார முஸ்லிம்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் சைவர்களை முக்கியமாக விதவைகளை இஸ்லாத்திற்கு மாற்றிவருகிறார்கள். வட மாகாணத்தில் சுமார் இருபதினாயிரம் சைவர்கள் பவுத்தர்களாக மாற்றப் பட்டுள்ளார்கள். பத்து சிறுவர்கள் பவுத்த தேரர்களாக மாற்றப் பட்டுள்ளார்கள். இதில் ஒருவர் பிராமண சிறுவன். மலையகத்தில் பெரும்பாலனவர்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப் பட்டுள்ளார்கள். வெளி நாடுகளில் கிறிஸ்தவத்திற்கு மாறிய சைவர்கள் மிகவும் தீவிரமாக இலங்கையில் மத மாற்றம் இடம்பெற உதவி வருகிறார்கள் . இம் மத மாற்ற நிலைக்கு மற்ற மதத்தவர்களை விட சோம்பேறிகளாகவும் மக்கு களாகவும் பிடிச்சு வைத்த பிண்டங்களாகவும் வாழும் எருமைச் சைவர்களே காரணம். இது இலங்கையில் மாத்திரம் இல்லை வெளி நாடுகளிலும் இதே கதிதான்.சைவர்கள் திருந்தாதவரை மீட்சியே இல்லை. திருந்துவதற்கு இடமே இல்லை என்பது எனது திடமான எண்ணம் .

 5. Rishi on May 12, 2017 at 2:43 am

  மூன்று மாதங்களுக்கு முன்பாக ஐரோப்பிய யூநியன் மில்லியன் கணக்கான நிதியை habitat for humanityக்கும் world visionக்கும் இலங்கையில் வீடுகள் கட்டுவதற்கும் வாழ்வாதார உதவிக்குமாக கொடுத்துள்ளது. இந்த இரு நிறுவனக்களுமே கிறிஸ்தவ மதப் பரப்பலில் தங்கள் வேலைகளிநூடக ஈடுபடுவது தெரிந்ததே.இவர்களது இவ் வேலைகள் மட்டக்களப்பு கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட இடங்களில் இடம்பெற உள்ளது. எனவே இவ் இடங்களில் பாரிய அளவில் சைவர்கள் மத மாற்றப் படப் போகிறார்கள். இதைப்பற்றி இலங்கையில் உள்ள எந்த ஒரு இந்து அமைப்பும் மூச்சு விட்டதே இல்லை. பலருக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.world vision, habitat கிறிஸ்தவர்களிடையே இருப்பது போன்று பலமான இந்து அமைப்புகள் இந்துக்களிடையே இல்லை. ஏன் ஓர் சிறிய அமைப்புக்கூட இல்லை. இதைவிடக் கேவலம் இந்துக்களைப் பற்றி அல்லது இந்து சமயம் பற்றி ஓர் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதவல்ல நாலு பேர் கூட இந்து சமுதாயத்தில் இல்லை. அதனால் கிறிஸ்தவர்கள் பலர் ஆங்கிலத்தில் எழுதும் இந்து எதிர்ப்புக் கட்டுரைகளுக்கு சிறு மறுப்புக் கூட எழுத எவரும் இல்லை.இவ் ஆங்கிலக் கட்டுரைகளை வாசிக்கும் சின்ஹலவர்களும் முஸ்லிம்களும் வெளி நாட்டவர்களும் அவற்றை அப்படியே நம்புகிறார்கள். colombo telegraph எனும் இணையத்தில் வரும் கட்டுரைகளை நீங்களும் வாசித்துப் பாருங்கள் . அப்போது உண்மை விளங்கும். தென்இந்தியாவிலுள்ள ஆங்கிலத்தில் எழுதக்கூடிய இந்துக்கள் உதவி புரிந்தால்தான் எமக்கு ஆறுதல் கிடைக்கும். முயலுவார்களா? உதவுவார்களா?

  இலங்கையில் உள்ள இந்துக்கள் மட்டுமல்ல உலக நாடு களில் வாழும் இலங்கை இந்துக்களின் ஆங்கில அறிவு நிலையும் இதேமாதிரித்தான். அறிவும் இல்லை ஆற்றலும் இல்லை அக்கறையும் இல்லை. ஏன் இவர்களால் தமிழில் ஒரு தேவாரம் பாடக்கூட முடியாது. இவர்களது வீடுகளில் ஓர் தேவாரப் புத்தகம்கூடக் கிடையாது.
  செத்த வீட்டுக் கிரியைகளின்போது தேவாரம் பாடகூடிய ஒருவரைக் கண்டு பிடிக்க இவர்கள் படும் பாடு கவலைக்கிட மானது. இளந் தலைமுறையினர் கோவில் பக்கமே போவதில்லை. இவர்களுக்கு தமிழ் தெரியாது. எனவே ஆங்கிலப் புத்தகங்களை வங்கிக் கொடுத்து சமய அறிவை போதிக்க பெற்றோர்களும் முயல்வதில்லை கோவில்களும் முன்வருவது இல்லை. இதனால் இவர்கள் வெகு இலகுவாக எஹோவாவின் சாட்சிகளாக மாறுகின்றனர். மற்றவர்களையும் மாற்ற முனைகின்றனர்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*