பசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்

உயர்சாதியினரோ, இடைநிலை சாதியினரோ ஹிந்துக்களாக நீடிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் மொகலாயர் காலம் தொட்டு பல நூற்றாண்டுகளாக , பல்வேறு சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகியும் ஹிந்துக்களாகவே நீடிப்பதுதான் மாபெரும் சாதனை. தங்கள் ஸ்வதர்மத்தின் மீதான அவர்களின் பற்று போற்றுதலுக்குரியது. அப்படிப்பட்ட சாதியினர்களில் மிக முக்கியமானவர்கள் அருந்ததியர்கள்.

எங்கள் ஊரில் இன்றும் அருந்ததியர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. அதைக் காரணம் காட்டி அவர்கள் மதம் மாறவில்லை (இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற ராமர்ஜோதி ரத யாத்திரையின்போது ஹிந்து முன்னணியைச்சேர்ந்த நாங்களே ஒரு ரதம் செய்து , அதில் ராமர் ஜோதியைவைத்து வீடுவீடாக சென்று விளக்கேற்றினோம், அருந்ததியர் தெரு உட்பட)

ஒரே ஒரு குடும்பம் மட்டும் கிறித்தவ மதத்துக்கு மாறியது. மற்றவர்களையும் மாற்ற தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் மதம் மாறாதது மட்டுமல்லாமல் , அந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டனர். தங்கள் தெருவில் தங்களுக்கென தனியாக ஒரு விநாயகர் கோயில் கட்டி , கும்பாபிஷேகம் செய்துகொண்டார்கள்.

வருடம் தோறும் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். எங்கள் ஊர் மாரியம்மன், மற்றும் பகவதியம்மன் திருவிழா நடைபெறும்போது தங்கள் தெருவில் இருந்து ஊர்வலமாக மாவிளக்கு எடுத்துவந்து வழிபடுவார்கள்.

இவ்வளவு ஏன்? எங்கள் ஊரில் உள்ள பறையர் சமூகத்தினர் முழுமையாக கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டனர். அதுமுதல் கோயில் விழாக்களுக்கு பறை இசைக்க அவர்கள் வருவதில்லை. எனவே கோயில் விழாக்களுக்கு பறை மேளம் இசைப்பதும் அருந்ததியர்களே.

அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். முன்பெல்லாம் இறந்துபோன கால்நடைகளை தங்கள் தெருவுக்கு எடுத்துச்சென்று எல்லோரும் பங்கிட்டு சாப்பிடுவார்கள். தற்போது மாடுவளர்ப்பு கணிசமாக குறைந்துவிட்டதால் தங்கள் தெருவில் வாரம் ஒருமுறை செயல்படும் இறைச்சிக்கடையில் தங்களுக்கான மாட்டு இறைச்சியை வாங்கிக்கொள்கிறார்கள்.

அவர்களை என்ன செய்யலாம் நண்பர்களே?அவர்கள் ஹிந்துக்கள் கிடையாதா? இல்லை மாட்டுக்கறி தின்பதால் அவர்களை ஹிந்து மதத்தில் இருந்து நீக்கிவிடுவோமா?

சனாதன தர்மம் என்னும் மாபெரும் கடலை ஒற்றைப்பார்வையால் பார்ப்பதோ , ஒரே மாதிரியாந கோட்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதோ நிச்சயம் நமக்கு நல்லதல்ல.

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்.
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.

–  திருவாவுக்கரசர் தேவாரம்

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே.

– திருவாய்மொழி  (நம்மாழ்வார்)

9 Replies to “பசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்”

  1. Sanroan

    Why don’t you make an attempt to allow Arunthathiyar community to enter into the the temples in your area. Entering into a temple to worship is a basic right and depriving them to use it is a crime against humanity. I beg you to join with your friends and educate the elders in your area to realise the injustice and crime they are committing on a section of the people living in your area. Change of mind by education and adopting peaceful methods will bring good results but I know it will take time. However I hope and pray that you and your friends will succeed in abolishing the caste discrimination in the end.

    In Srilanka the government has enacted Social Disabilities Act, under which Police will come to the rescue of a victim and prosecute any caste conscious person for causing any disabilities including preventing temple entry . I am not aware of any similar Act available in India.

  2. “எங்கள் ஊரில் இன்றும் அருந்ததியர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. அதைக் காரணம் காட்டி அவர்கள் மதம் மாறவில்லை”
    இது போல சக மனிதனை கோவில் உள்ளே விடாத போக்கை பார்க்கையில் உண்மையிலேயே வெக்கபட வேண்டியவர்கள் நாம் தான்.
    இன்னமும் இந்து மதத்தில் இன்னமும் இது போன்ற கருத்தை ஆதரித்தால் பரபிரம்ம தத்துவங்கள் கேள்வி குறிகளே
    பிறகு மற்ற மதத்தை பற்றி பேச கூட அறுகதை அற்றவர்களாகி விடுவோம்.

  3. Social inclusion is the only solution. In 21st century still we can not ban anyone from entering temples. May the same would result them to give up consumption of beef.

  4. இந்து ஆலயங்கள் சமூகங்களால் நிா்வகிக்கப்பட்டு வருகின்றது.
    எனவே ஒரு சாதி மக்கள் பிறசாதி ஆலயங்களுக்குசெல்வது தேவையற்றது.
    பொது ஆலயங்கள் அனைவருக்கும் பொதுவாக மாறிவிட்டது.
    அது போதுமானது.கிறிஸ்வா்களாக மாறிய பறையா்கள் கிறிஸ்தவ நாடாா்கள் வீட்டில் பெண் எடுக்க இயலாது.
    சமூக பிரச்சனைகளுக்கு வெடிகுண்டு தீா்வு எதும் இல்லை.
    பாிணாமமே தீா்வாகஇருக்கும்.பொறுமை மிக அவசியம்.

  5. பொறுமையாகவெல்லாம் இருந்தால் தானாக மாற்றம் நிகழ்ந்துவிடாது. இந்து அமைப்புக்களும் சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் உள்ள ஆன்மீகவாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் இதுபோன்ற தண்டனைக்குரிய குற்றத்தை வேரோடு மண்ணாக களைய உரக்க குரலெழுப்பவேண்டும்.

    உதாரணத்திற்கு, திரு.ஜெ தனது தளத்தில், கிறித்தவம் மாறிய வன்னியர்கள் தீண்டாமையை காத்துக்கொள்ளவேண்டி தாய்மதம் திரும்பின அருவருப்பான நிகழ்வை சுட்டிக்காட்டியிருந்தார். இதை கண்டித்தவர் அர்ஜூன் சம்பத் மட்டுமே என்றும் எழுதி இருந்தார்.

    ஆலயம் எந்த சமூகத்தாரால் நிர்வகிக்கப்பட்டாலும், எந்த சமூகத்திற்கும் உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அரசின் அனுமதி பெற்று எழுப்பப்பட்ட ஆலயங்கள் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவாகவே இருக்கவேண்டும். இந்த உரிமையை மறுக்கும் எவருக்கும் எதிராக ஒன்றாக தொடர்ச்சியாக கண்டனக்குரல் எழும்புவதும் அவர்களுக்கெதிராக சட்டம் செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்தப்படவேண்டியதும் மிக மிக முக்கியம்.

  6. Arundhatiyar claim that Valii is their daughter and Murugan is their son-in-law..One Arundhthiyar gentleman by name Manikkan who worked in our farm used to claim like this

  7. விக்கிபீடியாவில் இவ்வாறு உள்ளது:

    “””
    The Tamil Nadu Animal Preservation Act, 1958 governs the slaughter of cattle in the state. All animals could be slaughtered on obtaining “fit-for-slaughter” certificate. The law defined “animals” as bulls, bullocks, cows, calves; and buffaloes of all ages. The certificate was issued if an animal was over 10 years of age and was unfit for work and breeding or had become permanently incapacitated for work and breeding due to injury deformity or any incurable disease. Anyone violating the Act can be punished with imprisonment of up to 3 years or fine up to ₹1,000 or both.
    “””
    அதன்படி fit for slaughter சான்றிதழ் இருந்தால் போதும். இது நியாயமாகவும் தெரிகிறது.

  8. I think the BJP govt has gone overboard in the cow slaughter issue. Many forget the fact that India is the highest exporter of beef in the world. On one hand, we talk of treating cow as a sacred animal & on the other hand, this is happening. Why this double standards?

    Instead of trying about a blanket ban, why not try & educate beef haters that eating beef is harmful for the body in the long run? Medical studies have shown so.

    As for the caste system, unless the hindu religious leaders/saints come forward & take up this issue, it will not end. Sri Jayendra Saraswathi attempted this but got little support.

  9. இது போன்ற மதமாற்றம் நடக்காமல் இருக்க மேல்மருவத்தூர் ஆதிபாராசக்தி கோவிலும் ஒரு காரணம். அங்கு தான் சாதி, மத,பேதம் இன்றி ஒரே தாய் ஒரே குலம் என்று அனைவரும் மதிக்கப்படுகிறார்கள் மேலும் யாகம், பூஜை புனஸ்காரங்கள் செய்யும் முறை அதற்கான காரணங்கள் தெளிவாக சொல்லித்தருகிறார் அருள்திரு பங்காரு அடிகாளார் அவர்கள்.ஆன்மிகத்தை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த கோவிலூக்கு போன பிறகு தங்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி பூரிப்பு அடைந்ததை நான் கேட்டிருக்கிறேன்.மதமாற்றம் பற்றி சொன்னவுடன் இந்த விஷியத்தை எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதான்—.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *