முகப்பு » அரசியல், தேசிய பிரச்சினைகள், விவாதம்

உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 1

June 22, 2017
-  

கூடங்குளம் போராளி உதயகுமார் அடிப்படையில் ஒரு  இனவெறியர். இந்திய தேச விரோதி. காசு வாங்கிக் கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் அயோக்கியர். வெளி நாடுகளில் காசு வாங்கிக் கொண்டு இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகவும், இந்தியாவைத் துண்டாடவும் பிரிவினைவாதம் செய்தும் இன்னும் பல தேசத் துரோக வேலைகளையும் செய்து வருகிறார் என்று பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறோம்.

2011 செப்டம்பரில் விஸ்வாமித்ரா எழுதி தமிழ்ஹிந்துவில் வெளிவந்த கட்டுரை: 

கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும்   பாகம் 1,  பாகம் 2 

அவரை வைத்து அவர் போராட்டத்தைக் கொண்டு மத்திய அரசாங்கத்தை மிரட்டலாம் என்பதினாலும், கத்தோலிக்க சர்ச்சுகளின் மிரட்டல்களினாலும், ஜெயலலிதா அரசு அவர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளைப் போட்ட பொழுதும் பெரும் கலவரங்களை அவர் ஏற்படுத்திய பொழுதும் அவரை கைது செய்யத் துணியவில்லை. அதனால் இந்தியாவின் மின்சாரத் தேவையும் வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கப் பட்டது.

கேஜ்ரிவாலைப் போலவே அமெரிக்காவின் ஏஜென்சிகளினால் திட்டமிட்டு வளர்க்கப் பட்ட ஒரு தேச விரோதி உதயகுமார். அவருக்கும் நியூக்ளியார் சயின்ஸுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரை வளர்ப்பதற்காக அமெரிக்க கல்லூரிகளில் வேலை பார்த்து அவருக்குத் தேவையான அசைன்மெண்ட்டை அளித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவரை இந்திய விரோத அமைப்புகளான ஃபெட்னா போன்ற அமைப்புகள் பிரபலமாக்கின. இந்தியாவை உடைக்க அமெரிக்காவினால் அனுப்பி வைக்கப் பட்ட ஏஜெண்ட் அவர்.

அவர் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மிகப் பெரும் அளவில் போராட்டத்தை நடத்தினார். அதற்கு ஜெயலலிதா அரசின் மறைமுக ஆதரவு இருந்தது. அவருக்கு முழுக்க முழுக்க நிதியுதவியும் ஆதரவுகளும் அளித்தவை அப்பகுதியில் அமைந்த மீனவ சர்ச்சுகளும் அதன் பாதிரிகளுமே. ஒரு மாபெரும் தேச விரோத சதி வலையை சர்ச்சுகளின் உதவியுடன் அவர் வெற்றிகரமாக நடத்தி வந்தார். அப்பொழுதே அவருக்கு தமிழக எழுத்தாளர்கள் அனைவரும் ஆதரவு அளித்து வந்தார்கள். ஜெயமோகன் ஆதரவு அளித்த பொழுது அப்பொழுதே நான் கடுமையாக என் கண்டனங்களை இங்கு பதிவு செய்திருந்தேன்.

ஆனால் அவர் மீதான குற்றசாட்டுக்களுக்கு ஆதாரம் ஏதும் கிடையாது என்று அப்போதெல்லாம் வக்காலத்து வாங்கினார்கள். அவருக்கு சொத்து கிடையாது என்றும், பணத்திற்காக செய்யவில்லை என்றும் அவரை விடவும் அதிகமாக இந்த எழுத்தாளர்கள் அவருக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். அவரும்,  நான் வெளி நாட்டில் காசு வாங்கியது நிரூபிக்கப் பட்டால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்றார்.

இப்பொழுது ரிபப்ளிக் டிவி அவர் வாயில் இருந்தே எனக்கு சர்ச்சுகள் மூலமாக வெளி நாட்டுப் பணத்தை அனுப்புங்கள் என்று சொன்னதை படம் பிடித்து வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு காசே வாங்கவில்லை என்று சொன்னவர்,  நிரூபித்தால் தூக்கில் போடுங்கள் என்று சொன்னவர், இன்று வாங்கினால் என்ன தப்பு என்று கேட்கிறார். ஆமாம், வாங்கினால் என்ன தப்பு என்று அவருக்கு ஓடி வந்து வக்காலத்து வாங்குகிறார்கள் தமிழக எழுத்தாளர்கள்.

முதலில் அவர் ஒரு சாதாரணர் என்றும் அவர் காசு சேர்க்கவில்லை என்றும் எழுத்தாளர்கள் பி.ஏ.கிருஷ்ணனும், ஜெயமோகனும் சத்தியம் செய்கிறார்கள். அவர் கணக்கு வழக்கை எல்லாம் சரி பார்த்த ஆடிட்டர்கள் போல இருவரும் சர்ட்டிஃபிகேட் வழங்குகிறார்கள்.  ராஜா சங்கர் போட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில்  2012லும் 2016லும்  உதயகுமார் சமர்ப்பித்த கணக்குகளை இட்டிருக்கிறார். அதன் படி அவருக்கும் அவர் மனைவிக்கும் பல கோடி ரூபாய் பெறுமான நிலபுலன்கள் சொத்துக்கள் வணிக வளாகங்கள் இருப்பதை அவரே ஒத்துக் கொண்டு அஃபிடவிட் தாக்கல் செய்திருக்கிறார். இருந்தாலும் ஜெயமோகன் சொல்லுகிறார் ’அவர் ஒரு சாதாரண சொத்துக்கள் இல்லாத தனி மனிதன்’ என்று. யோக்கியன் என்று. ஜெயமோகன்களின் பி.ஏ.கிக்களின் அகராதிகளில் பல கோடி ரூபாய்கள் சொத்து வைத்திருப்பவர் பாமரன் ஏழை என்று அர்த்தம் போலிருக்கிறது. ஒரு வேளை பணக்காரர்களாகிய அவர்களின் கணக்கின் படி அவர் ஏழையாக இருந்திருக்கலாம் 🙂

அவருக்கு யோக்கியர் சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் இருவருக்கும் என் எளிய கேள்வி இதுதான். ஐந்தாண்டுகளுக்குள்ளாக அவரது ஒட்டு மொத்த சொத்து மதிப்பு எவ்வாறு பல கோடிகள் உயர்ந்தது? அமெரிக்காவில் அந்த அளவுக்கா கல்லூரி வாத்தியாருக்கு அதுவும் வீணாய்ப் போன ஒரு துறையில் இருந்தவருக்கு சம்பளம் கொடுத்தார்கள்? நான் அமெரிக்காவில் 21 வருடங்களாக பணி புரிகிறேன். சராசரி அமெரிக்கர்களை விட இரு மடங்கு சம்பாதிக்கிறேன். இருந்தாலும் என்னால் நாகர்கோவில் பகுதியில் ஒரு அரை ஏக்கர் நிலம் கூட என் சம்பாத்தியத்தில் வாங்க முடியாது. ஆனால் எந்த வேலையும் பார்க்காத உதயகுமாருக்கு அத்தனை ஏக்கர்கள் நிலம் வாங்க எங்கிருந்து பணம் வந்தது? இதை அவருக்கு வக்காலத்து வாங்கும் இரு எழுத்தாளர்களும் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுவார்களா?

*****

முதலில் எழுத்தாளர் பி.ஏ.கி அவனுக்கு ஆதரவாக சொல்லும் வக்காலத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

அவர் யோக்கியர். அவர் எந்த நிலையிலும் பணம் வாங்கியிருக்க மாட்டார் என்று பி.ஏ.கி. சொல்கிறார். அப்படியானால் இவர் அகராதியில் யோக்கியன் என்றால் என்ன அர்த்தம் என்பது முதலில் அறியப் பட வேண்டும்.

ஒருவர் தன் போராட்டங்களுக்கான பணத்தை சர்ச்சுகள் மூலமாக அனுப்பி வைக்கச் சொல்லுகிறார். மத அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கிறார். கூடங்குளம் சரி அணு ஆபத்து இருக்கிறது என்று சொல்லலாம். தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சி திட்டத்தையும்  உதயகுமார் எதிர்த்து இப்பொழுது அது ஆந்திராவுக்குச் செல்லவிருக்கிறது. எந்தவொரு ஆயுர்வேத மருத்துவத்தையும் தினந்தோறும் கேலி செய்து அது  விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் படாத ஒன்று என்று எழுதுபவர் பி.ஏ.கி.  ஆனால், எதையுமே அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும் என்று அனுதினமும் ஜெபிக்கும் இந்த  பி.ஏ.கி, இந்தியாவின் முக்கியமான அறிவியல் வளர்ச்சித் திட்டத்தைத் திட்டம் போட்டு இழுத்து மூடிய உதயகுமாருக்கும் வக்காலத்து வாங்குகிறார் !

ஒரு பக்கம் விஞ்ஞானம் சார்பாக பேச வேண்டியது. மறுபுறம் அதை ஒழிக்கும் இந்திய விரோத சக்திகளுக்குக் கொடி பிடிக்க வேண்டியது. அப்படியானால் இவர்களின் உண்மையான நோக்கம் தான் என்ன? எதன் பக்கம் இவர்கள் நிற்கிறார்கள்? எந்தவொரு நிலைப்பாட்டிலும் இப்படி நேர் மாறான நிலைப்பாடு எடுப்பது எந்த மாதிரியான அறிவியல் அறிவு?

சரி அவர் யோக்கியர் என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்த எழுத்தாளர்கள் இருவரும் கீழ்க்கண்டவாறு உதயகுமார்  தேர்தல் மனுவில் சமர்பித்த சொத்துக் கணக்கிற்கான ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று கேட்டுச் சொல்வார்களா? அல்லது அதெல்லாம் உறவினர்கள் சம்பாதித்தது என்று காதில் பூச்சுற்றப் போகிறார்களா?

உதயகுமாரின் பெற்றோர் மனைவி மற்றும் உதயகுமார் பெயர்களில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள விபரம் வருமாறு:–

1.குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா இசங்கன்விளையில் 10 சென்ட் நிலம், காங்கிரீட் வீடு (வாங்கிய காலம் 1994ம் ஆண்டு)
2. நாகர்கோவில் கீழராமன் புதூரில் 15 சென்ட் நிலம், 2 காங்கிரீட் கட்டிடங்கள் மற்றும் ஒரு ஓட்டு கட்டிடம் (வாங்கிய காலம் 2005ம் ஆண்டு)
3. நீண்டகரை ஏ கிராமத்தில் 3.77 ஏக்கர் நிலம். 2 காங்கிரீட் வகுப்பறை கட்டிடங்கள், தென்னை தோட்டம். (வாங்கிய காலம் 1994 முதல் 2000ம் ஆண்டு வரை)
4. தோவாளை தாலுகா அழகியபாண்டியபுரத்தில் 8 ஏக்கர் 43.5 சென்ட் ரப்பர் மற்றும் தென்னை தோட்டம் (வாங்கிய காலம் 1998–99)
5. அழகியபாண்டியபுரத்தில் 45, 46 சென்ட் காலி இடங்கள் (வாங்கிய காலம் 2008)
6. அகஸ்தீஸ்வரம் தாலுகா திருப்பதிசாரத்தில் 12 சென்ட் நாற்றங்கால் (வாங்கிய காலம் 1972)
7. சாக்கர் பள்ளி வாகனங்கள்–2
8. பயன்படுத்தப்பட்ட அம்பாசிடர் கார்–1
9. அம்மாவின் நகைகள் 15 பவுன், மனைவி நகைகள் 90 பவுன். மொத்த நகை கடன் ரூ.3 லட்சம்.

நன்றாக கவனிக்கவும் இவை அனைத்துமே கூடங்குளம் எதிர்ப்பு போராட்டங்கள் துவக்கப் பட்ட 1989க்குப் பிறகுதான் சேர்க்கப் பட்டுள்ளன. உதாரணத்திற்கு அழகியபாண்டியபுரம் என்ற செழிப்பான பிரதேசத்தில் ஒரு அரை ஏக்கர் நிலத்தை எனது 21 வருட அமெரிக்க வருமானத்தில் என்னால் வாங்கி விட முடியாது என்னும் பொழுது இவருக்கு இதை வாங்க எங்கிருந்து எப்படி பணம் வந்தது என்பதை விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ.கி. விசாரித்துச் சொல்லுவார் என்று நம்புகிறேன்.

இதற்கும் ஒரு விளக்கம் வைத்திருப்பார்கள். எழுத்தாளர்கள் அல்லவா? கற்பனைக்கா பஞ்சம் வந்து விடப் போகிறது? அறத்துக்கும் தேச பக்திக்கும்தானே இவர்களிடம் பஞ்சம்?

அடுத்ததாக,  வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கினால் என்ன தப்பு என்று கூசாமல் கேட்கிறார்கள்.  மத்திய அரசின் விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ.கி. மனசாட்சியை கோட் ஸ்டாண்டில் மாட்டி விட்டுக் கூசாமல் கேட்கிறார். அந்நிய தேசத்தில் இருந்து பணம் வாங்கி, அதுவும் தான் நேரடியாக வாங்காமல் கிறிஸ்தவ மத அமைப்புகள் மூலமாக வாங்கி, இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களான மின் நிலையங்கள் மற்றும் நியூட்ரினோ போன்ற ஆராய்ச்சிகளை தடுக்கச் சதித் திட்டம் போட்டு, போராட்டங்களை அந்தப் பணத்தினால், நடத்துவது தேச விரோதம், சட்ட விரோதம் என்பதைக் கூட அறியாதவர்தானா இத்தனை ஆண்டுகள் விஜிலென்ஸ் அதிகாரியாக வேலை பார்த்திருக்கிறார்?

ஜெயலலிதா, தினகரன், நேற்று கைது செய்யப் பட்டு ரம்ஜான் நோம்பு இருக்க வெளியில் விடப் பட்டுள்ள ஜவகருல்லா இப்படி ஏராளாமான பேர்கள் மீது அந்நியச் செலவாணி மோசடி வழக்குகள் உள்ளன. அதெல்லாம் அப்படியானால் சும்மா விளையாட்டுக்குப் போட்டவைகளா என்ன? ஜெயலலிதாவும் தான் அரசியல் நடத்தினார், கட்சி நடத்தினார். கட்சி நடத்த காசு வேண்டுமாம், ஆகவே எங்கிருந்து வாங்கினாலும் தப்பில்லை என்று விஜிலென்ஸ் அதிகாரியே வியாக்யானம் செய்கிறார். ஐயா, அப்படியானால் ஜெயலலிதா அனாமத்தாக வாங்கிய 300000 டாலர்கள் மீது ஏன் கோர்ட் நடவடிக்கை எடுத்தார்கள்? எதற்காக விசாரணை செய்தார்கள்? அரசியல் நடத்தக் கட்சி நடத்தக் காசு வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி விடுதலை செய்திருக்கலாமே? ஏன் வேலை வெட்டி இன்றி விசாரணை வழக்கு எல்லாம் நடந்தன?

தன் பெயரில் அனுப்பினால் விசாரணை வரும்; ஆகவே மாற்று வழியில் சர்ச் மூலமாக அனுப்பு என்று மிகத் தெளிவாகச் சொல்லுகிறார் உதயகுமார். அதில் எந்த சட்ட விரோதமும் கிடையாது,  அவர் எப்படி வாங்கினாலும் சரிதான் என்கிறார் பி.ஏ.கி.

நாளைக்கு ஒரு இஸ்லாமிய பயங்கரவாதிக்கு பாக்கிஸ்தானில் இருந்து காசு வந்து அவன் குண்டு வைத்து ஆயிரம் பேர்களைக் கொன்றால் அவனுக்கும் இதே போலவே பி.ஏ.கி. வக்காலத்து வாங்கலாமே. அவர்கள் பாவம் கட்சி நடத்துகிறார்கள், ஆகவே எந்த வழியில் எதற்காக காசு வாங்கினாலும் அதில் தவறில்லை என்று அவர்களுக்கும் நிச்சயம் இவரைப் போன்றவர்கள் சப்போர்ட் செய்வார்கள்.

ஏன்? ஏன்? ஏன்?

அறிவியல் திட்டங்களுக்காக ஒரு பக்கம் மாங்கு மாங்கு என்று எழுதிக் கொண்டே அதை அழிக்கும் சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு எது காரணமாக இருக்க முடியும்?

தான் காந்தியின் தொண்டன், நேருவின் பக்தன் என்று சொல்லிக் கொண்டே, தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்று மேடையில் பேசும் உதயகுமாருக்கு, இந்தியாவை உடைக்கத் துடிக்கும் ஒரு பிரிவினைவாதிக்கு, ஒரு காந்தியவாதி ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? ஏன்? ஏன்? ஏன்?

ஒரு பக்கம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டே, மறுபக்கம் அந்நிய தேசங்களில் இருந்து மறைமுகமாக நிதி வாங்கி இந்தியாவைப் பிரிக்கப் போராட்டம் நடத்துவது சரிதான் தப்பில்லை என்று கை கூசாமல் மனம் கூசாமல் எழுதும் காரணம் என்ன? ஏன்? ஏன்? ஏன்?

ஈ வெ ரா இனவெறியைத் தூண்டுகிறார், மோடி ஒரு ஹிட்லர் மத வெறியைத் தூண்டுகிறார் என்று தினமும் மூன்று முறை  ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுக் கொண்டே, பிராமணர்களை வெட்டிக் கொன்று ஒழிக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசும் உதயகுமார் யோக்கியர் என்று வக்காலத்து வாங்க என்ன காரணம்? ஏன்? ஏன்? ஏன்?

ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். இந்தியா நாசமாகப் போனாலும் சரி, இந்தியா துண்டு துண்டாக உடைந்தாலும் சரி, மக்கள் குண்டு வைக்கப் பட்டுக் கொல்லப் பட்டாலும் சரி, வேலை வாய்ப்புகள், அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாம் மின்சாரம் இல்லாமல் இந்தியா அழிந்தாலும் சரி,  மோதியை எதிர்க்க வேண்டும். நரேந்திர மோதியை யார் எதிர்த்தாலும்,  அது கூடங்குளம் உதயகுமாரனாக இருந்தாலும் சரி, பாக்கீஸ்தானின் ஐ எஸ் ஐ ஆக இருந்தாலும் சரி, தாலிபானாக இருந்தாலும் சரி, நான் ஆதரவு தெரிவிப்பேன் என்பதே இவர்களின் ஒரே காந்தீயக் கொள்கை. மோடியை அழிக்க வேண்டும் என்ற வெறுப்புணர்வில், இந்தியாவைக் கூறு போடத் தயங்காதவர்கள் இவர்கள். அயோக்கியர்களை அதற்காக ஆதரிக்கத் தயங்காதவர்கள். உதயகுமாரை மனசாட்சி இன்றி நேர்மை இன்றி ஆதரிப்பவர்களும் இந்திய தேசத்தின் விரோதிகளே. அவரை விட பல மடங்கு ஆபத்தானவர்கள் இந்த படித்து சூது செய்பவர்கள்.

படித்தவர்கள் சூது செய்யக் கூடாது. அதிலும் இவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் நியாயஸ்தர்கள் அறவுணர்வு உள்ளவர்கள் என்று இவர்களை ஆயிரக்கணக்கானோர் தொடர்கிறார்கள். இவர்கள் செய்யும் பாவம் உதயகுமார் செய்யும் பிரிவினையை விட இன வெறுப்பை விட தேச அழிப்பை விட கோடி மடங்கு அதிகமான பாவங்களாகும்.

அதனால்தான் சொல்லுகிறேன். உங்களின் கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பிற்காக இந்தியாவை அழிக்காதீர்கள். காலில் விழுந்து கெஞ்சுகிறேன். இந்தியாவின் அழிவுக்குத் துணை போகாதீர்கள். பாரதி விட்ட சாபத்தை உங்கள் தலைமுறைகளுக்கும் விட்டு விட்டுச் சென்று விடாதீர்கள். உங்களுக்கு அணு உலை மீது சந்தேகம் இருந்தால் அதை வேறு விதங்களில் எதிர் கொள்ளுங்கள் தேசத் துரோகிகளுக்குத் துணை போய்ச் செய்யாதீர்கள். உங்களின் அடிப்படை நேர்மையை அறவுணர்வுகளைக் கேள்விக்குறி ஆக்கி விடாதீர்கள். நாளைய இந்தியா உங்களை என்றும் மன்னிக்காது.

அடுத்ததாக ஜெயமோகன் உதயகுமாரனை ஆதரிக்கும் காரணங்களைக் காணலாம்.

(தொடரும்) 

அடுத்த பகுதி >>

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

10 மறுமொழிகள் உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 1

 1. கோவை பாலா on June 22, 2017 at 8:51 pm

  ஆணித்தரமான கட்டுரை. நியாயமான சந்தேகங்கள். இவற்றுக்கான பதிலை உதயகுமார் & கோ., சொல்வார்களா?

 2. Kannan on June 23, 2017 at 9:16 am

  The government must file sedition charge against Udhaya Kumar and his colleagues.

 3. இருங்கோவேள் அ போ on June 23, 2017 at 10:36 am

  நெஞ்சு பொறுக்குதில்லையே….!இந்த ஜந்துகளுடன் வாழ வேண்டிய நிலை கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே…!

 4. shankaran on June 23, 2017 at 11:20 am

  கூடங்குளம் போராட்டத்தின் நாயகனாக விளங்கிய உதயகுமார் ஆம் ஆத்மீ கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் வெறும் ஆயிரத்து சொச்சம் வாக்குகளே வாங்கினார். நியாயமாக பார்த்தால் அவர் ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் ஜெயிக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பு. எந்தவித தர்க்கமும் சமநிலையும் இல்லாமல் வாயார வசைபாடியதன் விளைவு. ஜெயமோகன் வார்த்தைகளில் சொல்வதானால் எதிர்த்த தரப்பை எதிரியாக உருவகித்து அதை அழிக்க நினைப்பது. இந்திய அரசு ஆதிக்கமனப்பாண்மை கொண்டது..ஏகாதிபத்திய கைக்கூலி , தமிழர்களை அழிக்க நினைக்கிறது என்றெல்லாம் சம்பந்தமில்லாமல் பிதற்றியதால் வந்த வினையே அவரது தோல்வி.

  இக்கட்டுரையும் அதே பாணியையே பின்பற்றுகிறது. உதயகுமார் ஒரு தேச துரோகி, ஜெமோ வும் பி ஏ கே விரற்கும் தேசபக்தி பத்தவில்லை என்று வெறுப்பு அவதூறு வசையை பொழிகிறது. பிறகு அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். ஏதேனும் வாகாக கரணம் கிடைத்தால் கண்மூடித்தனமாக வசைபாடுவது நல்லதல்ல.

  ஜெயமோகனின் கூற்று :

  //அப்போராட்டத்திற்கு உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம் . அது எவ்வகை நன்கொடை என்பதே முக்கியம்.உலகமெங்கும் சூழியல் போர்களுக்கு நிதியுதவிசெய்யும் தனியாரும்,. அறக்கட்டளைகளும் ஏராளமாக உள்ளன. அவற்றிடமிருந்து உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம். அன்னிய அரசு, அல்லது தனியார்த்தொழில்துறை சார்ந்த உதவிகளை பெற்று அப்போராட்டத்தை நடத்தினார் என நிறுவப்பட்டிருந்தால் அது வேறு//

  உதயகுமாருக்கு ஒரு வெளிநாட்டு பேராசிரியரிடம் நன்கொடை தருவதாக தான் அந்த நிருபர் கூறுகிறார் . அந்த பேராசிரியர் யார்? எந்த அமைப்பில் இடம் பெற்றிருக்கிறார்? அந்த அமைப்பு என்ன? போர்ட் பவுண்டேஷன் போன்ற அமைப்பா அல்லது ஏதேனும் ஒரு வெளிநாட்டு அமைப்பா ? இதையெல்லாம் சொல்லாமல் வெறுமனே உதயகுமார் இந்தியாவை வசைபாடுகிறார். அவருக்கு வெளிநாட்டு நன்கொடை வருகிறது எனவே அவர் தேசத்துரோகி என்று முத்திரை குத்துவது கம்யூனிஸ்ட்களின் பாணி. அதிகாரமும் ஆதரவும் இருந்த போது ஸ்தாலினையும் லெனினையும் யாரவது கேள்வி கேட்டால் அவர்கள் பாட்டாளி விரோதி என்று முத்திரை குத்தி ஒழித்துக்கட்டினார்கள் . கடைசியில் நாதியற்று அலைகிறார்கள். இந்துத்தவர்கள் இந்த பாணியை பின்பற்ற மாட்டார்கள் என நம்புவோம் .

  சரி ஒரு விவாதத்திற்காக கேட்கிறேன் . கூடங்குளம் அணுஉலை போராட்டத்தின் மூலமாக வேலைவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சி , மின்சார உற்பத்தி ஆகியவற்றை அழிக்க நினைப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால்,

  1. என்னென்ன , எத்தனை வேலைவாய்ப்புகள் கூடங்குளம் திட்டத்தின் மூலம் உருவாக்க உத்தேசிக்கப் பட்டது?

  2. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன அறிவியல் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டு இப்போராட்டத்தினால் தடைபட்டது? நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை முற்போக்காளர்கள் எதிர்ப்பது வடிகட்டிய மூடத்தனம். ஆனால் அத்திட்டம் தெளிவான குறிக்கோளுடன் முன்னெடுக்கப் படுகிறது. அதே போல் இங்கு என்ன அறிவியல் ஆராய்ச்சி நடத்த திட்டமிட்டனர்?

  3. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின் உற்பத்தி மூலம் இதுவரை எவ்வளவு மின்சார தேவை தீர்க்கப்பட்டிருக்கிறது? சூரிய மின் உற்பத்திமுறையை விட அதிக ஆபத்தான அணுமின்சார உற்பத்தியை ஏன் அரசு ஆதரிக்க வேண்டும் ?

 5. க்ருஷ்ணகுமார் on June 24, 2017 at 6:06 pm

  \\\ இக்கட்டுரையும் அதே பாணியையே பின்பற்றுகிறது. உதயகுமார் ஒரு தேச துரோகி, ஜெமோ வும் பி ஏ கே விரற்கும் தேசபக்தி பத்தவில்லை என்று வெறுப்பு அவதூறு வசையை பொழிகிறது. \\

  கூசாமல் குதர்க்கவாதம்.

  தேசப்பிரிவினைக்கு வக்காலத்து வாங்குவதை தேசப்பற்று என்று சொல்லிவிடலாமோ?

  \\ அணுமின்சார உற்பத்தியை ஏன் அரசு ஆதரிக்க வேண்டும் ? \\

  ரொம்ப பழைய விவாதம். தமிழ் ஹிந்துவில் முன்னர் வெளியான வ்யாசத்தொடரின் தொடுப்பு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே தொடரவும்.

  \\ சரி ஒரு விவாதத்திற்காக கேட்கிறேன் . கூடங்குளம் அணுஉலை போராட்டத்தின் மூலமாக வேலைவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சி , மின்சார உற்பத்தி ஆகியவற்றை அழிக்க நினைப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால், 1. என்னென்ன , எத்தனை வேலைவாய்ப்புகள் கூடங்குளம் திட்டத்தின் மூலம் உருவாக்க உத்தேசிக்கப் பட்டது? \\

  Availability of electricity is basic requirement for any major industrial activity………which as a chain results in enhancement of employment opportunities……infrastructure development…….employment opportunities…..basic economics……………

 6. sundar on June 25, 2017 at 10:43 am

  நீதிமன்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குற்றம் வெளிப்படும் வேளையில் குற்றவாளியின் பதிலும் அதற்கு தக்க மாறும் தேர்ந்த குற்றவாளியின் செயல்..ஆனால் எழுத்தாளர் என்பதால் எனக்கு எல்லாம் தெரியும் நான் மேதவி என் மேதவி தனாத்தினால் நான் உணர்தததை ..மக்கள் உணர்ந்து கொள்ள மாட்டார் ..நான் குற்றம் செய்தலும் என் சார்பு நிலையினால் என் குற்றம் பகுப்பு செய்ப்படும்.. ஒருமத அமைப்பு வாங்கும் பணம் அதற்கு இல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது…நேர்மையின் வெளிப்பாடு ..ஆமாம் ..ஐயா ஜேமோ கியும் அவ்வளவு பெரிய அப்பாடக்ரா…அவர் நிலை குறித்து கவலை கொள்ள… காசு புகழ் .. ஒரு தவறை சரியேன சொல்லும் சார்வு செய்யும் இவர்கள் ..

 7. ச.திருமலை on June 26, 2017 at 10:56 am

  ஷங்கரன்

  பொது இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பும் முன்னால் கொஞ்சமாவது சிந்திக்க மாட்டீர்களா என்ன? ஜெயமோகன் தரப்புக் கேள்விகளுக்கு என் அடுத்த பதிவில் பதில் சொல்லியிருக்கிறேன். கீழ்க்கண்ட கேள்விகளுக்கு மட்டும் கீழே:

  சரி ஒரு விவாதத்திற்காக கேட்கிறேன் . கூடங்குளம் அணுஉலை போராட்டத்தின் மூலமாக வேலைவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சி , மின்சார உற்பத்தி ஆகியவற்றை அழிக்க நினைப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால்,

  1. என்னென்ன , எத்தனை வேலைவாய்ப்புகள் கூடங்குளம் திட்டத்தின் மூலம் உருவாக்க உத்தேசிக்கப் பட்டது?

  எந்தவொரு தேசத்தின் முன்னேற்றமும் அதன் அடிப்படைக் கட்டமைப்பைப் பொருத்தே அமையும் அவையாவன: சாலைகள், துறைமுகங்கள், மின்சார பற்றாகுறையின்மை, அறிவியல் ஆராய்ச்சி சாலைகள், தரமான மருத்துவமனைகள், கல்விச் சாலைகள், உயர் கல்வி நிலையங்கள், தண்ணீர், சுகாதாரம் போன்றவையே. அவற்றுள் மின்சாரம் மிக அடிப்படையான தேவை. இந்தியா சுதந்திரன் கிடைத்து 70 ஆண்டுகள் ஆன பின்னரும் மின் தேவையில் இன்னும் பற்றாகுறை நிலையேலேயே உள்ளன. இங்கு முன்பு லஷ்மணப் பெருமாள் எழுதியுள்ள கட்டுரைகளைப் படியுங்கள். மின்சாரம் பற்றாக்குறை உள்ள ஒரு தேசத்தில் தொழில்கள் துவங்கப் பட மாட்டா. தொழில்கள் இல்லாமல் வேலை வாய்ப்புக்கள் உருவாகாது. வெளி நாட்டுத் தொழிற்சாலைகள் இங்கு நிறைய துவக்கப் படாததன் காரணமே இந்தியாவின் மின் பற்றாக்குறை தான். ஆகவே ஏதோ கூடங்குளத்தில் ஸ்விட்ச் ஆன் பண்ணினால் சென்னையில் ஒரு கோடி பேருக்கு உடனே வேலை வாய்ப்பு உருவாகி விடும் என்ற நினைப்பில் இப்படி ஒரு முட்டாள்த்தனமான கேள்வியைக் கேட்ப்பதற்கு முன்பாகக் கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டும். அப்படி யோசிக்கும் சக்தியிருந்திருந்தால் ஏன் இவை போன்ற கேள்விகள் முதலில் தோன்றுகின்றன. ஆகவே கூடங்குளத்துக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கூடங்குளம் உற்பத்தி மூலமாக உற்பத்தியாகும் மின்சாரம் மூலமாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் அவை மூலமாக வேலை வாய்ப்புகள் பெருகும். தமிழகத்தில் வளர்ச்சி பிரதேசங்கள் ஏராளமாக உள்ளன. தாமிரவருணி பாயும் சில இடங்களைத் தவிர்த்து ஒட்டு மொத்த தென் தமிழகமும் ஒரு பெரும் பாலைவனமே. உங்களுக்குத் தமிழகத்தில் பூகோளம் எந்த அளவுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. கேட்டிருக்கும் கேள்வியைப் பார்த்தால் பூஜ்யம் என்பது புரிகிறது. தென் தமிழகத்தில் வறண்ட காலி இடங்களில் விவசாயம் செய்ய தண்ணீர் கிடையாது. நாளைக்கு உபரி மின்சாரம் உற்பத்தியாகும் பட்சத்தில் கடல் நீரை விளை நீராகப் பயன் படுத்த இந்த மின்சாரம் உபயோகப் படும் அதன் மூலமாக தென் தமிழகத்தின் விவசாயம் பெருகும் அதுவும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும். ஒட்டு மொத்தமாக எதையுமே அணுகாகல் இங்கே மின்சாரம் செய்தால் அங்கே வேலை உருவாகுமா என்று கேனத்தனமாகக் கேள்வி கேட்ப்பதை நிறுத்துங்கள். கொஞ்சமாவது புத்தியைப் பயன் படுத்துங்கள்

  2. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன அறிவியல் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டு இப்போராட்டத்தினால் தடைபட்டது? நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை முற்போக்காளர்கள் எதிர்ப்பது வடிகட்டிய மூடத்தனம். ஆனால் அத்திட்டம் தெளிவான குறிக்கோளுடன் முன்னெடுக்கப் படுகிறது. அதே போல் இங்கு என்ன அறிவியல் ஆராய்ச்சி நடத்த திட்டமிட்டனர்?

  நான் கூடங்குளத்தில் அறிவியல் ஆராய்ச்சி தடை பட்டது என்று எங்கே சொல்லியிருக்கிறேன்? கூடங்குளம் என்பது அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரு அணு மின்சார உலை. அங்கு நடக்கும் ஒவ்வொரு உற்பத்தி தொடர்பான செயல்பாடுமே ஒரு விதத்தில் நம் விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பல்வேறு படிப்பினைகளை விளைவுகளைக் கற்று தரும் ஒரு ஆராய்ச்சி போன்றவைதான். நாளைக்கு நியுக்ளியார் சயின்ஸ் தொடர்பான தொடர் ஆராய்ச்சிகள் அந்தப் பகுதியில் தொடரப் படவும் வாய்ப்புகள் உள்ளன. இதை மூடுவதன் மூலமாக எல்லாவற்றையுமே ஒட்டு மொத்தமாக மூடி விடலாம். மேலும் இந்தியாவின் எதிர்கால அணு சக்தி திட்டங்களுக்கான பல்வேறு சோதனைகளை இங்கு செய்ய முடியும். அவையும் தடைப் படும். உதயகுமார் போன்ற உருப்படாத பிரிவினைவாதிகள் பேசுவதைக் கேட்ப்பதற்குப் பதிலாக பார்க்கிலோ, கூடங்குளத்திலோ வேலை பார்க்கும் விஞ்ஞானிகள் பொறியாளர்கள் எவரிடமாவது போய்ப் பேசிப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். ஜெயமோகன்களிடம் கதைகளை மட்டும் படியுங்கள் அறிவியலுக்கும் பொருளாதாரத்திற்கும் அதற்கு உரிய உண்மையான துறைசார் நிபுணர்களிடம் செல்லுங்கள். நியூட்ரினோ பற்றி சீமான் பேசுவதையும் கோபாலசாமி பேசுவதையும் உதயகுமார் உளறுவதையும் கேட்டால் அது இப்படித்தான் இருக்கும். அடுத்த முறை ஜெயமோகன் பெயரைக் காப்பாற்றவாவது கொஞ்சம் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேளுங்கள்

 8. shankaran on June 27, 2017 at 10:46 am

  திருமலை,

  நான் கேட்டகேள்விகளுக்கு நேரடியாக எந்த பதிலும் சொல்லாமல் என் அறிவுத்திறன் குறித்து விமர்சிக்கும் உங்கள் காமாலைக்கண் அறிவை வாழ்த்துகிறேன். எதிரிகளை , குறைந்தபட்ச ஆதாரம் இல்லாமல் வாயார வசைபாடினால் மட்டுமே தேசபக்தி என்று நீங்கள் கருதுவது புரிகிறது. வசதியாக வெளிநாட்டில் இருந்துகொண்டு வாய்கிழிய தேசபக்தி பேசும் கயமையை ஒப்பிடும் போது உள்நாட்டில் வாழ்ந்து கொண்டு நாட்டை விமரிசிப்பது தவறில்லை. நாட்டில் படித்தவர்கள், உங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் சற்றேனும் விஷயம் தெரிந்தவர்களும் வாழ்கிறார்கள்.கண்மூடித்தனமாக வசைபாடும் இன்னொரு உதயகுமார் ஹிந்துத்வர்களுக்கும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி.
  இந்தத் தளம் இன்னொடு வினவு வகை வசைபாடும் இடம் என நினைக்கிறேன்.இனி ஒருபோதும் இத்தளத்திற்கு வரப்போவதில்லை.
  நன்றி.

 9. Ravi on June 28, 2017 at 8:00 am

  Seems here many guys acting like as if doesn’t know difference b/w donation (நன்கொடை) and funding (பண உதவி). The so called student was clearly says professor from Britain “willing to fund” next stage of kudamkulam protest. Interestingly uday kumar spontaneously says if it is cash it is fine, other mode of pay have legal issues but uday kumar gives idea
  1. asking student to get money thru their family members then handover to him.
  2. I will give account number belongs to party to transfer money.

  Why didn’t Uday kumar ask even one question, who was the professor, professor of what kind of studies, which organization he represents, why he wants to fund, what is his background, how does professor know about this protest, why didn’t uday kumar say that I would talk directly to professor,…

  What others points do one need to understand his ulterior motive…!!!

  He played behind scene role in organising and huge crowd management role in jallikattu protest of fools.

  Uday kumar caught red handed but very late.

  Am not surprised about many intellectuals backing him as Tamil Nadu Socio-Politics is controlled by foreign policies of USA, Europe (Britain), uae, Saudi, Pakistan, China.

  Law passed to control middlemen of cattle trade but here it converted as beef ban
  Beef eating people not even 5% in Tamil Nadu but week long debate.
  Coincidentally church and jihads played major role in so called bull protection jallikattu protests same groups discusses cattle trade restrictions as beef ban for weeks as beef eating as fundamental right.

  Wake up guys enough water gone down.

 10. BSV on July 15, 2017 at 8:12 am

  //இந்தத் தளம் இன்னொடு வினவு வகை வசைபாடும் இடம் என நினைக்கிறேன்.இனி ஒருபோதும் இத்தளத்திற்கு வரப்போவதில்லை./

  தவறான முடிவு. ச. திருமலையின் கட்டுரைகள் மட்டுமே அடாவடித்தனமான தமிழில் இருக்கும்.

  பொது இடத்துக்கட்டுரையாளர்கள் ஒரு மொழி நாகரிகத்தைக்கடைபிடிக்க வேண்டும். பேட்டை ரவுடித்தனத்தமிழில் எழுதும்போது, ஒரு தடவை படித்தவர்கள் மறுபடி திரும்பிப்பார்க்க மாட்டார்கள்.

  (Edited and Published)

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*