ஜடாயு உரை: இளங்கோ முதல் தாயுமானவர் வரை

கடந்த  ஜூன்-4, 2017 ஞாயிறு அன்று  அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வளைகுடாப் பகுதியிலுள்ள  பாரதி தமிழ்ச்சங்கம்  என்ற அமைப்பு ஒரு இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்திருந்தது. தனது பணி நிமித்தமாக  அங்கு சென்றிருந்த   தமிழ்ஹிந்து தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்  ஜடாயு  அந்த நிகழ்வில் ‘இளங்கோ முதல் தாயுமானவர் வரை: தமிழ் இலக்கியச் சுடர்கள்‘  என்ற தலைப்பில் உரையாற்றினார்.

“அவரது உரையை கிட்டத்தட்ட இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகள்/படைப்பாளிகள் பற்றிய ஒரு கழுகுப் பார்வை (Bird’s eye view) என்று சொல்லலாம். என்னால் அவர் மேற்கோள் காட்டிய பாடல்களை எல்லாம் நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை…

அவரது உரையின் அடிநாதமாக இருந்தது தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு எல்லாம் அகில இந்தியப் பண்பாட்டோடு இணைந்த ஒன்று, அதன் பகுதி என்ற வாதம். கங்கையும் காசியும் ராமனும் கிருஷ்ணனும் எப்படி அன்றே தமிழர்களின்/இந்தியர்களின் கூட்டு மனநிலையில் (collective psyche) இடம் பெற்றுவிட்டார்கள் என்பதை பல மேற்கோள்கள் மூலம் சுட்டிக் காட்டினார். உதாரணமாக கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டுச் செல்வதை அயோத்தியை விட்டு ராமனும் சீதையும் நீங்குவதோடு ஒப்பிட்டு இளங்கோ பாடி இருப்பதை மேற்கோள் காட்டினார். ராமன் சர்வசாதாரணமாக மேற்கோளாகக் காட்டவும் பட்டு, அந்த மேற்கோள் சர்வசாதாரணமாக புரிந்து கொள்ளவும் பட்டால் ராமனின் கதை அனைவரும் அறிந்ததாகத்தானே இருக்க வேண்டும்?.. “

என்று இந்த உரை குறித்த தனது பதிவில்  ஆர்.வி.  குறிப்பிடுகிறார்.

முழு உரையின் ஆடியோ பதிவை இங்கே கேட்கலாம்.

வீடியோ பதிவு  இங்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *