முகப்பு » அறிவிப்புகள், ஊடகங்கள், நிகழ்வுகள், பொது

தமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017


இந்து ஊடக அமைப்பான விஸ்வ சம்வாத்  கேந்திரம் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் ஆக்கபூர்வமாக இந்து சிந்தனையை வளர்ப்பவர்களை கௌரவித்து ’நாரதர் விருதுகளை’ வழங்கி வருகிறார்கள்.  நாரத மகரிஷி ஆதிமுதல் ஊடகவியலாளர்  என்பதால் அவர் பெயரில் விருது.

இவ்வருடம் சென்னை மையம் அளிக்கும் விருதுகளுக்கு சத்யா (துக்ளக்),  ஜடாயு (தமிழ்ஹிந்து.காம்), மீனாக்ஷி (மங்கையர் மலர்), பத்மன்ஜி  ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.

“தமிழ்ஹிந்து இணையதளம் உண்மையில் பல நண்பர்களது கூட்டு முயற்சியாலும் உழைப்பாலும் உருவாகி வளர்ந்தது. தளத்தின் உருவாக்கம், நிர்வாகம், ஆசிரியர் குழு, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றில் பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் இவ்விருதை உரித்தாக்குகின்றேன். தங்கள் படைப்புகளை அளிக்கும் எழுத்தாளர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கும் நன்றி” என்று ஆசிரியர் குழு உறுப்பினர் ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்ஹிந்துவின் ஒட்டுமொத்த ஆசிரியர் குழுவின் சார்பாக,  மேற்கண்ட கருத்தை வழிமொழிகிறோம்.

இத்தளத்தின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும்  கணிசமான பங்களித்தவர்கள் மற்றும் தொடர்ந்து பங்களித்து வருபவர்கள் என்ற வகையில் அரவிந்தன் நீலகண்டன், ஆனந்த கணேஷ், ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், ச.திருமலை,  ஸ்ரீகாந்த், ஹரன்பிரசன்னா, ம.வெங்கடேசன்,  எஸ்.கே, மதுரபாரதி, ஹரி கிருஷ்ணன், சேதுபதி அருணாச்சலம்,   சேக்கிழான், வீர.ராஜமாணிக்கம், ஒரு அரிசோனன், தேசிகன், ராமச்சந்திர சர்மா ஆகியோரை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.

தமிழ்ஹிந்து இணையத்தின் வாசகர்களையும் அபிமானிகளையும் விருது விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: ஜூன் 10, 2017,  சனிக்கிழமை  மாலை 6 மணி

இடம்:  TAG அரங்கம், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் மேல்நிலைப்பள்ளி, 54, பர்கிட் சாலை, தண்டபாணி தெரு, தி.நகர், சென்னை – 17.


குறிச்சொற்கள்: , , , , , , , , ,

 

5 மறுமொழிகள் தமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017

 1. karthikeyan on June 7, 2017 at 12:16 pm

  விருதுகள் பெற்ற அனைவருக்கும், குறிப்பாக திரு.ஜடாயு அவர்களுக்கு, வாழ்த்துக்கள்.

 2. மாலதி சிவராமகிருஷ்ணன் on June 8, 2017 at 12:19 am

  மனமார்ந்த வாழ்த்துக்கள் !
  இது இந்து தளம் ஆசிரியர் குழுவினர்,மற்றும் அதில் தொடர்ந்து பங்களித்து வரும் எழுத்தாளர்கள் அனைவரின்
  கடும் உழைப்பு,அர்ப்பணிப்பு,நம்பிக்கை இவற்றுக்கு கிடைத்த அங்கீகாரம் ! உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக
  இருக்கிறது .

 3. அடியவன் on June 8, 2017 at 6:12 pm

  மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்.

 4. dr.A.Anburaj on June 11, 2017 at 9:28 pm

  மனமார்ந்த வாழ்த்துக்கள் !
  இது இந்து தளம் ஆசிரியர் குழுவினர்,மற்றும் அதில் தொடர்ந்து பங்களித்து வரும் எழுத்தாளர்கள் அனைவரின்
  கடும் உழைப்பு,அர்ப்பணிப்பு,நம்பிக்கை இவற்றுக்கு கிடைத்த அங்கீகாரம் ! உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 5. Meenakshi Balganesh on June 20, 2017 at 11:51 am

  தமிழ் ஹிந்துவிற்கும் திறம்பட அதனை நிர்வகித்து வரும் திரு. ஜடாயு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  பல்லாண்டு வாழ்க!வளர்க!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*