வேதங்களில் விதவை மறுமணம்

ரிக்வேதம் பத்தாவது மண்டலம் பதினெட்டாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது (10.18). இறந்த மனிதனின் சகோதரர்களும் மற்ற உறவினர்களும் அவன் மனைவிக்கு சொல்வது போல:

‘ ஓ, பெண்ணே உன் கணவனை தகனம் செய்ய அனுமதிப்பாயாக. வாழும் உன் குடும்பத்தாரிடம் செல்வாயாக. உன் பிள்ளைகள் உன் பேரப்பிள்ளைகள் போன்றவர்கள் இருக்கும் உன் வீட்டிற்கு செல்வாயாக. உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.’

இன்னொன்றும் சொல்கிறது ரிக் வேதம் – விதவைகளுக்கு மறுமணம் உண்டு என்கிறது. இறந்த பெண்ணின் கணவனின் வில்லை எடுத்து கொண்டு இந்த பெண்ணை மணம் செய்ய முடிவுசெய்துள்ளவன் சொல்வது போன்ற ஒரு சுலோகத்தை இவ்வாறு கூறுகிறது – 

‘பெண்ணே இதோ சிதையில் இருக்கும் இவன் வில்லை நான் எடுத்து கொண்டேன். இது எனக்கு புகழையும், வலிமையையும், சக்தியையும் அளிக்கட்டும். இங்கு இருக்கும் இந்த உயர்ந்த மனிதர்களுடன் இணைந்து நம்மை எதிர்ப்பவர்களை நாம் வெல்வோம்.’

‘பெண்ணே இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக” என்று அந்த விதவையை வாழ்த்துகிறது இன்னொரு சுலோகம்.

அதே மண்டலத்தின் பத்தொன்பதாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது:

” நாம் உறுதியும் தைரியமும் கொண்ட ஒரு புதிய வாழ்வை மேற்கொள்வோம் மகன்களை பெறுவோம் நம்மை வீழ்த்த நினைக்கும் எந்த ஒரு எதிர்ப்பையும் நாம் வெற்றிகொள்வோம்”.

4000 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டது அன்றைய வாழ்நிலை என்ன என்பதை காட்டும் கண்ணாடி ஹிந்து மதத்தின் ஆணிவேர் இதுவே. வேதங்களை அன்றி ஒரு சனாதன ஹிந்து வேறெதையும் மேற்கோள் காட்ட இயலாது என்றும் மாறா தன்மை உடையது அதனாலேயே சுருதி என்றழைக்கப்படுவது.

கணவன் தொலைந்து போய்விட்டாலோ, மரணமடைந்தாலோ, துறவியாகி விட்டாலோ, ஆண்மையற்று இருந்தாலோ, நடத்தையில் வீழ்ந்தாலோ இந்த ஐந்து சூழல்களிலும் பெண்கள் வேறொரு கணவனைத் தேடிக்கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டுள்ளது.

– பராசர ஸ்மிருதி, 4.30 (காலம்: பொ.யு 1-3ம் நூற்.)

நமது தர்மசாஸ்திரங்கள் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்கத் தனமாக இருக்கவில்லை, பல இடங்களில் நாம் வியப்படையுமளவுக்கு பெண்ணுரிமைகளை முன்னெடுப்பதாக இருக்கின்றன என்பதற்கு இந்த சுலோகம் ஒரு சான்று. “கணவனை இழந்தார்க்குக் காட்டுவது இல்.. “ என்று சிலப்பதிகாரம் கைம்பெண்ணின் துயரம் பற்றிப் புலம்புவதற்கு முற்பட்ட காலத்திலேயே இந்த ஸ்மிருதி எழுதப்பட்டிருக்கிறது, இதன் நடைமுறைகள் புழக்கத்திலும் இருந்திருக்கலாம் என்பதைக் கவனிக்க வேண்டும்.

நஷ்டே ம்ரு’தே ப்ரவஜிதே க்லீபே3 ச பதிதே பதௌ
பஞ்சஸ்வாபத்ஸு நாரீணாம் பதிரன்யோ விதீ4யதே.வாலியின் மரணத்திற்குப் பின் சுக்ரீவனுடன் வாழ்ந்தவள் தாரை (வால்மீகி ராமாயணப்படி). ராவணன் மரணமடைந்தவுடன் உயிரை விட்டவள் மந்தோதரி. இருவரையும் மாதரசிகள் என்று தான் நமது மரபு போற்றுகிறது.ஆனால், கம்பர் தாரை விதவைக் கோலத்தில் இருந்ததாக சித்தரிக்கிறாரே என்று கேட்கலாம். வால்மீகிக்கும் கம்பருக்குமிடையில்  குறைந்தது 1500 ஆண்டு கால இடைவெளி இருந்திருக்கிறது (ஒப்பீட்டில் நமக்கும் கம்பனுக்குமான கால இடைவெளி 800 ஆண்டுகள் தான்).  எனவே இது வடநாட்டு தென்னாட்டு வேறுபாடு அல்ல, *காலகட்டத்தின்* வேறுபாடு. கம்பர் எழுதியது  அவர் வாழ்ந்த 12ம் நூற்றாண்டு  சோழநாட்டு சமூக நடைமுறைகளையும் கருத்தில் வைத்துக் கொண்டு தானே அன்றி, நேரடியான ராமாயண மரபை அல்ல. இதே ரீதியில் தான், வால்மீகத்தில் வேட்டையாடி உண்ட ராம லட்சுமணர்களை மரக்கறி உணவாளர்களாக கம்பர் ஆக்கியிருக்கிறார்.

– ஜடாயு ஃபேஸ்புக் பதிவிலிருந்து.

பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு உண்டு; அது அவன் இறந்த பிறகும் உண்டு என்கிறது ரிக் வேதம்.  இதைத் தான் உச்ச நீதிமன்றம் 1995 இல் குறிப்பிட்டு எடுத்து ஹிந்து வாரிசுரிமை சட்டத்தை திருத்தி விதவைகளுக்கு கணவன் சொத்தில் பங்கு உண்டு என்றது.

சதி என்பது ஹிந்து மதத்தின் கருத்து அல்ல. அது செமிட்டிக் மதங்களின் கருத்து. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது. அது பெண்களுக்கு கட்டாயம் அல்ல. காதல் கணவனை பிரிந்த பெண்கள் பிரிவின் துயரம் தாளாமல் அதை செய்தார்கள். பின் நாளில் அந்நிய படையெடுப்புகள் பெண்களை வன்கொடுமையும் பாலியல் வல்லுறவும் செய்ததால் வேறு வழியின்றி ஜவுஹார் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

ஐரோப்பியன் காட்டில் கரடித்தோலை அணிந்து கொண்டு, மானையும் காட்டுப்பன்றியையும் வேட்டையாட கல்லாயுதங்களை எடுத்துக்கொண்டு அலைந்த போது, பாலுறவு என்றால் என்ன என்றே தெரியாமல் மிருகம் போல பெண்களை புணர்ந்த போது,  இங்கு  நமது நாட்டில் இத்தகைய உயர் கலாச்சாரம் பின்பற்றப்பட்டது.  ஏதோ வெள்ளைக்காரன் தான் இந்தியாவில் சமூக சீர்திருத்தங்களை செய்தான், ஈரோடு ராமசாமி வந்து தான் பெண்ணடிமை தனத்தை எதிர்த்தார் என்றெல்லாம் ஜல்லி அடிப்பவர்கள் இதையெல்லாம் படிக்கவில்லை. படித்தவர்களும் சொல்லவில்லை.  என்ன செய்ய?

(ஆர்.கோபிநாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியவற்றிலிருந்து)

6 Replies to “வேதங்களில் விதவை மறுமணம்”

  1. அற்புதமான தொகுப்பு திரு கோபிநாத் அவர்களுக்கு தமிழ் இந்து தல வாசகர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றி.தமிழகத்தில் உள்ள நாத்திக இயக்கங்களும், மத மாற்ற ஏஜெண்டுகளின் சொம்புகளான கைக்கூலிகளும் இந்து மதத்தில் விதவை விவாகம் எனப்படும் மறுமணத்துக்கு இடம் இல்லை என்பது போல பொய்ப் பிரச்சாரங்களை செய்து ஏமாற்றிவருகிறார்கள்.ஆனால் கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்வது மட்டுமல்ல , கணவன் உயிருடன் இருக்கும் போதே, கணவன் தொலைந்து போய்விட்டாலோ, துறவியாகி விட்டாலோ, ஆண்மையற்று இருந்தாலோ, நடத்தையில் வீழ்ந்தாலோ இந்த ஐந்து சூழல்களிலும் பெண்கள் வேறொரு கணவனைத் தேடிக்கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டுள்ளது.

    – பராசர ஸ்மிருதி, 4.30 (காலம்: பொ.யு 1-3ம் நூற்.)

    ஈவேரா போன்ற அரைகுறை நாத்திகர்கள் எதையுமே ஒழுங்காக படிக்காமல் வாய்க்கு வந்தபடி விமரிசனங்கள் செய்து , தங்களை மேதை போல காட்டிக்கொண்டு தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழன் காட்டுமிராண்டி என்றும் சொல்லி ஊரை ஏமாற்றினார்கள். ஈவேராவை தலைவர் என்று சொல்பவன் உண்மையான தமிழனுக்கு பிறந்தவன் ஆக இருக்கமாட்டான்.

  2. //4000 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டது அன்றைய வாழ்நிலை என்ன என்பதை காட்டும் கண்ணாடி ஹிந்து மதத்தின் ஆணிவேர் இதுவே.//
    ரிக் வேதத்தின் காலம் 1500 BCE என காலனியாதிக்கத்தின் கீழ் பணியாற்றியவர்களால் தவறாக வேண்டுமென்றே நிர்ணயிக்கப்பட்டது.தற்போதைய கணிப்புகளின்படி 6000 BCE – 4000 BCE என்பதே சரியெனப் படித்ததாக நினைவு.
    தவறு எனில் திருத்தவும்.

  3. மிக நீண்ட காலத்தின் பின்னர் தமிழ்ஹிந்து தளத்தில் மிகவும் விவாதத்திற்குரிய இக்கட்டுரை வெளிவந்தமை மகிழ்ச்சி தருகிறது. கட்டுரை ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்..மிகவும் சிந்திப்பதற்கும் ஆலாய்வதற்கும் உரிய அழகிய கட்டுரை உருவாகும்…

  4. இது சிந்தனைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் விவாதத்திற்கும் உரிய கட்டுரை.. மிகவும் மகிழ்ச்சி.. இவ்வாறு ஒரு கட்டுரை தந்த எழுத்தாளருக்கு நல்வாழ்த்துக்கள்..

  5. சதி போன்ற பழக்க வழக்கங்கள் உயா்ந்த சாதி மனப்பான்மை சாதி அடிப்படையில்

    மானம் ரோசம் என்று பித்ற்றிக் கொண்ட கூட்டம் அந்திய ஆட்சி காரணமாக கொண்ட

    முட்டாள்தனமாக பின்பற்றியது.

    எனக்கு 4 அத்தைகள். இருமாமாக்கள் திருமணம் ஆகி சில வருடங்களில் பொிய

    அம்மைக்கு இறந்து விட்டாா்கள். இருஅத்தைகளும் மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்தாா்கள்.

  6. பெண்களுக்கு இந்துமதத்தில் எப்பொழுதுமே எல்லா காலத்திலும் உயர்வான நிலையையே கொடுத்துள்ளனர்.பெண்களுக்கு உயர்வான
    நிலை இந்து மதத்தில் இருந்ததனால்தான் கைகேயிஎன்ற பெண்ணின் சத்தியத்தை தசரதன் காப்பாற்றினான். சீதை என்ற பெண்ணின் பெருமை காப்பாற்ற பட வேண்டும் என்பதாலேயே ராமாயண யுத்தம் ஏற்பட்டது.
    தாரை, வாலி இறப்பிற்கு பிறகு சுக்ரீவனை கரம் பிடித்தது பெண்களைப்பற்றிய இந்துமதத்தின் ஒரு முற்போக்கு சிந்தனையே .
    சர்வவல்லமை படைத்த இராவணன் தன மனைவி மண்டோதரியை
    மிகவும் மரியாதையுடன் நடத்தினான் என்பது ராமாயண நிகழ்வு
    அவ்வளவு ஏன் கூனி என்ற பெண் அரசியல் சதிராடும் அளவிற்கு திறமை
    பெற்றிருந்தால் என்றால் ஆண் சமுதாயம் அவளை தனக்கு நிகராக
    வைத்திருந்தது என்றுதானே அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *