ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்

ஜி எஸ் டி தொடர்பாக எழுந்துள்ள சில கேள்விகளும், அவற்றுக்கான எனது விளக்கங்களும்:

(1)

அதிகபட்ச விலைக்கும்(MRP) ஜிஎஸ்டிக்கும் என்ன வித்தியாசம்?

சில்லறை கடைகளிலே எம் ஆர் பிக்கு விற்பதும், ஹோல்சேல் கடைகளிலே விலையை குறைத்து தருவதும் உண்டே அப்படியானால் உண்மை விலை தான் என்ன? என நண்பர்கள் கேட்கிறார்கள்.

எம் ஆர் பி என்பது எல்லா வரிகளையும் கட்டிய பின்பு வருகின்ற அதிகபட்ச விலை. அந்த வரிகளை தயாரிப்பாளரே கணக்கிட்டு கட்டிவிட்டு அதை பொருளிலும் அச்சடித்து விட்டு விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என்பது தான் விதி. உற்பத்தி செய்பவரே கட்டாவிட்டாலும் இது தான் அதிகபட்ச விலையாக இருக்கமுடியும் என உற்பத்திசெய்பவரே கணக்கிட்டு வைத்திருக்கவேண்டும்.

அதாவது தமிழ்நாட்டிலே தயாரித்து அசாமிலே கொண்டு போய் விற்றால் கூட எவ்வளவு விலை வருமோ  அதையும் கணக்கிட்டு பொருளிலே அச்சடிக்கவேண்டும். தமிழ்நாட்டிலேயே விற்றால் விலை குறைவாகத்தானே இருக்கவேண்டும்? இதனால் தான் ஹோல்சேல் கடையிலே விலை குறைவாக இருக்கிறது. சில்லறை கடைகளிலே விலை அதிகமாக இருக்கிறது.

இதை கொண்டுவந்ததே 1990 இல் தான். வரி ஏய்ப்பை தடுக்க என சொல்லி கொண்டு வந்தார்கள்.

அப்படியானால் அதிகபட்ச விலை என்பது பொருளை வாடிக்கையாளருக்கு விற்பதற்கு முன்னரே கடைக்காரர் வரி கட்டியிருக்கவேண்டும் அல்லது வரி உட்பட கட்டி வாங்கியிருக்கவேண்டும்.

இதிலே அந்த பொருள் அழுகியோ அல்லது விற்காமல் போயோ நட்டம் ஏற்பட்டால் வரியும் சேர்த்து நட்டம். அதுக்கு என்ன செய்வாங்ன்னா எம் ஆர் பியை இரண்டு மடங்கு மூன்று மடங்காக போட்டுவிடுவார்கள்.

சினிமா தியேட்டரிலே விற்கும் பொருட்களின் எம் ஆர் பி மிக அதிகமாக இருக்கும். ஏன்னா, சட்டம் என்ன சொல்கிறது?

அதிகபட்சவிலைக்கு அதிகமாக விற்க கூடாது என மட்டும் தான். அதிக பட்ச விலை என்பது எவ்வளவு? அதை எப்படி கணக்கிடுவது என சொல்லவில்லை. அதனால் விற்பனையாளர் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச விலை போட்டுக்கொள்ளலாம். சினிமாதியேட்டருக்கு தனியே கவர் அச்சடித்து அதிலே அதிகவிலை போடுவார்கள். ஒரே பொருளுக்கு இரண்டு அதிகபட்சவிலை இருக்கும். ஒன்று வெளியே இன்னோன்னு சினிமா தியேட்டருக்கு உள்ளே.

கேட்பாரில்லை. சட்டப்படியே அரசு ஏதும் கேட்க முடியாது.

இந்த இடத்திலேதான் ஜிஎஸ்டி வருகிறது. ஒரே பொருளை இரண்டு விலை வைத்து விற்றால் சட்டப்படி குற்றம்.

ஜிஎஸ்டி என்பது விற்றதுக்கு பின்னர் போடும் வரி. அதாவது, செய்யும் வேலைக்கு மட்டும் அரசு வரி விதிக்கிறது. விற்காவிடில் வரி கட்டவேண்டியது இல்லை, வேலை செய்யாவிடில் வரி கட்டவேண்டியதில்லை. அப்படீன்னா பொருளின் விலை எவ்வளவு, வரி எவ்வளவு என சொல்லவேண்டும்.

இங்கிருந்து அசாமுக்கு கொண்டு போகும் பொருளுக்கு முன்னாடியே வரி கட்டவேண்டியதில்லை. விற்கும் போது எவ்வளவு செலவோ அதை கணக்கிட்டு விலை வைத்துக்கொள்லலாம். வரி கட்டி விடலாம். பொருளின் விலை எவ்வளவு வரி எவ்வளவு என சொல்லிவிடலாம்.

சொல்லாட்டி என்னன்னு கேக்குறீங்களா?

வாங்கியது எவ்வளவுக்குன்னு கணக்கை கணினியே தானா எடுத்துகொடுத்துடும். கணக்கு உள்ளே வந்துட்டா ஏமாத்துறது கஷ்டம்.

சரி ஏமாத்தவே முடியாதா? செய்யலாம் ஆனா அதுக்கு ஏகப்பட்ட ஆட்களும் தனியே கணக்கும் வைத்திருக்கவேண்டும். வரியை ஆட்களுக்கு சம்பளமா கொடுத்தே ஆகவேண்டும்.

இன்னமும் அதிகபட்ச விலைக்கான சட்டம் அப்படியே இருக்கிறது. கூடியவிரைவிலே நீக்கப்படும்.

ஜிஎஸ்டி வந்த சில வருடங்கள் கழித்து தனிப்பட்ட நபர்கள் கட்டிய வரியை கழித்துக்கொண்டு வருமான வரி கட்டும் நிலையும் வரலாம். அதான் ஏற்கனவே சம்பாதிச்ச காசை செலவு பண்ணி வரி கட்டியாச்சே, அதுக்கப்புறமும்  அந்த செலவு பண்ணிய காசுக்கும் சேர்த்து வருமான வரி ஏன் என்று சோகத்துடன் கேட்டுக் கொண்டு இருக்கும் நிலை மாறும்.

 

(2)

பிஜேபியும் மற்ற மாநிலங்களும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியை அப்போது எதிர்த்தன. இப்போது மோதி தலைமையிலான பிஜேபி அரசும் அப்போது எதிர்த்த மாநில அரசுகளும் எல்லாரும் சேர்ந்து ஜிஎஸ்டியை சட்டமாக நிறைவேறுக்கிறார்கள்.  இது இரட்டை வேடம் தானே?

இல்லை. இதற்கான காரணங்களை தமிழ்நாடு மாநில நிதி அமைச்சர் ஜெயகுமார் புளிபோட்டு விளக்கியிருக்கீறார்.

மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுவதை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவேண்டும்; அது வெறுமனே வாக்குறுதியாக இல்லாமல் சட்டமாகவே இருக்கவேண்டும் என்பது தான் மாநிலங்களின் கோரிக்கை.

காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. பிஜேபி வந்தவுடன் அது முழுமையாக ஏற்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திலேயே அந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஏன்னா இன்னைக்கு தர்றேன் என சொல்லிட்டு நாளைக்கு முடியாதுன்னு சொல்லிட்டா? அதுக்குத்தான் அது சட்டத்திலேயே இருக்கணும் என மாநிலங்கள் கேட்டன. காங்கிரஸ் முடியாது என சொல்லிவிட்டது.

மாநிலங்களின் வரி இழப்பை சமாளிக்க தனியே நிதி ஏற்படுத்தப்பட்டு அதிலே அதிக வருவாய் சேர்க்கப்படும். மாதாமாதம் 5 ஆம் தேதி மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்படும். இதை மோடி தான் செய்திருக்கிறார். இது 5 வருடங்களுக்கு.

கூடவே மிக வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்கள் தேவைப்பட்டால் 2 வருடங்களுக்கு 1% வரியும் போட்டுக்கொள்ளலாம் என்பதையும் மோடி தான் ஏற்றார்.

மாநிலங்களின் கோரிக்கையான பெட்ரோல், மது, மின்சாரம் போன்றவற்றை வெளியே வைக்கவேண்டும் என்பதும் மோடி அரசால் தான் ஏற்கப்பட்டது.

ஜிஎஸ்டி கூட்டம் மாதம் முதல் சனிக்கிழமை காலை 11 மணீக்கு கூடும். அதிலே எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம். மாநிலங்களுக்கு 2/3 ஓட்டும் மத்திய அரசுக்கு 1/3 ஓட்டும் உள்ளது.

மாநிலங்கள் நினைத்தால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வரியை மாற்றிவிடலாம்.

நம்மூர் டுபாக்கூர்களோ சும்மா எப்படி பிஜேபி எதிர்த்தது பிறகு ஆதரித்தது என்று வெத்துக்கு ஒன்றும் தெரியாமல்  கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

(3) 

ஏன் ஜிஎஸ்டியை சிலர் இப்படி எதிர்க்கிறார்கள்?

ஜிஎஸ்டியை எல்லோரும் ஆதரிக்கவைக்க மோடி செய்யவேண்டியது – விற்பனை செய்யும் பொருளை விற்பவர் கணக்கிலே விற்றதாகவும், வாங்குபவர் கணக்கிலே வாங்கியதாகவும் கணக்கிடப்படும் என்பது மட்டும் இருக்காது என சொன்னால் போதும்.

அம்புட்டுத்தான். உடனே எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு ஆதரிப்பார்கள்.

இதுக்கு முன்னாடியும் வரிபோட்டாங்க. ஆனா வரி எம்புட்டு இருந்தா என்ன? கட்டினாத்தானே அதைப்பத்தி கவலைப்படனும் என இருந்தாங்க. 28% என்ன 208% போட்டாலுமே கவலை இல்லேன்னு இருந்தாங்க.

முன்னாடி மாநில வரி, மத்தியவரி, கலால் வரி, சுங்க வரின்னு நூத்துக்கணக்கிலே வரி தாக்கல் செய்யனும். இருந்தப்பவும் ஒண்ணும் சொல்லல. கணக்கு காட்டினால் தானே எத்துணை வரி, எம்புட்டு சான்றிதழ் என கவலைப்படணும். அதான் வரியே கட்டப்போறதில்லே. அப்புறம் எத்தனைன்னு எதுக்கு கவலைப்படணும்?

இப்போ? வாங்கினாலும் வித்தாலும் எப்படியும் கணக்கு காட்டியே ஆகணும். இல்லாட்டி வாங்கினவரும் வித்தவரும் கணக்கு காட்டியாச்சுன்னா முடிஞ்சது சோலி.

இதை வெளிப்படையா சொல்ல வேற செய்யறாங்க. நாங்க கச்சா பில், இரண்டாம் கணக்கு வைச்சிருக்கோம், எப்படி வரி கட்டறதுன்னு அமைச்சர்ட்டையே கேக்குறாங்க.

வியாபாரி வரி கட்டமாட்டாங்க. விவசாயி வரி கட்டமாட்டாங்க. அப்ப யாரு தான் வரி கட்டுறது?

அதான் இளிச்சவாய மாச சம்பளக்காரங்க இருக்காங்களே, அவிங்க கட்டவேண்டியது தான். அதிலும் முக்கியமாக இந்த தகவல் தொழில்நுட்பத் துறையிலே (ஐடி)  16 மணிநேரம் வேலை செய்யும் இளிச்சவாய் ஆட்கள் மட்டும் கட்டினா போதாதா?

சரி. வரி கட்டாத வியாபாரிகள் மருந்துகளை, உணவுப்பொருட்களை குறைந்தவிலைக்கு விப்பாங்களா? அதெப்படி?

அதையும் இந்த இளிச்சவாய் மாச சம்பள கூட்டம் கேள்வி கேக்கப்பிடாது.

இதுல ஜிஎஸ்டி பாசிசமாம், உரிமைய பறிக்குதாம், தொழிலாளர் வயிற்றிலே அடிக்குதாம். கொடுமை.

(4)

பிஸ்கட் ஜிஎஸ்டி வரி 18% – உண்மை என்ன?

போனமாசம் வரைக்கும் கஞ்சியும் கூழும் தான், அதுவும் ராகி கஞ்சியும் சோளச்சோறும் தான் தமிழன் உணவுன்னு கூவின ”டமிலர்கள்”, இன்னைக்கு,  ஐயோ ஏழைத்தமிழன் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18% சதம் வரியா என குவாட்டர் மப்பிலேயே கூவுதுகள் !

முதல்ல இப்போ இருக்கும் வரி சதம் என்ன? கிலோ 100க்கு கீழே இருக்கும் பிஸ்கட்டுகளுக்கு வரி 8-10 %. அதுக்கு மேலே அதாவது கிலோ 100 க்கு மேலே விற்கும் பிஸ்ட்கட்டுகளுக்கு வரி 18%. ஜிஎஸ்டியிலே இந்த வரி எல்லா பிஸ்கட்டுகளுக்கும் ஒரே மாதிரியாக 18% சதம் ஆக்கப்பட்டிருக்கிறது.

இதிலே குளுக்கோஸ் பிஸ்கட் என ஒரு தனி வகையும் உண்டு. அதுவும் குறைவான விலையா வைச்சு 8-10% சதம் போட்டுட்டு தான் இருக்காங்க. அதுவும் இப்போ 18% சதத்துக்கு போகும்.

5 ரூபா , 10 ரூபாக்கு விக்கும் பிஸ்கட்டுகள் எல்லாம் கிலோ 70-80 ரூபா வரும். அதுக்கெல்லாம் ஒரு 8% வரி ஏறும். அதாவது 40 பைசா. கிலோவுக்கு 5 ரூபா 60 பைசா. 100 கிராம் பிஸ்கட் 10 ரூபாய்க்கு மேலே போயிட்டாலே அதுக்கெல்லாம் ஏற்கனவே 18% சதம் வரி இருக்குது. அது அப்படியே ஜிஎஸ்டியிலே தொடர்கிறது. அதன் விலைகளிலே மாற்றம் இருக்காது.

இதிலே பிரட் முதலான பொருட்களுக்கு வரியே கிடையாது. அதை கண்டுக்கறதே இல்லை. முன்னே அதுக்கும் வரி இருந்தது.

ஜிஎஸ்டியிலே ஏழைகளின் உணவுப்பொருட்கள், பால் இன்னபிற எதுக்கும் வரியே கிடையாது. அது இங்கே இருந்து வித்தாலும் சரி, பக்கத்து மாநிலத்திலே இருந்து எடுத்துட்டு வந்தாலும் சரி.

கர்நாடகா, ஆந்திராவிலே இருந்து வரும் அரிசி, வடமாநிலங்களிலே இருந்து வரும் பருப்பெல்லாம் இனி விலைகுறைவாக இருக்கும். ஏன்னா மாநிலத்துக்கு மாநிலம் இருந்த வரியெல்லாம் போயிடுது. செக்போஸ்டிலே காசு அழுவது, பில்லுக்கு லஞ்சம் கொடுப்பது என்ற பேச்சே இருக்காது.

ஆனா நம்மூர் டுபாக்கூருகளுக்கு இதெல்லாம் தெரியுமா? அதுகளுக்கு படம் போட்டு காட்டினாத்தான் புரியுமே.

அதைக்கூட விட்டுடலாம், ஆனா காலையிலே எழுந்து பிரட்டிலே பட்டர் தடவி டீயோட குடிக்கறது தான் டமிலன் கல்ச்சர் அப்படீன்னுதுகளே அதைத்தான் பொறுக்க முடியல.

யாராச்சும் இதை பொதுஜனத்துக்கு எல்லாம் எடுத்துச் சொல்லுங்க.

(5)

ஜிஎஸ்டியின் மிகப்பெரும் நன்மை என்ன?

வரிக்கு வரி போட்டுக்கொண்டு இருப்பது குறையும். விலையும் வெகுவாக குறையும்.

இப்போது நீங்கள் ஒரு தயாரிப்பாளர் என வைத்துக்கொள்ளுங்கள், பேக்கரி என வைத்துக்கொள்ளலாம். நீங்கள் 100 ரூபாய்க்கு மாவு இன்னபிற எல்லாம் வாங்கி கேக் செய்கிறீர்கள். அதுக்கு வரியாக 10 ஆகிறது, கேக் செய்ய 100 ரூபாய் ஆகிறது. இப்போது மொத்த செலவு 100+10+100 = 210. கேக் விற்க வரியாக 10 சதம் இருக்கிறது என வைத்துக்கொண்டால் கேக்கை 210+21 = 231 க்கு விற்கவேண்டும் இல்லையா? இது தான் இப்போது நடக்கிறது.

ஜிஎஸ்டியிலே எப்படி?

கேக் பொருள்கள் = 100, ஏற்கனவே செலுத்தப்பட்ட வரி 10, தயாரிப்பு செலவு 100 என்றால் மொத்த வரியிலே ஏற்கனவே செலுதப்பட்டவரியை கழித்துவிட்டு மிச்சம் இருப்பதற்கு மட்டும் வரிபோடுவார்கள். கேக்கின் விலை 200 ரூபாய், அதற்கு வரி 20 ரூபாய் என்றால் ஏற்கனவே செலுதப்பட்ட வரியான 10 ஐ கழித்துவிட்டு 10 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.

அதாவது கேக் தயாரிப்பாளர் செய்தவேலையான 100 க்கு மட்டும் வரியாக 10 ரூபாய் செலுத்தினால் போதும். ஏற்கனவே கட்டிய பொருளுக்கும் அதன் வரிக்கும் சேர்த்து வரி கட்டவேண்டியதில்லை.

இது கேக் என மட்டும் சொல்லியிருக்கேன். ஆனால் பல பொருட்கள் பல இடங்களிலே மாறித்தான் கைக்கு வந்து சேருகிறது.  உதாரணமாக, உடைகள். நாம் அணியும் உடைகளை பருத்தியிலே இருந்து நூலாக்குவது ஒருத்தர். அதுக்கு சாயம் போடுவது ஒருத்தர். அதை துணியாக்குவது ஒருத்தர். அதை தைப்பது ஒருத்தர் என ஏகப்பட்ட வேலைகள் நடக்கின்றன.

முன்பு, இதிலே வரிக்கு வரி அந்த வரிக்கு வரி என ஏற்றி ஏற்றி, தயாரிப்பு விலை 100 ரூபாய் என்றால் வரியே 100 ரூபாய் ஆகும் நிலை இருந்தது. இனி அது இருக்காது.
வட்டிக்கு வட்டி போடுவது போல் மக்களை கசக்கி பிழிந்து கொண்டு இருந்தது குறையும். இதனால் மக்கள் கணக்கே காட்டாமல் இருந்தார்கள். அதுவும் குறைவதால் அரசுக்கும் வரி வருமானம் அதிகரிக்கும்.

செய்யும் வேலைக்கு அல்லது சம்பாதிக்கும் காசுக்கு மட்டும் வரி கட்டினால் போதும்.

இதிலே வரி ஏய்ப்பும் செய்ய முடியாது. ஏன்? இந்த வரிக்கு வரி கட்டக்கூடாது என்றால் வாங்குபவரும் விற்பவரும் கணக்கு காட்டவேண்டும். நான் இவரிடம் இருந்து வாங்கினேன், இதற்கு இவர் வரி கட்டிவிட்டார் எனவே நான் கட்டவேண்டியதில்லை என கணக்கு காட்டினால் ஒழிய இந்த முறையிலே பலன் அடைய முடியாது. இது தப்புன்னு பலர் இப்போ கொடி பிடிக்கறாங்க. ஆனா எப்படி அரசுக்கு இதுக்கு வரி முன்னாடியே கட்டியாச்சுன்னு தெரியும் எனவும் சொல்லல.

இதனால் 28 சதவீதம் என இருந்தாலும் இப்போது இருப்பதை விட விலைகள் மிகவும் குறையும். சரி, வரி விலக்கை பெற்றுவிட்டு அதிக விலைக்கு விற்றால் என்ன செய்வது?
அப்படி செய்தால் முறையற்ற முறையிலே லாபம் சம்பாதித்ததாக தண்டத்தொகை விதிக்கப்படும்.

சரி, மக்களுக்கு இதனால் நல்லது தானே; ஏன் பலர் கூவுகிறார்கள் என கேட்கலாம். மக்கள் பயன் அடைகிறார்களே, அதான் பிரச்சினை. இப்படி வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் பிஜேபி நல்லது செய்வதை விடலாமா?

குறிப்பு : மேலே கேக் விலை எல்லாம் ஒரு உதாரணத்திற்கு கொடுத்திருக்கேன்.

(6) 

ஜி எஸ் டியிலே சினிமா வரியிலே இவர்களின் கோரிக்கை தான் என்ன?

இப்போ இருக்கும் 15 சதம் வரி 28 சதமா ஆகப்போகுது. 13 சதம் உயர்வு. அப்படீன்னு சொல்லலாம். ஆனா தமிழ்நாட்டிலேயே 20% இல் இருந்து 30 சதம் வரைக்கும் இப்போ இருக்கு. அது குறைஞ்சோ அல்லது ஒரே மாதிரியா 28 சதம் ஆகப்போகுது, நல்லதுன்னும் சொல்லலாம்.

இது தான் பிரச்சினை என நீங்க நினைக்கலாம். ஆனா இவிங்க கேக்குறது அது அல்ல.

டிக்கட் குறைந்த பட்ச விலை 120ரூ அப்படீன்னா அதுக்கு மட்டும் தான் வரி போடனும். டிக்கெட்ட 1000க்கு வித்தா மிச்ச 880 ரூபாய்க்கு வரி போடக்கூடாது அப்படீன்றது தான் இவிங்க கோரிக்கை.

இப்பவும் அப்படித்தான் நடக்குது. டிக்கெட் குறைந்த பட்ச விலை 120ன்னு தமிழக அரசு வைச்சிருக்கு. அதை வைச்சுட்டு டிக்கெட்ட 5000 ரூபாய்க்கு வித்தாலும் 120க்கு மட்டும் தான் இப்ப வரி கட்டுறாங்க. மிச்ச 4880ரூபாய்க்கு எந்த வரியும் கிடையாது. கணக்கும் காட்டுறது இல்லே. அப்படியே கருப்பு பணமா போகுது.

இப்போ மொத்த டிக்கெட் விற்பனைக்கும் கணக்கு காட்டணும். வருமான வரி உட்பட எல்லாம் கட்டணும்.

இது சினிமா தியேட்டர்களுக்கு அப்படீன்னா, லாபத்திலே பங்குன்னு விநியோகஸ்தர்களும் தயாரிப்பார்களும் ஒப்பந்தம் போட்டிருந்தா, தியேட்டர்கள் கொடுக்கும் பணமும் கணக்கு காட்டப்பட்டு தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் போகும்.

அப்போ நடிகர்களும் மொத்தத்துக்கும் கணக்கு காட்டணும்; வரி கட்டணும் இல்லையா? அதான் பிரச்சினை.

இதை வெளிப்படையா வெளிய சொல்றாங்கன்னா பாத்துகோங்க.

“We are still looking for clarity on ticket prices. It looks like the exemptions granted for Tamil films would go under the GST. If the ticket price is going to be capped at ₹120, it is going to be unsustainable for us,” Nitin Sood, CFO of PVR, a leading multiplex company, said.

“The ₹120 cap would be taken as base price and 28% GST would apply to it. Another issue is most states have allowed local bodies to collect entertainment taxes. Since local bodies are not part of GST, they can levy their own entertainment taxes which would be a steep increase,” said Utkarsh Sanghvi, tax partner — media and entertainment at EY India.

https://www.thehindu.com/…/confusion-ove…/article18516737.ece

இப்போ கேக்க வேண்டிய கேள்வி – இது நியாயமா?

ஒண்ணு மக்களிடமிருந்து  வாங்கும் பணத்துக்கு வரி கட்டுங்க. இல்லாட்டி 120 மட்டும் வைச்சுட்டு அதுக்கு வரியா 33.6 ரூபா போட்டு மொத்தம் 153.6 ரூபா மட்டும் எப்பவுமே டிக்கெட் விலையா வைங்க.

அதை விட்டுட்டு மக்களிடம் 500, 1000 என விலை வைச்சு விப்பேன், ஆனா அதுக்கு வரி கட்டமாட்டேன் – அப்படீன்னா என்ன நியாயம்? அவிங்க எல்லாம் தங்கள் சொத்திலே இருந்தா எடுத்து வரி கட்டுறாங்க?

********

மேலும் இது குறித்து அறிய, சில பயனுள்ள சுட்டிகள்:

1) https://www.livemint.com/Money/7nXkl2PU7fYbrI14V53skI/How-is-input-tax-credit-calculated.html

2) இந்த சுட்டியிலே படம் போட்டு விளக்கியிருக்காங்க – https://cleartax.in/s/what-is-input-credit-and-how-to-claim-it

3) https://www.profitbooks.net/input-tax-credit-gst-india/

4) https://economictimes.indiatimes.com/small-biz/policy-trends/understanding-input-tax-credit-in-gst-and-why-it-may-have-drastic-impact-on-companies/articleshow/58655290.cms

5) https://www.thehindubusinessline.com/opinion/columns/slate/what-is-input-tax-credit-in-india-input-tax-credit/article9720640.ece

(ராஜசங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியவற்றின் சீரமைக்கப்பட்ட தொகுப்பு)

11 Replies to “ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்”

  1. Business -ல் இருக்கும் எனக்கு GST என்றால் என்ன என்று ம்
    அதில் உள்ள நன்மை என்ன என்றும் திரு ராஜசங்கர்
    அவர்களின் பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன் .நன்றி.

  2. gstn என்ற அமைப்பு என்ன? அதில் HDFC, HDFC bank, icici bank, strategic NSE, lic ஆகியவற்றுக்கு equity என்பது என்ன? மாநில அரசுக்கு 24.5%, மத்திய அரசுக்கு 24.5% வரி வரி வருவாயில் வழங்கப்படும் என்பது என்ன?

  3. சகோதரா, அருமை. சட்ட நுணுக்கங்கள், பிரிவுகள் போன்றவற்றை பற்றி விளக்காமல், ஜி.எஸ் டி சட்டத்தின் லாஜிக் பற்றி விளக்கியுள்ளது அருமை. வாழ்த்துக்கள்.

  4. GSTN என்பது தனியார் நிறுவனம்தானே. 10கோடி மூலதனம் போட்டு தொடங்கப்பட்டுள்ளது இல்லையா? மத்திய, மாநில அரசுகளுக்குத் தலா 24.5% பங்கு மட்டுமே இல்லையா மீதமுள்ள 51% பங்குகள் யாருக்கு?

  5. அருமையான விளக்கம். நன்றி சார்.

  6. //// Goods and Services Tax Network (GSTN) is a nonprofit non-government company, which will provide shared IT infrastructure and service to both central and state governments including tax payers and other stakeholders. The Frontend services of registration, Returns and payments to all taxpayers will be provided by GSTN. It will be the interface between the government and the taxpayers.////

    /// vii. A one- time non- recurring Grant- in aid of Rs. 315 crore from the Central Government towards 248 249 expenditure for the initial setting up and functioning of the SPV for a three year period after incorporation. In compliance of the Cabinet decision, GST Network was registered as a not-for-profit, private limited company under section 25 of the Companies Act, 1956 with the following equity structure:

    Central Govt 24.5%
    State Govts24.5%
    HDFC 10%
    HDFC Bank 105
    ICICI Bank 10%
    NSE Strategic Investment Co 10%
    LIC Housing Finance Co 11%

    The GSTN in its current form was created after taking after approval of Empowered Committee of State Finance Ministers and Union Government after due deliberations over a long period of time.

    Read more at:
    https://economictimes.indiatimes.com/articleshow/58590470.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

    A Non-Profit Company cannot declare dividend or issue bonus shares, even if a surplus arises.

  7. If one is to believe that GST’s introduction is to regularize the taxation in India, then it becomes indisputable fact that prior to GST regime, there has been sporadic irregularities and corresponding loot and illegal gain of public money. Who will be accountable for this? and how the perpetrators will be punished? or is to going to be “whatever by-gone is forgotten and lets start fresh”?. Also, why should the tax payers suffer double taxation while the non-tax payers enjoy unfairly the fruits of labor of honest tax payers?

  8. அய்யா வணக்கம்,

    ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல விதமான சந்தேகங்களை எங்கள் மெழுகுவத்தி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நேரில் கேட்க விரும்புகிறோம்.

    சென்னையில் அதன் தலைமையகம் தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரி , அவர் முகவரி, தொடர்பு எண் கொடுத்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி

    ஏ.வி.கிரி

  9. innum nadigargal sambalam koodigalithane ullathu indha gst yaal enna payan avargalai sambalathai kuraithale pothum ticket vilai kurainthuvidum aanaal ithaipattri endha aarasum kandukolvathillai aarasin gavanam saatharana ealai makkalin pakkamthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *