70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!

இஸ்ரேல் கடற்கரையில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் இந்தியப் பிரதமர் மோடி.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இத்தனை ஆண்டுக் காலத்தில் இஸ்ரேல் நாட்டுடன் எந்த அரசும் உறவை வலுப்படுத்த முயன்றதில்லை. மத்திய தரைக்கடல் நாடுகளிடையிலான அரசியல் காரணமாகவும், அரபு- இஸ்லாமிய நாடுகளின் பகையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சம் காரணமாகவும், யூத மக்களின் தாயகமான இஸ்ரேலுடன் நெருங்குவதை இதுவரையிலான அரசுகள் தவிர்த்து வந்தன. பாஜக மட்டுமே இஸ்ரேலுடனான உறவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில்தான் இஸ்ரேலுடன் தூதரக உறவே அரும்பியது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அது மேலும் வலுப்பட்டது.

ஆனால், அடுத்து வந்த மன்மோகன் சிங் அரசு இஸ்ரேலை வேண்டாத விருந்தாளியாகக் கருதி புறக்கணித்தது. இந்நிலையில், வாஜ்பாயின் அடியொற்றி, மோடி தலைமையிலான அரசு இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்த பல முயற்சிகளை எடுத்தது. தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் விஜயம், அந்நாட்டு மக்களை மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சக இந்தியர்களின் உற்சாக வரவேற்பு

இந்தப் பயணத்தின் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரை வரவேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

உலகம் முழுவதும் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்கு புகலிடம் கொடுத்த பாரதத்தின் பிரதமரை இஸ்ரேல் எப்போதும் நன்றியுடனும் அன்புடனும் எதிர்நோக்கி இருந்திருக்கிறது. அதனைப் புரிந்துகொள்ள இந்திய அரசுக்கு 70 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக (ஜூலை 4- 6) இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, வழக்கமான மரபுகளை மீறும் வகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் ஜெருசலேமின் பென் குரியான் விமான நிலையத்துக்கு நேரில் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இரு கரங்களை கூப்பியவாறு ‘தங்களது வரவு நல்வரவாகுக…’ என்று இந்தி மொழியில் கூறி மோடியை அன்புடன் வரவேற்றார். அவருக்கு சிவப்புக் கமபள வரவேற்பும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபருக்கும், போப் ஆண்டவருக்கும் மட்டுமே அளிக்கப்படும் வரவேற்பு முறையில் மோடி வரவேற்கப்பட்டார்!

கரம் கோர்க்கும் இரு உலகத் தலைவர்கள்

“இந்தியா_-இஸ்ரேல் இடையிலான நட்புறவுக்கு வானத்தைக் கூட எல்லையாக வைத்து அளவீடு செய்ய முடியாது” என குறிப்பிட்ட பெஞ்சமின் நேதன்யாகு, உலகின் மிகப் பெரிய தலைவராக விளங்கும் மோடியுடன் இணைந்து நாம் இன்னும் அதிகம் சாதிக்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் கைகோர்க்கும் இஸ்ரேலுக்கு வானம் கூட எல்லையாக முடியாதுதான்.

அவரது வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ‘இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும். இஸ்ரேலுடன் வலிமையான, அசைக்க முடியாத நட்புறவை ஏற்படுத்துவதே எனது வருகையின் முக்கிய நோக்கம்’ என்று தெரிவித்தார்.

மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களை மிகவும் திட்டமிட்டு வழிநடத்துவது, இஸ்ரேலிலும் வெளிப்பட்டது. இந்தப் பயணத்தின் போது, 2008 மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்த யூதக் குழந்தையான- தற்போது 11 வயது சிறுவனாக உள்ள மோஷே ஹோல்ட்பெர்கையும், அவனது உயிரைக் காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ராவையும் மோடி சந்தித்தது அந்நாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது.  டெல் அவிவ் நகரில் வாழும் சுமார் 4 ,000 இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து மோடி உரையாடினர்.

இஸ்ரேல் ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின் உடன் மோடி

கேரள மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட யூத மொழி செப்புத் தகடுகளின் மாதிரியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பரிசாக வழங்கி  ஆனந்த அதிர்ச்சி அளித்தார் மோடி. பதிலுக்கு, டான்சிகர் டான் மலர்ப்பண்ணைக்கு மோடி விஜயம் செய்தபோது, இஸ்ரேலில் சமீப காலமாக பெருமளவில் வளரும் ‘இஸ்ரேலி கிரைசாந்தமம்’ என்ற மலரினத்துக்கு மோடியின் பெயரைச் சூட்டியது அந்நாட்டு அரசு!

இப்பயணத்தின் போது ஓல்கா கடற்கரையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தையும் மோடி பார்வையிட்டார். பின்னர் கால் மொபைல் எனப்படும் நடமாடும் நீர்சுத்திகரிப்பு வாகனத்தையும் பரிசோதித்தார். அத்துடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அந்த வாகனத்தில் சிறிது நேரம் பயணித்தார். உலக அளவில் இந்நிகழ்வுகள் ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டன. இதிலிருந்தே இந்திய- இஸ்ரேல் உறவுக்கு உலகம் அளிக்கும் முக்கியத்துவம் புரியும்.

இஸ்ரேல் ஜனாதிபதியின் மாளிகையிலும், பிரதமர் மோடியை வழக்கமான மரபுகளை மீறிய வகையில் ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின், அவரது கார் நின்ற இடத்தின் அருகே சென்று கட்டித் தழுவி வரவேற்றார்.  அவரிடம்,  இஸ்ரேலுடன் அனைத்துத் துறைகளிலும் இந்தியா தொடர்ந்து இணைந்து செயலாற்றும் என்றும் மோடி உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பும் இஸ்ரேல் ஊடகங்களில் முதன்மை பெற்றது.

வஷேம் நினைவிடத்தில் அஞ்சலி

ஹிட்லரின் நாஜிப் படையால் கொல்லப்பட்ட 60 லட்சம் யூதர்கள் நினைவாக அமைக்கப்பட்ட வஷேம் நினைவிடத்திலும், முதல் உலகப்போரின்போது இஸ்ரேலின் ஹைஃபா நகரை மீட்கப் போராடி உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட ஹைஃபா நினைவிடத்திலும் மோடி அஞ்சலி செலுத்தினார். இவை வெறும் அடையாள நிகழ்வுகள் அல்ல.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு – மோடி இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இஸ்ரேல் தொழில் அதிபர்களையும் மோடி சந்தித்தார். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இரு தலைவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மறைந்த கணிதமேதை ராமானுஜத்தை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். “இந்திய மக்களுக்காக நாங்கள் சிறப்பான நிர்வாகத்தைக் கொண்டுள்ளோம். மறைந்த எனது மாமா கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் என்னிடம் கணிதமேதை ராமானுஜத்தின் அறிவு குறித்து பெருமையாகப் பேசுவார். இந்தியர்கள் எவ்வளவு திறமை மிக்கவர்கள் என்பதற்கு ராமானுஜம் ஓர் எடுத்துக்காட்டு” என்றார் அவர்.

ஓல்கா கடற்கரையில்…

‘பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியா- இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இணைந்து போராடுவோம்’ என்று மோடியும் நேதன்யாகுவும் கூட்டாக அறிவித்தனர். புதுமைக் கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம, நீர்ப் பாதுகாப்ப்பு, தொழில் துறை உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இவ்வாறாக, பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், இரு நாடுகளிடையிலான உறவில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டால் தன்னை இஸ்ரேலிடமிருந்து விலக்கி வைத்திருந்த இந்தியாவின் தற்போதைய புதிய மாற்றம், மாறிவரும் சர்வதேச அரசியலில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகளுடன் நல்லுறவைப் பேணியபடியே, இஸ்ரேலுடனும் நட்புறவைத் தொடர முடியும் என்று நிரூபித்திருக்கிறது மோடி அரசு.

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கொடிய நச்சுப் பற்களில் சிக்கி பாதிக்கப்பட்ட இரு நாடுக்ளான இந்தியாவும் இஸ்ரேலும் நெருங்கி வருவது, பயங்கரவாத அரக்கனுக்கு எதிரான உலக அளவிலான செயல்பாடு.

கார்ட்டூன்- நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

21- ஆம் நூற்றாண்டின் சர்வதேச அரசியலில் இவ்விரு நாடுகளும் இணைந்து பணியாற்ற பல்வேறு கடமைகள் காத்திருக்கின்றன. மோடிக்கு இஸ்ரேலில் கிடைத்த இதுவரை காணாத வரவேற்பு, அதையே காட்டுகிறது.

இனிமேல், மோடி இந்தியப் பிரதமர் மட்டுமல்ல, உலக அரங்கில் தவிர்க்க இயலாத தலைவரும் கூட என்பதையும் டெல் அவிவ் காட்சிகள் காட்டியிருக்கின்றன.

 

.

4 Replies to “70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!”

  1. பாரதபிரதமர் மோடி அவர்களின் இஸ்ரேல் பயணம் மட்டுமல்ல
    அனைத்து வெளிநாட்டு பயணமும் பெருமை வாய்ந்ததாகவும்
    உலகநாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.
    இஸ்ரேல் நாட்டுடன் நெருக்கம் என்பது தீவிரவாதத்தை ஒடுக்க
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  2. 01.அரபு நாடுகளில் எகிப்து இஸ்ரேலோடு முழுமையான ராஜ்ய உறவுகளை பேணி வருகின்றது.
    02.ஈரான் -ஈராக் யுத்தத்தின் போது இரு நாடுகளும் இஸ்ரவேலிடமிருந்து ஆயுதங்களை பெற்றன.
    03.முஹம்மதுவை நபியாக ஏற்காத காரணத்தால் யுதா்கள் 1400 வருடங்களுக்கு முன்னரே பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா்கள்.
    04.ஒரு யுத்தம் முடிந்தவுடன் முஹமம்துவின் பங்காக ரேகானா என்ற 18 வயது யுதபெண் அளிக்கப்பட்டாா்.பேரழகாக இருந்த ரேகானாவை திருமணம் செய்து கொள்ள முஹம்மது விரும்பினாா்.ஆனால் ரேகானா ” நான் தங்களை திருமணம் செய்ய வேண்டும் என்றால் நானும் முஸ்லீம் ஆக மாற வேண்டும்.நான் யுத பெண்ணாகவே இருக்க விரும்புகின்றேன் என்றாா்.அப்படியெனில் நான் யுத்தத்தில் உன்னை கைப்பற்றியிருக்கின்றேன்.எனக்கு உன்னை செக்ஸ்அடிமையாக வைத்துக் கொள்ள உாிமை உள்ளது என்றாா்.மதம் மாறுவதை விட அது பரவாயில்லை என மதம் மாற மறுத்து விட்டாா் ரேகாானா.ரேகானா முஹம்மதுவின் செக்ஸ்அடிமையாக இருந்தாா்.
    மனைவியாக இருக்கவில்லை.
    05.முஹம்மதுவின் காலத்தில் யுதா்கள் அரேபு நாடுகளில் பல இடங்களில் பரவலாக வாழ்ந்து வந்தாா்கள்.மக்கா நகரம் கூட யுதா்கள் பெரும்பான்மையினராக வாழந்த இடம்தான்.ஆனால் முஹம்மது கொள்ளை கொலை பெண்களை அடிமையாக பிடித்தல் என்ற அடாவடித்தனம் செய்யதால் யுதா்கள் அரேபிய மண்ணைவிட்டு -மக்கா நகரை கைவிட்டு வெளியேறிளாா்கள்.
    06.யுதா்களையும் கிறிஸ்தவா்களையும் நண்பா்களாக்கிக் கொள்ள வேண்டாம் என்று முஹம்மது அறிவுருத்தியுள்ளாா்.இந்துக்கள் பற்றி முஹம்மது அறிய மாட்டாா்.
    07.யுதா்கள் அதிக எண்ணிக்கையில் நோபல் பாிசு பெற்றுள்ளாா்கள்.
    08.இந்தியாவிற்கு அவாக்ஸ் போா் விமானங்களை இஸ்ரவேல் அளித்துள்ளது.அமொிக்கா தனது அதி நவீன அவாக்ஸ் விமானங்களை பாக்கிஸ்தானுக்கு அளித்துள்ளது.இந்தியாவிற்கு வழங்க மறுத்து விட்டது.
    09.இந்தியாவின் 40% ராணுவ தளவாட தேவையை இஸ்ரவேல் புா்த்தி செய்கின்றது
    10.2000 ஆண்டுகளுக்குமுன்பு இஸ்ரவேலை ரோமானியா்கள் போா் தொடுத்து பிடித்துக் கொண்டாா்கள்.யுதா்களை பெரும் கொடுமைக்கு ஆளாக்கினாா்கள் ரோமானியா்கள்.கொடுமைக்கு பயந்த யுதா்கள் உலகெங்கும் சிதறி ஓடினாா்கள்.உலகின் பல பகுதிகளில் குடியேறிய யுதா்களை் அங்கும் பெரும் கொடுமைக்கு ஆளாகி வந்தாா்கள். இந்தியாவில் அவா்கள் ஒரு தாயின் மடியில் வாழ்வது போல் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தாா்கள்.யுதா்களை கொடுமை செய்யாத மக்கள் இந்துக்கள் மட்டுமே என்று யுதா் சாித்திரம் என்ற புத்தகம் சொல்கின்றது.
    11.இஸ்ரேலோடு உள்ள உறவு நமக்கு பொிதும் நன்மைபயப்பது.நாட்டு நலனை முன்னிட்டு மேற்படி நன்மைகளை இழந்தது முட்டாள்தனமானது. இன்றாவது தைாியமாக இஸ்ரவேலோடு நல்ல உறவு கொள்ள முன்வந்தது பாராட்டுக்காியது.
    12.அண்மைகாலமாக சவுதி அரேபியாவும் இஸ்ரேல் நாட்டோடு உறவுநம்பந்தமாக மௌனத்தை கடைபிடித்து வருகின்றது.சவுதி அரசின் மாற்றம் பொிதும் கவனிக்கதக்கதாக உள்ளது.இஸ்ரேலை கடுமையாக கண்டித்து வந்த சவுதி தற்சமயம் மௌனம் காப்பது ஆச்சாியமாக உள்ளது.

    நாட்டு நலனை மட்டும் முன்வைத்து பிரதமா் நடவடிக்கை எடுத்துள்ளாா். வாழ்க

  3. ஒரு திருத்தம்

    யுதா்கள் பெரும்பான்மையினராக வாழந்து முஸ்லீம்களால் முற்றிலும் துறத்தப்பட்ட நகரம் மதினா ஆகும்.மக்கா என்று எனது கடந்த பதிவில் உள்ளது.தவறு.

  4. நாடு முழுவதும் இசுலாமிக இயக்கங்கள் அனைத்தும் திரு.நரேந்திரமோடி இந்திய பிரதமா் இஸ்லேலுக்குச் சென்றது குறித்து கண்டனங்களை அவா்களுக்குள்ளேயே தொிவித்துக் கொள்கின்றனா். தமிழன் தொலைக்காட்சி அடிக்கடி இந்து விரோத கருத்துக்களை பரப்பி வருகின்றது.ஏன் இந்த கோழைத்தனம்.?வெள்ளி மணி என்று ஒரு நிகழ்ச்சி 9.00 – 9.30 முடிய நடைபெறுகின்றது. மக்கா மஸ்தித் சென்னை என்ற அமைப்பை சோ்ந்தவா்கள் உரையாற்றுகின்றாா்கள்.கேளுங்களேன்.எப்படி தேசத்துரோகங்களை மதப்பற்று என்ற இனிப்பு தடவி பிரச்சாரம் செய்கின்றாா்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *