முகப்பு » அரசியல்

அதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரம் மீண்டும் முருங்கை மரம் ஏறி அங்கு தொற்றியிருந்த வேதாவைப் பற்றிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினான்.

உடனே வேதா நகைத்தது. வழக்கம் போல ஒரு கதை சொல்வதாகவும், அதற்கு உரிய பதில் கூறாவிட்டால் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்றும் கூறிவிட்டு, கதையைத் தொடங்கிவிட்டது. விக்ரமால் அந்தக் கதையை நிறுத்த முடியவில்லை. இந்த முறையும் வேதா தப்பிவிடும் என்று அவனுக்கு புரிந்துபோனது. ஆனால், இருவரிடையிலான ஒப்பந்தப்படி (இது அரசியல்வாதிகளிடையிலான ஒப்பந்தம் அல்லவே!) கதையைக் கேட்கத் துவங்கினான். வேதா கூறிய கதையிலிருந்து…

***

தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவில் நிலவும் குடுமிப்பிடிச் சண்டைகள் 2017 ஆகஸ்ட் முதல் வாரத்தில் புதிய உச்சத்தைத் தொட்டன. ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எசு.) தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்களும் 10 எம்.பி.க்களும் தனி அணியாகச் செயல்பட்டுவரும் நிலையில், அழையா விருந்தாளியாக கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த முயலும் டி.டி.வி.தினகரனால் புதிய சிக்கல் உருவானது.

ஓ.பிஎஸ்., ஈ.பி.எஸ்., தினகரன்

முன்னாள் முதல்வர் செயலலிதா இறந்தவுடனேயே அதிமுகவில் அதிகாரப் போட்டி துவங்கிவிட்டது. அவரது இடத்தைப் பிடிக்க ‘உடன் பிறவா சகோதரி’ சசிகலா மேற்கொண்ட முயற்சி மத்திய அரசின் ஆதரவின்மையால் பலிக்காமல் போனது. அப்போது, ஓ.பி.எசு.க்கு எதிராக எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கூவத்தூர் புரட்சியை வழிநடத்தினர். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பு சசிகலாவின் ஆட்சிக் கனவில் மண்ணைத் தூவியது. இப்போது பெங்களூரின் பரப்பண அக்ரகாரா சிறையில் இருக்கிறார் சசிகலா.

சசிகலாவை முதல்வராக்க நடந்த முயற்சிகளின்போது, ஓ.பி.எசு. அணியைத் தவிர்த்த அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் கூவத்தூர் சொகுசு விடுதியில் குடியிருந்து தமிழகத்தின் மானத்தை வாங்கினார்கள். பிறகு வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். ஆயினும், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன் விரைவில் முதல்வராவார் என்று ஆரூடம் கூறப்பட்டது. பணபலத்தாலும் நடராசனின் சாதுரியத்தாலும் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை அப்போது காணப்பட்டது.

அதற்காகவே, சிறைக்குச் செல்லும்முன் தனது சகோதரி மகன் டி.டி.வி.தினகரனை அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக்கிவிட்டுச் சென்றார் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி அணியினரால் முன்மொழியப்பட்ட சசிகலா. ஆனால், அதிகாரபீடம் எளியவனையும் மாற்றிவிடும் என்பது உண்மையானது. எடப்பாடி பழனிசாமி மிக விரைவில் அதிமுகவின் மையமாக உருவெடுத்தார்.

உடன்பிறவா சகோதரியுடன், சகோதரி மகன்

இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன், வாக்காளர்களுக்கு கையூட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதால் அந்தத் தேர்தலையே தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. தவிர, அதிமுகவின் இரு அணிகளிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, கட்சியின் சின்னமான இரட்டை இலையும் முடக்கப்பட்டது. அந்தச் சின்னத்தை முறைகேடான வழியில் பெற முயன்றபோது கையும் களவுமாக சிக்கினார் தினகரன். தேர்தல் ஆணைய அதிகாரிகளும் விலைபோகக் கூடியவர்கள் தான் என்பதை அந்நிகழ்வு அம்பலப்படுத்தியது. அதையடுத்து கைது செய்யப்பட்ட தினகரன், தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த காலத்தைப் பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி தனது நிலையை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டார்.

இதனிடையே, ஓ.பி.எசு.க்கு மறைமுக ஆதரவு தெரிவித்துவந்த மத்திய அரசுடன் எடப்பாடி பழனிசாமி (ஈ.பி.எசு.) மிக விரைவில் நேசமானார். அவர்களுக்கும், தமிழகத்தில் ஆதரவான ஆட்சி இருந்தால் போதும் என்று தோன்றிவிட்டது. தவிர, ஓ.பி.எசு.வால் அவரது ஆதரவுத் தளத்தைப் பெருக்க முடியவில்லை. தனித்துப் போராடும் துணிச்சலும் அவரிடம் இல்லை. சிறையிலிருந்து வெளிவந்த தினகரன், தன்னை தமிழக முதல்வரோ, பிற அமைச்சர்களோ கண்டுகொள்ளாததன் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டார். மத்திய அரசின் ஆதரவு இருப்பதாலும், பிரதமர் மோடியைப் பகைத்துக்கொள்ள விரும்பாததாலும் தான், அதிமுக தன்னைக் கைவிடுகிறது என்பதை உணர்ந்த தினகரன், தனது செல்வாக்கால் ஈ.பி.எசு. அணியில் பிளவை உண்டாக்கினார்.

மோடியுடன் ஓ.பி.எஸ்.

தினகரனுக்கு ஆதரவாக 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும்,  ‘யாருக்கோ’ பயந்துகொண்டு அதிமுக அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடாமல் அமைதி காத்தார் தினகரன். அவரது ஆதரவாளர்கள் அவ்வப்போது ஈ.பி.எசு.வை மிரட்டிக் கொண்டிருந்தனர்.

இதனிடையே, எம்.சி.ஆர். நூற்றாண்டு விழாவைப் பயன்படுத்தி தினகரன் அணியில் இருந்த பலரை சரிக்கட்டிய ஈ.பி.எசு., தினகரனின் ஆதரவுதளத்தை பலவீனப்படுத்தினார். தவிர, தினகரனால் குழப்பம் ஏற்படும் நிலையில் ஆட்சியைக் காக்க, திரை மறைவில் ஓ.பி.எசு. அணியினருடனும் (அதிமுக- புரட்சிதலைவி அம்மா) பேச்சு நடத்தினார். இவை அனைத்துக்கும் பின்னணியில் ஒரு பொருளாதார மேதை இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

மத்திய அரசைப் பொருத்த வரை, பல முறைகேடு வழக்குகளில் தொடர்புடைய சசிகலா, தினகரன் குடும்பம் அதிமுகவைக் கைப்பற்றுவதைத் தவிர்க்க முயன்றது. பிளவுபட்ட இரு அதிமுக அணிகளும் ஒன்றுசேர வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம் என்றும் கூறப்பட்டது. அதனால்  ‘பிக் பாசு’ என்று மோடியை நையாண்டி செய்தன தினகரன் ஆதரவு ஊடகங்கள். ஆனால், மோடியை ஆகஸ்ட் 10 வரை விமர்சிக்கவில்லை தினகரன். அவர்  ‘யாருக்கோ’ அஞ்சுகிறார் போலிருக்கிறது. ஜெயலலிதா அரசையே பின்னணியிலிருந்து இயக்கியதாக வாக்குமூலம் அளித்த நடராசப் பெருமானையும் பல நாட்களாக ஆளையே காணவில்லை.

மோடியுடன் ஈ.பி.எஸ்.

இந்தக் காலகட்டத்தில் சனாதிபதி தேர்தல், துணை சனாதிபதி தேர்தல்களில் அதிமுகவின் மூன்று அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு பாஜகவை ஆதரித்தன. இப்போது பாசகவுக்குத் தான் தருமசங்கடம். மூன்று குழுக்களுமே பாசகவின் நண்பர்களாக உள்ள நிலையில், அதிமுகவில் நிலவும் அதிகாரப் போட்டியில் யார் பக்கம் நிற்பது என்பது சிக்கலான கேள்விதான். பாசகவோ, அதிமுகவினர் அனைவரும் ஒரே அணியாக வந்தால், தேசிய சனநாயகக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதுடன், அதிமுகவில் இருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவதாகவும் கூறிவிட்டது. அதிமுகவில் நிலவும் கோசுடிப்பூசல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே வழி வகுக்கும் என்பது நினைவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில்தான், தினகரன் தனது அணியிலுள்ள எம்.எல்.ஏக்கள் பலரை கட்சியின் (அதிமுக- அம்மா) புதிய நிர்வாகிகளாக நியமித்து தனது செல்வாக்கைக் காட்டினார். இதனால் அதிமுக-அம்மா அணி பிளவுபடும் சூழல் உருவானது. அதையடுத்து ஈ.பி.எசு. அணியினர் தினகரனை கட்சியின் பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். இப்போது அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவுடன் தினகரன் உசாவி வருவதாக தகவல். அதையடுத்தே, சட்டப் பேரவையில் ஈ.பி.எசு. அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக மு.க.சுடாலின் கூறியிருப்பதாகவும் தகவல்.

ஆனால், தினகரன் அணியில் தற்போது 15 எம்.எல்.ஏக்களே இருப்பதாகவும், ஓ.பி.எசு. அணியினர் (10 எம்.எல்.ஏ.க்கள்) மீண்டும் ஒருங்கிணைந்தால், திமுக- தினகரன் கூட்டணியை முறியடித்துவிட முடியும் என்றும் ஈ.பி.எசு. நம்புவதாகவும்,  அதீத அறிவுசீவி ஊடகங்கள் கதைக்கின்றன.

***

இந்தக் கதையை மூச்சுவாங்கக் கூறிவிட்டு நிறுத்தியது வேதா. சம்ஸ்க்ருத உச்சரிப்புள்ள வார்த்தைகளை தமிழ்ப்படுத்திக் கூற மெனக்கெட்டதன் கஷ்டம் அதன் வாய் கோணலானதிலிருந்து தெரிந்தது. இப்போது அது கேள்வி கேட்க வேண்டிய நேரம். அதற்குள் முந்திக்கொண்டான் விக்ரம்.

“நீ என்ன கேள்விகளைக் கேட்பாய் என்று தெரியும். நானே சொல்லி விடுகிறேன். இந்த மூவர் அணியில் யார் வெல்வார்கள் என்பது உன் முதல் கேள்வி. ஓ.பி.எஸ்.சைப் பொருத்த வரை அவருக்கு மரியாதையான இடம் அளிக்கப்பட்டால் போதும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவி அவருக்குத் தரப்பட்டு, துணை முதல்வர் அல்லது  மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமானால் அவர் அமைதியாகி விடுவார். மேலும், அவரது அணியில் இருவர் மாநில அமைச்சர்களாகிவிடுவர்.

ஈ.பி.எஸ்.சைப் பொருத்த வரை, அவருக்கு இப்போது இப்போது விபரீத ராஜயோகம் நடக்கிறது. அதனால்தான் அவரால் ஓ.பி.எஸ்.சை மீறி முதல்வராக முடிந்தது. ஜாதக யோகத்துடன் சற்று புத்திக்கூர்மையும் இருப்பதால்தான் அவரால் தினகரனைத் தள்ளிவைக்கவும் சமாளிக்கவும் முடிந்தது.

தினகரனைப் பொருத்த வரை அதிமுக ஆட்சியில் இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ஆனால், மேலே எல்லாவற்றையும் ஒரு பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அவருக்கு இப்போது தடையாக இருக்கிறது. தற்போது அரசியலில் இருந்து சந்யாசம் பெற வேண்டிய காலகட்டம் தினகரனுக்கு உள்ளது. அதிமுக அணிகள் ஒருங்கிணைவதை வாழ்த்திவிட்டு மன்னார்குடிக்கே அவர் திரும்பப் போவதுதான் அவருக்குக்கும் நல்லது. ஆக மொத்தத்தில் இப்போதைக்கு ஈ.பிஎஸ். அரசு தப்பிப் பிழைக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

ஜெயலலிதாவுடன் மோடி

இந்த விஷயத்தில் பாஜகவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்பது உன் அடுத்த கேள்வி. சரிதானே? இதே நிலைமை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதிமுகவுக்கு நேரிட்டிருந்தால் இந்நேரம் ராகூல் உதவியுடன் மு.க.ஸ்டாலின் முதல்வராகி இருப்பார் என்பது உண்மை. ஆனால், ஜெயலலிதாவின் நண்பரான மோடியால் அதிமுக பிளவுபடுவதையும் அதனால் ஆட்சி கவிழ்வதையும் காணச் சகிக்கவில்லை. எனவேதான், அதிமுக வலுப்படுவதை அவர் விரும்புகிறார். மற்றபடி இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமடையும் என்ற அவரது அரசியல் அபிலாஷையைக் குறை கூற முடியாதல்லவா?

கடைசியாக, தமிழகத்துக்கு நல்லது எது என்பது உன் கேள்வி. இப்போதைக்கு தமிழகத்தின் ஸ்திரமற்ற அரசியல் சூழல் மாறினால் போதும். இலவு காத்த கிளியாக உள்ள  ‘ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ்’ திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே முக்கியம். அதிமுக அரசு தொடர்வதே தமிழகத்துக்கு நல்லது” என்றான் விக்ரம்.

இந்தப் பதிலால் சமாதானம் அடையாத வேதா, “நீ உன் விருப்பத்தைக் கூறுகிறாய். ஆனால், நாளை நடக்கப் போவதை யார் அறிவார்?” என்று கூறியவாறே மீண்டும் அவனது தோளிலிருந்து விடுபட்டு, மற்றொரு முருங்கை மரத்தைத் தேடிப் பறந்துவிட்டது.

 

.

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

 

6 மறுமொழிகள் அதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா

 1. dr.A.Anburaj on August 15, 2017 at 9:09 am

  சாக்கடையை பற்றி எழுதி ஒரு பக்கத்தை வீணத்து விட்டீர்கள். இந்த பதிவை உடனே நீக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 2. T M CHARI on August 15, 2017 at 4:16 pm

  What is happening in Tamil Nadu is utter disgrace to Tamils…So called Tamil Politicians who claim about self respect etc. But in actual practice care for nothing other than their selfish interests. It is a shame that DK, DMK, AIADMK, MDMK and all other “Ks” have reduced this state to their personal kingdom to perpetuate their vested interests. Pity is our Prime Minister has appointed Smt. Kiran Bedi as Governor for Pondichery and she is doing great service to the Union Territory. In AP and Telengana we have Sri Narasimhan who has been steering both the sates so nicely despite so much happening over there. Even in appointment of a Governor Tamil Nadu is totally neglected. We are dependent on Governor from Maharashtra for crucial decisions. It is high time a good reliable leader is chosen by the Prime Minister and sent to Tamil Nadu. If need be the assembly is dissolved and fresh election is called for to set things in order !

 3. sanjay on August 16, 2017 at 11:54 am

  The writer’s partiality towards BJP is amusing. Modi does not want to split the AIADMK? Really?. Maybe, but he definitely wants to weaken the party.

  It is the BJP which is indirectly running the govt in T.N. A major state like TN does not have a full fledged governor for the last 1.5 years, is it not shameful?

  What about the methyl gas extraction in Kadirmangalam? The archaeological excavation which has been stopped? Setting up the Cauvery river water tribunal? Arrests of TN fishermen by Srilanka?

  The BJP is becoming more & more unpopular in TN by such antics. It is high time Modi realized that he is the prime minister of India & not just the northern part of India.

  The BJP can never ever dream of coming to the power in TN, for sure.

 4. BSV on August 16, 2017 at 12:38 pm

  //இந்தப் பதிலால் சமாதானம் அடையாத வேதா, “நீ உன் விருப்பத்தைக் கூறுகிறாய். ஆனால், நாளை நடக்கப் போவதை யார் அறிவார்?” என்று கூறியவாறே மீண்டும் அவனது தோளிலிருந்து விடுபட்டு, மற்றொரு முருங்கை மரத்தைத் தேடிப் பறந்துவிட்டது.//

  A good lesson to the author of this article. Don’t count your chicken before they’re hatched.

  Everyone knows that BJP is pretending to be aloof from the internal bickering for Jeyalalitha’s legacy but is behind the scenes. Now in front too. OPS openly said he discussed AIADMK issues only with PM. Why should a PM call a leader, who is not even an opposition leader in the State, to discuss party politics of TN where the State leader has a huge personal stake? It is quite clear to all that BJP wants the ruling party to continue and complete the tenure so that DMK can be kept at bay till next elections. This’s because TN BJP is so weak that it cannot win anything outside a few pockets which it has been carefully cultivating by various means, fair or foul. No power in sight, – all alone at sea, without the shore in sight – so the author, as the spokesman for BJP or representing the wishes of the BJP, says that the one and only agenda right now is to keep DMK from getting into power.

  But how long will you be saying this? All parties, including the BJP with its weak strength – remember the BJP State Chief and its national secretary H Raja were soundly defeated in Chennai city MLA constituencies! – all parties are going to polls in two years and therefore, the Veda is correct to question: ஆனால், நாளை நடக்கப் போவதை யார் அறிவார்?”

  State BJP is like IPKF – fighting with hands tied at back. It has no ideas or agenda of its own. Its leaders are routinely parroting the language of their national leaders and retweeting them. Their charisma doesn’t even extend to the neighboring house. There’s right now a clear contempt for the party and, we may say, the other parties excluding AIADMK two factions, have successfully created the contempt. State BJP is now being perceived as a anti-Tamil language and anti-TN interests party. If, in the remaining years, the BJP does not correct its image and allow others to their day, it will be decimated in the next elections and a void will be created thanks to the weakening of AIADMK which, may be filled up by Stalin, if not who else?

 5. க்ருஷ்ணகுமார் on August 16, 2017 at 5:30 pm

  \\ சம்ஸ்க்ருத உச்சரிப்புள்ள வார்த்தைகளை தமிழ்ப்படுத்திக் கூற மெனக்கெட்டதன் கஷ்டம் அதன் வாய் கோணலானதிலிருந்து தெரிந்தது. \\ அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக மு.க.சுடாலின் கூறியிருப்பதாகவும் தகவல். \\

  இசுடாலினார் அவர்களை சுடாலின் என்று தேவா…………..சீ……….சீ………..வேதா எப்போது கூறியதோ அப்போதே அதன் வாய் கோணிவிட்டது.

  \\ What about the methyl gas extraction in Kadirmangalam? \\

  மீத்தேனெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது யாரென்று டம்ப்ளர்கள் வேணுமானால் மறைக்கலாம். அல்லது தக்ஷிணாமூர்த்திகாரு வாள்ளு பேமிலி மறைக்கலாம். தமிழர்கள் வெவரமானவர்கள் அவுங்களுக்கெல்லாம் தெளிவாகத் தெரியும்.

  \\ Setting up the Cauvery river water tribunal? \\

  ஸூனியா கேண்டி காலத்தில் டிமுக்காஸ் என்னாத்த கிழிச்சாங்கோ. தக்ஷிணாமூர்த்தி காரு அரவாள்ளு ப்ரதேசத்திலே எத்தினி ஆறு, குளம் ஏரிய ஆட்டய போட்டாரு. மணல வாரி பாக்கெட்ட ரொப்பின்னரு. இதிலோ தக்ஷிணாமூர்த்தி காரு வாரிக்கி லாபம் உந்திகாதா. இதி டம்ப்ளருக்குத் தெரியாது. தமிழர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

  \\ Arrests of TN fishermen by Srilanka? \\

  கச்சத்தீவை இந்திராகாந்திக்கு தாரே வார்த்து தக்ஷிணாமூர்த்திகாருக்கு எத்தினி டப்பு வச்சிந்தி? டம்ப்ளருக்கு வேணுமின்னா தெரியாம இருக்கலாம். தமிழர்களுக்கு நல்லாத் தெரியும்.

  டம்ப்ளரின் மூத்த தமிழ் முப்பாட்டி செயலலிதாவாகட்டும் டிமுக்காஸ் தக்ஷிணாமூர்த்தி காரு இருக்கட்டும். இவர்களுக்கு மீனவர்கள் தொடர்ந்து ப்ரச்சினையில் சிக்கி அதற்காக இவர்கள் காலில் விழுவதில் ………… அவர்களை அப்படியே வைத்திருப்பதில் அரசியல் லாபமுண்டு………..

  மீனவர்களுக்கு ஆழ்கடல் கனரக மீன்பிடிப்பு படகுகள் வழங்கப்பட்டால் எல்லைமீறி மீன் பிடிக்க அவச்யமிருக்காது என்பதனை நிரந்தரத்தீர்வாகக் கருதி அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் மாண்பு…………. ப்ரச்சினையை முழுதுமாக தீர்க்க முனையும் மாண்பு மோதி சர்க்காருக்கு மட்டிலும் உண்டு.

  \\ The BJP is becoming more & more unpopular in TN by such antics \\

  OOoooops. thats only day dreaming of timukkaas sold out to racist white church and jihadists.

  BJP is becoming more and more popular amongst all the hindus of tamil nadu. slowly but steadily. Nobody ever thought that one day BJP would capture power in state like Assam on its own. People even discounted that. The more and more your friend stalin utter anti hindu jibes the more he would be exposed by his antics. And only an electoral defeat would sweetly or sourly teach him the lesson. Ofcourse, Alagiri is always there to pull the rugs from under his legs at the most opportune time. cheers!!!!!!!!!!!!!!!!

 6. sanjay on August 17, 2017 at 3:59 pm

  Krishnakumar,

  Instead of giving answers to the issues posed, you have simply criticised karunanithi. If the BJP is really interested in the welfare of tamilnadu, why do they go ahead with the kadirmangalam project?

  It was the BJP which agreed to form the Cauvery river water committee & then somersaulted, with an eye on karnataka elections.

  In what way, are they different?

  TN fisherman get regularly captured by Srilanka. One fisherman was even shot dead, Was the high commissioner even called & questioned?

  BJP is becoming popular slowly in Tamilnadu. Really? In your dreams?

  Tell your local BJP leaders to win a councilor election first.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*