Daily Archives: August 16, 2017

தமிழன்னையின் அணிகலன்கள்

தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். அத்தகைய தமிழ் நீடுவாழ்க!’ என உளங்கனிந்து பெருமிதத்தில் விம்மி வாழ்த்தும் புலவர் யார்?.... [மேலும்..»]