மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி

ரக்கான் அல்லது அரக்கன் என்று போர்துகீசியர்களாலும் அதே பெயரில் பிரிட்டிஷ்காரர்களாலும் அழைக்கப்பட்ட பர்மாவின் ராக்கைன் பிரதேசம் ராக்ஷஸபுரா என்று சமஸ்க்ருதத்திலும்  ராக்கபுரா என்று பாலி மொழியிலும் அழைக்கப்பட்ட பிரதேசமாகும். ராக்ஷஸன் என்கிற பெயர் தமிழில் அரக்கன் என்று அழைக்கப்படும் அதிலிருந்து இந்த பெயரை அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறேன். பன்னெடுங்காலமாக பர்மாவில் தமிழர்களின் குடியிருப்பும் வியாபாரமும் செழித்து விளங்கியது என்பது வரலாறு.

மியான்மர் என்று அண்மைக்காலங்களில் பெயர் மாற்றம் பெற்ற பர்மா என்கிற நாடு, மேற்கில் வங்கதேசத்தையும் வடக்கிலும் வடமேற்கிலும் மிசோரம், திரிபுரா ஆகிய இந்திய மாநிலங்களையும் எல்லைகளாக கொண்டது. இதன் பகுதியாக இருந்த சிட்டகாங் இன்று வங்கதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. பர்மிய சுதந்திரத்திற்கு பின்னர் ராக்கைன் பிரதேசம் பர்மாவின் ஒரு அங்கமாக மாறியது.

மகாமுனி புத்தர் ஆலயம், மாண்டலே, மியான்மர்

புத்தர் இந்த ராஜ்யத்திற்கு வந்ததாக ஒரு ஐதீகம் உண்டு. அதோடு ஒரு பெரும் புத்தர் சிலையும் இங்கு இருந்தது. தான்யவதி என்ற அரக்கான் ராஜ்ய தலைநகரத்திற்கு பொயு.மு.* 554ல் பகவான் புத்தர் வந்ததாகவும் அப்போது அதை ஆண்ட சந்திர சூரியன் என்கிற அரசனிடம் தன்னை ஒரு சிலையாக வடிக்க சொன்னதாகவும் ஒரு தொன்மம் இங்கு உண்டு (* பொயு.மு . – பொதுயுகத்திற்கு முன், BCE). அது தான் மகாமுனி சிலையாக இருக்கிறது. அரக்கான் பகுதி ராக்கைன் இன பூர்வகுடிகளால் ஆனது. இங்குள்ள ரோஹிங்கியா எனப்படும் வங்க தேசத்தில் இருந்து அகதிகளாகவும் கூலிகளாகவும் வந்த மக்கள் கடந்த 50இல் இருந்து 100 வருடங்களுக்குள் வந்தவர்களாவர். பர்மாவின் இஸ்லாமியர்கள் முகலாயர்கள் காலத்தில் இங்கு வந்து பர்மிய பெண்களை மணந்து அங்கேயே இருப்பவர்கள். அவர்கள் ரொஹிங்கியாக்கள் அல்ல, பர்மிய முஸ்லிம்கள். அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

1950, 60 களில் அரக்கான் மாகாணத்தின் மேற்கு பகுதியில் முஜாஹிதீன்கள் என்கிற இஸ்லாமிய படை செயல்பட்டு வந்தது. ராக்கைன் மாநிலத்தின் இந்த பகுதியை கைப்பற்றி வங்கதேசத்துடன் சேர்க்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்த முஜாஹிதீன்கள் தங்களை ரோஹிங்கியா என்று அறிவித்து கொண்டனர். இந்த ரோஹிங்கியாக்களுக்கு பெரும்பாலும் பர்மிய மொழியோ அல்லது ராக்கைன் மொழியோ தெரியாது. இந்தியாவிலிருந்து சென்ற தமிழர்கள் பிரமாதமாக பர்மிய மொழி பேசும்போது, இவர்களுக்கு பேச தெரியாது. இவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இது வெட்ட வெளிச்சமாக்குகிறது.

வங்கதேச ரொஹிங்கியாக்களின் குடியேற்றத்தினாலும் அங்கிருந்து தொடர்ச்சியான மக்கள் வருகையினாலும் தாங்கள் சிறுபான்மையினராக மாறி தங்கள் கலாச்சாரம், மத நம்பிக்கை, உணவு, தனித்தன்மை போன்றவற்றை இழந்து சொந்த தேசத்திலேயே அகதிகளாக ஆகிவிடுவோம் என்கிற பயம் ராக்கைன் மக்களுக்கு இருந்தது. அந்த பயமும் நியாயம் தான். ஏனென்றால் அதை நாம் காஷ்மீரில் நிதர்சனமாக பார்த்து விட்டோம்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளான பகுதி ராக்கைன். அதனால் பலர் கிராமங்களை காலி செய்து விட்டு பர்மாவின் பிற பகுதிகளுக்கு சென்று விட்டனர். அந்த காலத்தில் தான் தற்போது வங்கதேசமாக உள்ள பிரதேசத்திலிருந்த முஸ்லிம்கள் இந்த பகுதிகளுக்கு குடியேறி இருக்கிறார்கள்.

தங்களது இடம், வாழ்வுரிமை, கலாச்சாரம் ஆகியவை பறிக்கப்படும் அபாயம் நேரும் காலத்தில் வேறு வழி இல்லாமல் ராக்கைன் மக்கள் ரொஹிங்கியாக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தவும், மறுத்தவர்களை மிரட்டவும் தாக்கவும் தொடங்கினார்கள். இதில் சிலர் இறந்து போக ரொஹிங்கியாக்கள் திரும்ப தாக்கியதில் ராக்கைன் மக்களும் சிலர் இறந்தார்கள். இதில் தான் பிரச்சனை பெரிதானது.  புத்த மதம் அழிந்து இஸ்லாம் அந்த இடத்தில் பரவும் அபாயம் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியாக்கள் அந்த பகுதியில் இருந்தனர். நிலைமை அப்படியே இருக்குமா? வெடித்தது கலவரம்.

2012ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டார்கள். இன்று 10 லட்சம் பேருக்கு மேல் ரொஹிங்கியாக்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அதில் இந்தியாவில் 40000 பேருக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களோ நானோ சென்றால் ஒரு வீடு கட்டியோ ஒரு குடிசை போட்டோ தங்க முடியாத காஷ்மீரில், இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்திற்காக குடியேறிக்கொள்ள ரொஹிங்கியாக்கள் உமர் அப்துல்லா அரசால் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் என்பது இதுவரை புரியாத புதிர். சென்னையில் கூட சிலர் இருக்கிறார்கள். அது சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு தான் வெளிச்சம்.

அரக்கான் ரோஹிங்கியா மீட்சி படை என்ற பெயரில் ஒரு ராணுவத்தை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள். அது அவ்வப்போது ராக்கைன் இன பூர்வகுடிகளை கொல்லுவது தாக்குவது சூறையாடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறது. பின்பு வங்கதேசத்தில் சென்று புகுந்து கொள்கிறார்கள். லஷ்கர், அல்கயிதா போன்ற தீவிரவாத படைகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது.

இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக புகுந்திருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களை கட்டாயமாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும். முடிந்தால் வங்கதேசமோ,பாகிஸ்தானோ அல்லது சவூதி, குவைத் போன்ற நாடுகளோ இவர்களுக்கு தஞ்சம் அளிக்கட்டும் என்பது தான் இந்திய அரசின் நிலைப்பாடு.

நோபல் அமைதி விருது வென்ற பர்மிய தலைவர் ஆங்சான் சூகி நடக்கும் வன்முறையை வேடிக்கை பார்க்கிறார் என்று மேற்குலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன. ஆனால், எங்கள் ஊரை காப்பாற்றாத உங்கள் அமைதி பரிசு எனக்கெதற்கு என்று எதைப்பற்றியும் கவலையின்றி இருக்கிறார் அவர்.  அவரின் கட்சியான தேசிய ஜனநாயக அணி தான் இன்று அங்கு ஆட்சியில் உள்ளது. உலகம் முழுதும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை, ”மதத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அதை இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது” என்று பிரச்சாரம் செய்யும் வெள்ளை முற்போக்கு கும்பல்,  பர்மாவின் ”பவுத்த தீவிரவாதம்” என்று பச்சையாக எழுதுகிறது. அதன் இந்திய கிளைகள் இங்குள்ள ஊடகங்களில் அதை அப்படியே வழிமொழிந்து வாந்தியெடுக்கின்றன.  மனிதாபிமானம், அகதிகள் ஒப்பந்தம், ஐநா என்றெல்லாம் அதற்கு சால்ஜாப்பு சொல்லப்படுகிறது.

உங்கள் உளறல் எங்களுக்கு கூந்தலுக்காச்சு என்று பர்மா இவர்களை முற்று முழுதாக வெளியேற்றும் முயற்சியில் இருக்கிறது. அதை இந்தியாவும் சீனாவும் ஆதரிக்கின்றன. இதன் முடிவு என்னவாக இருக்கும்,  இதனால் நமக்கு என்ன சாதக பாதகங்கள் இருக்கும்,  மேற்குலகின் போக்கு எப்படி மாறும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(ஆர்.கோபிநாத் ஃபேஸ்புக் பக்கம் இங்கே). 

Tags: , , , , , , , , , , ,

 

10 மறுமொழிகள் மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி

 1. s krishnamoorthy on September 18, 2017 at 4:37 pm

  Myanmar is not afraid of international sanction or threat from Muslim Block. When it comes to protection of their interest Myanmar rose to the occasion.

 2. இந்துவா on September 19, 2017 at 12:13 am

  ரோஹிங்கியா முஸ்லிம்களால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைபற்றிய விளக்கத்திற்கு நன்றி.இவர்களை இந்தியாவில் குடியேற்றுவது இந்திய அரசின் கடமை என்பது போன்ற திட்டமிட்ட பிரசாரங்கள் பத்திரிக்கைகளில் நடைபெறுகிறது.

 3. கார்த்திக் on September 23, 2017 at 8:04 pm

  இதேபோல் தமிழர்களையும் அப்போது வெளியேற்றி இருப்பார்கள்

 4. தாயுமானவன் on September 24, 2017 at 4:29 pm

  //வங்கதேச ரொஹிங்கியாக்களின் குடியேற்றத்தினாலும் அங்கிருந்து தொடர்ச்சியான மக்கள் வருகையினாலும் தாங்கள் சிறுபான்மையினராக மாறி தங்கள் கலாச்சாரம், மத நம்பிக்கை, உணவு, தனித்தன்மை போன்றவற்றை இழந்து சொந்த தேசத்திலேயே அகதிகளாக ஆகிவிடுவோம் என்கிற பயம் ராக்கைன் மக்களுக்கு இருந்தது. அந்த பயமும் நியாயம் தான். ஏனென்றால் அதை நாம் காஷ்மீரில் நிதர்சனமாக பார்த்து விட்டோம்.//

  மேற்கண்ட வரிகள் ஈழ மக்களுக்கு அப்படியே பொருந்தும். ரொஹிங்கியாக்கள் பர்மாவில் போடும் ஆட்டம் எப்படியோ அதே போன்றது தான் சிங்கள இந வாதமும் செய்வது.. தமிழர்களின் பகுதிகளில் சிங்களர்களை அதிகஅளவில் குடி அமர்த்துவதும் இதே போன்றது தான்.

 5. ராம் on October 3, 2017 at 10:45 am

  அங்கோலா நாட்டில் மசூதிகளை சீல் வைத்துவிட்டார் அந்நாட்டு அதிபர் ஒரு நாட்டில் மனிதவளம் என்பது மொழி,கலாச்சாரம்,நாட்டுப்பற்று, நாட்டை செழிப்படையச்செய்தல், அதற்காகவே தன்னை அர்ப்பணித்தல் போன்ற உயர்ந்த செயல்களால் நாடு வளம்பெறம் மேலும் புத்தரின் போதனைகளை தீவிரமாக கடைபிடிக்கும் நாட்டில் இஸ்லாமை கலப்பதில் அந்நாட்டு மக்களுக்கு விருப்பமில்லை, என்பதே உண்மை

 6. venkates on October 3, 2017 at 3:12 pm

  ஏற்க்கனவே ,இங்கு வாழும் பழைய அகதிகளின் பரிந்துரை,கொலைகார கூத்தை கண்டு களியாட்டம் போடும் முற்போக்கு முடிச்சவிக்கிகளை புறந்தள்ளி மத்திய அரசு ,விழிப்புடன் செயல்போடுகிறது!வாழ்த்துக்கள்.

 7. venkates on October 4, 2017 at 4:27 pm

  ”தோ முட்டு சந்து”சப் டைடலில் ‘தமிழில் சந்திசிரிப்போம்!’என்று நாளிதழ் நடத்தி நாட்டில் காகித குப்பைகளை கூட்டும் அந்த நாளிதழில் ஆன்மிக கட்டுரை எழுதுபவன் அகதிகளுக்கு அழுகிறான்!சமையல் குறிப்பு போடும் அம்மணிகளும்,அந்த காலத்தில் நாடிழந்து ஓடிவந்த அகதிகளுக்கு குழா புட்டும் ஆப்பமும் அவித்து போட்ட கதைகளை கூறி அழுகிறார்கள்,போங்கள்! அந்தளவுக்கு அகதி அபிமான கொடி பட்டொளி வீசி பறக்கிறது. தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்க விடாமல் இந்த மோடி அரசு அழிச்சாட்டியம் செய்கிறதே,என்று அழுகிறார்கள். ஆனால் அன்று ஓடிவந்த அகதிகள், சல்லி நாய்களால்,நாய்களால் வேட்டைஆடப்பட்டு ஒடி வந்த புள்ளிமான்கள்! இன்று புகலிடம் தேடி வருபவர்கள், வேடந்தாங்கல் பறவைகளல்ல! அடி வாங்கி ஒடி வரும் நச்சு பாம்புகள், தங்கள் சல்லித்தனத்தால் புத்த பறவைகளை பருந்துகளாக்கி ,வேட்டை வேடம் இடம் மாறியதால்,பாசாங்குகளோடு வரும் ஏழை வேடங்கள்! பழைய அகதி இலக்கண பாசம், அந்த பறவைகளுக்கு அளிக்கப்பட்ட புகலிடம் இவர்களுக்கு அளிக்கப்பட்டால், சாவு கைகளால் தோண்டும் ‘அகலிடம்’ஆகிப்போகும்!
  {edited}

 8. இந்துவா on October 4, 2017 at 7:59 pm

  தாயுமானவன் என்பவர் சொல்கிறார் ரொஹிங்கியாக்கள் பர்மாவில் போடும் ஆட்டம் எப்படியோ அதே போன்றது தான் சிங்கள இந வாதமும் செய்வது..

  ரொஹிங்கியாக்கள் முஸ்லிம்கள். குடியேறிய பிரதேசங்களிலும் அவர்களது மதம் சார்ந்த, பிறமக்களுக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளே சொந்த பிரதேசங்களிலேயே முஸ்லிம்கள் எம்மை அகதிகளாக ஆக்கிவிடுவார்களோ என்கிற பிறமக்களின் நியாயமான பயமே உலகம் முழுவதும் பிரச்சனைகளுக்கு காரணம்.
  ஆனால் இலங்கையில் தமிழ் இந்துக்களும் சிங்கள புத்தர்களும் ஒரு குடும்பத்தின் அண்ணண் தம்பி உறவுகள்.
  அவர்களை மோதவிட்டு பயனடைய விருப்புபவர்களிடம் நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.

 9. இந்துவா on November 6, 2017 at 7:50 pm

  ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை இந்தியாவில் குடியேற்ற வேண்டும் என்கிறார்கள் சிலர்.
  வங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை பராமரித்து வரும் வங்கதேசத்து சுகாதார பிரிவு தலைவர் என்ன சொல்கிறார்?
  ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் முகாமில் பல குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் உள்ளன.
  19 பிள்ளைகளை பெற்று கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம் தம்பதிகள் கூட உள்ளனர்.
  ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம் ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்.
  மியான்மர் மக்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்?

 10. Radika on December 21, 2017 at 3:14 pm

  இந்துவா அவர்களே# தங்கள் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
  //தமிழ் இந்துக்களும் சிங்கள புத்தர்களும் ஒரு குடும்பத்தின் அண்ணண் தம்பி உறவுகள்.
  அவர்களை மோதவிட்டு பயனடைய விருப்புபவர்களிடம் நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.//

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*