தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி

ஒரு பண்டிகையைக் கூட நிம்மதியாகக் கொண்டாட விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் ஒரு பிரிவினர். சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினால் அதில் ஒரு குழப்பத்தை உருவாக்குவது. புத்தாண்டு சித்திரையிலா தையிலா என்று சாதாரண மனிதன் குழம்பும் அளவுக்கு எதையாவது சொல்வது. ஒரு பிரிவினர் பூணூல் போட்டுக்கொண்டால் பன்றிகளுக்குப் பூணூல் அணிவிக்கிறேன் என்று அதற்கும் கீழான கூட்டம் கிளம்புவது. தீபாவளி கொண்டாடினால் வெடிக்காதே என்று பிரச்சினை பண்ணுவது. இப்படி ஒரு கூட்டம்.

தீபாவளியில் வெடி வெடித்தால் சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படுகிறது என்று அறிவியல் காரணங்களை முன்வைக்கிறார்கள். இப்படி அறிவியல் காரணங்களை முன்வைப்பவரெல்லாம் எப்படியோ திக கும்பலுக்கும் கம்யூனிஸக் கும்பலுக்கும் நண்பர்களாக தற்செயலாக அமைந்து தொலைக்கிறார்கள். இப்படித்தான் ஊரெல்லாம் சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வு பேசியதாகப் போற்றப்பட்ட ஒருவரின் வீடியோவைப் பார்த்தபோது அவர் பிராமணர்களைத் திட்டிகொண்டிருந்தார். இவரைப் போன்றவர்களுக்கு ஹிந்து மதப் பண்டிகைகளில் மட்டுமே இந்த சுற்றுப்புறச் சூழலெல்லாம் நினைவுக்கு வரும். பண்டிகைகளில் இருக்கும் முக்கிய அம்சத்தை உடைப்பதன்மூலம் பண்டிகையையே இல்லாமல் ஆக்கி ஹிந்து மதத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்த முயல்வதுதான் இவர்களின் முக்கிய நோக்கம். இதற்குத் துணையாக அறிவியல், சுற்றுப்புறச் சூழல், முற்போக்கு என எல்லாவற்றையும் சமயத்துக்குத் தகுந்தாற்போல் கலந்துகொள்வார்கள்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு மாதம் முழுக்க ஸ்டார் எரிய விட்டால் அதிகம் மின்சாரம் செலவாகுமே என்று மறந்தும் பேசிவிடமாட்டார்கள். (கிறித்துவர்கள் வருடம் முழுக்க ஸ்டார் எரியவிட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.) இஸ்லாமியர்களைப் பற்றி யோசிக்கவே அஞ்சி நடுங்குவார்கள். கிடைத்து ஹிந்து இளிச்சவாயக் கூட்டம்தான்.

இதில் உள்ள நிஜமான பிரச்சினை, ஹிந்துக்களும் இதற்குக் காவடி தூக்குவதுதான். சில ஹிந்துக்கள் உண்மையில் நல்ல இதயத்தோடு, இதன் பின்னே இருக்கும் வலையையும் உண்மையையும் புரிந்துகொள்ளாமல், சுற்றுப் புறச் சூழல் குறித்து நிஜமான அக்கறையில் சொல்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த பிரச்சினை எல்லாம் ஏன் ஹிந்துக்களுக்கு மட்டுமே வருகிறது என்பதையாவது அவர்கள் யோசிக்கவேண்டும்.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்.

பட்டாசு வெடிப்பதால் பறவைகள், நாய்கள் அஞ்சும் என்பது இன்னொரு வாதம். ஒரு நாளில் ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடாது என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். இவர்களது கருணையை நினைத்தால் நமக்கே தொண்டை விக்கிக்கொள்ளும். தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. பிஸ்கட் போட்டிருந்தாலும் ஹிந்துக்களின் பட்டாசால் நாய்க்குடியே அழிந்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது வேறு விஷயம்.

மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள், கண்ணில் படும் மிருகங்களையெல்லாம் எண்ணெய்யில் வதக்கி உண்டால் அவையெல்லாம் இல்லாமல் போய்விடுமே என்று யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே.

நூறு கோடிப் பேரும் என்னவோ வெடி வெடிக்காமல் உறங்கமாட்டார்கள் என்கிற அளவுக்கு இங்கு பிரசாரம் நடக்கிறது. உண்மையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெடி வெடிப்பது குறைவே. பத்து வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் வெடி வெடிப்பதுவும் குறைவே. இதில் பெண்கள் வெடிப்பதும் குறைவு. இதில் சராசரியாக ஆயிரம் ரூபாய்க்கு வெடி வாங்குபவர்களே மிக அதிகம் இருப்பார்கள். ஆயிரம் ரூபாய்க்கு கொசு வெடிதான் இன்றைக்கு வெடிக்கமுடியும் (டெங்குவை ஒழிப்போம்!). இந்த நிலையில் இந்த வெடியால் சுற்றுப் புறச் சூழல் ஒழிந்துவிடும் என்பது வீம்புப் பிரசாரம்.

வெடி வெடிக்கும்போது சிறுநீர் கழிப்பேன் என்ற அச்சுறுத்தல் எல்லாம் சிறுநீர் அளவுக்கே மதிக்கப்படவேண்டியது. அந்நேரத்தில் வெடி வெடிக்காமல் அல்லது ராக்கெட் வைக்காமல் இருப்பதும் நம் பெருந்தன்மைதான்.

இந்த வீம்புப் பிரசாரங்களை முறியடிப்பதற்காகவாவது எப்போதும் வெடி வாங்கும் அளவுக்கு 200 ரூபாய்க்கு மேலாக வெடி வாங்கி ஆசை தீர வெடிக்கவும். ஒவ்வொரு வெடியிலும் ஹிந்து மதத்தைச் சூழ்ந்துள்ள இந்த இரட்டைவேடக்காரர்களின் மாய்மாலங்கள் பொசுங்குக என்று நினைத்துக்கொண்டு வெடிக்கவும். சுற்றியுள்ள, வெடி வாங்க முடியாத ஏழைச் சிறுவர்களை உடன் சேர்த்துக்கொண்டு அவர்களைக் கொண்டு வெடிக்கச் செய்து தீபாவளியை வெடியுடன் கொண்டாடவும். வெடி வெடிக்கும்போது தேவையான பாதுகாப்பு அம்சங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு கடைப்பிடித்து, பாதுகாப்பான தீபாவளியை, ஹிந்துக்களின் வண்ணமயமான பண்டிகையை வெடியுடன் கொண்டாடவும். தீபாவளி வெடி வாழ்த்துகள்.

பின்குறிப்பு: ஒவ்வொரு வருஷமும் இதைச் சொல்ல வெச்சதுதான் இரட்டைநாக்குக்காரர்களின் சாதனை.

(ஹரன்பிரசன்னா தனது  ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

14 Replies to “தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி”

  1. அளவோடு செய்வதில் தவறு இல்லை. நீதி மன்றங்கள் வரம்பு கடந்து நடந்துகொள்கின்றாா்கள்.

    சபாிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா என்பதை முடிவு செய்யும் தகுதி நீதிமன்றத்திற்கு கிடையாது.

    ஏற்கனவே சிறுமிகளையும் வயது அதிகமான பெண்கள் அனுமதிக்கப்பட்டுதான் வருகின்றாா்கள்.

    பெண்களுக்கு என்று தனி சபாி மலையை உருவாக்க வேண்டும்.அதில் பெண்கள் மட்டும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு கேரள அரசு ஒரு மலையை ஒதுக்கி தர வேண்டும்.தருவாா்களா ?

  2. There is an organised ganging up of anti HINDU brigade to throttle all Hindu religious activities. Saluhtering of animals in the name of religion in public places hurting the feelings of people who preach and practise Ahimsa is tolerated, in the name of religion screaming and shouting every single day abuses against every other religious group is tolerated because they are Minorities! But a Hindu can not celebrate his festival in the way he wants as per his customes and tradition is not allowed. Shame on all of us !!!

  3. தீப ஒளித் திருநாளே தீபாவளி ஆனது. அறிவு விளக்கை ஏற்றுவோம்; அறியாமை இருளைப் போக்குவோம்.

  4. ///”Everyone Who Criticises The Way Festivals Are Being Observed Is Not A Hindu-Hater”// May be but everybody who criticises the ****routine ways of celebration of hindu festivals**** and advocating for doing away with such ways are certainly against hindu interests.

    There are motivated western lobbies funded by ford and rockfeller foundations which are activated at the advent of every other hindu festival for doing their hit jobs. One of the ways is making their weird and evil logic look fashionable / rationale .

    The hit jobs are multi pronged. They conduct them striaght away from missioneries in which instance the hostilities are apparent. The campaign conducted through the print and visual media through dollar money of western racist church supplemented by willing advertising coolies are more fashionable.

    The third type of hit campaign is conducted through the conduit of crypto christians is the most lethal. people hiding behind hindu names present themselves as hindus but criticise hindu festivals as if they are genuine hindus and fool hindus.

    Due to social media presence, the tricks and the conduits are but easily made known to hindus at large. These days there is pronounced opposition and hostility of hindus against the motivated and racist white church funded campaigns which negatively paint the ways the hindu festivals are conducted.

    Jai hind.

  5. Let us celebrate this deepawali with lots and lots of crackers but with safety and let us light lamps in the houses of all those workers whose livelyhood depends upon successful sale of crackers.

    lets discard the logic of crypto christians, evil print and visual media dancing to the tune of racist white church and anti national christian missioneries.

  6. /////”Everyone Who Criticises The Way Festivals Are Being Observed Is Not A Hindu-Hater”// May be but everybody who criticises the ****routine ways of celebration of hindu festivals**** and advocating for doing away with such ways are certainly against hindu interests.//

    Not may be. Must be.

    What do you mean by routine way? Prof Seetha is clear that, in the past, there were no so-called atom or hydrogen bomb crackers. The danger level of dE causing crackers were few and that too, people i.e. parents used to not buy and give it children. Some wild youth did. But today, Diwali becomes synonymous with all kinds of crackers only. What happened to Lakshmi Puja in the North and Ganga Snanam in the South with which the festival was first associated? asks Seetha. Has anyone critised them?

    So, your routine way should be as in the past. No one criticised the festival in the past. All criticism is only now, that too, on the factor of bursting loud crackers even after 11 pm. Go back to her article and read again.

    If some one crticises the festival on its other aspects, there you sound right. But that is a different issue that should not be clubbed with the current issue of crackers and Diwali.

  7. How eco friendly is killing of animals in public places during Muslim festivals?. Some video clippings show animal blood flowing in streets like a brook. We Hindus must unite and use our index fingers intelligently in 2019. Tamilhindu must educate its readers about the regional and national political parties which are inimical to Hindus. Cheap anti Hindu , anti national parties must be taught a lession .

  8. \\ What do you mean by routine way? \\ No one criticised the festival in the past. \\

    Well, playing of crackers is one of the most cherished routine way of celebrating deepawali since ages. Every other festival has its ****routine way of celebration****. And every ****Hindu*** is well aware of routine way of celebrations. Perhaps every other ***nutana*** way of celebration is also adopted and cherished by hindus if such a way is aimed at consolidation of hindus. Example way of changes adopted by hindus in celebrations of vinayaka chaturti. But yes, even in this festival, still there is scope for retaining the new ***Hindu Consolidation*** way but making amends in it.

    I have no problem if some restrictions are imposed on the sound decibel of the crackers considerig the impact of pollution. But altogether banning the crackers is crypto christian tactic to take the sheen out of the festival and altogether destroy the way of celebrating a particular festival. The objective of crypto christians is to attack the way every other hindu festival is celebrated.

    Way back in 1980s before ever there were concerted campaign against hindu festivities, vengaya vedi which was popular was banned. And there was not even a murmur against such a ban. cause, it only attempted to ban a particular cracker and not altogethr banning of crackers.

  9. தமிழ்மதம் தளத்தினருக்கு

    அன்புராஜ் அவர்களுக்கு இட்ட மறுமொழியும் விழுங்கப்பட்டது அதைச்சுட்டிக்காட்டி சஞ்ஞை அவர்களுக்கு எழுதப்பட்டதும் இதோ விழுங்கப்பட்டுவிட்டது
    இது எனக்கு புதிதும் அல்ல.
    இதற்க்கு முன்பும் அதாவது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பும் இதே நிலையை நான் அடைந்ததுண்டு.
    என் பதிவுகள் மிக முக்கிய கட்டத்தில் அப்போதும் இப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டது.

    ஒரு பதிலை மக்களுக்கு போய் சேரவிடாமல் தடுத்திருப்பதால் நீங்கள் வெற்றியடையவில்லை
    ஒரு பாமரானாகிய என் கருத்தை தாக்குப்பிடிக்க வழியில்லாமல் தோற்று ஒளிந்திருக்கிறீர்கள்

    நான் பள்ளிப்படிப்பும் தாண்டாத ஒரு சின்ன கடை வைத்து பிழைத்துக்கொண்டிருக்கும் சராசரி.

    உங்கள் வாசகர்களை பார்க்கிறேன்
    பெரும்பாலும் பெரிய படிப்பும் நல்ல வேலையும் உள்ள தகுதிவாய்ந்தவர்களே…
    ஆனால் சத்தியம் பயணிக்க பெரும் வாகனம் தேவையில்லை
    அது எங்கிருந்தாலும் பரவி வந்துவிடும்
    என் எழுத்தை இந்த தளத்திலிருந்து துடைத்து எறிந்திருக்கலாம்
    அது நிச்சயம் மக்களை வந்து அடைந்தே தீரும்
    பஞ்சை வைத்து நெருப்பை மறைக்கிற பைத்தியக்காரத்தனத்தை செய்யாதீர்கள் என்ற வேண்டுகோளோடு முடிக்கிறேன்

  10. ஸலாம் அலைக்கும் ஜெனாப் மீரான் சாஹேப்

    \\\ meeran sahib on November 15, 2017 at 6:20 pm
    தமிழ்மதம் தளத்தினருக்கு \\

    ஈதென்ன சாஹேபுக்கும் தமிழ்மதம் தளத்தினருக்கும் வந்த சோதனை.

    கருத்தையெல்லாம் கருத்தா தமிழ்மதம் தளத்தினருக்கு அனுப்பினாக்க ……………

    ஐயா சாமி அது தமிழ் ஹிந்து தளத்தில் எப்படீங்க பதிவு செய்வாங்க 🙂

    பழி ஒரு பக்கம் பாவமொரு பக்கமோ 🙂

    அந்தத் திரியிலானால் லக்ஷமண குமார் ஸஸ்பென்ஸ் இந்தத் திரியிலானால் தளமே பாதாளத்துக்குப் போச்சு……………

    இது என்ன திரி திரியாக திரிபாகிறது?

    தவராஜ செம்மேரு ஷாஹுல்ஹமீரதாசரைச் சிந்தித்து சித்தம் தெளிவுற அன்புடன் உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பகிருங்கள் ஜெனாப் 🙂

  11. திரு.கிருஷ்ணா குமார்…

    மீரான் சாகிப் மிக நியாயமாகத் தான் இருக்கிறார்.. எந்த இடத்திலும் அவர் கடுமையான சொற்களையோ அல்லது தனி நபர் தாக்குதலையோ அவர் முன்னெடுக்காத போது எதற்க்காக அவரின் கருத்துக்களை இருட்டடிப்பு செய்ய வேண்டும். உண்மையில் அவருடைய நேர்மைக்கு முன்பாக, இங்கு விவாதிப்பவர்களின் யோகியதை பல்லிளித்து தான் நிற்கிறது .

  12. சிவநெறிச்செல்வர் தாயுமானவர் அவர்களுக்கு

    திருச்சிற்றம்பலம். உப்புந்தியா அப்படீன்னா பப்புந்தி என்று சொல்லுவது எப்படி வாதமாகும். அவரது இரண்டு உத்தரங்களை நான் சுட்டி அதை விமர்சித்திருந்தேன். என்னிடம் நீங்கள் அவருக்காக ஜவாப் சொல்ல விழைந்தால் என்னுடைய ப்ரச்னங்களை ஒட்டி சொல்லுங்களேன்.

    லக்ஷமணகுமார் சொல்லிய கருத்து என்று மீரான் சாஹிபு அவர்கள் சொல்லியதை லக்ஷமணகுமார் என்று ஒரு கருத்துப் பதிவாளர் எப்போது எங்கு சொன்னார் என்று ஜெனாப்-ஏ-அலி சாஹேபுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் சொல்லலாமே.

    இங்கு கருத்துப் பகிர்ந்ததில் ஸ்மைலி போட்டிருக்கிறேனே பார்க்கவில்லையா? சாஹேப் அவர்கள் தமிழ் ஹிந்து தளத்தினை தமிழ்மதம் என்று தவறாகச் சொல்லியதை சுட்டிக்காட்டுவதற்காக மட்டிலும் அது. சில சமயம் நானுமே கூட தவறாக இழை பிசகி வேறெங்காவது கருத்து பகிர்ந்ததுண்டு. நாம் பகிரும் கருத்தை நமது உத்தரங்களை ஒரு முறை வாசித்து விட்டு பகிர்ந்தால் பிழைகள் குறையும் சாரம் கூடும். தப்பா இது?

    ஒரு நபரைக் குறிப்பிட்டு அவர் சொல்லியதான கருத்தை மறுதலிப்பது என்றால் அந்த நபர் மெய்யாலுமே அப்படி ஒரு கருத்தை சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

    யாருமே சொல்லாத கருத்தை ஜபர்தஸ்தியாக யார் தலையிலாவது கட்டிவிட்டு தடாலடியாக அட்ச்சுவுடுவதற்கு ஏகபோக குத்தகை ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவிற்கு மட்டிலும் தான் உண்டு 🙂 இப்படி பேர் பேராக அதற்குப் போட்டியிடுவதை மிக மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன் 🙂 🙂 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *