அக்பர் என்னும் கயவன் – 12

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி… 

அக்பர் தான் தோற்கடிக்கும் நாடுகளில் இருந்து பெண்களைப் பிடிப்பதனை ஒரு தொழிலாகவே கொண்டிருந்ததொரு கயவன் என்று நான் சொன்னால் பெரும்பாலான இந்தியர்கள் அதனை மறுக்கவே செய்வார்கள். ஏனென்றால் அவர்களது மூளை பொய்களாலும், புனை கதைகளாலும் நிரப்பப்பட்டுள்ளன.

ராணி துர்காவதி

பெரும்பாலான இந்தியர்கள் ராணி துர்காவதி என்னும் வீரப்பெண்மணியை அறிந்திருக்க மாட்டார்கள். அக்பரின் படையினரை எதிர்த்துப் போராடிய ராணி துர்காவதி தோல்வியடையும் நிலையில் போற்களத்தில் வைத்தே தற்கொலை செய்து கொண்டார். அக்பரிடம் பிடிபட்டால் தனக்கு ஏற்படும் கதியை நன்கு உணர்ந்ததாலேயே அந்தப் பெண்மணி அந்த முடிவை எடுத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துர்காவதியின் சகோதரியான கமலாவதியும், அவளது மருமகளும் சிறைப்பிடிக்கப்பட்டு அக்பரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆசார, அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, இறை அச்சத்துடனும், பக்தியுடனும் வாழ்ந்த ஹிந்து அரச, அரசிகளைத் தோற்கடித்து அவர்களின் பெண்களைப் பிடித்துக் கொண்டு வந்து,  மதுவிலும் போதைமருந்திலும், கொலையிலும், படுகொலைகளிலும் மூழ்கிக் கிடக்கும் தனது அந்தப்புரத்திற்குக் கொண்டுவந்து அவர்களை அவமானமும், சிறுமையும் செய்வது மட்டுமே அக்பரின் நோக்கமாக இருந்தது. இதனை உணர்ந்த ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை எரித்துக் கொன்றார்கள். இப்படிப்பட்ட கயவனையே நமது வரலாற்றாசிரியர்கள் பிற மதத்துப் பெண்களை திருமணம் செய்து அக்பர் மத ஒற்றுமையைக் காத்தார் எனக் கதை கட்டுகிறார்கள்.

அக்பரின் வரலாற்றாசிரியரும், மஹா புளுகன் என்று அறியப்பட்டவருமான அபுல் ஃபசல், “அக்பர் தனது அந்தப்புரத்துப் பெண்களுக்காக அருமையான மாளிகைகளைக் கட்டினார். அங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தாலும் அக்பர் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனியறையை அளித்தார். மேலும் அந்தப் பெண்களை பல குழுக்களாகப் பிரித்து அந்தப் பெண்களுக்கென பல வேலைகளைக் கொடுத்திருந்தார். பல நல்ல குணமுள்ள பெண்கள் அந்தப் பெண்களைக் கவனித்துக் கொள்ளும் தாதிகளாகவும், அவர்களுக்குத் தேவையானவற்றை மேற்பார்வை செய்பவர்களாகவும் அக்பரால் நியமிக்கப்பட்டனர். இன்னொரு பெண் அவர்களின் தேவைகளை எழுதிக் கொடுக்கும் எழுத்தராகவும் இருந்தாள்” என்கிறார்.

இதனை விடவும் ஆகாசப் புளுகினை நாம் எங்கும் கண்டிருக்க இயலாது. இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் ஐந்தாயிரம் பெண்கள் தங்குவதற்கு ஏற்றவாறு அக்பரால் கட்டிக் கொடுக்கப்பட்ட மாளிகையை நாம் காணமுடியாது என்பதே உண்மை.

அக்பர் தனது அரசவை முக்கியஸ்தர்களின் மனைவிகளையும் விட்டு வைக்கவில்லை. பதாயுனி சொல்கிறார், “தங்களை அரசருக்கு ‘அறிமுகப்படுத்திக்’ கொள்ள விழையும் “தகுதியுள்ள”அரசவை முக்கியஸ்தர்களின் பேகம்கள் அக்பருக்கு தங்களின் விருப்பத்தைத் தெருவித்து பதிலுக்குக் காத்திருக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட முக்கியஸ்தர்களின் மனைவிகள் அக்பரின் அந்தப்புரத்திலேயே ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும். அந்தப்புரத்தைப் பாதுகாப்பதெற்கென தன்னிடமிருக்கும் ஏராளமான காவலாளிகளை நம்பாத எண்ணமுடையவரான, அந்தப்புரத்தை தன்னுடைய நேரடிக் கண்கானிப்பிலிருந்து விலக்கியதேயில்லை”.

மேற்சொன்னவற்றை சிறிது ஆராய்ந்து பார்ப்போம். திருமணமான எந்தப் பெண் தன்னை அக்பரிடம் மனமுவந்து ஒப்புவிப்பாள்? ஏற்கனவே பெண்களால் நிரம்பி வழியும் அக்பரின் அந்தப்புரத்தில் நுழைவதற்கென மனுக் கொடுத்துக் காத்துக் கிடக்க அந்தப் பெண்களுக்கு வேறு வேலையில்லையா என்ன? தன்னுடைய கணவனைய்ம், குழந்தைகளையும், உற்றார் உறவினர்களையும் மாதக் கணக்கில் விட்டுவிட்டு அக்பரின் அந்தப்புரத்தில் அடைந்து கிடைக்க அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? மேற்சொன்ன “தகுதியுள்ள பெண்கள்” என்பதற்கு அக்பரின் கண்ணில் பட்ட தனது அரசவை முக்கியஸ்தர்களின் அழகான மனைவிகள் எனபதுதானே அதற்கு அர்த்தம். அவர்கள் வர மறுத்தால் அல்லது அவர்கள் கணவர்கள் அனுப்ப மறுத்தால் அவர்களுக்கு என்ன நிகழும் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். ஆக, அக்பர் அடுத்தவனுடைய மனைவியை மாதக் கணக்கில் தன்னுடன் வைத்திருந்து சந்தோஷித்திருக்கிறார். அதற்குப் பிறகும் அவராக திரும்ப அவரது குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்தால்தான் உண்டு. இல்லைலெயென்றால் அவளும் ஐந்தாயிரம் பேர்களில் ஒருத்தியாக மாறிப்போவாள்.

அக்பர் அந்தப்புரத்தின் பாதுகாப்பைத் தானே நேரடியாக கண்காணித்தார் என்பதிலும் அர்த்தம் உண்டு. ஏனென்றால் அரசவையில் தனக்கு அருகில் இருப்பவன் தனது மனைவியை மீட்டெடுக்க எந்த நேரத்திலும் எதுவும் செய்வான் என்பது அக்பருக்கு நன்றாகவே தெரியும். நிச்சயமாக அவருக்கு மிரட்டல்களும் வந்திருக்கவே செய்யும். எனவே அக்பர் அந்தப்புர பாதுகாப்பில் தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்திருக்கக் காரணம் இருக்கிறது.

தனது இருப்பிடத்திற்கு அருகிலிருந்த பெரும் விபச்சார மையங்களை நிர்வகிப்பதிலும், அதில் பணிபுரிந்த விபச்சாரிகள் மீதும் அக்பருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. தனது விபச்சார மையங்களில் பணிபுரியும் பெண்களிடையே இருந்த கன்னிகளின் எண்ணிக்கையையும் அக்பர் துல்லியமாகக் கணக்கு வைத்திருந்தார். அவ்வப்போது விபச்சாரிகளையும், கன்னிகளையும் அழைத்துப் பேசுவதனை வழக்கமாகக் கொண்டிருந்தார் அக்பர்.

அபுல் ஃபசல் சொல்கிறார், “பேரரசர் அரண்மனைக்கு அருகிலிருந்த விபச்சாரிகளின் பகுதியில் ஒரு மதுக்கடையைத் திறந்தார். அந்த விபச்சார மையத்தில் பணிபுரிந்த பெண்களின் எண்ணிக்கையை யாராலும் கணக்கிட இயலாத அளவிற்கு ஏராளமான பெண்கள் அங்கு இருந்தார்கள். அந்தப் பகுதி ‘சைத்தான் புரா’ என்றழைக்கப்பட்டது. அரச சேவகர்கள் நடனமாடும் பெண்களைத் தங்களுடன் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் வழக்கமிருந்தது. அக்பருக்கு அறிமுகமானதொரு அரச சேவகனுக்கு கன்னிப் பெண் எவளும் தேவையாக இருந்தால் அவன் முதலில் அக்பரின் அனுமதியைப் பெற வேண்டும். பெண்களைப் போலவே சிறுவர்களும் அங்கு விபச்சாரம் செய்து வந்தார்கள். இதன் காரணமாக அங்கு அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு ரத்தம் சிந்தியது…..பேரரசர் அவ்வப்போது விபச்சாரப் பெண்களில் முக்கியமானவளை அழைத்து முதன்முதலில் யாரால் அவர்கள் கன்னி கழிந்தார்கள் என்பதினைக் கேட்டு மகிழ்ந்தார்….”.

அக்பர்நாமா நூலை அக்பரிடம் சமர்ப்பிக்கும் அபுல் பசல்

இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்பில் கூறப்படும் “விபச்சாரிகள்” என்கிற பதம் ஹிந்துப் பெண்களைக் குறித்தே சொல்லப்பட்டது என்பதினை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். போர்களில் தங்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், கணவன்மாரையும் இழந்த அப்பாவிப் பெண்கள் அக்பரால் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைக்கப்பட்டார்கள்.

மேற்கூறிய விஷயங்கள் பெரும்பாலான இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். ஆனால் அக்பரின் ஆட்சிக்காலத்தில் உண்மையிலேயே நிகழ்ந்த அவலங்கள் எனபதினை உங்களின் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். சிறுவர்களுடன் உறவு கொள்வதில் ஆரம்பித்து விபச்சாரமும், போதைமருந்து உபயோகமும், குடிகாரர்களின் சண்டைகளும் அக்பரின் அரசாட்சியில் தினப்படி வாழ்க்கைமுறையாகவே இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஒரு பேரரசனே சிறுவர்களை பிறருக்குப் புணர்ச்சிக்கென அனுப்பி வைக்கும் “சேவைகள்” உலகின் எங்குமே கேள்விப்பட்டிருராத ஒரு விஷயமாகும்.

சிறுவர்களைப் புணர்வது அக்பரின் “விலைமதிப்பற்ற” பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அக்பரின் பாட்டனான பாபர் தனக்கும் இன்னொரு சிறுவனுக்கும் இருந்த முறையற்ற தொடர்பினைக் குறித்து மிக விளக்கமாகவே அவரது வரலாற்றுக் குறிப்புகளில் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். சிறுவர்களின் மீது பித்துப் பிடித்து அலைந்த பாபரை அவர் தனது மனைவியிடம் உடலுறவு கொள்ளும்படி பாபரின் தாய் வற்புறுத்தி அனுப்பி வைத்த சம்பவமும் பதிவாகியிருக்கிறது. அக்பரின் தகப்பனான ஹுமாயுன் அதற்குச் சிறிது குறைந்தவனில்லை. தனது உபயோகத்திற்கென சிறுவர்களை எப்போது தன்னுடனேயே வைத்திருந்தான் ஹுமாயுன். அக்பரும் ஏராளமான சிறுவர்களை தனது அந்தப்புரத்திற்கு அருகிலேயே வைத்திருந்ததாக அபுல் ஃபசல் கூறுகிறார்.

அக்பரின் சேவகர்கள் தங்களுக்கென “ஆண் காதலர்களை” வைத்திருப்பது சர்வ சாதாரணமானதொரு விஷயம். அபுல் ஃபசல் சொல்கிறார், “அக்பரின் ஆட்சிக்காலத்து 12-ஆவது வருடத்தில் அக்பரின் அரசவை சேவகனான முஸாஃபர் என்பவன் குதுப் என்னும் சிறுவனுடன் உறவு வைத்திருந்தான். பொறாமையடைந்த அக்பர் வேண்டுமென்றே அந்தச் சிறுவனை முஸாஃபரின் வீட்டிலிருந்து பிடித்து கொண்டு வர ஆணையிட்டார். அதனால் கோபமடைந்த முஸாஃபர் ஒரு ஃபக்கீரின் உடையை அணிந்து காட்டுக்குள் சென்றுவிட்டான். வேறுவழியில்லாமல் அக்பர் அவனைத் திரும்ப அழைத்து அவனது “ஆண் காதலனை” அவனிடம் ஒப்படைத்தார்”.

இதே போன்றதொரு இன்னொரு சம்பவம் அடில்ஷா காலத்தில் நிகழ்ந்தது. தன்னை தவறான முறையில் உபயோகிக்க முயன்ற அடில்ஷாவை அவரது அரண்மனையிலிருந்த அலி ஒருவன் கொன்றுவிட்டான். அடில்ஷா சிறுவர்களைப் புணர்வதில் பேரின்பம் கொண்டவர். தனது இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக பீதரின் மாலிக் பரீத் என்பவரிடமிருந்து இரண்டு அலிகளை விலைக்கு வாங்கிய அடில்ஷா அதில் ஒருவனை உபயோகிக்க முயல்கையில் அவனால் கொல்லப்பட்டான். எனவே ஆண்களுடன் ஓரினச் சேர்க்கை வைத்துக் கொள்வதும், சிறுவர்களைப் புணர்வதும் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆட்சியின் ஒரு அங்கமாகவே இருந்துவந்துள்ளது என்பதினை அறியலாம்.

அபுல் ஃபசல் அக்பரின் அரசவையில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தையும் கூறுகிறார்.

“ஷா குலி-மகரம்கான் என்பவன் காபூல்கான் என்கிற சிறுவனுடன் காதல்வயப் பட்டிருந்தான். அக்பர் அவனிடமிருந்து அந்தச் சிறுவனை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டார். கோபமடைந்த குலி-மகரம்கான் ஒரு யோகியைப் போல உடையணிந்து சாமியாராக காட்டிற்குள் போய்விட்டான் (வழக்கம் போல!). அக்பரின் மாமனான பஹ்ரம் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு குலி-மகரம்கானை மீண்டும் அக்பரிடம் அழைத்துப் போனார். வேறு வழியில்லாத அக்பரும் குலி-மகரம்கானிடம் அவனது காதலனான காபூல்கானை ஒப்படைத்தார்”.

பின்னர் அக்பர் குலி-மகரம்கானை தனது அந்தப்புரத்திற்குள் அனுமதித்தார். அப்பாவித்தனமாக அந்தப்புரத்திற்குள் சென்ற குலி-மகரம்கானை காயடித்துவிட்டார் அக்பர்.

(தொடரும்)

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

23 மறுமொழிகள் அக்பர் என்னும் கயவன் – 12

 1. அ.அன்புராஜ் on November 15, 2017 at 8:13 pm

  இந்த கிறுக்கன் கொடுமைக்காரன் அக்பா் குறித்து இவ்வளவு எழுதித்தான் ஆக வேண்டுமா ? குரான் வழியில் இவன் வாழ்ந்துள்ளான். நீங்கள் 1,2,3, 4 பெண்களை மணந்து கொள்ளுங்கள்.யுத்தத்தில் கைபற்றிய பெண்கள் எத்தனைபோ்களை வேண்டுமானாலும் குமுஸ் பெண்களாக செக்ஸ்அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள் என்று குரான் அனுமதி அளிக்கின்றது. குரான் இருக்கும் வரை உலகில் அமைதி ஏற்படாது. குரான் மற்றவா்களைகாபீா் என்று பட்டம் கட்டி அழிக்கும்.பின் முஸ்லீம்கள் மத்தியில் அரேபியன் ஜமாத் வேறுபாடுகள் காரணமாக ஒருவரை மற்றவா் காபீாஎன்று பட்டம் கட்டி கொலை தொழில் சிறந்து ஓங்கும். ஏய்தவன் குரான் முஹம்மது இருக்க அம்பை நோவது போல் அக்பரை குறை சொல்வது ஏன் ? ஆனாலும் இவன் இந்துக்களுக்கு இவ்வளவு கொடுமை செய்யக்கூடாது.
  பாவம் நமது இநது உடன் பிறப்புக்கள்.பாவம் நமது இந்து சகோதாிகள். சிலை வணக்கம் நம்மை மனிதா்கள் பற்றி சிந்திக்க மறந்து விட்டோம். சகமனிதா்களைக குறித்து நாம் அதிகம் கவலைப்பட்டதில்லை.அரேபிய கிறிஸ்தவ மதங்கள் அரசியல் இயக்கங்கள்.பிறரை அழிப்பது அவா்களின் வெளிப்படையான கொள்கை.இவ்வளவு நடந்த பின்னரும் இந்துக்கள் மதச்சாா்பின்மை பேசி நாசமாகப் போவதுதான் …. ?

 2. அ.அன்புராஜ் on November 15, 2017 at 8:31 pm

  சவுதி அரசு தனது நாட்டின் மிகஉயா்ந்த சிவிலியன் அவாட்டான அப்துல் அஜஸ்அல்-சரத் ( நமது நாட்டின் பாரத ரத்னா) விருதை நமது பிரதமா் மோடிக்கு அளித்துள்ளது.
  தற்போது சவுதி அரசு நமது நாட்டில் பிறந்த ”யோகா” பயிற்சிகளை விளையாட்டு என்று ஒப்புதல் அளித்துள்ளது. இனிமேல் யோகா வை பகிரங்கமாக அனைவரும் கற்கலாம்.கற்றுக் கொடுக்கலாம்.

  Muslim Cleric Welcomes Saudi Arabia’s Approval of Yoga as Sports Activity
  November 15, 2017
  http://www.india.com/news/agencies/muslim-cleric-welcomes-saudi-arabias-approval-of-yoga-as-sports-activity-2634828/

 3. அ.அன்புராஜ் on November 15, 2017 at 8:35 pm

  ஐசிஸ் [ISIS] இந்திய அரசிற்குஎச்சாிக்கை – கும்பமேளா மற்றும் திருச்சுா் ஆடிப்புரம் நிழச்சிகளை தாக்கி அழிப்போம் ஆடியோ எச்சாிக்கை.

  Islamic State Warns Of Las Vegas-Like Attack on Kumbh Mela, Thrissur Pooram in New Audio
  Nov 15, 2017
  New Delhi: World’s most dreaded terror outfit the Islamic State (IS) has warned to carry out lone-wolf terror attack across India in the days to come.
  Full report at:
  https://timesofindia.indiatimes.com/india/hizb-terrorist-killed-in-encounter-in-kashmirs-kulgam-soldier-martyred/articleshow/61647339.cms

 4. meeran sahib on November 17, 2017 at 6:56 pm

  திரு அன்புராஜ்
  பெயரில் அன்பு இருந்து வேலையில்லை நெஞ்சில் அன்பு சுமந்து வாழுங்கள்
  உங்களிடம் அன்பு இருக்குமானால் உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் இறைவேதமாக தங்களின் வாழ்க்கை வழிகாட்டியாக நம்பும் ஒரு புத்தகத்தை(குர்ஆன்)பயங்கரம் பரப்பும் ஒரு நூலாக சித்தரித்து உங்களின் இயலாமையை வெறுப்பை கக்காதீர்கள்

  அக்பர் என்ற அரசன் குறித்தும் அவன் ஆட்சி குறித்தும் எழுதுகிறீர்களே எழுதிவிட்டுப்போங்கள்
  அதில் என்னத்தையும் எழுதிவிட்டுப்போங்கள் அதில் எங்களுக்கு அக்கறையில்லை..
  அதிலும் அந்த மன்னன் ஒரு முஸ்லிம் என்ற நினைப்பில் நீங்கள் காட்டும் வெறுப்புதான் தெரிகிறது
  நிஜத்தில் அக்பர் என்பவன் ஒரு முஸ்லிமாகவே இல்லை
  இஸ்லாத்தை துறந்து “தீனேஇலாஹி’ என்று ஒரு மதத்தையே உருவாக்கி வழிகெட்டுப்போனவன்.
  பெரும்பாலான மன்னர்களின் வாழ்க்கையே கொலையும் சூரையாடலும் டாம்பீகமும் உல்லாசமும் ஊதாரித்தனமும்தான்.
  இதில் அக்பர் மட்டும் என்ன விதிவிலக்கா…
  நல்லதும் கெட்டதுமான பலதும் கலந்ததே மன்னர்களின் வாழ்க்கை
  ஒரு கூட்டம் இவனை ‘மகா அக்பர் மதச்சார்பற்ற மன்னன் பெருந்தன்மையும் மதிநுட்பமும் கொண்டவன்’என்று பள்ளி பாடப்புத்தகத்தில் எங்களுக்கு வரலாறு கற்பித்தது .
  இன்னொரு கூட்டம் அவன் அக்பர் என்ற இஸ்லாமிய பெயரோடு இருக்கிறான் என்ற ஒரே காரத்திற்க்காக அவனை மனித மிருகமாக சித்தரித்து தனக்குத்தானே புளங்காகிதமடைந்து கொள்கிறது.
  இரண்டுமே மிகை
  அக்பரை பற்றி நீங்கள் விரும்பியதை எழுதி உங்களுக்கு நீங்களே மகிழ்ந்து கொள்ளுங்கள் பிரச்சினை இல்லை.

  குர்ஆன்,காஃபிர்,நான்கு பெண்கள் மணம்…..
  இதெல்லாம் இதோடு சம்மந்தப்பட்டதா…

  அக்பர் என்பவன் முஸ்லிமாகவே இருந்தாலும் கூட அவன் அவன் செய்ததாக நீங்கள் அளக்கும் கொடூரங்கள் அனைத்தும் இம்மிபிசகாமல் நடந்ததாக வைத்துக்கொண்டால் கூட அவன் செய்ததற்க்கு இஸ்லாமோ குர்ஆனோ பொறுப்பாகுமா…
  ஜெயலலிதா இருந்தார்..
  மிகப்பெரிய ஊழல் ராணியாக உச்சநீதி மன்றத்தாலேயே பட்டம் வாங்கி போனார்
  அவரும் கோயில் குளம் அன்னதானம் சகுணம் ஜோசியம் கும்பமேளா என்று இருந்தவர்தான்..
  அதற்க்காக அவரின் அத்தனை அலங்கோலத்திற்க்கும் இந்துமதமா பொறுப்பு..
  இதோ அவரின் நிழலாய் இருந்த தோழி கொள்ளையடித்தது நிரூபணமாகி உள்ளே கிடக்கிறார்
  அவரும் கோயில் குளம் என்று இருப்பவர்தான் இந்து மதம்தான் இந்த அநியாயத்தை பண்ணவைத்ததா..
  எல்லா மதத்திலும் எல்லா அயோக்கியனும் இருக்கிறான்
  மதமே இல்லை கடவுளே பொய் என்று சொல்கிற கருணாநிதி வகையறாக்களும் இதே தகிடுதித்தங்களை செய்து கொண்டுதான் இருக்கிறது.
  எதை எதையோடு இணைப்பீர்கள்…
  ஒரு மதம் ,வேதம் என்று சொல்லப்படுகிற ஒரு புத்தகம் இப்படி பயங்கரவாதத்தை ,மற்ற மக்களை வெறுத்து “கொல்லுங்கள்”என்று செல்கிற அளவிற்க்கு இருக்குமா..
  அப்படி இருந்தால் இவ்வளவு திரளான மக்கள் கூட்டம் அதை ஏற்குமா..
  உலகிலேயே மிகத்தீவிரமாக சமய நம்பிக்கையோடும் பற்றோடும் பின்பற்றுகிற அளவிற்க்கு
  இந்த “கேடுகெட்ட”சித்தாந்தத்தை மக்கள் ஏற்பார்களா…
  என் இந்த நீண்ட விளக்கம் ,தாய்மதம் தமிழ்மதத்தால்
  வெளியிடப்பட்டாலே ஆச்சர்யம்

 5. அ.அன்புராஜ் on November 18, 2017 at 3:56 pm

  அன்புள்ள மீரான் அவா்களுக்கு
  எனது வணக்கம். தங்களது கருத்துக்களை படித்தேன்.அரசா்கள் அனைவரும் உல்லாசபிாியா்கள்தான் என்ற பொது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.தங்களுக்கு எனது பதிவில் வருத்தம் ஏற்பட்டு இருந்தால் தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுங்கள். குரானை நிறைய எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றுகின்ற ஒரே காரணத்தால் அது சிறந்தது என்ற தங்களின் கருத்து முற்றிலும் அபத்தமானது. சுவாமிவிவேகானந்தாின் ஞானதீபம் என்றபுத்தகத்தை தாங்கள் படிக்க வேண்டும்.குறிப்பான உலக பொது மதம் மற்றும் அதை அடையும் வழி -Universal religion and its realisation -என்ற கட்டுரை தங்களின் கவனத்திற்கு தருகின்றேன். ஏதேனும் நூலகத்திற்கு சென்று படியுங்கள்.
  ஹிந்து பண்பாட்டின் அடையாளம் வெகு தெளிவாக கௌதம புத்தாிடமிருந்து துவங்குகின்றது.அன்பினால் கௌதமா் சாதித்தது எவ்வளவு என்று யாராலும் மதிப்பிட இயலாது.ஒரு குண்டுசீயை எடுத்து குத்தாமல் உலகில் ஏராளமான நாடுகளை கௌதமா் அன்பினால் அன்பினால் மட்டும் வென்றுவிட்டதை நினைத்து பாருங்கள்.வெறுப்பை பகையை கொடூரத்தை அடாவடித்தனத்தை வன்முறையை அதுகொண்டு யாரும் வெல்ல முடி யாது. அன்பினால் மட்டுமே வெல்ல முடியும்.கௌதமா் அன்பினால் வென்றாா்.அந்த தரத்தில் பாா்க்கும் போது முஹம்மது ஒரு சமய ஆச்சாாியா் என்று யாரும் சொன்னால் அதற்கு அருகதை அவருக்கு இல்லை என்பதே எனது முடிவு. காயல்பட்டணத்தில் ஒரு கடையில் முஸ்லீம் பெண்கள் பொட்டு வைககலாமா என்ற கேள்விக்கு ”காபீா்களின் பழக்க வழக்கங்களை முஸ்லீம்கள் பின்பற்றக் கூடாது என்ற பதிலை ஒரு பத்திாிகையில் 1978 ம் ஆண்டு படித்தேன். காபீா் என்றால் என்ன என்ற கேள்வி என்மனதை உறுத்தியது. ஆகவே அரேபிய இசுலாமிய நூல்களை நிறைய படித்தேன்.

  கதிஜாவின் சகோதரா்கள் கிிறிஸ்தவா்களாக இருந்தாலும் சமய வெறுப்பு இன்றி அனைவரும் சகஜமாகவே வாழ்திருக்கின்றாா்கள்.
  அரேபியா்கள் கிறிஸ்தவா்களை மணப்பது கிறிஸ்தவா்கள் அரேபியா்களை மணப்பது யுதா்களை மணப்பது எல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள்.தான் ஒரு ”நபி” இறைவனின் தூதா் என்று அறிவித்ததுடன் அனைத்து மக்களும் தன்னை பொது தலைவராக எற்க வேண்டும் என்று எதிா்பாா்க்கின்றாா். எந்த சீா்திருத்தமும் அவ்வளவு எளிமையாக நடைபெற்று விடுமா ?முஹம்மதுவின் செல்வாக்கு கோத்திர தலைவா்களின் தலைமை பதவிக்கு ஆபத்து என விளக்கப்பட்டது. சிலை வணக்கத்தை இவா் தவறு என்றும் பெரும் பாவம் என்று அறிவித்தாா். இவருக்கும் அவசரம்.அன்பினாலும் வேறு நல்ல விதத்தில் மக்களை கவா்ந்து மக்களை தனது செல்வாக்குக்குள் கொண்டு வருவதற்கான பொறுமை இவாிடம் இல்லை….2

 6. அ.அன்புராஜ் on November 18, 2017 at 4:08 pm

  இவரது பேச்சை கேட்பாா் யாரும் இல்லை. மேலும் ஏற்கனவே பிடிவாத குணமும் முரட்டு சுவாவம் கொண்ட அரேபியா்கள் இவருக்கு கடுமையான எதிா்ப்பை தொிவித்தாா்கள்.
  கோத்திரச் சண்டைகள் வெகுபிரசித்தம். மக்காவின் அபுசுபியான் என்ற பெரும் வணிகா் அவரை கடுமையாக எதிா்க்கின்றாா்.எனவே மதினாவில் இருக்கும் முஹம்மது அபிசீனியாவிற்கு வியாபாரப் பொருட்களை கொண்டு செல்பவா்களை கொள்ளையடிக்கின்றாா். இது இசுலாமிய வரலாற்றில் முதல் வெற்றி யுத்தம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லா பத்ரு போாில் நபிக்கு பெரும் வெற்றியை அளித்தான் என்று இன்றும் அரேபிய மத பிரசங்கிகளின் முழங்கங்கள் கேட்கின்றன்.முஹம்மது செய்தது பகல் கொள்ளை. போா் அல்ல.
  ஒரு பகல் கொள்ளையடிப்பவன் நபி என்ற சொல்லுக்கு சமய ஆச்சாாியாா் என்ற பட்டத்திற்கு இந்திய தரம்படி தகுதியாக மாட்டான் . இது எனது முதல்வாதம். தங்களின் மறுப்பை திரு.மீரான் பதிவு செய்ய வேண்டுகின்றேன். பின முஹம்மது குறித்த அடுத்த கருத்தை நான் பதிவு செய்கின்றேன்.தயது செய்து மீரான் அவா்களின் பதிவை வெளியிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்து புராணங்களில் அது இருக்கு இது இருக்கின்றது என்று கூற வேண்டாம். இந்து மதம் வளரும் மதம். பாிபுரணமானது அல்ல. அதை நோக்கிச் செல்வது இந்து சமயம். அரேபிய மத நிலைகளில் இருந்து பொது பண்பாடு கலாச்சாரம் படி எனது கருத்திற்கு தங்களின் பதிவை பதிவு செய்யுங்கள்.
  ———————————————————————

 7. அ.அன்புராஜ் on November 18, 2017 at 4:14 pm

  குர்ஆன்,காஃபிர், நான்கு பெண்கள் மணம்…..
  இதெல்லாம் இதோடு சம்மந்தப்பட்டதா…

  —————————————————————————-
  ஆம். பின் ஏதோடு சம்பந்தப்பட்டது திரு.மீரான் அவா்களே!குரான் செய்திருக்கும் கொடுரங்களுக்கு ” காபீா் ” என்ற பதம்தானே காரணம். வேறு என்ன ?

 8. இந்துவா on November 18, 2017 at 8:18 pm

  Meeran Sahibஅவர்களே,
  //மதமே இல்லை கடவுளே பொய் என்று சொல்கிற கருணாநிதி வகையறாக்களும் இதே தகிடுதித்தங்களை செய்து கொண்டுதான் இருக்கிறது.//
  கருணாநிதிக்கு இந்து மதம் என்ற மதம் மட்டுமே இல்லை.அவருக்கு இந்து மதத்தை பிடிக்காது. தங்களது முஸ்லிம் மதம் என்றால் அவருக்கு மிகவும் இஷ்டம்.அவர் சொல்ல கேட்டு முகமதுவின் புகழ் அறிந்தேன். துறவியாக வாழ்ந்த முகமது பெண்களின் விடுதலைக்குப் போராடுபவர், அடிமைகளை காப்பாற்றுபவர் என்று கருணாநிதி புகழ்ந்திருந்தார்.
  //திரு அன்புராஜ்
  பெயரில் அன்பு இருந்து வேலையில்லை நெஞ்சில் அன்பு சுமந்து வாழுங்கள்//
  அன்புராஜ் யாரை கொலை செய்தார்? எவரை துன்புறுத்தினார்?
  அமைதி மதம் முஸ்லிம் மதம், அன்பை போதிக்கிறது என்று சொன்னபடி அல்லாகு அக்பர் என பெருமையுடன் முழக்கமிட்டவாறு தினமும் கழுத்து அறுத்து கொலைகள் செய்தபடி உள்ள உலக முஸ்லிம் மதத்தவர்களுக்கு அன்பாக இருங்கள், (இது மிகவும் அதிகம் தான்) குறைந்தது மனிதர்களை கொலை செய்யாதீர்கள் என்றாவது தாங்கள் வேண்டுகோள் விடுக்கலாம் இல்லையா!

 9. mani on November 19, 2017 at 5:15 pm

  @Meran sahib

  Kur-on it self contains violent words. ISTS are all referrring those verses.

 10. Krishna on November 19, 2017 at 9:27 pm

  Reply to Mr. Meiran Sahib. you have claimed that nearly 1.5 billion worldwide accepted Islam without questioning the tenats. In fact, proved beyond doubt, mostly in most of countries of west Asia, present day Afghanistan, Pakistan and India people were Hindus then and were forcefully converted to Islam by sword. Another thing is that there is one concept ‘Apostacy’. i.e. those who are in Islam should not question the tenets and its prophet. Fearing of slaying by hardcore fanatics, most of the moderates especially women keep mum. This thing you claim billion people accept Islam whole hearterdly. False. After Taliban was subdued by American forces in 1996, people were rejoiced at their liberation, went out for cinemas and sent their kids to schools. In India, Muslims are mingling with the mainstream society because of secularism, democracy not because of Islamic caliphate. By brutal force, innocent may remain subdued but you claim Islam is religion of peace.

  Regarding politicians like Karunanidhi and Jayalalitha, their misdeeds cannot be attributed to their theism or atheism. Even Muslims and Christians support either Jaya or Karuna in elections for furthering their Agenda. They also know their wrongs but could not vote for the right candidate. What do you say about this.

  Many more things can be written but as of now only this much.

 11. Ramesh srinivasan on November 20, 2017 at 12:24 pm

  Mr Meeran Sahib is asking a question which is valid. We should discuss with such saner voices. We can tell that how the religion part of Akbar rule operated. Akbar kept quiet when that part operated agressively. The only thing is he is good compared to Aurangazeb.

 12. meeran sahib on November 20, 2017 at 1:49 pm

  திரு அன்புராஜ்
  தலைப்பிற்க்கு சற்றும் பொருத்தமற்ற உங்கள் வாதம்
  மீண்டும் உங்களின் மனதில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் மேல் உள்ள அளவு கடந்த வெறுப்பை பறைசாற்றுவதாகவே இருக்கிறது
  அக்பர் என்ற மன்னனுக்கும் அவனைப்பற்றி இந்த தளத்தில் எழுதப்படுவதற்க்கும் இஸ்லாத்திற்க்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டேன்…
  அந்த கேள்வியை அந்தரத்தில் விட்டுவிட்டு
  முஹம்மதிற்க்கு சமய ஆச்சாரியார் என்ற அருகதை இல்லை என்று அளக்கிறீர்…

  அவருக்கு அந்த தகுதி இருக்கிறதா இல்லையா என்பது
  எங்கள் பிரச்சினை அல்லவா நீங்கள் இப்படி சொல்லிவிட்டால் நாங்கள் அவரை மதிப்பதை விட்டுவிடுவோமா….
  கண்மூடித்தனமாக நாங்கள் அவரை ஆராதிப்பதோ புகழ்வதோ அவருக்கு இறைத்தன்மை அளித்து அவரை வேண்டுவதோ இல்லை..
  ஆனாலும் எங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்
  இறைச்சட்டம் என்று தந்ததையே நம்பி பின்பற்றுகிறோம்
  இது எங்கள் நம்பிக்கை சம்மந்தப்பட்டது ..இதிலிருந்து எங்களை ஒரு இம்மியளவும் யாரும் எதுவும் நகர்த்திவிட முடியாது..

  இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை..

  கௌதம புத்தன் யார்…
  அவனுக்கும் இந்து மதத்திற்க்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா
  அவன் கடவுளைப்பற்றி பேசினானா..
  நீங்கள் கடைபிடிக்கிற ஏதாவதொரு மத அனுஷ்டாணம் அவன் அறிவானா..
  ஒருபக்கம் ஆதி மதம் சனாதன மதம் என்பது
  இன்னொரு பக்கம் புத்தனும் இந்து வள்ளலாரும்இந்து
  என்பது..
  பிறகு ஏன் அம்பேத்கர் கடுமையான விமர்சனத்தோடு புத்மதம் தழுவினார்…

 13. meeran sahib on November 20, 2017 at 2:15 pm

  திரு அன்புராஜ்
  அக்பரைப்பற்றி எழுதிய கட்டுரையில் முஹம்மதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்..

  தொடர்பற்று கிளைத்தாவிக்கொண்டே இருப்பது
  சரி நானும் உங்கள் போக்கிற்க்கே வருகிறேன்

  முஹம்மத் யார் ..அவரின் அரசியல் ஆன்மிகம் என்ன…
  பெரிய கேள்வி ஆனால் இதற்க்கான விடைகள் ஏராளம் இருக்கிறது
  இதற்க்கு உங்கள் மனதில் உள்ள வெறுப்பை களைந்துவிட்டு உட்கார்ந்து படித்தால் அதில் ஆச்சர்யம் தரத்தக்க தரவுகளை நீங்கள் அள்ள முடியும்

  மைக்கேல்ஹார்ட் என்பவன் ஒரு ஆய்வு நூல் எழுதினான்..
  மனித சமூகம் நாகரிகம் பெற்ற காலத்திலிருந்து இதுவரை
  உலகில் மிகப்பெரும் தாக்கத்தை மாற்றத்தை உருவாக்க காரணமாக இருந்தவர்கள் யார் என்று..
  அதில் நூறுபேரை தேர்ந்தெடுக்கிறான்
  அதில் முதல் மனிதராக முஹம்மதையே வைக்கிறான்
  இரண்டாவது நியூட்டன் மூன்றாவது இயேசு
  இப்படியே ஐன்ஸ்டீன் சாக்ரடீஸ் புத்தர் கன்பூஷியஸ் கோர்பச்சேவ் வரை பட்டியல் போகிறது

 14. meeran sahib on November 21, 2017 at 12:31 pm

  அன்புராஜ் அவர்களின் கேள்விக்கு இன்னும் சில விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன்
  இலங்கை ஒரு புத்தமத நாடுதான் அங்கே தமிழர்களுக்கு நடந்த கொடுமையை உங்கள் கவனத்திற்க்கு கொண்டு வருகிறேன்
  மேலும்…
  புத்தனின் போக்கில் இன்னொரு கோணமும் இருக்கிறது
  சித்தார்த்தனாக இருந்த மன்னன் ஒரே இரவில் கணப்பொழுதில் தன் மனைவி குழந்தை நாட்டுமக்கள் அவர்களுக்கு தலைமைதாங்கிய பெரும் பொறுப்பு..
  அனைத்தையும் விட்டு பிறந்த மேனியாக அர்த்தராத்திரியில் அனைத்தையும் அனாதையாய் விட்டுவிட்டு போகிறானென்றால் இது அநீதி இல்லையா அநியாயம் இல்லையா…
  ஆசையே அனைத்து துன்பத்திற்க்கும் காரணமென்றால்
  ஆசைதானே இந்த உலகின் வானளாவிய வளர்ச்சிக்கும் காரணம்..
  புத்தனை அடிக்குஅடி இந்த உலகம் பின்பற்றி இருக்குமேயானால் என்றோ இந்த பூமி பந்து மனித சஞ்சாரமின்றி அடங்கியிருக்கும்…
  பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் மட்டுமே கொண்டு இந்த பந்து வெற்றாய் சுற்றிக்கொண்டிருக்கும்

  புத்தனின் போதனையை அலங்கரித்து அம்பாரியில் வைத்து அழகு பார்க்க மட்டும்தான் முடியும்
  வாழ்ந்து அனுபவிக்க முடியாது..அன்புராஜ்

  முஹம்மதின் வாழ்வும் சொல்லும் அப்படியல்ல
  நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
  எல்லோரும் இம்மி பிசகாமல் வாழ்கிறார்களா
  என்பது வேறு…ஆனால் வாழ முடியும்.

  முஹம்மத் தன் வாழ்நாளில் எந்த மந்திரதந்திரங்களும் செய்ததில்லை

  நீங்கள் கிணற்றுத்நவளையாய் தூற்றிக்கொண்டே இருங்கள்
  பாவம் இதில்தான் உங்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்

 15. அ.அன்புராஜ் on November 23, 2017 at 12:45 pm

  ஐயா மீரான் அவா்களே!
  காட்டுமிராண்டியாய் வாழ்ந்த மனிதன் -ஆதாமும் ஏவாளும் அம்மணமாகத்தான் அல்லா படைத்தான்.அவா்களுக்கு பள்ளிவாசல் இல்லை.குரான் இல்லை.ஒழுக்கக் கோட்பாடு இல்லை.படிப்படியாய் மனிதன் அனைத்து வகையிலும் பாிணாமம் அடைந்து வருகின்றான். அந்த பாிணாமம் இன்னும் பாிபுரணமாக இல்லை.நடந்து கொண்டேயிருக்கின்றது.ஒவ்வொரு நிலப்பரப்பிலும் ஒவவொரு காலத்திலும் பல பேராற்றல் கொண்ட மனிதா்கள் தோன்றி ஒவ்வொரு துறையிலும் பாிணாமத்தை முன்நடத்தி செல்கின்றாா்கள்.அப்படி அரேபியாவில் பாிணாமத்தை முன் நடத்திச் சென்றவா் திரு.முஹம்மது என்ற அளவிற்கு எனக்கு சம்மதமே.ஆனால் அவரோடு முடிந்து விட்டது.அவரையன்றி வேறுயாரும் இல்லை என்பது வல்லாதிக்கம்.
  விஞ்ஞான உலகில் நபருக்கு முக்கியத்துவம் கிடையாது.ஒருவா் கண்டுபிடித்ததில் குறைகாண முடியும்-ஆதாரம் இருந்தால் திருத்த முடீயும்.நிராகாிக்க முடியும். அது குறித்து பகை வராது.மகததான விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புக்களை தந்து கொண்டேயிருக்கின்றாா்கள். சமயமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.சுவாமி விவேகானந்தா் ” வேதங்கள் அனைத்தும் -குரான் பைபிள் உட்பட – சாலை மாா்க்கமாக செல்பவனுக்கு உதவும் மைல் கற்கள் மற்றும் ஊா் பலகை திசை காட்டி போல்.ஆனால் நாம் தான் பயணத்தை நடத்த வேண்டும். எந்த திசை காட்டியும் முக்கியம் அல்ல. பாதையின் லட்சியம் மனிதன் அந்தணத்துவத்தை அடைவதுதான்.என்கிறாா்.

 16. அ.அன்புராஜ் on November 23, 2017 at 12:52 pm

  மக்காவின் அபுசுபியான் என்ற பெரும் வணிகா் அவரை கடுமையாக எதிா்க்கின்றாா்.எனவே மதினாவில் இருக்கும் முஹம்மது அபிசீனியாவிற்கு வியாபாரப் பொருட்களை கொண்டு செல்பவா்களை கொள்ளையடிக்கின்றாா். இது இசுலாமிய வரலாற்றில் முதல் வெற்றி யுத்தம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லா பத்ரு போாில் நபிக்கு பெரும் வெற்றியை அளித்தான் என்று இன்றும் அரேபிய மத பிரசங்கிகளின் முழங்கங்கள் கேட்கின்றன்.முஹம்மது செய்தது பகல் கொள்ளை. போா் அல்ல.
  ஒரு பகல் கொள்ளையடிப்பவன் நபி என்ற சொல்லுக்கு சமய ஆச்சாாியாா் என்ற பட்டத்திற்கு இந்திய தரம்படி தகுதியாக மாட்டான் . இது எனது முதல்வாதம். தங்களின் மறுப்பை திரு.மீரான் பதிவு செய்ய வேண்டுகின்றேன்.
  ————————————————————————–
  இந்த கேள்விக்கு விடை தர மறந்து விடடீர்களே! நண்பரே நினைவு படுத்துகின்றேன்.பதில் அளிப்பீராக.
  மைக்கேல்ஹார்ட் என்பவன் உலக பேரறிவு பெற்றவன் என்று நான் நினைக்கவில்லை.அவரது கருத்துக்களை நான் ஏற்கவில்லை.தள்ளுங்கள்.
  நாம் இருவராலும் தீா்க்கக் கூடிய ஒரு சிறு வழக்கிற்கு மைக்கேல்ஹார்ட் யின் துணை தேவையில்லை.
  ————————————————————————
  முஹம்மது நடத்திய பதரு போா் போா் அல்ல.பகல் கொள்ளை .பகல் திருட்டு என்கிறேன்.மறுங்கள் .தங்களது வாதங்களை எடுதது பதிவு செய்யுங்கள்.

 17. அ.அன்புராஜ் on November 23, 2017 at 12:57 pm

  முஹம்மத் யார் ..அவரின் அரசியல் ஆன்மிகம் என்ன…
  பெரிய கேள்வி ஆனால் இதற்க்கான விடைகள் ஏராளம் இருக்கிறது
  இதற்க்கு உங்கள் மனதில் உள்ள வெறுப்பை களைந்துவிட்டு உட்கார்ந்து படித்தால் அதில் ஆச்சர்யம் தரத்தக்க தரவுகளை நீங்கள் அள்ள முடியும்
  ——————————————————————–
  இரண்டரை ஆண்டுகள் அன்னாரது சாித்திரத்தை குரான் கதீஸ் என்று படித்து தள்ளிவிட்டேன். எனது நாட்கள் வீணானதாகவே நம்புகின்றேன். பன்றி சாணம் கூட உரமாகும்.இது இதற்கும் ஆகாது. இசுலாம் என்பது ஒரு விநோதமானவனைப்பின்பற்றி தங்கள் கூட்டத்தைச் சேராத பிற மக்களை கொள்ளையடிக்கலாம் பெண்களை குமுஸ் பெண்ணாக்கலாம் என்ற கொள்கையை பின்பற்றும்ஒரு அரை மனித கூட்டம்.உலக சமாதானத்திற்கு குரான் ஒரு அழி
  வு.

 18. அ.அன்புராஜ் on November 23, 2017 at 1:09 pm

  இசுலாம் சிறுமிகள் திருமணத்தை தடை செய்து விட்டதா ?

  சுவனப்பாியன் செப் 18-2017 ல் வெளியான கட்டுரை.
  எனது மறுப்பு
  சிறுமிகளை பொியவா்கள் அதுவும் 53 வயதான முஹம்மது 9 வயது ஆயிசாவை திருமணம் செய்து 9 வயதில் பருவம் அடையாத அச்சிறுமியோடு உடல்உறவு கொண்டாா் என்ற செய்தி படிக்க கடினமாக உள்ளது.ஒரு சீாதிருத்தவாதிஎன்ற நிலையில் தன்னைக் காட்டிக் கொண்டவா் சமூக அமைப்பில் பிரபல்யமாக இருந்த பல கருத்துககளை திருத்தியவா் சிறுமியை திருமணம் செய்தது ஏற்க சிரமமாக உள்ளது. இசுலாம் என்றும் சிறுமிகளை கிழவா்கள் மணப்பதை தடை செய்யவில்லை.முஹம்மதுவிற்கு பின் யாருக்கும் வஹி வரவில்லை.-அதாவது இறைவன் மற்றவா்களிடம் பேசவில்லை என்கிறாா் சுவனப்பிாியன்.ஆனால்
  முஹம்மது இறந்த பின் ஜனாதிபதி -கலிபா ஆக அபுபக்கா் இரண்டு ஆண்டுகள் உயிரோடு இருந்ததா். பின்பு உமா் என்ற நபி தோழா் இரண்டாம் கலிபா ஆக பதவி வேற்றாா்.இந்த உமா் முஹம்மதுவின் மகள் பாத்திமா -அலிக்கு பிறந்த ”குலதும்” என்ற சிறுமியை 8 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டாா்.குரானிலோ ஹதீஸ்களிலோ சிறுமிகளை திருமணம் செய்யக் கூடாது என்று எங்கும் இல்லை.சாி முஹம்மது வஹி வந்த பின்பு சிறுமிகளை மணக்க தடைவிதித்து விட்டாா் என்றால்

  இரண்டாம் கலிபா உமா் ஏன் சிறுமியைதிருமணம் செய்தாா் ?

  இன்றம் இசுலாமிய உலகில் சிறுமிகளை கிழவா்கள் மணக்க தடை ஏதும் இல்லை. கூடுதலாக பணம் தேவை.அதுமட்டும்தான்

  சுவனப்பிாியன் பொய் சொல்லாதீா்கள்.

 19. mani on November 24, 2017 at 9:53 am

  I suppose except Mohammed no one speak with Allah. so we doubt really He got verses from ALLAH. Kur-on is copied from Jews and Christian Apocrypha.If some one ask Mohammed is illiterate How is possible.That’s why He not directly taken from Torah or Bible. Apocrypha like Village Stories.
  Actually Allah means Supreme in Arab Language used by Arabs long before Mohammed. Mohammed got ides from Jews who lived in Midiena.There is no reference about Mohammed in Torah or Bible claimed by Muslims. Mohammed contact all type wars finally He demolished Kaba Temple by claiming Idol cleansing in year 630 CE.

 20. meeran sahib on November 24, 2017 at 8:19 pm

  திரு அன்புராஜ் இந்த தளம் அல்லாத வேறு வகையில் உங்களை தொடர்பு கொள்ள முடியுமானால் சொல்லுங்கள்
  என்னை தொடர்பு கொள்ள விருப்பமா சொல்லுங்கள்
  நான் தயார்..
  எவ்வளவு கடுமையாக உங்கள் சந்தேகத்தை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அதற்க்குரிய நியாயமான பதிலை
  அன்போடு உங்களிடம் எடுத்து வைக்கிறேன்

  நீங்கள் எந்த கொள்கையில் வேண்டுமானாலும் இருங்கள்
  மாற்றுக்கொள்கையை சரியாக விளங்கி கொண்டு அதை மறுப்பதோ ஏற்பதோ உங்கள் உரிமை

 21. அ.அன்புராஜ் on November 28, 2017 at 9:51 am

  NHM writer software is got corrupted.So I am unable to write in tamil.
  Your reply indicates that you have abandoned Koran/and Mohammed.Because you have no answer for it. Mohammed is full of evils and vices.
  Tamilhindu web is the most suitable site for our debate. You may take the help of any Muslim scholar tamilhindu web would publish all letters unedited.Now I conclude you have no answer for my question and as such Mohammed is a day light robber is stand proved.

 22. அ.அன்புராஜ் on November 28, 2017 at 10:10 pm

  53 years old Mohammed is being accused of marrying 9 yrs old Ayesha who had not attained puberty.It is sure a case of phidophile, a criminal offence.But cruel inhuman demonic to woman/Ayesha,Mr,P.Jainulapthin Organiser TNThouhith Jamant has accepted the above accusations and try to exfurgate Mohammed by false justifications.
  Meeran, Are you going to sit in judgement over the marriage of Mohammed with Ayesha ? who is a child.

 23. Sridhar on December 9, 2017 at 10:13 pm

  Akbar is known as the most tolerant and kind hearted among the Islami rulers of India starting from the Slave Dynasty. If this is his colour one can well imagine the plight of Hindus under the other more barbaric Islamic rulers. Only Hinduism has the resilience to survive such barbarism and cruelty for more than 800 years.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*