முகப்பு » அரசியல், கல்வி, விவாதம்

வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

January 12, 2018
-  

வைரமுத்து என்னும் காசுக்கு தமிழை விற்கும் வணிக பாடலாசிரியர்  தன் ஆண்டாள் உரையில் இண்டியானா பல்கலைக் கழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வருடத்தில் யாரோ ஒரு வட இந்தியாவில் ஒரு கம்னியுஸ பொறுக்கி எங்கோ கிறுக்கி வைத்ததைத் தேடிப் பிடித்து கொளுத்திப் போட்டு விட்டுப் போகிறார்.

அதை முன் வைத்து நான் எப்படி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் திட்டமிட்டு எழுதி வைக்கப் படும் விஷப் பிரசாரங்கள் பின்னர் இந்தியாவின் வரலாறாக மாற்றப் பட்டு அதுவே நிலைத்து விடும் என்பதற்கு இந்த இண்டியானா பல்கலை ரெஃபரென்ஸ் ஒரு உதாரணம் ஆகவே வரவிருக்கும் ஹார்வர்டு தமிழ் சேரை ஆதரிக்காதீர்கள் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன்

உடனே ஒரு இலக்கிய நண்பர் கிளம்பி வந்து ஆண்டாள் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு லெஜண்ட் தானே? வைரமுத்து சொன்னபடியாகவும் இருக்கலாம் அல்லவா என்று அவனுக்கு வக்காலத்து வாங்கினார். அவருடன் பேசுவது அர்த்தமற்ற ஒரு வெட்டி வேலை என்பதினால் நான் மேலே பேசவில்லை.

இப்பொழுது அந்த ஆராய்ச்சிக் கட்டுரை உண்மையிலேயே இண்டியானா யுனிவர்சிடியில் எழுதப் பட்டது இல்லை என்றும் சிம்லாவில் உள்ள இடதுசாரி வக்கிரர்களினால் உருவாக்கப் பட்ட ஒன்று என்றும் அதற்கு ஆதாரம் தமிழகத்தின் டி.செல்வராஜ் என்ற ஒரு கேடுகெட்ட கம்னியுஸ்டு எழுத்தாளர் என்றும் தெரிய வந்துள்ளது. எப்படியோ இண்டியானா யுனிவர்சிடி பேர் அந்த தளத்தில் தென்பட்டதால் வைரமுத்து அதை அமெரிக்க ஆராய்ச்சி என்று சொல்லி விட்டார். அவர் தெரியாமல் சொல்லியிருந்திருக்க வாய்ப்பில்லை. இன்று வரை அப்படி சொன்னது தவறு என்றும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் தெரிந்தே வேண்டும் என்றேதான் அந்த அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் பெயரைப் போட்டுள்ளார். காரணம்?

காரணம் எந்தவொரு விஷயத்தையும் அது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று சொல்லி விட்டால் நம்ம ஊர் கூமுட்டைத் தமிழர்கள் கேள்வி கேட்க்காமல் ஏற்றுக் கொள்வார்கள் என்பதினால்தான். இது ஒரு அடிமை நோய்.

இதற்கு முன்பாக இன்னொரு நண்பர் ப. சிதம்பரத்தை தான் வெகுவாக மதிப்பதாகவும் அவரது பாராளுமன்ற உரைகளை அமெரிக்காவில் உள்ள சவுத் ஏஷியா ஸ்டடிஸ்களில் ஆராய்ச்சி செய்வதாகவும் சொன்னார். நான் பதிலுக்கு வெளியே சொல்லாதீர்கள் சிரிக்கப் போகிறார்கள் என்றேன். இப்படித்தான் எதற்கும் ஒரு அமெரிக்க முத்திரையைக் குத்தி விட்டால் அது உசத்தி அதுவே இறுதியான ஆதாரம் என்று ஆகி விடுகிறது. அப்படிச் சொல்லப் படுவதை நம்புவதற்கு தமிழகத்தில் பல படித்த மூடர்கள் கூடத் தயாராக இருக்கிறார்கள்.

ஆக இங்கு நாகர்கோவிலில் செல்வராஜ் என்ற ஒரு கம்னியுச எழுத்தாளர் முதலில் ஆண்டாளைப் பற்றி எழுதுகிறார். அதற்கு முன்பாக மு.கருணாநிதி எழுதுகிறார். பின்னர் அது சிம்லாவில் உள்ள கம்னியுஸ கடன்காரன்களினால் நடத்தப் படும் தண்ட இன்ஸ்ட்டியூட் ஒன்றில் செல்வராஜ் சொன்னதை கல்வெட்டு ஆதாரமாகக் கொண்டு மீண்டும் கட்டுரையாக எழுதப் படுகிறது. அந்தக் கட்டுரைத் தொகுப்பை இண்டியானா பல்கலையில் ஒரு ரெஃபரன்ஸாக வைக்கிறார்கள். பின்னர் முன்பு தமிழகத்தின் கடைந்தெடுத்த பொறுக்கிகளான செல்வராஜும் கருணாநிதியும் சொன்னது அமெரிக்காவிலேயே சொல்லப் பட்ட ஆதாரங்களாக ஆராய்ச்சி முடிவுகளாக மீண்டும் தமிழகத்திலேயே விற்கப் படுகிறது.

இது ஒரு சுழற்சி தந்திரம். இப்படித்தான் இந்தியாவின் பெருந்தெய்வங்கள் எல்லாம் சிறு தெய்வஙகளை அழித்து விட்டன என்று பாளையங்கோட்டையின் சேவியர் காலேஜில் இருந்து ஃபண்டு செய்யப் பட்டு அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்களினால் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதப் படுகிறது. அதுவே பின்னால் அமெரிக்காவில் பதிக்கப் பட்டு மீண்டும் அமெரிக்கக் கண்டு பிடிப்பாக அதே சமாசாரம் இறக்குமதி செய்யப் படும். விநாயகர் குறித்தும் இவ்விதமே ஆராய்ச்சி செய்யப் பட்டு தமிழகத்தில் விற்பனையானது.

ஒருவன் ஓரிடத்தில் கண்ணகி ஒரு வேசி என்று ஒரு கட்டுரை எழுதுவான். அதை ஆதாரமாகக் குறிப்பிட்டு வட இந்தியாவில் இன்னொருவன் ஒரு பல்கலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கட்டுரை எழுதுவான். அந்தக் கட்டுரையை அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் நாளைக்கு இதே தமிழ்ச் சேரில் உள்ள ஒரு வருங்கால ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதுவார். அது அமெரிக்காவிலேயே ஆராய்ச்சியாளர்கள் சொல்லி விட்டார்கள் ஆகவே கண்ணகி ஒரு வேசிதான் என்று தமிழகத்தில் ஒரு வைரமுத்துவினாலோ ஒரு பழநிபாரதியினாலோ பரப்பப் படும். காலப் போக்கில் அதுவே உண்மை என்று நம்பப் படும்.

இப்படியாகவே நமது அடிப்படை ஆதார நம்பிக்கைகளை திட்டமிட்டு சீர் குலைக்க இவை போன்ற ஒரு மாபெரும் சதிகார அமைப்புகளே கவிஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அமெரிக்க பல்கலைகள் மூலமாக உருவாக்கப் பட்டு தொடர்ந்து சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. நாளைக்கு ஒரு தமிழ்ச் சேரில் அவர்கள் ஆட்களில் ஒருவரான பெருமாள் முருகனை ப்ரொஃபசராகப் போடுவார்கள் அதன் பின்னர் மாதொருபாகன் வரலாற்று ஆவணமாகப் பதியப் பட்டு அமெரிக்காவிலேயே சொல்லப் பட்டு விட்ட உண்மை என்று தமிழகத்தில் பரப்பப் படும். இதற்குத்தான் முட்டாள் தமிழர்கள் மொய் விருந்து தின்று காசு கொடுக்கிறார்கள். தங்கள் கைகளால் தங்கள் கண்களையே குத்திக் கொள்கிறார்கள். ஏற்கனவே இங்கு செயல்படும் கலிஃபோர்னியா டமில் அகடமியில் சுத்தமாக தமிழில் இருந்து பக்தி இலக்கியங்கள் சுத்திகரிக்கப் பட்டு விட்டன. இவை போன்ற அமைப்புகளை நடத்தும் ஆட்கள்தான் இந்த தமிழ் சேரின் பின்ணணியிலும் இயங்குகிறார்கள்

இதை கிறிஸ்துவ மிஷநரிகள் ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். காலப் போக்கில் கண்ணகி ஒரு வேசி என்றும் காரைக்கால் அம்மையார் ஒரு தாசி என்றும் இவ்விதமான கட்டுரைகளால் நிறுவப் பட்டு அவையே எதிர்கால தமிழர்கள் நம்பும் ஆதாரங்கள் ஆகி விடும். எதையும் அமெரிக்காவில் இருந்து சொன்னால் அதை நம்புவதற்கு ஒரு மாபெரும் மூடர் கூடமே தமிழகத்தில் தயாராக உள்ளது.

ஆகவே வைரமுத்து சொன்னது திட்டமிட்டு செய்யப் பட்ட ஒரு சதி ஆகும். அது ஏதோ தற்செயலாகப் பேசப் பட்டது அல்ல. இது ஒரு நீண்டகால சதிகாரத் திட்டத்தின் ஒரு முக்கியமான கண்ணி. ஒரு முக்கியமான அங்கம். இதைச் செய்வதற்கும் பரப்புவதற்கும் அமெரிக்காவில் ஏராளமான இந்திய அமைப்புகள் தேவைப் படுகின்றன. ஃபெட்னா அதில் ஒரு முக்கிய அமைப்பாகும். சென்றதொரு ஃபெட்னா மாநாட்டிலே தமிழச்சி தங்கப்பாண்டியன் என்பவள் உ.வே.சாமிநாதையர் அவர்களை பாப்பான் என்று வசை பாடினாள். இவை எல்லாமே அந்தக் கண்ணியின் தொடர்ச்சிகள்தான். இதை மிஷநரிகள் ஃபெட்னா போன்ற அமைப்புகள் மூலமாகவும் வைரமுத்து போன்ற காசுக்கு விலை போகும் வேசிகள் மூலமாகவும் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.

அப்படி அமெரிக்காவில் தேவைப் படும் அமைப்புகளை நம்மிடமே காசு வாங்கி உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப் படும் ஒரு அமைப்புதான் இந்த சேர் மேஜைகள் எல்லாமே. நாளைக்கு அங்கு இவை போல பல ஆராய்ச்சிகள் செய்யப் படும். அவை இந்தியாவில் பரப்பபட்டு அவையே உண்மை என்று நிறுவப் படும். பெருமாள் முருகன் எழுதிய கதையை ஆராய்ச்சி பூர்வமான உண்மை வரலாறு என்றுதானே அவர் சொன்னார்?  அவருக்கு அதை எழுத காசு கொடுத்தது யார்? அமெரிக்காவின் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் தானே? ஆக நாளைக்கு ஆயிரக்கணக்கான பெருமாள் முருகன்கள்,  செல்வராஜ்கள் இந்த தமிழ்த் துறை மூலமாக சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளே தமிழகத்தின் வரலாற்று சான்றுகளாக ஆவணங்களாக நம்ப வைக்கப் படும்.

இப்படிச் சொல்வதன் மூலமாக இந்துக்களின் ஆதார நம்பிக்கைகளைக் காலப் போக்கில் தகர்த்து அவர்களை மதமாற்றி அதன் மூலமாக இந்திய அரசியலை எளிதாகக் கைப்பற்றி விடும் ஒரு நீண்ட கால சதித் திட்டத்தின் ஒரு கண்ணி முடிச்சுகளே இந்த இண்டியானா, ஹார்வார்ட், வைரமுத்து, செல்வராஜ், பெருமாள் முருகன் அனைத்துமே. “நாயன்மார்களின் வரலாறுகளும் ஆழ்வார்களின் வரலாறுகளும் கிறிஸ்துவ தொன்மங்களின் எச்சம்” என்று போகிற போக்கில் நம் எழுத்தாளர்கள் சொல்லி விட்டுப் போக அதுவே நாளைக்கு ஆதாரங்களாக உருமாற்றப் படும்.

ஆகவெ இந்த விஷயத்தில் இண்டியானா யுனிவர்சிடி நேரடியாக சம்பந்தப் படவில்லை என்றாலும் என் குற்றசாட்டிற்கான சான்று எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. இந்த தமிழ் சேருக்கான என் எதிர்ப்பு அப்படியே உள்ளது. இதற்காக நான் தப்பாக தகவலைச் சொல்லி விட்டேன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள்.

பல்கலையின் பெயரைச் சொன்ன வைரமுத்துவே அது தவறு என்று சொல்லவில்லை. ஆண்டாளைக் குறித்து அவதூறாகப் பேசிய  வைரமுத்துவை இவர்கள் மன்னிப்பு கோரக் கோரவில்லை. அவர் சொன்னது சரி என்று சாதிக்கிறார்கள். ஆனால் இண்டியானா யுனிவர்சிடியை முன் வைத்து நான் தமிழ்ச் சேரை எதிர்த்தது தவறாம். அதற்கு நான் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது நியாயம்.

நான் சொன்னது சரியானதே. நான் மறுக்கவோ மன்னிப்பு கேட்கவோ எந்தவொரு அவசியமும் கிடையாது. இண்டியானா என்று வைரமுத்து திட்டமிட்டு உதிர்த்த ரெஃபரன்ஸ் ஒன்றே என் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. ஆகவே மீண்டும் சொல்கிறேன் – இண்டியானா யுனிவர்சிடி ரெஃப்ரன்ஸ்ஸை முன் வைத்துச் சொல்கிறேன் எந்தவொரு தமிழ்ச் சேரையும் ஆதரிக்காதீர்கள்.

அமெரிக்காவில் உருவாக்கப் படும் இந்திய மொழி,மத கல்வி நிறுவன அமைப்புகளிடம் இந்திய அரசின் கல்வி கலாசாராத் துறை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவை கண்காணிக்கப் பட வேண்டும். அவற்றின் கேடு கெட்ட முயற்சிகள் முறியடிக்கப் பட வேண்டும்

தமிழ் சேருக்கு இங்குள்ள தமிழர்கள் ஏராளமான பேர்கள் நிதி வழங்குகிறார்கள். மொய் திருவிழா நடத்தி கடா வெட்டி விருந்து வைத்து காசு வசூலிக்கிறார்கள். அது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம். பலரும் எந்தவொரு அறிவும் இன்றி ஒரு போலி பெருமைக்காகவே அதற்குக் காசு கொடுக்கிறார்கள். ஒரு ஐம்பது டாலர்களை விட்டெறிந்து விட்டு அதற்கு கடா விருந்தும் சாப்பிட்டு விட்டு ஏதோ உ வே சா போல தமிழ்ச் சேவை செய்ததாக நினைத்துக் கொள்கிறார்கள் இந்த மூடர்கள். இன்று நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு சென்ண்ட்டும் நாளைய தமிழகத்தின் பக்தி உணர்வுகளுக்கும் வரலாற்றுக்கும் வைக்கப் படும் விஷம் என்பதை உணருங்கள். உங்களுக்கு நீங்களே விஷம் வைத்துக் கொள்ளாதீர்கள். எச்சரிக்கையுடன் இருங்கள் என்கிறேன். என்னை தமிழின விரோதி என்கிறார்கள்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

 

21 மறுமொழிகள் வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

 1. ஒரு அரிசோனன் on January 13, 2018 at 1:08 am

  எதிர்ப்பு தெரிவிக்கவேண்டியது அவசியம்தான். ஆனால் தங்களது அருமையான கட்டுரையில் தேவையற்ற அடைமொழிகளைச் சேர்த்து அதன் தரத்தையே குறைத்துவிட்டிருப்பதாக எனக்குப் படுகிறது.

 2. Gopinath Varadharajan on January 13, 2018 at 2:10 am

  Excellent Article. Rajiv Malhotra did extensive research on How these Chairs works.
  https://www.hindupost.in/society-culture/distorting-tamil-culture-ethos-certainty-harvard-tamil-chair/

 3. Gopinath Varadharajan on January 13, 2018 at 3:14 am

  Here is another excellent piece of write up by Rajiv M.
  https://rajivmalhotra.com/library/articles/harvard-indian-billionaires/
  Like T’Nadu Govt. how our own billionaires funding such activities…
  Should be an eye opener to all such incidents. The trace always ends in one of the US Universities.

 4. சு பாலச்சந்திரன் on January 13, 2018 at 8:53 am

  ஈவேரா ஒரு தற்குறியாகவே இருந்தார். வெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, அழுது புரண்டு , நீ போய்விடாதே , எங்கள் தமிழகத்தை மட்டும் உனது அடிமையாக வைத்துக்கொள் என்று கேட்டு ஆகாத்தியம் செய்து பார்த்தார். வெள்ளையனோ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற புரட்சியாளரைக் கண்டு பயந்து, இந்தியாவை விட்டு ஓடினான். தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்றெல்லாம் சொல்லி தமிழனையும், தமிழையும் இழிவு படுத்தினார் . தமிழன் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதித்தார். பிற மதங்களை உயர்த்தி பேசிவிட்டு, பின்னர் காலம் போன காலத்தில், பார்ப்பானுக்கு பயந்து துலுக்கனை ஆதரித்தது, மாட்டு சாணியில் கால் வைக்க பயந்து , மனித மலத்தில் கால்வைத்தது போல ஆயிற்று என்றார். அவரை தலைவர் என்று வெட்கமில்லாமல் சொல்லும் கட்டுமரத்தின் நண்பர் வைரமுத்துவிடம் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? தூங்குபவனைத்தான் எழுப்ப முடியும்.

 5. க்ருஷ்ணகுமார் on January 13, 2018 at 11:06 am

  ஹார்வேர்ட் தமிழ் சேர் சம்பந்தமாக இதில் வெகுகாலம் அனுபவமுள்ள முனைவர் ராஜம் அம்மா அவர்கள் இந்த விஷயத்தில் மேற்கத்திய சர்வகலாசாலைகளின் நிகழும் அரசியல் பற்றி தெளிவாக எழுதியிருக்கிறார். தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத ஆனால் தமிழ் நூற்களை விமர்சனம் செய்யும் பரங்கியர் நாம் கொடுக்கும் பணத்தில் அங்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இது மட்டிலும் ஒரு பெரும் விஷயம் கிடையாது.

  இது போன்று வேலைக்கு அமர்பவர்கள் தங்களுடைய பரங்கிய க்றைஸ்தவ கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காக வேண்டி மாற்று மதத்தைச் சார்ந்த படைப்புகளை முனைப்புடன் இழிவு படுத்துவது நடக்கிறது. ராஜம் அம்மாவுடைய பதிவுகளில் பரங்கிய க்றைஸ்தவ ஸ்தாபனங்களின் பின்புலம் சித்தரிக்கப்படவில்லை. திருமலை அவர்கள் அந்த விஷயத்தையும் தெளிவாககப் பதிவு செய்திருக்கிறார். இதுபோன்று உள்ளரசியலை விளக்கும் ஆய்வின் பாற்பட்ட தமிழ் வ்யாசங்கள் தமிழ் ஹிந்துவில் நிறைய வலையேற்றப் பட வேண்டும்.

 6. BSV on January 13, 2018 at 11:46 am

  இணைப்பு கொடுங்கள். தமிழச்சி தங்கபாண்டியன் உ வே சாவைப்பற்றித் தரக்குறைவாகப் பேசியதாக இவர் சொல்வதை எப்படி நம்புவது? எனவே கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், மற்றும் உங்கள் ”தமிழ் சேர்” எதிர்ப்பு மடல் எல்லாவற்றுக்கும் இணைப்பு கொடுங்கள். நீங்கள் சொல்வதையெல்லாம் எப்படி நம்புவது?

  அமெரிக்கர்கள் சொன்னால் அதை எடுத்துக்காட்டிப் பேசுவது; எழுதுவது இன்று நேற்றல்ல; எப்போதுமே நடந்துவருகிறது. அதைச் செய்பவர்கள் நீங்கள் எதிர்க்கும் ஆட்கள் மட்டுமல்ல; எல்லாருமே. இதைத் தெரியாமல் போன காரணம் உங்கள் படிப்பறிவின் அகலம் குறுகலானதால்.

  அரவிந்தன் நீலகண்டனே அமெரிக்கர்கள் சொன்னதைத்தான் கோடிட்டு காட்டி வருகிறார். சுவ்ராஜ்யா இணைய தளத்தில் போய்ப் படித்துப்பாருங்கள். தெரியும். தான் விரும்பியபடி எழுதும் வெள்ளை எழுத்தாளர்கள் சரி; மற்றவர்கள் தவறு என்ற போக்கில் வெளிநாட்டு எழுத்தாளர்கள் பார்க்கப்படுகிறார்கள். டேவிட் கின்சிலி அவருக்குப் பிடிக்கும்; வெண்டி டோனிகர் பிடிக்காது. இருவருமே அமெரிக்கர்கள்.

  அமெரிக்காவைக் காட்டினாலே முழுமூடர்கள்; அடிமைகள் என்றால், உங்களைத்தவிர மற்றெல்லாரும் மூடர்களே.

  தமிழ் இருக்கையை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென்று எவருமே கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் மட்டுமன்று; இன்னும் சிலர் எதிர்த்திருக்கிறார்கள். எவரையுமே மன்னிப்புக் கேள் என்று தமிழ் இருக்கை அமைத்தோர் கேட்கவில்லை. மாறாக, தக்க பதிலகளை நாகரிகமாக வைத்திருக்கிறார்கள்.

  (Edited and published)

 7. விஜயராகவன் on January 14, 2018 at 12:30 pm

  அற்புதமான பதிவு. தமிழினத்தின் அவமான சின்னம் இந்த வைரமுத்து.

  (Edited and published).

 8. A.Anburaj on January 14, 2018 at 2:31 pm

  சாரமற்ற கட்டுரை. தவிர்த்திருக்கலாம். தாசி வேசி என்ற அடைமொழிகள் நமக்கு எதற்கு ?

 9. Gopinath Varadharajan on January 14, 2018 at 10:55 pm

  Please watch in full, this video about Tamizh Chair.
  https://www.youtube.com/watch?v=7W-9-z8F2gA

 10. பொன்.முத்துக்குமார் on January 14, 2018 at 11:09 pm

  // இணைப்பு கொடுங்கள். தமிழச்சி தங்கபாண்டியன் உ வே சாவைப்பற்றித் தரக்குறைவாகப் பேசியதாக இவர் சொல்வதை எப்படி நம்புவது ? //

  எழுத்தாளர் ஜெயமோகனது தளத்தில் இது குறித்து மிக விரிவான விவாதம் நடைபெற்றுள்ளது. ஃபெட்னா-காரர்களே ஒப்புக்கொண்ட விஷயம் இது. படித்துப்பாருங்கள்.

 11. BSV on January 15, 2018 at 1:52 pm

  In article appearing here, links should be given within the article itself. Thirumalai has not given but you’re only saying where it is available. Please link it here.

  I need the following:

  Thirumalai’s complaint against the Harvard Tamil Chair and the names of those who asked for his apology.
  Karunanidhi’s speech or article insulting Andaal.
  Thangkapandian’s speech or article insulting U.Ve.Sa

  Can you give the links here so that I can find out how far Thirumalai is true in his article.

 12. க்ருஷ்ணகுமார் on January 15, 2018 at 3:37 pm

  அன்பர் பீ எசு

  \\ தமிழ் இருக்கையை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென்று எவருமே கட்டாயப்படுத்தவில்லை. \\

  தமிழ்சேர் என்ற பெயரில் ஹிந்துமத நூற்களை திட்டமிட்டு இழிவு செய்கிறார்கள். தமிழ் எழுதப்படிக்கத்தெரியாத மேற்கத்திய ஆசாமிகள் நம் பணத்தில் இங்கு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவாஞ்சலிகல் பின்னணி உள்ள ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஒரு திட்டவட்டமான இவாஞ்சலிகல் அஜெண்டாவுடன். ஆகவே வாடிகனுடைய பித்தலாட்ட மதமாற்றத் திட்டங்களுக்காக அதன் ஏஜெண்டுகளால் முன்னெடுக்கப்படும் ஒரு ஸ்தாபனம் இந்த தமிழ்சேர். ஹிந்து மத நூற்கள் இழிவுபடுத்தப்படக்கூடாது என்ற நம்பிக்கையுள்ளவர்களுக்கு, திருமலை தமிழ்சேருக்கு பங்களிக்காதீர்கள் என்று பரிந்துரை செய்கிறார். காட்டமாக.

  ஹிந்து என்று தம்மை ப்ரகடனம் செய்யும் உங்களுக்கு வாடிகனுடைய திட்டமாகிய ஹிந்து மத நூற்களை இழிவு செய்வது என்ற செயற்பாட்டில் ஈர்ப்பு இருப்பதால் நீங்கள் தமிழ் சேருக்கு ஆதரவு கொடுப்பதை நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும்.

  இது தமிழ் சேருக்கு மட்டிலுமான அரசியல் கிடையாது. ஸம்ஸ்க்ருத சேரில் இப்படி வேலை செய்த மைக்கல் விட்சலுக்கு ஒரு வார்த்தை ஸம்ஸ்க்ருதத்தில் பேசத் தெரியவில்லை என்பது அப்படமாக வெளிவந்தது. தமிழ் ஹிந்து தளத்தில் பதிவாகியும் உள்ளது.

  \\ டேவிட் கின்சிலி அவருக்குப் பிடிக்கும்; வெண்டி டோனிகர் பிடிக்காது. இருவருமே அமெரிக்கர்கள். \\

  பேத்தல். அ நீ யை உங்களுக்குப் பிடிக்காது என்று சொன்னால் ஒப்புக்கொள்ளுவீர்களா?

  அதில் எந்தளவு ந்யாயம் இருக்கிறதோ அந்தளவு ந்யாயம் நீங்கள் பிதற்றியுள்ள மேல் வாசகத்தில் உள்ளது.

  வெண்டி டோனிகரில் புளுகு மூட்டைகள் இருப்பதனால் அவர் நிராகரிக்கப்படுகிறார். ஷெல்டன் பொல்லாக்கும் அப்படியே. மைக்கேல் விட்சலும் அப்படியே. ஃப்ரான்ஸிஸ் க்ளூனியும் அப்படியே.

  \\ அமெரிக்காவைக் காட்டினாலே முழுமூடர்கள்; அடிமைகள் \\

  பீ எசுவின் வழக்கமான விஷமத் திரிப்பு இந்த வாசகம். லவலேசமும் உண்மை இல்லாமல் அமேரிக்காவைக் எடுத்துக்காட்டுவதையே திருமலை இழிவு செய்திருக்கிறார். முறையான சான்றாதாரத்திற்காக உண்மையாக அமேரிக்காவை எடுத்துக்காட்டுவதை அவர் எதிர்ப்பது இல்லை.

  வைரமுத்து இண்டியானா யுனிவர்ஸிடியை நேரடியாக உதாகரித்த தவறை எதற்கு முட்டுக்கொடுக்க விழைகிறீர்கள்?

  டாக்டர் சிவா அய்யாதுரை அவர்கள் இந்த தமிழ்சேர் முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்

  https://satyavijayi.com/harvard-tamil-chair-sham-dr-ayyadurai/

 13. Rama on January 16, 2018 at 2:43 am

  See the amount of “Research “ !! done by VM. Shows his scholarship! All the bleeding heart pseudo secular libs including BSV( BS is a short form of you know what) can stop pretending. VM had implied clearly that Andal was a prostitute. VM is a third rate cinema poet(!!) and an anti hindu,hate filled LIER. There is clear evidence here for his lies.
  https://www.facebook.com/permalink.php?story_fbid=1873347769644084&id=100009066365815

 14. BSV on January 16, 2018 at 12:38 pm

  டாக்டர் சிவா அய்யாதுரை அவர்கள் இந்த தமிழ்சேர் முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்//

  He is a notorious fraud. Read all about him.

 15. raja on January 16, 2018 at 9:36 pm

  Missionaries pump money to journalists, poets, writers of anti hindu and to small political parties while big political parties top leaders sons and daughters are under their payroll. They give admission easily freely to the children of those above section of people under their payroll in selected supposed to be the reputable colleges like Loyala college , stella maris ect eventhough their children marks are below 50 pct. i know this personally as i have friends in all section of society. so vairamuthu intention is to abuse sri Andal amsam of bhumi devi, symbol of chevvai graha which is the bhumi karakan . That is why Sri andal is protrayed in red color saree.srivillputtur is the varaha kshetra which is connected to bhumi. pl see the article in web” why srivilliputtur is the chevvai graha ? by kudantai amudhan. GNAHNI who abused sriandal and supported vairamuthu in his last speech in youtube
  died in the next 4th day . mars is the powerful graha.Same fate awaits for those culprits who abuses virgin kanya rasi bhumi devi as prostitute will meet the same fate due to the power of chevvai graha which is the planet of accident, blood, fire, blast, killing ect ect.

 16. பொன்.முத்துக்குமார் on January 16, 2018 at 10:51 pm

  அன்புள்ள BS,

  கீழ்க்கண்ட இணைப்புகளே நான் சொன்னவை. இவற்றிலேயே திரு.அரவிந்தன் கண்ணையன் அவர்களது தளத்தில் அவரே எழுதியுள்ள எதிர்வினையும் உள்ளது.

  ஃபெட்னா-கடிதம் – http://www.jeyamohan.in/28965#.Wl4zAzRG2t8
  உவேசாவும் ஃபெட்னா அவதூறும் http://www.jeyamohan.in/28969#.Wl4zDjRG2t9
  ஃபெட்னாவும் காந்தியும் – http://www.jeyamohan.in/28904#.Wl4zDzRG2t8

 17. பொன்.முத்துக்குமார் on January 16, 2018 at 11:06 pm

  டாக்டர் சிவா ஐயாதுரை தரப்பினர் கேட்கும் பொருளற்ற கேள்வி இது :

  அவ்வளவு பெரிய பல்கலை வெறு ஆறு மில்லியன் டாலர்களை தானே திரட்டி ஒரு இருக்கை அமைக்க இயலாதா ? ஏன் தமிழர்களிடத்தில் பணம் கேட்கவேண்டும் ?

  அதற்கு நாம் கேட்டிருக்கவேண்டிய முதல் கேள்வி, ‘இதுவரை அமைக்கப்பட்ட பிறமொழி இருக்கைகளையெல்லாம் ஹார்வர்ட் பல்கலை தானே முன்வந்து தனது பணத்தில்தான் அமைத்ததா ?’ என்பதே.

  அவ்வளவு பெரிய பல்கலைக்கு தமிழோ தமிழாய்வோ அதற்கான் இருக்கையோ ஒரு பொருட்டாகவே பட்டிருக்காது. விரும்புபவர்கள் தங்களது பணத்தை செலவிட்டு தமது பல்கலையில் ஒரு இருக்கை அமைக்கும் வாய்ப்பை பிற மொழிக்காரர்களுக்கு வழங்குகிறது என்றே நினைக்கிறேன். எப்படி ஒரு ஒரு பேரங்காடியில் கடைகள் வைக்க இடம் வாடகைக்கு விடப்படுகிறதோ அப்படி.

  அதேபோல நம்மிடம் இருக்கும் பண்டைய ஓலைச்சுவடிகளை எப்படி இந்த இருக்கை மூலம் ஹார்வர்ட்-காரர்கள் கைப்பற்றுவார்கள் என்பதற்கும் தெளிவான விளக்கமில்லை.

  மற்றபடி, அவர்களுக்கு உவப்பில்லாத சாதனையாளர்களான நமது முன்னோடிகள் மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டும், மறைக்கடிக்கப்பட்டும் நமது வரலாறு திரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதை நிச்சயமாக நம்புகிறேன்.

 18. Bala on January 17, 2018 at 5:45 am

  {காரணம் எந்தவொரு விஷயத்தையும் அது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று சொல்லி விட்டால் நம்ம ஊர் கூமுட்டைத் தமிழர்கள் கேள்வி கேட்க்காமல் ஏற்றுக் கொள்வார்கள் என்பதினால்தான். இது ஒரு அடிமை நோய்.} சேது சமுத்திரத்தில் இருப்பது ராமர் கட்டிய பாலம் என்று அமெரிக்க பல்கலைக்கழகப் பேராசிரியர் சொன்னார்கள் என்று பெருமையடித்துக்கொண்டது போலவா?

 19. ஜடாயு on January 17, 2018 at 2:27 pm

  I had put this comment in the other article. Putting it here also, for reference.

  BSV, This is an opinion piece, not a research article. So it is silly to expect the author to keep giving links for every damn thing said in the article. In this internet era, a resourceful person like you can always find things with not so much difficulty, instead of screaming.

  // Thirumalai’s complaint against the Harvard Tamil Chair and the names of those who asked for his apology //

  Phew. He wrote this opinion in his Facebook page, and those who asked for apology were the commenters. This is not a legal case or something. Cool down.

  // Karunanidhi’s speech or article insulting Andaal //

  It was a vulgar short story titled குப்பைத் தொட்டி. Why the $%#$& would Tamilhindu publish or quote such piece of crap here? BTW, Thirumalai had put some excerpts from that story in his FB page.

  // Thangkapandian’s speech or article insulting U.Ve.Sa //

  This has been documented in these blog posts written by Aravindan Kannaiyan, not really a friend of Hindutva folks

  https://contrarianworld.blogspot.in/2012/07/thamizhachis-fetna-speeches-uvesa.html

  https://contrarianworld.blogspot.in/2012/07/thamizhachi-thangapandiyans-slander-on.html

 20. sanjay on January 18, 2018 at 10:34 am

  Jatrayu,

  U only need to read a few editorials in murasoli to know mu.ka’s comments on hinduism & Hindu Gods & Goddess.

  But BSV will ask for proof from everyone.

  If you post a link, he will say, it is fraud.

  He will not dare ask Vairamuthu. He is a “secularist”, you see.

  It is bcos of such half baked “secularists”, third rate poets like Vairamuthu dare to insult Hinduism.

 21. bmniac on January 20, 2018 at 12:09 am

  Those whom BSV defends are fantasists, corrupt an bluntly liars and crypto naziz. Aravindan Kannaiyan has written exposing this crowd. It is unfortunate that the tamil public is utterly gullible.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*