முகப்பு » கோயில்கள், பயங்கரவாதம்

மீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்

February 4, 2018
-  

பிப்ரவரி 3, 2018:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் நேற்றிரவு 10.45 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம் தீயணைப்பு வாகனங்கள் மூலம் 30க்கும் மேற்பட்ட வீர்ர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி வாகனங் கள் மூலம் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, தீயணைப்பு லாரிகள் நிரப்பிய வண்ணம் இருந்தனர். தீ மளமளவென பரவியதால் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரே தீயை அணைக்க முடிந்தது. தீக்கான காரணம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. இருப்பினும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

செய்தி இங்கே.

மீனாட்சி அம்மன் கோவிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது எதிர்பாராத ஒன்று அல்ல. கோவிலுக்குள் கடைகள் வைக்க அனுமதியளித்துள்ளார்கள். கோவிலின் வெளிப் பிரகாரமான சித்திரை வீதியில் ஏராளமான காஷ்மீர் முஸ்லீம்களின் கடைகள் உள்ளன.

காஷ்மீருக்குள் இந்தியாவின் ஜனாதிபதி கூட ஒரு ஊசிமுனை நிலம் கூட வாங்க முடியாது. ஆனால் இந்தியாவை எதிர்க்கும் காஷ்மீர் முஸ்லீம்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கடை போட அனுமதித்திருக்கிறார்கள்.

கோவிலின் உள்ளே செல்லும் வழியில் ஏராளமான கடைகள் உள்ளன. அவற்றை வைத்திருப்பவர்கள் பல காலமாக வைத்திருக்கிறார்கள். 20 ரூபாய் 30 ரூபாய் என்று சொற்ப வாடகையைக் கூட அவர்கள் கட்டுவதில்லை.

கோவிலின் எதிர் புறம் உள்ள திருமலை நாயக்கர் கட்டிய புது மண்டபம் என்ற மண்டபம் முழுக்க கடைகளால் நிரம்பியுள்ளன. பாடப் புத்தகக் கடைகள், பாத்திரக் கடைகள் டெய்லர் கடைகள், வளையல் பொட்டு விற்கும் கடைகள் என்று அந்த அழகிய எழிலான மண்டபத்தின் ஒரு தூண் ஒரு இஞ்ச் கூட விடாமல் கடைகளைப் போட்டிருக்கிறார்கள். அங்குள்ள எழில் வாய்ந்த சிற்பங்களையும் தூண்களையும் விதானங்களையும் நாம் காணவே முடியாது. அந்த அளவுக்கு ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். இதிலும் பல கடைகளை வைத்திருப்பவர்கள் முஸ்லீம்களே.

புது மண்டபத்தில் இருந்து அங்குள்ள வியாபாரங்களை அகற்றி அருகே கட்டப் பட்டுள்ள ஒரு கட்டிடத்துக்கு மாற்ற பலரும் முயற்சி செய்தும் இன்னும் அந்த எழில் வாய்ந்த மண்டபத்தினை பேராசை பிடித்த வியாபாரிகளிடம் இருந்து எந்த அரசாங்கமும் மீட்க முடிவதில்லை.

இது குறித்து நான் பல முறை எழுதியுள்ளேன். பல கடைகளில் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள தகவல்கள் ஜூனியர் விகடன் போன்ற நக்சல் பத்திகைகளில் கூட வெளி வந்தன. அந்தக் கடைகளில் இருந்து ஒரு சிறிய குண்டு வைத்தால் கூட ஒட்டு மொத்தக் கோவிலையும் தரை மட்டமாக்கி விட முடியும். இருந்தாலும் அரசாங்கம் கவலையின்றி உள்ளது. அங்குள்ள ஆக்ரமிப்புக்களை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

புது மண்டபத்தில் இருக்கும் முஸ்லீம்கள் உள்ளூர் முஸ்லீம்கள். அங்கு பாத்திரக் கடை வைத்திருக்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்பாக என் அம்மா தோசைக் கல் கேட்டார் என்று வாங்கப் போன பொழுது புது மண்டபத்துக்குள் நுழைந்தவுடன் மழை பெரிதாக இடியுடன் பிடித்துக் கொண்டது. உடனே கரண்டும் போய் விட்டது. முழங்கால் வரை மண்டபத்துக்குள் தண்ணீர் ஓட சிம்னி விளக்கு வெளிச்சத்தில் நான் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பயணித்துத் தோசைக் கல்லைத் தேட, தோசைக் கல்லை எடுத்துக் கொடுத்த கடைக்காரரை இருட்டில் நான் கவனிக்கவில்லை. கல்லைக் கொடுத்து விட்டுச் சொன்னார் ”இன்று மீனாட்சி திருக்கல்யாணம். கட்டாயம் மழை பெய்ய வேண்டும். நல்லபடியாக மழை பெய்து விட்டது சந்தோஷம்” என்று. அப்பொழுதுதான் ஆளைப் பார்த்தேன் கடைக்காரர் ஒரு முஸ்லீம்.

இந்தக் கடைக்காரர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தி விட்டு அதை முழுமையான கலை மண்டபமாக அதன் ஒரிஜினல் எழிலுக்கு மாற்றும் ப்ராஜக்ட் பல வருடங்களாக நடந்து வருகிறது. எவராலும் இவர்களை அகற்றவே முடியவில்லை.

அடுத்து சித்திரை வீதியில் இருக்கும் பெரும்பாலான ஜவுளிக் கடைகள் முஸ்லீம் கடைகளே. இவர்களில் பட்டாணி, பாக்கிஸ்தானி என்று வடக்கத்திய உருது முஸ்லீம்கள் கடைகள் நிறைய உள்ளன. அவற்றில் சில கடைகளில் காஷ்மீர்காரர்கள் கலைப் பொருட்கள் விற்கும் உயர் விலைக் கடைகளை வைத்திருக்கிறார்கள். அங்கு ஒரு சின்ன பேப்பர் கூழ் பொம்மையே சில ஆயிரங்களுக்கு விற்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து வருபவர்கள் கூட வாங்கத் துணிய மாட்டார்கள். அந்தக் கடைகளின் உயரம் அதிக பட்சம் இரண்டு மாடிகள்தான் என்பதினால் அந்தக் கடைகளை இடிக்கப் போவதில்லை. அவை அங்கேயே தொடரும். சட்டப் படி எவரும் அவர்களை அங்கிருந்து காலி செய்ய முடியாது. ஆனால் அவர்களின் க்டைகளுக்கும் கோவிலின் மதில் மற்றும் கோபுரத்துக்கும் அதிக பட்சம் முப்பது அடிகளே இடைவெளி. இந்த உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் வழக்கமாக எல்லா கலெக்டர் கமிஷனர்களும் சொல்வதுதான். இது வரை எந்தக் கட்டிடமும் இடிக்கப் பட்ட வரலாறே கிடையாது. அங்கு இடிக்கப் பட்ட ஒரே கட்டிடம் மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமே – மாலிக் காஃபூரின் படையெடுப்பில்.

கோவிலின் உள்ளும் புது மண்டபத்திலும் சித்திரை வீதியிலும் உள்ள அனைத்து கடைகளும் உடனடியாக நீக்கப் பட வேண்டும். அந்த இடங்களில் அரசாங்க  அருங்காட்சியகங்கள், நூலகங்கள், பக்தர்கள் தங்கும் சத்திரங்கள், அன்னதான சத்திரங்கள் ஆகியவை ஆகியவை அமைக்கப் பட வேண்டும். கடைகள் சித்திரை வீதி தாண்டியே அனுமதிக்கப் பட வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலைக் காக்க இன்னும் ஒரு விஜயநகரப் பேரரசு வரப் போவதில்லை. மீனாட்சி அன்னையும் சொக்கநாதரும் அரசுக்கு நல்ல புத்தி அளிக்க வேண்டும். இன்னும் ஒரு திருமலை நாயக்கரை, கம்பணரை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இரண்டாயிரம் வருடத்திற்கும் பழமையான அந்தக் கோவில் அசுரர்களின் பிடிகளில் இருந்து உடனடியாக மீட்க்கப் பட வேண்டும்

ஆகவே மிக அவசரமாக இந்த தீ விபத்தை முன் வைத்தாவது உடனடியாக அனைத்து கடைகளும் அப்புறப் படுத்தப் பட வேண்டும். கோவிலுக்குள்ளும் புது மண்டபத்திலும் சித்திரை வீதியிலும் உள்ள அனைத்து கடைகளும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அப்புறப் படுத்தப் பட வேண்டும். இதைச் செய்யாவிட்டால் அந்த மாபெரும் ஆலயம் அழிவதை எவராலும் காப்பாற்ற முடியாமல் போய் விடும்

அன்னை மீனாட்சி அருள் செய்ய வேண்டும்.

(ச.திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

 

22 மறுமொழிகள் மீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்

 1. திருத்மிழ்த்தேவனார் on February 4, 2018 at 1:21 pm

  இனிமேலும் தாமதிக்காமல் கோவில்களுக்குள்ளும், கோவில் வளாகத்திற்குள்ளும் இருக்கும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.

 2. liberty on February 4, 2018 at 2:36 pm

  வணக்கம்
  திருக்கோயில்களை அரசிடமிருந்து எடுக்க வேண்டும், திருக்கோயில் வளாகத்திற்குள் கடைகள் வைக்க அனுமதிக்கக் கூடாது. அறநிலையத் துறை திருக்கோயில்களிலிருந்து வெளியேற வேண்டும்.

 3. கணபதி on February 4, 2018 at 5:54 pm

  குருப்யோ நமஹ

  வேதனை வேறு என்ன சொல்ல?

 4. sanjay on February 5, 2018 at 3:05 pm

  The intention of the author is commendable, but nothing will happen. There are many shops in not only Meenakshi Amman temple, but in many other temples also.

  As a knee jerk reaction, for a few days, nothing will happen. Then the place inside the temple will once again be occupied by shops.

  If any protests come, the so called “secularists” will say that muslims are being targeted, they should be allowed to do business etc.,

  Now, some astrologers are saying that the Edappadi govt is in danger. So, the govt will do some “parikaara” pooja & then it will be business, as usual.

 5. R Nanjappa on February 5, 2018 at 8:55 pm

  இங்கு காணும் படங்கள் வேதனை தருகின்றன.
  ஆகம விதிப்படி கோயிலுக்குள் கடை வைப்பது தவறானல் இதைத் தடுக்க சட்ட ரீதியாக வழியில்லையா?
  ஹிந்துக் கோவில்கள் நாட்டிலுள்ள ஹிந்துக்கள் அனைவருக்கும் பொது. இது தமிழ் நாட்டு அரசின் சொத்தல்ல. மதுரைக்கோவில் அகில இந்திய சக்தித் தலங்களில் முக்கியமான ஒன்று. இதில் மத்திய அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாதா?
  இங்கு கடைவைத்திருப்பவர்கள் முஸ்லிம்கள், அதுவும் காஷ்மீர் முஸ்லிம்கள் என்பதால், நடந்திருப்பது தீ விபத்தா/ சதிகார வேலையா/ இன்னும் தீவிர
  நடவடிக்கைக்கான முன்னோட்டமா என்ற சந்தேகம் வலுக்கிறது. சம்பந்தப்பட்ட துறை மாநில அரசின் வசம் இருப்பதால், மாநில அரசு நேர்மையாக நடந்துகொள்ளும் என்று நம்ப இடமில்லை. அதனால் உடனடியான சி.பி.ஐ. விசாரணை தேவை.
  இத் தீ விபத்தை மையமாகக் கொண்டு, ஹிந்துக்கோவில்களிலிருந்து ஆகம விதிக்குப் புறம்பான கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஹிந்துக்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும்.
  மதுரை தமிழ்ப் பண்பாட்டின் மையம்- சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடம். தென்னாடுடைய சிவன் திருவிளையாடல் புரிந்த இடம். திருஞான சம்பந்தர் பிற மத ஆதிக்கத்திலிருந்து சைவத்தை மீட்ட இடம். ஹிந்துத் தமிழர்களை- தமிழ் ஹிந்துக்களை ஒன்று படுத்த வேறென்ன வேண்டும்? இதைப்பார்த்தாவது நம் மக்கள்
  கொதித்தெழ வேண்டாமா?
  கட்டுவித்தார் மதிற் கல்லொன்று வாங்கிடில்
  வெட்டுவிக்கும் அபிடேகத் தரசரை
  முட்டுவிக்கும் முனி வேதிய ராயினும்
  வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே
  என்பது திருமூலரின் திருமந்திரம். மதில் சுவரினொரு கல் போனாலும் அரசனுக்கு கெடுதல் எனில், கோவிலில் தீயே பிடித்தால், அதுவும் அரசின் அனுமதியுடன் நடக்கும் கடைகளினால் வந்த தீ எனில் இந்த அரசு உருப்படுமா? அரசு எப்படியோ போகட்டும். மக்களுக்குத் தீங்கு நேராமல் இருக்க வேண்டும்.
  எனவே மக்கள் தான் கோவில்களின் தூய்மை காக்கப் போராடவேண்டும்.

 6. அ.அன்புராஜ் on February 6, 2018 at 5:50 pm

  நல்ல கருத்து. தினமலா் மற்றும் தினமணி பத்திாிகைகளில் இதுபோன்ற கட்டுரைகள் வருவதில்லை. வெளியிட அவர்களுக்கு நெஞ்சுரம் இல்லை.இந்துக்கள் இன்னும் கோழைகளாகவே 1000 ஆண்டு அடிமைகளாகவே இருக்கின்றோம். அதுதான் உண்மை. அடிமைகளின் மனதில் முதலாளிகளின் நலன்தான் முன்நிற்கும்.அப்படி ஆகிவிடுவார்கள். இந்தியாவை அரசாண்டவர்கள் முஸ்லீம்கள்.

 7. அ.அன்புராஜ் on February 6, 2018 at 5:56 pm

  திருச்செந்தூா் கோவிலின் வெளிப்புற மண்டபம் பழுதடைந்து விட்டதை பல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள் பல ஆண்டுகளாக எழுதி வந்தன. அண்மையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஒரு பெண் பலியானாா்.அதற்கு பின் மண்டபம் முழுவதும் இடித்து தள்ளப்பட்டது. அதல் இருந்த கடைகள் அனைத்தையும் மண்டபத்தின் பலமின்மையை காரணம் காட்டி வெளியேற்றினா். தற்போது கோவில் மிகவும் விஸ்தீரமாக வசதியாக உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 50 -80 லட்சம் கள்ளத்தனமாக லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி அளித்துள்ளனர்கள்.ஊழல் பெருச்சாளிகள்.கடைகளிலோ கொள்ளையோ கொள்ளை. கோவில் நிா்வாகமும் வீணர்கள் கையில்தான் உள்ளது. நல்லது செய்வது மிகக் கடினம்.

 8. BSV on February 6, 2018 at 7:23 pm

  சித்திரை வீதியில் இருக்கும் ஹாஜிமூசா என்ற முசுலீம் ஜவுளிக்கடை 70 ஆண்டுகளுக்கு முன் குஜ்ராத்திலிருந்து வந்த ஒரு முசுலீமால் நிறுவப்பட்டது. இன்று அவர் வாரிசுகள் அக்கடையை நடத்துகிறார்கள். நானும் புதுமண்டப்பத்தில் ஓர் அருவாமனை வாங்கினேன். முசுலீம்தான் கடைக்காரர். ஆனால் அவர் தமிழர். காஷ்மீரத்து முசுலீம்கள் கடைகளை நான் எங்குமே பார்த்ததில்லை. ஐந்து ஆண்டுகள் நான் மதுரையில்தான் இருந்தேன். ரொம்பகாலத்துக்கு முன் கிடையாது. 2013 வரை. அதில் இரு வருட்ங்கள் மேலகோபுரமருகிலிருக்கும்தானப்ப முதலி தெருவில் வசித்தேன். ஒவ்வொரு நாளும் காலை, மாலை சித்திரை வீதிகளிலும் ஆடி வீதிகளில் (கோயில்லுக்குள்) நடக்கும் உபன்யாசங்களுக்கும் போகும் வழககம். எனக்கு அம்மன் கோயில் அத்துப்படி. காஷ்மீரத்து பண்டிட்களை குடியமர்த்துவது மத்திய அரசின் கொள்கைகளில் ஒன்று. அதன்படி அவர்கள் எங்கு சென்று வசித்தாலும் லோக்கல் கவர்மென்ட் உதவி செய்ய வேண்டும். தில்லியில் ஐ என் ஏவில் ஒரு தெரு முழுவதும் அவர்களுக்கான கடைகளை அரசே அமைத்துக்கொடுத்திருக்கிறது. அப்படி பண்டிட்டுகளில் கடைகளைப் பார்த்து, காஷ்மீர் முசுலீம்கள் கடைகள் என்கிறார் போலும். அவர் போட்ட படங்களில் ஒன்றாவது அப்படிப்பட்ட முசுலீமைக் காட்டியிருக்கலாம். காட்டவில்லை. எப்படி நம்புவது?

  முசுலீம்கள் கடைகள் எல்லா பெருங்கோயில்கள் வணிக வீதிகளில் உண்டு. எப்படி தடுக்க முடியும்? ஒரு குறிப்பிட்ட இனமக்கள் மட்டும் வியாபாரம் பண்ணி பிழைக்கக்கூடாதென்று தடுக்க முடியுமா? திருமலையில் கூட முசுலீம் கடைகள் ஏராளம் இருக்கின்றன. அவர்கள் இந்துக்கடவுள் போட்டோக்களையும் கூட விற்கிறார்கள். இந்துக்களும் பேதபாவம் காட்டுவதில்லை. குண்டு வைப்பார்கள் விரட்டு என்றால், கோவில்கள் மட்டுமா? சந்தைகளில்தான். கள்ளழகர் விழா ஊர் முழுக்க நடப்பது தெரியுமா? லட்சக்கணக்கான மக்கள் திரளும் விழா. அது மதுரை மீனாட்சி கோவிலுக்கருகில் வரவே வராது எனப்துதான் திருமலை நாயக்கர் வைத்த விதி. தெரியுமா? இந்தியாவிலிருந்தே விரட்டிவிடலாமா?

  சித்திரை வீதிகளில் கடைகள் அகற்றப்பட வேண்டும். சரிதான். ஆனால் சாப்பாட்டுக்கடைகளும் இருக்கின்றன. அவையும் அகற்றப்படவேண்டுமா? தங்கும் விடுதிகள் கட்டப்படவேண்டுமென்கிறார். மேற்கு சித்திரை வீதியில் பல விடுதிகள் இருக்கின்றன. என் கருத்தின்படி அவையும் நீக்கப்படவேண்டும். அவற்றை நீக்காமல் தங்கும் விடுதிகளைப் பெருக்கி சித்திரை வீதிகளை நிறைக்க வேண்டுமென்ற்கிறார். மதுரை வியாபாரிகள் அப்படி கட்ட விடமாட்டார்கள். ஏனென்றால், தங்கும் விடுதிகள் சித்திரை வீதிகளுக்கு வெளியே இருக்கின்றன. அவை ஆள்வராமல் படுத்துவிடும். வரும் யாத்ரீகள் எல்லாரும் ஏழைகளல்ல. தர்மசாலா கட்டி விட. கோவிலை நம்பி அனாதி காலம் தொட்டு மதுரை மக்களில் ஒரு கணிசமான தொகை காலம்காலமாக வாழ்ந்து வருகின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

  புதுமண்டபத்தில் எல்லாமே நீக்கப்படவேண்டுமென்பது சரி. அது நல்ல முடிவு. ஆனால் அக்கடைகள் அரசியல்வாதிகளின் பினாமி கடைகள். அரசியல்வாதிகள் எல்லாருமே தீராவிட இயக்கத்தாரல்ல. எல்லாக்கட்சிகளும் உண்டு. அவர்கள் எல்லாருக்கும் தில்லி வரை செல்வாக்குண்டு.

  சகாயம் மதுரை கலெக்டராக இருந்த போது விதிமுறைகளை ஆவணி வீதிகள் விதிமுறைகள் மீறிய கட்டடங்களை இடித்தார். மாற்றப்பட்டார். வெறும் க்ரானைட் பிரச்சினையால் மட்டுமன்று. அவருக்குப் பின் மிஷ்ரா வந்தார். தேதிமுக அலுவலகம் (பலமாடிக்கட்டடம்) விஜய்காந்துக்குச் சொந்தமானது. அதை இடிக்க முயன்றார். வேறொரு காரணம் காட்டப்பட்டு (கோயிலுக்கு வரும் வடநாட்டுப்பயணிகளுக்காக‌ பலகைள் இந்தியில் எழதினாரென்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு) மதுரை அரசியல்வாதிகளின் பலம் அப்படி!

 9. க்ருஷ்ணகுமார் on February 7, 2018 at 12:33 pm

  அன்பர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

  \\ முசுலீம்கள் கடைகள் எல்லா பெருங்கோயில்கள் வணிக வீதிகளில் உண்டு. எப்படி தடுக்க முடியும்? \\

  வணிகவீதி பொது இடம். எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் கடை நடத்தலாம்.

  ஒரே வாசகத்தில் வணிகவீதி என்று ஒரு பொது இடத்தையும் ஹிந்துக்களுக்கு மட்டிலும் பாத்யதை உள்ள கோவிலையும் இணைத்து ………… இரண்டையும் பொதுஇடமாகக் காண்பிக்கும் ****ஆப்ரஹாமிய*** நயவஞ்சகம் இந்த வாசகத்தில் தெரிகிறதே.

  ஆப்ரஹாமிய மஸ்ஜிதோ சர்ச்சோ பொது இடம் கிடையாது. இங்கு முஸ்லீம்களோ க்றைஸ்தவவர்களோ மட்டிலும் வ்யாபாரம் செய்யலாம்.

  ஆனால் ஹிந்துக்கோவில் மட்டிலும் ஹிந்துக்களுக்கென்று ப்ரத்யேகமான வழிபாட்டு ஸ்தலாமாக இருக்கக்கூடாது. இங்கு ஆப்ரஹாமியர் கடை வைப்பார்கள். நெருப்பும் வைப்பார்கள் என்று சொல்ல விழைகிறீர்களோ ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ சாஹேப்?

  ஆண்டாளை இழிவாகப் பேசுவீர்கள். நாலாயிரத்தில் இருந்து எது நீக்க வேண்டும் என்று கட்ட பஞ்சாயத்தும் செய்வீர்கள். ராமர் படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கும் ராமசாமிநாயக்கரின் செயற்பாட்டை களிப்புடன் ஆதரிப்பீர்கள். இதெல்லாம் செய்து விட்டு வைஷ்ணவன் என்றும் கூரை மீது ஏறிக் கூவுவீர்கள். ஹிந்து என்றும் முரசறைவீர்கள். அதெல்லாம் பத்தாது போல. இப்போது கோவிலுக்கு நெருப்பு வைப்பதை ஆதரிப்பீர்களோ நயவஞ்சகமான கருத்துக்களைப் பகிர்ந்து?

 10. sanjay on February 7, 2018 at 2:15 pm

  If any protests come, the so called “secularists” will say that muslims are being targeted, they should be allowed to do business etc.,

  BSV,

  you have proved me right. Thank you.

 11. ராஜன் on February 8, 2018 at 3:50 am

  ஜோ அ மலன் என்ற பெயரிலும் பா விநாயகம் என்ற பெயரிலும் பி எஸ் வி என்ற பெயரிலும் உலாவி வருபவருக்கு. எந்தப் பெயரில் வந்தாலும் இவரின் அபத்தமும் முட்டாள்த்தனமும் சம்பந்தமில்லாத உளறல்களும் இவரைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. சித்திரை வீதியில் இருப்பவை காஷ்மீர் பண்டிட்கள் கடைகள் அல்ல. அவை முஸ்லீம்கள் கடைகளே. இங்குள்ள படங்களைப் போட்டது ஆசிரியர் குழுவினர் நான் எடுத்துள்ள படங்கள் இப்பொழுது கை வசம் தயாராக இல்லாதபடியால் அனுப்பவில்லை. நேரடியாகப் போய் எவரும் பார்த்துக் கொள்ளலாம். அவை இன்னும் அங்கேயே இருக்கின்றன. அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கினால் அவர்களின் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து கோவிலை நெருக்கமாகக் காணலாம் என்ற சலுகையையும் அளிக்கிறார்கள். அந்தக் கடைகளில் சில பயங்கரவாதிகள் ஒளிந்திருந்த தகவல்கள் முன்பு செய்திகளில் வந்துள்ளன. ஆகவே ஜோ அ மலனைப் போன்று ஸ்ரீவைகுண்டத்தில் அர்ச்சகர்களை வெட்டிக் கொன்று திருடினார்கள் போன்ற போலிச் செய்திகளைத் தரும் பொய் செய்தியாளன் நான் அல்லன். சித்திரை வீதிகளில் உள்ள கடைகளை நீக்கி விட்டு அங்கு ஏற்கனவே இருக்கும் குஜராத்தி சத்திரங்கள் பாணியில் எளிய மக்கள் தங்க சில சத்திரங்கள் கட்டலாம் என்பதே என் ஆலோசனை. சாப்பாட்டுக் கடைகளையும் அங்கு அனுமதிக்கலாம் தவறில்லை அவை ஒரு தெருவில் மட்டும் வைத்துக் கொண்டு மீதம் மூன்று இடங்களிலும் பஜனை மடங்கள், ம்யூசியங்கள், கோவில் நிர்வாக அலுவலகங்கள், கோவிலை பாதுகாக்கத் தேவையான தீயணைப்பு நிலையங்கள், சுற்றுலா மேம்பாட்டு தகவல் மையங்கள், ஆவணக் காப்பகங்கள், தமிழக சுற்றுலா மற்றும் கோவில்கள் குறித்தான படங்களைக் காட்டும் மினி தியேட்டர்கள் ஆகியவற்றை அங்கு அனுமதிக்கலாம். புது மண்டபக் கடைகளில் சில முஸ்லீம்களின் கடைகளே இவற்றை எவரும் சென்று நேரில் உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மதுரையின் சித்திரை வீதிகள் பொதுவான ஒரு இடம் அங்கு இல்லாதவற்றை பொய்யாகச் சொல்ல நான் தமிழக பத்திரிகையாளன் கிடையாது.

 12. BSV on February 8, 2018 at 3:59 pm

  //அந்தக் கடைகளில் சில பயங்கரவாதிகள் ஒளிந்திருந்த தகவல்கள் முன்பு செய்திகளில் வந்துள்ளன//

  அச்செய்திகளில் ஒன்றையாவது இங்கே குறிப்பிடலாமே? எந்தப்பத்திரிக்கை? எப்போது?

  //சித்திரை வீதியில் இருப்பவை காஷ்மீர் பண்டிட்கள் கடைகள் அல்ல. அவை முஸ்லீம்கள் கடைகளே.//

  நல்லது. காஷ்மீர் முஸ்லீம்கள் கடை வைத்திருக்கிறார்கள் என்று சொன்னது திருமலை ராஜன். இப்போது முஸ்லீம்கள் கடைகள் என்றால் அவர்கள் தமிழ்நாட்டு இசுலாமியர் எனவெடுத்துக்கொள்ளலாமா?

  //அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கினால் அவர்களின் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து கோவிலை நெருக்கமாகக் காணலாம் என்ற சலுகையையும் அளிக்கிறார்கள்.//

  எந்தக்கடையில் அப்படி செய்கிறார்கள்? நேரடியாகப் போய் பார்த்துக்கொள்ளலாமென்றால் சொல்லுங்கள். நான் அடுத்த மாதம் மதுரை செல்லவிருக்கிறேன்.

  அடுததது: இக்கடைகளில்தான் தீவிரவாதிகள் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றால், எப்படி போலீசோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இன்னும் அக்கடைகளை விட்டு வைத்திருக்கிறார்கள்?

  தீவிரவாதிகள் சித்திரை வீதிக்கடைகளிலிருந்து பிடிபட்டார்கள் என்ற செய்தி இதுகாறும் நான் படித்தததில்லை. எப்போது?

  //ஸ்ரீவைகுண்டத்தில் அர்ச்சகர்களை வெட்டிக் கொன்று திருடினார்கள் போன்ற போலிச் செய்திகளைத் தரும் பொய் செய்தியாளன் நான் அல்லன்//

  திருமலை ராஜனுக்கு ஊர் தென் திருப்பேரை. எனக்கு அங்கிருந்து 1 மணி நேரத்தில் வரும் ஊர். ராஜன் வயதானவர்களை கேட்டுத்தெரிந்துகொள்ளவும். அரசு ஏன் மாலை 7 மணிக்கு மேல் நவதிருப்பதிகள் மூடப்பட வேண்டுமென்ற் ஆணையிட்டது என்பதை தமிழ்நாடு அற நிலையத்துறையில் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம். அல்லது அர்ச்சகரிடமிருந்து கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.

  நம்மாழ்வார் வதிந்த புளியமரம் உள்ளதுவே ஆழ்வார் திருநகரி பெருமாள் கோயில். இரவு 8 மணியளவில் கோயில் மூடப்படும் வேளையில் பகதர்களைப்போல வந்த சிலருக்கு அர்ச்சகர் தட்டுடன் வந்த போது தீபத்தை வணங்குவது போல நடித்து, அர்ச்சகரை அதே இடத்தில் அருவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பியோடினார்கள் கொள்ளையர்கள். ஆனால் விரைவில் பிடிபட்டார்கள்; அதன்பின்னரே அரசு ஆலயப்பணி நேரங்களை மாற்றியமைத்தது. இது நடந்தது 80 களில் என் நினைவின்படி. நெல்லை, தூத்துக்குடி மாவட்டமே அல்லோலகல்லோடப்பட்டது.

  இது போக, அக்கோயிலின் தலபுராணமே ஒரு கொள்ளையின் கதையோடுதான். நகைகளைக் கொள்ளையடித்து ஓடும்போது, ஊர் மக்கள் விரட்ட கோயிலில் உள்ளேயே வந்து பெருமாளுக்குப் பின் ஒளிந்துகொண்டான். பெருமாளே…என்னைக்காட்டிக்கொடுக்காதே என விண்ணப்பிக்க, ஊர்மக்கள் வந்து கேட்க, பெருமாள் எவரும் இங்கு வரவில்லை என சொல்ல அவர்கள் போய்விட, முன்னே வா என பெருமாள் சொன்னதும் திருடன் வந்து நகைகளைப்பெருமாள் முன் வைத்து சரணாகதி அடைந்து திருமாலடியாரானது தல புராணம். இதனால், அக்கோயில் பெருமாள் கள்ளபிரான் என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். ஊர்மக்களுக்கு மகரனெடுங்குழை காதரென்றால் புரியாது. அக்காதரின் கோயிலெங்கே என்றால் முழிப்பார்கள். மாறாக, கள்ள பிரான் கோயிலெங்கே என்று சிறுகுழந்தையும் கைகாட்டும். கள்ள் பிரான் தேரோட்டம் நெல்லை ஜில்லாவில் புகழ்வாயந்தது. ஊர் மக்கள் ஜாதி, இன, மத பிரிவினைகள் இல்லாமல் கூடும் நாள் அந்நாள்.

  தென் திருப்பேரையிலிருந்து வரும் திருமலை ராஜனுக்கு நான் சொல்லவேண்டிய் நிலையில் இருக்கிறார். இக்கதையும் மேலே கண்ட நிகழ்ச்சிகளையும் சொன்ன என்னைப் பொய்யன் என்கிறார். விந்தை!

 13. BSV on February 8, 2018 at 4:08 pm

  //சித்திரை வீதிகளில் உள்ள கடைகளை நீக்கி விட்டு அங்கு ஏற்கனவே இருக்கும் குஜராத்தி சத்திரங்கள் பாணியில் எளிய மக்கள் தங்க சில சத்திரங்கள் கட்டலாம் என்பதே என் ஆலோசனை. சாப்பாட்டுக் கடைகளையும் அங்கு அனுமதிக்கலாம் தவறில்லை அவை ஒரு தெருவில் மட்டும் வைத்துக் கொண்டு மீதம் மூன்று இடங்களிலும் பஜனை மடங்கள், ம்யூசியங்கள், கோவில் நிர்வாக அலுவலகங்கள், கோவிலை பாதுகாக்கத் தேவையான தீயணைப்பு நிலையங்கள், சுற்றுலா மேம்பாட்டு தகவல் மையங்கள், ஆவணக் காப்பகங்கள், தமிழக சுற்றுலா மற்றும் கோவில்கள் குறித்தான படங்களைக் காட்டும் மினி தியேட்டர்கள் ஆகியவற்றை அங்கு அனுமதிக்கலாம். புது மண்டபக் கடைகளில் சில முஸ்லீம்களின் கடைகளே இவற்றை எவரும் சென்று நேரில் உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மதுரையின் சித்திரை வீதிகள் பொதுவான ஒரு இடம் //

  சித்திரை வீதிகளைப் பொதுவான இடம் என்று கருதி செயல்பட்டதால் வந்தது வினைகள்; அவைகளைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். இவரின் ஆலோசனை இன்னும் அவ்வீதிகளை அசிங்கப்படுத்தும். எக்கடைகளும் அங்கு கூடா. அனைத்தும் நீக்கப்படவேண்டும். தருமசாலாக்களை ஆவணி வீதிகளுக்குக் கொண்டு போகவேண்டும். எப்படி ஆடிவீதிகள் கோயிலுக்கு வரும் பகதர்கள் நடையில் செல்ல வைக்கப்பட்டு செயல்படுகின்றனவோ, அப்படியே சித்திரை வீதிகளும் பக்தர்கள் நடந்து செல்லவே இருக்க வேண்டும். ஆடி வீதிகள் கோயிலின் முதல் சுற்று வீதிகள்; அடுத்து சித்திரை வீதிகள்; இவ்விரண்டிலும் வியாபாரமில்லா புனிதம் காக்கப்படவேண்டும். ஆவணி வீதிகள், மாசி வீதிகள் – கோயிலுக்கு மூன்றாம், நான்காம் சுற்றுக்கள்; இங்கு விடுதிகள் கடைகள் வைக்கப்படலாம்.

 14. அ.அன்புராஜ் on February 8, 2018 at 11:18 pm

  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரையில் திருச் செந்தூரல் பெரிய தேவஸ்தானங்கள் உள்ள கோவில்களில் தலா ஒரு இசைக் கல்லூரி கட்ட வேண்டும். குழந்தைகளுக்கு ராகம் தாளம் பல்லவி ராகங்களின் பண்களில் பவனயை கற்றுக் கொடுக்க வேண்டும்.ஆர்மோனியம் வயலின் வீணை தபலா என்று வாத்தியங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.சிறிய கட்டணம் கூட பெற்றுக் கொள்ளலாம். முறைசாரா கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும்.

 15. ச.ஞானசம்பந்தன் on February 9, 2018 at 7:14 pm

  நானும் ஒரு மதுரைக்காரன். கோவில் சார்ந்த குடிகளின் வழி வந்தவன் என்பதாலும் என் வாழ்வின் குழந்தை மற்றும் மாணவப் பருவம் முழுமையும் கோயிலிலேயே சார்ந்திருந்தது என்பதாலும் இதை எழுத எனக்கு உரிமை உண்டு என எண்ணுகிறேன்.
  1. மதுரை அருள்மிகு மீனாஷி அம்மன் திருக்கோயிலும் வானுயர் கோபுரங்களும் மதுரை மக்களின் ஜீவனோடும் அடையாளங்களோடும் இரண்டற கலந்தவை. மண்ணின் மாண்புமிக்க அடையாளங்கள். இவை மத வேறுபாடுகளை மீறிய உணர்வை ஊட்டுபவை. ஒரு சில தீவிர இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவப் பற்றாளர்களைத் தவிர வெளிப்படையாகவோ உள்ளூறவாகவோ அன்னை மீனாஷியின் மீது பக்தியோ அல்லது பயமோ உடைய மாற்று மத மதுரை நண்பர்கள் பலர் உண்டு, அவர்களில் பலரை நான் கண்கூடாக அறிவேன். திருக்கோயில் பக்தர்கள் தரமான சந்தனம் பெறுவது கூட தேர்முட்டி எனப்படும் இடத்தில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளில் தான். எனவே இந்தப்பிரச்னையை முழுக்க முழுக்க மதப்பிரச்னையாகப் பார்ப்பதும் மாற்றுவதும் ஏற்புடையதல்ல. உள் நோக்கமுடையது.
  2. திருக்கோயிலில் 1992 பாபர் மசூதி இடிப்புக்கு முன்/ பின் என இரு காலங்கள் உண்டு. 1992க்குப் பிறகு திருக்கோயில் நுழைவுக்கு கெடுபிடிகள் அதிகரித்து விட்டன. அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடும் என்பது குறித்த விழிப்புணர்வு தேவை தான். அதைக் காரணமாகக் கொண்டு காவல்துறையின் பொறுப்பில் திருக்கோவில் நுழைவு மேலாண்மை கைவிடப்பட்டது மிகப்பெரிய தவறு. செக்கு எது சிவலிங்கத் திருமேனி எது எனத் தெரியாதவர்களே வாயில் காக்கும் பொறுப்பாளர்களாகிவிட்டனர். சட்டை கூட அணியாத காவி உடை உடுத்திய சன்யாசிகளையே கூட தடவித் தடவிப்பார்த்து உள்ளே அனுப்பும் காவல்துறையினர் எப்படி வியாபாரிகள் விற்க டின் டின்னாக நெய்யை உள்ளே அனுப்பினார்கள். லஞ்சம்? காவல்துறை கால் பதித்த இடமெல்லாம் லஞ்ச லாவண்யம் தலை தூக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை
  3. திருக்கல்யாணத்திற்கு ஆலய நிர்வாகத்திடமிருந்து நீங்கள் நுழைவுச்சீட்டை இணைய வழியாகப் பெற்றிருந்தால் கூட நீங்கள் காவல் துறையால் உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. First come First Serve என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணைக்கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் குடும்பத்தைச்சேர்ந்த பெண்கள் மட்டுமே நுழைவுச்சீட்டோ அனுமதிச்சீட்டோ எதுவுமில்லாமல் நுழையவும் முன் வரிசைகளில், வாகான இடங்களில் அமரவும் முடியும். ஊடகத்துறையினரே படாதபாடு பட வேண்டும். திருக்கோவில் இணை ஆணையரே திருக்கல்யாணத்தன்று மேற்கு நுழைவு வாயிலில் நுழைய முடியாமல் பரிதவித்த கடந்த கால வரலாறு ஒன்றும் உண்டு. மதுரை காவல்துறையின் அட்டகாசங்களை சித்திரை திருவிழாவின் போது கண்கூடாகக் காணலாம். பக்தியில் திளைத்த, அன்றாடம் மீனாஷியை அதிகாலையில் சென்று வழிபட்ட எண்பது வயது ஏழை மூதாட்டி, திருவிழா நாட்களில் அம்பாளை அணுகக் கூட இயலாத அளவுக்கு அவளை அன்னியப்படுத்தும் கெடுபிடிகள் ஏராளம். இப்போது என்ன ஆயிற்று? அநியாயங்களைப் பொறுக்காத சொக்கேசன் நெற்றிக்கண்ணைத் திறந்திருக்கிறான். பற்றி எரிந்திருக்கிறது.
  4. மதுரைக்கும் நெருப்புக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. அநீதியால் கணவனை இழந்த கண்ணகி முலை ஒன்றை திருகி எறிந்து மதுரையைப் பற்ற வைத்துப் பின் இன்றும் கொடுங்களூர் பகவதியாக மலையாளிகளின் நெஞ்சில் வாழ்கிறாள். நக்கீரனுக்காகத் திறந்த நெற்றிக்கண் நெருப்பு, பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே என்று சம்பந்தப்பெருமான் வெப்பு நோயாக மாற்றி அனுப்பிய நெருப்பு என பல சொல்லிக் கொண்டே போகலாம்.

  5. திருக்கோவிலுக்குள் என் பள்ளி/ கல்லூரி மாணவப்பருவத்தில் இவ்வளவு கடைகள் கிடையாது. ஆடி வீதியில் மரங்கள் நிறைய உண்டு.பறவைகளின் ஒலி நிறைந்திருந்த்து. மரங்கள் அழிந்தன. கடைகள் பெருத்தன. கடைகள் பெருத்ததற்கு காரணம் அற நிலையத்துறையில் புரையோடிப் போயுள்ள லஞ்சம். ஒரு கடை வைத்துள்ள உரிமையாளரின் காலத்துக்குப்பின் அவருடைய இரண்டு அல்லது மூன்று மகன்களுமாகச் சேர்ந்து கடையை ஆக்கிரமிப்பின் மூலம் விரிவுபடுத்திக் கொள்வது, பிறகு தனித்தனிக்கடைகளாகப் பிரித்துக்கொள்வது, இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்க ஊழியர்களுக்கு லஞ்சம், இப்படியே கடந்த முப்பது ஆண்டுகளில் தொடர்ந்து நாசகரமான ஆக்கிரமிப்பும் ஒழுங்கீனங்களும் பெருத்துப் போய் விட்டன. தீப்பிடித்த கடைகளின் சேதங்களை அப்புறப்படுத்தும் போது முந்நூறுக்கும் அதிகமான காலி மது பாட்டில்கள் கிடைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வருகிறது. நல்ல வேளை, தமிழக அரசு திருக்கோயிலுக்குள் டாஸ்மார்க் கடையை அனுமதிக்க/திறக்கவில்லை. இந்த 115 கடைகளிலிருந்து திருக்கோயில் நிர்வாகக் கணக்குக்கு மாதம் 2லட்ச ரூபாய் கூட வருவதில்லை என்பது தான் உண்மை.
  6. இப்போது அழிந்துபட்டுள்ள(???) சேதப்பட்டுள்ள, வீரவசந்தராய மண்டபத்தில் உள்ள அழகிய தூண்களில், சிற்பங்களில் ஒன்றைக்கூட இன்று நம்மால் மீட்டுருவாக்கம் செய்ய இயலாது. கற்பூர வாசனை அறியாத கழுதைகளிடம், பூமாலை அறியாத குரங்குகளிடமும் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கிறது நம் காலத்தின் சரித்திரச்சுவடுகள். வெளி நாட்டவருக்கு கலைகளின் அருமை தெரியும். திரும்பிய பக்கமெல்லாம் கலைகளின் சிறப்பு வாய்ந்த திருக்கோயில்களுக்கு மத்தியில் வாழும் நம்மவர்கள்தான் தெற்கு கோபுரத்தின் சுவர்களில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுச்சுரணை என்பதும் பக்தி/கலை விழிப்பும் மழுங்கிப் போன சமூகம் நம் சமூகம்.
  7. இதிலும் கூட திராவிட இயக்க அரசியல் என்று பொறுப்பை ஒருபக்கமாய் சாட்டிவிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நீதிக்கட்சியைச்சேர்ந்த தமிழவேள் பி.டி.ராஜன் தான் 1964ல் மீனாஷி திருக்கோயில் திருக்குடமுழுக்கு பணிக்குழுத் தலைவராக இருந்தவர். இன்று சபரிமலையில் அனைவரும் வழிபடும் ஐயப்ப விக்ரஹத்தை மதுரையில் இருந்து எடுத்துச்சென்று பிரதிஷ்டை செய்தவர் அவர்தாம். திமுக அமைச்சராகவும் சபாநாயகராகவும் இருந்த போதும் (அவர் மகன்) பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனும் அவர் தம் துணைவியாரும் திருக்கோயிலின் தீவிர பக்தர்கள். அவர் மகனும் இப்போது திமுகவின் மதுரை மத்ய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.ஆர்.பி. தியாகராஜன், வானொலி பேட்டி ஒன்றில், இத்திருக்கோயிலுக்கு தன் தாத்தாவைப் போல் திருப்பணி செய்ய வேண்டும் என்பது தன் வாழ்நாள் விருப்பம் என தெரிவித்திருந்தார்.
  8. திருக்கோயில் நிர்வாகம் கார்ப்பொரெட் கம்பெனியைப் போல் லாப நோக்கத்தோடு நடத்தப்படும் போது என்ன சொல்ல இயலும்? சரி! அர்ச்சகர்கள் எப்படி? நீங்கள் முக்குறுணி விநாயகருக்கோ அல்லது வடக்குப்பிரஹாரத்தில் உள்ள துர்கைக்கோ சந்தனக் காப்பு சார்த்துவது என்ற நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது அவ்வளவு லேசில் நடந்து விடாது. நிர்வாகம் அனுமதித்தாலும் திருக்கோயிலில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிவாச்சார்யார் முடிவு செய்தாலொழிய காரியம் நடக்காது. நீங்கள் பிறந்த நாளோ, திருமண நாளோ ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொன்னால் அவர் சம்பந்தமேயில்லாத ஒரு தேதியைச் முன்மொழிவார். அடிக்கடி அவர் வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்வார். விநாயகரும் துர்கையும் அவர் வருகைக்காக காத்திருக்க வேண்டியது தான். அவரைத் தவிர வேறு சிவாச்சார்யார்களையும் செய்ய விட மாட்டார். பேச்சும் தங்கமாக இருக்காது. எடுத்தெறியும் அதிகாரத்தொனியில்தான் இருக்கும். பணபலமுள்ள மதுரைப் பிரமுகர்களின் திருக்கோயில் முகவர்கள் மூலமாகத்தான் உங்கள் பிரார்த்தனையை செலுத்த முடியும்.
  9. நம் திருக்கோயில்கள் சமய மையங்கள் மட்டுமல்ல. சமுதாயக் கூடங்களும் கூட. திருக்கோயில் பொற்றாமரைக் குளக்கரையில் அமாவாசை தர்ப்பணங்கள், சுபமுஹீர்த்த நாட்களில் திருமண வைபவங்கள், பெண் பார்த்தல், மாப்பிள்ளை பார்த்தல், நிச்சயதார்த்தங்கள், வளைகாப்பு (சரபேஸ்வரர் தூண் அருகே) என்று லட்சக்கணக்கான கிராம மக்கள் புழங்கும் சமுதாய மையம் மதுரை மீனாஷி திருக்கோயில். கல்வியறிவு குறைந்திருந்தாலும் பக்தியிலும் கடவுள் நம்பிக்கையிலும் ஊறித்திளைத்த இம்மக்கள் இன்று காவல்துறையின் கட்டுப்பாடுகளில் சிக்கிச் சின்னாபின்னமாவதைக் கண் கூடாகக் காணலாம். இவர்கள் தான் குண்டு வைக்கப்போகிறார்களா? மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி என நான்கு மாதங்கள் மதுரையின் கடும் கோடைக்காலம். மதியம் 12.30 மணிக்கு கொளுத்தும் வெயிலில் திருக்கோயில் முன் வந்து சேரும் ஒரு கூட்டம். இதில் தமிழ் மொழி புரியாத வட இந்தியர்களும் சேர்த்தி. கோயிலுக்குள் நுழைய முடியாது. காவல்துறை வாசற்கதவுகளை மூடி விடுவார்கள். நண்டும் சுண்டுமாக குழந்தைகளோடு சித்திரை வீதியில், வெட்ட வெளியில் எங்கே அமர முடியும்? திருக்கோயிலுக்கும் அக்கறை கிடையாது. மாநகராட்சி நிர்வாகத்திற்கும் பொறுப்பு கிடையாது. குடி தண்ணீர், கழிப்பறை வசதிகளாவது சித்திரை வீதிகளில் உண்டா? கட்டணக் கழிப்பறைகள் தாம். அவையாவது தரமாக இருக்குமா? கேட்க கூடாது. முடியாது. மீனாஷி பூங்கா கட்டணமில்லா சிறுநீர்ப்பிறையை முள் வைத்து அடைத்திருப்பார்கள். எல்லாம் ரவுடிகளின் ராஜ்யம் தான். ஒரே குடும்பத்தில் அண்ணன் ஒரு கட்சி தம்பி இன்னோரு கட்சி. எந்த கட்சி ஆட்சி வந்தாலும் இவர்களின் ராஜ்யத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
  10. ஆண்டுக்கு சில முறை, பிட்டுக்கு மண் சுமந்த நாள், தைப்பூசத் தெப்போற்சவம், பங்குனி உத்திரம் திருப்பரங்குன்றம் சுப்பிரமண்ய சுவாமி திருக்கல்யாணம், சித்திரைத் தேரோட்டம் போன்ற தினங்களில் உற்சவர் வெளியேறி இருப்பதால் திருக்கோயில் நடை சார்த்தப்படும். அதைப்பற்றி வெளி மாநில/ வெளி நாட்டவர் புரியும் வகையில், மொழியில், வாசலில் எதாவது அறிவிப்பு இருக்குமா? இருக்காது. அது எங்கள் வேலை அல்லவே? இப்போது அடைக்கப்பட்டிருக்கும் கிழக்கு கோபுர வாசல் வழியாக மட்டுமே நுழைய இயலும். எதற்கு? இப்போது எரிந்து போன கடைகளின் வியாபாரம் தடைப்பட்டு விடக்கூடாது அல்லவா? அதற்குத்தான். ஆயிரங்கால் மண்டபம் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். வசூல் கெட்டுவிடக் கூடாது அல்லவா?
  11. திருக்கோயில் ஈசான்ய சுற்றுமதிலுக்கு 100 அடி அருகில் உள்ள பழைய செண்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணிக்கு அருகில் மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. அதில் ஒரு பகுதியை தன் சொந்த இடம் என்று ஒருவர் ஆக்கிரமித்தித்திருந்தாரே பார்க்கலாம். எப்படி? கல் தூண்கள் கொண்ட கட்ட்டம் அவர் தாத்தாவுக்கு சொந்தமான இடமாம். எப்படி போனது கதை. ஜீலை 26- 2013 தினமலர் செய்தியை சான்றாக இணைக்கிறேன்.
  மதுரை: மதுரை, ராணி மங்கம்மாள் அரண்மனை கட்டடத்தை இடித்த விவகாரத்தில், பழைய ஆவணங்களை தூசு தட்டி, அளவீடு செய்ய, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இடிப்புக்கு காரணமான, அ.தி.மு.க., பிரமுகர் செல்லதுரையின் ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சியினர் இடித்தனர். மதுரை, பழைய சென்ட்ரல் மார்க்கெட் அருகே உள்ளது, ராணி மங்கம்மாள் அரண்மனை. கி.பி., 1689ல், கருங்கற்களால் கட்டப்பட்ட அந்த புராதன கட்டடம், தற்போது பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் கீழ், பெரியாறு, வைகை வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகமாகச் செயல்படுகிறது. தனக்கு சொந்தமான இடத்தை இடிப்பதாகக் கூறி, மங்கம்மாள் பேலஸ், சிறை வளாக கட்டடத்தின் ஒரு பகுதியை, “மார்க்கெட்’ செல்லதுரை இடித்தார். இதில், பழமையான, அரண்மனை சேதமடைந்தது; அதில் இருந்த, தேனி, மதுரை மாவட்ட பெரியாறு, வைகை பாசன டிவிஷன்களின் பதிவு ஆவணங்களும் சேதமடைந்தன. இதுகுறித்து, “தினமலர்’ நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை, எட்டு அதிகாரிகள், அளவீடு செய்தனர். அங்கு வந்த, செல்லதுரை மருமகன் செந்தில்குமார், அளவீடு பணியை, “போட்டோ’ எடுத்த பத்திரிகையாளர்களைத் தடுத்து, தகராறு செய்தார். காலை, 11:15 மணிக்கு, அங்கு வந்த மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால், இடிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். “இது எங்களுக்கு சொந்தமான இடம்’ என, கமிஷனரிடம், செந்தில்குமார் முறையிட்டார். துண்டுகளாகக் கிடந்த கருங்கல் தூண்களை பார்த்த கமிஷனர், “இது போன்ற அரிய தூண்கள், தனியாருக்கு எப்படி சொந்தமாக இருக்க முடியும்?’ என, கேட்டார். செல்லதுரை உரிமை கொண்டாடும் இடம் குறித்து, சந்தேகம் இருப்பதாக தெரிவித்த கமிஷனர், முந்தைய சர்வே ஆவணங்களை வைத்து அளவீடு செய்யுமாறு உத்தரவிட்டார். அருகில் உள்ள, மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஜன்னல்களை அடைத்து, “மார்க்கெட்’ செல்லதுரை தரப்பு, இரண்டு கடைகள் கட்டியிருந்தது; திருட்டுத்தனமாக மின் இணைப்பும் பெற்றிருந்தது. இரு கடைகளும் இடிக்கப்பட்டன. “பேலஸ்’ இடிக்கப்பட்டது குறித்து, போலீசில் புகார் செய்துள்ளதாக, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் தெரிவித்தார். ஆனால், “புகார் எதுவும் வரவில்லை’ என, விளக்குத்தூண் போலீசார் தெரிவித்தனர். கமிஷனர் நந்தகோபால் கூறுகையில், “”இடிக்கப்பட்ட, மங்கம்மாள் பேலஸ் பகுதிகளில், பழங்கால தூண்கள் சேதமடைந்துள்ளன. தற்போதுள்ள சர்வே மூலம், அளவீடு பணி நடந்தது. முந்தைய சர்வே மூலம், அளவீடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். அதன் முடிவு கிடைத்ததும், போலீசில் புகார் செய்யப்படும்,” என்றார்.

  யார் இந்த “மார்க்கெட்’ செல்லதுரை : துவக்கத்தில், அ.தி.மு.க.,வில் இருந்த செல்லதுரை, மதுரை சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரியாக, தொழில் செய்து வந்தார். முந்தைய, தி.மு.க., ஆட்சியின் போது, அதில் இணைந்தார். மாநகராட்சி கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வில் இருந்து விலகி, மீண்டும் அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார். ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப, கட்சி மாறினாலும், மாநகராட்சியின் மார்க்கெட் கடைகளை பெறுவது மற்றும் வசூல் உரிமம் பெறுவதில், இன்றும், செல்லதுரையின் கை ஓங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் வட்டமும், அவருக்கு தொடர்ந்து விசுவாசமாகச் செயல்படுகிறது.

  12. இப்போது இடிக்கப்பட்ட பழைய செண்ட்ரல் மார்க்கெட் பகுதியை வெற்றிடமாக கார் பார்க்கிங் இடமாக ஏலம் விட்டு காசு பார்க்கிறது. மாநகராட்சி. ஆணையாளர், அதிகாரிகள் மேயர், உள்ளூர் மந்திரிகள், அரசியல்வாதிகளின் பாக்கெட்டுக்குப் போக மீதி ஏதோ மாநகராட்சிக்கு வந்தால், வந்திருந்தால் லாபம் தான். கீழச்சித்திரை வீதியில் புது மண்டபத்தை ஒட்டி உள்ள குன்னத்தூர் (வரிச்சியூர்) சாம்பு ஐயர் சத்திரத்தை இடித்து தரைமட்டமாக்கி நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளாகி ஓடிக் கொண்டேயிருக்கின்றன. பாவம் சாம்பு ஐயர். இந்த சத்திரத்தை பொது சேவைக்கு அர்ப்பணித்த அவரது ஆன்மா என்ன பாடு படுகிறதோ? இவையெல்லாம் யாத்ரீகர்கள் தங்கும் இலவச இடங்களாக போதுமான வசதிகளோடு அமைக்கப்பட்டிருந்தால் திருமலைக்கு நிகராக அல்லவோ மதுரை மாண்பு புகழ் பெற்றிருக்கும்.
  13. மதுரை மதனகோபாலசுவாமி திருக்கோயில் மதுரையில்அமைந்துள்ள வைணவத் திருக்கோயில். அறுபது ஆண்டுகளுக்கும் முன்னர் அதிகப்படியாக, கவனிப்பாரில்லாமல் இருந்த இத்திருக்கோயிலின் 36 பழம்தூண்கள் ஏலம் விடப்பட்டன. அமெரிக்காவின் கிப்சன் என்பவர் அவற்றை ஏலத்தில் எடுத்து அமெரிக்கா பிலடெல்பியா கொண்டு சென்றார். அவற்றை பயன்படுத்தி கோயில் மண்டபம் போன்ற அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பை 1938 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கண்காட்சிக்கு வழங்கினார்.
  நன்றி விக்கிபீடியா

  14. மீனாஷி திருக்கோயிலின் கிழக்கு ஆடி வீதியில் வன்னி மரத்தடி வினாயகர் திருக்கோயில் உள்ளது. இதற்கு முன்பாக படக் கடைகள் பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. காசு பார்த்தார்கள். இப்போது வன்னி வினாயகர் திருக்கோயிலை பொற்றாமரைக்குளத்தின் தெற்குப்பகுதி தூண்களை புதுப்பிப்பதற்கான வழியாக்கி தூண்களைப் பெயர்த்து தெற்காடிவீதி திருப்புகழ் சபை முன்பு வழிமறித்து கொட்டியிருக்கிறார்கள். வன்னி வினாயகர் திருப்பணி முடிந்த்தும் தான் தெரியும் என்ன வண்டவாளம் என்று? பழைய தூண்களின் பிலடெல்பியா பயணம் தொடங்கி விட்டதோ என்னவோ? என நினைக்கத் தோன்றுகிறது. வாரியார் சுவாமிகளின் குரு திருப்புகழ்சாமி அய்யரால் தோற்றுவிக்கப்பட்டது மதுரை தெற்காடி வீதி திருப்புகழ் சபை, திரு ஆலவாய் சைவ சித்தாந்த சபை, காஞ்சி மஹாபெரியவரின் ஆசியோடு தொடங்கப்பட்ட பாவை இசைப்பள்ளி, பன்னிரு திருமுறை மன்றம், சுவாமி சிவானந்தர் காலத்திலேயே தொடங்கப்பட்ட தெய்வ நெறிக்கழகம், வடக்காடி வீதி திருவள்ளுவர் கழகம், சமரச சன்மார்க்க சங்கம், ஆதி சைவர்கள் சபை என ஆன்மீக உழவார அறப்பணிகள் செய்யும் அமைப்புகளின் சத்சங்கப் பணிகளுக்கு நிர்வாகமும் காவல்துறையும் கொடுத்து வரும் இடைஞ்சல்கள் சொல்லி மாளாது. இவர்களை அப்புறப்படுத்திவிட்டால் நாலு கடை கட்டி நாலு காசு பார்க்கலாமே? இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் தனிப்பட மனந்திறந்து எப்போதாவது சொன்னாலொழிய யாரின் கவனத்திற்கும் இவை வரப்போவதில்லை. இந்த தீ விபத்தை சாக்காகக் கொண்டு, வயரிங் சரியில்லை, மாலையில் நிகழ்ச்சிகள் நட்த்தாதீர்கள் என இந்த அமைப்புகளை வெளியேற்றும் வைபவங்களும் நாடகங்களும் நடந்தேறினால் வியப்பேதுமில்லை.
  15. தைப்பூசத்திற்கு மாரியம்மன் தெப்பக்குளத்தில் வைபவம். தெப்பக்குளத்தைச் சுற்றி நடைபாதை கட்டியிருக்கிறார்கள். அதுவும் கிழக்குத்தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறனின் தொகுதி மேம்பாட்டுத்திட்டம். சரி உள்ளே தண்ணீர் எங்கே? மதுரை நகரே வெள்ளத்தில் மூழ்கினாலும் தெப்பக்குளத்தில் தண்ணீர் இருக்காது. அப்படி வரத்துக் கால்வாய்களை ஆக்ரமித்து, தூர்த்து அட்டகாசம் செய்திருப்பது மாநகராட்சி. மைய மண்டபம், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரம். உள்ளே உள்ள தூண்களில் காதலர்களின் கிறுக்கல்கள் வேறு. இன்னோரு முறை இப்படி ஒரு குளத்தையும் மண்டபத்தையும் உருவாக்க இயலுமா?
  16. திருவிளையாடற்புராணம் தொடர்புடைய லீலைகளை சோமசுந்தரப்பெருமான் நட்ததிக்காட்டும் வலை வீசித் தெப்பக்குளம் என்று ஒன்று மதுரையில் உண்டு. அது எங்கிருக்கிறது என்று கோவில் இணை ஆணையருக்கே தெரியுமா என்பது என் ஐயம். டவுன் ஹால் ரோடு பெருமாள் தெப்பக்குளத்தை குப்பை மேடாக்கி விட்டார்கள். கொசுப்பண்ணை. இதில் வீடு வீடாக மாநகராட்சி ஆய்வு மேற்கொள்ளுமாம். என்ன வேடிக்கை?
  17. திருக்கோயில் தேவார இசைப்பள்ளி எங்கே நடக்கிறது? விளம்பரங்கள் இருக்காது. அது இரகசியத்திட்டமாக இயங்கும். வேத பாட சாலை உண்டா? கிடையாது. கூடல் குமாரர் சன்னிதியில் ஸ்கந்த சஷ்டி மிக விமர்சையாக நடந்த காலம் ஒன்று உண்டு. இப்போது தர்ம தரிசன க்யூவிலோ அல்லது 100 ரூபாய் டிக்கெட் க்யூவிலோ தான் அம்மன் சன்னிதியை ஒட்டிய உள் பிரஹாரத்திற்குள் நுழைய முடியும். சன்னிதிக்கு உள்ளேயோ அல்லது இந்த உள் பிரஹாரத்திலேயோ நீங்கள் வலம் வர முடியாது. சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து ஆடி வீதி வலம் தான் வர முடியும். நவராத்திரி அலங்காரங்களின் போது அலை மோதும் கூட்டம் திக்கித் திணறும் வகையில் நிர்வாகக் குழப்பங்கள் நீடிக்கின்றன.
  18. திருக்கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வடக்காக வறண்டு கிடக்கிறது வைகை நதி. அப்புறம் எப்படி மழை நீர் திருக்கோயிலுக்குள் சுவாமி சன்னிதிக்குள் நுழையும். சித்திரை வீதியின் சாலையின் மட்டத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை முக்கால் அடி உயர்த்தி இப்போது எட்டடி உயர்ந்திருக்கிறது. மோட்டார் பம்புகள் மூலம் உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள் நுனிக்கொம்பில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டும் மூடர்கள்.
  19. புது/வசந்த மண்டபத்தின் உள்ளே அருமையான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் நிறைய உண்டு. கடைக்காரர்கள் கண்டதையும் தொங்கவிட்டு தொங்கவிட்டே முன் பக்க குதிரை வீர்ர்கள் சிலைகள் மூளியாகக் கிடக்கின்றன. (பார்க்க படம்) நோ பார்க்கிங் கீழேயே ஆட்டோ நிற்கிறது.
  https://vanilabalaji.wordpress.com/tag/puthu-mandapam/

  புது மண்டபம் அந்தக்காலத்தில்
  https://www.oldindianphotos.in/2016/05/interior-of-puthu-mandapam-madurai.html

  புது மண்டபம் இந்தக்காலத்தில்
  http://www.alamy.com/stock-photo-vendors-in-pudu-mandapam-in-madurai-south-india-18845779.html

  Entrance to Puthu Mandapam in Madurai, drawing by Hubert Clerget (1818-1899)
  https://www.gettyimages.com/illustrations/madurai
  20. இதையெல்லாம் எழுதி என்ன ஆகப்போகிறது? ஒன்றும் நடக்கப்போவதில்லை.. இரத்தக்கொதிப்பு தான் ஏறும்.. பேசாமப் போய் தூங்குங்க என்று என் திருமதி கூறுவதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். நன்றி. தமிழ் ஹிந்து இணைய தளத்திற்கு என் வணக்கங்கள்.

 16. BSV on February 9, 2018 at 8:54 pm

  மதுரை எப்படியோ…ஆனால் திருச்செந்தூரை இழுக்காதீர்கள். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் எளிய மனிதர்கள். உழைக்கும் வர்க்கம். இன்று நேற்றன்று; அநாதி காலம் தொட்டு அவர்களே பக்தர்கள். இசை, ராகம், தாளம், பல்லவி என்று போனால். திருச்செந்தூர் முருகன் ஏழைகளின் கடவுள் என்ற பெயரைவிட்டுவிட்டு மேட்டுக்குடி வர்க்கத்து கடவுள் என்ற நிலைவரும். ஏற்கனவே கண்டகண்ட கட்டிடங்களைக் கட்டி திருச்செந்தூரின் புறபுனிதம் காணாமல் போய்விட்டது. திருச்செந்தூரில் கடலே தீர்த்தம். ஆனால் அங்கும் இன்னொரு மனித கடவுளுக்கு கோயில் கட்டி, அவர் முருகனோடு சம்பந்தப்பட்டவரன்று) தீர்த்தத்தையே கெடுத்துவிட்டார்கள். போய்ப்பாருங்கள் சார். மேலும் எதையாவது வைத்துக் கட்டி கெடுக்காமலிருக்கலாமே? மதுரையில் இசைக்கல்லூரி வைக்க பல இடங்கள் கோயிலைச்சுற்றியே இருக்கின்றன. அங்கு வைத்துக்கொள்ளுங்கள்.

 17. அ.அன்புராஜ் on February 9, 2018 at 9:49 pm

  திரு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு வணக்கம்.
  தங்களின் வேதனையை கொட்டித் தீா்த்து விட்டீர்கள்.நிறைய தகவல்களை பகீர்ந்துள்ளீர்கள். நன்றி.

  1000 ஆண்டுகள் அடிமை வாழ்வு நம்மை கழுதைகளாக மாற்றியுள்ளது.சந்தன பொதியை சுமக்கும் கழுதைக்கு அதன் எடைதான் தொியும்.மதிப்பு தரம் அறியாது.நாமும் அதுபோல்தான் உள்ளோம்.

  கோயில் மண்டபங்கள் ஒவ்வொன்றும் பலவகையான நிகழ்ச்சிகள் நடத்த பயன் பட்டது.இன்று கால ஓட்டத்தில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெற வில்லை. மேற்படி மண்டபங்களும் வெறும் காட்சிப் பொருளாக மாறி விட்டன.ஆகவேதான் வேறு வகைக்கு அது பயன்படுத்தப்படுகின்றது.

  காலியாக பெரிய மண்டபங்களை கல்லறை போல் வைத்திருப்பதில் சில சிக்கல் வரத்தான் செய்யும்.

  நமது கோவில்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வந்த காலத்தில் கட்டப்பட்டது.

  ஆனால் இன்றோ பக்தர்கள் கூட்டம் ஆயிரம் மடங்குகளில் லட்சக்கணக்கில். கோவில் வளாகம் என்னதான் செய்யும்.

  திருச்செந்தூா் முருகன் சன்னதியில் நாம் மட்டும் தனி ஆளாக பிரார்த்தனை 1975 ஆண்டுகளில் செய்துள்ளேன்.ஆனால் இன்று தினம் தினம் பெருந்திரள் கூட்டம். திருக்கோவில் நிா்வாகம் என்னதான் செய்யும். ஆனாலும் நிாவாகத்திற்கு உண்மையான ஆர்வம் இல்லைதான்.சாதாரண நாட்களில் கூட இரண்டு மணி நேரம் வாிசையில் நிற்க வேண்டும்.

  ஒருகாலத்தில் மிகவும் பெரிய ஊர்களாக இருந்து பெரிய திருவிழாக்கள் நடத்தப்பட்ட ஒரு கோவிலில் 15 வகை சப்பரங்கள் காட்சி பொருளாக தூங்கிக் கொண்டிருக்கின்றது.கோவிலைச் சுற்றி இருந்த ஊர்கள் காலியாகி மக்கள் இடம் பெயா்ந்து விட்டார்கள்.இதற்காக வருத்தப்பட தேவையில்லை. இயற்கை இதுதான்.

  பரிகார புஜைகள் நடத்த நாம்ஏன் பிராமணர்களை நாட வேண்டும். நாமே வேறு எங்காவது செய்யலாமே ?

  வீடுகளில் நித்திய புஜைகள் செய்வதில் நாம் திருப்தி அடைய வேண்டும்.

  முறையாக வழிபாடுகள் செய்தால் நமது வீடுகளும் திருக்கோவில்கள்தாம்.

 18. Sridhar on February 10, 2018 at 8:09 am

  Hindus must reclaim temples from the government. That is the only way of preserving our ancient Hindu treasures and passing on to the future generations. Today we cannot even think of building a temple like that. There are many other ancient temples which are suffering decay due to inept and corrupt management by pseudo secularists and atheists. Christians and Muslims are watching the developments with glee while the average Hindu is content with muttering a few slokas and visiting temples occasionally. Time has come for every hindu, regardless of caste, to use the power of the index finger and bring about a transformation. If we do not act now our grandchildren will be worshipping corpses.

 19. Rama on February 10, 2018 at 12:58 pm

  I couldn’t be bothered reading ALL the usual blah blahs, bull dust from the usual suspect BSV, the crypto Christian. One should put aside his views with contempt ( yawn, who cares the views from cryptos?) and one should not give him more oxygen by replying! There is this real problem of Kashmiri Islamists occupying the temple periphery and are probably giving shelter to anti Hindu, anti Indian terrorists. No BSV, we are not going to give you proff. Get rid of the shops and reclaim OUR temple. Number one priority. Hindus can decide what to with the land once the above two are achieved. BSV/ RVs of the world can house the terrorists in their own Chrstian churches if they feel so bad and sympathetic towards them.

 20. BSV on February 10, 2018 at 7:06 pm

  //Get rid of the shops and reclaim OUR temple. Number one priority. Hindus can decide what to with the land once the above two are achieved//

  Exactly as I’ve said above. Thanks for endorsing my opinion.

  நான்கு ஆடி வீதிகளும் எப்படி தூய்மைப்படுத்தப்பட்டதோ அப்படி நான்கு சித்திரை வீதிகளும் தூய்மைப்படுத்தப்படவேண்டும். அதாவது கடைகள் மட்டுமல்ல, தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், தர்மசாலாக்கள், எல்லாமே நீக்கப்படவேண்டும். நான்கு கோபுர வாயில்களில் வழியாக‌ கோயிலிக்குள் நுழையும் வீதியாக சித்திரை வீதியே இருக்க‌ வேண்டும். தற்போது அதைச்செய்வது ஆடி வீதியே, நான்கு திசைகளிலும்.

  ஆடிவீதிகளில்தான் உப‌ன்யாசங்கள் நடைபெறுகின்றன. ஆனால் ஒரு சிறிய அறையில்தான். கொஞ்சம் தாமதாகச் செல்வோர் வெளியில்தான் நிற்க வேண்டும். எனவே அனைத்தும் நீக்கப்பட்ட சித்திரைவீதியொன்றில் ஓர் உப்யன்யாச அரங்கு நிறுவப்படவேண்டும். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 100 பேர் அமர்ந்து கேட்கும்படி இருக்க வேண்டும். தற்போது ஏழைமக்கள் தங்கள் திருமணத்தைப் பொற்றாமரைக்குளக்கரையில் நடத்திக்கொள்கிறார்கள். மணப்பெண் பார்த்துமுடிப்பது; மணம் போன்று. அதன்பின்னர் மதுரை அம்மனை வணங்கிவிட்டு செல்கின்றார்கள். அவர்களுக்காக ஒரு சிறிய மணமண்டபம் சித்திரை வீதியில் கட்டப்படவேண்டும். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் எந்த்வொரு கடையும் சித்திரை வீதிகளில் இருக்கக்கவே கூடா. அதற்கடுத்த வீதியான ஆவணிவீதிகளில் இருக்கின்றன. அங்கேயே வாங்கிக்கொள்ளலாம். தங்கிக்கொள்ளலாம்.

  இப்படிச்செய்தால் கோயிலில் புனிதம் கெடாமலிருக்கும்; மேலும் பாதுகாப்பும் எளிது.

 21. BSV on February 11, 2018 at 1:07 pm

  //reclaim OUR temple.//

  ”OUR” is not correct here.

  மன்னர்கள் கோயில்களை மதுரை போன்ற ஊர்களில் கட்டும்போது அவை அவ்வூர் மக்களே கவனித்துக்கொள்வார்கள் என்றுதான் கட்டிவிட்டுப் போனார்கள். திருமலை நாயக்கன் கள்ளழகர் விழாவை உருவாக்கியது உங்களுக்கன்று; மதுரை மக்களுகே. அதாவது ஊர்க்கோயில்கள் அந்தந்த ஊர் மக்களுக்கே உரிமை. வருபவர்கள் பக்தர்களாக வந்து போக வேண்டும். மதுரை மீனாட்சி கோயில் மதுரை இந்துமக்களின் பரமபரைச் சொத்து. our temple என்று வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு அல்லது சென்னையிலிருந்தோ உரிமை கொண்டாட முடியாது. திரு ஞான சம்பந்தம் இங்கே எடுத்துக்காட்டியவாறு, மதுரை மக்களின் உணர்வுகளோடும் வாழ்க்கையோடும் ஊடுருவி உறவாடிக் கொண்டிருக்கும் கோயில் இக்கோயில். சித்திரை வீதிகளில் எவையெவை இருக்க வேண்டுமென்று மதுரை மக்களே முடிவு செயவார்கள். வேறெவருக்கும் உரிமை இல்லை. ஆலோசனை மட்டுமே சொல்லலாம்.

 22. அ.அன்புராஜ் on February 12, 2018 at 6:29 pm

  துரை எப்படியோ…ஆனால் திருச்செந்தூரை இழுக்காதீர்கள். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் எளிய மனிதர்கள். உழைக்கும் வர்க்கம். இன்று நேற்றன்று; அநாதி காலம் தொட்டு அவர்களே பக்தர்கள். இசை, ராகம், தாளம், பல்லவி என்று போனால். திருச்செந்தூர் முருகன் ஏழைகளின் கடவுள் என்ற பெயரைவிட்டுவிட்டு மேட்டுக்குடி வர்க்கத்து கடவுள் என்ற நிலைவரும்
  —————————————————-
  இங்குதான் நாம் பெரும் பிழை செய்கின்றோம். நல்ல பொழுது போக்குகள் சிறந்த பண்பாட்டின் அடையாளம். இசை பயில்வது நல்ல பொழுது போக்கு.இன்று இசை என்பது திருச்செந்தூர் பகுதியில் யாவருக்கும் தொியாத ஒன்று. இதில் கவனம் செலுத்தினால் முக்கால் அம்மணமாக கூச்சல் போடும் சினிமா கலாச்சாரத்திலிருந்து நமது இளைஞர்கள் கவனம் ஆக்க புர்வமான ஒரு துறை பக்கம் திரும்பும்.நாம் புதிதாகப் தக்கார் ஆக பொறுப்பேற்க உள்ள திரு.கண்ணன் ஆதித்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கின்றேன்.இசை பண்பாட்டின் அடையாளம்.அது பிறாமணா்களின் ஏகபோகமாக இருக்கக் கூடாது.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*