அக்பர் என்னும் கயவன் – 16

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பரின் ராணுவத்தைக் குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.

அக்பரது பொது, நிதி நிர்வாகத்தைப் போலவே அவரது ராணுவமும் காட்டுமிராண்டித்தனமான குண்டர்களால் நிரம்பியது. போர் முரசம் அறையப்பட்டதும் பெரும் திரளாக வந்து கூடும் அவர்கள் பின்னர் முழுவதும் கட்டவிழ்த்து விடப்படுவார்கள். எதிரி நாட்டுடன் போர் துவக்குமுன் அக்பரின் படைத் தலைவர்கள் குரானின் வாசகங்களை எடுத்துச் சொல்லி அவர்களை வெறியூட்டி வைப்பார்கள். அக்பரின் படைத்தலைவர்கள் படையெடுத்துச் சென்று வெல்லும் நாட்டில் எண்ணிப்பார்க்கவே இயலாத குரூரங்களை நடத்தி முடிப்பார்கள். எதிரிகளின் தலைகளை வெட்டி அதனை அக்பருக்குப் பரிசாக அனுப்பி வைப்பார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் தலைகள் ஓரிடத்தில் குவித்து வைத்து, பின்னர் அதனைப் பார்வையிடும் அக்பரின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

அக்பரின் அரசவையில் இருந்த வரி வசூலிக்கும் கொடூரர்களைப் போலவே அக்பரின் படையணிகளில் வேலை வெட்டியில்லாதவர்கள், கொலைகாரர்கள், அயோக்கியர்கள், மதவெறியர்கள், கொள்ளைக்காரர்கள், குண்டர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். அப்பாவிப் பொதுமக்களை மிரட்டுவது, கோவில்களை இடிப்பது, கொள்ளையடிப்பது, அவர்களின் பெண்களைக் கவர்ந்து சென்று கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வது போன்ற கொடூரங்களை வகைதொகையில்லாமல் நடத்திக் கொண்டிருந்தார்கள். இது அத்தனையும் அக்பரின் முழு சம்மதத்துடன் மட்டுமே நிகழ்ந்தது.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “அக்பரின் ராணுவம் மிகப் பலகீனமானது என்றாலும் அவரது எதிரிகளை விடவும் வலிமையானது. ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகுந்ததொரு ஐரோப்பிய ராணுவத்தின் முன்னர் அக்பரின் ராணுவம் ஒரு மணி நேரம் கூடத் தாக்குப் பிடித்திருக்கவியலாது. அக்பரின் படைத்தலைவர்கள் போர்ச்சுக்கீசிய குடியிருப்புகளைத் தாக்க முனைந்த போதெல்லாம் பரிதாபமாகத் தோற்றிருக்கிறார்கள் என்பதே இதற்கு ஒரு உதாரணம். அலெக்ஸாண்டர் போன்றவர்களெல்லாம் அக்பரின் நெற்றி மீது ஏறி நடந்து சென்றிருப்பார்கள். தென்னிந்தியாவில் பிற்காலத்தில் தோன்றிய மராத்தா குதிரைப்படைகள் அக்பருக்கு எதிராக எளிதானதொரு வெற்றியை அடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அக்பரின் மிக மோசமான ராணுவ நிர்வாகம் தோல்வியை மட்டுமே பெறும் வடிவமைப்பைக் கொண்டது”.

“ஒரு அரசனாக போர்களில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அக்பர், அந்த வெற்றியை அடைவதற்கு எல்லாவிதமான கீழ்த்தரச் செயல்களிலும் இறங்குவதற்குத் தயாரானவராக இருந்தார். தனக்கு ஆதரவளிக்கிற அத்தனை பேர்களையும் தனது ராணுவத்திற்குள் இழுத்துக் கொண்டார் அக்பர்” என்கிறார் ஸ்மித்.

அக்பரின் ராணுவ முழக்கம் “ஹிந்துக்களைக் கொல்லு” என்பதாகும். அந்த ஹிந்து அக்பருக்கு ஆதரவாக அவருடைய படையணியில் இருந்தாலும் அவனைக் கொல்வதில் தவறேதுமில்லை. ஏனென்றால் ஹிந்துவைக் கொல்வது இஸ்லாமிய மதத்திற்கு நன்மைபயக்கும் ஒரு விஷயம்.

வரலாற்றாசிரியர் பதாயுனி அக்பரின் படையில் ஒரு சாதாரண சிப்பாயாகப் பணிபுரிந்தவர். ராணா பிரதாப்புக்கு எதிராக நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போரில் பங்கேற்றவர். பதாயுனி சொல்கிறார், “நம்முடைய படையணியிலும் ராஜபுத்திரர்கள் இருக்கிறார்கள். நமக்கு எதிரிகளும் ராஜபுத்திரர்கள்தான். இவர்கள் இருவரையும் நான் எப்படிப் பிரித்துப் பார்ப்பது என நான் கமாண்டர் ஆஸப்கானிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஆஸப்கான், நீங்கள் நம்முடன் இருக்கும் ராஜபுத்திரனைக் கொன்றாலும் பாதகமில்லை. ஏனென்றால் இரண்டுபேர்களும் ஹிந்துக்கள்தான். அவர்களைக் கொல்வது இஸ்லாமிற்கு நன்மையாகத்தான் இருக்கும்”.

“ராணா பிரதாப்பின் பட்டத்து யானையை உடனடியாக தன்னிடம் அனுப்பி வைக்கக் கோருகிறார் அக்பர். பிரதாப் தனது பட்டத்து யானையை அனுப்பி வைக்க மறுத்துவிட்டதால் உடனடியாக அவர் மீது படையெடுத்துச் செல்லும்படி மான்சிங்கிடம் உத்தரவிட்டார் அக்பர். காஃபிர்களுக்கு எதிரான இந்தப் போர் என் இதயத்தைப் பெருமிதப்படுத்தியது. எனவே அக்பரிடம் சென்று காஃபிர்களுக்கு எதிரான இந்தப் புனிதப்போரில் (ஜிகாத்) என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். என்னுடைய தாடியை காஃபிர்களின் ரத்தத்தால் நிறம் மாற்றிக் கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் என அக்பரிடம் கூறினேன். பின்னர் குனிந்து அக்பரின் பாதத்தை முத்தமிட எத்தனிக்கையில் அக்பர் தனது கால்களை நகர்த்திக் கொண்டார். ஆனால் நான் வெளியே செல்ல எத்தனிக்கையில் என்னை மீண்டும் உள்ளே அழைத்த அக்பர் தன்னுடைய கை நிறைய பொற்காசுகளை அள்ளி என்னிடம் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்” என்கிறார் பதாயுனி.

ராணா பிரதாப் – அக்பர்

அக்பரைப் போலவே ராணாவும் ஒரு பிராந்தியத்தின் அரசர். அவருடைய பட்டத்து யானையை உடனடியாக தனக்கு அனுப்பி வைக்கும்படி சொல்வது ராணாவைச் சிறுமைப்படுத்தும் செயலே அன்றி வேறொன்றுமில்லை. ராணா அதற்குப் பணிந்து அவரின் யானையை அனுப்பி வைத்திருந்தாரென்றால் அக்பர் அத்துடன் நிறுத்தியிருக்க மாட்டார். உடனடியாக பெரும் கப்பத்தொகையைக் கேட்டனுப்பியிருப்பார். ராணாவின் குடும்பத்துப் பெண்களைத் தன்னுடைய அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டிருப்பார்.

ராணா அக்பரின் இஸ்லாமியப் படைகளை நொறுக்கித் தள்ளினார். அவரிடம் தோல்வியடைந்து பின்வாங்கி ஓடிய முஸ்லிம் படைத்தலைவர்கள் “வெற்றியடைவதற்குச் சிரமமான இடத்தில் தப்பியோடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என முகமது நபியே சொல்லியிருக்கிறார்” என்றார்கள் என்கிறார் பதாயுனி. ஆனால் அன்றைய தினம் மான்சிங்கினால் காப்பாற்றப்பட்டது. ராணாவுக்கு எதிராக வெறியுடன் போரிட்ட மான்சிங் இறுதியில் ராணாவின் பட்டத்து யானையைக் கைப்பற்றிப் பின்னர் அதனை அக்பரிடம் ஒப்படைக்கிறார். பெரிதும் மகிழ்ந்த அக்பர் அவருடைய கைகை நிறைய அஷ்ரஃபி (பொற்காசுகள்)யை அள்ளி மான்சிங்கின் கையில் கொடுக்கிறார்.

பதாயுனி சொல்வதின்படி, அக்பரின் படையிலிருந்த போர்வீரர்கள் எவருக்கும் முறையான போர்ப் பயிற்சிகளோ அல்லது உத்தரவுக்குக் கட்டுப்படும் கட்டுப்பாடுகளோ சொல்லித் தரப்படவில்லை. காஃபிர்களுக்கு எதிராக போர்புரிந்து அவர்களைக் கொல்வதால் அல்லாவின் சுவனத்தில் இடம்பிடிக்கும் ஆசையுள்ள அத்தனை முஸ்லிம்களும் ஹிந்துக்களுக்கு எதிரான படுகொலைகளைச் செய்வதற்கு சந்தோஷமாக ஒன்று கூடினார்கள். கையில் கிடைத்த கத்தியோ, ஈட்டியோ, அரிவாளோ அல்லது மரம் வெட்டும் கோடாலியோ என எந்த ஆயுதம் கையில் கிடைத்தாலும் அதனைத் தூக்கிக் கொண்டு போருக்குக் கிளம்பி வந்தார்கள்.

அக்பர் அடிப்படையில் ஒரு கொடூர மனோபாவம் உடையதொரு மனிதன். தக்காணத்தில் படையெடுத்துச் சென்ற அக்பரின் மகன் முராத் மிர்ஸா உடல் நிலை சரியில்லாமல் அங்கேயே இறந்து விட்டார். அவரது மகனின் மரணத்தின் துயரத்தை விடவும் தக்காணத்தைத் தாக்கியழித்து அதனைக் கைப்பற்றுவதனையே அக்பரின் மனம் நினைத்து ஏங்கிக் கொண்டிருந்ததாக ஃபரிஸ்டா எழுதுகிறார்.

அக்பரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பாதிரியார் மொன்செராட், “முகலாயச் சாலைகளின் எல்லாப் பக்கங்களிலும் முஸ்லிம் கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் நிரம்பியிருந்தார்கள். அவர்களின் கையில் சிக்கிய கிறிஸ்தவனும், ஹிந்துவும் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்” என்கிறார். அக்பரின் அரசவையில் இருந்த முக்கியஸ்தர்கள் அக்பருக்குத் தேவையான படைகளை அவர் கேட்கும் போதெல்லாம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள். அவ்வாறு படைகளை அனுப்ப மறுப்பவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். அவருடைய மனைவியும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இம்மாதிரியான சூழ் நிலையில் முகலாய அரசின் ஒவ்வொரு குடிமகனும் ராணுவத்தில் சேர நிர்பந்திக்கப்பட்டான்.

பாதிரி மொன்செராட்டே, “அக்பரின் படையில் 45,000 குதிரைப்படையினரும், 5000 யானைகளும், பல்லாயிரக்கணக்கான காலாட்படைகளும் இருந்தார்கள். அவர்களுக்கான சம்பளம் அக்பரால் நேரடியாக வழங்கப்பட்டது. இதைத் தவிர ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அவர்களின் கீழ் படையணிகளை வைத்திருந்தார்கள். அக்பர் கேட்கும்போதெல்லாம் அவர்கள் அந்தப்படைகளை அக்பருக்கு அனுப்பிவைக்கக் கடமைப்பட்டிருந்தார்கள்.”

பெரும்பாலான அக்பரின் படையணிகள் கொள்ளையடிப்பதில் மட்டுமே காலத்தை ஓட்டினார்கள். விவசாயிகளிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவரும் தானியங்கள் மிகக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்கப்பட்டன. பின்னர் அந்தப் பணத்தை படையணிகள் தங்களுடன் பங்கிட்டுக் கொண்டன என்கிறார் பாதிரி மொன்சராட்டே. போருக்குப் போகிற அக்பர் அந்தப் பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்களிடம் தானியத்தையும், பிற உணவுப் பொருட்களையும் கொண்டுவரச் சொல்லுவார். அவ்வாறு கொண்டு வந்த பொருட்களுக்கு மிகக் குறைந்த பணம் கொடுக்கப்பட்டும். அதனை ஏற்க மறுத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுவார்கள். அவர்களின் மனைவி, பிள்ளைகள் அடிமைகளாக்கப்படுவார்கள் என்பதால் யாரும் அக்பரை எதிர்க்கத் துணியவில்லை.

அக்பர் மட்டுமில்லை. அவருக்கு முன்னும், பின்னும் வந்த அத்தனை இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களும் இதுபோன்றதொரு கொடூரச் செயல்களைத் தயக்கமில்லாமல் செய்திருப்பதினைக் காணலாம். ஒரு ஹிந்து அரசன் பிற நாட்டின் மீது படையெடுக்கையில் அங்கிருக்கும் அப்பாவிப் பொதுமக்களை ஒன்று செய்யமாட்டான். இரண்டு எதிரிப் படைகளும் நேருக்கு நேராக போர்க்களத்தில் போரிடும். ஆனால் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. படையெடுத்துச் செல்லும் வழியில் இருக்கிற அப்பாவிகளின் வீடுகளும், வயல்களும் தீயிட்டுக் கொளுத்தப்படும். வழியில் இருக்கிற ஹிந்து ஆலயங்களை ஆக்கிரமித்து அங்கிருக்கும் சிலைகளை உடைப்பார்கள்.

கைப்பற்றப்படும் மொத்த நகரமும் முஸ்லிம் படைகளுக்குச் சேவை செய்யப் பணிக்கப்படும். மறுப்பவனுக்கு உயிர் உத்திரவாதமில்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள், மதமாற்றம் செய்யப்படுவார்கள். புதிதாக மதம் மாறியவன் இஸ்லாமியப்படைகளுடன் சேர்ந்து கொண்டு அதே கொடுமைகளைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பான். முஸ்லிம் படையணிகள் பல்லாயிரக்கணக்கில் பல்கிப் பெருக ஆரம்பிக்கும். அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் கொள்ளையடித்துக் கொள்ள அனுமதியளிக்கப்படும்.

அதே சமயம் கோட்டை வாயிலை அடைத்துக் கொண்டு எதிரிகளை எதிர் நோக்கி நிற்கும் ஹிந்துப் படைவீரனுக்கு எந்த உதவியும் கிட்டாது. அங்கிருந்து பார்க்கையில் அவனுடைய குடும்பமும், குழந்தைகளும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு போகப்படுவதனையும், அவனது வீடும்,வயலும் தீ வைத்துக் கொளுத்தப்படுவதனையும், ஆலயங்கள் இடிக்கப்பட்டு மசூதிகளாக மாற்றப்படுவதனையும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டு நிற்பதனைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. இப்படியாக அவன் எதிரியுடன் போரிடுவதற்கு முன்பே அவன் போரிடுவதற்குத் தேவையான காரணங்கள் அனைத்து அழிந்து போயிருக்கும். பதுங்கு குழிகளில் பசியுடனும், பட்டினியுடனும் போராடிக் கொண்டிருக்கும் அவன் சரணடைவதனைத் தவிர வேறு வழியில்லை.

இது போன்ற கொடூரமான வழிமுறைகளே இந்தியாவில் இஸ்லாமிய ஆக்ரமிப்பாளர்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கின்றன. இந்திய வரலாற்றைப் படிக்கிற ஒவ்வொருவனும், இந்தியாவில் அன்றைக்கு இருந்த வீரம் நிறைந்த ஹிந்து அரசர்கள் எவ்வாறு இந்தக் காட்டுமிராண்டிகளிடம் தோல்வியடைந்தார்கள் என்கிற கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொள்வான். ஹிந்து அரசர்கள் தேவையற்ற உயிர்க்கொலைகளைத் தவிர்த்து மரபு சார்ந்து போரிட்டுத் தோற்றுப் போனார்கள். சிறிதும் ஈவு இரக்கமின்றி மதவெறியுடன் கொடூரக் கொலைகள் செய்பவர்களை எதிர்த்து அவர்களால் ஒன்றுமே செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

முஸ்லிம்களைப் போலவே ஹிந்துக்களும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற கொள்கையுடன் போரிட்டிருந்தால், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட தங்களின் சகோதரரகளை மீண்டும் ஹிந்து மதத்திற்கு அனுமதித்திருந்தால் அக்பர் போன்றவர்களால் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பேரழிவு ஓரளவு தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஹிந்துக்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பழமைவாதத்தில் தோய்ந்த ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட தங்களின் சகோதரர்களை ஒதுக்கி வைத்தார்கள். அவ்வாறு ஒதுக்கப்பட்டவன் கோபத்துடன் முஸ்லிம் படையணிகளில் சேர்ந்து கொண்டு ஹிந்துக்களைக் கொன்று குவித்தான்.

இருப்பினும், இந்த அத்தனை காரணங்களையும் மீறி ஹிந்துக்களின் போராடும் குணம் மறைந்துவிடவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் உலகில் வேறெந்த நாட்டிலும் நிகழவில்லை. இஸ்லாம் சென்ற ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேஷியாவரைக்கும் இஸ்லாமிய வாள்முனைக்கு அஞ்சி மதமாற்றங்கள் நிகழ்ந்தன. இன்றைக்கு அந்த நாடுகளெல்லாம் முழுமையான இஸ்லாமிய நாடுகள். ஆனால் ஹிந்து மதம் இன்றுவரை அழியவில்லை. மாறாக செழித்து வளர்ந்தே இருக்கிறது. ராஜபுத்திரர்களும், மராத்தாக்களும், சீக்கியர்களும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தீரத்துடன் போராடியே வந்திருக்கிறார்கள்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *