‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பர் 22,23,24 மூன்று நாட்களும் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு நடைபெற்றது.

இந்தியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் வரலாற்றையும் குறித்து கல்விப் புலங்களிலும் ஆய்வாளர்களிடையிலும்  பரவியுள்ள  திரிபுகளையும், உள்நோக்கங்களும் வெறுப்புகளும் முன்முடிவுகளும்  கொண்ட கருத்தாக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்துவதும், உண்மையான கருத்தாக்கங்களை வெளிக்கொணர்வதும் இந்த மாநாட்டுத் தொடரின் நோக்கம். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் கடந்த வருடங்களில் நிகழ்ந்துள்ளன. 2017ம் ஆண்டின் மாநாடு, ‘தமிழ்நாடு – தர்மத்தின் நிலம்’ (Tamil Nadu – Land of Dharma) என்பதை மையக் கருத்தாகக் கொண்டு நடைபெற்றது. சமகால இந்து அறிவியக்கத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரும், காத்திரமான நூல்களின் ஆசிரியருமான ராஜீவ் மல்ஹோத்ரா தலைமையில் செயல்படும் Infinity Foundation என்ற அமைப்பு இத்தகைய ஆய்வரங்குகளையும் மாநாடுகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த மாநாட்டில் அறிஞர்களின் உரைகளும் கருத்தரங்குகளும் இடம் பெற்றன. ஆய்வுக் கட்டுரைகள் வாசித்து விவாதிக்கப் பட்டன. இதன் ஒரு பகுதியாக,  22-டிசம்பர் மாலை ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு‘ (Dravidian Hinduphobia) என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங்கம் நிகழ்ந்தது.

இந்தக் கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் (சமூகப் பணித் துறை தலைவர், மிசோரம் பல்கலைக் கழகம்) தலைமை தாங்கினார்.   ஈ.வெ.ராவின்  சமூக அழிப்புக் கொள்கைகளை,  குறிப்பாக பிராமண, தலித் வெறுப்பு பிராசரங்களைக் குறித்து ம.வெங்கடேசன் (எழுத்தாளர், செயலர் – தமிழ்நாடு பா.ஜ.க தாழ்த்தப்  பட்டோர் அணி) உரையாற்றினார்.  தமிழ் ஊடகங்களில் இந்துமத எதிர்ப்பு மனநிலை எவ்வளவு ஆழமாக ஊருவியுள்ளது என்பதைக் குறித்துப் பல ஆதாரங்களை முன்வைத்து  பத்திரிகையாளர் பத்மன் பேசினார்.   தமிழின் மகத்தான் இலக்கியச் செழுமையைக் குறிப்பிட்டு,  எப்படி அந்த இலக்கியச் செல்வங்கள் திராவிட இயக்க அரைவேக்காடுகளாலும் வெறுப்புணர்வாளர்களாலும் திரிக்கப் பட்டு, அவற்றில் உள்ள இந்துத் தன்மை  திட்டமிட்டு இருட்டடிக்கவும் மறைக்கவும் பட்டது (Dehinduization of Tamil Literature) என்பது குறித்து ஜடாயு (சிந்தனையாளர், இலக்கிய ஆர்வலர்)  உரையாற்றினார்.  தேவப்ரியா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் எழுதிவரும் ஏ.வி.கோபாலகிருஷ்ணன், கிறிஸ்தவ மிஷநரிகள் எவ்வாறு திருக்குறளையும் திருவள்ளுவரையும் மற்ற தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் திரித்து பிரசாரம் செய்து, திராவிட இயக்க இந்து எதிர்ப்புணர்வுக்கு உறுதுணையாக செயல்பட்டனர் என்பதைக் குறித்துப் பேசினார்.  இந்த உரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து அமைந்திருந்தன.  பிறகு பார்வையாளர்களுடனான கேள்வி பதில் பகுதியில் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு பேச்சாளர்கள் சிறப்பாகவும்  நேர்த்தியாகவும் விடையளித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் முழுமையான வீடியோ பதிவை இங்கே காணலாம்.

8 Replies to “‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ”

  1. Excelet speaches by all the patcipents. Hats off to all. First time I am hearing Mr.jatayu’s English speach and it is really superb.

  2. வரவேற்கத்தக்க நல்லதொரு முயற்சி.பல இடங்களிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படல் வேண்டும்.முக்கியமாக மாணவர்களிடையேயும் கிராமப்புறங்களிலும் நடத்தல் வேண்டும்.தொடர்ந்து செய்யப்படல் அத்தியாவசியமானது.ஓர் இயக்கமாக இயங்கவேண்டும்.

    இங்கே இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்பிகின்றேன். சந்தையூர் எனும் இடத்தில் வாழும் மக்கள் சாதி ஒடுக்குமுறையினால் முஸ்லிம்களாக மாற உள்ளனர்.இம் மக்களுக்கான உதவிகளைச் செய்து சாதி ஒடுக்குமுறையை தகர்த்து அவர்களை இந்துக்களாகவே வாழ உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளும் ஓர் அங்கமாக இவர்களால் பெசப்படுத்தலும் நடைமுறைப் படுத்தலும் இருத்தல் வேண்டும்.செய்வார்களென நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.

  3. ஈவேரா பிறாமணா்களின் சாதி உணா்வை தீண்டாமையை எதிா்த்தாா் என்று வைத்துக் கொள்ளலாம். தீண்டாமைக் கொடுமை பஞ்சாயத்து அளவில் கிட்டதட்ட அனைத்து சாதி மக்களாலும் ஒரளவிற்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.இராமநாதபுரம் மாவட்டத்தில் கோவை மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை செய்பவர்கள் பிறாமணா்கள் அல்ல.
    ஈவேரா என்று பிற சாதிகள் மத்தியில் இருந்த தீண்டாமையை எதிா்க்கவில்லை.
    அன்று வெள்ளாளர்கள் கவுண்டா்கள் நாயுடு நாயக்கர்கள் முதலியாா் செட்டியாா் போன்ற சாதியினர்களுக்கு பொருளாதாரம் வேலைவாய்ப்பு உயா் பதவிகள் பெறுவதில் முக்கிய போட்டியாளர்களாக இருந்தார்கள்.எனவே ஈவேரா பிறாமணர்களை எதிர்த்தாா். ஆனால் வெள்ளாளா் செட்டியாா் முதலியாா் முஸ்லீம்கள் மறவா் போன்ற சாதியினா் செய்த தீண்டாமையை எதிர்க்கவில்லை.இன்றும் அது வீரியம் குறைந்துள்ளது. ஆனால் சரியாக வைத்தியம் செய்யப்படவில்லை.
    முஸ்லீம்கள் மற்றவா்களை காபீர் என்று இழிவு செய்து வருகின்றார்கள். எவனுக்கும் கேள்வி கேட்க தைரியம் இல்லை.

  4. ஈவேரா விற்கு பதிலாக

    ஸ்ரீநாராயணகுரு வை

    தமிழ்நாடு பின்பற்றிஇருக்குமானால் தமிழகத்தில் சமூக அற்புதம் நிகழ்ந்திருக்கும்.இந்து(ய)கலாச்சாரம் இந்து சமூகத்தின் அனைத்து பிரிவிற்கும் முறையாக கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும்..தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கும்.பொது வாழ்வில் ஒழுக்கம் மேம்பட்டிருக்கும். சாராயக்கடைகளில் விற்பனை வெகுவாக குறைந்திருக்கம். தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மேன்மை அடைந்திருக்பார்கள்.

  5. நான் பிறந்த நாடாா் சமூகத்தில் கூட சாணாா் கிராமணி நாடாா் என்ற உட்பிரிவுகள் உள்ளது.நாடாா் கள் வாழும் துத்துக்குடி மாவட்டத்தில் நிலஉடைமை நாடாா்கள் பனைஏறம் நாடாா்களை மதிக்க மாட்டாா்கள். தீண்டாமை செய்தாா்கள்.எனவேதான் பனை ஏறும் நாடாா்கள் இந்த தலைமுறையோடு பனை ஏறமாட்டேன் என்ற சுயசத்தியம் செய்து தங்களது குழந்தைகளை வேறு தொழிலுக்கு அனுப்பி வைத்தார்கள். இன்று பனை தொழில் செய்ய ஆள் இல்லை.பிறசாதியில் உள்ள ஏழைகள் கூட பனைஏற முன்வருவதில்லை.ஆக கோடி எண்ணி்க்கையில் உள்ள பனைமரங்கள் பயன்படுத்த நாதியிற்ற உள்ளது.ஒரு பக்கம் வேலையில்லை திண்டாட்டம்.காரணம் பனைஏறும் மக்களை இழிவாக நடத்தியதுதான்.

  6. வாழ்த்துக்கள். நல்ல உரையாடல். முழுதும் கேட்டேன். கேள்வி பதில் நேரத்தை இன்னமும் கொஞ்சம் அதிகரித்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *