அக்பர் என்னும் கயவன் – 17

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பர் அவரது ஆட்சிக்காலத்தில் நிரந்தரமாகக் கட்டமைக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகளை நடைமுறைப்படுத்தியிருந்தார் என்று சொல்வதனைப் போன்ற பொய் வேறொன்றுமில்லை. அக்பரின் காலத்தில் மட்டுமல்ல. அவருக்கு முன்னர் இருந்த அத்தனை முகலாய ஆக்கிரமிப்பாளர்களிடையேயும் அதுபோன்றதொரு முறையான வரிவிதிப்பு முறைகள் இருந்ததேயில்லை. அப்படியே இருந்ததாக நாம் ஏற்றுக் கொண்டாலும் அது அத்தனையும் அரசின் பல பகுதிகளில் கொடுமையான முறையில் வரி வசூலிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்த அக்பரின் அலுவலகர்களின் கொடூர நடவடிக்கைகளினால் காணாமல் போய்விட்டன. தனக்கு அளிக்கப்பட்ட பிராந்தியத்தில் வரி வசூலிக்கும் அதிகாரமுடையவனின் அப்போதைய மனோபாவத்திற்கு ஏற்ப வரிகள் கூடும் அல்லது குறையும். அதனைக் கொடுக்க மறுத்தவர்கள் கொடுமையாக சித்தரவதை செய்து கொல்லப்பட்டார்கள் என்பதே நாம் மீண்டும் மீண்டும் காண்பது.

இந்தக் கொடுமையான வரி வசூலிப்பு முறைகளிலிருந்து முஸ்லிம்களுக்குச் சிறிதளவேனும் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் முஸ்லிம்கள் கூட்டாகச் சேர்ந்து தங்களுக்குள் பணம் வசூலித்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் அல்லது முல்லாக்களிடம் முறையிட்டு அவர்கள் மூலமாக அழுத்தம் கொடுத்தும் தங்களின் வரிச்சுமையைக் குறைத்துக் கொண்டார்கள். எனினும் அந்தச் சுமை பரிதாபகரமான ஹிந்துக்கள் மீது சுமத்தப்பட்டு அந்த நஷ்டத்தை ஈடுகட்ட நிர்பந்திக்கப்பட்டார்கள். ஹிந்துக்களும் இலஞ்சம் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் அம்மாதிரியாக நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக, மிகக் குறைவானதே. கையூட்டு கொடுக்கையில் பிடிபட்டால் ஹிந்துவின் மானம், மரியாதையும், அவனது சொத்துக்களும், நிலமும் அதனுடன் அவனது மனைவி, மகள்களும் ஏதாவது ஒரு முஸ்லிம் அலுவலனின் அந்தப்புரத்தை அலங்கரிக்க வேண்டியிருக்கும்.

அக்பரின் எங்காவது படையெடுத்துச் சென்று கொண்டிருக்கையில் செல்லும் பகுதிகளில் உள்ளவர்களை மிரட்டிப் பணம் பறிப்பது என்பது நேரமெடுக்கும் செயல் என்பதால் மொத்த ராணுவமும் அந்தப் பகுதியைக் கொள்ளையடித்து மொட்டையாக்கும். அக்பர் அவ்வப்போது ஏதாவது காரணம் காட்டி புதிய வரிகளைத் தனது குடிமக்கள் மீது திணித்துக் கொண்டே இருந்தார். உதாரணத்திற்கு ஆக்ரா கோட்டையை பழுதுபார்ப்பதற்காக என்று அக்பர் விரித்த வரிகள். இப்படியாக தங்களைக் கொள்ளையடித்து, தங்களின் பெண்களைக் கவர்ந்து சென்று பாலியல் அடிமைகளாக்கிய, தங்களது வழிபடும் இடங்களை நாசம் செய்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஹிந்துக்கள் தொடர்ந்து சேவை செய்ய ஆணையிடப்பட்டார்கள். மறுத்தவன் உடனடியாகப் பிடிக்கப்பட்டு அடிமைச் சந்தையில் அடிமையாக விற்கப்படுவான் என்பதே தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது.

அக்பர்நாமா நூலை அக்பரிடம் சமர்ப்பிக்கும் அபுல் பசல்

இதன் பின்னனியிலேயே அக்பரின் வரி வசூலிப்புமுறை ஆரயப்பட வேண்டும். முதலில், ஹிந்துக்களால் வெறுக்கப்பட்ட ஜிஸியாவைப் பார்ப்போம். எட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளி வாழ்கின்ற ஹிந்துக்களின் மீது ஜிஸியா வரியை விதித்தார்கள். ஜிஸியாவினா ஹிந்துக்கள் பெரும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் உள்ளானார்கள். ஜிஸியா வரி என்பது குரானில் முகமது நபியால் சொல்லப்பட்டதொரு வரி. அதன்படி, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதி இஸ்லாமிய நாடாகிறது. அந்த நாட்டில் வாழும் காஃபிர்கள் அவர்களின் பாதுகாப்புக்கென ஜிஸியா வரியைச் செலுத்தியே ஆகவேண்டும். அவ்வாறு செலுத்த மறுக்கும் காஃபிர்களைக் கொலை செய்ய அந்த முஸ்லிம் ஆட்சியாளக்கு அதிகாரம் வழங்குகிறது குரான்.

ஆனால் உண்மையில் “ஜிஸியா” வழங்கும் பாதுகாப்பு ஒரு பொய்த்தோற்றமே. ஜிஸியா வரியைச் செலுத்திய பிறகும் ஹிந்துக்கள் தொடர்ந்து அவமானங்களுக்கும், படுகொலைகளுக்கும், கொள்ளையடிப்புகளுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள். ஹிந்துக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு, அவர்களின் மனைகளும், பிள்ளைகளும் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இத்தனை கொடூரங்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் பிழைத்துக் கிடப்பதற்காக மட்டுமே ஜிஸியா வசூலிக்கப்பட்டது.

ஜிஸியாவைக் குறித்து எழுதும் அக்பரின் வரலாற்றாசிரியர்களான பதாயுனி மற்றும் அபுல் ஃபசல் இருவருமே அக்பர் ஹிந்துக்களின் மீதான கருணையுடன் ஜிஸியாவை நீக்கிவிட்டதாகப் பொய்யாக எழுதி வைத்திருக்கிறார்கள். அக்பரின் காலத்தில் (பதாயுனி, அபுல் ஃபசல் காலமும் கூட) இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பிய பயணிகள் அக்பர் ஹிந்துக்கள் மீதான ஜிஸியா வரியைத் தொடர்ந்து கொடூரமான முறையில் வசூலித்துக் கொண்டிருந்ததாக விளக்கமாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ராந்தம்போரை ஆண்ட ஹிந்து அரசரான ராய் சுர்ஜான் அக்பரை நேரில் சந்தித்து தன்னுடைய பிராந்தியங்களில் ஜிஸியா வரி வசூலிப்பதனை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது அக்பரின் வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அக்பர் ஜிஸியாவை நீக்கியிருந்தால் ராய் சுர்ஜான் எதற்காக மீண்டும் அந்த வேண்டுகோளை அக்பரின் முன் வைக்க வேண்டும்?

அக்பரின் அரசவையில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த ஜைன முனியான ஹிர்விஜய சூரி (ஜூன் 7, 1583 முதல்), “குஜராத் மற்றும் கத்தியவாரைச் சேர்ந்த ஹிந்துக்களும், ஜைனர்களும் இனி ஜிஸியா வரியைச் செலுத்தத் தேவையில்லை என அக்பர் உத்தரவிட்டு அதனை உறுதிப்படுத்தினார்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அக்பரின் அரசவைக்கு 1587-ஆம் வருடம் வந்த இன்னொரு ஜைன முனியான ஷாந்தியிடம் அக்பர் ஹிந்துக்கள், ஜைனர்கள் மீதான ஜிஸியாவை நீக்கவும், விலங்குகளைக் கொல்லத் தடை செய்வதாகவும் ஒரு உத்தரவைப் பிறப்பித்ததாகச் சொல்கிறார்.

இதனை சிறிது ஆராய்ந்தாலேயே இதில் இருக்கும் பொய்மையை எளிதாகக் கண்டடையலாம். ஏற்கனவே ஜிஸியாவை நீக்க உத்தரவிட்ட அக்பர், மீண்டும் ஒருமுறை ஜிஸியாவை நீக்குவதாகச் சொல்லக் காரணம் என்னவாக இருக்க முடியும்? உண்மையில் அக்பர் ஜிஸியாவை நீக்கவேயில்லை. அதாகப்பட்டது அதனைச் செய்வதற்கு அவருக்கு விருப்பமில்லை. அக்பர் ஜைன முனிகளிடம் புளுகியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாமிய சட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்கிற காஃபிர் அந்த நாட்டுக் குடிமகனாக அங்கீகரிக்கப்பட மாட்டான். அவ்வாறு இருக்கிற காஃபிர்களை அவமானங்களுடன் மட்டுமே வாழ இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே காஃபிர்களுக்கு எதிரான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் அந்தப் பகுதியில் வாழும் முல்லாவே தீர்மானிப்பான். இஸ்லாமியச் சட்டம் அந்த முல்லாவின் மூலமாகவே அங்கு வாழும் ஹிந்து காஃபிர்கள் மீது செயல்படுத்தப்படும் என்பதால் ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளையும், ஆலயங்கள் நிர்மாணிப்பதனையும், ஏன் இடிந்த பழையதொரு ஆலயத்தையும் மீண்டும் கட்டிக் கொள்வதற்கான அனுமதியும் கூட மறுக்கப்படும் என்பதே வரலாறு.

உண்மையில் அக்பருக்கு ஹிந்துக்களின் மீதான கரிசனம் எதுவும் இருந்ததில்லை. தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைக்கும் சாதாரண ஹிந்துவையும் அக்பர் விட்டு வைக்கவில்லை. அவ்வாறு திருமணமாகவிருக்கும் பெண்ணை அவளுடைய தகப்பன் முகலாய காவல் அதிகாரியிடம் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கட்டாயப்பட்டுத்தப்பட்டார்கள். பின்னர் அவர்களிடமிருந்து முடிந்த அளவிற்குப் பணம் கறக்கப்பட்டது. ஒருவகையில் இது அக்பரின் திருமண வரியாகும். அவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி அக்பருக்குச் சென்றது. அந்தப் பெண் அழகானவளாக இருந்தால் அவள் கவர்ந்து செல்லப்பட்டு அக்பருக்கும் அவரது சகாக்களுக்கும் விருந்தாக்கப்பட்டாள். பின்னர் அந்தப் பெண் விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டு தில்லித் தெருக்களில் திரியவிடப்பட்டாள்.

எனவே அக்பரின் வரி வசூலிப்பு முறைகளைக் குறித்து நமக்குப் பாடமெடுக்கிற இந்திய வரலாற்றாசிரியர்கள் நமக்குப் பொய்களையும், புனைகதைகளையும் நம்மிடம் திணிக்கிறார்கள். ஜிஸியா, திருமண வரி, புனிதப்பயண வரி, நீதி மன்ற வரி, பிறந்த நாளுக்கு எடைக்கு எடை தங்கம் வரி, வரி கொடுக்காதவனின் மொத்த சொத்தையும் அபகரிப்பது, அதுவுமில்லாவிட்டால் கொள்ளையடிப்பது என வித,விதமான முறைகளில் எந்தத் திட்டமும், வரைமுறையும், கோட்பாடுமின்றி அக்பரின் வரி வசூலிப்புகள் கோலாகலாமாக நடந்து கொண்டிருந்தன.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *