காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்

கிடைத்ததடா சாக்கு என்று அனைத்து ஹிந்துவிரோதிகளும் , தேச விரோதிகளும் காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் பாஜகவையும் , பிரதமர் மோடி அவர்களையும் பாய்ந்து குதறுவது புரிந்துகொள்ள‌க்கூடியதுதான்… ஆனால் சில ஹிந்துத்வர்களூம் , தேசியவாதிகளும் கூட என்ன இருந்தாலும் பாஜக இப்படி செய்திருக்கக்கூடாது , காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கவேண்டும்… தேசியம் பேசும் பாஜகவிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் எழுதுவதைப்பார்க்கும்போது ஆற்றாமையாக இருக்கிறது… இவர்களுக்கே விளங்கவில்லையே , தீராவிட விஷத்தில் மூழ்கிக்கிடக்கும் சராசரி தமிழனுக்கு எப்படிப்புரிய வைப்பது என்று மலைப்பாக இருக்கிறது….

முதலாவதாக , ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு…. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம்… உச்சநீதிமன்றம் ஆறுவாரகாலத்தில் ஒரு செயல்திட்டத்தை [ ஸ்கீம் ] உருவாக்கச்சொன்னது.அவ்வளவுதான்…. இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு … எல்லா விஷயத்திலும் சொதப்பும் தமிழக பாஜக இதில் மட்டும் தெளிவாக செயல்படவேண்டும் என்று எதிர்பாரப்பதில் எந்த நியாயமும் இல்லை…அவர்கள் வைத்து்க்கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்…?

செயல்திட்டம் எதற்காகவென்றால் , மேற்படி வாரியம் அமைப்பதில் உள்ள அரசியல்சட்ட முரண்களை , குழப்பங்களை தெளிவு படுத்தி முழுமையான ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான்….காரணம் , அரசியல்சட்ட ரீதியாகவே மாநிலங்களில் உள்ள அணைகளின் கட்டுப்பாடு அந்தந்த மாநில அரசுகளிடம்தான் உள்ளது… மாநில அரசிடமும் இல்லாமல் , மத்திய அரசிடமும் இல்லாமல் ஒரு தனி அமைப்பிடம் அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் ஒப்படைக்கப்படவேண்டுமென்றால் , அது ஒற்றை அரசு ஆணையில் அல்லது நீதிமன்றத்தீர்ப்பில் சாத்தியமே இல்லை…

இது அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து , அதன்பின் செய்யப்படவேண்டிய விஷயம்….. அதற்கு பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்… இதெல்லாம் ஆறுவார கால அவகாசத்தில் சாத்தியமா? அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும் …

அணைகளின் கட்டுப்பாட்டை ஆணையத்திடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் தயாராக இல்லை…கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் போன்ற மாநிலங்களை விடுங்கள்… தமிழகமே அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை…காரணம் , அணைகள் வாரியத்திடம் சென்றால் அணைகளில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கு மட்டுமே விநியோகிக்கப்படும்… இருக்கும் ஏரி , குளங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு ,குடிநீர் தேவைக்காக பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்கு குழாய் மூலம் நீர் எடுத்துச்செல்லும் வேலையெல்லாம் நடக்காது…மேலும் அணையை திறந்துவிட மாண்புமிகு முதலமைச்சர் தாயுள்ளத்துடன் உத்தரவிட்டார் என்று செய்தி வெளியிட்டு புளகாங்கிதப்பட்டுக்கொள்ளவும் முடியாது…

இன்னொரு முக்கியமான விஷயம் , அணைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு…இந்த இரு விஷயங்களும் இன்றுவரை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே உள்ளன… வாரியம் அமைந்தால் , இத்தனை மாநிலங்களிலும் உள்ள அணைகளையும் பராமரித்து , பாதுகாப்பது யார் ? ஆணையமா ? எனில் அதற்கான ஆள் பலம் ஆணையத்திடம் உள்ளதா? சரி …பராமரிப்பையும் பாதுகாப்பையும் நீங்களே பார்த்துக்க்கொள்ளுங்கள் என்று மாநிலங்களிடம் விட்டுவிட்டால் , பராமரிக்க நாங்கள் …. தண்ணீரைத்திறந்துவிட மட்டும் ஆணையமா என்ற கேள்வி எழாதா? பற்றாக்குறைக்காலத்தில் நீரை எந்த அடிப்படையில் பகிர்ந்துகொள்வது? [ உ.ச்சநீதிமன்றத்தீர்ப்பில் இதற்கு எந்த விளக்கமும் இல்லை..]

இத்தனை கேள்விகள் , குழப்பங்கள் உள்ளன…இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் , யூனியன் பிரதேசமும் [ புதுச்சேரி ] உட்கார்ந்து , பேசி தீர்வு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்..அதற்காகத்தான் மத்திய அரசு சம்பந்தப்பட மாநிலங்களின் கூட்டத்தைக்கூட்டி அவரவருக்கான பிரதிநிதிகளை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டது… தமிழகம் இந்த நிமிடம் வரை தன் பிரதிநிதி யார் என்று தெரிவிக்கவில்லை… சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம்தான் தெளிவுபடுத்தவேண்டும் ..அதற்காகத்தான் நாளை மத்திய அரசு மணுதாக்கல் செய்யவுள்ளது…

கடைசியாக , இந்த விஷயத்தில் பாஜக அரசியலே செய்யவில்லையா என்று கேட்கலாம்… நிச்சயமாக அரசியல்தான் செய்கிறது…..யார்தான் அரசியல் செய்யவில்லை? ஏன் உச்சநீதிமன்றம் அரசியல் செய்யவில்லையா? ராமர்ஜென்மபூமி வழக்கு பல பத்தாண்டுகளாக இழுத்தடித்துக்கொண்டு கிடக்கிறது…ஜெயலலிதா , லாலு போன்றோர் மீதான ஊழல் வழக்குகள் இருபது வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டன.. ஆனால் , காவிரி வழக்கில் மட்டும் உச்சநீதிம‌ன்றம்கர்நாடகாவில் தேர்தல் வர ஓரிரு மாதங்கள் இருக்கும் நிலையில் தீர்ப்பளிக்கிறது…அதுவும் எப்படி? ஆறே வாரங்களில் தீர்வு காண வேண்டுமாம்… அறுபதாண்டுகால தாவாவை , ஆறே வாரத்தில் பாஜக அரசு தீர்த்து வைக்கவேண்டும் ..இல்லாவிட்டால் மோடி குற்றவாளி … நல்லா இருக்கு சார் நியாயம்…கொலீஜியம் என்ற அநீதியான நடைமுறையை மாற்றி , நீதிபதிகள் நியமன மசோதா கொண்டுவந்த பாஜக அரசை , கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் தர்மசங்கடத்தில் தள்ளத்தான் நீதிமன்றங்கள் முயற்சிக்கின்றன…

எத்தனை அணை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு ஆட்சேபனையில்லை..என்று சட்டமன்றத்திலேயே பேசி டெல்டா விவசாயத்தை படுகுழியில் தள்ளிய கருணாநிதி மீது தவறில்லை…. சரி நீதிமன்றத்துக்காவது சென்று தடுப்போம் என்று முயற்சி செய்து வழக்குத்தொடர்ந்த விவசாயிகளின் வழக்கை கர்நாடகத்தின் நலத்துக்காக தமிழக அரசை மிரட்டி வாபஸ்பெற வைத்த இந்திரா மீது குற்றமில்லை…தன் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக மேற்படி வழக்கை வாபஸ் பெற்ற கருணாநிதி மீது எந்தக்குற்றமும் இல்லை..இதோ , இந்த நிமிடம் வரை காவிரி நதிநீர்ஆணையத்தை அமைக்க விடமாட்டோம் என்று கொக்கரிக்கும் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை… அதை கண்டும் காணாமல் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கும் ராகுல் – சோனியா மீது குற்றம் இல்லை…மோடி மட்டும்தான் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார் என்று எவனாவது கிறுக்கன் பிரச்சாரம் செய்தால் அதை நம்பும் அளவுக்கு நாம் மடையர்களா?

இவ்வளவு ஏன் ? இரண்டு தினங்களுக்கு முன் , ஒரு டி.வி விவாதத்தில் காவிரிப்பிரச்சினைக்காக நாற்பது வருடங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தில் போராடிவரும் காவிரி விவசாயிகள் பாதுக்காப்புச்சங்கத்தின் திரு. ரங்கநாதன் அவர்கள் தெளிவாகச்சொன்னார்… காவிரிப்பிரச்சினை நல்லை தீர்வை நெருங்கிக்கொண்டிருக்கிறது… மிக விரைவில் நதிநீர் வாரியம் அமையும்… தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும்…ஆனால் , ஆறு வார காலத்திற்குள்ளாக ஆணையம் அமைத்தே தீரவேண்டும் என்று மத்திய அரசை நிர்பந்திப்பது நியாயமே இல்லை…அது சாத்தியமும் இல்லை என்றார்… அவரைவிட இந்த சோ கால்ட் போராளிகள் சொல்வதுதான் உங்களுக்கு நியாயமாக தெரிகிறதா?

காவிரி நதிநீர் ஆணையம் மட்டுமல்ல… கோதாவரி நதிநீரை தென்பெண்ணையாறு வழியாக தமிழகத்துக்கு திருப்புதல் , தேசிய நதிநீர் இணைப்பு போன்ற மாபெரும் திட்டங்கள் மூலமாக தமிழகத்தின் நதிநீர்ப்பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும் திறமையும் , தகுதியும் தேசிய உணர்வுகொண்ட பாஜகவுக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு மட்டுமே உண்டு நான் இன்னும் நம்புகிறேன்….

உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் தமிழகத்தில் ஸ்டாலினுக்கும் , மத்தியில் காங்கிரசுக்கும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுங்கள்…கர்நாடகத்தில் சித்தராமையா மீண்டும் ஆட்சிக்கும் வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்…அப்புறம் பாருங்கள் தமிழகத்தில் காவிரி கரைபுரண்டு ஓடிவந்து , கடலில் கலக்கும்…

குறையொன்றுமில்லை..

(சி.சரவணக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

5 Replies to “காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்”

  1. இந்த உச்ச நீதி மன்றத் தீர்ப்பிலும் இத்தனை சுளிவுகளா? அதன் பின்னரும் இத்தனை குழப்பங்களா? இங்குதான் முழு விளக்கமும் கிடைக்கிறது. நன்றி.
    ஆனால் ஒரு விஷயம். தமிழக பா.ஜ கவை விடுங்கள். மத்திய அரசாவது உண்மை நிலையை விளக்கி இதுவரை ஏதாவது சொல்லியிருக்கிறதா? ஏதாவது அறிக்கை வெளியிட்டிருக்கிறதா? மந்திரி/அதிகாரி எவராவது எங்காவது விளக்கம் அளித்திருக்கிறார்களா? சாப்பிட்டுத் தூங்கத்தான் சம்பளம் வாங்குகிறார்களா?
    60 ஆண்டு பிரச்சினையை 6 வாரத்தில் தீர்க்கமுடியாது என்பது சரியே. ஆனால் இதைப் புரிந்துகொள்ள மோடி அரசுக்கு 6 வார காலம் போதவில்லையா? அதை 6 வாரத்திற்குள் மக்களுக்கு விளக்கிச் சொல்லக்கூட இயலவில்லையா? தமிழ் மீடியாவில் தவறான புரிதலுடன் செய்திகள் வந்தால் அதை மறுத்து உண்மையைச் சொல்ல மத்திய அரசிற்கு வக்கில்லையா? சொரணைகூட இல்லையா? இது மமதையா அல்லது மடத்தனமா? ஒவ்வொரு விஷயத்திலும் மோடியின் அணுகுமுறை இதுதான். He does not communicate. I feel Modi is a jerk. His govt already looks like a junky jalopy..
    இந்தக் கட்டுரையைப் படித்தபிறகு ஒரு விஷயம் நன்கு விளங்குகிறது.6 வாரம் என்ன, இன்னும் 3 மாதம் என்ன, இன்னும் 6 வருஷமே தான் ஆனாலும் என்ன, இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை! அரசியல் வாதிகளுடன் நீதித்துறையும் சேர்ந்து குழப்புகிறது! One more judgement, one more twist, one more turn, one more complication!

  2. I have to explain one point. Not only on this Cauvery issue, on every issue Modi govt is seen in poor light because no one cares to explain. Modi govt lacks effective communication on important issues.
    When this govt took office, Hindutva fringes rejoiced, as if their agenda would be implemented. The left-oriented main press jumped on to that and promoted that line. But Modi has been careful not to touch any Hindutva matter directly. He has been pursuing a development agenda. But neither he nor his cabinet colleagues have spelt out the details. DEvelopment remains a slogan, not a programme.
    Among his ministers. only Nirmala Sitaraman has been speaking with some authority . She has been repeatedly saying that Modi govt is making basic changes in the economy.But even she does not explain about the direction of these changes, the measures taken, their results, how they have improved the lot of the people. The other ministers mostly talk in Hindi; apart from Hindi-speaking people, perhaps only elephants follow them.
    In the planning era, every school, college and university was full of literature on the subject.There were debates in the public fora and newspapers. We had eminent men in every party who contributed to the debate. After Swatantra party was formed, sharp economic criticism and visions of a clear-cut alternative to the permit-licence-quota raj emerged. Youngsters who grew up in such atmosphere absorbed the ideas and later entered service.But what is happening now? Who is explaining anything- where, when and how? People are left to their own devices.
    Take again the early 90s when Reform was in the air. The govt was implementing a blueprint provided by the IMF/World Bank. But the RBI Governor Rangarajan used every opportunity to explain its justification,nature, extent, sequencing etc.AS FS, M.S. Ahluwalia did his part. PM Narasimha Rao, the real hero. ably led the whole team. Educated people got ideas about the changes that were coming- winds of liberalization.
    Compare all this to what is happening now. Is any minister talking about the fundamental changes that are supposed to take place? Does the FM address any meetings of educated people on the economy? Does Modi talk of any thing other than his usual platitudes? He opposed Aadhaar before elections. As PM, he became its strong advocate. Why? When more than 98.5% of the demonetised notes are reported to have come back, what did demonetisation achieve? What have been the principles that underlie the NDA budgets so far? How do they benefit the economy, now and in the long run? What is their answer to the charge that Indian GST is one of the more complicated ones in the world? How are they going to handle the rogue Public Sector Banks? When the big banks are proving ungovernable, why have they made SBI even bigger? What has been the result of the spate of raids? What follow up action is being taken? Are not the citizens right in expecting some answers? What is the govt doing? People have been put to so much inconvenience on so many issues.Ia not an apology at least due to them?
    Under the dynastic rule, we knew we had no hope. So we didn’t seek answers or expect results. This dispensation is at least free from corruption. But it lacks communication. Indian newspapers and media do not project a favourable or even correct image of the govt. It is so difficult to get an unbiased report on anything. In such a situation, the govt itself does not explain things properly. It is alienating people.
    CBSE cannot even conduct exams. Public Sector banks cannot function without frauds. Judiciary cannot work without internal bickering. Big economic offenders can run away. Govt. will not allow the RBI to function under the Act. It cannot initiate action under Supreme Court judgement. Then what is the govt for? Is it wrong if we feel things are not working?

  3. இன்று தினமணியில் 2.4.2018 வெளியான கட்டுரையை படித்திருப்பீா்கள் என்று நினைக்கின்றேன்.தங்கள் கருத்துக்கள் அதனோடு சற்று முரண்படுவதாக உள்ளது. டிாிபுனல் ஆணையம் போன்ற அமைப்பிற்கு என்ன வேறுபாடு என்பது எனக்கு விளங்கவில்லை. அதன் அடிப்படையில் கூடுதலக தகவல்கள் வாசகா்களுக்கு சொல்ல விரும்பினால் தொிவிக்கலாம். நன்றி

  4. Shri Nanjappa…………

    When it comes to lack of effective communication, certain issues wherein the govt may improve itself.

    1. Wherever, Modi govt or the respective state govt could have foreseen dirty tricks of opposition parties, they could have taken pro active strategic measures…. MP, Maharashtra and Haryana… on many opposition stirs, this was not found.
    2. Timely communication…….the communication to be effective shall also be timely. on many issues, the official communication has been too late
    3. Effective communication…on many issues, the official communication used to be quite ambiguous….to be effective, they shall be straight to the point and articulative to effectively convey party and govt line.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *