பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்

பாஜக எஸ்சி அணி நடத்தும் சமதர்ம எழுச்சி மாநாடு

மே 27, ஞாயிறு, விழுப்புரம்

அன்பார்ந்த சொந்தங்களுக்கு,

வணக்கம். வட மாநிலங்களில் பட்டியலின மக்கள் பெருவாரியானவர்கள் பாஜக பக்கமே இருக்கிறார்கள். நடந்து முடிந்த பல மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக பட்டியலின மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். தனித்தொகுதிகளில் அதிகமாக பாஜகவே வென்றிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலிலும்கூட அதிகமாக பட்டியலின தொகுதிகளில் பாஜகவே அதிகமாக வென்றிருக்கிறது.

இதை உணர்ந்த காரணத்தினால்தான் காங்கிரஸ் முதல் பல்வேறு கட்சிகள் வரை பாஜகவின் செல்வாக்கை குறைக்க சம்பந்தமேயில்லாத பட்டியலின மக்களின் விஷயத்தில்கூட பாஜகவை சம்பந்தப்படுத்தி பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதேபோல் தமிழகத்தில் திட்டமிட்டு பல ஆண்டுகளாக பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர். 20.1 சதவீதம் பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1சதவீதம்கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர்.

இதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் தமிழகத்தில் பட்டியலின மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

என் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன்.

இந்த மாநாட்டிற்கு உங்களால் முடிந்த நிதி உதவி, பொருள் உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது. செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.

நிதி அளிப்பவர்கள் Bharathiya Janatha Party, Tamilnadu என்ற பெயரில் செக், டிடி அளிக்கலாம். 80G உண்டு. நிதி அளிப்பவர்கள் தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேசப்பணியில்
ம.வெங்கடேசன்
மாநிலத் தலைவர், எஸ்சி அணி

தொடர்புக்கு – 9941424629

10 Replies to “பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்”

  1. நெப்ட் வழியாக பணம் அனுப்புவதற்கும ஆவண செய்தால் நன்றாக இருக்கும்.

  2. பட்டியலின மக்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தர தம்பி ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்களது முயற்சி திருவினையாகட்டும். மேலும் தமிழகத்தில் முனைந்து பரப்புரை செய்யப்பட்டு வரும் பொய்க்கருத்துகளை மறுதலித்து நமது பட்டியலின சஹோதரர்களை பாஜக தேசிய நீரோட்டத்தில் இணைக்குமுகமாகவும் இந்த மாநாட்டின் செயல்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநாடு முழு வெற்றிபெற வள்ளிமணாளன் அருள் நிறைக. வெற்றிவேல்.

  3. Very glad. Continue your action in every district of Tamil Nadu.

    Please approach Tamil television channels and give wider publicity by giving interviews.

  4. ஒரு முறை சென்னையில் திராவிட முன்னேற்றக் கழக பொதுக் கூட்டத்தில் பேசிய ஒருவா்

    ” இன்ற பாரதிய ஜனதாக் கட்சியில்தான் தேசிய தலைவரும் மாநிலத் தலைவாரும் அட்டவணை சாதியைச்சோ்ந்தவா்கள் இந்த சிறப்பு வேறு எந்த அரசியல் கட்சிக்கு இல்லை” என்றாா்.உண்மை.தீண்டாமை ஒழிப்பில் சிரத்தை உள்ள அமைப்பு பாரதிய ஜனதாக் கட்சிதான்.

  5. இருப்பினும் பாரதிய ஜனதாக்கட்சியில் சிறுபான்மை அணி என்று வைத்திருப்பது சரியல்ல.ஆட்டுக்கு தாடியிருப்பது போல் அது தேவையில்லாதது. அதைக்கலைக்க வேண்டும்.

  6. Ramakrishnan!

    Central Government has recently issued instructions that ”Dalits”, ”Harijans” should be used. Only SC or ST should be used. Supreme Court has also delivered one judgment when Cong was in power and the Cong govt had also debarred the word Dalit.

  7. தமிழ்நாட்டில் கோமாளி எம்ஜிஆா் ஆட்சியில் போது அாிசனங்கள் என்ற பெயரை ஆதிதிராவிடா்கள் என்று மாற்றினாா்.இது ஒரு ஆபத்தான பெயா் மாற்றம்.தமிழகத்தில் வாழும் அனைத்து சாதியினரின் தகுதியை கேள்விக்குள்ளாக்கும் இந்த மாற்றத்தை எதிா்க்க யாரும் இல்லை.ஹரிசனங்கள் என்ற பெயர் மிகவும் கண்ணியமானது.இறைவனின் குழந்தைகள் என்பது பொருள்.தேசப்பிதா காந்தி அடிகள் முதல்முதலில் இந்த வார்த்தையை பயன்படுத்தியவா் என்று கேள்விப் பட்டேன்.தலீத் என்ற வாரத்தையும் அா்த்தமற்றது. வெறுப்பு அரசியல் செய்பவா்கள் செய்து வரும் சதிதான் தலீத் என்ற சொல்லாட்சி.
    அரிசனங்கள் என்ற பெயரை கொண்டு வரவேண்டும்.தலீத் ஆதிதிராவிடா்கள் என்ற வார்த்தைகள் பிழையானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *