காலா: திரைப்பார்வை

பொதுவாக ரஜினியின் திரைப்படத்துக்குப் பெரிய அளவில் யோசித்து விமர்சனம் எழுதும் வேலையெல்லாம் செய்ததில்லை. ரஜினியின் படம் என்றாலே அது கொண்டாட்டத்துக்குரியது. முதல் நாள் முதல் காட்சி தரும் கொண்டாட்ட மனநிலையைப் புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக ரஜினியின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரையில் பார்த்திருந்தால்தான் புரியும். திடீரெனப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு அபத்தம். பொதுவாகவே இது அபத்தம் என்பது சரிதான். ஆனால் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஒரு நாள் மட்டும் போய்வரும் இந்த அபத்தம் எனக்குப் பிடித்தமானது. ரஜினி எனக்குத் தலைவரோ சூப்பர் ஸ்டாரோ இல்லை. எனக்கும் ரஜினிக்குமான ஈர்ப்பு உற்சாகம் சார்ந்தது. கொண்டாட்ட மனநிலை சார்ந்தது. தமிழின் மிகச் சிறந்த நடிகர் ஒருவரின் திறமை சார்ந்தது. ஆனால் கடந்த சில ரஜினியின் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களை மீறியவையாக அமைந்திருக்கின்றன. சிவாஜி திரைப்படத்திலேயே இப்போக்கு துவங்கினாலும் ஷங்கர் அதை ஒருவிதமாகக் கையாண்டார். கபாலியில் இது துலக்கம் பெற்றது. காலாவில் அரசியல் படமாகவே மையம் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.

ஒரு திரைப்படமாக காலா மிக நன்றாகவே உள்ளது. முதல் 30 நிமிடங்களில் நெளிய வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட கதறும் அளவுக்கு. பின்னர் படம் வேகம் கொள்கிறது. இறுதி நிமிடம் வரை வேகம் குறையவே இல்லை. இனியும் வயதான மனைவிக்கும் கணவனுக்குமான காதலைச் சொல்வதை ரஞ்சித் நிறுத்திக்கொள்வது நல்லது. சில ரசனையான காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் இவை கழுத்தறுக்கின்றன. இக்காட்சிகள் எல்லாம் மறைந்து காலாவின் அரசியலுக்குள் படம் செல்லும் நொடியில்தான் உண்மையான திரைப்படம் தொடங்குகிறது. நானே படேகர் அறிமுகாகும் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை வேகம் குறைவதே இல்லை.

படத்தில் மிக முக்கியமான காட்சிகள் நான்கைந்தாவது இருக்கின்றன. இடைவேளை அரும் காட்சி அட்டகாசம். அந்தக் காட்சியில் நிகல் நிகல் சல்தேரே பாடலை முழுமையாக ஓடவிட்டிருக்கவேண்டும். சட்டென முடித்தது, அட்டகாசமான அந்தப் பாடலுக்கும் அந்தப்பாடல் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்த அந்தக் காட்சிக்கும் அநியாயம் செய்வதைப் போலத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் நானாபடேகரும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுமே அபாரம். வசனங்கள் மிகக் கூர்மை. நானா படேகர் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகிறார்.

ரஜினியின் நடிப்பைத் தனியே சொல்லவேண்டியதில்லை. தனக்கான இடம் இனி என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கதையற்ற திரைப்படங்கள் இனி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை எவ்விதக் குறையுமின்றி மிக நன்றாக நடித்திருக்கிறார். அதீத நடிப்பு என்கிற குழிக்குள் என்றுமே ரஜினி விழுவதில்லை. இப்படத்திலும் அப்படியே. எங்கே அதீதமாக நடிக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதே ரஜினியின் நிஜமான பலம்.

ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் அலட்டுவது போலத் தோன்றினாலும், என்னையும் லவ் பண்ணாங்க என்று தியேட்டரையே அதிர வைத்த காட்சியில் மனசுக்குள் நுழைகிறார். சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம். செவ்வனே செய்கிறார்.

இப்படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய நடிகர் – மணிகண்டன். அட்டகாசம், ஆசம். இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் நிச்சயம். படத்தில் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் இவரே.

பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் அதேசமயம் பிரம்மாண்டமான இசையைத் தந்த சந்தோஷ் நாராயண் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்துக்கென அவர் இசையமைத்த பல பாடல்கள் இப்படத்தில் வரவில்லை. யார் வெச்சது யார் வெச்சது பாடல் காட்சிகளூடாகக் கடந்து சென்றதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. படத்துக்கு இது நல்லதுதான் என்றாலும், அந்தப் பாடலின் தன்மையை இப்படி வீணடித்துவிட்டாரே ரஞ்சித் என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.

இனி…

இப்படத்தில் தமிழர்களை ராவணனாக மாற்றுகிறார் ரஞ்சித். ராமனை எதிரியாக்குகிறார். வெளிப்படையாகவே. நானே படேகர் ஒரு ஹிந்துக் கட்சியின் தலைவர். பாஜகவாகவோ சிவசேனையாகவோ அல்லது இரண்டுமோ அல்லது கொள்கையாகவோ இருக்கலாம். ராமனே நானா படேகரின் நாயகன். ஒருவகையில் ராவணனான காலாவை அழிக்கப் போகும் ராமன் நானா படேகரே. தலித் அரசியல்வாதிகளின் ஹிந்து மத எதிர்ப்பும் காழ்ப்பும் உலகறிந்த ஒன்றே. ராவணன் உண்மையில் தீமையின் வடிவம். சிவபக்தனாக இருந்தும் அவன் தீமையின் வடிவமே. ராவணன் பிராமணன் என்பதை மறந்து (அல்லது தங்கள் தேவைக்காக மறைத்து) அவனைத் தமிழனின் அடையாளமாக மாற்றி நெடுநாளாகிறது. இந்தக் குழப்பத்துக்கே இவர்களிடம் விடை இல்லை. இந்நிலையில் ஹிந்து மதத்தின் புராணங்களின் ஆழம் தெரியாமல் அதன் வீச்சும் புரியாமல் ராவணனை, தீமையின் வடிவத்தை, திரைப்படத்தில் காலாவுக்கு இணை வைத்துவிட்டார்கள். இதனால் ராவணை ஒழிக்க நினைக்கும் நானா படேகர் என்ற மோசமான அரசியல்வாதியை, உண்மையில் அறத்தின் வடிவான ராமனுக்கு இணை வைத்துவிட்டார்கள். ராமாயணத்தின் கதாகாலக்ஷேபத்தின் வரிகளுக்கு இணையாக ராவணன் ஒழிக்கப்படும் காட்சி மிக பிரமாண்டமாக மனதைப் பதற வைக்கும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. (படத்தில் அசரடிக்கும் காட்சி இதுதான்.) நல்லவன் ராவணன் காலா தீய ராமனால் அழிக்கப்படுகிறான். ஆனால் ராவணன் என்னும் மாயன் மீண்டும் ராமனை அழிக்கிறான்.

மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான். இயக்குநரைத் தீர்மானித்துவிட்டால் அவர் என்ன சொன்னாலும் செய்வார். செய்திருக்கிறார்.

இங்கே நாம் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. தனது எந்த ஒரு திரைப்படமும் வெளி வருவதற்கு முன்பாக அத்திரைப்படத்துக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாதவர் ரஜினி என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தை ஒட்டி ரஜினி பேசியது, இத்திரைப்படத்தில் தான் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார். காவல்துறை போட்டிருக்கும் சீருடை என்பது மரியாதைக்குரியது என்ற ஒரு அரசு சார்ந்த கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார். தான் வேறு தன் திரைப்படம் வேறு என்பதை உணர்த்தவே ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் என்று இப்போது புரிகிறது.

இத்திரைப்படத்தில் சட்டத்தை எரிக்கலாம் என்றொரு வாசகம் வருகிறது. ஆனால் அது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான ரஜினி இப்படிப்பட்டவர்களைச் சமூக விரோதிகள் என்றும் விஷக் கிருமிகள் என்று சொல்லிவிட்டார். அதாவது திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது, ராவணனாக சித்திரிக்கப்பட்டிருப்பது, உண்மையான ரஜினியின் கருத்தின்படி ஒரு விஷக்கிருமியின் பாத்திரமே, ஒரு சமூக விரோதியின் பாத்திரமே. அத்தனை நியாயங்கள் காலாவின் பக்கம் இருந்தாலும் உண்மையான ரஜினியின் கருத்தின்படி சட்டத்துக்கு எதிராக வன்முறைக்குத் துணை போகும் எந்த ஒரு போட்டாரமும் சமூக விரோதியின் செயலே. இதைப் புரிய வைக்கவே ரஜினி அப்படிப் பேசி இருக்கிறார். இதனால்தான் ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் எந்நிலை எடுப்பது என்று புரியாமல் தத்தளித்திருக்கிறார்கள். ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஹிந்தி பேசும் ராமனே தமிழ் ராவணர்களின் எதிரி என்று மிகத் திறமையாக, வெளிப்படையாக இத்திரைப்படம் முன்வைக்கிறது. படம் தாராவியின் பிரச்சினை என்றாலும் உள்ளூர இப்படம் சொல்ல விரும்புவது இதையே. அதாவது தாராவி பற்றி எப்புரிதலும் இல்லாத தமிழர்கள் இப்படத்தை இப்படியே சென்று அடைவார்கள். (இதில் பாதி பேர் எந்த அரசியல் புரிதலும் இன்றி நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்று கருப்பு வெள்ளையாகக் காண்பார்கள், அந்த அப்பாவிகளை விட்டுவிடலாம்.) நானா படேகர் ஷெரினாவைக் காலில் விழச் சொல்லும் காட்சியில் ஒரு நொடி ராமர் சிலை காண்பிக்கப்படுகிறது. நானா படேகர் வரும் இன்னும் சில காட்சிகளிலும் ராமர் சிலை வருகிறது. நானா படேகர் வரும் காட்சிகள் எல்லாமே காவி வண்ண மயம். இறுதிக் காட்சியில் திரையில் வரும் கதாபாத்திரங்களின் உடல் கருமை நிறத்துக்கு மாறுகிறது. கருமை நிறம் வீறுகொண்டு எதிரியைக் கொல்கிறது. திரையின் நிறம் சிவப்பாகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எங்கும் காலாவின் முகமாகிறது. திரையின் நிறம் நீலமாகிறது. இந்த நிற விளையாட்டு இனியும் எத்தனை படங்களுக்குத் தொடரும் எனத் தெரியவில்லை. கருமை சிவப்பு நீலம் என்ற நிறங்களை காவிக்கு எதிராக நிறுத்துகிறது இத்திரைப்படம். அந்தக் காவி கொடிய அரசியல்வாதியின் முகம். கருமையும் சிவப்பும் நீலமும் (ஏன் திடீரென்று நீலம் வருகிறது என்பதற்கு ஒரே காரணம் இது ரஞ்சிதி படம் என்பதால்தான்) உண்மைக்கும் ஏழ்மைக்கும் புரட்சிக்குமான முகமாகிறது.

ஏழைகளுக்கான நிலம் என்பதை மையமாக வைத்து அதன் அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார் ரஞ்சித். அதையும் பிறப்பால் மராட்டியரான ஒருவரைக் கொண்டே பேச வைத்திருக்கிறார். அதிலும் தேவையே இல்லாமல் ஒருவர் தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சொல்லிக் குண்டடி பட்டுச் சாகிறார். ரஜினியின் மகன் பெயரை லெனின் என்று வைத்து சிவப்பின் ஈர்ப்பைக் காண்பிக்கிறார். (ஆனால் ரஜினி லெனினை நன்றாகத் திட்டித் தீர்க்கிறார்.) இத்தனைக்கும் நடுவில் தொடரும் ரஞ்சித்தின் முக்கியமான விஷயம் – புத்தரும் அம்பேத்கரும் வருகிறார்கள், ஈவெரா எங்கும் வரவில்லை. ஒரு காட்சியின் பின்னணியில் ஈவெரா சிலை ஒன்றின் தாடி போலத் தெரிந்தது. ஆனால் ஈவெராவின் முகம்தானா என்று காண்பிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பேட்டிகளில் ஈவெரா எப்படித் தன்னை மெருகேற்றினார் என்று ரஞ்சித் உருகக்கூடும். திரைப்படங்களில் மட்டும் அம்பேத்கரோடு நின்றுவிடுகிறார். திரைப்படங்களில் மட்டும் தொடர்கிறது ரஞ்சித்தின் ஈவெராவை மறைக்கும் அரசியல். இதற்காகவே ரஞ்சித்தைப் பாராட்டலாம்.

இத்திரைப்படத்தின் சாதனை என்ன? ஒரு ரஜினி படத்துக்கு இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் முறையாகவும் யோசிக்க வைத்ததுதான் ரஞ்சித்தின் சாதனை. ரஜினி தூத்துக்குடி கலவரத்தை ஒட்டித் தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறாத நிலையில் இப்படம் வந்திருந்தால் ரஜினியின் அரசியலில் பெரிய கேள்விகள் எழுந்திருக்கும். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இதைத் தவிடுபொடியாக்கி இருக்கிறார் ரஜினி. தலித் கட்சிகளின் தேவைகள் மிக முக்கியமானவை. இக்கட்சிகள் இல்லாவிட்டால் ஒரு பொதுக்கட்சியால் இக்கருத்துகளை இத்தனை தீவிரமாக முன்னெடுக்கவோ மாற்றங்களைக் கொண்டு வரவோ முடியாது. ஒவ்வொரு ஜாதிக்கட்சிக்கும் இது பொருந்தும் என்றாலும் தலித் கட்சிகளின் தேவைக்கு இவை அதிகம் பொருந்தும். அதேசமயம் யதார்த்தத்தில் ஒரு தலித் கட்சியே (அல்லது எந்த ஒரு ஜாதிக்கட்சியும்) பொதுவான பிரதானமான அரசியல் கட்சியாகிவிடமுடியாது. ரஜினியின் அரசியல் தலித் கட்சிகளின் தேவைகளை ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக்கட்சியாகவே இருக்கமுடியும் என்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அதனால்தான் திரைப்படத்தில் தன்னை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களுக்கு, அத்திரைப்படம் வருவதற்கு முன்பாகவே, தன் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தான் யார் என்பதை புரியவைத்திருக்கிறார். இது பெரிய திட்டம்தான் என்றாலும் இத்தகைய விஷப் பரிட்சைகளில் இனி ரஜினி சிக்காமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.

ஒரே வரியில், ஒரு திரைப்படமாக (மட்டும்) அட்டகாசம்.

*****

(ஹரன்பிரசன்னா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது

 

25 Replies to “காலா: திரைப்பார்வை”

  1. இராமனை வில்லன் நானாபடேகரோடு இணைத்ததற்கும் காவியோடு இணைத்ததற்கும் இந்துத்வ கட்சிகள் படத்தைத் தடை செய்யச்சொல்லிப் போராடலாம். இதுவரை, இப்படத்தைத் தடைசெய்யச்சொல்லி, திரவியம் நாடார் வாரிசுகளும், கதைத்திருட்டு என்று சொல்லி இன்னொருவரும் போட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்துமதம் இழிவுபடுத்தபபடுகிறது என்பது புதிய வாதம். முயற்சிக்கலாம்.

    இரஞ்சித் இன்று சொன்னது: என் கதையை நடிக்கத்தான் இரஜினி. அவரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கன்று என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும், படம் பார்த்த அனைவருமே ஒத்துக்கொள்வது: இது முதலில் இரஞ்சிததின் கொளகை விளக்கப் படமே.

    கட்டுரையின் இறுதிப்பத்தி குழப்பம். தமிழகத்தில் அங்கீகாரம் செய்யப்பட்ட தலித் கட்சிகள் இரண்டே இரண்டு. 1) வி சி க 2) புதிய தமிழகம். இரண்டாவது கட்சி தங்களைத் தலித்து கட்சி என்றழக்க விரும்பவில்லை. அவர்கள் தேவேந்திர குல சத்திரியர்கள். பா இரஞ்சித் வி சி க கட்சி ஜாதி. எந்த தலித்து கட்சிகளை ஹ பி குறிப்பிடுகிறார்? என்றுமே வி சி க தமிழகத்தில் ஆட்சிக்கு வர விரும்புவதில்லை. முடியாதென்றும் தெரியும். இதை அதன் தலைவரே ஏற்றிருக்கிறார். கூட்டணியில்தான் செயல்படுவார்கள். புதிய தமிழகம் – பா ஜா காவோடு தங்களை இப்போதே இணைத்துக்கொண்டது. எனவே அவர்களுக்கும் இப்படத்துக்கும் தொடர்பேயில்லை. வி சி க ஏற்கனவே இரஜினியின் தூத்துக்குடி பேச்சைக் கடுமையாக எதிர்த்திருக்கிறது. உண்மையில் திருமாவளவனின் இரஜினிக்கெதிரான அறிக்கையே முதலில் வெளியானது. எத்தலித்துக்கட்சிகளோடு இணைத்துப் பேசுகிறார் ?

    படத்தில் இரஞ்ஜித் இசுலாமியர்களை – தொழுகை நடாத்துவதையும் போராட்டக்களத்தில் முன்னிற்பதையும் இரஜின் அவர்களைக் கட்டித்தழவி உறவாடுவதையும் – தொடர்ந்து காட்டுகிறார். கவனிக்கவில்லையோ?

    எது எப்படியாகினும், இரஜினி, தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர்களை விலக்கிக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. தூத்துக்குடி பேச்சு காற்றில் காணாமல் போன கதைதான். இப்படத்தில் இரஞ்சித்தின் கருத்தாக காட்டப்படுபவையை இரஜனி விலக்கிக்கொண்டு ஓட முடியாது. மெல்ல மெல்ல அருகில் வந்தே தீரவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். இரஜினிக்கும் இரஞ்சித்தின் கொள்கைகளூக்கும் தொடர்பில்லை எனபதைக் காட்டவே தூத்துக்குடி பேச்சு என்று இப்போது சொல்லிக்கொள்ளலாம். நாளை…?

    இறுதிக்காட்சியில் காட்டப்படும் நிறங்களின் அரசியல் பற்றி குறிப்பிடுகிறார். அரசியலேயானாலும் அந்நிறவணிகள் படத்தின் முத்தாய்ப்பு. இதுதான் என் கொள்கை: கருப்பு, சிவப்பு, மற்றும் நீலம். (நீலம் அம்பேத்கரின் விருப்ப நிறம்). சிறப்பாக பார்ப்பவர்களின் மனங்களில் ஊடுருவுகின்றன‌. அதை இறுதியில் வைத்தது மெத்தவும் சிறப்பு.

    காமராஜர் இருகுழந்தைகளோடு நிற்கும் சிலை அடிக்கடி காட்டப்படுகிறது. சேரியில் இருக்கும் நூலகத்தின் பெயர் பண்டிததாசர் நூலகம். அம்பேத்கர் போட்டோக்கள் எங்கெங்கிலும் அடிக்கடி. வசனங்கள்; காட்சிக்ள் – அனைத்துமே இரஞ்சித்தின் கொளகை விளக்கப்பேழைகள். வயதான தம்பதியரின் காதல் கழுத்தறுக்கிறது என்கிறார். ஆனால் அது புகழப்படவேண்டியது. வழக்கம்போல, ஆண்-பெண் உறவில் இரஞ்ஜித் பெண்ணை உயர்வாகக் காட்டுவார். அது இப்படத்தில் வரும் பெண்களினால் காட்டபபடுகிறது. அனைவருமே மனோதிடமும் செயல் வீராங்கணைகளாகவும் காட்டப்படுகிறார்கள் (அரசிய்ல் இல்லை இது) கபாலியின் தன் பெண்டாட்டியின் பேச்சைக்கேட்கிறார். தன் மகளால் காப்பாற்றப்படுகிறார். இப்படத்தில் ஈஸ்வரி ராவ் பேச்சுக்களையெல்லாம் பணிவோடு கேட்டு ராவின் மனம் கோணமால் கவனித்துக்கொள்கிறார். இது இர்ஞ்சித்தின் ஆண்-பெண் உறவுக்கொள்கை. இதைப்புரிந்தால்தான் படம் இரசிக்கும்.

    இனி வரும் இரஜினி படங்கள் அரசியல் படங்கள் இல்லை. எனவே ஹரன் பிரசன்னாவின் //எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.// என்ற ஆவலாதி தேவையற்றது. உதய்நிதியின் படத்தில் நடிக்க டெஹ்ரான் போயிருக்கிறார். கார்த்திக் ராஜ் இயக்குனர். ஒருவேளை அதில் திராவிடக்கொள்கைகள் இருக்குமோ என பயப்படலாம். But they’re good businessmen. They’ll even glorify the principles which they don’t like, if they can fetch them income, as SUN TV shows Ramayanam, Kanthapuranam serials.

    //அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.// இது ஒரு சேரி மக்களின் கதை. ஹரன் பிரசன்னாவினால் புரிய முடியாது. பொங்கல் விழாவுக்கு ஒரு சேரிக்குப் போய் பார்த்து எப்படி டான்ஸ் ஆடுகிறார்கள் என்று பார்த்துவிடவும். If you can, go and live in Dharavi for a few months, esp, during Ganesh utsav. மேலிருந்து கீழே பார்க்கும் போது பல தெரியாது. கீழிறஙுகி வந்து பார்த்தால் பல தெரியும்.

  2. First ranjith was not at good director,his views are onsider.In all meetings he will say I am x.Again and again

  3. ஆன்மீக தேடலில் மிக உறுதியாக இருந்த திரு ரஜினி அவர்கள்
    தூத்துகுடி நிகழ்வின் பேட்டியும், அவசரமும் அவர் பணம் சார்ந்த,
    பொருள் சார்ந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு கட்டவேண்டிய
    தேவையும், அவசரமும் , அவசியமும் இருப்பது போன்ற ஒரு
    வெளிப்பாடு திரு ரஜினி அவர்களிடம் தெரிகிறது அதனால்தான்
    காலா திரைப்படத்திற்கும்,அவரது தற்போதைய அரசியல் பேச்சிற்கும்
    முரண்பாடு இருக்கிறது என்று தோன்றுகிறது.

  4. இரஞ்ஜித்தும் ரஜினியும் தங்களது வியாபார நோக்கத்திற்காக இணைந்து மக்களை நன்றாகவே ஏமாற்றுகிறார்கள்.

  5. அசத்தலான விமர்சனம்.

    ரஜினிகாந்த் செய்த மாபெரும் தவறு இது போன்ற படத்தில் பணத்துக்காக நடித்து தன் மதிப்பை இழந்தது. க மல ஹாஸன் போல ரஜினியை மக்கள் ஒரு கூத்தாடியாக மட்டிலும் பார்க்கவில்லை. தமிழகத்தில் ஆப்ரஹாமியத்தின் கூலிப்படையாகச் செயல்பட்டுவரும் த்ராவிடத்தின் முதுகெலும்பை முறித்த பெருமைக்கு உரியவர். தமிழர்களை அவர்களது பாரம்பரியமான நெற்றியில் நீறணிதல் அல்லது வைஷ்ணவ லக்ஷணப்படி நாமம் தரித்தல் போன்ற சமய ஒழுக்கங்களை பெருமைக்குரித்தான செயற்பாடு என்ற படிக்கு இளைஞர்களுக்கு பொதுமக்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுத்தவர்.

    ஆதர்சமானவர்கள் இளையராஜா மற்றும் அக்கால கே பி சுந்தராம்பாள் போன்றோர். ஆன்மீகத்தில் தாம் கொண்ட கோட்பாடுகளை திரைப்படத்தில் பணம் சம்பாதிப்பதற்கு என்பதற்காக லவலேசமும் விட்டுக்கொடுக்காதவர்கள்.

    டாக்டர் சுப்ரமண்ய ஸ்வாமி அவர்கள் ஒரு காலத்தில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் ஸ்தாபனங்களுடன் பிணக்கு கொண்டு செயற்பட்ட அளவுக்கு ரஜினியின் இந்த விதிவிலக்கான செயற்பாடு இல்லையெனினும்………. ஒரு ஆதர்ச நாயகனாக அன்றி ஒரு சராசரியான பணத்துக்கு கூத்தடிக்கும் கூத்தாடி என்ற அளவிலேயே ஆன்மீகத்தில் ஆர்வமுள்ள அன்பர்களால் அவர் பார்க்கப்படுவார்.

    தன் திரைப்படங்களால் ஆப்ரஹாமியத்திலிருந்து விலகி ஆன்மீகத்தை ஆதர்சமாக பொதுஜனங்களின் மத்தியில் பெருமிதத்துடன் பின்பற்றத்தக்க செயற்பாடாகக் கொணர்ந்தவ்ர் ரஜினிகாந்த். ராகவா லார்ன்ஸ் போன்ற மாற்று மதத்தைச் சார்ந்த சஹோதரர்களை ராகவேந்த்ர ஸ்வாமியின் பக்தர்களாக மாற்றிய மாண்பிற்கு உரித்தவர் ரஜினி. அந்த பீடத்திலிருந்து சறுக்கி விழுந்திருக்கிறார்.

    டாக்டர் ஸ்வாமி போன்ற நபர்களை ஹிந்துத்வவாதிகளில் ஏற்றும் கொள்கிறார்கள். எதிர்க்கவும் செய்கிறார்கள். ரஜினிக்கு இந்தப் படம் இழுக்கே.

  6. அன்பர் பீ எசு

    த்ராவிட மோஸ்தரிலிருந்து அவ்வளவு எளிதாக வெளிவரமுடியாது. புரிந்து கொள்ள முடிகிறது.

    பட்டியலினத்தவர் தம்மை தலித் என்றோ தாழ்த்தப்பட்டவர் என்றோ சுட்டப்படுவதை விரும்பாத காலம் இது. அதிலும் பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஸ்ரீ க்ருஷ்ணஸ்வாமி அவர்களது தன்னம்பிக்கையையும் செயற்பாட்டையும் வெகுவாகப் பாராட்ட வேண்டும். நாடாண்ட சஹோதரர்களாகிய பள்ளர்களுடைய பாரம்பரிய பெருமையை மீட்டெடுத்து அவர்கள் க்ஷத்ரியர்கள் என்ற தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். பறையர்களுள் தம்மை தலித் என்று அழைத்துக்கொள்ள விரும்பாதவர்கள் தம்மை ப்ராம்மணர்களாகவே அடையாளப்படுத்திக்கொள்ள விழைகிறார்கள். சாம்பவர்கள் என்று தம்மை பெருமிதத்துடன் அழைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

    த்ராவிடத்திற்கும் ஆப்ரஹாமியத்திற்கும் ஜாதிகளிடையே பிணக்கு குறைவது வ்யாபாரத்துக்கு ஆகாத சமாசாரம். உயர்வு தாழ்வு என்ற விஷயங்களை நிரந்தரமக கொதிநிலையிலும் உறைநிலையிலும் வைத்திருப்பதை இவை நிச்சயம் விரும்புகின்றன. உங்களது கருத்து இதையே ப்ரதிபலிக்கிறது.

    மோதி அவர்களின் ஸப் கா ஸாத் ஸப்கா விகாஸ் என்பதே உருப்படியான அரசியல்.

    பீ எசு சொல்லும் சிறுபான்மை அரசியல் என்பது காங்க்ரஸ் களவாணிகள் செய்த ஓட்டுப்பொறுக்கி அரசியல். அதற்கு மாற்றான அரசியல் பாஜக மற்றும் ஹிந்துத்வ பரிவார் முஸ்லீம் ராஷ்ட்ரீய் மஞ்ச் போன்ற ஸ்தாபனங்களுடன் கைகோர்த்து செய்யும் அரசியல். சிறுபான்மை அரசியல் என்பது மதசார்பின்மை என்ற போர்வையில் மதவெறியையும் தேசத்தைப் பிளப்பதற்கும் ஐந்தாம்படை வேலை செய்யும் அரசியல். ஹிந்துத்வ இயக்கங்கள் அதற்கு மாற்றாக முஸ்லீம் சஹோதரர்களுடன் கைகோர்த்து அவர்களுடைய வாழ்வியல் ப்ரச்சினைகளை பெருமளவிற்கு தீர்வு செய்வதற்கும் அவர்களுடைய பொருளாதாரம் நேர்மையான தொழில்முனைவுகளின் மூலம் நிரந்தரமாக அபிவ்ருத்தியாவதற்கும் வழி செய்யும் அரசியல். வஹாபி வ்யாதியாலும் காங்க்ரஸின் ஓட்டுப்பொறுக்கும் சிறுபான்மை அரசியல்வ்யாதிக்கும் ஆட்பட்ட சஹோதரர்களுக்கு அதிலிருந்து வெளிவருவது எளிதல்ல தான். ஆனால் எறும்பூரக் கல்லும் தேயும்.

    ஆர் எஸ் எஸ் ஷாகாவில் மட்டிலும் தான் அனைத்து ஹிந்துக்களும் (இப்போதெல்லாம் ஆங்காங்கு நிறைய முஸ்லீம் சஹோதரர்களும் க்றைஸ்தவ சஹோதரர்களும் கூட) கைகோர்த்து தேச ஒருமைப்பாட்டை இலக்காக வைத்து சரிசமனாக விளையாட முடிகிறது. சங்க பயிற்சி முகாம்களில் சரிசமமாக விளையாடி உணவுண்டு உறங்கவும் முடிகிறது.

    பட்டியலின சஹோதரர்களை தாழ்த்தப்பட்டவர்களாக சித்தரித்தால் மட்டிலும் தான் ஆப்ரஹாமியத்தால் ஆன்மீக அறுவடை செய்வது எளிது. அதை இலக்காக வைத்து பட சித்தரிப்புகள்.

    சமதளத்தில் ………….பீ எசு சொல்லும் மேலே கீழே இல்லே………… ஜாதி வேறுபாடின்றி அனைத்து ஹிந்துக்களும் ஆப்ரஹாமியம் தங்களை ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக மட்டிலும் உபயோகிக்கிறது என்பதனை உணரும் தருணம் இது. பீ எசு போன்றோருக்கு ………….. அத்தருணத்திற்கு எதிர்நிலையான நிரந்தர கொதிநிலை உறைநிலை பிணக்கு அரசியல் ……………….த்ராவிட ஆப்ரஹாமிய வ்யாபாரத்துக்கு தேவை என்பதால் ஆதரிக்கத் தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடிகிறது.

    ஹிந்துத்வ அரசியல் முஸ்லீம்கள், க்றைஸ்தவர்கள், பட்டியலின சஹோதரர்கள் என அனைவரையும் கைகோர்த்து செல்ல விழையும் அரசியல். பீ எசு சுட்ட விழையும் சஹோதரர்களை உள்ளடக்கிய அரசியல். பீ எசு போன்று நிரந்தரமாக ஜாதிகளை மேல் கீழ் நிலையில் வைக்கும் அரசியல் ஹிந்துத்வ அரசியல் கிடையாது. அது இடதுசாரி அரசியல். காங்க்ரஸ் களவாணி அரசியல். பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்கள் பணம் கொடுத்து முட்டுக்கொடுக்கும் அரசியல்.

    \\ கீழே பார்க்கும் போது பல தெரியாது. கீழிறஙுகி வந்து பார்த்தால் பல தெரியும். \\

    என்ன தான் இருந்தாலும் சரி த்ராவிடம் வசனங்களாலேயே பேசும் என்பதனை உணர்த்தும் அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின் ஸ்தோத்திரம் செய்யும் வசனம் இது. த்ராவிட வ்யாபாரமும் ஆப்ரஹாமிய ஆன்ம ஆறுவடையும் தான் மேலே கீழே என்று ஜபர்தஸ்தியாக நிரந்தரமாக ஒரு நிலையை சித்தரிக்க விழையும். ஆர் எஸ் எஸ் ஷாகா பணியில் க்ராமங்களிலும் சேரிகளிலும் பணி செய்தவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் சேரிகளில் இருப்பவர்கள் ஜோ அமலன் சித்தரிக்க விழையும் வண்ணம் அல்லது ஸ்டீரியோடைபிங்க் செய்ய விரும்பும் வண்ணம் செயற்படுபவர்கள் இல்லை என்று. வேற்று நகர சேரிகளும் சரி. தாராவியும் சரி. ஜோ அமலன் திணிக்கும் ஸ்டீரியோடைபிங்கிலிருந்து எப்பவோ வெளியே போயாச்சு. ஆனால் ஜோ அமலனின் ஸ்டீரியோடைபிங்க் த்ராவிட வ்யாபாரத்திற்குத் தேவை ஆப்ரஹாமிய ஆன்ம அறுவடைக்குத் தேவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு முட்டுக்கொடுக்க வேண்டி பழையகால தக்ஷிணாமூர்த்தி காரு வசனமாகிய மேலே கீழே எல்லாம் தேவையாக இருக்கிறது 🙂 🙂 🙂

  7. நிகழ்கால தாராவி எப்படி த்ராவிடம் திணிக்க விரும்பும் தாராவி எப்படி என்பது வாசகர்களுக்குத் தெரிய வேண்டுமில்லையா?

    ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவு :-

    தாராவி பத்தி ஒரு டாகுமெண்டரி போட்டான் NGC Or History TV ல… ஞாபகம் இல்லை… வழக்கம் போல சாக்கடை ,பாவம் போல மக்கள், கேவலமான அடிப்படை வசதின்னுதான் போடுவான்னு நினைச்சேன்….

    ஆனா பாருங்க அவன் ஆச்சர்யப்பட்ட விஷயம் தாராவி ஒரு தொழிற்சாலை போல இயங்குகிறது… ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு தொழிலகமாக இருக்கிறது… அது ஒரு industrial work horse.. அகல் விளக்கு தயாரிப்பு, சின்ன சின்ன மின்னணு சாதனங்கள், வாட்ச் வளையல் தயாரிப்பு, உணவுப்பொருள்,ஸ்னாக்ஸ்,ஊறுகாய்,ஆடை வடிவமைப்பு, ஏற்றுமதி கூட …இங்க இருக்கும் பெண்கள் கூட சும்மா இருப்பதில்லை என்று ஆச்சர்யப்பட்டான் வெள்ளைக்காரன்… நான் பல நாடுகளில் சேரி ஸ்லம், காலனிகளுக்கு பயணப்பட்டிருக்கிறேன்.. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது தாராவியில் குற்றங்கள், குற்ற செயல்கள் புரிவோர் குறைவு… மற்ற நாடுகளில் எல்லாம் ஸ்லம்களில் காங்ஸ்டர், போதை பொருள் விற்போர், கூலிக்கு கொலை செய்வோர், தொழில்முறை பரத்தைகள் இவர்கள்தான் இருப்பார்… குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான வளர்ப்பு சூழல் இருக்காது… ஆனால் தாராவியில் அப்படி இருப்பது மிக மிக குறைவு… நான் பார்த்தவரை கடின உழைப்பாளிகள்தான் அதிகம்.

    வெளியே இருந்து பார்த்தால் சிறிய வீடு போல இருக்கிறது.. உள்ளே போய் பார்த்தால் சகல வசதி.. ஏசி, வாஷிங் மிஷின், எல் சி டி டிவி.. ஏன் ஒரு சிலவீடுகளில் பாத் டப் கூட என்று புகழாரம் சூட்டுகிறார் அந்த டாகுமெண்டரி இயக்குனர்…

    நம்ம என்னடான்னா இன்னும் கருப்பு.. சாக்கடை ,ஒடுக்கப்பட்டோம், நசுக்கப்பட்டோம்ன்னு உசுப்பேத்தி சினிமாவை எடுக்கிறோம் …யதார்த்தமே வேற.

    Courtesy: Eevunni Seshadri

  8. //படத்தில் இரஞ்ஜித் இசுலாமியர்களை – தொழுகை நடாத்துவதையும் போராட்டக்களத்தில் முன்னிற்பதையும் இரஜின் அவர்களைக் கட்டித்தழவி உறவாடுவதையும் – தொடர்ந்து காட்டுகிறார். கவனிக்கவில்லையோ?//
    காலா ஒரு இந்து மத எதிர்ப்பு படம் என்று மத மாற்றிகள் கொண்டாடுவது இதனால் தானா!

  9. Krishnakumar,

    I think you have gone a bit overboard in praising Rajini. Yes, he poses himself as a religious hindu, but in some his movies, you will find the typical hindu bashing, ridiculing of hindu gods & goddesses etc.,

    In the movie “Uzhaippali” directed by P.Vasu, he dresses himself as Lord Shiva to escape from the villains & this is shown as a comedy sequence.

    In “Veera”, he mocks the Brahmin community.

    Being a superstar he could have easily averted such scenes. But he chose to keep quiet.

    When the Coimbatore bomb blasts happened, he immediately gave a statement that it was hindus who were responsible & they had shifted the blame to muslims. He quickly retracted his comments when was criticised.

    People must realise that he is a shrewd businessman who plays with the majority sentiments. If he was really a true aanmigavaadhi as he claims to be, why did he get so worked up when a youngster asked him ” What is your name”?

    There was a survey undertaken some years back wherein it was proved that the easiest way to get into people’s hearts was to pose oneself as a highly religious person.

    Rajini is doing just that.

    Compared to him , kamal is much better. Atleast we know what sort of a person he is.

    With rajini, he hides behind a mask, which can be very dangerous

  10. Rajini has allowed himself to be used by the director like wet clay. Does he not know that the director Renjith is anti Hindu?

  11. With rajini, he hides behind a mask, which can be very dangerous//

    இந்துக்கள் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டிய உண்மையாகும்.

  12. @ smitha

    I have no praises for rajini.

    BJP shall be a fool on earth if it thinks it can capture tamilnadu by self centered person like rajini kanth. Sure, he was a speed breaker for xian missioneries. through some of his films, the young hindus of tamil nadu started thinking that sporting vibhuti or thiruman on their forehead is very much tamil. And credit for that and to that extent goes to rajini. nothing more nothing less.

    like in other states, BJP has to work in its path to gain victory.

  13. இன மத தேச வெறி கொண்ட இலங்கை சின்ஹல பவுத்தர்கள் தமது முதல் மன்னன் ராவணனே என நிரூபித்து வருகின்றார்கள்.அவர்களைப் பொறுத்தளவில் இராவணன் சின்ஹல பவுத்தன். அந்நிய ( இந்திய) நாட்டிற்கு எதிராகப் போரிட்டவன்.விபிஷணன் காட்டிக்கொடுத்தவன்.துரோகி. விஷ்ணு கதிர்காமக் கந்தன் விநாயகர் (கண தெய்யோ) எல்லோரையும் தற்பொழுது தமது கடவுளாக்கிக் கொண்டுவிட்டார்கள் இந்த சின்ஹல பவுத்தர்கள். புத்தர் கடவுளைப் பற்றி எதுவும் கூறாதிருந்த போதிலும் இந்த சின்ஹல பவுத்தர்கள் மேற்கூறிய கடவுளரின் கோவில்களை எல்லாம் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு சின்ஹல மயப்படுத்தி விட்டார்கள். சைவ அடையாளங்களை அழித்துவிட்டார்கள். இப்பொழுது பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரம் சின்ஹல மயமாகி வருகின்றது.இராவணன் சின்ஹல பவுத்தன் என நிறுவ பல கட்டுரைகள் நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. இனி சின்ஹல மயப்படுத்தப்படும் சைவ கோவில்களைப் பற்றியும் பல கட்டுரைகளை சின்ஹலவர்கள் எழுதுவார்கள். இந்தப் பின்னணியில் இந்தியர்கள் கூறும் ராவண ராம வரலாறுகள் திருத்தி எழுதப்பட வேண்டியதுதான்.

  14. மெர்சல் திரைப்படத்தை எதிர்த்து தமிழக பி ஜே பியினரும் தீவிர இந்து இயக்கங்களும் பெரும்போராட்டங்கள் நடத்தின. படத்தில் ஒரு வசனம்: கோயில்கட்டுவதற்கு பதிலாக ஆசுபத்திரி கட்டலாம்; மற்றும் கதாநாயகன், மத்திய அரசுக்கொள்கையான ஜி எஸ் டியை எதிர்த்து வசனம் பேசுகிறான். இது தவிர வேறு இந்துமதத்துவேசமில்லை. ஆனால் எதிர்ப்புக்கள் பலமானவை. காலாவில் வில்லன்களில் ஒருவன் காவி உடையில் வருகிறான், நெற்றியில் நீண்ட குங்குமம் பயங்கர சண்டை. கதாநாயகன் வில்லனை வீழ்த்த அவன் கீழே விழந்து சாகும்போது, பிள்ளையாரை நீரில் மூழ்கடிக்கிறார்கள். இராமனை மட்டுமன்று; பிள்ளையாரையும் வில்லனாக்குகிறார்கள். சேரியில் உள்ள பிள்ளையார் கோயில் தீப்பிடிக்கிறது. இவையெல்லாம் ஒரு சில காட்சிகள் மட்டுமே; படம் முழுவதும் இந்துமத வெறுப்பும் குரோதமும் நேராக காட்டப்படுகின்றன. ஒளிவு மறைவே இல்லை!

    பி ஜே பி தலைவி பிற தலைவர்களோடு சேர்ந்து இப்படத்தைப் பார்த்ததாக ஒன் இந்தியா சொல்லியது. பின்னர், திரைப்படத்தைத் திரைப்படமாகத்தான் பார்க்கவேண்டுமென முடித்துவிட்டார் தலைவி. (மறைமுகமாக இந்து இயக்கங்களுக்கு விட்ட செய்தி இது: கண்டு கொள்ளாதிர்கள் இது நம்மவா படம்!) ஓர் எதிர்ப்பும் இல்லவே இல்லை. விஜய் செய்தால் எதிர்ப்பு. இரஜினி செய்தால் ஆதரவு என்றால் அதன் உள்ளர்த்தம் விஜய் அரசியலில் இல்லை. 2019 தேர்தலில் போது தமிழ்நாட்டில் பி ஜே பி சவாரி செய்து கரையேற ஒரே உதவி இரஜினி மட்டுமே. நேராக அவர் பி ஜே பியுடன் சேராவிட்டாலும் மறைமுகமாக உதவி செய்தே தீர்வார் என்ற நம்பிக்கை. இரஞ்சித்தையும் தாக்க முடியாது. பிள்ளையர் கோயிலை எரித்தாயே! புத்தர் விஹாரத்தை, உன் க்ருத்துவ தேவாலயத்தை எரிப்பாயா? என்று கேட்க முடியாது. காரணம் 2019 தேர்தலில் இரஞ்சித்தோடுதான் சேரிகளில் தலித் ஓட்டு வேட்டையாடுவார் இரஜினி. இரஜினியில் கட்சியில் நேரடியாக சேரமுடியாவிட்டாலும் பின் இருந்து இரஜினிக்கு உதவுவார். தலித்து, முசுலீகள் வாக்குக்ள் மொத்தமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

    எனவே நான் முன்பே சொன்னது போல, இராமனா? இரஜினியா? யார் வேண்டும்? என்ற கேள்விக்கு தமிழ்நாட்டு இந்து இயக்கங்களும் பி ஜே பி யும் வைக்கும் ஒரே பதில்: இரஜினியே ! இரஞ்சித்தே !!

  15. தங்க ஊசிய்யா! தாராளமா கண்ணில குத்திக்குங்க

  16. சினிமாக்கார கூத்தாடிகளை நம்பி அரசியல் பண்ணுவது -பாரதிய ஜனதாகட்சி ரஜனியை முன்னிலைப்படுத்துவது எனக்கு ஆரம்ப முதலே சுத்தமாக பிடிக்கவில்லை.பணத்துக்காக இவர்கள் எதுவும் செய்வார்கள். அரிதாரதம் புசி நடிப்பவன் பாரதிய ஜனதாக்கட்சி மேடையிலும் நடிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்.காலா திரைப்படம் விரும்பக்தகாத வசனங்கள் காட்சிகளைக் கொண்டுள்ளது.இந்து பாரம்பரியம் என்றும் அருள்மிகு ராகவேந்தா் என்று தன்னைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கும் ரஜனி போட்ட அரிதாாரம் கலைந்து விட்டது. கூத்தாடிகள் கூத்தாடிகள்தாம்.பணக்கார கூத்தாடிகள் மட்டும் என்ன விதி விலக்கா .கழுதை விட்டையில் முன்விட்டை வேறு பின் விட்டை வேறா .உரத்துக்கு ஆகா கழுதைவிட்டைகள் கூத்தாடிகள்.

  17. தனித்து நின்று அடுத்த ஆண்டு தேர்தலில் எதிர்கட்சியாகக் கூட ஆகமுடியாத நிலை. வரும் தேர்தல் பராளுமன்றத்துக்கு, குறைந்தது 10 TN எ ம் பிக்களாகவது வேண்டும். இல்லாவிட்டால் பி ஜே பி எப்படி இந்தியாவில் ஆட்சிக்கு வரும்? இரஜினியை விட்டால் கதியில்லை. எனவே காலாவுக்கு எதிர்ப்புக்குரலை பி ஜே பி எழுப்பவே இல்லை. அரசியலில் மான ரோசம் பார்த்தால், முக்காடு போட்டு வீட்டுக்குள் உட்காரவேண்டியதுதான். பி ஜே பி, கருநாநிதி கூடவும் கூட்டணி வைத்தது. இரஜினி வேண்டாம்; கருநாநிதி போதுமென்கிறாரோ?

  18. BJP is well aware that it cannot win even a single seat in assy elections whenever they are held in TN, if they stand alone.

    Their options are AIADMK or rajini. In the absence of JJ, AIADMK is sure to lose the next elections. Amongst other players, only rajini is sympathetic to BJP & also not overtly anti hindu.

    So, BJP is keeping quiet on Kaala.

    But to say that pa. ranjith will bring in the dalit votes is rather foolhardy.

  19. //சினிமாக்கார கூத்தாடிகளை நம்பி அரசியல் பண்ணுவது -பாரதிய ஜனதாகட்சி ரஜனியை முன்னிலைப்படுத்துவது எனக்கு ஆரம்ப முதலே சுத்தமாக பிடிக்கவில்லை.பணத்துக்காக இவர்கள் எதுவும் செய்வார்கள். அரிதாரதம் புசி நடிப்பவன் பாரதிய ஜனதாக்கட்சி மேடையிலும் நடிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்.//

    அன்புராஜ் தெரிவித்தவை தான் நடை முறை உண்மை.

  20. அன்புள்ள BSV தங்களது கருத்தும் நியாயமானதே.ஆனாலும் இன்றும் பாரதிய ஜனதாக் கட்சி தமிழ்நாட்டில் போதிய அளவு வளரவேயில்லை என்பது நிதா்சன உண்மை. பல ஆயிரம் கிராமங்களில் ஒரு உறுப்பினா் கூட மேற்படி கட்சிக்கு இல்லை.ஆனாலும் ஆதரவு வட்டம் வளா்ந்து வருகின்றது என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும். MP/MLA பெறுவதற்கு அவசரப்பட்டால் சாக்கடையில் குளிக்க வேண்டியதிருக்கும்.அவமானப்பட வேண்டியதிருக்கும்.திரு.வாஜ்பாய் அவர்கள் ஒரு கூத்தாடி பெண்ணிடம்-முதல்வரிடம் அவமானப்பட்டதை மறந்திருக்க மாட்டாா்கள் என்று நினைக்கின்றேன்.இந்த தோ்தலில் இல்லை அடுத்த தோ்தலில் தமிழ்நாட்டில்பாரதிய ஜனதாக்கடசிக்கான MP/MLA எண்ணிக்கை கணக்கு நிச்சயம் புஜ்யம் இல்லை.அதைியாகவும் உறுதியுடன் உழைத்தால் சிறந்த அறுவடை நிச்சயம்.

  21. வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் பேரன்பிற்குரிய ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் சமூஹத்திற்கு

    \\ எனவே நான் முன்பே சொன்னது போல, இராமனா? இரஜினியா? யார் வேண்டும்? என்ற கேள்விக்கு தமிழ்நாட்டு இந்து இயக்கங்களும் பி ஜே பி யும் வைக்கும் ஒரே பதில்: இரஜினியே ! இரஞ்சித்தே !! \\

    திருச்சபைகளில் பேச வேண்டிய வசனத்தை தப்பித்தவறி தமிழ் ஹிந்துவில் பகிர்ந்து விட்டீரோ ஸ்வாமின் 🙂

    ஹிந்துத்வ இயக்கங்களில் ஏதோ ஒண்ணு ரெண்டு தலை அல்லது வால் இரசினிகாந்தனார் வாள்க என்று சொள்லி விட்டார்கள் என்பதற்காக ஒட்டு மொத்த ஹிந்துத்வத்தையும் படாதபாடு பட்டு இரசினியில் விரசமாக புதைக்கும் தேவரீரின் அல்தக்கியாவை தமிழ் ஹிந்து வாசகர்கள் நன்றே அறிவர் 🙂

  22. அல்தக்கியாவை தமிழ் ஹிந்து வாசகர்கள் நன்றே அறிவர்

    அல் தக்கியா அரேபிய வல்லாதிக்க போதனைதானே. BSV க்கு எப்படி பொருந்தும்.
    காபீா்களை பிற மதத்தவா்களை முஸ்லீம் அல்லாத மக்களை எப்படியும் ஏமாற்றலாம் மோசடி செய்யலாம்.பொய் சொல்லலாம் என்ற கருத்துக்கு பெயா்தான் அல்”தக்கியா”. அல் என்றால் மிகச்சிறந்த அல் குரான் என்பதுபோல் Honorific prefix. தக்கியாவிற்கும் அல் பட்டம். அரேபிய வல்லாதிக்கம் காஷ்மீரில் பேயாட்டம் போடுகின்றது. நமது ராணுவம் இன்னும் எத்தனை நாட்களுக்கு கலலெரிபோராட்டத்தை சகித்துக் கொள்ள வேண்டும். கிலானி ….போன்றவா்களை சுட்டுக் தள்ளினால் என்ன நடந்து விடும் ????

  23. ஒட்டுமொத்தம் இந்துத்வர்களும் தமிழ்நாட்டில் காலாவைப்பற்றி மூச்சே விடவில்லை. அப்பட்டமான இந்துமத எதிர்ப்பு அப்படத்தில். ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை. அதற்கு காரணம் நான் சொன்ன 2019 தேர்தல். குட்டிகரணம் போட்டாலும் உண்மையை மறைக்க முடியாது. இராமனை வில்லனாகக் காட்டுகிறான். கேவலம் ஒரு சின்ன எதிர்ப்பையாகக் காட்டியிருக்கக் கூடாதா? வெட்கக்கேடு ! இதற்கு பககம்பக்கமா டிஃபென்ஸூ !!

    திரு அன்புராஜ்! இசுலாம் மதத்தைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள். எனக்கு அதன் டெக்னிக்ல் டேர்ம்ஸ் எல்லாம் தெரியாது. காஃபீர்கள் என்றால் அந்நியமதத்தினர்கள். அவர்களைக்கொல்வது ஜிகாத். அப்படிச்செய்தால் மோட்சம் என்றுமட்டுமே தெரியும். அதைக்கூட ரம்ஜான் மாதத்தில் செய்தால் சிறப்பு என்பதை நீங்கள் கொடுத்த DNA பத்திரிக்கைச்செய்தி இணைப்பில்தான் பார்த்தேன்.

    எல்லாரையும்ம் சுட்டுத்தள்ளலாம்தான். ஆனால் அது உலகப்பிரச்சினையாகி விடும். உலகத்தின் பேச்சைப்பற்றி கவலைப்படாத நிலையை எடுத்த புட்டினால், இராஜபக்சேயால் முடியும். பி ஜே பி வந்தாலும் ஆர் எஸ் எஸ் யே நேரடியாக ஆண்டாலும் உலகப்பேச்சைப் பற்றி கவலைப்படாமல் சுட்டுத்தள்ளுவார்கள் என்று நான் நம்பவில்லை. நீங்கள் நம்புகிறீர்களா?

    இந்தியாவை ஒரு புட்டின் ஆண்டால், ஒரு இராஜபக்சே ஆண்டால், காஷ்மீர் பிரச்சினை என்றோ முடிந்திருக்கும்.

  24. கிலானி ….போன்றவா்களை சுட்டுக் தள்ளினால் என்ன நடந்து விடும் ????
    பல காஷ்மீர் பிரிவினைவாத தலைவா்களுக்கு போலீஸ்பாதுகாப்பு அளித்து வருவது அரசுதான். குறைந்தபட்சம் இந்த தருதலைகளுக்கு அரசு அளித்து வரும் போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றால் போதுமானது.பாக்கிஸ்தான் ஆதரவு காடையா்கள் ஒரு வழி செய்து விடுவார்கள்.

  25. இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனைத்து பிரிவினைவாதிகள்யும் முடித்துவிடலாமே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *