ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

வால்மீகி ராமாயணத்தில் ராவணனின் பெருமைகளும் (குலம், வீரம், தவம், வரங்கள், வித்தைகள் இத்யாதி), அவனது அதர்ம நடத்தைகளும் ( தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தியது, பெண்களைக் கவர்ந்து வந்தது, குரூர குணங்கள்) இணைத்தே பேசப்படுகின்றன. பல இடங்களில் நேரடியாக கவிக்கூற்றாகவும் மற்றும் ராமன், ஹனுமான், விபீஷணன் போன்றோரது எண்ணங்கள், பேச்சுகளின் வாயிலாகவும் இவை வருகின்றன. சிவபக்தன் என்ற குறிப்பு முதல் 6 காண்டங்களில் இல்லை, உத்தர காண்டத்திலேயே உள்ளது, அது பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

காவிய நோக்கில், ராமனைப் போன்று தர்மத்தின் மூர்த்தியாகவும் நற்குணக் கடலாகவும் உள்ள ஒரு மகத்தான நாயகனுக்கு எதிராக, எந்தப் பெருமைகளும் இல்லாத முற்றிலும் தீயவனான எதிர்நாயகனைப் படைப்பது என்பது முதிர்ச்சியற்ற, படுசாதாரணமான ஒரு காவிய அழகியலாகவே இருந்திருக்கும். கிரேக்க, ரோமானிய, செல்டிக் கலாச்சாரங்களின் பழைய காவியங்களும் அவற்றின் பாத்திரங்களும் இந்தப் பாணியில் தான் முற்றான நேர்-எதிர் தன்மைகளுடன் உள்ளன. கடவுள் – சாத்தான் என்ற யூத-ஆபிரகாமிய-கிறிஸ்தவ கருதுகோளும் அப்படியே.

ஆனால் நமது பண்பாட்டின் ஆதிகாவியமான ராமாயணத்தை அளித்த வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், “வீரனே, பண்பாடற்றவளிடம் பண்பாடற்றவன் பேசுவது போலவன்றோ பேசுகிறாய்” என்று சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஏன் அவர் நினைத்திருந்தால், கருப்பு வெள்ளைத்தனமாக ராவணனையும் ராமனையும் சித்தரித்திருக்கலாமே? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது.

இத்தனை நூற்றாண்டு காலமாக, ராமாயணம் பல்வேறு மொழிகளிலும் வடிவங்களும் நமது தேசமெங்கும் மீளமீளக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அடிப்படையான விஷயத்தின் ஆழமும், கனமும் நீர்த்துப் போகவில்லை. ராமனும் சீதையும் பரதனும் லட்சுமணனும் குகனும் அனுமனும் ஜடாயுவும் விபீஷணனும் போற்றப் படுகிறார்கள். ராவணன் போற்றப் படவில்லை, ஆனால் தூற்றப் படவுமில்லை. அவனை வீழ்ச்சியடையச் செய்தது எது என்பதன் வாயிலாகப் புரிந்து கொள்ளப் படுகிறான்.

இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். ராமாயணம் போன்ற ஒரு மகோன்னதத்தை, அதை நமக்களித்த ரிஷிகளின் கவிகளின் மேதைமையின் விசாலத்தை ஒரு சிறிதும் உணரத் திராணியில்லாத சிறு மனங்கள் கொண்ட நிர்மூடர்கள் தான், அதை வெறுப்புணர்வுகளைப் பரப்பவும், தங்கள் அரசியல் / சித்தாந்த காழ்ப்புகளை சித்தரிக்கவும் திரிக்க முற்படுகிறார்கள். இன்று பிறந்து நாளை அழியும் ஈசல்கள் இவர்கள்.

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராமாயண காதை உலகில் நிற்கும்.

யாவத் ஸ்தா2ஸ்யந்தி கி3ரய: ஸரிதஶ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா2 லோகேஷு ப்ரசரிஷ்யதி

(வால்மீகி ராமாயணம் 1.2.36)

*****

சமூகக் குறியீட்டு ரீதியாக ராமாயணத்தை வாசிப்பது என்றால் – ராவணன் ஆதிக்க சாதியான அரக்கர் குலத்தவன். ஆக்கிரமிப்பின், குரூரத்தின், பயங்கர ஆயுதங்கள் கொண்ட ராணுவ படைபலத்தின், வன்முறையின், எளியவர்களை ஒடுக்க நினைக்கும் செல்வச் செருக்கின், அதர்மத்தின் அடையாளம். ராமன் சாமானிய சாதியான மானுட குலத்தவன். அரசகுமாரன் எனினும் சத்தியத்தைக் காக்கக் கானக வாழ்க்கை மேற்கொண்டு எளியவர்களான முனிவர்கள், வனவாசிகளுடன் உடனுறைந்து, கல்லையும் மரங்களையுமே ஆயுதங்களாகக் கொண்ட வானரப் படைகளின் துணையுடன், அதிகபலம் வாய்ந்த அதர்ம அரக்கரை எதிர்த்துப் போரிடும் தர்ம சக்தியின் அடையாளம்.

அதனால் தான், கடலும் இராமனுக்கு வழிதிறக்கிறது, எளிய ஜீவனான அணிலும் தன் பங்குக்கு உதவி செய்கிறது. அதனால் தான் காந்திஜி தனது இலட்சிய அரசாட்சியை ராம ராஜ்யம் என்றழைத்தார். இந்திரா காந்தி சிறுவயதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கிய தன்னார்வலர் தொண்டர் படையை ‘வானர சேனா’ என்றழைத்தார். இந்த மண்ணின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த குறியீடு இது.

இதை அப்படியே திருப்பிப் போட்டு, ராவணனை “வஞ்சிக்கப் பட்டவனாக” (victim) சித்தரிப்பது எந்தவிதமான “புதிய புரட்சியும் ” அல்ல, மாறாக பண்பாட்டு அழிப்புச் செயல். எந்த வரலாற்று ஆதாரமுமில்லாத ஆரிய திராவிட இனவாதத்தை வைத்து திராவிட இயக்க மூடர்கள் தமிழ்நாட்டில் பரப்பி உளுத்துப்போன இழவெடுத்த பொய்ப் பிரசாரத்தை, சாக்கடையிலிருந்து எடுத்து மறுபடி புட்டியில் ஊற்றி பரிமாறும் இன்னொரு விதமான வெறுப்புப் பிரசாரம் மட்டுமே இது. என்னவோ இதில் பயங்கரமான காவிய / இலக்கிய / சினிமா உத்தி எல்லாம் இருக்கிறது என்று புல்லரிக்கும் சிலரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

#ராமன் #ராவணன் #காலா #ரஜினி

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

24 Replies to “ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை”

  1. இராமன் கதை தலைவன் என்றபோதும் இராம நாமம் அதற்கும் முற்பட்டது. இராம என்ற மந்திரத்தின் பொருளை ஓஷோ தன்னுடைய உபநிஷட உரைகளில் ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றிய உரைத்தொடரில் மிக தெளிவாக குறிப்பிடுகிறார். இதிகாச இராமன் ஏராளம் சிறப்பு பெற்ற புருஷோத்தமனாக இருந்ததால் தான் அவனுக்கு இராமன் என்ற புனிதமான பெயர் சூட்டப்பட்டது. இராமன் தன்னுடைய வம்சத்தில் இருந்த முன்னோரைவிடவும் மேலோனாக இருந்தான்.

    அயோத்தி சிம்மாசனத்தை தனது கால்தூசிக்கு சமமாக கருதினான். நம்முடைய இரு இதிகாச நாயகர்களான இராமனும், கிருஷ்ணனும் இருவருமே ராஜரிஷியாக, தாமரை இலை தண்ணீர் போலவே வாழ்ந்தனர்.இராம நாமம் பல பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து என்பது நம் முன்னோர் கண்ட அனுபவம்.

    எங்கள் வீட்டில் தலைமுறை தலைமுறையாக சுந்தர காண்டம் பாராயணம் செய்து விளக்கேற்றி நைவேத்தியம் படைத்து , பல சுப காரியங்கள் நடந்தன என்பது எங்கள் அனுபவம். இராவண காவியம் எழுதிய ஈரோடு புலவர் குழந்தைக்கு தமிழக அரசின் பரிசு கொடுத்து, பிறர் மனை நாடிய இராவணனை உயர்த்திப் பிடித்தது கட்டுமரம் அரசு. சமுதாயத்துக்கே தீய வழி காட்டியவர் கட்டுமரம் . அந்த ஈவேரா வழியில் வந்த பா ரஞ்சித்து என்னும் இயக்குனர் தன்னுடைய படத்தில் ரஜினியை வைத்து வியாபாரம் செய்து , இந்து வெறுப்பு கருத்துக்களை பரப்ப ரஜினியை வைத்து ஒரு முயற்சி செய்துள்ளார். ரஞ்சித்திடம் இருந்து விலகி வேறு டைரக்டரை பிடிப்பது ரஜினிக்கு நல்லது. ராகவேந்திரர் வணங்கி வழிபட்ட மூல இராமர் ரஜினிக்கு நல்வழி காட்டட்டும்.

  2. நல்ல கருத்துக்கள் கொண்ட கட்டுரை. ஆனால் கடுஞ்சொற்களால் அடிபட்டுப் போகிறது. பகிரத் தயங்குவார்கள். நிரம்பப் படித்து அதைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டுமென்ற ஆசையைச் சரியாகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நினைத்த காரியம் நிறைவேறாது. அத்விகாவும் கிருட்டிணக்குமாரும் வாசித்து பாராட்ட எழுதும் கட்டுரைகளினால் என்ன பலன்?

    இப்படி ஒரு திரைப்படத்தில் காட்டலாமா? என்று கேட்ட அனந்தகிருஷ்ணன் பக்ஸீராஜன் என்ற முகநூலருக்கு ஒருவர் இப்படி பதில் சொன்னார்:

    ///இராமாயணத்திலோ, இராமன் சிறப்பிலோ, இராவணனின் கொடுஞ்செயல்களின் மீதோ எங்களுக்குப் பிரச்சினை இல்லை. இதுகாறும் இராமன் சிறப்பாகத்தான் வைக்கப்பட்டான். ஆனால் அந்த இராமன் கமபன் காட்டியது, இராஜாஜியும் காந்தியும் இன்னும் பலரும் போற்றியது. அவனை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், தற்போது இந்துத்வ இயக்கங்கள் இராமனைக் காட்டும் விதம் இராமனை எங்களிடமிருந்து பிரிக்கிறது. (அவர் எழதியதின் சாராம்சம்) இதற்கு முகநூலர் எப்பதிலையும் வைக்கவில்லை.

    இதுதான் எதிர் நோக்கப்பட‌வேண்டியது. முட்டாள்கள்; அறிவிலிகள்; நிர்மூடர்கள்; இழவெடுத்தவர்கள் – என்று சொல்லி முடித்துவிட்டால் மேலே சொல்லப்பட்ட எண்ணத்தை மாற்ற முடியாது. இராமனையும் அனுமாரையும் உங்கள் பதாகைகளில் காட்டும்வரை, அதாவது அரசியல் செய்யும் வரை, இராமன், அனுமனின் புகழை இழிவுபடுத்துவது நீங்களே; இராமனும் அனுமனும் கிருஸ்ணரும் அரசியல் ஹீரோக்கள் அல்லவே அல்ல என்ற அடிப்படை உங்களுக்கு எப்போது புரியும்? அவர்கள் சொல்வது; இப்படி நீங்கள் செய்யாவிட்டால் இராமன் எப்போதும்போலவே எங்களுக்கு இருப்பான் என்பதுதான்.

    இவர்கள் மட்டுமல்லாமல். பொது இந்துக்களின் எண்ணமும் இதே. (இங்கு இல்லை இல்லை எனலாம்). அதாவது இந்துத்வ அரசியல்வாதிகள் எங்கள் மதத்தையே ஹைஜாக்ட் செய்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் எழுதப்படும் விமர்சனங்களை மட்டுமே கணக்கில் எடுத்துத் திட்டக்கூடாது. இந்திய லெவலில் வந்த பத்திரிக்கை விமர்சனங்கள் புதிய உத்தி இது என வியந்துதான் எழதியிருக்கின்றன. போய்ப்படித்துக்கொள்ளலாம்.

    காலா திரைப்படத்தில், நான் என் ஏற்கனவே சொன்னது போல, அதிதீவிரமான தாக்குதல் இக்காவியத்தில் மேல் வைக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து இன்னும் எவருமே வழக்குமன்றம் செல்லவே இல்லை. எவருமே தொலைக்காட்சிகளில் அலறவில்லை. காரணம்: இரஜினியை மனம் நோக வைக்கக்கூடாதென்பதால். இரஜினிக்காக இந்துத்வர்கள் இராமனை விட்டுக்கொடுக்கிறார்கள். ஆனால் இரஜினியோ திரைப்படத்தில் குழந்தையின் இராவண காவியத்தையல்லவா வாசிக்கிறார்? மஜூதியில் தொழுகை நடத்தி முசுலீம்களோடு குலாவி, ஒரு முசுலீம் பெண்ணையல்லவா காதலிக்கிறார்? இவையெல்லவா பரிதாபம்?

    ஜடாயுவும், இரஞ்சித்தும் ஜாதியமைப்பில் இருதுருவங்கள்; மேல், கடை.. இராமனைப்பற்றி இங்கு எழுதப்பட்டவையெல்லாம் பாலபாடங்கள். இதை ஜடாயு சொல்லியா தெரியவேண்டும்? இரஞ்சித்தும் படித்திருப்பார் என்றாலும், எப்படி பார்ப்பனர் மேலுள்ள வெறுப்பு, இந்துமததின் மேலுள்ள வெறுப்பாக ஈ வே ராவுக்கு மாறியதோ அது போல இரஞசித்துக்கும் மாறுகிறது. இரஞ்சித் ஆவடி பக்கம். அங்கு போய் பாருங்கள். அனைத்து தலித்துகளும் புத்தமதம் அல்லது கிருத்துவகளாத்தான் இருக்கின்றார்கள்.

    கொஞ்சம் இறங்கி வாருங்கள்; அவர்களோடு பழகுங்கள். வெங்கடேசனைப் பார்த்து புரியமுடியாது. அப்படி நீங்கள் செய்தால் பின்னர் அவர்கள் இராமனையே முதற்தெய்வமாகக் கொள்வர். அபப்டித்தான் வடநாட்டில் இருந்தது: இராமன் பலவகை பெயர்கள் தலித்துக்கள்தான் வைத்துக்கொண்டார்க்ள். இன்று, இராமன் மேறசாதியினரால் எடுக்கப்பட்டு அரசியலாக்கப்பட்டதால் தலித்துகள் விலகி விட்டார்கள். தலித்துக்களிலேயே ஒரு சாமியார் வந்து இராமனை முன்னெடுத்தால் மட்டுமே இராமன் தலித்துகளால் வணங்கப்படுவான். ஆனால் அப்படியே ஒருவர் வந்துவிட்டால், கொஞ்ச காலத்தில் இந்துத்வர்களின் ஹீரோவாகப்போக தலித்துகள் அவரை தொப்பென்று போட்டுவிடுவார்கள். உடனேயே இந்து.காமில் கட்டுரை வந்துவிடும்.

    இந்துத்வ அரசியல் தலித்துக்கள் இந்துமதத்தை விரும்ப இடையூறாக இருக்கிறது. இதைப்புரியாதவரை, எத்தனை பத்திகள், கட்டுரைகள் இராமன் புகழ் பாடினாலும் வீண்தான். இந்துத்வ அரசியலில் தலித்துகள் இருக்கலாம். பதவிக்காக.

  3. உங்களது வளவளா வாதங்களின் உண்மையான நோக்கம் எங்களுக்கு நன்றாகத் தெரியும் மிஸ்டர் BSV.

    // இராமனையும் அனுமாரையும் உங்கள் பதாகைகளில் காட்டும்வரை, அதாவது அரசியல் செய்யும் வரை, இராமன், அனுமனின் புகழை இழிவுபடுத்துவது நீங்களே; //

    ராமஜன்ம பூமி இயக்கத்தின் போது அதை முன்னெடுத்த வி.ஹெச்.பி அனைத்து கட்சிகளுக்கும் போராட்டத்தை ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்தது. அதற்கு ஒரு கட்சியாக செவிசாய்த்தது பாஜக மட்டுமே (பல தனிப்பட்ட காங்கிரஸ் & மற்ற கட்சி அரசியல்வாதிகள் தங்கள் கட்சியிலிருந்து விலகி போராட்டத்திலும், அதில் சிலர் பின்பு பாஜகவிலும் இணைந்தார்கள்) அந்த சூழலில் தான் பாஜகவின் கூட்டங்களிலும் ராமநாமமும் ராமர் திருவுருவங்களும் இடம்பெற்றது. இந்த இயக்கம் இந்தியாவின் அரசியலையே புரட்டிப் போட்டு மாற்றியது. அதற்குப் பின்பு இந்துமத சின்னங்களை (ராமர், அனுமார் மட்டுமல்ல, திரிசூலம், விநாயகர், துர்க்கா தேவி எல்லாம் தான்) பாஜகவும் இன்னபிற அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நிறுவனங்களும் வெளிப்படையாக பெருமிதத்துடன் காட்சிப் படுத்தும் போக்கு உருவாயிற்று. அதற்கு முன்பு வரை முஸ்லிம் தொப்பி / ரம்ஜான் கஞ்சி, கிறிஸ்தவ பாதிரிகளுடன் குலாவல் / ஏசுவைப் புகழ்தல் ஆகியவற்றை எந்த தயக்கமுமில்லாமல் செய்து வந்த செக்யுலர் அரசியல்வாதிகள், இந்துமத செயல்பாடுகள் என்றால் வசைபாடுவது / எதிர்ப்பது / வெறுப்பது அல்லது தனிப்பட்ட அளவில் ஏதோ வெட்கத்திற்குரிய செயல் போல போலித்தனமாக செய்வது என்ற நிலைமை தன இருந்தது (உங்களால் புகழப்படும் திமுக கட்சியினர் இந்த 2018ம் வருடம் கூட இப்படித் தான் செய்துகொண்டிருக்கிறார்கள் – அறிவு கெட்ட வெட்கங்கெட்ட முண்டங்கள்).

    பாஜக ராமர் / அனுமார் படத்தைப் போடுவதால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கே ராமர் / அனுமார் மீது வெறுப்பு ஏற்படுகிறது என்ற உங்கள் அசிங்க தியரிக்கு என்ன ஆதாரம்? அப்படியானால், தமிழ்நாட்டு மக்களின் பக்தி அவ்வளவு கேனத்தனமானதா? அந்த பக்தியின் அளவுகோல் பாஜக கட்சி என்ன செய்கிறது என்பதை வைத்துத் தான் தீர்மானிக்கப் படுகீறதா? இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை? இயக்குனர் ரஞ்சித்தும் மற்ற இந்து வெறுப்பாளர்களும் தனித்தமிழ் பிரிவினைவாதிகளும் திட்டமிட்டு செய்யும் இந்துமத அவமதிப்புக்கு ஏதோ பாஜகவும் இந்த்துவமும் தான் காரணம் என்று நிறுவ முற்படும் உங்கள் உண்மையான நோக்கம் என்ன?

    பாஜக அட்சியில் / அதிகாரத்தில் இல்லாத எத்தனையோ பிரதேசங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் இப்படித் தான் ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் இந்துமத வெறுப்பு, குறிப்பாக ஸ்ரீராமன் மீதும் ராமாயணம் மீதுமான வெறுப்பு கக்கப் படுகிறதா? இல்லையே.. பிரசினையின் வேர் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மத அதிகார பீடங்களுக்கு அடிமை நாய் போல செயல்படும் திராவிட / தலித் / இடதுசாரி இயக்கங்களின் வெறுப்பரசியலில் உள்ளது. அதை அடையாளப்படுத்தி அழிப்பது ஒன்றே இதற்குத் தீர்வு. ஜடாயு மிகச்சரியாக குறிவைத்து அதைக் கண்டித்திருக்கிறார்.

    // இந்துத்வ அரசியல் தலித்துக்கள் இந்துமதத்தை விரும்ப இடையூறாக இருக்கிறது. // என்பது சுத்த உளறல். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் பாஜக தான் அதிகபட்ச ரிசர்வ் தொகுதிகளில் வெல்கிறது (சமீபத்திய கர்நாடக தேர்தல் உட்பட). எஸ்.சி எஸ்.டி மக்கள் பாஜகவுக்குத் தான் மற்ற அனைத்துக் கட்சிகளையும் விட அதிக அளவு ஆதரவளிக்கீறார்கள். எதையாவது தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க.

  4. சக்திவேல் , Thank you for your incisive reply to the eternal irritant and the crypto christian Joe BSV. Not that it will affect him. He will return like a bad penny, again and again in various avatars.
    I am very disappointed with Rajni but in way, he has exposed himself to what he truly is. An opportunistic, sly actor and nothing more. He has simply sold himself to the anti Hindu brigade.

  5. இராவணன் பற்றிய இலங்கைவாழ் சின்ஹல பவுத்தர்களின் கருத்து முற்றிலும் மாறுபட்டது. அவர்களைப் பொறுத்தளவில் இராவணன் ஓர் சின்ஹல பவுத்த அரசன். ராஜவளிய ராவணவலிய எனும் நூல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. முதல் முதலான சின்ஹல தேசியத்தின் அடையாளம் மட்டுமன்றி இவரே அந்நிய ( இந்திய) நாட்டின் படையெடுப்பை எதிர்த்துப் போரிட்டவர்.பலவிதமான திறமைகளைக் கொண்ட இம் மன்னனின் மருத்துவம் சம்பந்தப்பட்ட நூல்கள் சின்ஹலத்தில் எழுதப்பட்டவையாகும் .பின்பே சமஸ்கிருதத்தீட்கு மொழிபெயர்க்கப் பட்டன.இலங்கையில் முன்னூறுக்கும் மேற்பட்ட சினஹலக் கிராமங்கள் ராவணனின் ஆட்சியோடு சம்பந்தப் பட்டவை.இராவணன் என்ற பெயரைத் தவிர இன்னும் பல பெயர்களால் இவர் அழைக்கப் பட்டுள்ளார்.
    கவுதம புத்தருக்கு முன்பாக இருந்த 27 புத்தர்களில் ஒருவரான கோணகம புத்தர் ( 3வது ) இவருக்கு மகாயன பவுத்தத்தின் முக்கிய நூலான lankavatara sutraத்தை போதித்துள்ளார். இது இவர் பவுத்தர் என்பதை நிறுவும் இன்னொரு சான்று. இதன்மூலம் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை கவுதம புத்தரின் வருகை என்பன வரலாற்று ரீதியாக முரண்பட்டாலும் ராவணன் பவுத்தனே என்பதில் உறுதியாய் உள்ளனர்.சின்ஹலவர்கள் பலர் இதுபற்றி கட்டுரைகள் நூல்கள் நாட்டிய நாடகங்கள் எழுதியுள்ளனர்.ஈழப் போர் முடிவடைந்ததின்பின் இக் கருது மிகவும் முன்எடுக்கப்பட்டு வருகின்றது. Ravana Balaya ( Ravana Force ) எனும் சின்ஹல பவுத்த தீவிர சிந்தனையாளர்கள் இதில் முன் நிற்கின்றார்கள். மவ்பிம என்ற சின்ஹல பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் Mirando Obeysekera என்பவரின் நூல்கள் இத்தீவிரவாதக் கருத்துக்களை முன்வைப்பதில் முன்னணியில் உள்ளன.
    எனவே இராவணன் சைவத் தமிழன் என்ற கருத்துக்கள் எல்லாம் இலங்கை சின்ஹல பவுத்தர்களிடையே செல்லுபடியாகாது. அதுமட்டுமல்ல விபிஷணன் தனது சகோதரனை அந்நியனுக்கு காட்டிக்கொடுத்த துரோகி என்பதும் இவர்களது கருத்தாகும்.

  6. Saktivel and Dr Ramakrishnan, Many thanks for reading me and responding to me. When everything goes overboard, you’ll come round to my view.

    இரிஷி எழுதியதில் இராமாயாணத்தைப் பற்றி ஒன்றுமே இல்லை. இராவணன் பவுத்த மன்னன் என்றால் அந்நிய மன்னர்களை எதிர்த்துப் போரிட்டானென்றால், இராமாயணத்திற்கும் அப்பவுத்த மன்னனுக்கு தொடர்பே இல்லை. அப்படியே அவன் பவுத்த மன்னன் என்று எடுத்துக்கொண்டாலும், அவன் எதிர்த்து போரிட்ட அந்நிய மன்னர்களுள் அயோத்தி மன்னனும் உண்டா? அந்நிய மன்னர்களை இலங்கைத்தீவினுள்ளேயே எதிர்த்தான் என்றால், கடலைத்தாண்டி வந்தனரா? எதிர்த்துப்போரிட்ட மன்னர்களுள் எல்லாருமே நிலத்திற்காகப் போரிட்டார்களா? அல்லது வேறு காரணங்களுக்காகவா? அக்காலத்து மன்னர்கள் ஆநிரை கவர்தல், பெண்டிரைக் கவர்தல் இது போன்ற பலவற்றுக்காகவும் போரிட்டுக் கொண்டனர். அப்படியென்றால் எதிர்த்த மன்னர்களுள் ஒருவனின் பட்டத்து இராணியை இலங்கைப் பவுத்த மன்னன் கடத்திச் சென்றதாக இலங்கைப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறதா? அதாவது கடலகடந்து இந்தியா வந்து தமிழகத்து மன்னன் ஒருவனின் ராணியைக் கவர்ந்தானென்றால் நம்பும்படியாக இருக்கிறது. மாறாக 3000 மைலகளுக்கப்பால் உள்ள நாட்டு மன்னனின் ராணியைக்கவர முடியுமா?

    என்னதான் இலங்கைப் புராணங்கள் சொன்னாலும் இராமாயணத்தோடு தொடர்பில்லை. இலங்கையைப் பவுத்த மன்னன் ஆண்டதும் அவன் போரிட்டது இலங்கையைத் தாக்கி அபகரிக்க வந்த தமிழ்நாட்டு மன்னனகளோடும்தான் இருக்கலாம். இலங்கேஸ்வரன் சிங்களவன்; எதிர்த்த மன்னர்கள் தமிழர்கள் என்பது சரியாக வருகிறது.

  7. Dr Rama Krishnan

    Thanks for your response. srilankaguardian and colombo telegraph are two websites ( run by Sinhalese ) you should read to know about Srilanka’s current situation, mostly political and reveal Sinhalese point of view.

    To know tamils’ point of view and history please visit noolaham.org, sangam.org, and tamilnation.co The last website is closed now but access to read the articles is possible. There are history books journals magazines available in noolaham website which you will find very useful and interesting.

    Buddhism Betrayed is a book banned in Srilanka. This book ( amazon) as well as several articles appearing in the net on srilankan Buddhism throw more light on hardcore violent political Buddhists / monks / armed forces.

  8. அன்பர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ சாஹேப்,

    சக்திவேல் நன்றாகவே மண்டகப்படி கொடுத்துவிட்டார். பின்னும் விட்டுப்போன ஒரு சில விஷயங்களை சொல்லிவிட வேண்டும்.

    \\ இதுகாறும் இராமன் சிறப்பாகத்தான் வைக்கப்பட்டான். ஆனால் அந்த இராமன் கமபன் காட்டியது, இராஜாஜியும் காந்தியும் இன்னும் பலரும் போற்றியது. அவனை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், தற்போது இந்துத்வ இயக்கங்கள் இராமனைக் காட்டும் விதம் இராமனை எங்களிடமிருந்து பிரிக்கிறது. (அவர் எழதியதின் சாராம்சம்) இதற்கு முகநூலர் எப்பதிலையும் வைக்கவில்லை. \\

    ஹிந்துத்வம் பற்றி பாக் சார் எதிர்மறையாகச் சொல்ல விழையும் பல விஷயங்கள் என் கண்ணில் பட்டால் நிச்சயமாக அதை மறுதலித்திருக்கிறேன். இது என் கண்ணில் படவில்லை.

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அறிவு பூர்வமாக கருத்து முன் வைக்க முடியும் என்றால், ஹிந்துத்வ இயக்கங்கள் காட்டும் ராமன் கம்பன் காட்டிய மற்றும் ராஜாஜி, காந்தியடிகள் காட்டும் ராமனிடம் இருந்து எப்படி வேறுபட்டவர் என்பதை இந்த தளத்தில் பதியப்பட்டுள்ள வ்யாசங்களில் இருந்து நேரடியாக சுட்டிக்காட்டி உங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வையுங்கள். இல்லையென்றால் நீங்கள் இல்லாத ஒன்றை எப்போதும் இருப்பது போல வெற்றுக்கூச்சலிடுவதாகவே ஆகும்.

    \\ இதுதான் எதிர் நோக்கப்பட‌வேண்டியது. \\

    எதிர்நோக்கப்பட வேண்டியது எது என்பதை முந்தைய வாசகத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறேன்.

    \\ இவர்கள் மட்டுமல்லாமல். பொது இந்துக்களின் எண்ணமும் இதே. (இங்கு இல்லை இல்லை எனலாம்). அதாவது இந்துத்வ அரசியல்வாதிகள் எங்கள் மதத்தையே ஹைஜாக்ட் செய்துவிட்டார்கள். \\

    உங்களின் எண்ணப்பாங்கு எப்படி அதற்கான காரண விசேஷம் என்ன என்பதை தமிழ் ஹிந்து வாசகர்கள் நிச்சயம் அறிவார்கள். உங்களது எண்ணத்தை எதுக்காக பொது ஹிந்துக்களின் எண்ணம் என்று கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மீது திணிக்கிறீர் ஸ்வாமின்?

    வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஐயா அவர்கள் கூச்சல் போட உரிமையிருக்கிறது என்பதால் தமிழ் ஹிந்து இதை ப்ரசுரித்திருக்கிறது என நினைக்கிறேன்.

    \\ தமிழ்நாட்டில் எழுதப்படும் விமர்சனங்களை மட்டுமே கணக்கில் எடுத்துத் திட்டக்கூடாது. இந்திய லெவலில் வந்த பத்திரிக்கை விமர்சனங்கள் புதிய உத்தி இது என வியந்துதான் எழதியிருக்கின்றன. போய்ப்படித்துக்கொள்ளலாம். \\

    கழிசடைத்தனமாக கருத்துதிர்ப்பது தமிழகத்து தீராவிடத்திற்கு மட்டிலுமே ஆன தனிச்சொத்தா என்ன சொல்லுங்கள் ஜோ ஸ்வாமின் 🙂

    உங்களைப் போலவே ஆப்ரஹாமியத்துக்கு குரல் கொடுக்க வேண்டி……………..

    அதை நீங்கள் செய்வது போலவே ………

    நேரடியாக ஆப்ரஹாமியத்தை ஆதரிப்பதை அபூர்வமாக வைத்துக்கொண்டு ……………….

    ஹிந்து மதத்தை இழித்துப்பழிப்பதை முழுநேர வேலையாக வைத்துக்கொண்டது போல……………………

    ஹிந்து மதத்தை சகட்டு மேனிக்கு இழித்து பழிப்பதை செயற்பாடாகக் கொண்ட ஜே என் யு விலிருந்து கூச்சலிடும் மதவாத தேசப்பிரிவினைவாத கும்பல், பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட மொனோபொலியாக இது வரை கோலோச்சி வந்த (இப்போது மொனொபொலி காலி) மாவோவாத இடதுசாரி கும்பல் என பலப்பல மறைமுக ஆப்ரஹாமிய கும்பல் ஹிந்துஸ்தானமளாவி உண்டு இல்லையா?

    பாம்பின கால் பாம்பறியும் என்ற படிக்கு பிரிவினைவாதிகள், இடதுசாரிகள் இவர்கள் எழுதிய எழுத்துக்கள் தான் உங்கள் கண்ணில் தென்படும் இல்லையா? அதில் சாரம் இருக்கோ இல்லையோ? அதைப்படிப்பதில் தப்பில்லை. அதில் சாரம் உள்ளதா தர்க்கம் உள்ளதா? மாற்றுக்கருத்தினை யார் யார் சொல்லியிருக்கிறார்கள் என்பதனையும் சீர் சீர் தூக்கிப்பார்க்கவும். மாற்றுக்கருத்துக்களையும் கருத்தில் கொள்ளவும்.

    கற்பார் ராமபிரானையல்லால் மற்றொன்றும் கற்பரோ என்பது ஆழ்வார் வாக்கு. *******ஸ்ரீ வைஷ்ணவர்கள்***** தலைமீது வைத்துக்கொண்டாடும் சாஸ்த்ரம் ஸ்ரீமத் ராமாயணம். சரணாகதி சாஸ்த்ரம்.

    இந்த தளத்தில் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற பெயரிலும் பின்னர் TAMIL என்ற பெயரிலும் பின்னர் பாலசுந்தரம் க்ருஷ்ணா என்ற பெயரிலும் பின்னர் பாலசுந்தர விநாயகம் என்ற பெயரிலும் கொஞ்சம் கொஞ்சமாக பெயர் சுருங்கி தத்சமயம் BSV என்ற பெயரிலும் எழுதி வரும் தேவரீர் …………. மற்றைய தளங்களில் திருவாழ்மார்பன் என்ற பெயரிலும் குலசேகரன் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறீர் அல்லவா?……………தம்மை *****சிரி வைணவன்****** என்று அடையாளப்படுத்த விழையும் தேவரீர்………….

    ராமனைப் பழித்து ராவணனை விதந்தோதும் இந்த கந்தறகோளத்தை *****இந்திய லெவலில் வந்த ப(ர)த்திரிக்கை விமர்சனங்கள் ****** புதிய உத்தி இது என வியந்து எழுதியிருக்கின்றன என புளகாங்கிதமடைகிறீர் 🙂 🙂 🙂 🙂 இது ராமசாமிக்கு வெளிச்சமா ராமசாமி நாயக்கருக்கு வெளிச்சமா அல்லது வெளிச்சம் பிடிக்காத இருட்டு பிடித்த பீ எசுக்கு வெளிச்சமா என்பது ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவுக்கே வெளிச்சம் 🙂 🙂 🙂 🙂

    தேவரீரது உள்நோக்கத்தைப் பற்றி சக்திவேல் ப்ரஸ்தாபித்திருக்கிறார். பின்னிட்டும் கைப்புண்ணுக்கு கண்ணாடியும் காட்டுவது நமது கடமை என்பதால் மேல் விபரத்தை பகிர்ந்திருக்கிறேன்.

    \\ அதை எதிர்த்து இன்னும் எவருமே வழக்குமன்றம் செல்லவே இல்லை. எவருமே தொலைக்காட்சிகளில் அலறவில்லை. காரணம்: இரஜினியை மனம் நோக வைக்கக்கூடாதென்பதால். இரஜினிக்காக இந்துத்வர்கள் இராமனை விட்டுக்கொடுக்கிறார்கள். \\

    ஹிந்துத்வம் ஒட்டுமொத்த ஹிந்துக்களின் நலனுக்காக.

    அரசியல் சாஸனப்படி சொல்லப்படும் வரையரையான ஹிந்துக்கள் மட்டிலும் அல்லாமல்………………… தேசஒருமைப்பாட்டிலும் ஆயிரமாயிரம் காலத் தொன்மை வாய்ந்த பொதுப் பண்பாட்டிலும் நாட்டமுள்ள …………ஹிந்துக்களொடு இணக்கமாக வாழவிழையும்…………. க்றைஸதவ முஸ்லீம் சஹோதரர்களையும் கூட ஹிந்துவாகவே ஹிந்துத்வ இயக்கங்கள் கருதுகின்றன.

    ஹிந்துத்வம் எந்த ஒரு தனிநபரின் வெற்றி தோல்விக்காக இல்லை. அதில் ரஜினியும் அடக்கம்.

    எந்த ப்ரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்பது ஹிந்துத்வ இயக்கங்களுக்கு நன்றாகத் தெரியும். பாக்ஸ் ஆஃபீஸில் ஃபெயிலான படத்துக்கு ஹிந்துத்வ இயக்கங்கள் முட்டுக்கொடுத்து கச்சேரிக்குப் போய் வழக்காடி அது போதாதென்று கல்விக்கொள்ளையர்கள், மணல்கொள்ளையர்கள், சிலைக்கொள்ளையர்கள் நடத்தும் தொல்லைக்காட்சிகளில் வேற ஹிந்துத்வ இயக்கங்கள் அலற வேணுமாம். எதற்கு. காலியாக இருக்கும் தியேட்டர்களில் ஓடும் லூஸுத்தனமான படத்துக்கு ஆள் சேர்ப்பதற்கா?

    உங்களுடைய உள்நோக்கம் தோல்வியடைந்த ரஜினி படத்துக்கு கும்பல் சேர்ப்பதா? ரஞ்சித்தின் படுதோல்வியடைந்த படத்தை எப்படியாவது முட்டுக்கொடுத்து தோல்வியிலிருந்து காப்பாத்துவதா?

    வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் உங்களை உங்களுடைய மெய்யான தேவன் இளைப்பாற்றுவாராக 🙂 🙂 🙂 🙂

  9. BSV

    What I have mentioned in my comments ( 13th June 4.33 pm) are not my personal views. Those are the views of Sinhalese. I wanted non Sinhalese particularly the readers of tamilhindu to know how Sinhalese view Ravana. I have not mentioned their views fully on Ravana and anything about Ramayana owing to my difficulties in typing tamil.

    Please type mirando obeysekera in google to read more in this respect. I have mentioned a few websites names in my reply to Dr Rama Krishnan and if interested please go through those sites to find out more on srilankan history politics literature etc.

    I appeal other readers too to read those sites to learn the plight of Hindus in Srilanka.

  10. பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரிஷி ஐயா,

    சிம்ஹல வாசிகளின் நூற்குறிப்புகளைப் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா.

    ராஜவலிய ராவணவலிய நூற்களின் காலம் எது? நூலை படைப்பாய்வு செய்தவர்கள் இந்நூலுக்கு குறிக்கும் காலம் எது என்று பகிர இயலுமா?

    \\ இம் மன்னனின் மருத்துவம் சம்பந்தப்பட்ட நூல்கள் சின்ஹலத்தில் எழுதப்பட்டவையாகும் .பின்பே சமஸ்கிருதத்தீட்கு மொழிபெயர்க்கப் பட்டன. \\

    சிம்ஹல பாஷையிலிருந்து ஸம்ஸ்க்ருத பாஷைக்கும் நூற்கள் சென்றிருக்க வாய்ப்புகள் உண்டு தான். ஆனால் சொல்லப்படும் நூற்கள் அப்படியானவை என்று ஆய்வாளர்களால் ஆய்ந்தறிந்து சொல்லப்படுகிறதா? அல்லது சிங்களவர்களால் கூச்சலிடப்படுகிறதா?

    \\ இலங்கையில் முன்னூறுக்கும் மேற்பட்ட சினஹலக் கிராமங்கள் ராவணனின் ஆட்சியோடு சம்பந்தப் பட்டவை.இராவணன் என்ற பெயரைத் தவிர இன்னும் பல பெயர்களால் இவர் அழைக்கப் பட்டுள்ளார். கவுதம புத்தருக்கு முன்பாக இருந்த 27 புத்தர்களில் ஒருவரான கோணகம புத்தர் ( 3வது ) இவருக்கு மகாயன பவுத்தத்தின் முக்கிய நூலான lankavatara sutraத்தை போதித்துள்ளார். இது இவர் பவுத்தர் என்பதை நிறுவும் இன்னொரு சான்று. \\

    காரண்டவ்யூஹ ஸூத்ரத்தில் ஆர்ய அவலோகிதேஸ்வரர் உமாதேவிக்கும் சிவபெருமானுக்கும் பௌத்ததம்மத்தை போதிப்பதாகவும் அந்த தம்பதியர் அதைக்கேட்டுணர்ந்து பௌத்தத்தைத் தழுவி பின்னர் போதிசத்வர்களாக ஆவர் என்று ஆர்ய அவலோகிதேஸ்வரர் அருளியதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானால் சிவபெருமானும் உமாதேவியும் போதிசத்வர்கள் என்பதற்கு காரண்டவ்யூஹ ஸூத்ரம் சான்று என்று சொல்லலாகுமா?

  11. Rishi!

    நானும் உங்கள் கருத்தாக அதைக் காட்டவில்லை. எப்படி புத்தமதத்தினர் இராமனையும் இராவணனையும் கருதுகிறார்கள் என்பதை நீங்கள் சொல்ல, நான் வியக்கிறேன். ஏனென்றால், காலா திரைப்படமும் அதைத்தான் காட்டுகிறது. இரஜினி தன் வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்: மேஜையில் இராவணகாவியம் நூலிருக்கிறது. வீட்டில் எந்த இந்துக்கடவுளர் படமும் இல்லை. புத்தர் சிலை இருக்கிறது. சுவரில் புததர் படம் அமேத்கர், புலே படங்களுக்கு நடுவில். இருவரும் புத்தமதத்தினர். பீம் வாடாவில (அதுதான் இரஜினி வாழுமிடம்), ஒரு புத்த விஹாரம் இருக்கிறது. அது தீப்பிடித்து எரியவில்லை. ஆக, காலாவில் இரஞ்சித் காட்டுவதும் இலங்கை சிங்களவரின் கொள்கையே; இராவணன் ஹீரோ, இராமன் வில்லன்.

    இதில் ப்ளைட் ஆஃப் ஹிந்துஸ் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. இன்னொரு நாட்டினர் நம் நாட்டு இதிகாசத்தை அவர்கள் விரும்பிய வண்ணம் எழுதுக்கொள்வதும், கருதிக்கொள்வதையும் எப்படி தடை செய்ய முடியும்? நம் நாட்டிலேயே நம் இதிகாசத்தை மாற்றி, இராமன வில்லனாகக் காட்டும்போது மட்டும்தாம் நாம் அப்படிப்பட்ட ”தடை செய்” என்ற கோரிக்கையை வைக்கலாம். ஆனால் ஒருவருமே காலா படத்தை தடை செய் என்று கோரிக்கை வைக்கவில்லை. ஏன்

  12. திரு கிருஷ்ணகுமார் அவர்கட்கு

    பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரிஷி ஐயா என எழுதி இருந்தீர்கள். ஐயா இதனை வாசிப்பது கூச்சத்தை தருகின்றது. முன்பு Dr Rama Krishnan அவர்களும் ஸ்ரீ ரிஷி என எழுதி இருந்தார்.நான் ஓர் சாதாரண மனிதன்.அன்பைத் தவிர வேறு எதையும் விரும்பாதவன்.மாலை மரியாதை பொன்னாடை என்பவற்றைக் கண்டால் வெகு தூரம் ஓடிப்போபவன். சும்மா ரிஷி என்று அழைத்தாலே போதும்.நமக்குள் வேறு எதுவும் வேண்டாமே.

    ராஜவளியவின் காலம் சில ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது .எனக்கு சரியாகத் தெரியாது.இந்நூல் 1995ல் மீள் பதிப்பிடப் பட்டுள்ளது ASIAN EDUCATIONAL SERVICES மூலம்.நூலஹம் இணையத தளத்தில் பார்க்கலாம்.இலங்கை மன்னர்களின் வரலாறு இந்த நூலில் உள்ளது.பல்வேறு கட்டுரைகள் ராஜவளிய ராவணவளிய பற்றி இணையத்தளத்தில் உள்ளன. ராவணனின் குகையும் பாதையும் சீதை வைக்கப் பட்டிருந்த இடம் குளித்த தடாகம் இப்படிப் பலவற்றின் படங்களையும் இணையத்தில் பார்க்கலாம்.இவ் இடங்களுக்குப் போனவர்களால் — பெரும்பாலும் சிங்களவர்கள் —-எடுக்கப் பட்டவை. Miranda Obeysekare இராவணன் வரலாறு பற்றி முப்பது வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்துள்ளார்.இராவணன் சின்ஹலவனே என நிரூபிப்பதில் முன் நிற்பவர். சிங்களத்தில் பல கட்டுரைகளும் நேர்காணலும் செய்துள்ளார். இவருக்குத் துணையாகப் பல சிங்கள இன மத வெறியாளர்கள் உள்ளனர். Mawbima என்ற சிங்கள இணையத்தளம் இவர்களுக்கு உறுதுணை.சென்ற பத்து பதினைந்து வருடங்களாக சிங்களவர்களிடையே இது ஓர் எழுச்சியாக ஊடகங்களில் செயற்படுகின்றது.

    Ahubudhu என்பவரின் sakvithi ravana ( 1988)எனும் நூலில் ராவணவளியவை மேற்கோள் காட்டி இராவணன் சூரிய வம்சத்தை சேர்ந்த சிங்களவன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது எனவும் கட்டுரைகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    Please read the following for further details:

    Ravana is a hero for sinhala nationalists –article by P K Balachandran appeared in Hindustan Times 23. 09. 2007
    Ashoka Vatika Lankapura in Ramayana –article appearing in srilankaseals.com

    Ravana king of lanka –book by Miranda Obeysekere (in sinhala and english —amazon )

    Once a nuclear power……….article by Ravi Perera appearing in Colombo Telegraph 07. 08. 2014

    Ravana & Sinhala Buddhism article by N M Kalugampitiya appeared in Colombo Telegraph 29. 07. 2015
    மீண்டும் சந்திப்போம்.

    Tamilhindu தற்பொழுது வாசகர்களின் கருத்துக்களை தாமதம் இன்றி உடனடியாகவே பிரசுரிக்கின்றது.மிகவும் மகிழ்ச்சி.நன்றியும்.

  13. BSV

    தூத்துக்குடி சம்பவத்தின் பிரதிபலிப்பாக இங்கு லண்டனிலும் இலங்கையில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு வவுனியா போன்ற இடங்களிலும் காலா படத்தினைக் காட்டக் கூடாதெனவும் ரஜனிக்கு எதிராகவும் சிறிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை இலங்கையிலோ அன்றி புலம் பெயர்ந்த நாடுகளிலோ எந்தவொரு இந்து அமைப்பும் தமது சமய நோக்கில் காலாவை அவதானித்து ஒரு சிறு துளி மூச்சும் விடவில்லை. இனிமேலும் விடாது என்பது உறுதி. அரோகரா போடும் இக் கேடுகெட்ட கூட்டங்களுக்கு செக்கும் ஒன்றுதான் சிவனும் ஒன்றுதான்.

  14. Shri Rishi, Thanks for the links. I will have look at them when time permits. Please keep up your good work. Thanks once again.

  15. அன்பின் ஸ்ரீ ரிஷி ஐயா…………

    ஸ்ரீமத் ராமாயணத்தின் மூலம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம். இருக்கும் ராமாயண நூற்களில் மிகவும் தொன்மையான நூல் இது.

    ராமாயண கதையையும் அல்லது ராமாயண கதாபாத்திரங்களை வைத்து எழுதப்பட்ட ஒவ்வொரு பிற்காலத்திய ராமாயண நூலுக்கும் ஆதாரநூல் இது தான்.

    பௌத்த ஜைன சமயத்து ராமாயண நூற்கள் காலத்தால் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்துக்குப் பின் எழுந்தவை என்பதனை படைப்பாய்வில் ஈடுபட்ட அறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

    ராவணவலிய போன்ற நூற்கள் சிங்கள் மொழியில் எழுதப்பட்டிருக்கும் அல்லவா? சிங்கள் மொழியின் காலமே சில ஆயிரம் வருஷங்கள் என்ற கணக்கில் இருக்காது என நினைக்கிறேன். இந்த ப்ராந்தியத்தின் மிகவும் இளைய மொழி எனத் தான் சிங்கள மொழியை நினைக்கிறேன். சில ஆயிரம் வருஷ முன்பு சிங்கள் மொழியில் எழுதப்பட்ட நூல் என்பது ஒரு ஆதாரமிலா மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்றே நினைக்கிறேன். ஒரு சில கருத்துருவாக்கங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டி எழுதப்பட்ட மற்றைய ராமாயண நூற்களின் வரிசையில் இதையும் சேர்க்கலாம். ஆனால் மற்றைய கருத்துருவாக்க அடிப்படையிலான பௌத்த ஜைன ராமாயண நூற்கள் சமயக்கொள்கையை நிர்த்தாரணம் செய்ய எழுதப்பட்டவை. இந்த சிங்கள ராமாயணம் இவர்களது கால்பனிக சிங்கள சரித்ரத்துக்கு முட்டுக்கொடுக்க எழுதப்பட்டது என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

  16. வெறும் விமரிசனத்துக்கு மீறி ஒரு தோற்றுப்போன படத்துக்கு அதிகமான விசாரம் தேவையில்லை. ஆகையினாலே மலெயாவிலோ லங்கையிலோ இது பற்றி அதிகம் சலனமில்லை என்றால் அதை பொருட்படுத்தத் தேவையில்லை. லங்கையிலே அரசாங்கத்தின் ஹிந்துமதத்துறைக்கான மந்த்ரியாக ஒரு முஸ்லீமை நியமித்துள்ளது லங்கையின் மத்திய சர்க்கார். மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தார். அதன் விழியம் இணையம் வாயிலாகக் கிட்டியது. தற்போதைக்கு ஈழத்தமிழர் எதிர்க்க வேண்டிய முதன்மையான விஷயம் இதுவே எனப்படுகிறது. காலியாகிப் போன காலா இல்லை 🙂

  17. அன்பின் க்ருஷ்ணகுமார்,
    இலங்கையிலே அரசாங்கத்தின் ஹிந்துமதத்துறைக்கான மந்திரியாக ஒரு முஸ்லீமை நியமித்துள்ளதை தமிழ் இனவாதிகளின் போலிதனம் அம்பலபடுத்தும் ஒரு நடவடிக்கையாக பார்க்கலாமே!
    நான் அறிந்து கொண்டதன்படி மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் மாட்டிஇறைச்சிக்கு எதிராகவும் குரல் கொடுத்திருந்தார். இலங்கை புத்த மதத்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் மட்டும் சொந்தமான ஒரு நாடாகும். இதை மதிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றார். உடனே இலங்கையில் உள்ள தமிழ்வாதிகள் யார் இந்த மத வெறியை தூண்டும் சச்சிதானந்தன்?இந்திய இந்துக்களின் கை பொம்மையா?இலங்கை தமிழர்களும், முஸ்லீம்களும் இரட்டை குழல் துப்பாக்கிகள். இருவரும் இணைந்து புத்த மதத்தை தகர்ப்போம் என்றார்கள்.
    ஹிந்துமதத்துறைக்கு மந்திரியாக ஒரு முஸ்லீமை இலங்கை அரசாங்கம் நியமித்ததும்,அதே தமிழ்வாதிகள் சிலை வழிபாட்டை நிராகரிக்கும் முஸ்லீம்களில் ஒருவரை இந்து அமைச்சராக நியமிக்கலாமா இது நியாயமா? புத்த மதத்தை சேர்ந்த ஒருவரையாவது இந்து அமைச்சராக நியமித்து இருக்கலாமே என்று தமது கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து தமது போலிதனான அரசியல் வேடம் கலைந்து நின்றனர்.கடைசி தகவல்களின்படி இந்து மத அமைச்சராக நியமிக்கபட்ட முஸ்லீம் இலங்கை அரசாங்கத்தால் அதில் இருந்து வெளியேற்றபட்டுள்ளார்

  18. அன்பின் ஸ்ரீ இந்துவா

    பெருமதிப்பிற்குரிய மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் விச்வ ஹிந்து பரிஷத் இயக்கத்துடன் இணைந்து லங்கையிலே ஆப்ரஹாமிய மதத்தவரின் ஆன்ம அறுவடைப் பணிகளுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். திருமுறைகளை சிம்ஹல பாஷையுட்பட பாரதத்தின் பற்பல பாஷைகளில் பாஷாந்தரம் செய்திருக்கிறார்.

    ஆப்ரஹாமியத்துக்கு கூலிப்படையாக த்ராவிட நச்சு க்லுமிகளுடன் இணைந்து வேலை செய்யும் போலித்தமிழின வாதிகள் லங்கையிலே இதுகாறும் குறைச்சலாகத்தான் இருந்தனர். இப்போது ஆப்ரஹாமியக்காசுக்குக் கூத்தாடும் இந்த க்லுமி கீடாதிகள் பெருகி வருகின்றனர் என்றே அறிகிறேன். பணம் என்றால் பிணமும் எழும் எனில் இந்த க்லுமி கீடாதிகள் ஏன் கூச்சலிடாது 🙂

  19. ஒரு இல் -ஒருவனுக்கு ஒருத்தி- மனித சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் என்ற கருத்து மதிக்கப்படும் வரை இராமாயாணத்தின் ராமனின் புகழுக்கு எந்த குறையும் வந்து விடாது. ஒரு முஸ்லீம் ஒருவரிடம் கம்பராமாயாணத்தை நாவலாகப்படியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன்.இவரது படிப்பு கம்பராமாயாணத்த தாண்டு திருமந்திரம் தாயுமானவா் என்று நீண்டுகொண்டேயிருக்கின்றது. மதம் சமூக சிந்தனையில் ஒரு அற்புதமான பரிமாணத்தை இந்த வாசிப்பு எனக்கு அளித்து வருகின்றது என்று மிக்க மகிழ்ச்சியோடு தனது கருத்தை பதிவு செய்யும்போது மனம் அடையும் ஆனந்தம் அனந்த கோடி.

  20. ஒருவனுக்கு ஒருத்தி என்பது இராமாயாண கால வாழ்க்கை கிடையாது. ஒருவனுக்குப் பல மனைவிக்ள் என்பதே அவர்கள் வாழ்க்கை. இராமனின் ஒருவனுக்கு-ஒருத்தி என்ற வாழ்க்கை ஒரு தனிநபர் வாழ்க்கையாகத்தான் பார்க்கவேண்டும். தன் கால வழக்கத்திலிருந்து விலகி வாழ்ந்தவன் இராமன்.

  21. அன்புள்ள BSV Please stop your Polimics and whatabouteries .
    தங்களின் விதண்டாவாதத்திற்கு அளவே கிடையாதா ? பரதனுக்கு லட்சுமணனுக்கு சத்ருக்கனனுக்கு எத்தனை மனைவிகள் ? இராவணனின் சகோதரா்கள் மகன்களுக்கு எத்தனை மனைவிகள் ? எனக்கு தொியவில்லை.வால்மீகி படி அனுமனுக்கு எத்தனை மனைவிகள்.துளசிதாசா் படி அனுமனுக்கு எத்தனை மனைவிகள் ? இப்படி இராமாயாணத்தில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் எத்தனை மனைவிகள் என்ற தகவலை அறிய விரும்புகின்றேன். தாங்கள் உலகமகா பேரறிஞா். தெரிந்ததை பதிவு செய்யுங்கள்.அடியேன் திருத்திக் கொள்கின்றேன்.

  22. இலங்கேஸ்வரன் சிங்களவன்; எதிர்த்த மன்னர்கள் தமிழர்கள் என்பது சரியாக வருகிறது.
    —————
    அபத்தம்.சிங்களவர்கள் என்ற கருத்தே வங்காளி விஜயன் இலங்கை தீவில்குடியேறிய சம்பத்தில் இருந்துதான் துவங்குகின்றது.இலங்கை அரசு வெளியிட்டுள்ள ஒரு தபால்முத்திரையில் விஜயன் என்ற வங்காளி இலங்கைக்கு வரும் போது தமிழ் பெண் ஒருவா் வரவேற்கின்ற காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.சிங்கள மக்கள் ஒரு கலப்பினம்.
    கீரைக்கடைக்கும் எதிா் கடை என்பார்கள் .அதுபோல் பிஎஸ்வி.

  23. நான் மேலே எழுதியதன் தொடர்ச்சியாக: தன் கால வழக்கிலிருந்து மட்டுமன்றி, தன் குல தர்மத்திலிருந்து விலகியவன் இராமன். இராமனின் குலம் சத்திரிய குலம். சத்திரியர்கள் (குறிப்பாக அரசர்கள்) ஒருவனுக்கு-ஒருத்தி என்ற வாழ்க்கை கோட்பாட்டைக்கொண்டவர்கள் இல்லை. ஒரு பட்டத்துராணி (இல்லையென்றால், வம்ச கோளாறு வந்து அரசனுக்குப் பின் யார் என்று நாடே களபரப்பட்டுவிடும்); அவள் போக அந்தபுரத்து நாயகிகள். அவர்கள் எல்லாரும் வைப்பாட்டிகளாக அல்ல. பலரை முறைப்படி அங்கங்கே மணம் புரிந்து கொண்டு வருவான். இப்படிப்பட்ட சத்திரிய குல வாழ்க்கை ஏற்கப்பட்டது. நூல்க்ள் கூட சரியென்றது. இராமன் இதிலிருந்து மாறுபட்டான்.

    ஒருவனுக்கு-ஒருத்தி காலத்தையும் குலத்தையும் மீறிய செயலாக இருந்தபடியாலே இராமனின் நடத்தை விசேசமாக பார்க்கப்படுகிறது. அன்புராஜையும் அசத்துகிறது. இராமன் பலதாரங்களை வைத்துக்கொண்டாலும் சீதை ஒன்றும் கோபப்படப்போவதில்லை. நானும்தான்.

    இராமனின் புகழ் இராவணனாலே நிலைநிறுத்தப்படுகிறது. இருவருமே நல்லவர்கள் என்றால் இராமாயணமே தேவையில்லை. ஒருவர் நல்லவர் என்று உலகம் தெரியவே கான்ட்ராஸ்ட் இறைவனால் படைக்கப்படுகிறது. இவன் நல்லவன். எப்படி தெரிகிறது? அவன் கெட்டவனென்பதால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *