ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?

மும்பை மழைநீரை வடிக்க இந்திய பொறியியலாளர்களால் முடியவில்லையா? ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன? என்ன காரணம்?

கிர்லோஷ்கர் பம்ப்கள் பற்றி எழுதியதற்கு பல நண்பர்கள் ஏன் மும்பையிலும் மற்ற இடங்களும் இதை செய்ய முடியவில்லை என கேட்டிருந்தார்கள். விரிவாக அதற்கு பதில் சொல்லவேண்டும் என இந்த பதிவு.

மும்பை வரைக்கும் போகவேண்டாம். சென்னையிலே சிறு மழை பெய்தால் நாறிவிடுகிறது. மழை பெய்தால் காவிரியிலே கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விட வேண்டியிருக்கிறது.

ஏன்? திட்டமிடுதல் இல்லை என ஒரே வார்த்தையிலே சொல்லிவிடலாம். ஆனால் ஏன் திட்டமிடுதல் இல்லை அல்லது ஏன் திட்டமிட முடியவில்லை என பார்க்கவேண்டும்.

கணக்கு காட்டவில்லை என்பது தான் இதற்கு காரணம்.

நில அளவீடு, மக்கள் தொகை, வீடுகள், வீதிகள், அமைப்பு இன்னபிறவை எல்லாம் சரியாக அல்லது ஓரளவிற்கு கணக்கு எடுத்து அளவிட்டு வைத்திருந்தால் – இதெல்லாம் தாழ்வான பகுதிகள் இதெல்லாம் மேடான பகுதிகள், இந்த இடத்திலே இருந்து மழைநீர் இப்படி வடியும், அதை அப்படியே ஆற்றுக்கோ கடலுக்கோ திருப்பி விடலாம் என கணக்கிட்டு செய்யலாம்.

இந்த இடங்களிலே இவ்வளவு வடிகால் குழாய்கள் இருக்கின்றன, அதிலே கழிவு நீர் குழாய்கள், இவ்வளவு மழை வடிகால் அமைப்புகள், இவ்வளவு இதிலே இவ்வளவு தண்ணீர் தான் வெளியேற்ற முடியும் என ஏதேனும் ஒரு கணக்கு இருந்தால் – மழை பெய்வதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப முன்னேற்பாடுகள் செய்யலாம். ஆனால் இப்படி ஏதேனும் கணக்கு வழக்கு இந்தியாவிலே எந்த நகரத்திலேயும் உண்டா? கிடையாது.

ஏன் எவ்வளவு வீடுகள் இருக்கின்றன, அதிலே எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்ற கணக்கே கிடையாது. இந்த நில அளவீடு மற்ற நாடுகளிலே எப்படி இருக்கும் என முன்பு எழுதியிருந்தேன்.

மற்ற நாடுகளிலே நில பத்திர பதிவு என ஒன்றை வைத்திருப்பார்கள். யார் பெயரிலே எவ்வளவு நிலம் இருக்கிறது என்ற பதிவு முழுக்க இருக்கும். ஒருவர் நிலத்தையோ வீட்டையோ விற்றாலோ வாங்கினாலோ மாற்றினாலோ அதிலே போய் பதிவு செய்தாக வேண்டும். இல்லையேல் செல்லாது. ஆக்கிரமிப்பு எல்லாம் செய்ய முடியாது. ஒரே இடத்தை பலருக்கு விற்பது என்ற கதையெல்லாம் நடக்காது.

ஆனால் இந்தியாவிலே பத்திர பதிவு என போனால் அரசு காசு வாங்கிக்கொண்டு இன்னாருக்கும் இன்னாருக்கும் இடையே ஒரு பதிவு நடந்தது என்று மட்டும் தான் எழுதும். அதுவும் பொதுவான அல்லது இணைக்கப்பட்ட பதிவு ஆவணம் என ஒன்று இருக்காது. யாரேனும் ஆக்கிரமித்தால் கோர்ட்டுக்கு ஒரு 100 வருசம் நடக்கவேண்டும். இந்தியாவிலே 60 சதம் வழக்குகள் நிலத்தகராறு வழக்குகள் தான்.

இதனால் என்ன நடக்கிறது? புற்றீசல் போல இஷ்டத்துக்கும் எலிவளை, புறாக்கூண்டு போல ஆங்காங்கே கட்டிடம் கட்டிக்கொண்டே போகிறார்கள். கட்டும் இடம் தாழ்வான பகுதியா, வடிகால் இருக்கிறதா என ஏதுமே கிடையாது. கட்டி முடித்த பின்னர் ஏதோ பேருக்கு சாக்கடையும் மழைநீர் வடிகால் அமைப்பும் அமைக்கிறார்கள்.

அதையாவது மட்டம் பார்த்து தண்னீர் வழிந்து ஓடும் படி அமைக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது.

அப்படி கட்டியதற்கு கணக்கும் கிடையாது. ஏதோ அறிவிப்பு காட்டுவார்கள், அவ்வளவு தான்.

முக்கிய சாலைகளை ஆளுயரத்திற்கு அமைத்து விடுவார்கள். அப்புறம் அதிலே தண்ணீர் நிற்காது. வீடுகளிலே தண்ணீர் நிற்கும்.

இதை எந்த தொழில்நுட்பத்தை வைத்து சரி செய்வது?

சரி, இதிலென்ன பிரச்சினை கணக்கு எடுத்துவிட வேண்டியது தானேன்னா அது உடனே முடியாது.

ஏன்னா மாநகராட்சிகளிலே எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்ற கணக்கே இன்னும் எடுத்து முடிஞ்ச பாடில்லை.

கருணாநிதி செய்த மஸ்டர் ரோல் ஊழல் ஞாபகம் இருக்கிறதா? அது இன்னமும் தொடர்கிறது. எடுத்துக்காட்டாக இந்தியா முழுக்க மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளிகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என கணக்கு இன்னமும் எடுத்து முடிஞ்ச பாடில்லை.

ஆதார் கூடாது, மத்திய தொழிலாளர் பதிவு கூடாது, கணக்கு காட்ட மாட்டார்கள் என்றால் எப்படித்தான் நிர்வகிப்பது?

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்றொரு பழமொழி உண்டு. அதாவது அளக்காத எதுவும் உருப்படாது. என்ன நடக்கிறது எவ்வளவு செலவாகிறது எதற்கு செலவாகிறது என தெரியாமல் எப்படி நாட்டை நடத்துவது?

அதெல்லாம் பழங்கதை, இனிமேல் ஆரம்பித்துவிட வேண்டியது தானேன்னா அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றவேண்டும். புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும்.

காவல்துறை நடமுறைகள், நீதிமன்ற நடைமுறைகளிலே ஆரம்பித்து வீடு கட்ட எப்படி அனுமதி வாங்குவது வரையிலான விதிகள் உட்பட எல்லாமே மாற்றப்படவேண்டும்.

எடுத்துக்காட்டாக வியாபார பகுதி, தொழிற்சாலை இடம், குடியிருப்பு இடம் என ஒதுக்கும் வழக்கம் மற்ற நாடுகளிலே உண்டு.

பெரிய கடைகள், மால்கள் போன்றவற்றை வியாபார இடம் என ஒதுக்கப்பட்ட பகுதியிலே தான் வைக்கவேண்டும். குடியிருப்பு பகுதியிலே மக்கள் குடியிருப்பு மட்டும் தான் இருக்கவேண்டும். திநகரிலே மாலும் குடியிருப்பு பகுதியும் பக்கத்து பகக்த்திலே இருப்பது கூடாது.

கனரக தொழிற்சாலைகள் ஊருக்கு வெளியே இருக்கவேண்டும் என உண்டு. இங்கே என்ன நடக்கிறது? ஊருக்கு 20 கிலோ மிட்டர் தள்ளி ஸ்டெர்லைட் கட்டினால் இவுனுக அங்க பக்கத்திலே போயி வீட்டை கட்டி குடியிருந்துட்டு இப்போ குடியிருப்பு பகுதியிலே இருக்கும் தொழிற்சாலையை தூக்கு அப்படீன்றானுக.

அதாவது எல்லாவற்றிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வரைமுறைகள் இருக்கவேண்டும். இல்லாவிடில் எப்படி 20,000 பேர் வேலைசெய்யும் நிறுவனத்தின் கழிவையும் 40 பேர் குடியிருக்கும் வீட்டின் கழிவையும் ஒரே மாதிரி அகற்ற திட்டம் போடுவது?

திட்டம் போடுவதன் முதல் பகுதியே கணக்கெடுப்பு என்றால் நிலம் பினாமியிலே இருக்க முடியாது, கருப்பு பணத்திலே நிலம் வாங்க முடியாது. இதனால் ஆதார் கூடாது இணைப்பு கூடாது என குதிக்கிறார்கள்.

அதே போல் இதெல்லாம் நடந்தால் கட்டபஞ்சாயத்து செய்து காசு வாங்க முடியாது, அனுமதிக்கு லஞ்சம் வாங்கமுடியாது, ரோடு காண்டிராக்ட்லே காசு அள்ள முடியாது.

சாக்கடை அள்ள இயந்திரங்கள் இல்லை என பொய் சொல்லி ஏ பார்ப்பானிய பாயசமே பீ அள்ள வா என கூவமுடியாது. பிரான்ஸிலும் சீனாவிலும் எல்லோரும் பீயை கையாலா அள்ளுகிறார்கள்? அங்கே செய்யும் இயந்திரமாக்கலை இங்கே செய்ய முடியாதா என்ன?

முடியும். இயந்திரங்கள் இருக்கிறன. ஆனால் புரட்சி என்னாவது? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னாவது? கம்மினிஸ்ட் கம்மினாட்டிகளின் கபோதித்தனம் என்னாவது?

மக்களை சுகமாக வாழவிட்டால் எவனாது போராட வருவானா? கொடி பிடிப்பானா? கோஷம் போடுவானா?

மக்களை நரகத்திலேயே வைத்திருந்தால் தானே இதெல்லாம் நடக்கும்.

தாமரை பூ போலவும் மண்டலங்கள் போலவும் பெரும் நகரங்களை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டி சுகமாக வாழ்ந்தவர்கள் என சொல்லிக்கொள்ளவே நாமெல்லாம் வெட்கப்படவேண்டும்.

கம்மினிஸ களவாணித்தனத்தையும் சோசலிச கேப்மாறித்தனத்தையும் ஒழிக்காமல், எல்லாவற்றிற்கும் கணக்கு பார்க்காமல் – இதற்கெல்லாம் தீர்வில்லை.

(ராஜ சங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

11 Replies to “ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?”

  1. // கனரக தொழிற்சாலைகள் ஊருக்கு வெளியே இருக்கவேண்டும் என உண்டு. இங்கே என்ன நடக்கிறது? ஊருக்கு 20 கிலோ மிட்டர் தள்ளி ஸ்டெர்லைட் கட்டினால் இவுனுக அங்க பக்கத்திலே போயி வீட்டை கட்டி குடியிருந்துட்டு இப்போ குடியிருப்பு பகுதியிலே இருக்கும் தொழிற்சாலையை தூக்கு அப்படீன்றானுக. //

    ஒன்று, பேச்சு வழக்கில் எழுதுங்கள், அல்லது எழுத்து வழக்கில் எழுதுங்கள். இப்படி கலந்து கட்டி படிக்க சிரமம் தராதீர்கள், தயவு செய்து.

  2. Population explosion is also one important point. Muslims do not practice conception control methods whereas Hindus have only two children . This anamoly must be addressed to.

  3. Sri பொன்.முத்துக்குமார்
    I always enjoy reading your inputs. Here I beg to differ.I enjoyed reading this mixed up masala kind of Tamil by the author! It is sort of down to earth type of language and shows the frustration one feels with the whole system. Anyhow, what the author says in his article is very true. Kudos to the author.

  4. This reflects the prevailing situation. The main cause is only one: Indians are imitators, not original thinkers.India lost the habit of original thinking with the Muslim invasion; ever since then, they have only been reacting, not acting on their own. The British washed out our brains mainly through Macaulay education, implemented through Christian missionary schools. Their administration snuffed out all springs of native governance ( detailed in the writings of Dharampal.) British administration encouraged corruption at the local and lower levels ( recorded in the Economic History of India by Romesh Dutt.)It has now spread to all levels. India after Independence has continued merrily to follow the same ideas and models, if anything only more intensely, and thoughtlessly. Our education system is turning out morons; our bureaucracy at all levels exists only for itself, and expands without restraint ( long live Parkinson). Any office for our politicians and bureaucrats is only perceived as avenue for making money. Corruption is our national culture, our new religion. Those who sincerely seek to end corruption will be ignored, bypassed or swept aside.
    We Indians got our freedom cheap. Adult franchise was thrust on everyone without adequate preparation. Those who participated in the freedom movement themselves became greedy for office and corrupt ( as recorded by Pyarelal in Mahatma Gandhi: The Last Phase.) Today, political power is enjoyed mainly by those who did not support the freedom struggle and who had not participated in any constructive activity, then or subsequently. Politics, like business, is only for making money.
    This system cannot be mended; it can perhaps only end with some revolution. But who can say what will be its colour, shape and size? And looking to the lessons of history, how can we have the confidence that it will bring better days?

  5. //கனரக தொழிற்சாலைகள் ஊருக்கு வெளியே இருக்கவேண்டும் என உண்டு. இங்கே என்ன நடக்கிறது? ஊருக்கு 20 கிலோ மிட்டர் தள்ளி ஸ்டெர்லைட் கட்டினால் இவுனுக அங்க பக்கத்திலே போயி வீட்டை கட்டி குடியிருந்துட்டு இப்போ குடியிருப்பு பகுதியிலே இருக்கும் தொழிற்சாலையை தூக்கு அப்படீன்றானுக.//

    எப்பேர்ப்பட்ட பொய்யைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்! தூத்துக்குடி நகரத்திற்கு மூன்றாம் மைல் என்ற இடம்; எட்டயபுரம் சாலை; பீங்கான் ஆஃபிஸ் (திருச்செந்தூர் சாலை); கிழக்கில் கடற்கரை – இவைகளே எல்லைகள். இவ்வெல்லையில் மூன்றாம மைலத்தாண்டி சிப்காட் அமைக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி ஆட்சியர் புது அலுவலகம் கட்டப்பட்டிருக்கிறது. திருனெல்வேலி செல்லும் சாலை. எட்டயபுரம் சாலையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் காட்டுப்பாதையில் ஸ்ட்ரெலைட் அமைக்கப்பட்டிருக்கிறது. இச்சாலை வடக்கு நோக்கி மதுரை போகிறது. ஸ்ட்ரெலைட் கட்டப்பட்ட பரந்த பகுதி தூத்துக்குடி நகருக்கு அப்பாற்பட்ட பகுதி, தேரிக்காடு அன்று. ஆனால் வயல்நிலமும் அன்று. விவசாயம் அங்கு கிடையாது. பல குக்கிராமங்களைக்கொண்ட இடம். அவர்கள் தூத்துக்குடி நகருக்கு வேலைக்கு வந்து போகும் குடிகள்; இவ்வாலையால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் என்று வந்தது என்றே சொல்லவியலாமல் அநாதி காலம் தொட்டு இருக்கின்றன. தூத்துக்குடி நகரம் – டச்சுக்காரர்கள்; டேனிஸ்காரர்கள்; ப்ரெஞ்சுக்காரர்கள், இறுதியாக ஆங்கிலேயர்கள் – வசம் மாறி, மாறி வந்த ஊர்; இதன் வர்லாறு ஆயிரமாண்டுகளுக்கும் மேல். பாண்டியனின் துறைமுகமான கொற்கை தூத்துக்குடியில் திருச்செந்தூர் சாலையில் வரும் கடற்கரை கிராமம்.

    இவர் அடித்துவிடும் பொய் என்னவென்றால், சில்வர் புரமும் மடத்தூரும் ஸ்டெர்லைட்டை வைத்துப்பிழைக்க இவ்வாலைக்குப்பின்னரே தோன்றின என்ற பொய். மடத்தூர்க்கருகில்தான் துப்பாக்கி சூடு; சில்வர் புரத்தில் புற்றுநோய். ஆலைக்கருகில் உள்ள ஊர். இவ்வாலை தோன்றி 24 ஆண்டுகள்தான் ஆகின்றன. இதைச் சுற்றியுள்ள 50 ம் மேற்பட்ட குக்கிராமங்கள் எப்போதுமே இருந்திருக்கின்றன. இன்று தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தையும் சேர்த்துதான் தூத்துக்குடி மாநகராட்சியாக ஆக்கப்பட்டிருக்கிறது.

    ”பொய் சொல்லலாகாது பாப்பா; பிறரைப் புறஞ்சொல்லலாகாது பாப்பா!”

  6. திரு BSV எழுதியிருப்பது உண்மை என்றால், கட்டுரை ஆசிரியர் ஸ்டெர்லைட் பற்றி எழுதி இருப்பதில் பெரும் தவறுகள் உள்ளன. மேலும், கட்டுரை எழுதுவதில் நேர்மை இல்லை என்று பொருள். இந்தத் தவறை விளக்க அவர் கடமைப்பட்டுள்ளார்.

    இந்த வலைத்தளமும் கட்டுரை ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டு, பிரசுரிக்கக் கடமைப்பட்டுள்ளது.

    இல்லையெனில், திரு BSV அவர்களின் மறுமொழி தவறுகள் நிறைந்தது, தீய எண்ணமும் உள்நோக்கமும் கொண்டது என்று பொருள்.

  7. புதிய சாமி ஒன்று திருநெல்வேலி பட்டணத்தில் கண்டுபிடித்துள்ளாா்கள்.தாமிரபரணி புஷ்கரணம் என்று புதிய விழா என்று சுடன் சாப்பிராணி புக்கள் என்று மக்களின் பணம் வீணாக புதிய வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தாமிரபரணி அம்மன் என்பது அந்த புது சாமிக்கு பெயர். அபிசேகம் அதயாதி எல்லாம் செய்து சம்பரம் எடுத்து நகா்வலம் வந்தாகிவிட்டது.இந்துக்களின் பொருளாதாரம் சுடன் கொளுத்துவதில் கரைந்து போய்விடும் போலிருக்கின்றது
    தாமிரபரணியை பாதுகாக்க நதிஒடும்பகுதியில் மலம் கழிப்பது சாக்கடைகளை கலப்பது போன்ற தவறுகளைத் திருத்த வகை செய்ய வேண்டும்.தாமிரபரணி அன்ன் சிலை செய்து யாகம் செய்தால் சப்பரம் செய்து தாமிரபரணி அம்மன் சிலை செய்து ஊர்வலம் வந்தால் எந்த பயனும் இருக்குமா ? நான் இருக்காது என்று நினைக்கின்றேன். வாசகர்கள் …………..

  8. மாசு கட்டுப்பாடு வாரியம் போதி நிபந்தனைகளை விதித்து ஸடெலிலைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.அனல் மின்நிலையங்கள் ஸ்டெரிலைட் கம்பெணியை விட அதிக அளவில் sulphur dioxide என்ற வாயுவை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
    இறக்குமதி காரணமாக தாமிர கம்பிகளின் விலை உயா்ந்து விட்டது. இன்னும் கூடும்.தாமிரம் நமக்கு தேவை.எனவே தொழில் சாலையை திறக்க வேண்டும்.
    பெட்ரோல் டீஸலால் காற்று நஞ்சாககிக் கொண்டீருக்கின்றது.நவீன நாகரீகம் என்பதே மனிதன் தன் சுற்றுச் சுழலை தனக்கு பாதகமாக்கிக்கொண்டிருப்பதுதானே?புச்சி மருந்துஎன்ற விடம் பயன்படுத்தி செய்யப்படும் காய்கறிகள் அரிசி தேங்காய் வாழை அனைத்தும் நஞ்சுதான்.வாழை மரம் நட்டும் குழியில் சாணி உரம் இரசாயன உரம் புச்சி மருந்து ஆகிய 3 ம் கலந்து வின் வாழைநடப்படுகின்றது.கத்தரிக்காய்க்கு 3 முறை மருந்து அடிக்கப்பட்டு வருகின்றது. முருங்கைக்காய் விசவாயம் ??????
    காய்கனிகளில் இருக்கும் புச்சி மருந்துகளின் அளவை நிாணயம் செய்து -மக்களின் ஆரோக்கியத்தை காக்க ஏதேனும் செய்யலாம்.

  9. இந்தியா பாசுமதி வியாபாரத்தில் கணிசமான வருவாய் சம்பாதித்து வருகின்றது.நமக்கு போட்டியாளா்களில் முக்கியமான நாடு பாக்கிஸ்தான்.
    சவுதி அரேபியா நமது நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாசுமதி அரசியில் புச்சி மருந்து அளவு அதிகமாக இருப்பதால் தடை செய்துள்ளது.

    இந்தியாவில் விற்க படும் காய்கறிகளில் ”விஷ மருந்துகளின்” அளவு எவ்வளவு டஇருக்கலாம் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதா ?
    அதிக அளவு மருந்துள்ள காய்கறிகள் விற்பனைக்கு வராமல் தடுக்க அமைப்பு ஏதும் உள்ளதா ?
    சவுதி காரனுக்கு தன் நாட்டு மக்கள் மீது அக்கறை உள்ளது ? இந்திய அரசுக்கு இந்தியன் மீது அக்கறை உள்தா ?

  10. அன்புராஜ் ஜூலை 21, ஆகஸ்டு2.
    1. புகையில்லாமல் நெருப்பில்லை. தீய பின், பக்க விளைவுகள் இல்லாத தொழில்முறை இன்று எங்கும் இல்லை. தம் நாட்டில் இவை வேண்டாம் என்பவர்கள் சீனா, வியட்னாம், கொரியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு அவற்றை அனுப்பிவைக்கிறார்கள். இந்த மூடர்களும் அவற்றை முன்னேற்றம் என்ற பெயரில் வரிந்து பின்பற்றுகிறார்கள். மாசு கட்டுப்பாடு வாரியமும் சர்கார் தயவில் இயங்குவதுதானே! சர்க்கார் கம்பெனிக்காரர்களின் கைவசமானது தானே? பின் இவர்கள் எப்படி ‘போதிய” நிபந்தனைகளை விதிப்பார்கள்?
    2.”போதிய நிபந்தனை” என்பதும் எளிதாக நிச்சயிக்கக் கூடியதல்ல. விஞ்ஞானிகளிடையே கூட இதில் கருத்தொருமை இல்லை. மேலும், இப்படி நிர்ணயிக்கப்படும் அளவும் நாளாவட்டத்தில் குறைந்துகொண்டே வருகிறது. நமது அதிகார வர்கம் இதற்கெல்லாம் ஈடுகொடுக்குமா? புதிய சட்டம், புதிய கட்டுப்பாடுகள் என்றால் காசு பண்ண மேலும் ஒரு வழி என்பதே இன்றைய நிலை.
    3.ஸ்டெர்லைட் பற்றி எழுந்துள்ள பிரச்சினை ஒவ்வொரு நவீன ரகத்தொழிலுக்கும் பொருந்தும். திருப்பூரில், ஈரோட்டில் நீரில் கலக்கும் விஷங்களின் அளவுக்கு எல்லை உண்டா? இதைத் தடுக்க எந்த அரசுக்காவது அறிவோ, ஆர்வமோ உண்டா?
    4. நவீன தொழில் முறை அடிப்படையிலேயே அபாயகரமானது.ஆனால் இவற்றின் விளைவை, தாக்கத்தை பணத்தைக் கொண்டு அளவிடுவதால் அடிப்படை அபாயங்கள் மறைக்கப்படுகின்றன.
    5.ஒரு பக்கம் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் விரைவாக சுரண்டப்படுகின்றன; மறுபக்கம் இவற்றின் பின்,பக்க விளைவுகளை மாற்றும் அல்லது குறைக்கும் அல்லது அறச்செய்யும் வழிமுறைகள் தெரியவில்லை.விஞ்ஞானிகள் என்ற போர்வைக்குள் திரிபவர்கள் விழிபிதுங்குகிறார்கள்; பொருளாதாரவாதிகள் என்பவர்களோ அடிமடையர்களாக இருக்கிறார்கள். இது உலகம் தழுவிய நிலை. இவற்றின் விளக்கத்தை Doughnut Economics {Author: Kate Raworth.Random House, February 2018] என்ற சமீபத்திய நூலில் காணலாம். மோடி அரசு இவற்றைப் புரிந்துகொண்டு நடக்கும் என்று எதிர்பார்ப்பது குருடனை ராஜவிழி விழிக்கச் சொல்வதைப் போன்றது.
    6. உணவுக்கு ஆதாரமான விவசாயத்தில் விஷ மருந்துகள் என்பவை சிறிதும் கலக்கக்கூடாது. சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலைதான் இருந்தது.வளர்ச்சி என்ற பெயரில் கெமிகல் கம்பெனிகளின் கூட்டுறவுடன் அரசினரே இதை மாற்றினார்கள். அரசின் இந்த நிலையும் போக்கும் இன்னும் மாறவில்லை. இதை மாற்றி மக்களுக்கு மாற்றுவழி காட்ட டாக்டர் நம்மாழ்வார் தமிழ்நாட்டில் பாடுபட்டார்; அகில இந்திய அளவில் வந்தனா சிவா போன்றோர் பாடுபட்டு வருகின்றனர். ஆனால் நமது அரசியல், அதிகார வர்கங்கள் பன்னாட்டு கெமிகல் கெம்பெனிகளின் கூலிப்படையாகத்தான் இயங்கிவருகின்றன, நமது விஞ்ஞானிகள் என்பவரும் இந்தப் பட்டியலில் சேர்ந்தவர்களே.
    எனவே, நமக்கு விமோசனம் கிட்டவேண்டுமெனில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து அரசினரின் ஆதரவை நாடாதவகையில் செயல்பட முன்வரவேண்டும். ஆனால் இனம், மொழி, ஜாதி, சினிமாகவர்ச்சி போன்ற விஷயங்களில் ஊறித்திளைக்கும் நாட்டில் இத்தகைய விழிப்புணர்ச்சி வருவது எளிதல்ல.சவுதி அரேபியர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

  11. அன்புள்ள திரு.நஞ்சப்பா அவர்களுக்கு
    வணக்கம்.தங்கள் பதிலை இன்றுதான் படித்தேன். தங்கள் கருத்துகள் ரொம்பவும் சரியானது. அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். புதிய சட்டம், புதிய கட்டுப்பாடுகள் என்றால் காசு பண்ண மேலும் ஒரு வழி என்பதே இன்றைய நிலை என்ற கருத்து அரசின் நிலையை அப்படியே எடுத்துக் காட்டுகிறது. ஆனாலும் நவீன முறைகளில் இருந்து விலகியே எப்படி இருப்பது ? வ
    சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஜனத்தொகை ஒரு கோடி இருக்கலாம்.இவர்களை நிா்வகிப்பது சுலபம்.நமது நாட்டிலோ 125 கோடியை வேகமாக தாண்டிக்கொண்டிருக்கின்றது. எப்படி நிா்வகிப்பது. சரியான கருத்துக்களை அனைவரிடம் எப்படி கொண்டுபோய் சோ்ப்பது- பெரிய பிரச்சனை.சவால்தான்.
    தங்களின் அன்பான பதிவுக்கு எனது நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *