பாகிஸ்தானின் மத அரசியல்

பழைய கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பாக்கிஸ்தானிலே மத அமைப்புகள் தேர்தலிலே தோற்றுவிட்டன என நம்மூர் மூளை செத்த மீடியாக்கள் ஊளையிடுகின்றதே. என்ன உண்மை?

பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு.

பாஸ்போர்ட் வாங்கும் போது முஸ்லீம் என்றால் அவர்களின் மதச்சடங்கு ஒன்றை செய்யவேண்டும். இதுவும் அகமதியாக்களை கண்டுபிடிக்க.

பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது.

Tribal militias from Pakistan (in photo) are prime candidates for the Ghazwa-e-Hind (Photo courtesy: dailymail.co.uk)

பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு.

நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் இந்த மத சட்ட அடிப்படையிலே நேர்மையாக இல்லை என.

இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களுக்கு தனி வாக்குரிமை தனி தொகுதிகள் தான். அவர்கள் பொது தொகுதிகளிலே போட்டியிடமுடியாது. மொத்தமாக பத்து தொகுதிகள் தேசிய சட்டமன்றத்திலே. வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் எல்லாமே தனிதான்.

போட்டியிடுவேன் என கிளம்பிய சீக்கியரை குண்டு வைத்து கொன்றார்கள்.

பெடரல் ஷரியத் கோர்ட் எனும் முஸ்லீம் மத சட்ட நிர்ணைய நீதிமன்றம் இருக்கிறது. முஸ்லீம் மத சட்டங்களின் படி தான் அரசு செயல்படுகிறதா என்பதை இது கண்கானிக்கும் இதன் தீர்ப்புகளை ஷரியத் அமர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் அமர்விலே மட்டுமே மேல்முறையீடு செய்யப்படும்

மத நிந்தனைக்கான சட்டம் மிகவும் கொடுமையானது. அதிலே இதுவரை கிறிஸ்துவர்களே பெரும்பாலும் தண்டனை அனுபவித்து வந்துள்ளர். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ சிறுமிக்கு விடுதலை தரவேண்டும் என சொன்னதற்காக மாநில ஆளுநர் அவரின் பாதுகாப்பு படையினராலேயே சுட்டுகொல்லப்பட்டார்.

முஸ்லீம்களின் மதவழிபாட்டிடத்திலே இருந்து தண்ணீர் குடித்தற்காக மதநிந்தனை குற்றம் சாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவர்கள் உண்டு.

தேர்தலிலே போட்டியிடும்போதே மத சடங்கை செய்து கையெழுத்து போட்டுத்தான் போட்டியிட முடியும். போன மாதம் எல்லா அரசு ஊழியர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அவர்களின் மதத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தலிலே போட்டியிடும் போது மத சடங்கை செய்யவேண்டியதில்லை எனும் விதியை தளர்த்த முயன்ற போது பாக்கிஸ்தானிய தலைநகரத்தை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு அரசை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். பின்னர் அது எழுத்துப்பிழை என திரும்ப பெறப்பட்டது.

சாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே இந்துக்களும் கிறிஸ்துவர்களும் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.

மூஸ்லிம் மத சடங்கு இருப்பதால் சாக்கடையிலே விழுந்த நோயாளியை பார்க்க மாட்டேன் என சொன்ன அரசு மருத்துவர்களும் உண்டு. இன்று வரை நிலை அப்படித்தான்.

இப்போது பிரதமர் ஆக இருக்கும் இம்ரான்கானின் கைபர் பக்குன்வா மாநிலத்திலே ஆட்சியிலே இருந்த போது தீவிரவாதிகளின் அமைப்புகளுக்கு பல ஆயிரம் கோடிகளை அள்ளி வீசியிருக்கிறது. பஞ்சாப்பிலும் சிந்துவிலும் தீவிரவாத அமைப்புகளிடம் எல்லா கட்சிகளும் ஆதரவு கேட்டு பின்னரே வென்றிருக்கின்றன. எதிர்த்து பேசிய ஆட்கள் குண்டு வைத்து கொல்லப்பட்டார்கள்.

கவுன்சில் ஆப் இஸ்லாமிக் ஐடியாலஜி , இஸ்லாமிய கொள்கைக்கான கூட்டம் எனும் அமைப்பு மத்திய அரசும் மாநில அரசும் நிறைவேற்றும் சட்டங்களும் விதிகளும் முஸ்லீம் மத சட்டப்படி இருக்கிறதா என சரிபார்த்து அரசுக்கு ஆலோசனைகள் சொல்லும். கற்பழிப்புக்கு மரபணு சோதனைகளை ஏற்ககூடாது என சொல்லியிருக்கிறது.

விபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியெ வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம்.

இதைவிட என்ன ஒரு தீவிரவாத அமைப்பும் கட்சியும் வேண்டும்? அதான் எல்லா கட்சிகளும் இந்த மத சட்டத்தையும் இந்த விதிகளையும் ஒப்புக்கொள்கிறதே?

எல்லா கட்சிகளும் இந்தியாவிலே இருப்பது போல சமத்துவம் சகோரத்துவம் என இருந்து மாற்றாக தீவிரவாத கட்சிகள் நின்று தோற்றால் சரி மக்கள் தீவிரவாதத்தை தோற்கடித்தார்கள் என சொல்லலாம்.

ஆனால் எல்லா கட்சிகளுமே தீவிரவாத கட்சிகளாக மதவாத அமைப்புகளாக இருக்கும்போது எதற்கு தனியே தீவிரவாத கட்சிகள் தேவைப்படும்?

ஏன் நம்மூர் மானங்கெட்ட மீடியாக்கள் இப்படி காசு வாங்கிக்கொண்டு குரைக்கிறதுகள்?

இதிலே பாக்கிஸ்தானை குற்றம் சொல்லவில்லை. இப்படி இருக்கவே தனிநாடு கேட்டு பிச்சுக்கொண்டு போனதுகள். அது அவர்கள் பிரச்சினை.

ஆனால் இந்த நாட்டோட நட்புறவாக இருக்கவேண்டும் சகோரத்துவமாக இருக்கவேண்டும் என சொன்னால் தான் சண்டாளம் பிறக்கிறது.

இங்கேயும் இதே போல் தனி மதசட்டம் வேண்டும் என கேட்டால் அதான் அந்த பிரச்சினைக்கு 1947 இல் தீர்வு சொல்லியாச்சே வேண்டுமானால் பாக்கிஸ்தானிலே போய் மத சட்டத்தை முழுமையாக பின்பற்றலாமே என சொல்வேன்.

இந்தியாவிலேயும் இப்படி கொண்டு வரவிருப்பமா என கேட்டால் இல்லை.

மதச்சார்பின்மையே வழி. ஆனால் அது இந்துக்கள் மட்டும் மதசார்பின்மையை பின்பற்றுவதாக இருப்பது தான் பிரச்சினை.

ஒன்று முழு மதச்சார்பின்மை , எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிகள்.

இல்லையேல் இந்து ராஷ்டிரா.

யாருக்கு என்ன வசதியோ தேர்ந்தெடுக்கலாம்.

(ராஜசங்கர் சமூகம், பொருளாதாரம், அரசியல் குறித்து தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார்). 

7 Replies to “பாகிஸ்தானின் மத அரசியல்”

  1. இந்தியத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் கருதப்படுபவர்களும் அறவே மூளை இல்லாதவர்கள். மீடியாக்கள் வலிந்து பொய்சொல்பவர்கள்.
    கிறிஸ்தவ மதமும் இஸ்லாமும் ஆரம்பமுதல் உலக ஆதிக்கத்தில் கருத்து செலுத்துபவை. தாங்கள் தான் ஒரே உண்மையான மதம், உலகம் முழுவதும் இதுதான் இருக்கவேண்டும் என்பது அவர்கள் கொள்கை.
    நவீன விஞ்ஞானம் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்த்தெறிந்துவிட்டது, இதனால் படித்தவர்கள் படிப்படியாக கிறிஸ்தவ மதத்தை விட்டு விலகி வருகிறார்கள். ஆனாலும் பிற நாடுகளில் கிறிஸ்தவர்கள் மத மாற்றத்தின் மூலம் தங்கள் செல்வாக்கைப் பெருக்கியே வருகிறார்கள்.
    முஸ்லிம்கள் எந்த நாளிலும் தங்கள் ஆதிக்கக் கொள்கையை கைவிட்டதோ, விட்டுக்கொடுத்ததோ கிடையாது. அவர்கள் போகும் நாடுகளை யெல்லாம் வென்றே வந்திருக்கிறார்கள். இது இந்தியாவிற்கும் பொருந்தும்.
    இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்க்ளாதேஷ்- இவை மூன்றும் சேர்ந்த பகுதியே பழைய இந்தியா. இதுதான் உலக முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதி ( 54/189 கோடி) இதையெல்லாம் நமது அரசியல் மடையர்கள் உணரவில்லை.
    இந்தியர்கள் இஸ்லாம் பற்றிப் பேசும்பொழுது இந்தியர்கள் போன்று யோசிக்கிறார்கள்- தங்கள் போக்கிலேயே அதைப் பார்க்கிறார்கள், பல மதங்களில் அது ஒன்று என நினைக்கிறார்கள். இது இஸ்லாமின் நிலை அல்ல. அவர்கள் மதம் மட்டுமே உண்மையானது, இஸ்லாமியரல்லாதவர்கள் காஃபிர். அவர்கள் ஒன்று மதம் மாறவேண்டும், அல்லது அழிக்கப்படவேண்டும். இதுதான் இன்றுவரை நடந்துவருகிறது.
    இஸ்லாமியர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தாலும் அவர்களுள் ஒருபகுதியினரே உண்மையான (தூய) இஸ்லாமியர் [Wahhabism] என கருதப்படுகிறது; எனவே அவர்களிடையே சண்டை நிகழ்ந்தவாறே இருக்கிறது.
    குர்ரான் படி இஸ்லாமியர் பிறர் ஆட்சியின் கீழ் வாழமுடியாது; பிறருக்கும் அவர்கள் ஆட்சியில் இடமில்லை.
    நமது தேசீய (காங்கிரஸ்) தலைவர்களில் காந்திஜி உட்பட யாரும் இஸ்லாம் பற்றிச் சரியாகத் தெரிந்து கொண்டவர்கள் அல்ல. டாக்டர் அம்பேத்கர் ஒருவர்தான் இஸ்லாம் பற்றி நன்கு தெரிந்துவைத்திருந்தார்.அதனாலேயே ஹிந்துக்கள் யாரும் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது, இந்தியா திரும்பிவிடவேண்டும் இந்திய முஸ்லிம்களும் பாகிஸ்தான் போய்விடவேண்டும் என்றார். இதை அன்றைய தலைவர்கள் ஏற்கவில்லை- நாம் இன்னமும் அவதிப்படுகிறோம். இன்று இதைத் துணிந்து சொல்வோர் இல்லை.

  2. //ஒன்று, முழு மதச்சார்பின்மை , எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிகள்.
    இல்லையேல், இந்து ராஷ்டிரா…யாருக்கு என்ன வசதியோ தேர்ந்தெடுக்கலாம்.//

    எனக்கு இந்து ராஷ்ட்ரமே. காரணம்: முழு மதச்சார்பின்மையென்பது இந்தியாவில் சாத்தியமே இல்லை. இந்து, இசுலாமியர், கிருத்துவர், சீக்கியர், ஜயினர், பவுத்தர் – இவர்கள் அனைவரும் வாழ்கின்றனர் இவர்களில் – ஒரு மதத்தவரிடம் அரசியல் வாதியோ, ஆட்சியாளர்களோ, ஃபோட்டோவில் சேர்ந்து தோன்றினால் கூட, மற்ற மதததவர், போலி மதச்சார்பின்மை என்பார் ஆக, அனைவருக்குமே பிடித்த மதச்சார்பின்மை எனபது கானல் நீரே. அல்லது ஏமாற்று வேலை இப்படிப்பட்ட ஏமாற்று வேலைகளில்லாமல் நாட்டில் அமைதி நிலவ ஒரே மதம் ஒரே பண்பாடு என்ற இந்துத்வா கொள்கை, – இசுலாமிய நாடுகளில் இருப்பதைப்போல, ஒரு மதமே அனைத்து உரிமைகளுடன் அரியணை ஏற வேண்டும்; மற்றவர்கள் கட்டுரையாளர் பாகிஸ்தானில் நடப்பதைச் சுட்டிக்காட்டுவதைப்போல், ”சாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு மற்ற மதத்தவரை ம‌ட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே பிற மதத்தவர்கள் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.” என்று அவ்வேலைகளச் செய்து பிழைத்துக்கொண்டு தாமுண்டு, தம் வயிறுண்டு, என்று எதிலும் தலையிடாத அப்பாவிகளாக இருக்கும் போது வரும் நிலமை அநாவசிய கலாச்சார, ஆட்சி தொடர்பான சச்சரவுகளை ஒரேயடியாக குழி தோண்டி புதைத்துவிடும்.

    இல்லை!..இல்லை!! இந்துத்வா எனறால் அனைத்து மதத்தவரும் இங்கு சமமாக இருக்கலாமென்றால், இந்து ராஷ்டிரமும் பழைய பாதையில் போய், போலி மதச்சார்பின்மைக்கே போய் முட்டிக்கொள்ளும். Dead end. அப்படியென்றால் இந்து ராஷ்ட்ரமும் தேவையில்லை வேறொன்றைத் தேடித்தான் ஆக வேண்டும்.

  3. தெளியாகவும் உறுதியாகவும் சொல்கின்றேன்.குரான் என்ற அரேபிய புத்தகம் இருக்கும் வரை முகம்மதுவை நபி என்று போற்றுபவா்கள் இருக்கும் வரை, அவர்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் இப்படித்தான் இருந்தே தீரும். முகம்மதுவின் பாா்வையில் முஸ்லீம்கள் மட்டுமே மனிதா்கள் . மற்றவா்கள் பன்றிகளை விட கேவலமானவா்கள்.

  4. அஸ்ஸாமில் என்ன பிரச்சனை ? அதன் விபரங்களை அளித்தால் குரானும் முஸ்லீம்களும் எப்படி நிலம் ஆக்கிரமிப்பை செய்து வருகின்றாா்கள் என்பதும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் பிறமதத்தவா்களை அண்டிவிடஅனுமதிக்க மாட்டாா்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

  5. மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களைப் பற்றி குர்ஆனின் சொல்லாடல்களை சுருக்கமாகத் தருகிறேன் விரிவாகப் படிக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட எண்களுடைய குர்ஆன் வசனங்களைப் தேடிப் படித்துக் கொள்ளவும். எ

    உலகவாழ்வில் பேராசை கொண்டவர்கள் 2:96
    நஷ்டவாளிகள் 2:121
    கூச்சல் கூப்பாடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் 2:171,
    செவிடர்கள், ஊமையர்கள் குருடர்கள் 2:171
    குரங்குகள், பன்றிகள் 5:60,
    குரங்குகள் 7:166
    நாய்கள் 7:176
    கேவலமான கால்நடைகள் 8:22
    மிகக் கெட்ட மிருகங்கள் 8:55
    அசுத்தமானவர்கள் 9:28
    மிருகங்கள், மிருகங்களைவிடக் கீழானவர்கள் 25:44
    பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் மூழ்கிக் கிடப்பவர்கள் 38:2
    அநியாயக்காரர்கள் 62:5
    சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் 63:4
    படைப்புகளில் மகா கெட்டவர்கள் 98:6

    இதற்கு மேலும் முஃமின்களின் சப்பைக்கட்டுகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன். குர்ஆனை மட்டுமே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களால் ஒரு பொழுதும் மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவே முடியாது! கூடாது என்பதையே இக் குளுகுளு வசனங்கள் கூறுகின்றன.

  6. நானும் தெளிவாகவே சொல்கிறேன். ஒரு நாட்டு மக்கள் அனைவருமே ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால். அந்நாடு அம்மதத்தையே அரசு மதமாக வைத்து, அதற்கு என்னவெல்லாம் உதவிகள் செய்யமுடியுமோ அதைச் செய்யும். பாகிஸ்தானோ, சவுதி அரேபியாவோ, தங்களை மதச்சார்பில்லா நாடாக அறிவிக்கவில்லை. வாக்குச்சீட்டுகள் மூலமாக ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தங்களை இசுலாமிய குடியரசுகளாகத்தான் அறிவித்து வாழ்கின்றன. ஏன் நீங்கள் அவர்கள் உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் இந்துக்குடியரசாக இருக்கக் கூடாது என்று எந்த பாகிஸ்தானியாவது எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா?

    இச்சூழ்நிலையில் அவர்கள் மதத்தின் தலைவர் என்ன சொன்னார் ? அவர்கள் பிறமக்களை அங்கே எப்படி நடாத்துகிறார்கள் என்பதையெல்லாம் சொல்லிச்சொல்லி அங்கலாய்க்கலாமேயொழிய‌ அவர்கள் இசுலாமியக்குடியரசாக இருக்கக்கூடாதென்றே சொல்ல முடியாது. சொன்னால்… ‘

    ‘ஏம்பா….நீ வேணுமானால் உன்னாட்டை உன் மதக்குடியராசிக்க வைத்துக்கொள்; எங்களையே ஏன் கூடாதென்கிறாய்! பல்லிருக்கிறவன் பக்கோடா தின்கிறான் உனக்குப் பல்லிருந்தால் தின்று கொள்!”

    எங்கே முகத்தை வைத்துக்கொள்வீர்கள் திரு அன்புராஜ்? பாகிஸ்தானிலோ, சவுதி அரேபியாவிலோ மாற்றுமதத்தவர் உரிமைகளற்ற இரண்டாம்தர குடிகளே அது மெத்தவும் சரி. அப்படித்தான் நாடு இருக்கவேண்டும் இல்லாவிட்டால் என்னவாகும்? வேதம் கோபாலின் பின்னூட்டம் (ஒன்றல்ல நிறைய) இன்று இத்தளத்தில் வெளியாகியிருக்கிறது படித்துத்தெரிந்து கொள்ளவும் அதாவது ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையை அல்லவா அவர் சொல்கிறார்?

    எனக்கு இக்கட்டுரை ஒரு வேண்டாப்பொருளாகத்தான் தோன்றுகிறது அப்படியே நமக்கு இவர் (கட்டுரை) சொல்லித்தான் தெரிய வேண்டுமெனபதே இல்லை இணையங்கள் பறை சாற்றுகின்றன இவர் நான் தெரிந்தவைகளையே இங்கு மீட்டுரு செய்தெழுதுகிறார் ஒருவேளை, மற்றவர்களுக்குத் தெரியாது என்று நினைத்துவிட்டார் போலும்! இருப்பினும் பாகிஸ்தான் பாகிஸ்தானாகவே இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது ஈரானுக்கும் வடகொரியாவுக்கும் ப்ரஷர் கொடுத்தமாதிரி பாகிஸ்தானுக்குக் கொடுக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய நாம் அமெரிக்கவைப் போல வல்லரசு இல்லை.

  7. தங்களை இசுலாமிய குடியரசுகளாகத்தான் அறிவித்து வாழ்கின்றன. ஏன் நீங்கள் அவர்கள் உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் இந்துக்குடியரசாக இருக்கக் கூடாது என்று எந்த பாகிஸ்தானியாவது எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா?
    ———————–
    தாங்கள் சொல்வது இதுவரை சரி.நாம்தான் பிரச்சனைக்கு காரணம். இதன்படி வாழ இந்துக்கள் மத்தியில் கருத்து மாற்றம் மன மாற்றம் எற்பட வேண்டும். நீங்கள் வேண்டுமானால் நோவாமல் நுங்கு தின்ன தயாராக இருக்கலாம். மற்றவா்களுக்கு இந்தியாவையும் அரேபிய வல்லாதிக்கதிற்கு இழந்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பை உணா்த்த வேண்டியது அவசியம் என்பது எனது கருத்து.இந்தியாவில் விவேகானந்தா் விரும்பிய ”பிரம்மச்சரிய ஆஸ்ரமம்” உயிா் பெற வேண்டும் என்பதுகூட எனது ஆசை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *