அழகிய மரமும் பூதனையின் பாலும்

ஆயர்பாடியில் குழந்தை கண்ணனைக் கொல்ல கம்சன் அனுப்பிய பல அரக்கர்களின் ஒருத்தி பூதனை ஆவாள். அவளின் திருபோன்ற உருவில் மயங்கி ஆயர்குல மக்கள் நம்பிக்கை கொண்டனர். யசோதை தன் கண்ணின் மணியான கண்ணனையே நம்பிக் கொடுத்தாள். ஆனால் பூதனையோ தன் மூலையில் நஞ்சினை இட்டு பாலனுக்கு பால் ஊட்டிக் கொல்ல விழைந்தாள். உலகம் யாவிற்கும் உயிர் ஊட்டுபவன் அவன், அவள் பாலோடு உயிரையும் குடித்து வீடு கொடுத்தான். இந்தக் கதையில் நமக்கு இன்றைக்கான பாடம் ஒன்றும் உள்ளது.

கிறித்துவ காலனிய ஆட்சி நம் தேசத்தின் மரபு வழி கல்வி முறைகளை அழித்து, மிஷனரிகளின் கைகளில் கல்வியை ஒப்படைத்தது. அந்த அழிவுக்கு முன் நம் தேசத்தின் கல்விமுறை பற்றி அறிய, திரு.தரம்பால் அவர்களின் ஆராய்ச்சி நூலாகிய ‘அழகிய மரம்’ அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல். அனைத்து சாதியரும், மதத்தினரும், பெண்களும் கூட அக்கால பள்ளிகளில் பெருவாரியாக படித்ததை ஆங்கில ஆவண சான்றுகள் மூலமே சொல்கிறார் தரம்பால். அண்மையில் தமிழாக்கம் செய்யப்பட்ட அந்நூலின் விமர்சனம் இங்கு காணலாம்.

சுதந்திரத்துக்குப் பின்னும், மதச்சார்பின்மைபேசும் அரசுகள் ஒருபுறத்தில் கிறித்துவ ஸ்தாபானங்களுக்கு கல்வி துறையில் நியாயமற்ற வகையில் துணைபுரிந்தும், மறுபுறத்தில் பெரும்பான்மை என்னும் பெயரில் இந்து மரபு கல்வியை கையாலாகாத வகையில் RTE, அரசியல் சட்டத்தின் 93ம் பிரிவில் திருத்தம் போன்ற சட்டங்கள் இயற்றி நசுக்கி வருகின்றன. இன்றைய நரேந்திர மோதி அவர்கள் அரசும் இக்குறையை பற்றி ஏதும் செய்யக் காணோம்.

சரி இதனால் என்னவாகிவிடப் போகிறது? குழந்தையர் கிறித்துவ பள்ளிகளில் படித்தால் என்ன தவறு என்று கேட்கலாம்.

இக்னேசியஸ் லயோலா என்னும் பெரும் தாக்கம் உடைய ஒரு கிறித்துவ மத தலைவர் சொன்னதாக ஒரு கூற்று உண்டு: ‘என்னிடம் ஒரு குழந்தையை முதல் ஏழு வருடங்களுக்கு தாருங்கள், நான் உங்களுக்கு ஒரு கிறித்துவனை அளிக்கிறேன்’

லயோலா போன்ற கிறித்துவர்களின் கல்வியோ தெரசா போன்றோரின் உதவியோ, எல்லாமே கிறித்துவ மத மாற்றத்திற்கான ஒரு கருவியே. இதை தெரசா போன்றோர் அப்பட்டமாகவே கூறியுள்ளார்கள், ஒளித்து மறைக்க கூட இல்லை. இதனாலே தான் கிறித்துவர்கள் கொடுக்கும் கல்வி பூதனையின் பால் போன்றது. அதில் சில நச்சு வஸ்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். மிதமான வகையில் கிறித்தவத்தின் மீது ஒரு நன்றியும்,நன்மதிப்பும் கொடுக்கும்; சராசரியாக இந்து மரபின் மீது ஒரு அக்கறையின்மையும் ஏளனமும் உண்டுபண்ணும்; தீவிரமாயின் இந்து சமய பண்டிகைகள் கொண்டாடினாலோ, மரபின் அடையாளங்களை அணிந்தாலோ தண்டிக்க கூடச்செய்யும். அண்மையில் கூட அத்தகைய செய்திகள் வந்துள்ளன. திருச்சியில் ஒரு கிறித்துவ பள்ளி தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை விதித்தது ஒரு உதாரணம்.

அப்பட்டமான செய்கைகளை விட உள்குத்தாய் செய்வன ஆபத்தானவை. வாரம் ஒன்றிரண்டு போதனை வகுப்புகளில் பைபிள் இருந்து மட்டுமே போதனைகள் சொல்லப்படும், தீபாவளியை கொண்டாட கிறித்தவர்களை நிர்ப்பந்திக்காதபோது கிறிஸ்துமஸ் பொழுது மட்டும் எல்லா சீராரையும் சேர்த்தே சாண்டா கிளாஸ் வேடம் கட்டும் நிகழ்ச்சிகள் நடக்கும்.

இப்படி சூசகமாக யாரும் கவனிக்கா வண்ணம் கல்வி என்னும் பாலில் கலப்படங்கள் பண்ணும் பூதனை அரக்கி கிறித்துவ ஸ்தாபனங்கள்.

நானும் என் கல்வியின் ஒரு பகுதியை ‘ஹீபர்’ என்னும் ஒரு கிறித்துவ மதபோதகர் பெயரால் இயங்கும் ஒரு இடத்திலேயே பெற்றேன். இப்போது நான் கிறித்துவ மதமாற்றம் மற்றும் இந்து துவேஷ நடவடிக்கைகளை சாடும் பொழுது, என்னை அறிந்தவர் நான் நன்றிகெட்டதனமாக நடக்கிறேன் என்று கூட கூறியது உண்டு.

அவ்வாறு அன்று, எனக்கு கல்வி கொடுத்தோர் மீது இன்றும் நன்றி உண்டு, ஆயினும் அக்கல்வியில் சில ஓட்டைகள் இருப்பதை அறிந்து நிரப்பத் தொடங்கிவிட்டேன். உதாரணத்திற்கு முன் குறிப்பிட்ட ‘ஹீபெர்’ ஒரு கவிதையில், இந்துக்களை வெறும் கல்லையும் மரத்தையும் வணங்குகின்ற காட்டுமிராண்டிகள் என்னும் வகையில் சித்தரித்துள்ளதை அறிந்தேன்

From Greenland’s Icy Mountains
‘What though the spicy breezes blow soft o’er Ceylon’s isle;
Though every prospect pleases, and only man is vile?
In vain with lavish kindness the gifts of God are strown;
The heathen in his blindness bows down to wood and stone.’

அவ்வாறு அவர்களை பொறுத்தவரை கல்லையும் மரத்தையும் வணங்கும் காட்டுமிராண்டியான என் நன்றியுணர்ச்சியில் இதனால் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பின் பல சிந்தனைகளும் கேள்விகளும் பிறந்தன.

வரலாறு கூறுவதோ நம் தேசத்தவர் பண்டையகாலம் தொட்டு செல்வம், புகழ் யாவையும் விட கல்வி, அறிவு, சான்றாண்மை, ஞானம் போன்றவற்றையே போற்றினர். அவ்வாறு இருக்கையில் எவ்வாறு கல்வி மரபுகள் இங்கு இல்லாமல் போகும்?

கிறித்துவர்கள் பெருவாரியாக வந்ததோ பொதுயுகம் 15,16ஆம் நூற்றாண்டில் தான், அதற்கு முன் கல்விச்சுழல் எப்படி இருந்தது?

இரண்டு-மூன்று சதவிகிதமே மக்கள்தொகை கொண்ட கிறித்துவர்களால் எவ்வாறு இந்தியாவின் பட்டி தொட்டி ஊர்கள் நகரங்கள் எங்கும் பள்ளிகள், கல்லூரிகள்,ஆஸ்பத்திரிகள் நடத்தமுடிகிறது?

இப்படிபட்ட கேள்விகளுக்கான விடைதேடல் தரம்பால் போன்ற அறிஞர் தம் ஆராய்ச்சிகளை அறிமுகம் செய்தன. அதில் அறிந்தது, வியாபாரம் பண்ண வந்த பரங்கியர் ஆட்சியை பிடித்தது மட்டும் அல்ல, அழகிய மரமாகிய நம் கல்வி மரபை வேரோடு சாய்த்துவிட்டு நம்மை நம் எதிர்காலத்தை பாதிரிகள் கையில் ஒப்படைத்துவிட்டனர். இந்த நிலையில் நன்றியுணர்ச்சி எவ்வாறு முழுதாக இருக்கும்?

நன்றி நல்ல பண்பு தான். ஆனால் அதற்காக ஒருவரின், ஒரு ஸ்தாபனத்தின், ஓரு மதத்தின் அதன் கொள்கைகளின் குறைபாடுகளை காணாது இருந்து விடக்கூடாது. அது அனைவருக்கும் கேடாகத்தான் முடியும். துரோணரும் கர்ணனும் நன்றியுணர்ச்சியால் குருடாகப் போனது பெரும் அழிவில் தான் முடிந்தது.

இந்த பொய் வரலாற்றிற்கு வைரமுத்து போன்றோர் சாட்சி கூறிவருவது மிகவும் ஈனச்செயல். “கிறிஸ்துவர்கள் வராவிட்டால் தமிழ் நாட்டில் கல்வி பொதுவுடைமை ஆகியிருக்காது”, என்று அவர் கூறுவது, ஒரு திருடன் ஊர் சொத்தை கொள்ளையடித்து தன் வீட்டில் அன்னதானம் செய்வதை போற்றுதல் போல. மரபுக்கல்வியாகிய அழகிய மரத்தின் நிழலில் பொதுவாக அனைவரும் படித்தனர், அதை சாய்த்துவிட்டு, பெஞ்சுகள் செய்து, கிறித்துவக்கல்வி என்னும் கலப்படப்பாலை ஊட்டுவோர்க்கு நன்றி அறிவித்தல் அறிவீனம்.

பெரும்பாலான இந்துக்கள் இது போன்ற கேள்விகள் கேட்காமல், வரலாற்றை ஆராயாமல், கிறித்துவ கொள்கை நோக்கங்களை அறியாமல் கான்வென்ட் கல்வி மோகத்தில், பூதனை கையில் குழந்தையை கொடுத்த யசோதை போல கிறித்துவ பள்ளிகளில் தங்கள் மக்களை சேர்க்கின்றனர். அங்கு முழுதாக மதமாற்றம் செய்யாவிட்டாலும் இந்து சமயத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேற்றுமைப் படுத்தலாவது செய்யப்படும்.இதை முழுதும் தப்பிக்கவும் இயலாது, மதசார்பின்மை என்னும் பெயரில் அரசுகள் மரபுசார் கல்வி அமைப்புகள் வளரவிடாது தடுக்கின்றன. ஆக பலருக்கும் வேறு வழி இருக்காது.

கிறித்துவ பள்ளிகளில் தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற நிர்பந்தம் வந்தால், இக்காலத்தில் பெற்றோருக்கு அக்கலப்பட கல்வியில் இருந்து குழந்தைகளை காக்க ஒரே ஒரு வழித்தான் உள்ளது. அது பூதனையின் நச்சை விடுத்து பாலை மட்டுமே உண்ட கண்ணன் தான். அந்த மாயவனின் மீது அன்பும் பக்தியும் மரபும் கலாச்சாரமும் ஊட்டி குழந்தைகளுக்கு தருமத்தின் தடுப்பூசி தன்னை தவறாமல் மீண்டும் மீண்டும் போட்டு கிறித்துவ பள்ளிகளுக்கு அனுப்புதல் வேண்டும்.

அது இருக்க, அரசுகளின் அட்டூழியத்திலிருந்து இந்துக்கோவில்கள் அவை சார்ந்த பள்ளிகளை மீட்டு வருங்காலத்திலாவது நமது அழகிய மரம் மீண்டும் துளிர் விட்டு மலர வகை செய்யவேண்டும்.

கண்ணன் அருளால் அந்த அழகிய மரம் மீண்டும் பூக்கும்.

(இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் இங்கே)

(ரகுநந்தன் பாஸ்கரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்துமதம், பண்பாடு, கலாசாரம் தொடர்பான விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்)

20 Replies to “அழகிய மரமும் பூதனையின் பாலும்”

  1. கடைசி வரி ஆங்கிலமூலத்தில் இல்லை. இங்கு புகுத்தப்பட்டிருக்கிறது. அவ்வரி வைக்கும் கருத்தும் சரியில்லை!

    கோயில்கள் மீட்புக்கும் இக்கட்டுரைப்பொருளான ”பாரதீய கல்வி” க்கும் என்ன தொடர்பு? கோயில்கள் நடாத்தும் பள்ளிகள் பற்றி என்ன பிரச்சினை? அவர்கள் நச்சுகலந்த கல்வியா போதிக்கின்றார்கள்? அவற்றை மீட்டெடுக்கவேண்டுமென்று ஏன் இறைஞ்சுகிறார்?

    ஆங்கிலத்தில் Willing to wound, and yet afraid to strike, அதைத்தான் இவர் செய்கிறார். கிருத்துவ மிஷினரிகளால் உருவாக்கப்பட்ட பள்ளிகளில் படிப்பவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு இந்திய பாரம்பரீயத்தையும் இந்துத்வ வாழ்க்கையையும் இழக்கிறார்கள் என வருந்தும் இவர் ”அங்கு போகாதீர்கள்!” எனபதற்கு பதிலாக, இப்பள்ளிகளின் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பது இந்துப்பெற்றோர்களின் – நிர்பந்தம் — என்கிறார். அப்படி எங்கே நிர்பந்தம் ரகு? யார் இந்துப்பெற்றோர்களை கண்டிப்பாக கிருத்துவ பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டுமென்றார்கள்?

    ஏராளம் கிருத்தவரல்லாதோர் நடத்தும் பள்ளிகள் இருக்க, ஏன் தொன் பொஸ்கோவிலும், நல்மேயப்பர் பள்ளியிலும், இந்துப்பெற்றோர் தங்கள் குழந்தைகளைச்சேர்க்க ஆளாய்ப்பறக்கின்றார்கள்? அவர்களின் ஆசையின் பேரில் சேர்க்கிறார்கள். நிர்பந்தமே இல்லை. இந்துத்வாவினரின் பிள்ளைகள் பலர் இங்கு படித்து பெரிய நிலையடைகிறார்கள். பாரதீயப்பண்பாட்டை மறக்கடிக்கும் வேலையை இப்பள்ளிகள் செய்திருக்குமானால் அது வெளித்தெரியாமலிருக்குமா?

    ஆசிரியர்களாகவும் இந்துக்கள் பலர் வேலை பார்க்கிறார்கள். அவர்களை மிரட்டியாவது கிருத்துவர்களாக்கி இருக்கலாமே? மறைமலை பல பத்தாண்டுகளாக சென்னைக் கிருத்துவ கல்லூரி தமிழாசிரியர்தானே? அவரை விட இந்துவாக வேறெவர் உண்டோ? மதுரை தூயமரியன்னை மேநிலைப்பள்ளியின் தமிழாசிரியராக இருந்தவர்தானே வைணவ உபன்யாசர்கர் ஜோசேப்பின் குரு? ஜோசேப்பும் அப்பள்ளி மாணவர்தானே? இருவரும் தங்கள் பள்ளியைப்பற்றி ஒரு சொல் கூட குறைத்துச்சொல்லவேயில்லையே?

    இப்பள்ளிகள் கிருத்துவ போதனை பண்ணவும் செய்கின்றன. அது தொடக்கப்பள்ளி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு செய்ய வேண்டியது இவர் சொல்லும் காம்பரமைஸ் இல்லை. பெற்றோர் அப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாமென்றல்லவா ஓங்கியுரைத்திருக்க வேண்டும்.

    ஆனால், இவர் என்ன சொல்கிறார்? ”சேருங்கள். ஆனால் குழந்தைகளை நன்றாக கிருஸ்ணபக்தியை ஊட்டி வளருங்கள்; போதும்”

    போகாத ஊருக்கு வழி சொல்கிறார். அப்படி எல்லாப்பெற்றோரும் செய்வதில்லை, பக்தியை ஊட்டுவதற்கு பெற்றோரும் பக்திமான்களாக இருக்கவேண்டும். அப்படி இருப்பதில்லை. பொதுஇந்துக்கள் நாடோறும் இராமாயணமும் கீதையும் வாசித்து வாழ்வதில்லை. அவர்கள் எப்பள்ளியில் சேர்க்கிறோமென்பதையும் பெரிதுபடுத்துவதில்லை.. இவர்களுக்கு இவர் சொல்லும் உபாயம் ஒத்துவராது.

    ஒரே வழி: கிருத்துவரல்லாதோரால் நடாத்தும் பள்ளிகள், கிருத்துவ பள்ளிகளைப்போல ஈர்க்கும் தன்மை உடையதாக மாற்றுவது; ஆனால அது இக்காலத்தில் நடக்காது. காரணம்: கல்வி என்பது வியாபாரம். கல்வி வியாபாரிகள் பள்ளிகளை மேம்படுத்தும்போது அது இன்னும் எட்டாககனியாக பொது இந்துக்களுக்கு ஆகும் போது, கிருத்துவ கல்வி மலிவாகவும் சிறப்பாகவும் இருக்க அங்கு இவர்கள் போகிறார்கள்.

    துர்நாற்றம் பிடித்த சேரிகளிலும் மீனவ சேரிகளும் கிருத்துவ தொடக்கப்பள்ளிகளே காணப்படும். மற்றவர்கள் அங்கு போய் பள்ளிகள் தொடங்க மாட்டார்கள். இலவசமாக கல்வியைக் கொடுக்க வேண்டுமே? கல்வி ஒரு வியாபாரமையா வியாபாரம் ! மேட்டுக்குடி பெற்றோரையா திருத்த முடியாத இவர், கீழ்நிலை மாந்தர்களைப் பற்றி கேள்வியாவது பட்டிருப்பாரா? அங்கு போய் இலவசகல்வி கொடுங்கள். அழகிய மரம் வளரும். He lives in a make-believe world. Bishop Heber School Trichy seems to have failed in educating him to understand that life is not a dream of roses and perfumes but a hard rock of bitter realities.

  2. “பூதனையின் பால்” – சரியான எடுத்துக்காட்டு. தரம்பாலின் புத்தகத்தில் உள்ள பல உண்மைகள் வெளியில் பரவவேண்டும். ஆனால் தேசீயவாதிகளுக்கென தினசரிப் பத்திரிகையோ, மீடியாவோ இல்லாத நிலையில் இது எப்படிச் சாத்தியமாகும் எனத் தெரியவில்லை.
    1.ஹிந்துக்கள் மதாபிமானம் உள்ளவர்கள், அவர்களை நேரடியாக மதமாற்றம் செய்ய முடியாது என்று கண்ட ஆங்கிலக் கம்பெனியர், கல்வியை அதற்கான கருவியாகக் கொண்டனர். இதை மெக்காலே 1835ல் வெளிப்படையாகவே சொன்னார். ஆங்கிலேயர் புகுத்திய கல்விமுறையில் பயின்றவர்கள் ஹிந்துவாக இருக்கமாட்டார்கள், வெளிப்படையான மத மாற்ற முயற்சி இல்லாமலேயே இது நடந்துவிடும், அதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று எழுதினார்.
    2.ஆங்கிலேயர் புகுத்திய கல்விமுறை எப்படிப் பரவியது? ஆங்கிலேய காலனியர், நமது பாரம்பரிய பொருளாதார அமைப்பை சீர்குலைத்து, சமூகத்தின் வாழ்வாதாரங்களைத் தகர்த்தனர். சுதந்திரமாக இயங்கிய கிராம சமுதாயங்கள் தங்கள் பொருளாதார, ஆட்சி சுதந்திரத்தை இழந்தன. வேலை வாய்ப்புகள் வற்றியன, மறைந்தன.அதிக வரியினால் விவசாயிகள் வருமானத்தை இழந்து, வறுமைக்குத் தள்ளப்பட்டனர். வருவாய் தேடி தங்கள் கிராமத்தை விட்டு நகர்ப்புறங்களுக்குப் பெயர்ந்தனர். {இதையெல்லாம் தரம்பாலின் புத்தகத் தொகுதியின் பிற பாகங்களில் காணலாம்.] காலனியரின் நிர்வாகம் பெருகி, விரிவடைந்து வந்தது; வேலை வாய்ப்புகள் அதையொட்டியே அமைந்தன.இந்த நிலையில் ஆங்கிலம் அறிந்தவர்களுக்கே அரசுப் பணி என்று செய்தனர். விவசாயம் இயலாது, தேசீயத் தொழில்கள் நசுங்கி, வியாபாரம் காலனியரின் கைக்குள் போனபிறகு, இந்த அரசுப் பணியே பலருக்கும் பிழைக்கும் ஒரே வழி என்றானது. அதற்கும் ஆங்கிலம் தெரியவேன்டும் என்ற நிலையில் எல்லோரும் ஆங்கிலக் கல்விபக்கமே படையெடுத்தனர். [ இன்றுவரை- அரசு அத்தாட்சி பெற்ற கல்வி தான் வேலை வாய்ப்புகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. மொரார்ஜி பிரதமராக இருந்த சில நாட்களில் Job-Degree delink செய்யவேண்டும் எனப் பேசினார். அவர் ஆட்சியே கவிழ்ந்த பிறகு , இந்த எண்ணமே போய்விட்டது!
    3. நமது முதல் பிரதமர் நேரு, பெயரளவில்தான் இந்தியர். சுதந்திரம் வந்த பிறகும் அவர் முழுக்க, முழுக்க ஆங்கிலேய காலனிய முறையையே நிர்வாகம், நீதி, கல்வி ஆகிய துறைகளில் பின்பற்றினார். கல்வித்துறையில் இலக்கியம், வரலாறு, தத்துவம் போன்ற Humanities, Social Sciences ஆகியவற்றின் மவுசு குறைந்து, வேலைக்கு விஞ்ஞான-கணித-பொறியியல் அறிவுதான் தேவை என்றாகியபொழுது, ஆங்கிலக் கல்வி என்பது ஆங்கில மீடியம் என்று ஆகியது! இந்தியாவின் எந்த மொழியும் நவீனக் கல்வி பயிற்றுவிக்க ஏற்றதாக இல்லை.
    4. ஆங்கிலேயரின் கல்விமுறை கிறிஸ்தவர்களின் பள்லி/கல்லூரி வழி பரவியது. காலனி ஆட்சியில் கிறிஸ்தவர்கள் பல சலுகைகள் பெற்றனர்.[ ஒவ்வொரு ஊரிலும் நகரின் மையப் பகுதிகளில் பெரிய நிலங்களைப் பெற்றனர். இதை இன்றும் காணலாம்.] அவர்களுடைய பன்னாட்டுத் தொடர்பினால் பல வசதிகள் பெற்றனர். அவர்கள் கல்வி அமைப்புகள் மதத்தைப்பரப்பும் ஒரு கருவியாகச் செயல் பட்டதால், இதற்கு அதிக முக்யத்துவம் அளித்தனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசியக் கல்வி எனக் குரல் எழுந்தாலும், சில அமைப்புகள் தோன்றினாலும் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை.
    5.கிறிஸ்தவர்கள் தங்கள் கல்வி அமைப்புகள் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற நோக்கில் முதலில் ஓரளவு படிப்புத் திறமை உள்ள மாணவர்களையே சேர்த்துக்கொண்டனர். பொதுவாக அவர்கள் நிர்வாகம் திறமையாகவே நடந்தது.இதை எதிர்கொள்ளும் திறமையும் நோக்கும் வசதிகளும் தேசீயவாதிகளுக்கு இல்லை.
    6. இன்று ஆங்கில மீடியம் நிலைத்துவிட்டது. புதிய பள்ளிகள் புற்றீசல்போல் பெருகிவருகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவற்றில் ஒரு தரமோ, நேர்மையோ, திறமையோ, ஒழுக்கமோ இல்லாததால் கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளின் ஆதிக்கம் குறையவில்லை.
    7. கிறிஸ்தவப் பள்ளிகள் என்று மட்டும் இல்லை; இன்று பொதுவாக
    ‘மெட்ரிகுலேஷன்’ பள்ளிகளில் கூட ஹிந்துச் சிறுவர்/சிறுமியர் மதச்சின்னம் என்று கருதப்படுவனவற்றை அணிந்துவருவதை அனுமதிப்பதில்லை/ஆமோதிப்பதில்லை.
    8.மைனாரிடி என்ற பெயரில் கிறிஸ்தவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன. அதில் ஒன்று அவர்கள் மதம் பற்றிப் பேசலாம். இது ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் நடக்காது.
    9. இவ்வளவு நடந்தும் ஹிந்துக்கள் சொரணையில்லாமலேயே இருக்கிறார்கள்; ஒற்றுமை இல்லாமலேயே இருக்கிறார்கள். கிறிஸ்தவம் உலகம் தழுவிய அமைப்பு; அவ்வளவு பணபலம், ஆள்பலம், நிர்வாகத் திறமை,அரசியல் சலுகை/பலம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள். இதை எதிர்கொள்ள ஹிந்துக்களுக்கு சாமர்த்தியமோ, வசதியோ இல்லை.
    10. நமது ஆளும் வர்கத்தினருக்கும் இதில் உண்மையான ஈடுபாடு இல்லை.ஒரு சொந்த அனுபவம் சொல்கிறேன்.வாஜ்பாயி அமைச்சரவையில் முரளி மனோஹர் ஜோஷி கல்வி அமைச்சராக இருந்தார். கல்வித் துறையில் அக்கறை/கவலை கொண்டிருந்த நான் அவரைச் சந்தித்தேன். “இந்தியவில் 35% பிள்ளைகள் கிறிஸ்துவப் பள்ளிகளில் படிக்கிறார்கள், இதனால் அவர்கள் படிப்படியாக ஹிந்துமதத்திலிருந்து விலகுகிறார்கள்; இது தடுக்கப்பட வேண்டும்” என்றேன். “என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார், 10 நிமிஷத்தில் சொல்லுங்கள், அதை குறிப்புக்களாக எழுதி செயலர் ஒருவரிடம் தரவும் என்று சொன்னார். நான் சொன்னதன்/எழுதிக்கொடுத்ததின் சாராம்சம்:
    – ஹிந்து அமைப்புகள் கல்வித் துறையில் முழு மூச்சுடன் ஈடுபடவேண்டும்.
    – பா.ஜ.அரசோ, கட்சியோ இதில் நேரடியாக ஈடுபடக்கூடாது; ஆங்கில அரசு மிஷினரிகளை ஊக்குவித்ததுபோல் தேசீய அரசும் பிற அமைப்புக்களை ஊக்குவிக்கவேண்டும்.
    -ஆங்கில அரசு மிஷினரிகளுக்கு வசதிகள் செய்ததுபோல் தேசிய அரசும் தேசிய நிறுவனங்களுக்கு வசதிகள் தரவேண்டும்.
    – பல்கலைக் கழகங்கள் இடதுசாரிகளின் வசமாகிவிட்டன; அங்கு தேசீய விரோதப் போக்கே மேலோங்கியிருக்கிறது. சுய பெரும்பான்மை இல்லாத அரசு இதை எளிதில் சரிசெய்ய முடியாது. ஆனால் இதற்கு மாற்றாக தேசிய நோக்கம் உள்ள புதிய பல்களைக்கழகங்களைத் தொடங்கவேண்டும் , தேசீய நோக்கில் புதிய பாடதிட்டத்தை உருவாக்க வேண்டும்; அரசுத்தேர்வுகளுக்கும் பணிகளுக்கும் இவற்றையும் அங்கீகரிக்கவேண்டும்.
    -அன்று இருந்த நிலையில் வாஜ்பாயி தலைமையிலான கூட்டு அரசு எத்தனை நாள் நீடிக்கும் எனச்சொல்ல முடியாது; ஆகையால் கல்வித்துறை தொடர்பான முயற்சிகளை உடனடியாகத் தொடங்கவேண்டும். பல கமிஷன்கள் வந்து போய்விட்டன, வேண்டியது செயல், இன்னொரு கமிஷன் அல்ல. இருக்கும் நிலையை ஒரேயடியாக மாற்றாமல் , ஒரு மாற்றுமுறையை Alternative கொண்டுவருவது கடினமல்ல. அமெரிக்காவில் இப்படித்தான் நடக்கிறது [ உதாரணம்: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார-அரசியல் துறைகள் இடதுசாரிகளின் கைவசம் , ஆனால் சிகாகோ பலகலைக் கழகம் வலது சாரிகள் முகாம். அங்கு பல்கலைக் கழகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதால் இந்த நிலை. இந்தியாவிலோ எல்லாம் அரசு ஆதிக்கத்திற்குட்பட்ட அடிமைக்கும்பல், இடது சாரிகளின் கோட்டை; இதற்கு மாற்று அவசியம்.]
    இப்படி நான் குறிப்பு எழுதிக்கொடுத்தேன், ஒரு acknowledgement கூட வரவில்லை. சரஸ்வதி வந்தனா, அது இது என்று சர்ச்சைகள் கிளம்பி வாஜ்பாயி அரசே விலகியது

    இன்றும் நமது அரசு எதுவும் சாதித்துவிடவில்லை. தேசீயவாதம் என்பது வாயளவில்தான்! ஆயிரம் மைல் பிரயாணம் என்றாலும் முதலடியாவது எடுத்துவைக்க வேண்டாமா? அதுவும் செய்யவில்லை.
    கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றுதலே இன்று நமது தேசீய வாதம்!
    Create viable alternative, do not merely oppose the existing system!

  3. திருக்கோவில்கள் அனைத்தும் இந்துக்கள் வசம்.வீடு இந்துக்கள்வசம். முறையான சமய கல்வியை அளிக்க என்ன தடை ? கோவில்களுக்கு இருக்கும் சொத்துக்கள் மக்களிடையே சமய கல்வியை அளிக்க பயன்படவில்லையே ஏன் ? நாம் 1000 ஆண்டுகளாக அடிமையாக வாழ்ந்து வருகின்றோம். நம்மிடையே ஒரு கலாச்சார உணா்வு-குறிப்பாக பிற்பட்ட மற்றும் அட்டவணை இனத்தவா் மத்தியில் -இல்லை.
    பிரச்சனை ஆழமானது அகலமானது. எந்த திட்டமும் இந்து இயக்கத்தவா்களுக்கு இல்லை. இயேசுவின் பெயரால் சில நல்ல பழக்க வழக்கங்களுக்கு அவர்களை பழக்கிவிட்டிருக்கின்றனா். அமைதியான ஜெபம் செய்தல்.பாடல்கள் பாடுதல் சமூக விழிப்புணா்வு, தங்கள் சமயம் பரப்பப்பட வேண்டும் என்ற ஆா்வம். இப்படி பல.
    இந்து ஆலயங்களில் தங்க கொடிமரம்,தங்கசப்பரம் சிலைகளுக்கு தங்க கவசம் வைர நகைகள் விலைஉயாந்த தங்கம் வெள்ளிசாமான்கள் என்று நமது தெய்வங்களை கோடீஸ்வரா்களாக ஆக்கி வைத்துள்ளோம். ஐம்பொன் சிலை செய்தால் 32 கிலோ தங்கம் சிலைக்கு தேவையாம்.ஆனால் திருக்கோவில் நிா்வாகம் செய்த சிலையில் ஒரு குன்று மணி தங்கம் இல்லை. 32கிலோ தங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. என்னே கொள்ளை !!!!!நமது தெய்வங்கள் பாலில் தான் குளிப்பார்கள். அபிசேகம் என்று ஒரு தேவையற்ற வழிபாடுமுறையினால் நமது சிந்தனையே மாறி விட்டு மனிதனை மறந்த நிலைக்கு ஆளாகி வாழ்ந்து வருகின்றோம். அபிஷேகம் என்பது மத ஆடம்பரம்.ஆனால் ஒரே ஒரு தேவாரப்பாட்டு பாடத்தொிந்த இந்துக்கள் தமிழ்நாட்டில் எத்தனை போ்? தேவாரம் திருவாசகங்கள் மக்கள் பயன்பாட்டில் குறிப்பிட்ட மக்களின் பயன்பாடடில்தான் இருக்கின்றன்.
    விநாயக சதுா்த்தியினால் விசா்ஜயத்தினால் என்ன பலன் ? பணம் விரயம்.மனிதவளம் விரயம். நேரம் விரயம். கிறிஸ்தவன் பள்ளிகளைக் கட்டுவான் அனாதை இல்லங்களை நடத்துவான்.

    இந்து சமய அறநிலையத்துறை என்ன செய்கின்றது.

    தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை இண ஆணையா் அலுவலகம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளில் பயன்படுத்த தகுதி இழந்து போனது.ஏன் ?

    குலசை முத்தாரம்மன் திருக்கோவிலுக்க வரும்பக்தா்களுக்கு போதி குடிநீா் கழிவறை வசதிகள் கூட கிடையாது .உண்டியல் காணிக்கை தசராவில் மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் வசுல். செவ்யாய் கிழமைதோறும் கூட்டமோ கூட்டம்.
    இந்துக்களுக்கு என்று எந்தவித மான கொள்கையோ ஆா்வமோ லட்சியமோ கிடையாது.வெந்ததை தின்று விதி முடிந்தான் சாகலாம் என்பதுதான் கொள்கை. இந்துவாக வாழ்வாங்கு வாழுதல் என்பது குறித்த எந்த விழிப்புணா்ச்சியும் இல்லாத நிலையில் கிறிஸ்தவர்களை குறை சொல்லி ஆவதென்ன ?
    கடந்த 20 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி -1 பாலி டெக்னின் -1 ஆசிரியா் கல்வி கல்லூரி ( பிஎட்) சாத்தான்குளத்தில்-1 சாயா்புரத்தில் -1 துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கால்டுவெல் கலை அறிவியல் கல்லூரி கூடுதலாகத் துவக்கப்பட்டுள்ளது.
    தூததூக்குடி மாவட்டத்திற்கு காஞ்சி ஸ்ரீசங்கரமடம் என்ன செய்தது ?சிருங்கேரி சங்கரமடம் என்ன செய்தது ? ஆதீனங்கள் என்ன செய்தது ?
    எனனாவது பல்லக்கு கொண்டு வந்து தூக்கிச் செல்லமாட்டானா என்று ஆதீனகா்த்தா்கள் விழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றாா்கள் . காலில் விழுந்து வணங்காதவனை பார்ப்பது கூட பாவம் என்ற கொள்கை உள்ளவா்கள்.
    இதோ தசரா ஆரம்பித்து விட்டது.குலசேகரன்பட்டணமும் சுற்றியுள்ள கிராமங்கள் படும் பாட்டை வந்து பாருங்கள்.முருங்கைக்காயை தின்னுபிட்டு பயலே மூணு பொண்டாட்டி கேட்கிறான் என்று ஆபாசபாடல்கள் முழங்க வீதியெங்கும் ………………….. கலை அழகு கிடையாது.பண்பாட்டுக் கொலை கலாச்சார கொலை. அம்மனுக்கு காப்பு கட்டி நடக்கும் ஆபாச கூத்தைப் பாருங்கள். தொடை குண்டி தெரிய பெண்கள் நடனம், சென்னை திரைப்பட துணை நடிகைகளின் அணிவகுப்பு என்று என்ன வென்று சொல்வது வேதனைகளை. சாதாரண கிராமம் தாண்டவன் காடு.மாதவன்குறிச்சி. இந்த இரு கிராமங்களில் மட்டும் தசரா திருவிழாவிற்கு மட்டும் தலா 20 லட்சம் செலவு செய்கின்றாா்கள். நிரந்தர திட்டம் எதும் கிடையாபது.
    30-40 வருடங்களுக்கு முன்பு காப்பு கட்டி ஒரு வேளை உணவு இருவேளை குளிப்பு என்று சைவ உணவு பிரம்மச்சரியம் என்று பல ஆசாரங்களோடு கலை அழகோடு,சுயமாக செய்த கேக்கப் சாதனங்களைக்கொண்டு அலங்காரங்கள் செய்து விடுகளில் பிச்சை எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள்.ஆனால் இனறோ ஊரை வசுல் செய்து சீட்டு நடத்தியும் வட்டிக்கு பணம் கொடுத்தும் -அநாகரீக வெறியாட்டம் நடைபெறுகின்றது. கூச்சல் ஊளைச் சத்தம் வானை நிரப்பும்.காவல்துறை அதிகாரிகளை காப்பு கட்டியவா்கள் சற்றும் மதிக்க மாட்டாா்கள்.ஏதோ அனைவரும் தேவர்கள் உலகத்தில் இருந்து இறங்கி வந்தவா்கள் போல் செய்யும் கூத்தும் ஆணவச் செயல்களும் பார்த்தால்தான் தெரியும்.

    .கிறிஸ்தவா்களிடமும் முஸ்லீம்களிடமும் நாம் தோற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம். இந்துக்கள் உருப்பட விவோகனந்தரும் ஸ்ரீநாராயணகுருவும் தேவை. வழிபாடுகள் நாகரீகப்படுத்தாமல் இந்துக்களுக்கு விமோச்சனம் இல்லை.அதைசாதிக்க ஆட்கள் யாரும் இல்லை. இந்து இயக்கங்களுக்கு அது குறித்த விழிப்பணா்ச்சி இல்லை. எனவே இந்துக்களுக்கு தோல்விதான் எட்டும் தூரத்தில் உள்ளது.

  4. அ.அன்புராஜ் பல விஷயங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றைப் பற்றி-
    1. இன்று ஹிந்துக் கோவில்கள் அரசின் ஆக்ரமிப்புக்கு உள்ளாகி, அவர்கள் சுரண்டும் சுரங்கமாகிவிட்டன. இது தெரிந்தும் ஹிந்துக்கள் அங்கு ஏன் பணத்தைக் கொண்டு கொட்டுகிறார்கள்?
    2. ஹிந்து மதத்தில் வழிபாட்டு-உபாசனை முறை யுகம் தோறும் மாறிவருகிறது. கிருத-சத்திய யுகத்தில் தியானம்; திரேதாயுகத்தில் யாக-யஞ்ஞங்கள்; துவாபர யுகத்தில் புனித ஸ்தலங்கள் யாத்திரை, புனித தீர்த்தங்கள், அர்ச்சாமூர்த்திகள்-கோவில்கள் வழிபாடு-என்று இப்படி இருந்தது. ஆனால் கலியில் இது எதுவும் எடுபடாது. கலியில்:
    -புனித தீர்த்தங்கள் தலங்கள் தங்கள் தூய்மையை இழந்து வியாபாரத் தலங்களாகிவிடும்
    – ஆலய மூர்த்திகள் தங்கள் தெய்வீகத்தன்மையை இழந்துவிடும்; வழிபாடுகள் முறைப்படி நடவாது.
    -சிறிதும் தகுதியற்றவர்களே அரசு அதிகாரத்தில் இருப்பார்கள்
    -அரசினர் மிலேச்சர் கொள்கைகளைப் பின்பற்றுவார்கள், அதனால் ஹிந்துக்கள் பாதுகாப்பை இழப்பார்கள்.
    இதையெல்லாம் நமது பாகவத புராணத்திலேயே [12வது ஸ்கந்தத்திலும் பிற இடங்களிலும்] 2000வருஷங்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள். நம்மவர்கள் படிப்பதில்லை.
    பின், கலிகாலத்தில் என்ன செய்யவேண்டும்? அவரவர்களும் இருந்த இடத்திலேயே சுத்த மனதுடன் கடவுள் பெயரைச் சொல்லவேண்டும்- பலரும் கூடிப் பஜனை செய்யவேண்டும். இந்த நாம ஜபம் தான் கலிகாலத்திற்கு ஏற்றது. கலிகாலத்தில் கோடி குறைகள் இருந்தாலும் இந்த ஒரு நன்மை இருக்கிறது-வழிபாடு எளிதாகிறது! இதையும் பாகவதமே சொல்கிறது!
    3. பாரதத்தில் சென்ற ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிய மஹான்கள் அனைவரும் நாமஜபத்தையே பரப்பினர். [ஞானேஸ்வர், துகாராம். நாமதேவர், ஏக்நாதர், மீராபாய், துளசிதாசர், புரந்தரதாசர்] எளிய வழிபாட்டு முறைகளைப் புகுத்தினர். வங்காளத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண பஜனையைப் பரப்பினார். புதிய கோவில் கட்டுவதற்கும் பழையனவற்றைப் புதுப்பிப்பதற்கும் துலுக்க நவாப்புகள் தடைவிதித்தபோது, மஹாராஷ்டிரத்தில் ஸமர்த்த ராமதாசர் பஜனை மடங்களை நிறுவி எளிய ஹனுமார் வழிபாட்டின் வாயிலாக பக்தியைப் பரப்பினார். ராம நாமத்தைப் பரப்பினார். விஜய நகர-கர்நாடகப் பகுதிகளில் ஸ்ரீ வியாசராயர் 730க்கும் மேலாக ஆஞ்சனேயர் மூர்திகளை நிறுவி, எளிய மக்களால் தினசரி வழிபாட்டிற்கு ஏற்பாடுசெய்தார். இத்தகைய மூர்த்திகளை தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் காணலாம். இதெல்லாம் அரசினர் ஆதரவின்றி, ஆடம்பரமின்றி, அதிக செலவின்றி நடந்தன.
    நமது மடாதிபதிகளுக்கு இதெல்லாம் தெரியாததல்ல. காஞ்சி மடத்தின் 59வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதி (1610-1692) எழுதினார்:
    கலி கல்மஷ சித்தானாம்
    பாபத்திரவிய ஜீவினாம்
    விதி கர்ம விஹீனானாம்
    கதி கோவிந்த கீர்த்தனம்.
    [ இக்கலி காலத்தில் மனிதனின் புத்தி கெட்டுவிட்டது; பாபம் செய்தே வயிற்றுப்பிழைப்பு நடக்கிறது. கர்மாக்கள் சரியான முறையில் செய்யப்படுவதில்லை; ஆகவே நமக்குக் கதி, இறைவன் பெயரைச் சொல்லிப் பாடுவதுதான்.] இதற்கேற்ப நாம-ஸங்கீர்த்தன- பஜனை சம்பிரதாயத்தைத் தொடங்கிவைத்தார்.
    4. ஆனாலும் இவையெல்லாம் சில சமூகங்களிலேயே முடங்கிக் கிடக்கின்றன. பலருக்கும் உகந்த எளிய ஆன்மிகப் பயிற்சிகளை யாரும் பரப்பவில்லை.
    [யோசித்தால் ஒரு உண்மை விளங்கும். கலிகாலத்திற்கு ஏற்றது எது என்று நமது பாகவதம் சொல்கிறதோ அதைத்தான் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் செய்கிறார்கள! கடவுள் நாம ஜபம், கூட்டு வழிபாடு! இந்த இரண்டு மதங்களும் கலிகாலத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியவை!]

    பக்திவேதாந்த ஸ்வாமி ப்ரபுபாதர் உலக அளவில் ஹரே க்ருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்து ஹிப்பிகள், பீடில்ஸ் போன்ற நவயுக இளைஞர்களையும் கவர்ந்து பயிற்சி தந்தார்.[அவர் விதித்த நிபந்தனைகள் நான்குதான்: no meat eating; no drugs, drinks; no illicit sex; daily worship and repetition of holy names.] 12 ஆண்டுகளுக்குள் உலகம் தழுவி 100க்கும் மேற்பட்ட மையங்களைத் தொடங்கினார். இத்தகைய முயற்சி இங்கு நடக்கவில்லை.
    5.முன்பெல்லாம் ஐயப்ப பக்தர்கள் 40 நாட்கள் கடும் விரதம் இருப்பார்கள். எளிய மக்களே அதிகம் பங்குகொள்வார்கள்.குருஸ்வாமி ஒருவரை வரித்து, தினசரி இருமுறை குளியல், வழிபாடு-பூஜை, சைவ உணவு, தரையில் படுத்தல் போன்ற நியமங்களை பின்பற்றினர். இன்று இவையும் தளர்ந்து விட்டன.
    6.ஸ்வாமி சித்பவானந்தர் 2-3 நாட்கள் அந்தர் யோகம் நடத்துவார். அனைவருக்கும் அடிப்படையான, எளிய ஆன்மீகப் பயிற்சிகளைத் சொல்லித்தருவார். இது அதிகம் பரவவில்லை.
    7.ஸ்வாமி சின்மயானந்தர் குறிப்பாக படித்த, நகர்ப்புற இளைஞர்களைக் கவர்ந்தார், ஹிந்துக்களிடையே ஒற்றுமை உணர்வைத் தோற்றுவித்தார்.ஆனால் அவர் இயக்கம் வேதாந்தம் என்று பெருமளவு theoretical ஆகிவிட்டது.
    இவ்வளவும் நடந்தும் பெரிய மடங்கள் இந்த வகையில் எதுவும் செய்யவில்லை. சில குறிப்பிட்ட வகுப்பினருக்கே சொல்கிறார்கள். [இது தவறல்ல, போதாது!]
    ஆங்கிலேயர்கள் நேரடியாக சமயத்தில் தலையிடாததுபோல் இருந்துகொண்டு, கல்வித்திட்டத்தின் மூலம் நமது சமயத்தின் அடித்தளத்தையே தகர்த்தார்கள்.சுதந்திர இந்திய அரசோ, செக்யூலர் என்ற பெயரில் ஹிந்து விரோதிகளாக இருக்கிறார்கள் இதைப் புரிந்துகொள்ளும் அறிவும் எதிர்த்துச் செயல்படும் திறமையும் நம்மவர்களுக்கு இன்றும் இல்லை.

    இன்று நாம் எதிர்கொள்வது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மட்டுமல்ல. இவர்களுக்குப் பின்னால் ‘செக்யூலர்’ என்று சொல்லித்திரியும் இடதுசாரிகள் இருக்கின்றனர். இவர்கள் பொதுவாக மத நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், பெரும்பான்மை ஹிந்துக்களை எதிர்ப்பதற்காக அவர்களைத் தூண்டிவிடுகின்றனர். பத்திரிகைகளும் மீடியாவும், யூனிவர்சிடிகளும் அவர்கள் ஆதிக்கத்தில் இருப்பதால் பிரச்சாரமும் எளிதாகிறது. [இது இன்று அமெரிக்கா உட்பட மேலை நாடுகளிலும் நடக்கிறது. அங்கு மெஜாரிடி கிறிஸ்துவர்களை எதிர்ப்பதற்காக முஸ்லிம்களைத் தூண்டிவிடுகிறார்கள். .அலைஅலையாக ஐரோப்பிய கிறிஸ்துவ நாடுகளில் முஸ்லிம்களைக் குடியேற்றுகிறார்கள். இந்தியாவில் இந்த மூன்று சக்திகளும் ஒருசேர ஹிந்துக்களுக்கு எதிராக இயங்குகின்றன.கல்வித்துறை அதற்கு உகந்த கருவியாக இருக்கிறது.]
    ஆனால் சமயத்துறையிலேயே ஒன்றும் செய்யாத நம்மவர்கள், கல்வித்துறையிலும் பிறவற்றிலும் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்?
    [இக்காலத்தில் ஒரு விவேகானந்தர் வரமுடியும் என்று தோன்றவில்லை! அன்றே, அமெரிக்காவில் அவர் புகழ்பெற்றதால் இங்கும் நம்மவர்கள் அவரைப் போற்றினார்கள். ஹிந்துக்களின் பொதுவான ஹீரோவானார். ஆனால் இன்று ஹிந்துக்கள் பலவகையிலும் பிளவுபட்டு நிற்கிறார்கள்.இன்று ஜாதியைப் பார்ப்பார்கள், மொழியைப் பார்ப்பார்கள். இன்று விவேகானந்தர் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் cult figure ஆகிவிட்டார்!]

  5. BSV on September 14, 2018 at 2:01 pm
    கடைசி வரி ஆங்கிலமூலத்தில் இல்லை. இங்கு புகுத்தப்பட்டிருக்கிறது. அவ்வரி வைக்கும் கருத்தும் சரியில்லை!
    கண்ணன் அருளால் அந்த அழகிய மரம் மீண்டும் பூக்கும்!
    And one day, the beautiful tree will bloom again.
    பிஎஸ்வி கடைசிவரி மிகச்சரியாகவே இருக்கின்றது. மொழி பெயர்த்ததும் கட்டுரையாளர்தானே கண்ணனின் அருளும் முக்கண்ணனின் அருளும் வந்துவிட்டதாலே ஹிந்துக்கள் விழிப்படைந்துகொண்டே இருக்கின்றார்கள். உங்களைப்போன்ற பாலைவன யஹோவாவின் விசுவாசிகள் புலம்பவும் ஆரம்பித்திருக்கின்றீர்கள்.

  6. BSV on September 14, 2018 at 2:01 pm
    “கோயில்கள் மீட்புக்கும் இக்கட்டுரைப்பொருளான ”பாரதீய கல்வி” க்கும் என்ன தொடர்பு? கோயில்கள் நடாத்தும் பள்ளிகள் பற்றி என்ன பிரச்சினை? அவர்கள் நச்சுகலந்த கல்வியா போதிக்கின்றார்கள்? அவற்றை மீட்டெடுக்கவேண்டுமென்று ஏன் இறைஞ்சுகிறார்?” கோயில்கள் மீட்கப்பட்டால் பல்லாயிரம் கல்வி நிறுவனங்களை பாரத நாட்டிலே அவற்றாலே நடத்தமுடியும். பாலைவன தேவனின் விசுவாசிகள் நடத்துகின்ற கல்வி நிலையங்கள் வழங்கும் கல்வி பண்பாட்டுக்கு அன்னியமாக மக்களை உருவாக்குவதிலே முனைந்திருக்கின்றன. கிறிஸ்தவ மிஷ நரிகள் நேரடியாகவே பாரதப்பாரம்பரியத்தை அழித்தொழிக்கப்பயன்படுத்துகின்றக்கருவியே கல்விதான். அதிலே விதைக்கப்படுவது நச்சுதான். ஹிந்துக்களின் ஆன்மிக நிறுவனங்கள் அளிக்கவேண்டிய தார்மிகக்கல்வியை அரசின் நிர்வாகத்திலே ஆலயங்கள் இருக்கும் வரை அளிக்கமுடியாது என்பது தெளிவான உண்மை.

  7. கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்கள் ஹிந்துக்களுக்கு எதிராக எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிவதுடன் இன்றைய கல்விமுறை பற்றிய ஓர் அடிப்படை உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
    1.உலகெங்கிலும் இன்றையக் கல்விமுறை மேற்கத்திய முறையின் தழுவல்தான். மேலை நாடுகளில் கல்வி கிறிஸ்தவர்களின் வசமாகியது [Middle Ages-5 to 15th Century] .மதபோதனையே கல்வியின் அடித்தளமாகியது. பொதுவாழ்வில் ஒழுக்கம், நற்பண்புகள் ஆகியவற்றுக்கும் இதுவே ஆதாரமாக இருந்தது. இதை விரும்பாத சில சிந்தனையாளர்கள் ‘மத நம்பிக்கை இல்லாமலும் ஒழுக்கம், நற்பண்புகள் இருக்கலாம்’ எனக்கருதி ஒரு மாற்றுமுறை தேடினர். 18ம் நூற்றாண்டில் இது Enlightenment movement ஆக ஐரோப்பாவில் பரிணமித்தது.கல்வி-மதத்தொடர்பு படிப்படியாகக் குறைந்தது. இதைத்தொடர்ந்து வந்த விஞ்ஞான முன்னேற்றம்- [டார்வினின் பரிணாமவாதம், வானியல் ஆராய்ச்சி, புவியியல் ஆகியவை]- கிறிஸ்தவ மதக்கொள்கைகள் அபத்தம் என நிரூபித்தது. இதனால் மேலை நாடுகளில் கல்வி கிறிஸ்துவ மதசம்பந்தமற்ற தாகியதுடன், மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாகவும் ஆகியது. [Secular in the sense of being both nonreligious and anti-religious.] இதுதான் மேலை நாடுகளில் இன்றைய கல்வி நிலை. கல்வியில் ஈடுபட்ட மத ஸ்தாபனங்கள் தங்கள் கொள்கைகளைச் சொல்லித்தந்தாலும் இது பொதுக்கல்வியுடன், பொதுவாழ்விற்கு சம்பந்த மில்லாத அவசியமற்ற fifth wheel போன்றுதான் இருக்கிறது.
    2. இந்தியாவிலும் மேலை நாட்டுக் கருத்துக்களும் முறைகளுமே ‘நாகரிகம், முன்னேற்றம்’ எனப்பரவிவிட்ட இந்த நாட்களில் நமது கல்விமுறையும் அதே ‘செக்யூலர்’ வழியில் செல்கிறது- ஹிந்துக்களுக்கு எதிராக ஆகிறது! இதில் கிறிஸ்தவர்கள் தங்கள் சரக்கையும் சேர்த்துக்கொள்கிறார்கள். கிறிஸ்தவப் பிடியிலிருந்து வெளிவந்தாலும் நமது கல்விமுறை செக்யூலராகத்தான் இருக்கும்!
    கொன்றைவேந்தனும், வெற்றிவேற்கையும், ஆத்திச்சூடியும் இன்று கல்விமுறையில் சேர்ப்பார்களா?
    ஹிந்து மதத் தத்துவங்களும் கொள்கைகளும் விஞ்ஞானத்திற்கு எந்த வகையிலும் எதிரானவையோ முரணானவையோ அல்ல. இன்னும் சொன்னால், விண்வெளியியல், Particle physics, psychology ஆகிய பல துறைகளில் இன்றைய விஞ்ஞானம் நமது கருத்துக்களுக்கு proof போலவே இருக்கின்றன.ஆனால் இந்தியர்களுக்கு ஹிந்துமதம் பற்றிய பல விஷயங்கள் தெரியாததுடன், நவீன அறிவியல் பற்றிய பரந்த அறிவும் இல்லை. விஞ்ஞானம்-மதம் ஆகியவற்றிடையேயான முரண்பாடு கிறிஸ்தவம் பற்றியது. ஆனால் மேலை நாட்டுக் கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றும் நம்மவர்களுக்கு இந்த உண்மை புரிவதில்லை.
    3.இன்றையக் கல்விமுறை அடிப்படையிலேயே மதச்சார்பில்லாதது.எல்லா மதத்திற்கும் எதிரானது.ஆனால், சிறுபான்மை மதத்தினர் நம் நாட்டில் பெறும் சிறப்புச் சலுகையினால் இதை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள். இந்த வகையில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகி வருகிறார்கள்.
    4. கிறிஸ்துவப் பள்ளிகளும் கல்லூரிகளும் எப்படி ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கின்றன? இது நேர்முகமாகவும் மறைமுகமாகவும் நடக்கிறது. கால்டுவெல். பெஸ்கி போன்ற பாதிரிகள் தமிழ்ப்பற்று என்றபெயரில் பல பொய்களைப் பரப்பினர். இவற்றை திராவிடப் பதர்கள் இன்றுவரை கண்டுகொள்ளவில்லை; இவர்களைக் கொண்டாடிவருகின்றனர்.
    5.பல கிறிஸ்தவக் கல்லூரிகளில் ஹிந்து ஆசிரியர்கள் பணிசெய்தனர். பெரும்பான்மை மாணவர்களும் ஹிந்துக்களே.அதிலும் பலர் பிராமணர்களே! பிராமணப் பிள்ளைகள் பயந்த சுபாவத்தினர், சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிவர், எதிர்த்துப் பேசமாட்டார்கள் என்பது ஒரு காரணம். 99% பிராம்மண மாணவர்கள் ஏழை, கீழ் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வருபவர்கள்; இவர்கள் படிப்பை மட்டுமே நம்பிப் பிழைத்தவர்கள், அதனால் அதிக சிரத்தையுடன் படிப்பில் மட்டுமே ஈடுபடுவர், இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கும் நல்ல பெயர் வரும் என்பதும் ஒரு காரணம். ஆனாலும் இவர்களுக்கு சலுகை எதுவும் காட்டப்படவில்லை. 1965 வரை பழைய எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 600க்கு 400 மார்க் இல்லாமல் யாரும் திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரிக்குள் நுழைய முடியாது. ஆனால் கத்தோலிக்க-கிறிஸ்துவ மாணவர்களுக்கு இந்த விதி இல்லை!
    6. கிறிஸ்துவக் கல்லூரிகளில் 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஹிந்துமத கண்டனம் இருந்தது. ஃபிலாசஃபி, இலக்கியம் போன்ற துறைகளில் இது வெளிப்படையாகவே தெரியும். அக்காலத்தில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் நிலவிய இந்தச் சூழ்நிலையை அங்கு பயின்றுவந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பின்னர் இப்படிச் சொன்னார்:
    The challenge of Christian critics impelled me to make a study of Hinduism and find out what is living and what is dead in it. My pride as a Hindu, roused by the enterprise and eloquence of Swami Vivekananda, was deeply hurt by the treatment accorded to Hinduism in missionary institutions.
    இதற்கு பதிலளிக்கும் விதமாக ராதாகிருஷ்ணன் எம்.ஏ வகுப்பில் ஒரு தெசிஸ் எழுதினார். அதை அவர் புரொஃபஸர் டாக்டர் ஹாக் [Hogg] அங்கீகரித்தார்!
    “The Ethics of the Vedanta and its Metaphysical Presuppositions”. டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்நாள் முழுதும் ஹிந்துக்களுக்கு எதிரான மேற்கத்திய விமர்சனத்திற்கு சரியான பதிலடி கொடுத்து வந்தார்.
    7. நாளடைவில் ஹிந்துக்களுக்கு எதிரான இந்தப்போக்கின் வேகம் சற்றுக் குறைந்ததுபோல் தோன்றியது.நான் 1958முதல் 64 வரை இரு கத்தோலிக்க கிறிஸ்துவக் கல்லூரிகளில் படித்தேன். ஒன்று சலிஷன்ஸ் நடத்தியது; இன்னொன்று ஜெஸ்யூட்கள் நடத்தியது. சலீஷன் கல்லூரியில் பாதிரிகள் அனைவரும் பிற நாட்டினரே [ ஆங்கிலேயர், இத்தாலியர், ஃஜெக் நாட்டவர், போன்றோர்.] இவர்கள் ஹிந்துமத்திற்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசியதில்லை. ஹிந்துக்களிடம் விசுவாசமாகவே இருந்தனர். ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். 1962 பிப்ரவரியில் எட்டுகிரக சேர்க்கை நேர்ந்தது. இதன் விபரீத பின்விளைவுகளைப்பற்றி பலர் பேசியும் எழுதியும் வந்தனர்.அப்போது பிரதமர் நேரு, “ஹிந்துமதம் அடுப்பங்கரை மதம்” [Kitchen Religion] என்று கேலிசெய்தார். எங்கள் பிரின்சிபலாக இருந்த ஒரு ஆங்கிலேயப் பாதிரியார் ” நேரு சொல்வது அபத்தம்; ஹிந்து மதம் மஹத்தானது, அதில் பல அரிய தத்துவங்களும் உண்மைகளூம் இருக்கின்றன; எல்லா மதமும் உணவில் தூய்மையையும் கட்டுப்பாட்டையும் சொல்கின்றன” என்று காலைப் பொது அசெம்பிளியில் வெளிப்படையாகவே சொன்னார். (இதை நான் என் டைரியில் எழுதிவைத்தேன்.)[ இங்கு ஒன்று மறக்கவேண்டாம். 1962ல்தானே சீனா இந்தியாவின் மீது படையெடுத்தது! நேருவின் அந்நிய நாட்டுக் கொள்கை அம்போ ஆனது!]
    ஜெஸ்யூட் கல்லூரியில் பாதிரியார்கள் அனைவரும் இந்தியரே.இவர்கள் So So தான்; ஒஹோ என ஒருவரும் இல்லை.
    8. இந்தியக் கிறிஸ்தவர்களிடையே ஒரு பெரிய மாற்றம் 1999ல் தோன்றியது. அந்த நவம்பரில் இந்தியா வந்த போப் ஜான் பால்II மதமாற்ற முயற்சிகளுக்கு தூபம் போட்டார். தீபாவளி தினத்தன்று டெல்லியில் நடத்திய மாஸில், அனேக ஹிந்து முறைகள் பின்பற்றப்பட்டன [ தீபம், மலர்கள், ஆரத்தி போன்றவை.] அப்போது பேசிய போப், ” இந்த யுகத்தின் முதல் ஆயிரம் ஆண்டுகளில் நாம் ஐரோப்பாவைப் பிடித்தோம், அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அமெரிக்கா கண்டத்தைப் பிடித்தோம்; இந்த மூன்றாவது ஆயிரம் ஆண்டுகளில் ( 2000-) நாம் ஆசியாவைப் பிடிக்கவேண்டும்; ஹிந்துக்கள், பௌத்தர்கள், ஜெயின்கள். சீக்கியர்கள் ஆகியவர்களைக் குறிவைத்து மதமாற்றம் செய்யவேண்டும்” என பொது அறிவிப்புச் செய்தார். [இதை அமெரிக்க நியூ யார்க் டைம்ஸ் பெரிதாக வெளியிட்டது] துரதிருஷ்டவசமாக, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயி. போப்பைப் புகழ்ந்து இவர் இந்தியாவிற்கு புதிய ஒளி கொண்டுவந்தார் எனப் பாராட்டினார்! இப்படித்தான் விஷயம் தெரிந்தவர்கள் என நாம் கருதும் பெரியவர்களும் ஏமாந்து போகிறார்கள்!
    9. போப்பின் இந்த விஜயத்திற்குப்பிறகு. கிறிஸ்துவர்களிடையே ஹிந்து விரோதப்போக்கு மூர்க்கத்தனமாகப் பரவியது. மேலும் மக்களைக் கவர கிறிஸ்தவப் பெயர்களை மறைத்து பொதுவான ஹிந்துப் பெயர்களை வைப்பது, ஹிந்துக் கோவில்கள் போன்று சர்ச்சுகளைக் கட்டுவது, சிவலிங்கத்தில் சிலுவையை வைப்பது போன்ற உத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நாடகம் தொடர்கிறது.
    10. கிறிஸ்துவர்கள் பல்கலைக்கழகங்களில் பொறுப்பில் இருக்கும்போது, பல ஹிந்துமதத்திற்கு எதிராக திரிசமங்கள் செய்கிறார்கள். ஆராய்ச்சி என்ற பெயரில் பல பொய்களைப் பரப்புகிறார்கள். திருவள்ளுவர் கிறிஸ்துவரானார், முருகன் ஏசுவைப் பின்பற்றி உருவாக்கப்பட்டார், ஹிந்து மதம் தமிழர் மதமல்ல போன்றவை இவர் ஆராச்சிகள்! இவை கல்வி வட்டாரத்தில் ஒரளவு பரவுகின்றன.They gain currency in academic circles when so called researchers cite each other’s work, and they enter the study stream. The Christian teachers in authority can control the direction of study, selection/approval of themes for research, influence its course and conclusion, especially in the Humanities and Social Sciences. This has great potential for long=term damage. [ So called liberal-secular professors do it in Western universities against Christianity!]
    11. நவீனக் கல்விமுறை பொதுவாகவே மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இது எல்லாமதங்களுக்கும் பொருந்தும். இது மேலை நாடுகளில் கிறிஸ்துவத்திற்கு எதிராகச் செயல்படுகிறது. [ ஆனால், இஸ்லாமுக்கு எதிராக ஒரு வார்த்தை சொல்ல யாருக்கும் துணிவில்லை] இந்தியாவில், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், செக்யூலரிஸ்டுகள், மீடியா= என ஒரு பெரிய அணியே ஹிந்துக்களுக்கு எதிராகத் திரண்டிருக்கிறது! கல்வித்துறையில் நாம் பார்ப்பது இதன் ஒரு பகுதிதான். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டிதானே!

  8. நான் எழுதியது வேறு; பேராசிரியர் பதில் வேறு.

    கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் நடத்துவதை மட்டும் நான் குறிக்கவில்லை. மடங்கள் நடத்துவதையும் குறிப்பிட்டேன். பழநி ஆண்டவர் கல்லூரி, திருச்செந்தூர் செந்தலாண்டவன் மேநிலைப்பள்ளி, இப்படி ஏராளம். மடங்கள் நடாத்தும் பள்ளியும் கல்லூரிகளும் உண்டு. சாரதா மேநிலைப்பள்ளி, தி நகர்; விவேகானந்த கல்லூரி, இவை போக இராமகிருஷ்ண மடம் நடத்தும் கல்லூரிகள் பள்ளிகள் ஏராளம். இங்கிலீசு மீடியம். அதாவது மெகாலே நச்சுக்கல்விதானே இங்கேயும்?

    இன்னொன்றையும் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்: இந்துப்பெற்றோர் கிருத்துவப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும்படி நிர்பந்தப்படுத்துகிறார்கள் என்றெழுதுகிறார்.

    இவரின் பெற்றோர் இவரை திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியிலோ கல்லூரியிலோ சேர்க்கும்படி நிர்ப்பந்தப்படுத்தியா இவர் அங்கு படித்தார்? அப்படியே நிர்பந்தம் என்றால் என்ன நிர்ப்பந்தம் அது?

    சென்னையில் தொன்போஸ்கோவிலும், நல்மேய்ப்பரிலும், சர்ச் பார்க் கான்வென்டிலும் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க இந்துப்பெற்றோர் ஆசைப்பட்டு சேர்க்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

    தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியாவில் எல்லாப் பெற்றோர்களும் முதலில் அவ்வூரில் உள்ள கிருத்துவ மிசினோரி பள்ளியில்தான் சேர்க்கிறார்கள். இலக்னோ லா மார்டினரில் படிக்கும் குழந்தைகளில் இந்துக்களே அதிகம். நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்களா?

    இப்பள்ளிகளில் நச்சுக்கல்வி போதிக்கப்படுகின்றனவென்றால் ஏன் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க துடிக்கிறார்கள் இந்துப்பெற்றோர்கள்? தில்லியில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் விநியோக்கும் தேதியில் காலை ஐந்து மணிக்கே காத்துக்கிடக்கிறார்களே இந்துப்பெற்றோர்கள்? என்ன நிர்ப்பந்தம்? என் குழந்தையை லா மார்டினரில் சேர்த்து விட்டேன் என பெருமையாகச் சொல்கிறார்கள். மும்பை, பெங்களூரு நிலையும் இதுவே. மைசூரில் ஃப்லோமினா கல்லூரிதான் ஃபேமஸ்.

    சரி, நிர்ப்பந்தம் என்றால், ஓரிடத்தில் ஒரே பள்ளிதான் இருக்க வேண்டும். வேறு பள்ளிவேண்டுமென்றால் பத்து மைல் போகவேண்டுமென்ற நிலை இருந்தால் அப்பள்ளியே ஒரே வழி என்ற நிர்பந்தம் வரும். அப்படிப்பட்ட நிலை சேரிகளில் வரும். ஒரே பள்ளி. இதை ஈடு செய்து இந்துப்பெற்றோரைக் காக்க, நீங்கள் அங்கு சென்று பள்ளிகளைத் திறந்து இலவசக்கல்வி கொடுத்தீர்களா? இல்லை.

    மற்றவிடங்களில் நிர்ப்பந்தம் என்றால் சாத்தியமில்லை. ஒரு மிஷனரி பள்ளி இருந்தால், பக்கத்திலேயே நிறைய வேறு பள்ளிகள் வந்துவிட்டன. சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை என்று எல்லாவூர்களிலும் மூலை முடுக்குகளிலெல்லாம் பள்ளிகள். கல்லூரிகளும் ஏராளம். எங்கும் சேர்க்கலாம். கிருத்துவ மிஷநரிப் பள்ளிகள் தேவையில்லை. ஆனால் இந்துப்பெற்றோர் மிஷநரிப் பள்ளிகளையே நாடுகிறார்கள்.

    மிஷநரிப்பள்ளிகள் புலம்புகிறார்கள் என்று பேராசிரியர் வாயாலே வடை சுடுகிறார்! அவர்கள் பள்ளிகள் மாணவர்கள் இல்லாமல் மூடப்படும் நிலையிலிருந்தால். மட்டுமே புலம்புவார்கள். அந்நிலை இல்லை. இந்துப்பெற்றோரே அப்ளிகேசன் பிளாக்கிலாவது கிடைக்குமா என்றலையும்போது அந்நிலை எப்படி வரும்?

    அந்நிலை ம. தி. தா இந்து மேநிலைப்பள்ளி (பாரதியார் படித்தது) சந்திக்கிறது. ஆயிரம் மாணவர் படித்த‌ நாட்கள் போய் 200 யே மாணவர்கள் படிக்கும் நிலை இன்று.. இன்னும் சிலகாலத்தில் அவர்களும் போய் விடுவார்கள்; மூடப்படும் புலம்புகிறார்கள். பேராசிரியர் – இங்கே நல்ல கல்வி போதிக்கப்படுகிறது என்று சொல்லி, மாணவர்களைக் கொண்டுவரலாமே? நெல்லையில் கிருத்துவப் பள்ளிகள் நிறைந்து வழிகின்றன. நச்சுக்கல்விக்குத்தான் எவ்வளவு மோகம்? ஏன்?

  9. .ஸ்வாமி சித்பவானந்தர் 2-3 நாட்கள் அந்தர் யோகம் நடத்துவார். அனைவருக்கும் அடிப்படையான, எளிய ஆன்மீகப் பயிற்சிகளைத் சொல்லித்தருவார். இது அதிகம் பரவவில்லை.
    ————————–
    mஇன்றைய தீா்வு அந்தா்யோகம்.
    அதை முக்கியமானது பயனுள்ளது என்று எந்த ஆதீனமும் நம்பவில்லை. ஆகவே அந்தா் யோகமுறைகளை முக்கியமாக கொண்டு எந்த செயல் திட்டத்தையும் வகுக்கவில்லை.தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட இந்துக்களுக்கு கிறிஸ்தவ சபையாரின் கடுமையான நடவடிக்கைகளால் துவண்டு போன இந்து மக்களுக்கு – ஆதீனங்கள் சங்கர மடங்கள் செய்தது என்ன ? மதமாற்றம் இவ்வளவு கடுமையாக இருந்தும் – மேற்படி மாவட்ட இந்துக்களுக்கு என்ன வழிகாட்டினாா்கள் ????????விவேகானந்தா கேந்திரம் கொஞ்சம் செயல்பட்டது பெரிய நன்மை விளைந்தது.சமய வகுப்புகள் திருவிளக்கு புஜை என்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இந்துக்கள் மிகவும் மிகவும் பின்தங்கி உள்ளோம்.

  10. தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் 1978 ல் மதபோதனை ஏதும் தடை செய்யப்படவில்லை.வெளிப்படையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி சமூக நல்லிணக்கம் குறையும் செயல்களையும் கருத்துக்களையும் சொல்லத் தான் தடை உள்ளது.
    இந்து நிா்வாகத்தில் உள்ள பள்ளிச் செயலா்களுக்கு இந்து சமயம் அதன் அவசியம் என்ற கருத்துக்கள் பற்றி எந்த ஆா்வமும் அக்கறையும் கிடையாது. எனவே தான் இந்து நிா்வாகத்தில் ஏராளமான பள்ளிகள் இருந்தும் ஆன்மீகம் வளா்வதற்கோகாலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்கள் மாறவோ நல்ல கலாச்சாரம் உருவாகவோ எந்த பங்களிப்பையும் அவர்கள் செய்யவில்லை. சுவாமிவிவேகானந்தா் மீது பற்று கொண்ட ஒரு துறவியானவா் நடத்தும் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.பள்ளியில்பத்மாசனத்தில் அமரவைத்து சிவமகாமந்திரங்கள் சிவபுராணம் திருவாசகம் முற்றோதல் நடத்த வேண்டும் .விவேகானந்தா கேந்திரம் நடத்தும் இளைஞா் முகாம் கள் நடத்தி அனைத்து மாணவர்களும் நல்ல சமய அனுஷ்டானங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றோன். ”பிசிக்ஸ் கெமிஸட்டிரி நடத்தவே நேரம் போதவில்லை.இதில் சிவபுராணம்எங்கே கற்றுக் கொடுப்பது” என்று பதில் அளித்தாா்.ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நடத்தும் பள்ளி செயலா் சுவாமியின் லட்சணமே இது என்றால் மற்றவா்களை என்ன சொல்வது ? ஆா்வமுள்ள இந்துக்கள் தங்களால் இயன்ற பணிகளை செய்ய வேண்டும். சமய பழக்க வழங்கங்கள் எளிமைப்படுத்த வேண்டும். பழமை தொடர வேண்டும் என்று தொடா்வது மனித வளம் விரயம்.மற்றபடி விதி விட்ட வழிதான்.காலம்“ நிறையமாற வேண்டும்.அரசியல் சுழ்நிலை மாற வேண்டும்.இந்து சமய அறநிலையத்துறை அரசின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்.

    (Edited and published)

  11. பின்னுட்டங்களுக்கு எனது நன்றி.
    திரு சிவஸ்ரீ. வீபூதிபூஷண் பெரும்பாலும் கேள்விகளுக்கு என் சார்பில் பதில் அளித்துவிட்டார்.

    ஆயினும் சுருங்க என் வாதங்கள்
    (1) கல்வி ஒன்று தனிப்பட்ட சேவையாக இருக்க வேண்டும் இல்லை அரசின் கடமையாக இருக்க வேண்டும்
    (2) மதம் சார்ந்ததாக விட்டது அரசின் பிழையே
    (3) அப்படி விட்டது தான் விட்டார், பின் அனைத்து மதங்களும் கல்விபணியை செய்ய சமநிலையை கொடுத்திருக்க வேண்டும்
    (4) பிற மதங்களுக்கு பணவசதியிலோ சுயேச்சையாக கல்வி நிறுவனம் நடத்தவோ பெரும் வசதி கொடுத்துவிட்டு இந்துமத முயற்சிகளுக்கு மட்டும் பல வித கட்டுப்பாடு விதித்தது வஞ்சகம்
    (5) அதை தாண்டியும் பல இந்து மத கோவில்கள், மடங்கள், RSS போன்ற இயக்கங்கள் இயன்ற அளவு கல்விப்பணி களப்பணி செய்துதான் வருகின்றன, ஆனால் தேவையான அளவோ, கிறித்துவ குழியில் இந்துக்கள் வீழா அளவோ பெருவாரியாக செய்ய தடை உள்ளது உண்மை
    (6) பெற்றோரின் பார்வையில் வாழ்வாதாரம் தரும் கல்வியே சுவர், அது இல்லமால் எந்த சித்திரமும் தீட்ட முடியாது. இந்து மரபு சார் நற்கல்வி அவர் இருக்கும் இடத்தில் கிடைக்காவிட்டால் அபரிதமாக இருக்கும் கிறித்துவ பள்ளியில் சேர்க்கத்தான் வேண்டியுள்ளது. அப்படி செய்ய நேரிட்டால் தருமத்தின் தடுப்பூசி போட்டே அனுப்ப வேண்டும் என்பது என் பரிந்துரை
    (7) அது தவிர வருங்காலத்தில் இந்நிலை மாற, சுதந்திரமாக இந்து மரபு சார் கல்வியின் மரம் மலர்ந்திட சமூகத்தில் அரசியலில் முயற்சிகள் எடுக்க வேண்டும்.
    (8) அதற்கான ஒரு முக்கிய படி, கோவில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். கோவில் வழிபடுவார் சங்கத்தின் திரு.T .R ரமேஷ் ஒரு காணொளியில் திருமயிலை கோவிலின் வருமாத்தை கொண்டு, கோவிலின் 5 km சுற்றுவட்டாரத்தில் உள்ள அணைத்து குழந்தைகளுக்கும் சிறந்த ஆரம்பக்கல்வியை அளிக்க முடியும். ஒரு ஆடிட்டர் ஆகிய அவர் அதை ஆராய்ந்தே கூறுகிறார்.
    (9) அதுபோன்றே மதசார்புடைய சட்டங்களை (93rd சட்டத்திருத்தம், RTE, NCMEI) அரசியல் மூலம் திருத்தம் கொண்டுவரவேண்டும்

    இவ்வாறு இக்காலத்தில் சமாளித்து வருங்காலத்திற்கு திட்டமிட்டும் வாழ்தல் வேண்டும். இது பலகால போர் பல வம்சாவளிகள் தாண்டி நடக்கும். நம் காலத்தில் நம்மால் இயன்றதை செய்ய வேண்டும்.
    பிறர் முயற்சியை நல்நோக்கோடு விமரிசிக்கலாம் ஆனால் தீராது குறை மட்டுமே சொல்லவார்களால் தடங்கல்தான் விளையும், அவர்களை உதாசீனப்படுத்துதலே சரி.
    ஏதோ ஏழைகளுக்கும் மீனவர்களுக்கும் கலாச்சாரம் சம்பந்தம் இல்லாது போல சித்தரிப்பது அறிவீனம். கிறித்துவம் இந்து கலாசார வேடம் கட்டித்தானே அவர்களையும் இழுக்கிறது
    இலவசமாக கிறித்துவர்களால் எவ்வாறு பட்டிதொட்டியெல்லாம் இயங்க முடிகிறது என்று யோசித்தது உண்டா? அவர்களின் அலுவலர்களின் வாழ்க்கைக்கு பெரும் பணமும் தாக்கமும் கொண்ட சர்ச்சுகள் பின்புலத்தில் நிற்கின்றன. இந்துக்களுக்கு அப்படி ஒரு பின்புலம் இருந்தால் பின் ஒப்பிட்டு கூறலாம்

    அதுவரை இந்த மாதிரி ஒப்பீடுகள் காழ்ப்புணர்ச்சியை மறைக்கும் மாய்மாலங்கள்

  12. /”பிசிக்ஸ் கெமிஸட்டிரி நடத்தவே நேரம் போதவில்லை.இதில் சிவபுராணம்எங்கே கற்றுக் கொடுப்பது” என்று பதில் அளித்தாா்.ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நடத்தும் பள்ளி செயலா் சுவாமியின் லட்சணமே இது //

    சரியான இலட்சணமே இது. சுவாமி ஓர் எதார்த்தவாதி.

    வாழ்க்கையில் பெரிய நிலைகளுக்குச் சென்று கைநிறைய சம்பாதித்து தங்கள் பெற்றோரையும் உற்றாரையும் உறவினரையும் தன்னையும் மகிழ்ச்சியாக வைத்து, குடும்பமும் குடித்தனமுமாக வாழ்க்கையில் நிலைபெறும் கனவுகளோடு தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கிறார்கள். எனவே ஊரில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் சேர்க்கிறார்கள். 9 லிருந்து 12 வரை தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படித்து நன் மதிப்பெண்கள் பெறவேண்டும். பொறியியல், மருத்துவம் என்று சேரவேண்டுமென்ற கனவுகள்; பலர், தங்கள் பிள்ளைகள் வெளிநாடுகள் சென்று டாலரில் சம்பாதித்து அனுப்ப வேண்டுமென்ற கனவுகள்.

    இந்த ஆசைகளை நிறைவேற்றத்தான் பள்ளி, கல்லூரிகளை நடாத்துகிறார்களே ஓழிய புராணங்களையும் பாரதீய கலாச்சாரத்தையும் சொல்லிக்கொடுக்க அன்று. அப்படியே சொல்லிக்கொடுத்தாலும் பள்ளியோ கல்லூரியோ மாணவர்கள் எம்மதிப்பெண்ணை பொதுதேர்வில் பெற்றார்கள் என்பதை வைத்தே அப்பள்ளியில் புகழ் பரப்பப்பட்டு மாணாக்கர் எண்ணிக்கை பெருகும். அல்லது நிலைக்கும். இதைச்செய்யத்தான் பள்ளியின் நிர்வாகம் முனைப்பைக்காட்டும்.

    கிருத்துவப் பள்ளிகளில் மதப்புகுத்தல் நடக்கும். ஆனால் அது இறுதி முடிவுகளை (நான் மேலே குறிப்பிட்ட‌) பாதிக்காதபடி பார்த்துக்கொள்வார்கள். அப்படியில்லையென்றால், அவர்கள் நிலையும், நெல்லை ம. தி தா பள்ளியின் நிலையும் ஒன்றே. கதவை மூடவேண்டியதுதான். ஓட்டலாக்கலாம்.

    மிசுநோரிப் பள்ளிகள் நன்கு இதைச்செய்கின்றன. தன்னிச்சை நிர்வாகம் கொண்ட எம். சி.சி, இலயோலா, தில்லி ஸ்டீஃபன், கல்கத்தா, மும்பாய் சேவியர் கல்லூரிகள் – பாடத்திட்டத்திலிருந்து ஆசிரியர் தேர்வு வரை – கவனம் கொண்டு சிறக்கிறது.

    எனினும். திரு அன்புராஜ் போன்றோரின் ஆதங்கத்தைத் தீர்க்கவும் வழி இருக்கிறது அது தொடக்கக்கல்வியில் இருக்கிறது. 1லிருந்து 8 வரை – நிறைய நேரம் கிடைக்கும். அப்போது மதக்கல்வியைப் புகுத்த வாய்ப்பிருக்கிறது. அது பள்ளியைப்பாதிக்காது. கிருத்துவப் பள்ளிகள் செய்கின்றன. பிடிக்காத இந்துப்யுரைக்கிறரார். சேர்க்கத்தேவையில்லை. கிருத்துவரல்லாதோர் நடாத்தும் பள்ளிகள் ஏராளம்.

  13. The discussion started with a review of Dharampal’s “The Beautiful Tree” (vol.III of his Collected Writings, but has strayed. This is natural, considering the importance of the subject, its extensive scope and serious implications.
    1.In the period that Dharampal covers, “Education” had a different meaning and significance. Education was not a means to a ‘job’ or earning. Most people followed traditional crafts, industries, arts,technologies where they learned the necessary knowledge and skills ‘in house’ ie within the family system. This was akin to the ‘apprenticeship’ system followed in England, but more informally, as Dharampal showed.IN the Madras Presidency alone, there were 80 such trades,crafts, technologies which the British listed for taxation purposes. They were all learned at the village level. Even today, many of these are imbibed by tradition, and not learnt in any school or college. Even today, serious music and dance are learned outside any formal school system.
    2 What then was the purpose and content of formal”Education”? The purpose was more than mere literacy (or the three Rs- which most youngsters acquired.) The subjects covered were literature and grammar, philosophy and theology, law,medicine, astronomy, astrology. None of these required any certification from the rulers.
    3. Today, there are two significant changes: i. the technological base has changed. ii. govt. has acquired total control over our living. Much of employment is related to govt. and require their approval, directly or indirectly, and are subject to their control. Formal education in a govt approved institution, on govt approved syllabus , on govt approved terms is the norm. This applies so long as one wants to be part of the “system”. This applies whether the educational institutions are run by govts, govt. approved agencies, religious or other institutions, govt.aided or non-aided institutions. Only minorities enjoy freedom.
    4.Raghu Bhaskaran’s starting premise is education should be “தனிப்பட்ட சேவையாக இருக்கவேண்டும் இல்லை அரசின் கடமையாக இருக்கவேண்டும்”. [ ie it should either be private service or govt.obligation] I think today there is no real choice. NO govt, democratic or socialist or by any other name or label, wants to leave education totally free. For they have all found in education a simple and effective means of mass mind control and manipulation. While the intention of leftists, socialists of all hues is well known, the record of so called democrats is no less dismal and dangerous. The US is the supreme example of a so called ‘free’ govt which consciously directed education for nation building- which meant accepting the goals and purposes as conceived by the govt of the day. Gradually, this has reached a stage which meant the complete negation of the ideals of the founding fathers, and even the negation of the traditional moral values of a society based on the Ten Commandments! The education is not only nonreligious and anti religious, it is sought to be made “value free”. I have to cite the US example because it is what we in India are really trying to follow.
    5. People in the US are fighting this trend on two main grounds: quality and contents. It is well known that the US education system serves falling standards. Books like “Why Johnny Cannot Read”, “Why Johnny Cannot Add” etc have appeared long ago. And thoughtful people also resent the attempt at rigid uniformity and mass mind control. Educational theorists and psychologists have explained how “intelligence” is varied in expression, and Howard Gardner of Harvard has advanced the theory of “Multiple Intelligences”, which is adopted by many schools.
    6.But the overall effect and design is that all this education is still state controlled and directed, however remotely. And it fails in the purpose of making one enlightened,,or even really knowledgeable. Parental power and influence have been removed ( along with the influence of churches), and children are at the sole control of the state apparatus! Alarmed by this, parents in increasing numbers are resorting to “HOME SCHOOLING” is withdrawing children from schools and educating them at home. [ However, some socialist states do not even allow this- recently Brazil Supreme Court has ruled that home schooling is illegal! This shows the danger of leaving education to the govt.]
    7.Educators, Sociologists, Philosophers, Scientists, Psychologists have all been against the current trends and system of education. One of the best known critics of modern education is IVAN ILLICH. He has shown the hidden agendas behind modern education and one of his books “DESCHOOLING SOCIETY” should at least be read by all interested in the subject, and interested in the future of our children and country.
    8. Taking all such factors into account, the solution cannot be a simple return to any ideal past. We have to devise new standards and ways, in the light of historical lessons and emerging knowledge. There will naturally be many views and interpretations. The big task is how to reconcile all this with the Hindu view and way of life. Here too there is scope for multiple choices and models, approaches and initiatives. In a sense, such multiplicity (devoid of conflict and mutual animosity) will only strengthen the overall Hindu fellowship. It is always good not to put all eggs in the same basket.
    9. Personally, I feel “home schooling” is an excellent tool, with some support from institutions at the appropriate stage. This is the way to beat all sinister designs against Hindus. Most parents are more educated than the average school teacher. Details have to be worked out to suit needs. [ We can even learn from how ISKCON developed their own system and won in the US courts. Sri Aurobindo has valuable inputs on a system of national education. ]
    10. Hindus have been without substantial direction and initiatives for two centuries. It is time they took control and started, however imperfectly. They are only bound to improve and progress.

  14. மேற்படி துறவியானா் பிசிக்ஸ் கெமிஸ்டடிரி நடத்தி ஒன்றும் கிழித்து விடவில்லை.சாமியாா்கள் என்றால் பந்தாவாக இருப்பது என்று ஆகிவிட்டதன் விளைவுதான்.நேரம் இல்லை என்பது பச்சை பொய். மேல்நிலைப்பள்ளியில் 6-9 வகுப்புகளில் சனிக்கிழமைகளில் ஆசிரியா்களைக்கொண்டே அல்லது பிறரைக்கொண்டே முறையான சமயக்கல்வி அளிக்க என்ன தடை ? ஏன் அவர் செய்யவில்லை ? அதுவும் அந்தா்யோகம் நடத்திய சுவாமிசித்பவானந்தரின் சீடா் என்று தன்னை பற்றி பீற்றிக்கொள்ளும் ஒரு துறவிக்கு நியாயமானது அல்ல. சுவாமி சித்பவானந்தரின் சீடா் என்ற பெருமைக்கு சிறப்பு செய்யும் ஒருவா் தேனி என்ற நகரில் சித்பவானந்தா் ஆஸ்ரமம் நடத்தும் சுவாமி ஒங்காரனந்தா். நிறைய பணிகள் செய்து வருகின்றாா். திருக்குறள் திருவாசகம் பகவக்கீதை ஆகிய 3 நூல்களை முறையாக விரும்பும் நபா்களுக்கு சாதி வயது வேறுபாடு யின்றி கற்றுக்கொடுத்து வருகின்றாா்.
    மேற்படி புண்ணாக்கி சாமியாரிடம் நான் 6 -10 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் உள்ள பாடங்களுக்கு பொருத்தமான அறிவியல்சோதனைகளைச் செய்து காண்பிக்க வேண்டும்.இது பாடங்களை சிறப்பாக புரிந்து கொள்ள உதவும் என்றேன். (சுரிய ஒளியில் 7 வர்ணங்கள் உள்ளன என்பதை முக்கோண பட்டகம் வழி பரிசோதனை செய்து வகுப்பில் செய்து காட்ட வேண்டும்)அறிவியல் பரிசோதனைகளை பட்டியல் இட்டு ஆசிரியா்களுக்கு அளித்து தீவிரமான நடைமுறை படுத்த வேண்டும் என்றேன். அதையும் அவர் கேட்கவில்லை. அதன் பின் அந்த மேல்நிலைப்பள்ளி அறிவியல் மற்றும் சமய கலாச்சார கல்விக்கும் லாயக்கற்றதல்ல என்ற கருதி பள்ளிவுடன் இருந்த தொடா்பை துண்டித்துக்கொண்டேன்.
    இந்து சமயத்திற்கு வந்துள்ள சிக்கல் விநோதமானது. வரையறை செய்வது கடினம்.

  15. லியில் இது எதுவும் எடுபடாது. கலியில்:
    -புனித தீர்த்தங்கள் தலங்கள் தங்கள் தூய்மையை இழந்து வியாபாரத் தலங்களாகிவிடும்
    – ஆலய மூர்த்திகள் தங்கள் தெய்வீகத்தன்மையை இழந்துவிடும்; வழிபாடுகள் முறைப்படி நடவாது.
    -சிறிதும் தகுதியற்றவர்களே அரசு அதிகாரத்தில் இருப்பார்கள்
    -அரசினர் மிலேச்சர் கொள்கைகளைப் பின்பற்றுவார்கள், அதனால் ஹிந்துக்கள் பாதுகாப்பை இழப்பார்கள்.
    ————————————
    முற்றிலும் தவறான கருத்து. எந்த காலத்திலும் அனைத்து மனிதர்களும் அந்தணனாக இல்லை.கலி காலத்தில் அனைத்து மனிதர்களும் சுத்திரா்களாகவும் இல்லை.இருக்கவும் முடியாது.இராமன் வாழ்ந்த காலத்தில் இராணவணம் வாழ்ந்தான்.தர்மா் வாழ்ந்த காலத்தில்தான் துரியோதனனும் கண்ணனும் வாழ்ந்தாா்கள். பிரகிருதி சத்வம் ரஜ தாம்ச சக்திகளாக பரிணமித்து பிரபஞ்சம் ஆனது. மனிதர்கள் இந்த 3 சக்திகளால் ஆனவா்கள்தாம்.தர்மனிடமும் முக்குணம் இருந்தது.துரியோதனிடமும் முக்குணம் இருந்தது.

    கா்ணணை துரியன் ஆதரித்தது அந்தணகுணம்தானே.
    இந்துவாக இருப்பவன் கிறிஸ்தவனாக மாறினால்முறையாக ஜெபம் செய்யக்கற்றுக்கொள்கின்றான். நிறைய பேர்கள் அதை தித்திய அனுஷ்டானமாக முறையாகச் செய்து வருகின்றாா்கள். முஸ்லீம்களும் அப்படியே.

    இந்துக்களுக்கு அது மட்டும் சாத்தியமில்லாது போகும்.
    நம்மிடம் திட்டம் இல்லை. கற்றுக்கொடுக்கவில்லை.

    சிலைகளுக்கு பாலைக்கொட்ட பழகிவிட்டோம். மாவு அபிசேகம் … பலன் என்று பட்டியல் பல கோவில்களில் உள்ளது. மனிதனை மறந்து விட்டோம்.
    கன்னியாகுமரி விவேகானந்தா் பாறைக்குச் செல்லும் அனைவரும் தியான மண்டபத்தில் அமைதியாக அமா்ந்து செல்வதைப் பாருங்கள். வாய்ப்பு அளித்தால் இந்துக்களும் மாறுவார்கள்.ஸ்ரீநாராயணகுரு மாற்றிக்காட்டியுள்ளாா்.

  16. ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஹிந்து இயக்கங்கள் தயாராக வேண்டும். இறுதிசடங்கின் ஊர்வலத்தின் போது குடியும் ஆட்டமும் ஊரை நாறடிக்கின்றன.பொதுமக்களுக்கு இடையூறும் செய்கின்றனர்.அதைவிட கல்யாணத்தில்

  17. நாராயணகுரு குறித்த நான் படிக்க ஆரம்பித்ததே ஒரு திருமண வீடடில்தான்.கேரளத்தில் மூவாற்றுப்புழா என்ற ஊரில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தேன். எனது மாமாவின் நண்பா் வீட்டு திருமணம் நானும் கூட சென்றேன்.நண்பா் ஒரு ஈழவா் பெரும் பணக்காரா்.500 ஏக்கருக்கு மேல் நிலம் உாிமையாளா். அவரது மகள் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.ஒரு மேடையில் ஒரு குத்து விளக்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.மணமக்கள் மாலை ஏதும் அணிவிக்காமல் மேடைக்கு முன் அழைத்து வரப்பட்டு உறவினா் ஒருவா் இரண்டு பேருக்கும் தனித்தனியே மாலை அணிவித்தாா்கள். பின் மணமக்கள் கைபிடித்து கொடுக்கப்பட்டது.மணமக்கள் 3 முறை விளக்கை வலம் வந்து தாலி அணிந்து கொண்டாா்கள். பெரியோர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றாா்கள்.திருமணம் ஒரு வேளை பொது விருந்தோடு நிறைவு பெற்றது.
    ————————————————————–
    எனது உறவினருக்கு 3 மகள்.மூத்த பெண் சடங்கு விழா பிரமாண்டமாக நடத்தினாா். பின் சில காலத்தில் அதிக கடன் பட்டு குடும்ப பொருளாதாரம் நலிந்து திடீர் என்று மரணம் அடைந்தாா்.குடும்பத்திற்கு 10 காசுகள் வருமானம் கிடையாது. பெண்கள் பாய் பின்னி உழைத்து வாழ்ந்து வந்தாலும் தகப்பன் வாங்கிய கடன் அவர்களையும் தின்றது. மூத்த பெண்ணிற்கு வயது 30 ஆனது. திருமணம் செய்ய 10 காசு கையில் இல்லை. எனவே ஒரு விசவாய கூலி வேலைசெய்யம் ஒரு பையனை பெண்வீட்டில் வைத்து திருவிளக்கு முன் வைத்து தாலி கட்டி மாப்பிள்ளை பெண்ணை தன்வீடு அழைத்துச் சென்றாா். நான் அப்போது 12 வயது சிறுவன்.7ம் வகுப்பு படித்தேன்.
    —————————————
    வறுமையின் காரணமாக செய்த ஒரு திருமண முறையை பணக்காரன் ஒருவன் இயல்பான நடவடிக்கையாக செய்ததைக் கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தேன்.பெண்குழந்தைகளுக்கு வயது வந்ததை கொண்டாடுவதை குருஜி தடுத்துவிட்டாா். அதுபோல்திருமணமும் எளிமையாக நடத்தக கற்றுக்கொடுத்து வெற்றி பெற்றுள்ளாா். ஒரு வேளை சாப்பாடு இரண்டு மாலை ஒரு விளக்கு 3 சுற்று திருமணம் முடிந்தது. எத்தனை பேருக்கு இப்படி ஒரு முறை இருக்கின்றது தெரியும்.
    ———————————————————
    எனது உடன்பிறந்தவா்கள் 7 பேர்கள்.20 திருமணங்களுக்கு மேல் நான் முன்நின்று செய்து வைத்திருப்பேன். திருமணம் முடிவு செய்தபின் முகூா்த்த நாள் அல்லாத ஒரு நாளில் திருமணம் செய்யலாம் என்ற எனது யோசனையை யாரும் கேட்கவில்லை. எனது திருமணம் கூட முகூா்த்தநாள்தான் நடைபெற்றது. ஆனால் எனது மாமா மகன் ஒருவா் கோவையில் தொழில் செய்து வந்தாா். தகப்பன் இல்லை.என்னிடம் தாங்கள் பார்த்து எனக்கு என்ன ஏற்பாடு செய்தாலும் சம்மதம் என்று திருமணம் செய்து வைக்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும் என்னிடம் உதவிடக்கேட்டாா்.நான் முகூா்த்தம் அல்லாத ஒரு புதன்கிழமை திருமணத்தை முடிவு செய்து பத்திாிகை அடித்து கொடுத்தும் விட்டேன். திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் பெண் வீட்டாா் என்னிடம் ஆட்சேபணை தெரிவித்து வந்து விட்டாா்கள்.பையனிடமும் தெரிவித்து திருமணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டாா்கள்.மாப்பிள்ளை பையன் சம்மதிக்கவில்லை. ஆகவே திருமணம் சிறப்பாக நிறைவேறியது. வேறு எந்த கல்யாணமும் இவ்வளவு இலகுவாக நடந்து முடிந்தது கிடையாது .மண்டபமா பந்தலா மேடை அலங்காரமா மேளமா வாகனங்களா தளவாடங்களா ஒலி பெருக்கியா விடியோ போடடோவா சமையல் காரா்களா மாலையா என்று அனைத்து பொருள்களும் மலிவாக கிடைத்தது.
    அன்ற வேறு திருமணங்கள் இல்லை.எனவே அழைப்பு பெற்றவா்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டாா்கள்.இதற்கு மேல் என்ன வேண்டும் ?மாப்பிள்ளைக்கு 40 ஆயிரம் ரூபாய் மிச்சம்.வேலைப்பளுவோ மிகக்குறைவு.
    எந்த குறைவும் யின்றி மணமக்கள் எல்லா செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்ந்து வருகின்றாா்கள்.
    ———————————————————————
    எனக்கோ ஊரில் நிறைய பேர்களின் வசை தாராளமாக கிடைத்தது.
    பாராட்டியவா்கள் சிலா்.குறிப்பாக தி.க.மற்றும் கம்யுனிட்கள்.
    அதற்கு பிறகு வே?றுஎந்த திருமணத்தையும் சாதாரண நாளில் செய்து கொள்ள யாரையும் சம்மதிக்க வைக்க என்னால் இயலவில்லை.

  18. ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஹிந்து இயக்கங்கள் தயாராக வேண்டும். இறுதிசடங்கின் ஊர்வலத்தின் போது குடியும் ஆட்டமும் ஊரை நாறடிக்கின்றன.பொதுமக்களுக்கு இடையூறும் செய்கின்றனர்.அதைவிட கல்யாணத்தில்
    ————————–
    தமிழ்ஹிந்து இணையதளம் தயாராகவில்லை.

  19. தமிழ்ஹிந்து இணையதளம் தயாராகவில்லை என்பது மட்டும் அல்ல.வாசகா்களும் ஆர்வமற்றவா்களாக இல்லை.

  20. // ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஹிந்து இயக்கங்கள் தயாராக வேண்டும். இறுதிசடங்கின் ஊர்வலத்தின் போது குடியும் ஆட்டமும் ஊரை நாறடிக்கின்றன.பொதுமக்களுக்கு இடையூறும் செய்கின்றனர்.அதைவிட கல்யாணத்தில் //

    ஆப்ரஹாமிய மதங்களைப்போல நிறுவனமயமாகாத மதமென்பதால் இதுபோன்ற சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. இவற்றை மாற்ற இந்து இயக்கங்களால் ஏதும் செய்ய இயலுமா என்று தெரியவில்லை. சாமான்ய மக்களின் சடங்கு நடைமுறைகள் என்பதால் அவதூறுகளை சந்திக்க நேரும். எனவே சம்பந்தப்பட்ட சமூக பெரியவர்கள் மூலமோ காவல்துறை மூலமோதான் இவற்றை கட்டுப்படுத்தவேண்டும். (உதாரணமாக, ஊர்வலம் போகும்போது குடித்துவிட்டு ஆடக்கூடாது என்று கட்டளை இடலாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *