ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1

கட்டுரையாளன் குறிப்பு:  இது அரசியல் கட்டுரையல்ல்.  ராஃபேல் விமானம் இந்திய இராணுவத்தால் ஏன், எப்படித் தேர்வுசெய்யப்பட்டது, இப்பொழுது இவ்விமானத்தைப்பற்றி இராணுவத்தின் நிலைப்பாடு எப்படியுள்ளது என்பதைப்பற்றிய கட்டுரையே இது.  எவரைப்பற்றியும் குறைசொல்லும் நோக்கமும் இதில் கிடையாது.  இதைப்படிக்கும் எவருக்கும், நாட்டுப்பாதுகாப்பைப்பர்றி எனென்ன கருத்துகள் இராணுவ நிலைப்பாடு எடுக்கக்காரணமாக உள்ளன என்பதை எளியமுறையில் விளக்கமுனைவதே இதன் நோக்கம்.  அதற்காகப் பல இறாணுவ, நாட்டுப்பாதுகாப்பு ஆய்வாளர்களின் கட்டுரைகளிலிருந்து தொகுத்து எழுதப்பட்டதே இக்கட்டுரை.  எனவே, இதைப்படிக்கும்போது என்ன கேள்வியெழுந்தாலும் உங்கள் கருத்தில் பதியுங்கள்.  அதை என்னாலியன்றவரை விளக்கமுயல்கிறேன்.

ராஃபேல் போர்விமானம்

துவக்கம்:

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு  – திருக்குறள்

நாடு என்று அழைக்கப்படுவதற்கே இலக்கணம் என்ன என்பதை இரண்டு வரிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் பொய்யாமொழிப் புலவரான வள்ளுவர். அதைவைத்துப் பார்த்தால் உலகத்திலேயே நாடு என்று அழைக்கத்தகுதியானது சுவிட்சர்லாந்து ஒன்றுதான்.  அங்குதான் மக்கள் பசியின்றி வாழ்கின்றனர்;  தொடர்ந்து நோய்கள் அந்நாட்டு மக்களைப் பாதிக்கவில்லை;  வெறுப்பினால் அந்நாட்டிடம் எவரும் பகைமை பாராட்டுவதில்லை.  அநத் ஒரு நாட்டைத் தவிர, எநத் நாட்டுக்கும் அத்தகுதி இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், அந்நியப் படையெடுப்புக்குமுன்னர் இத்தகுதியுடன் விளங்கியது பாரதப் பெருநாடு.  வந்தாரை வரவேற்று வாழவைக்கும் நாடாகத்தான் அது திகழ்ந்தது.  உலகத்திலுள்ள பல்வேறு நாட்டாரும் வணிகம்செய்வதற்கென்று இங்கு வந்தனர்.  தமது சமயத்தைப் பின்பற்றவியலாது வேட்டையாடிக் கொல்லப்படும் நிலையிலிருந்த அப்பாவிகள் இந்தநாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.  இந்துசமயத்தின் [சமணமும், பவுத்தமும் உள்ளடங்கி] எப்பிரிவினராக இருந்தாலும், பரசமயத்தினராக இருப்பினும் தத்தம் சமயத்தைத் துன்புறுத்தலின்றிப் பின்பற்ற அரசர்கள் வழிவகுத்து நிதியளித்தனர்.

வணிகம்செய்யவேண்டுமென்று உலகின் பலமூலையிலிருந்தும் பலரும் வழிவகுத்தனர்.  இதற்காகவே, கிறித்தோபர் கொலம்பஸ், வாஸ்கோ ட காமா போன்ற பலரும் புதுக் கடற்பாதை தேடினர் என்பது கண்கூடு.  கடல்வணிகத்தில் தமிழர் தலைசிறந்து விளங்கினர் என்பதும், கிரேக்கர், உரோமானியர், அரேபியர் போன்றோர் வணிகத்திற்காக நாவாய்களில் வந்திறங்கினர் என்பதும் வரலாறு. இவர்கள் வரம்புமீறிப் போகாமலிருக்கவேண்டும் என்பதற்காகவும், இங்கிருந்து பலநாட்டிற்கும் வணிகத்திற்குச் செல்லும் பல நாவாய்களும் பாதுகாக்கப்படவேண்டும் என பாரதத்திலேயே பெரிய கடற்படையையை [இன்றைய கடைப்படை நீங்கலாக] வைத்து, இந்நாட்டின்மீது கடல்வழித்தாக்குதல்பற்றி நினைக்கக்கூடாது தடுத்தவன் இராஜேந்திரசோழன்.

அப்படியிருக்கையில் பாரதநாட்டிற்குத் தேவையில்லாத செறுபகை வந்துதான் சேர்ந்தது.  அதைச் சுற்றியிருக்கும் நாடுகள் அதன்மீது வெறுப்பைத்தான் முதலீடாகவைத்து ஆட்சிசெய்துவருகின்றன.  எனவே, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தனது இராணுவத்தைப் பலப்படுத்துக்கொள்வது, செறுபகை வராமல் தடுப்பது அதன் தலையாய கடமையாகிறது.

ஆங்கிலேயனிடமிருந்து தன்னாட்சிபெற்ற பாரதத்தின்மீது அடுத்தநாளே தாக்குதல் துவங்கியது. இன்றுவரை [பிப்ரவரி 2018] பாரதம் பல்வேறு போர்களைச் சந்தித்துத் தன்னுடைய பகுதிகளை அந்நியர்வசம் இழந்தது. வங்கதேச விடுதலைப்போரில் உலகிலேயே அதிகமான இராணுவத்தோரைப் போர்க்கைதிகளாக்கிப் [90,000க்கும் மேல்] பெரும்புகழ் பெற்றாலும், போரில்பெற்ற வெற்றியைப் பேச்சுவார்த்தைகளில் நழுவவும் விட்டது.  உலகநாடுகளின் நன்மதிப்பைப் பெறவேண்டி, கர்ஜிலில் கணக்கற்றோரைக் காவுகொடுத்து வெற்றிகண்டது.

இப்போர்கள் பாரதத்திற்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தன.  நாட்டு இராணுவ வலிமையைப் பெருக்கிக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.  ஏனெனில் அண்டைநாடுகளின் செறுபகை இருக்கும்வரை தன்னைக் காத்துக்கொள்வதுதானே செறுபகை அழிவேற்படுத்தாமலிருக்கும் அருமையான வழியாகும்?

இந்திய இராணுவ வலிமையும், அண்டைநாடுகள் தொல்லையும்:

எந்தவொரு நாட்டு இராணுவமும் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய மூவகைப் படைகளை வைத்திருக்கிறது.  உலகிலேயே நான்காவது பெரியது, பாரதத்தின் இராணுவம். 14 லட்சத்தி 44 ஆயிரம் படைவீரர்களும், காப்புப் படைவீர்கள் பதினோரு லட்சத்து 55 ஆயிரம்பேரும் உள்ளனர்.

Active Reserve[68] Governing Body
Indian Army 1,237,117 960,000 Ministry of Defence (India)
Indian Navy 67,228 55,000 Ministry of Defence (India)
Indian Air Force 139,576 140,000 Ministry of Defence (India)
1,443,921 1,155,000 நன்றி:விக்கிபீடியா

இதுபோக, நடுவண் ஆயுதப் பாதுகாவலர் படையில் காப்புப்  படையோரையும் சேர்த்து 23 லட்சத்துத் தொண்ணூறாயிரம் பேரும் இருக்கிறார்கள்.

அண்டைநாடான பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவின் படைபலமே மிகவும் அதிகம். அட்டவணை 2, 2017ல் இருநாடுகளின் இராணுவ வலிமை ஒப்பீட்டைத் தருகிறது.  முப்படைகளிலும் இந்தியாவை அண்டைநாடான பாகிஸ்தானால் எதுவும் செய்துவிட இயலாது. 


அட்டவணை 2:  இந்தியா-பாகிஸ்தான் படைபல ஒப்பீடு: நன்றி: International Business Times, India

ஆயினும், இந்தியாவைக் காட்டிலும், பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஜப்பானில் அமெரிக்கா ஏவிய அணுகுண்டுகளைவிடப் பலமடங்கு சேதத்தை விளைவிக்க வல்லவை. முதலாவதாக அணு ஆயுத்ததைக் கையாளமாட்டோம் [no first strike] என்று இந்தியா அறிவித்திருந்தபோதிலும், பாகிஸ்தான் அப்படிச் செய்யவில்லை.  காரணம், முப்படைப் போர் வந்தால், இந்தியாவை வெல்ல இயலது என்பதை உணர்ந்தே அது அப்படிச் சொல்லியிருக்கிறது.

அணு ஆயுதப்போர் இருநாட்டிற்குமே மாபெரும் கேட்டையும், அழிவையும், பல இலட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தையும், அணுக்கதிர்வீச்சினால் பல்லாண்டுகள் எவரும் அணுகமுடியாத நிலமையையும் விளைவிக்கும் [mutually assured destruction]. அரசு சரியாகச் செயல்பட முடியாத நிலையும் உண்டாகும்.  அதனால்தான், அண்டைநாட்டிலிருந்து தொடுக்கப்படும் பயங்கரவாதத்திற்குச் சரியான பதிலடி கொடுக்க இயலாத நிலையில் இந்தியா இருக்கிறது. இதை நன்றாக உணர்ந்தே பாகிஸ்தானும் இந்தியாவில் பயங்கரவாதத்தில் எந்தவிதக் கட்டுப்படுமின்றி இயங்கிவருகிறது.  [https://en.wikipedia.org/wiki/Pakistan_and_state-sponsored_terrorism ]

மேலும், பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்க பாகிஸ்தான் காரணமாகக்கூடும் என்று டேனியல் பைமன் எழுதியுள்ளார். [“The nightmare of a terrorist group acquiring nuclear weapons is far more likely to involve Pakistan..” The Changing Nature of State Sponsorship of Terrorism by Daniel Byman, Brookings Report, https://www.brookings.edu/research/the-changing-nature-of-state-sponsorship-of-terrorism/ ]

போதாக்குறைக்கு சீனாவும் இந்தியாவுக்குத் தொல்லைகொடுக்கப் பாகிஸ்தானுக்கு உதவிசெய்துவருகிறது.  ஹாரெட்ஸ் என்னும் இஸ்ரேலியப் பத்திரிகை இன்னும் ஒருபடி மேலேசென்று, “இப்பொழுது சீனா பாகிஸ்தானி ஜிஹாதிப் பயங்கரவாதத்தின் பங்காளி” என்னும் தலைப்பில், “இந்தியாவின் எல்லையில் தொல்லையை உருவாக்கி அங்கு, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வன்முறையையும்,  மேற்குநாடுகளில் யூதர்களுக்கெதிரான ஜிஹாதையும் ஏற்றுமதிசெய்யும் பாகிஸ்தானை உலகநாடுகள் தடைசெய்ய இயலாது  பைஜிங் தடுத்துவருகிறது என்று குறிப்பிட்டு, அண்மையில் காஷ்மீரில் நடந்த புல்வாமா பயங்கரவாதத்தைப்பற்றி ஒரு கட்டுரையே வெளிவந்துள்ளது. [“Beijing blocks international efforts to sanction Pakistan’s Islamist terrorists, who foment insurgencies on India’s borders and export their violent, deeply anti-Semitic jihad to the West.“ — China is now the partner in Pakistan’s Jihadist Terror,  https://www.haaretz.com/world-news/.premium-how-china-became-pakistan-s-partner-in-jihadist-terror-1.6940053 ]

இப்படிப் பயங்கரவாதத்தாலும், தீவிரவாதிகளிடமிருந்து அணுஆயுதத் தாக்குதல் நடக்க ஒரு கருவியாக அமையும் அண்டைநாடு இருக்கும்போதும், அதற்கு உதவ இன்னொரு அண்டைநாடு மறைமுகமாகவும், நேராகவும் உதவிசெய்துவரும்போதும், தன்னைக் காத்துக்கொள்ள இந்தியா எப்படிச் செயலாற்றுவது?

[தொடரும்]

3 Replies to “ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1”

  1. தொடருங்கள் ஐயன்மீர். தமிழ்க்குமுகம் மெய்பொருள் காண்பதாகுக.

  2. காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் says:

    வணக்கம்.
    இந்த நேரத்தில் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களைத் தங்களது கட்டுரை தமிழில் தொகுத்து வழங்கும் என நம்புகிறேன். தொடருங்கள் ஐயா.

    மற்றபடி,
    “உலகத்திலேயே நாடு என்று அழைக்கத்தகுதியானது சுவிட்சர்லாந்து ஒன்றுதான். அங்குதான் மக்கள் பசியின்றி வாழ்கின்றனர்” – என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. அதாவது, இந்தியா முதலான உலகநாடுகளில் சுரண்டப்பட்ட பணத்தைச் சுவிட்சர்லாந்து வங்கிகளில் சேர்த்து வைத்துள்ளனர். இதனால் சுவிட்சர்லாந்து பணக்கார நாடாக உள்ளது. அது அந்த மக்கள் உழைத்துச் சேமித்த பணமல்ல. எனவே சுவிட்சர்லாந்தைத் தாங்கள் புகழ்ந்து கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

  3. I started reading the first part and the first few lines very debatable
    ” சுவிட்சர்லாந்து ஒன்றுதான். அங்குதான் மக்கள் பசியின்றி வாழ்கின்றனர்; தொடர்ந்து நோய்கள் அந்நாட்டு மக்களைப் பாதிக்கவில்லை; வெறுப்பினால் அந்நாட்டிடம் எவரும் பகைமை பாராட்டுவதில்லை”
    We were in Switzerland few year ago and hauling our luggage through the steps of the hotel, we arrived at the reception desk sweating and in short of breath. A guy and a girl were sitting behind the reception and they just ignored us totally. Not they were busy as there were no other people in the whole lobby.Clearing of our throats and few coughs did nothing to attract their attention. After few minutes, I approached the desk and said loudly that we have a booking at the hotel ( all paid for in advance). With the irritable look, the lady reluctantly got our bookings confirmed. Handing over the keys to our room she said “You are not allowed to cook in the room”. This got my goatie and I gave her a verbal thrashing about her manners and said that we were there for a holiday and definitely not for cooking. She then casually said that most Indians come and cook in the hotel room leaving curry stink (which apparently is a big no, no)!! A lot of Swiss people have contempt for us brownies! Not so in Finland, Norway or Iceland ( Iceland most beautiful place, beats Switzerland hollow)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *