ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3

கட்டுரையாளன் குறிப்பு:  சென்ற பகுதியில் மிக்-21 விமானம் 50 ஆண்டுகள் பணியாற்றியபின் 2013ல் ஓய்வுபெற்றது என்று எழுதியிருந்தேன்.  அப்படியிருந்தும், சிலநாள்கள் முன்பு [பிப்ரவரி, 27, 2019] பாகிஸ்தான் தங்கள் எஃப்16 விமானங்களை காஷ்மீருக்குள் அனுப்பியதும், அதை இந்தியாவின் மிக்-21 விமானங்கள் எதிர்த்து, இரண்டு எதிரித் தாக்குதலில் அழிக்கப்பட்டதும், வீரத்தமிழ் விமானி விங் கமான்டர் அபிநந்தன் வர்த்தமான் தனது விமானம் தாக்கப்பட்ட நிலையிலும் எதிரி விமானம் எஃப்-16 ஒன்றைச் சுட்டுவீழ்த்தி, சிறைப்பட்டு மீண்டதும் அனைவரும் அறிந்த செய்தி.  எனவே, ஐம்பது ஆண்டுகள் பணியாற்றி, ஆறு ஆண்டுகளுக்குமுன் ஓய்வுபெற்ற விமானம் ஏன் இன்னும் இந்திய விமானப் படையில் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.  அதற்கு விளக்கம்கொடுத்துவிட்டு, கட்டுரையைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.  நீங்களும் தொடர்ந்து படியுங்கள்…

போன மச்சான் திரும்பிவந்தான்..

இக்கட்டுரைத் தொடரை எழுதத் துவங்குமுன், ராஃபேல் விமானம்பற்றிய பலதகவல்களைச் சேகரித்தேன். துவக்க அறிமுகத்தை எழுதும்போது புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது.  எனவே, துவக்கமே நீண்டவொன்றாக ஆனது.  இரண்டாம் பகுதியிலும் அதைத் தொடர நேரிட்டது.  ஓய்வுபெற்ற மிக்-21 மீண்டும் தாக்குதலில் கலந்துகொண்டதால் [ரிடையர் ஆனபின் மீண்டும் வேலைக்கு வருவதுபோல],  அவ்விமானத்தைப்பற்றி எழுதுவது, ராஃபேல் விமானம் தேர்ந்தெடுக்கப்ப்ட்டதற்கான காரணத்தைச் சொல்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் என்பதால் இப்பகுதி உருப்பெறுகிறது.

1963ம் ஆண்டு முதல் மிக்-21ம் விமானம் பாரதத்திற்கு வந்துசேர்ந்தது[1].  அதைப்பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம். 

அர்டர்ன் மிக்கோயன்

உலகத்திலேயே முதன்முதலாக ஒலியைவிட் விரைவாக, அதாவது இருமடங்கு விரைவாகச் செல்லும்படி வடிவமைக்கப்பட்ட போர்விமானம் அதுதான்.[2]  அது ரஷ்யச் செயலகத்தில் பணியாற்றிய அர்டர்ன் மிக்கோயன் [Artern Mikoyan],மிக்கைல் குரேவிச் [Mikail Gurevich] என்னும் இரு விமானப் பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டு மிக்கோயன் குரேவிச் என்னும் ரஷ்ய போர்விமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதால், மிக்கோயன் என்னும் பெயரின் முதலெழுத்தையும், குரோவிச்சின் முதலெழுத்தையும் சேர்த்து, and என்னும் பொருள்வரும் ரஷ்யச் சொல்லுக்கு முதலெழுத்தான i என்னும் எழுத்தை நடுவில்வைத்து, மிக் [MiG] என்று பெயர்வைத்தார்கள். மிக்-21 விமானம் 1959ல் முதன்முதலாகத் தனது பணியைத் துவங்கியது.  இதற்கு ‘பிஃஷ்பெட்’[Fishbed] என்ற செல்லப்பெயர் உண்டு. 

மிக்-21 ஃபிஷ்பெட் (Fishbed)

இதுவரை 11,400க்கும் அதிகமாக மிக்-21 விமானங்கள் உற்பத்திசெய்யப்பட்டிருக்கின்றன.  இருபதுக்கும் மேற்பட்ட வகைகளும் உண்டு. சீனா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதைப் பயன்படுத்திவருகின்றன.  சீனா இதை ஜே-7 என்ற பெயரில் உற்பத்திசெய்து பல நாடுகளுக்கும் விற்றுவருகிறது.[3]  இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மிக்-21எம் [MiG-21M] வகையை வடிவமைத்து உருவாக்குகிறது.

ஆக, இவ்விமானம் தனது தகுதியைவைத்துதான் இத்தனை நாடுகளால் வாங்கி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை அறியலாம்.  ஆனாலும் அது வடிவமைப்புபெற்று 58 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது என்பதுதான் உண்மை..

முதலில் உருவாகிவந்தபோது, அவ்விமானம் என்றால் எல்லா நாடுகளுக்கும் சிம்மசொப்பனம்தான்.  உலகில் முதல் சூப்பர்சானிக் விமானம் என்பதால், அச்சமயம் அது வருவதை யாரும் கேட்பதற்குமுன்னரே, அது தன் இலக்கை அடைந்து குண்டுகளை வீசி எதிரிகளை அழித்துவிடும். 

மிக்-21ம், அச்சமயத்து மற்ற விமானங்களும்:

எஃப்-4 ஃபான்ட்டம் விமானம்

அதற்குச் சமமாக அமெரிக்காவின் மக்டானல் டக்லஸ் விமான நிறுவனம் வடிவமைத்த விமானம், எஃப்-4 ஃபான்ட்டம் [F-4 Phantom].  வியட்நாம் போரில் இவ்விரு விமானங்களின் நிறை-குறைகள் உலகத்திற்குத் தெரிந்தன.  விரைந்து செயல்படும் மிக்-21 சுலபமாகச் செலுத்தவல்லது.  தூரத்திலிருந்து அதன் புறவுருவத்தைக் கண்டு அதை அழிப்பது மிகவும் கடினம். பளுவான எஃப்-4ன் எஞ்சின்கள் வெளிவிடும் புகையால் அதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.  ஆனால், அது மிக்கைவிடச் சிறந்த ஆயுதங்களைத் தன்னிடம் வைத்திருந்தது.[4] மேலும் பல செம்மைப்படுத்துதல்கள் மூலம் அமெரிக்காவில் வேறு விமானங்கள் வடிவமைக்கப்பட்டன. 

எனவே, அமெரிக்க விமானப்படை எஃப்-4 விமானங்களுக்கு 1996ல் ஓய்வுகொடுத்து அனுப்பிவிட்டது.

இது இப்படியிருக்கையில், பாரதம் அச்சமயத்தில் சிறந்த மிக்-21 விமானங்களை தனது படையில் சேர்க்கும்போது, அண்டைநாடான பாகிஸ்தானால் எப்படி வாளாவிருக்கமுடியும்? 1971ல் பாரதத்துடன் நடந்த போரில் தனது எஃப்-86 சேபர் ஜெட் [F-86 Sabre jet] விமானங்களைப் பறிகொடுத்ததை அதனால் எப்படி மறக்கமுடியும்?

அமெரிக்காவுக்கு அது மிகவும் அணுக்கமான நட்புநாடாக இருந்தமையால், அமெரிக்க-சீன நல்லுறவு ஏற்பட அது உதவியது.  அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சனின் ஆலோசகரான ஹென்ரி கிஸ்ஸிங்கர் பாகிஸ்தான்வழியாகச் சீனா சென்று, நிக்சன் சீனா செல்ல வழிவகுத்தார். 

ஏன் அமெரிக்கா சீனாவுடன் நல்லுறவுகொள்ளவேண்டும்?

கூட்டுசேராமல் இருப்போம் என்று சொல்லிவிட்டு, ரஷ்யாபக்கம் பாரதம் சாய்ந்துவிட்டதோ என்ற எண்ணம் — பாகிஸ்தானைப் பாரதம் போரில்வென்றது, அதற்கு உதவியாக ரஷ்யா வந்தது — ஆசியாவில் கம்யூனிசம் வலுத்துவிடுமோ என்ற கலக்கம் — பாகிஸ்தானின் உதவியுடன் சீனாவை நெருக்கமாக்கிக்கொள்ளத் தூண்டியது. 

இவையே பாகிஸ்தானை பாரதத்திற்கு நிகராகப் போர்விமானங்கள் வாங்க அனுமதித்து, அதற்குக் கோடிக்கணக்கில் அமெரிக்கா நிதியுதவிசெய்யக் காரணங்களாக அமைந்தன — விமானத் தேவையை நிறைவேற்ற, பாரதத்தை மேலும் மேலும் ரஷ்யாவின் உதவியை நாடவும் செய்தன.

தனது பெருவாரியான விமானங்களை 1971 போரில் இழந்த பாகிஸ்தான், மிக்-21க்குச் சமமான — அல்லது, அதைவிடச் சிறந்தவற்றை வாங்க முடிவுசெய்தது. ரஷ்யாவிடமிருந்து மிக்-21 விமானங்களை வாங்கமுடியாது.  அதனால் தனது நட்புநாடான சீனாவை நாடியது. 

சீனாவின் ஜே7 விமானம்

மிக்-21 விமானங்களைத் தயாரிக்க ரஷ்யாவிடமிருந்து அனுமதியும், தொழில்நுட்பத் திறனும் பெற்ற சீனா, அதன் வடிவமைப்பின் அடிப்படையில், தன்னுடைய செங்டு விமான நிறுவனத்தில் தயாரித்து, ஜே-7/எஃப்-7 என்ற பெயரில் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்றது. கிட்டத்தட்ட 2400 ஜே-7 விமானங்கள் இன்னும் [2019] உபயோகத்தில் உள்ளன[5].

மிக்-21 விமானங்கள் பறக்கும் சவப்பெட்டி, விதவையாக்குபவையா?

மக்கள் செல்லும் பயணிவிமானம்போல மெதுவாக மேலேறி, மெதுவாகக் கீழிறங்கி, திரும்பும்போது அதிகம் சாயாமல், ‘டர்புலன்ஸ்’’[turbulence] என்று சொல்லப்படும் காற்றுக்கொந்தளிப்பைத் தவிர்த்துச் செல்லுவதல்ல போர்விமானங்கள். எதிரிவிமானத்தை எதிர்கொள்ளும்போது கிட்டத்தட்டச் செங்குத்தாக மேலேறவும், அப்படியே கீழிறங்கவும், சுழன்று சுழன்று எதிரியிடமிருந்து தப்பித்து, அதைத் தாக்கவும் முயலும்.  அவ்வாறு செய்யும்போது, அதனுடைய செயல் தகுதிக்கு மீறிச் செயல்பட்டால், விமானியின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவி, விழுந்து நொறுங்கவும் வாய்ப்புண்டு. எந்தவொரு போர்விமானமாக இருந்தாலும், அது சண்டைக்குப் போகும்போது எதிரியால் வீழ்த்தப்படலாம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.  எதிரியை எதிர்கொள்ளும்போது, வீழ்த்து அல்லது வீழ்ந்துபடு என்பதே போர்விமானங்களின் நிலைமை.

பயணிவிமானம் அதிகபட்சம் ஒலியின் வேகத்தில் முக்கால் பங்கு வேகத்தில்தான் செல்கின்றன.  கன்கார்டு என்ற பயணிவிமானம் ஒலியைவிடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகமாகச் சென்றது.  அது இயற்கைச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கிறது என்பதால், பயணிப்பது நிறுத்தப்பட்டது.

மேலும், சூப்பர்சானிக் என்று ஒலிவேகத்திற்கும் அதிவிரைவாகச் செல்லும் விமானம் திரும்பும்போது விமானியின்பால் புவியீர்ப்புச் சக்தி [g-force] அதிகரிக்கிறது.  அவர்களுக்கு அதைத் தாங்கும் பயிற்சி இருப்பினும், ஓரளவுக்குமேல் அவர்களால் தாங்க இயலாது.  பயிற்சியின்போதோ, தாக்குதலின்போதோ அச்சக்தி அளவுக்குமேல் அதிகரித்தால், தாங்கும் அளவுக்கு வரும்வரை நினைவுதப்பிவிடும்.  அப்பொழுது விமானத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை விமானி இழந்துவிடுகிறார்.  அந்த சிலகணக் கட்டுப்பாடின்மை விமானத்தை வீழ்த்திவிடுகிறது.

அச்சமயத்திலும், எதிரியால் விமானம் தாக்கப்பட்டுச் சேதமடைந்து கட்டுப்பாடை இழக்கும்போது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், விமானிகள் வெளித்தள்ளும் பொத்தானை அமுக்கி, விமானத்திலிருந்து பாரசூட்டில் பத்திரமாகக் கீழிறங்கும் பாதுகாப்பு வழிமுறையும் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் நடந்த போர்களில் பாகிஸ்தானின் விமானங்களும் வீழ்த்தப்பட்டுள்ளன.  ஆயினும் மிக்-21க்கு மட்டும் அவப்பெயர் வரக் காரணமென்ன?  அவ்விமானங்கள் உற்பத்திக்கோளாறாலும், அடிக்கடி  பயிற்சியின்போது விழுந்துநொறுங்கி நூற்றுக்கணக்கான இந்திய விமானிகள் இறந்ததாலும் ரஷ்யா கொடுத்த மிக்-21 விமானங்களுக்குக் கடுமையான விமர்சனங்கள் வந்து குவிந்துள்ளன.[6]

இதில் நியாயம் இருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்களால்தான் சரிபார்க்கமுடியும்.

மிக்-21 விமானங்கள் ஏப்பைசாப்பையானவை அல்ல.  1970ல் பாகிஸ்தான், சோவியத் யூனியனைவிட இந்தியாதான் ஈராக் விமானிகளுக்கு மிக்-21ல் பயிற்சி அளித்தது.

Image result for britain's lightning jet
பிரிட்டனின் லைட்னிங் விமானம்

பிரிட்டனின் 345 லைட்னிங் [Lightning] ஜெட்களில் நூறு (29%) 1959லிருந்து 1988வரை விழுந்து நொறுங்கியுள்ளன.  ரஷ்யாவிடமில்லாது, மற்ற இடங்களில் உதிரிப் பொருள்களை வாங்கி மிக்-21க்கு உபயோகித்தால், அவை கீழேவிழுந்து நொறுங்குவதுபற்றி வியப்படையக்கூடாது என்று புதுதில்லியிலிருக்கும் ரஷ்ய தூதுவர் அலெக்சான்டர் கடாகின் சொல்லியுள்ளார்.[7]

Image result for pakistan's f-16
பாகிஸ்தானின் எஃப்-16 விமானம்

பாகிஸ்தானின் 77 எஃப்-16 விமானங்களில் ஒன்பது (11.6%) விழுந்து நொறுங்கியுள்ளன.[8]அதுமட்டுமல்ல, ரஷ்யாவிடமிருந்து வாங்கிய 872 மிக்-21 விமானங்களில் படிக்குப் பாதிக்குமேல் (>50%) விழுந்து நொறுங்கியதாகவும், 200 விமானிகள் உயிரிழந்தததாகவும் பாரதப் பாதுகாப்பு அமைச்சர் 2012ல் சொல்லியபோது வியப்படைந்தது, அன்றைய மக்களவை.[9]

இந்த அதிகமான விழுக்காடுதான் மிக்-21க்கு அவப்பெயரைத் தேடித் தந்துள்ளது.

முக்கியமான விமானப்படை உடைய உலகநாடுகளிலேயே, மிக்-21 விமானாத்தைப் பறக்கவிடும் கடைசி நாடு பாரதம்தான்.  அமெரிக்கா தயாரித்த, முன்னேற்றமடைந்த ராடார்கள், வழிநடத்தும் கருவிகள், இன்னும்பல திறமைகளையுடைய எஃப்-16 விமானங்களைப் பாகிஸ்தான் விமானப்படை நாற்பதாண்டுகளாக உபயோகித்துவருகிறது.  கடந்த பத்தாண்டுகளாக பிளாக்-50 என்னும் புது மாடல்களைப் பெற்றிருக்கிறது, என்று வாயு ஏரொஸ்பேஸ் அண்ட் டிஃபென்ஸ் ரிவ்யூ [Vayu Aerospace and Defence Review] இதழின் நிறுவன ஆசிரியர் புஷ்பீந்தர் சிங் கூறியிருக்கிறார்.

1999ல் நடந்த கர்ஜில் போரில் மிராஜ்-2000 விமானங்கள் திறம்படச் செயலாற்றின.  மிக் விமானத்திற்குப் பதிலாக, பலவாறு செயலாற்றவல்ல இவற்றை வாங்குமாறு முப்படைத் தலைவர்களும் மன்றாடிப்பார்த்தார்கள்.  ஆனால், அன்றைய அமைப்பு அத்ற்கு இடம் தரவில்லை.[10]

இருந்தபோதிலும், பாரதம் ஏன் மிக்-21 விமானங்களை வாங்கியது? 

Image result for mirage 2000
மிராஜ்-2000 விமானம்

பணச்செலவைப் பொருத்தவரை அதுதான் சிறந்தது, சிக்கனமானது.  1985ல்கூட, மூன்றரைக் கோடி ரூபாய்களில் ஒரு மிக்-21 விமானத்தை உருவாக்கமுடியும்.  ஆனால், மிராஜ்-2000, ஜகுவார் விமானங்கள் அதைவிடப் பத்துமடங்கு விலை அதிகம்.  ஆகையால், எதிரியின் ஒரு மிராஜ் அல்லது எஃப்-16 விமானத்தை வீழ்த்துவதற்கு மூன்று மிக்-21 விமானங்களை இழப்பினும், பணச்செலவு குறைவு என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

“மிக்-21 விமானத்தைக் கையாளுவது மிகவும் கடினம்தான், அது விமானிசெய்யும் எத்தவறையும் மன்னிக்காது. ஆனால் அதை பறக்கும் சவப்பெட்டி, விதவையாக்குவது என்பது சரியல்ல.  விமானச் சண்டை இயற்கையிலேயே மிகவும் ஆபத்தானது,” என்று ஒரு விமானி சொல்லியிருக்கிறார்.[11]

ஆனால், பாரதத்தின் மிக்-21 விமானப் படை அனைத்தையும் கண்டம்செய்து தூக்கி எறிவது ஒரு வெற்றிடத்தை உண்டுபண்ணுவதோடு, உடனடியாக மேற்கொள்ள இயலாததாகும். இன்றைய தேதிவரை [பிப்ரவரி 28, 2019], இந்திய விமானப்படையில் 113 மிக்-21 விமானங்கள் பணியாற்றிவருகின்றன.[12]

இருப்பினும், அனுமதிக்கப்பட்டுள்ள 42 ஸ்வாட்ரன்களில் 34தான் பாரத விமானப்படையிடம் உள்ளன..?

இந்தப் பகுதிமுழுவதும் மிக்-21 விமானத்தைப் பற்றியே விவாதித்துக்கொண்டிருந்துவிட்டோம்.  அடுத்த பகுதியில் போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சியைப் பார்ப்போம்.

[தொடரும்]


[1] 50 years on, MiG-21 continues to showcase combat flying, by Rajat Pandit, The Times of India, Apr 22, 2013 https://timesofindia.indiatimes.com/articleshow/19643076.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

[2]   MiG – Soviet Aircraft, Encyclopaedia Brittanica, https://www.britannica.com/technology/MiG-Soviet-aircraft

[3]   MiG-21 FISHBED, J-7 (Jianjiji-7) / F-7, YF-110, Military Analysis Network,

[4]   The F-4 Phantom vs. the MiG-21, Military History, December 17, 2018

[5]  J-7 / F-7 Fighter Aircraft, Air Force Technology, https://www.airforce-technology.com/projects/j7f7fighteraircraft/

[6]   Is Lockheed dumping F-16s on India? By Vineet Khare BBC Hindi, 20 June 2017, https://www.bbc.com/news/world-asia-india-40344566

[7]   The trouble with India’s MIG-21 Fighter Jets, by Kabir Taneja, The New York Times, Aug 8, 2013, https://india.blogs.nytimes.com/2013/08/08/the-trouble-with-indian-air-forces-mig-21-fighter-jets/

[8]   How many F-16 Pakistan have? By Rahula Sky, Nuclear Engineer Crytanalyst at CERN, https://www.quora.com/How-many-F-16-Pakistan-have

[9]    Why are India’s air force planes falling out of the sky? By Andrew North, BBC News, Oct 16, 2014, https://www.bbc.com/news/world-asia-india-29639897  

[10]   MiG-21s well past their retirement age: Here’s why IAF needs new jets, by Alison Saldanha, Business Standard, March 1, 2019, https://www.business-standard.com/article/current-affairs/mig-21s-well-past-their-retirement-age-here-s-why-iaf-needs-new-jets-119030100184_1.html

[11]    50 Years on, MiG-21 Continues to Showcase Combat Flying, by Rajat Pandit, The Times of India, Apr. 22, 2013

[12]   This Is Why The IAF’s MiG-21s Are Called Flying Coffins & The Reasons India Still Uses Them, by Rohit Bhattacharya, Scoop Whoop, Feb 28, 2019, https://www.scoopwhoop.com/life/why-does-india-still-use-mig-21/#.faek6ejlw

7 Replies to “ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3”

  1. 1958-59ல் நாண் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்தேன். அப்பொழுது என் தமையனார் இல்லத்திற்கு அண்டை வீட்டாராகிய பேராசிரியர் ஒருவரின் மைத்துனர், அவர் பெயர் மோகன் என் ஞாபகம்- இயந்திரப் பொறியல் முதுகலை பட்டம் பெற்றிருந்த அவர் இரஷ்யாவில் எம் ஐ ஜி விமானப் பயிற்சிக்குச் சென்று விடுமுறையில் வந்தார். அவ்வகை விமானம் நாளிதழ்களில் பெரிதும் பேசப்பட்டு வந்ததால், அவர் கூறிய செய்திகளை ஆவலுடன் கேட்டுள்ளேன். இப்பொழுது ஒரு அரிசோனன் எழுதிவரும் இக்கட்டுரையில் ஒவ்வொரு போர் விமான வகையின் சிறப்பு பற்றி அறியும் வாய்ப்புக்கிட்டியது. இது தமிழ் வாசகர்களுக்கு அரிய ஒன்றாகும். நன்றி ஒரு அரிசோனன்.

  2. காயலான் கடை சரக்கு மிக்-21.அரசின் அலட்சியம் காரணமாக பேரீச்சம் பழம் வாங்க கொடுக்க வேண்டிய விமானத்தை இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கின்றோம். இன்று கூட நவீன விமானத்தை வாங்க காங்கிரஸ் கட்சிக் குரங்குள் இடையுறுதானே செய்கின்றன.பதவியில் இருந்தபோதும் மண்தவளைகள்.( பதவியைவிட்டு)செத்தபிறகும் உபத்தரம் தான். ராகுல் ஒரு பொடியன்.

  3. அரேபியனுக்கும் அரேபியன் போல் வாழும் முஸ்லீம்களின் கனவு இந்தியாவை வெல்ல முஹம்மது ஆசைப்பட்டாா் என்பதுதான். இந்த லட்சிய வெறி இருக்கும் வரை இந்தியாவிற்கு இந்துஸ்தானத்திற்கு இசுலாமிய ரௌடியிசத்தால் வேதனைகள் வந்து கொண்டேயிருக்கும். ஒரு வலிமையான ராணுவம் வைத்திருந்து உருவாகும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை உடனுக்குடன் தாக்கி அழிக்க வேண்டும்.இந்து ஒருவன் முஸ்லீம் ஆக மதம் மாறினால் இந்துக்களின் எண்ணிக்கை குறைகின்றது.முஸ்லீம்களின் எண்ணிக்கை 10 ஆக உயா்கிறது என்று பொருள்படுத்திக் கொள்ள வேண்டும்.மத மாற்றத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
    Ghazwa-e-Hind’ (War against India) Will Continue Irrespective of Indo-Pak Tie, Jaish-e-Mohammed Resolved, In a Conference, More Than a Year Ago: Intelligence Report

    Feb 28, 2019

    NEW DELHI: Pakistan-based terror group Jaish-e-Mohammad, which was responsible for the killing of 40 CRPF personnel in Pulwama, had resolved in a conference more than a year ago that its “Ghazwa-e-Hind” (War Against India) will continue irrespective of Indo-Pak ties, according to an intelligence report.

    Citing the report, officials said the conference organised in Okara district in Pakistan on November 27, 2017, saw more than 2,000 participants showering praise on organisational activities of JeM and the role played by its chief Masood Azhar, the mastermind of February 14 Pulwama strike in Jammu & Kashmir, among other terror attacks in India.

    According to the intelligence report prepared on the basis of inputs from across the border, JeM resolved at the conference to continue what it called its ‘Ghazwa-e-Hind’.

    The conference was addressed by JeM leaders Abdul Rauf Asghar, Md Maqsood and Abdul Malik Tahir.

    Asghar said the Indo-Pak friendship and bilateral trade would not end ‘jihad’ as there were many youths ready to sacrifice, the report said.

    It further said that another six-day meeting, held in February 2018, saw the JeM’s ‘Shoba-e-Taaruf’ (Department of Introduction) conducting 13 interaction sessions in which 700 people, including 65 ‘Ulemas’ (religious scholars), participated.

    The JeM terrorists had carried out a suicide attack on February 10, 2018, on Indian Army’s Sunjwan camp in Jammu and Kashmir in which five Army officers were killed and many more were injured.

    Five JeM terrorists took part in the attack in which three were killed and two escaped.

    The report said it was described by the JeM as a pre-planned operation carried out on the Sunjwan Camp by JeM as part of “revenge” operations launched by the ‘Afzal Guru Shaheed Squad’ in Kashmir.

    The intelligence report also mentioned a four-day visit to Sialkot district in March 2018 of JeM’s ‘Shoba-e-Taaruf’ delegation, comprising Mujahid Abbas, Rashid Mushtaq and Abid Mehmood, during which it organised 17 sessions attended by 1,500 people, including 50 ‘Ulemas’.

    The delegation recruited 22 people for a training course and 91 for ‘Daura-e-Tafseer’ (Training on Jihad and Quran). The participants also promised to take part in religious events organised by the JeM and the ‘Ulema’ expressed satisfaction over the schedule for training prepared by JeM chief Masood Azhar.

    They also appreciated religious services rendered by Masood Azhar and prayed for JeM ‘Mujahideen’. The delegation held five separate sessions with JeM activists, which were attended by 28 ‘Ulema’ and activists, the report said.

    https://zeenews.india.com/india/jem-resolved-to-continue-jihad-against-india-intelligence-report-2184307.html

  4. ராணுவ மந்திரி அந்தோணி வேண்டுமென்றே ரபோல் போர் விமானம் வாங்கும் நடவடிக்கையை தாமதப்படுத்தினேன் என்கிறாா்.இதில் தேசிய நலன் இருக்குதாம்.
    பணம் இல்லையென்று காரணம் கூறி ரபேல் போா் விமானங்களை வாங்கவில்லை என
    வும் கூறினாா்.Refuting the claims of Congress President Rahul Gandhi that the previous government was on the verge of procuring 126 Rafale jets from France in a deal better than the one signed by current NDA regime, former Defence Minister AK Antony has said that he intentionally delayed the contract in “national interest.”
    Though Antony sought to blame the NDA for proceeding with the deal by ignoring an adverse report, his remark is at odds with Congress’s claim that UPA’s “deal” was diluted by the Modi government. The UPA, Congress has maintai- ned, was on the verge of signing a contract for 126 aircraft.
    The senior Congress leader sought to reintroduce the Rafale deal in the conversation in the wake of Prime Minister Narendra Modi’s comment that the fighter was missed in the context of Balakot attack.

    Slamming Modi’s remark that Congress delayed the deal for “commission”, Antony cited the Comptroller and Auditor General (CAG) report on the issue to say, “I delayed the deal to protect the national interest. The Prime Minister sacrificed our national interests.”

    As BJP continued to focus on “national security” with shrill attacks on Congress on the campaign trail, the AICC said the ruling party was politicising the anti-Pakistan operations with an eye on elections.
    “Don’t politicise the armed forces. Don’t drag military into politics. I request the BJP president Amit Shah, I request the prime minister, don’t politicise the army. As a former defence minister, I am telling them,” he said.

    Stressing on the issue of “politicisation”, the AICC tweeted a collage of comments, with air chief BS Dhanoa’s remark that IAF does not count the bodies pitted against those of defence minister Nirmala Sitharaman and SS Ahluwalia who said there were no figures of casualties and of BJP chief Amit Shah and Union minister VK Singh who have put the toll at above 250.

    “This is high time for the PM to answer my questions purely on the basis of the CAG report. He should answer why, ignoring the committee’s recommendation, he went to France to sign this agreement and gave all these concessions to the French government,” Antony said.
    ————————————————————————–
    ரபேல் விமானம் வாங்கியிருந்தால் போா் களம் இந்தியாவிற்கு 100 சதம் சாதகமாக இருக்கும்.கெடுத்து பாழாக்கிவிடடாா்கள் காங்கிரஸ்கோமாளிகள்.

  5. Lot of background information is given in this series of articles, for which we are grateful Yet, one is not sure of what tare the basic issues that bedevil the Rafael deal. One is unable to follow or understand the issue as it is dealt with in the mainstream media, which is usually biased, tilted and dishes out half truths and twisted statements. Yet, the reaction of Modi government is difficult to follow or justify. If everything is all right, why is the government hesitant and halting in speaking about it? If their hands are clean, why not come out more aggressively, especially now, when in the aftermath of recent military episodes, the public opinion is highly favourable? The statements of govt representatives in incomprehensible and elephantine (if also ‘Shudh’) Hindi make no sense for us, non-Hindi people. Is there no one in the govt. who can talk sense in simple English? What is the defence minister doing? Brokering deals for the elections with parties who betrayed the BJP in the past? It will not be a surprise if in the circumstances the Congress is able to carry the day on the basis of their very able advocacy and repetition of half truths and allegations.
    பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே
    மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய் போலும்மே பொய்போலும்மே

    Is the Modi govt. clean or is something rotten somewhere? After all, we do know how all the defence deals were struck since the days of Krishna Menon.

  6. மீண்டும் மோடி அரசையே குறை சொல்ல வேண்டாம்.ராகுல் மட்டும் பேசுவதற்கு ஏதும் கிடைக்கவில்லை.எனவே ரபேல் ரபேல் என்று புலம்பித் திரிகின்றாா். பல தொலைக்காட்சி ஊடகங்கள் வம்பு செய்வதில் வல்லவர்கள்.

    மோடி செய்ய தர்மம் மோடியைக் காக்கும்.

  7. ஒரு போர்விமானியை உருவாக்கும் செலவை இது கணக்கில் கொள்ளவில்லைபோலும். மேலும் அவரது உயிரின்விலை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *