Daily Archives: June 13, 2019

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2

வெற்றி பெற்ற சிங்களப்படை பின்னர் மதுரையை நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றுகிறது. கொலையுண்ட வீரபாண்டியனின் மகனை பாண்டிய நாட்டுக்கு பொறுப்பாளனாக்குகிறது சிங்களப்படை. அதனைத் தொடர்ந்து, குலசேகர பாண்டியனுக்கு உதவிகள் செய்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் சிங்களப்படைகளுக்கு அடிபணிகிறார்கள்.. லங்கபுரவின் மாபெரும் வெற்றியைக் கவுரவிக்கும் பொருட்டு பராக்கிரமபாகுவே நேரில் வந்து அவரை வரவேற்கிறான். இப்படியாக இலைங்கைப் போர் வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறுகிறது இலங்கை மஹாவம்ச வரலாறு. எனினும், இந்த வரலாறு முழுமையான ஒன்றல்ல. இலங்கையரின் நோக்கில் எழுதப்பட்ட ஒருதலைப்பட்சமான இந்த வரலாறு ஒரு பெரும் காதையைப் போல எழுதப்பட்ட ஒன்று. அதனைக் குறித்து தொடர்ந்து காண்போம்....... [மேலும்..»]