நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்

மூலம்: ஸ்ரீ மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி அருளிச் செய்த நாராயணீயம், நூறாவது தசகம். குருவாயூரப்பன் கேசாதி பாத வர்ணனை.

தமிழில்: அரங்க. இரகுநாதன்

அக்³ரே பஶ்யாமி தேஜோ நிபி³ட³தரகலாயாவலீலோப⁴நீயம்
பீயூஷாப்லாவிதோঽஹம் தத³நு தது³த³ரே தி³வ்யகைஶோரவேஷம் ।
தாருண்யாரம்ப⁴ரம்யம் பரமஸுக²ரஸாஸ்வாத³ரோமாஞ்சிதாங்கை³-
ராவீதம் நாரதா³த்³யைவிலஸது³பநிஷத்ஸுந்த³ரீமண்ட³லைஶ்ச ॥ 100-1॥

கலய மலரிணர் அனைய ஒளிச்சுழல்
நறவில் குளிக்கிறேன் ஐயனே
இளமை மயக்குறு வடிவில் முனிவரும்
முடிகள் சிலிர்க்கிறார் அப்பனே
ஒளிரும் நிடதமாம் வனிதை குழுமிடும்
மகிழ்வை ருசிக்கிறாய் ஈசனே
எளியன் அடியவன் உனது திருஉரு
எழிலில் கிறங்கிடும் பக்தனே;

நீலாப⁴ம் குஞ்சிதாக்³ரம் க⁴நமமலதரம் ஸம்யதம் சாருப⁴ங்க்³யா
ரத்நோத்தம்ஸாபி⁴ராமம் வலயிதமுத³யச்சந்த்³ரகை: பிஞ்ச²ஜாலை: ।
மந்தா³ரஸ்ரங்நிவீதம் தவ ப்ருʼது²கப³ரீபா⁴ரமாலோகயேঽஹம்
ஸ்நிக்³த⁴ஶ்வேதோர்த்⁴வபுண்ட்³ராமபி ச ஸுலலிதாம் பா²லபா³லேந்து³வீதீ²ம் ॥ 100-2॥

இணரின் அழகொடு ஒளிரும் நயனமும்
விளங்கு மயில்தரும் பீலியும்
மணிகள் பதியுநல் தலையின் அணிகளும்
மந்தார மலரணி கூந்தலும்
புணரும் கருநிறம் நுனியில் சுருண்டநல்
அடர்ந்த குழலதன் கற்றையும்
மணக்கும் அகிலோடு மயக்கும் ஒண்நுதல்
பிறையின் நிலவணி மோகனா!

ஹ்ருʼத்³யம் பூர்ணாநுகம்பார்ணவம்ருʼது³லஹரீசஞ்சலப்⁴ரூவிலாஸை-
ராநீலஸ்நிக்³த⁴பக்ஷ்மாவலிபரிலஸிதம் நேத்ரயுக்³மம் விபோ⁴ தே ।
ஸாந்த்³ரச்சா²யம் விஶாலாருணகமலத³லாகாரமாமுக்³த⁴தாரம்
காருண்யாலோகலீலாஶிஶிரிதபு⁴வநம் க்ஷிப்யதாம் மய்யநாதே² ॥ 100-3॥

சிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர்
ஒளிரும் கண்களாம் மலரிலே
பரந்த கடலதன் சிறிய அலைச்சுழல்
அனைய அலைக்குறும் புருவமும்
கவரும் அருட்கணின் குவிர்ந்த விழிகளில்
கருணை கருமணி அழகுடன்
உவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா
கடையன் விழைகிறேன் அருளுவாய்.

உத்துங்கோ³ல்லாஸிநாஸம் ஹரிமணிமுகுரப்ரோல்லஸத்³க³ண்ட³பாலீ-
வ்யாலோலத்கர்ணபாஶாஞ்சிதமகரமணீகுண்ட³லத்³வந்த்³வதீ³ப்ரம் ।
உந்மீலத்³த³ந்தபங்க்திஸ்பு²ரத³ருணதரச்சா²யபி³ம்பா³த⁴ராந்த:-
ப்ரீதிப்ரஸ்யந்தி³மந்த³ஸ்மிதமது⁴ரதரம் வக்த்ரமுத்³பா⁴ஸதாம் மே ॥ 100-4॥

மகர வடிவினில் அழகுச் செவிகளாம்
இரண்டில் பளிச்சிடும் நீலமும்,
முகரும் நெடியதாம் மயக்கு நாசியும்,
பவழ இதழ்களில் தோன்றிடும்
மிகவும் குளுமையாய் புலரும் முறுவலும்,
விலகும் இதழிடை ஒளியுறும்
தகவு பற்களும் திகழும் எழில்முகம்
களிக்க எனக்குநீ காட்டுவாய்.

பா³ஹுத்³வந்த்³வேந ரத்நோஜ்ஜ்வலவலயப்⁴ருʼதா ஶோணபாணிப்ரவாலே-
நோபாத்தாம் வேணுநாலீம் ப்ரஸ்ருʼதநக²மயூகா²ங்கு³லீஸங்க³ஶாராம் ।
க்ருʼத்வா வக்த்ராரவிந்த்³ரே ஸுமது⁴ரவிகஸத்³ராக³முத்³பா⁴வ்யமாநை:
ஶப்³த³ப்³ரஹ்மாம்ருʼதைஸ்த்வம் ஶிஶிரிதபு⁴வநைஸ்ஸிஞ்ச மே கர்ணவீதீ²ம் ॥ 100-5॥

வயிர மணிபதி வளையல் வகையுறும்
இளைய குருத்தெனச் சிவந்திடும்
துயர றுப்பவன் மிகவும் எழிலுறும்
நெடிய நகமுடை விரல்களும்
ஒயிலின் இருகரம் வனஜ இதழ்களில்
வருடும் குழலதன் வெளிவரும்
மயக்கும் இசையொளி இயக்கிக் குளிர்செயும்
சுவையின் அமுதமென் செவியுறும்.

உத்ஸர்பத்கௌஸ்துப⁴ஶ்ரீததிபி⁴ரருணிதம் கோமலம் கண்ட²தே³ஶம்
வக்ஷ: ஶ்ரீவத்ஸரம்யம் தரலதரஸமுத்³தீ³ப்ரஹாரப்ரதாநம் ।
நாநாவர்ணப்ரஸூநாவலிகிஸலயிநீம் வந்யமாலாம் விலோல-
ல்லோலம்பா³ம் லம்ப³மாநாமுரஸி தவ ததா² பா⁴வயே ரத்நமாலாம் ॥ 100-6॥

அணியும் கௌத்துபம் அவிக்கும் சிவப்பொளி
கதிரில் சிவப்பும் கழுத்திடை
இணையும் நித்திலம் இழைத்த மாலையும்
இனிய மார்பினில் அணிந்திடும்
மணிகள் பதித்தநல்அணிசெய் கழுத்தினில்
பணீக்கள் மொய்மலர் மாலையும்
பணியும் அடியவன் பாழுளம் இருத்தியே
பரவிக் களித்திட வைத்திடு.

அங்கே³ பஞ்சாங்க³ராகை³ரதிஶயவிகஸத்ஸௌரபா⁴க்ருʼஷ்டலோகம்
லீநாநேகத்ரிலோகீவிததிமபி க்ருʼஶாம் பி³ப்⁴ரதம் மத்⁴யவல்லீம் ।
ஶக்ராஶ்மந்யஸ்ததப்தோஜ்வலகநகநிப⁴ம் பீதசேலம் த³தா⁴நம்
த்⁴யாயாமோ தீ³ப்தரஶ்மிஸ்பு²டமணிரஶநாகிங்கி³ணீமண்டி³தம் த்வாம் ॥ 100-7॥

களபம் அகிலொடு கலக்கும் நறுமணம்
உலகம் மயக்குறு வாசமும்
புளகம் அளித்திட ஒலிக்கும் கிண்கிணி
இடையின் அணிகளால் எழிலுறும்
அழகு கருமணி இழைத்த பொன்னணி
ஒத்த மஞ்சள்பட் டாடையும்
உலகு மூன்றுமே உறைந்தும் சிறுத்தநல்
அழகு இடையினை உள்ளுவன்.

ஊரூ சாரூ தவோரூ க⁴நமஸ்ருʼணருசௌ சித்தசோரௌ ரமாயா
விஶ்வக்ஷோப⁴ம் விஶங்க்ய த்⁴ருவமநிஶமுபௌ⁴ பீதசேலாவ்ருʼதாங்கௌ³ ।
ஆநம்ராணாம் புரஸ்தாந்ந்யஸநத்⁴ருʼதஸமஸ்தார்த²பாலீஸமுத்³க³-
ச்சா²யாம் ஜாநுத்³வயம் ச க்ரமப்ருʼது²லமநோஜ்ஞே ச ஜங்கே⁴ நிஷேவே ॥ 100-8॥

தங்க நிறமுடன் மங்கை இலக்குமி
மயங்கு மஞ்சள்நல் ஆடையும்
அண்டம் நிலைகுலை அழலில் ஒளிர்ந்திடும்
பருத்த கவினுறு தொடைகளும்
நெஞ்சம் கெழுமிய விழைவு பேழையாய்
இலங்கும் இருமுழங் கைகளும்
விஞ்சும் எழில்நிறை கெண்டை கால்களும்
என்னுள மிருத்திநான் மகிழ்கிறேன்

மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை³ரிவ பத³ப⁴ஜநம் ஶ்ரேய இத்யாலபந்தம்
பாதா³க்³ரம் ப்⁴ராந்திமஜ்ஜத்ப்ரணதஜநமநோமந்த³ரோத்³தா⁴ரகூர்மம் ।
உத்துங்கா³தாம்ரராஜந்நக²ரஹிமகரஜ்யோத்ஸ்நயா சாঽஶ்ரிதாநாம்
ஸந்தாபத்⁴வாந்தஹந்த்ரீம் ததிமநுகலயே மங்க³ளாமங்கு³லீநாம் ॥ 100-9॥

உந்தன் அடிமையே உய்ந்தன மென்றுணர்
சிந்தும் மெல்லொலி சிறுகுழல்
எந்தன் பகவனுன் விந்தை அடியவர்
சிந்தை நிறைந்திடு மாலைகள்
மந்தார மாலைகள் உந்தி ஏந்திடும்
அந்த ஆமையிின் வடிவுறும்
உந்தன் அடிநுனி சிந்தும் நிலவொளி
சிந்தை அந்தகம் நீங்கிடும்.

யோகீ³ந்த்³ராணாம் த்வத³ங்கே³ஷ்வதி⁴கஸுமது⁴ரம் முக்திபா⁴ஜாம் நிவாஸோ
ப⁴க்தாநாம் காமவர்ஷத்³யுதருகிஸலயம் நாத² தே பாத³மூலம் ।
நித்யம் சித்தஸ்தி²தம் மே பவநபுரபதே க்ருʼஷ்ண காருண்யஸிந்தோ⁴
ஹ்ருʼத்வா நி:ஶேஷதாபாந்ப்ரதி³ஶது பரமாநந்த³ஸந்தோ³ஹலக்ஷ்மீம் ॥ 100-10॥

கண்ணன் திருவடி எண்ணும் முனிவரர்
மன்னும் முக்தருன் உறையுளே.
நண்ணும் அடியவர் உன்னும் விழைவுகள்
திண்ணம் அருளிடம் விண்மர-
மென்மைக் குருத்தென மின்னும் உன்னிணை
என்றும்பற்றிடும் அன்பினன்
துன்பம் அழித்தெனக் கின்ப சிகரமே
அருள்குரு வாயூ ரப்பனே!

அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதி³ஹ நிக³தி³தம் விஶ்வநாத² க்ஷமேதா:²
ஸ்தோத்ரம் சைதத்ஸஹஸ்ரோத்தரமதி⁴கதரம் த்வத்ப்ரஸாதா³ய பூ⁴யாத் ।
த்³வேதா⁴ நாராயணீயம் ஶ்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதாவர்ணநேந
ஸ்பீ²தம் லீலாவதாரைரித³மிஹ குருதாமாயுராரோக்³யஸௌக்²யம் ॥ 100-11॥

உனது மேன்மைகள் முழுதும் அறிகிலேன்
எழுது மிவையெலாம் பொறுத்தருள்.
உனது பெருமைகள் புகழும் ஆயிரம்
கவிதை நூலிதை அருளுவாய்.
உனது திருவவ தார முழுமையும்
மறைகள் உரைவழி ஆக்கினேன்
மனது களிப்புற உடலும் நலமுறச்
செய்த நாரா யணீய மே.

2 Replies to “நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்”

  1. அருமையான பதிவு. இவைபோன்ற பதிவுகளை அடிக்கடி தமிழ்ஹிந்துவில் காணமாட்டோமா என எண்ணம் எழுகின்றது.
    தங்கள் ஆன்மீகப்பணி தொடரட்டும்.

  2. நாராயணீயம் தமிழ் அர்த்தம் 1036 ஸ்லோகங்களுடன் எப்படி download பண்ணுவது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *