கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி!

கோவையில் செயல்படும் சமுதாய நல்லிணக்கப் பேரவை ஓர் அற்புத முயற்சியை மேற்கொண்டு, சாதித்துக் காட்டி இருக்கிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஹிந்து சமுதாயத்தின் அனைத்து ஜாதி/ சமூக அமைப்புகளையும் தொடர்புகொண்டு ஆதரவு திரட்டும் அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது.
இதுவரை 37 சமூக அமைப்புகளின் ஆதரவுக் கடிதத்தைப் பெற்று மாநில முதல்வருக்கும், ஆளுநருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி உள்ளது இந்த அமைப்பு.
ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும்!

அந்தக் கடிதம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…

கோவை- 18.03.2020

பெறுநர்:

மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு,  சென்னை.                          

பொருள்:

இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அனைத்து சமுதாயத்தினர் சார்பில் ஆதரவு தெரிவித்தல்; இஸ்லாமியர்களின் தொடர் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுகோள்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள் உள்ளிட்டோர் அந்த நாடுகளிலிருந்து தப்பி உயிர்வாழ தங்கள் பூர்விகத் தாயகமான இந்தியாவுக்கு வருகின்றனர். அவ்வாறு அகதிகளாக வருவோரைக் காப்பது நமது கடமையாகும், அதற்காகவே இந்திய அரசு, முஸ்லிம் நாடுகளிலிருந்து தப்பி வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் 1955ஆம் வருடத்திய குடியுரிமை சட்டத்தில் 2019ஆம் ஆண்டு திருத்தம் செய்து சட்டமாக்கியது. 

ஆனால், இந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 குறித்து தவறான தகவல்கள் எதிர்க்கட்சியினரால் பரப்பப்படுவதால் நமது மாநிலத்தில் சில பிரச்னைகள் நேரிட்டுள்ளன. எதிர்க்கட்சியினரின் விஷமத்தனமான துஷ்பிரசாரத்தை நம்பி, நமது நாட்டின் சிறுபான்மை சமுதாயத்தினரான இஸ்லாமியர்கள் பல இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களில், அரசின் வேண்டுகோளை மீறி, காவல் துறையின் அனுமதியைப் பெறாமலேயே, தடையை மீறி, பொது இடங்களில் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்ட அரங்குகளில் இந்து சமயத்தை இழிவுபடுத்தியும், மத்திய- மாநில அரசுகளுக்கு களங்கம் கற்பித்தும், தேசவிரோதமாகவும் முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. இதனால், சமூக ஒருமைப்பாடு குலைகிறது.

மாநிலத்தின் பல இடங்களில் இந்தப் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அமைதியான தமிழகத்தில் கலவரச்சூழல் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினரின் அரசியல் ஆசைகளுக்காக, சிறுபான்மையின மக்கள் அரசுக்கு எதிராக திசை திருப்பப்பட்டுள்ளனர்.

“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சி.ஏ.ஏ.) இந்தியாவில் வாழும் குடிமக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்; குறிப்பாக இந்திய இஸ்லாமியர்கள் எவரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். இந்தச் சட்டம் முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்துள்ள அந்த நாடுகளின் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்குவதுதானே தவிர, இந்தியாவில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிப்பதல்ல’’ என்று மத்திய அரசும் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் பலமுறை விளக்கம் அளித்தபோதும், போராட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுக்கிறார்கள். மாநிலத்தின் அமைதியைக் குலைக்க விரும்பும் சக்திகள் அவர்களைப் பின்னணியிலிருந்து இயக்குகின்றன. எனவேதான், தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகளை (என்.பி.ஆர்.) நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதை ஏற்று தமிழக அரசும் தற்காலிக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு பணிகளை நிறுத்துவது தவறாகும். இந்த அறிவிப்பை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழக அரசின் பல வேண்டுகோள்களை மீறி, இஸ்லாமிய அமைப்பினர் தங்கள் போராட்டத்தைத் தொடர்கிறார்கள். இந்தப் போராட்டங்களில் ஈடுபடுவோர், அந்த வழியில் செல்லும் பொதுமக்களையும் காவல் துறையினரையும் மிரட்டுவது வாடிக்கையாக உள்ளது. இஸ்லாமிய சகோதரர்கள் தவறான வழிகாட்டுதலுக்கு ஆட்பட்டு முறையற்ற போராட்டங்களில் ஈடுபடுவதால், ஹிந்து- முஸ்லிம் மக்களிடையே இணக்கமான சூழல் கெட்டு வருகிறது. இது தமிழகத்துக்கு நல்லதல்ல.

எனவே, இத்தகைய போராட்டங்களை ஒடுக்க மாநில அரசும் காவல் துறையும் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என சமுதாய நல்லிணக்கப் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ‘குடியுரிமை திருத்தச் சட்டம்-2019’ இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்பதை சமுதாய நல்லிணக்கப் பேரவை மீண்டும் வலியுறுத்துகிறது. இதனை இஸ்லாமியர்களுக்கு உணர்த்த அமைதிக் கூட்டங்களை நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

மேற்படி கோரிக்கைகளை, இந்து சமுதாயத்தில் உள்ள பல்வேறு ஜாதிப் பிரிவுகளைச் சார்ந்த சமூக அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. அந்த அமைப்புகளின் நிர்வாகிகள் அளித்துள்ள கடிதங்களை இத்துடன் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் அமைப்புகள்:

01. 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயம்

02. அகில பாரத பிராமணர் சங்கம்

03. அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்

04. அய்யா வைகுண்டர் திருப்பதி- கோவை

05. போயர் சமுதாயம்

06. தலித் சேனா

07. தேசிய தளபதி சுந்தரலிங்க தேவேந்திரனார் பாசறை.

08. தேவாங்கர் சங்கம்

09. தேவேந்திரகுல வேளாளர் சங்கம்

10. தேவேந்திரகுல வேளாளர் பேரவை

11. கம்மாளர் பாதுகாப்பு பேரவை

12. கவர இன முன்னேற்ற சங்கம்

13. கோவை மாவட்ட யாதவர் பண்பாட்டுக் கழகம்

14. தமிழ்நாடு பூலுவக் கவுண்டர் சமூகநல சங்கம்

15. கோவை மாவட்ட சலவைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்

16. கோவை மாவட்டத் தேவர் பேரவை

17. கோவை மாவட்ட யாதவர் பேரவை

18. நாடார் மக்கள் மன்றம், தமிழ்நாடு

19. நமது கொங்கு முன்னேற்ற கழகம்

20. நாயுடு சமூகநலச் சங்கம்

21. பாலையநாட்டு வல்லம்பர் பேரவை

22. ராஷ்ட்ரீய ஸனாதன சேவா சங்கம்

23. சைவப் பெருமக்கள் பேரவை- கோவை

24. சிங்காநல்லூர் நாயர் சர்வீஸ் சொஸைட்டி

25. சித்தாபுதூர் சி.எம்.சி. காலனி, துப்புரவுப் பணியாளர் நலச் சங்கம்

26. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி தேவாங்கர் இளைஞர் மன்றம்

27. தமிழ்நாடு ஈழவ தீயா சேவா சமாஜம்

28. தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம்- கோவை

29. தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம்- பழனி

30. தமிழ்நாடு குறும்ப மக்கள் முன்னேற்ற சங்கம்

31. தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் பேரவை

32. தமிழக தலைமை அகமுடையார் சங்கம்

33. தெலுங்குபாளையம் பார்கவ குல இளைஞர் சங்கம்

34. தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சங்கம்

35. உப்பிலிய நாயக்கர் முன்னேற்ற சங்கம்

36. வன்னியகுல ஷத்திரியர் சங்கம்

37. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்.

சமுதாய ஒற்றுமை என்பது மனப்பூர்வமான ஒருங்கிணைப்பால் மட்டுமே சாத்தியமாகும். அரசியல் கண்ணோட்டமின்றி, தேசநலனை மட்டும் கருத்தில் கொண்டு, உள்ளன்போடு முயன்றால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தமிழகத்தில் அமைதி திரும்ப அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கு முன்னர், மக்களிடையே பேதம் வளர்க்கும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

இணைப்புகள்:

சமுதாய அமைப்புகள் வழங்கியுள்ள கடிதங்களின் நகல்கள்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

(மு.சிவலிங்கம்)

நகல்கள்:

மேதகு ஆளுநர், தமிழ்நாடு அரசு, சென்னை.

உயர்திரு. மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்.  

.  

One Reply to “கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி!”

  1. சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இது ஒரு துவக்க புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன். கோவையில் இவர்கள் செய்ததை போல தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் நகரங்களிலும் இந்த ஒருங்கிணைப்பு பணியானது நடக்க வேண்டும்.
    இப்பணியினை செய்த சமுதாய நல்லிணக்க பேரவை கோவை பொறுப்பாளர் சிவலிங்கம் அவர்களுக்கும் அவருடன் இணைந்து பணிபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

    இச்செய்தியினை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய தமிழ்ஹிந்து விற்கும் அதன் ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றி மகிழ்ச்சி.
    உங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

    ப்ரத்யுஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *