தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்

தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் அவர்களுக்கு தமிழ்ஹிந்து தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

பதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 5வது தேசிய பட்டியல் சமுதாய ஆணைய (National Commission for Scheduled Castes) துணைத்தலைவராக செயலாற்றி வருபவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்.

சாமானியர்களை ஜனநாயகத்தின் தலைமைப் பீடத்தில் அமர்த்தும் கொள்கையுடைய கட்சி என்ற தனது மதிப்பை இதன் மூலம் பாஜக மீண்டும் ஒருமுறை நிறுவியிருக்கிறது.

தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் சுமுகமாக ஒருங்கிணைத்து சிறந்த தலைவராக கட்சிக்கும் நாட்டிற்கும் முருகன்ஜி பணியாற்ற வாழ்த்துக்கள்.

*******

“பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்கும் குற்றத்தை பாஜக மீண்டும் மீண்டும் செய்யும் என்கிறேன்.

பட்டியலினத்திலிருந்து விடிவெள்ளியாய் என் சகோதர சகோதரிகளுக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் அதிகாரத்தை வென்று கொடுக்கும் தகுதியுள்ள தலைவர்கள் பாஜகவில் தான் இருக்கிறார்கள். பட்டியலின மக்களுக்கு நில அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க இருக்கும் இரண்டு மாபெரும் ஆளுமைகள். தடா. பெரியசாமி, அவர்களும், Venkatesan Ma இங்கிருக்கிறார்கள். இவர்கள் நம் சம காலத்தின் தளர்வறியா போராளிகள். இவர்கள் இருவரும் தமிழக அரசியலில் தற்போது இருக்கும் எந்த கட்சியின் தலைவர்களையும் விட திறமையும், கம்பேஷனும், செயல் திறனும், ஒருங்கிணைக்கும் பண்பும், ஆக்கபூர்வமான திட்டமும் உடையவர்கள்.

இவர்கள் மூலம் தமிழகத்தில் உள்ள பட்டியலின சகோதர்களை அரசியல் படுத்தவும், கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமல்லாமல் அரசியல் அதிகாரத்தில் உரிய பிரதிநிதி த்துவம் பெற வைக்கவும் ஆவண செய்ய இருக்கிறார்கள். இவர்களோடு புதிய மாநிலத்தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன்மூர்த்தி, வானமாமலை, ஜான்பாண்டியன் துவங்கி அனைத்து சமூகத்தலைவர்களிடையேயும் ஒற்றுமையையும் , ஒருங்கிணைப்பையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்த இருக்கிறார்கள். பட்டியலின மக்களை ஒன்று திரட்டிய இந்து சக்தியின் முக்கிய தலைவர்களாக்கி அவர்களுக்கு அனைத்து மக்களின் முன் அதிகாரம் மிக்கவர்களாகவும், நில உடைமையாளர்களாகவும், கல்வியாளர்களாகவும், தொழில் முனைவோராகவும் முன்னிறுத்த முயற்சிக்க இருக்கிறார்கள். இம்மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்காமல் அவர்களை அரசியல் சக்தியாக ஒன்று திரட்டி அதிகாரத்தை வென்றெடுக்க பாஜக துணை நிற்கிறது. சுதந்திர இந்தியாவில் அதிகப்படியான பட்டியலின எம் பிக்களையும், எம் எல் ஏக்களையும், மத்திய அமைச்சர்களையும் கொண்ட முண்ணணி அரசாக மோடி அரசு இருக்கிறது. 1000 சொற்களை விட ஒரு உணர்வு பூர்வமான செயல் உன்னதமானது என்று மோடி அரசாங்கம் நம்புகிறது. சமூக நீதி, அரசியல் அதிகாரம் ஆகியவைகளை ஏட்டிலிருந்து களத்திற்கு கொண்டு வந்து அதிகாரப்பரவலை அனைவருக்குமானதாக மாற்றுகிறது. ஒன்றுபட்ட இந்திய சமூக வளர்ச்சிக்கான காலடிகளை உத்வேகத்துடன் எடுத்து வைத்து முன் செல்கிறது பாஜக”.

– வீர.ராஜமாணிக்கம் ஃபேஸ்புக் பதிவு

6 Replies to “தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்”

  1. அருமையான தோ்வு. வாழ்த்துக்கள். இந்து கோவில்களை தன்னாட்சி பெற்ற அமைப்பிடம் கொண்டு சேர்க்கும் பணியை பாரதிய ஜனதா அரசு முன்னிலைப்படுத்த வேண்டும். 1000 ஆண்டுகால அடிமை வாழ்வுஇந்துக்களை பாழாக்கிவிட்டது. இதற்கு நல்ல நிவாரணம் பெற வேண்டும். சாமியாட்டு தீமிதி பல சிலைகள் போன்ற பழக்க வழக்கங்களை ஒழித்து சத்தான சமய பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள வழி எற்படுத்த வேண்டும்.
    இந்து கோவில் செல்வங்கள் இந்த திசை நோக்கி திசை திருப்பப்பட தன்னாட்சி பெற்ற நிா்வாகம் தேவை. சாதிக்க வேண்டும்.நானும் வருகின்றேன்.சாதிப்போம்.

    அதிமுக விற்கு ஒத்து ஊதும் வேலையை மட்டும் செய்து திருப்தி அடைந்தால் ..பாரதிய ஜனதாவிற்கு எதிா்காலம் இருக்காது.

  2. இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அப்படியேதான் இருந்தாலும் என்ன பிழை? அதைக் கூட பல கட்சிகள் செய்ய முன்வருவதில்லை. மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
    .

  3. Sri Murugan was selected on the basis of his talent and his experience. It is an insult to classify him that he is from a backward class section of the society. All leaders should be selected on the basis of their talent and capability and nothing else. No religion, caste or Jatis!

  4. If he is as good a leader as he is portrayed to be, he should start an open and honest discussion the draconian provisions in the SC/ST act and the misuse of the same. It is exacerbating the rifts between BC and MBC people and SC/ST people. It is up to Dalit leaders like Murugan to start this conversation, as any efforts by people from other castes might be seen as an act of privilege and aggression, which is unfortunate.

  5. //It is up to Dalit leaders like Murugan to start this conversation, ///

    Murugan is not a dalit leader; he has been selected to the post of BJP leader for the State of Tamil Nadu, who happens to be a dalit (pl. note, only ‘dalit’, not ‘dalit leader’). Dalit leaders are Thirumavalavan, Dr Krishnasamy and others. That is, they have their own parties for their respective caste. In other words, they are caste leaders whereas Murugan is a BJP leader – for the whole population of TN.

    If Murugan broaches the subject of diluting the SC and ST (Prevention of Atrocities) Act 1989 to BJP HQRS, they won’t even discuss it with him: they will summarily remove him from the post! If someone indeed attempts to make him go against the Act, as this writer hiding under the nick Unknown Man does, that would be like Chruchil telling British Parliament, when MPs asked him to consider the freedom of colonies from the Empire,

    ”I have not become the King’s First Minister in order to preside over the liquidation of the British Empire,”

    In other words, Murugan should say abruptly to such persons as this Unknown unknown,:

    ”I have not become BJP leader of TN to liquidate BJP in TN. I have become to draw all people to BJP, most importantly, as the above article emphsises which the Unknown Man regrettably misses, the SCs and STs – whose vote banks have been consistently antoganised by the noisy local BJP leaders.”

    The result is all of them have been voting against BJP.

    ‘The Unknown Man” also misses an obvious fact that the Act is for India, as a whole, not for TN alone. If some SCs and STs abuse the Act in TN, it should not follow that the Act is abused all over India.

    The atrocities against the two castes are not being reported in India as often as in the past and that is due to this Act. When atrocities perpertrated, it is the only legal remedy available to the victims because, as per the data got through RTI, the police do not register the cases when the victims approach them and the percetage of refusal is high.

    If you amend it so as to make it a toothless tiger, the SCs and STs will have nowhere to go and it will be a field day for their oppressers. For that matter, every Act is abused and can be abused, for e.g Dowry Prohibition Act, Sexual Harassment Act. If you abolish these Acts that protect the women, the rapists will continue to go on rampage of rapes and murdes of women and brides will be burnt in the kitchens or commit suicide.

    The article emphaises that he has a duty towards SCs and STs, or rather, (in my view), the SCs and STs of TN, look forward to him, and the article says by ingratiating to the hearts of the TN SCs and STs, he could bring them back to BJP, thereby a substantial votebank which can decide the destiny of TN BJP. (At present, BJP is losing their vote banks as a lot).

    Further, the article points out that he was the National Secretary of BJP SC/ST Cell for years, and the article concludes, that that pan-India experience would definitely help him in performing as BJP TN Chief. What the article has not said, I am saying now: Murugan must have been receiving as the National Secretary, stream of petitions from across India about the atrocities and other kinds of victimisation, and the conditions of SCs and STs and the callousness of the governments in northern States, must have shociked him. All this would have broadened his vision, in so far as SCs and STs are concerned. A vision that is not gained by the Unknown Man because he has seen only only TN.

    All the best to Muruganji, the name by which he was known as the said National Secretary.

  6. BSV,

    Where did I talk about abolishing the SC/ST act? Could you point it out please? My issue with the act is that it goes against the very concept of justice – the burden of proving one’s innocence is placed on the person who is accused of the crime, not the state. In other words, I could accuse you of something, and it is up to you to prove that you did not do anything wrong. I don’t have to prove that you actually did what I accuse you of. If you can’t see how perverted this is, I can’t help you.

    And mark my words – the SC/ST act – just like the atrocious 498(a) act – is only worsening the fault lines that exist in our society. They will do nothing to improve the relations between SC/ST people and BC/OBC people.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *