லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?

இப்போது அரசு பம்பிப் பதுங்கும் நிலையை சாதகமாக்கி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை ஒன்றிணைத்து, ஊழலுக்கு எதிரான போரை முனை மழுங்காமல் காத்தால் தான் இறுதி வெற்றி கிடைக்கும். இதையே அண்ணா ஹசாரேவிடம் நாடு எதிர்பார்க்கிறது….

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்

மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது… பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா?… மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்…

அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்

ஆழத்தில் இருக்கும் பெட்டியை அவரால் தான் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்…. ஊழல் செய்த நபர்களை விட்டுவிட்டு வெறும் ஊழலுக்கு எதிராக எனும் வசதியான நிலைப்பாட்டை உருவாக்குவதை பார்க்கிறேன்…எல்லா பெரும்போராட்டங்களுக்கு பிண்ணணியிலும் ஒரு திரைமறைவு ஆட்டம் இருக்கத்தான் செய்யும்…சிவில் சொசைட்டி பஜனை கேட்கும் இடத்திலெல்லாம் உணர்ச்சி வசப்படாமல் உன்னிப்பாக அதன் போக்கை கவனிப்பது நல்லது..

அண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது?

அண்ணா தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் மன்மோகன் சிங் மட்டும்…. பிரச்சினை, பொதுமக்கள் ஊமைகள் என்பதல்ல. சட்டத்தின் காவலர்கள் செவிடாகியிருக்கிறார்கள் என்பது தான்…நிறுவனங்களையும், செல்வந்தர்களையும் விடவும் ஊழல் இந்த ஏழைகளைத்தான் மிக அதிகமாகப் பாதிக்கிறது… நடுத்தர வர்க்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையேயான கண்ணியமான சமூக ஒப்பந்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது… [மூலம்: பேரா.ஆர்.வைத்தியநாதன்]

ஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…

அண்ணா ஹசாரே ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், நேற்று (ஜூலை 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார். திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன. சுதந்திர இந்தியாவில் இருந்த அரசுகளிலேயே மிகவும் ஊழல்மயமான அரசு என்று பெயர் பெற்றுவிட்ட மன்மோகன் சிங் அரசு இப்போது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தி வென்றிருக்கிறது. அவர் மீதும் குற்றம் சாட்டி இருக்கின்றனர் ஹசாரே குழுவினர். இதுதான் இப்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்

திக்விஜய் சிங் என்பவருக்கு “ஆர்.எஸ்.எஸ்ஸோஃபோபியா” என்கிற வியாதி போல இருக்கிறது. சிறு குழந்தைகளை மிரட்டுவதற்குச் சில பெரியவர்கள், பூச்சாண்டி என்பார்கள் அதுபோல அடிக்கடி அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.ஆள் என்கிறார். இருக்கட்டுமே. ஒருவர் ஊழலை எதிர்த்துப் போராடுகிறார், அப்படிப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்லது அனுதாபி என்றால் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஊழலை எதிர்க்கிறது என்பது பொருள். அல்லது ஊழலை எதிர்ப்பவரை ஆதரிக்கிறது என்று போருள். இவருக்கு ஏன் இப்படி அடிவயிறு கலங்குகிறது. ஊழலில் ஊறித்திளைத்த இந்தக் கும்பல் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி காட்டிவிட்டால், அடடா! என்ன இது? இந்த ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பயங்கரவாத தேசவிரோதக் கும்பல் என்று மக்கள் நினைத்து விடுவார்கள் என்று இவர் எண்ணுகிறார்போல் இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு…. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது….

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

ஜனலோக்பால் இயக்கத்திற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக கேஜ்ரிவால் பயன்படுத்துவதாகவும் கூட அண்ணா குற்றம் சாட்டினார். அதெல்லாம் பழைய கதை. இப்போது கேஜ்ரிவால் பெற்றுள்ள வெற்றி அண்ணாவையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ‘நான் தில்லியில் பிரசாரம் செய்திருந்தால் அரவிந்த் முதல்வராகி இருப்பார்’ என்று இப்போது கூறுகிறார் அண்ணா. வெற்றி, மனிதர்களை எப்படி மாற்றி விடுகிறது…, பாஜகவின் வழக்கமான ஆதரவாளர்கள் கூட உள்கட்சிப் பூசல்களால் வெறுத்துப் போயிருந்தனர். இந்த சமயத்தில் டாக்டர் ஹர்ஷவர்த்தனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மோடி சூறாவளிப் பிரசாரம் செய்ததால் தான், பாஜக மயிரிழையில் முன்னணி பெற்று மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளது… தில்லியில் மறுதேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான புள்ளிவிவரங்கள் இவை. இந்தியா டுடே- சி.வோட்டர் அமைப்பு நடத்திய ஆய்விலும் இதுவே தெளிவாகி உள்ளது. இதை ஏற்க மனமின்றி பல ஊடகங்களும் பாஜகவை குறைவாக மதிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றன….

ஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்

ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption) அமைப்பின் தன்னார்வலர் தில்லிக் காரர் கௌரவ் ஷர்மா இந்தக் கேள்விகளை எழுப்புகிறார் – நீங்கள் பயங்கரவாதிகளை ஆதரிப்பவரா? இல்லை என்றால், எப்படி உச்சநீதி மன்றத்தில் பயங்கரவாதிகளின் வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டிருப்பவரை நிறுவனராகக் கொண்ட கட்சியை ஆதரிக்கிறீர்கள்?… வகுப்புவாதத்தையும் வாக்கு வங்கி அரசியலையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? உ.பி பரெய்லி மதக்கலவரங்களில் நேரடியாக ஈடுபட்ட, பங்களாதேஷி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்ய ஃபத்வா வெளியிட்ட மௌலானா தவ்கீர் ரஜா என்பவரிடம் பிச்சை கேட்காத குறையாக்க் கெஞ்சினார் அர்விந்த் கேஜ்ரிவால். அவரை எப்படி ஆதரிக்கிறீர்கள்?…

ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?

அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை? தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது? இதில் உச்சபட்ச நகைச்சுவை, பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக சோனியா அம்மையார் முழங்கி இருப்பது தான். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறெல்லாம் அமளியில் ஈடுபட்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.