முகப்பு »

அறிமுகம்


தமிழரின் தாய் மதம் இந்துவரையறையில்லாத இறையைப் போன்றதே இந்துமதமும். அனைத்தையும் அரவணைத்து, எதன் மீதும் வெறுப்பில்லாமல் இருந்ததால் இதற்குக் கரையும் எல்லைகளும் என்றும் இருந்ததில்லை.

ஆனாலும், அவ்வப்போது இருள் மேகங்கள் சூழும் நேரத்தில், நமது முன்னோர்கள் இந்தக் கடலுக்குக் கரைகட்டி அதைக் காப்பாற்ற முயன்றனர். இந்த முயற்சி மதத்தைக் காக்க அல்ல, மானுடத்தைக் காக்க. ஆம், இந்து மகான்கள் தொடர்ந்து இந்த உலகில் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்து, அன்பு ஒளியைத் தொடர்ந்து வீசி, அமைதியெனும் இந்து தர்மத்தின் கரைக்குத் தள்ளாடும் கலங்களாம் மனித உள்ளங்களைத் தொடர்ந்து கொண்டு வந்து சேர்த்துக் கொண்டுள்ளனர்.

இதன் விளைவாகவே பாரத தேசமெங்கும் நாம் மிகப் பெரிய வேதாந்த, சைவ, வைணவ, பக்தி இயக்கங்களின் எழுச்சியை ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாகக் கண்டு வந்தோம். சங்கரரும், ராமானுஜரும், மத்வரும், கண்ணப்பரும், அப்பரும், சம்பந்தரும், நந்தனாரும், நம்மாழ்வாரும், துளசிதாசரும், திருப்பணாழ்வாரும், ஆண்டாளும், மீராவும், ஏனைய நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஆன்மீகப் பெரியோர்களும் இருளில் ஆழவிருந்த நமது சமுதாயத்தை இறையன்பில் தோய்த்துத் தூக்கி நிறுத்தினார்கள். தமிழகத்தில் அதன் விளைவாகத் தமிழ் வாழ்ந்தது, தமிழ்ச் சமுதாயம் ஓங்கி உயர்ந்தது. பாரத நாடெங்கும் இந்த ஆன்மிக ஒளி அன்னியர் தாக்குதல்களையும், ஆக்கிரமிப்புகளையும் எதிர்த்துப் போராடும் உறுதியையும், வீரத்தையும் நமக்கு அளித்தது. இந்தத் தூய்மையான இறையன்பின் ஒளி இலங்கை, மலேஷியா, இந்தோனேஷியா என்று விரிந்து பரந்து முழு உலகையும் ஆட்கொண்டது.

உலக சரித்திரத்தில், மற்ற மதங்களெல்லாம் ஆதிக்கம் செலுத்திட விழைந்த நிலையில், தொடர்ந்து என்று துவங்கியது என்று அறியா வண்ணம் மெள்ள மெள்ள அன்பாலும், ஆன்மீக தத்துவங்களாலும் வளர்ந்தது நமது இந்து மதம். மதங்களுக்கிடையே அன்பு மதம் என்ற பெருமை இந்து மதத்துக்கே உண்டு, நாம் எவரையும் நிர்ப்பந்தித்து மதத்தைத் திணித்ததில்லை, ‘என் மதத்தைப் பின்பற்றாவிட்டால் நீ நரகத்துக்குச் செல்வாய்’ என பயமுறுத்தி வலுக்கட்டாயமாக வாள் முனையில் நம் மதத்தை எவர் மீதும் திணித்ததில்லை. அன்பே நம் வழியாய் இருந்துவந்துள்ளது. ஆதிக்கம் செலுத்த விழைந்து, எதையும் செய்யத் தயாராக இருக்கும் மதங்களின் தொடர்ந்த தாக்குதலுக்குப் பின்பும், இன்றும் இத்துணை பெரிய சமுதாயம் வாழ்ந்து வருவதே இதன் பின்னால் இருக்கும் ஆன்மீக ஒளிக்கு சான்றாகும்.

இன்றும் கருமேகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்றன. இச்சூழலில், நமது எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை, மாண்புகளை, தத்துவங்களை, அறிவொளியை, நம் சமுதாயம் நேர்கொள்ளும் பிரசினைகளை, விவாதங்களைத் தமிழில் கொண்டு செல்வது அவசியம் என்ற நோக்கில் இத்தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இங்கே நாங்களும் மாணாக்கர்கள் தாம். எங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சொல்கிறோம், நீங்களும் எங்களுக்கு வழிகாட்டலாம். உங்கள் கருத்துக்களை, படைப்புகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

~ தமிழ்ஹிந்து  நிர்வாகம் & ஆசிரியர் குழு

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வரும் அனைத்துப் படைப்புக்களுக்கும், கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு தமிழ்ஹிந்து தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.

படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், அதில் வரும் மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.