Payday loans Cialis online
payday loans Car insurance

Blog Archives

அரசியல்

இது ஒரு வரலாற்றுத் தவறு

இது ஒரு வரலாற்றுத் தவறு

விடுதலைப் புலிகளின் எந்த கொடுஞ்செயலும் இலங்கை ராணுவத்தின் அக்கிரமத்தை நியாயப்படுத்திவிட முடியாது. அதனளவில் அவை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியவை. இக்கண்டனத்தை ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் குறிப்பிட்டிருந்தால், ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலைப்பாடு அமெரிக்காவின் இந்த உள்நோக்கம் கொண்ட பெரியண்ணன் தீர்மானத்தை கேள்வி கேட்பதில் ஒரு குறைந்த பட்ச தார்மிக உள்ளீட்டைக் கொண்டதாக இருந்திருக்கும். ஆனால் அதை ஆர்.எஸ்.எஸ் செய்யவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது... ராசீவ் காந்தியின் பெயரை சொல்லி. அவர்களை மிக மோசமான ஒரு கொடுமைக்கு பலி கொடுத்திருக்கிறோம். இத்தகைய தருணத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்த ஒரு நீத்தார் கடனையாவது செய்ய வேண்டும்... [மேலும்..»]

நிகழ்வுகள், புத்தக விமர்சனம்

உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

அறியாமையை இந்த அளவு அப்பட்டமாக அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்திருக்க வேண்டாம் என தோன்றியது.. ‘குமரி கண்டம்’ எனும் கோட்பாட்டை மிகக் கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கியவர் இவர்கள் ‘ஆரியர்’ என முத்திரையிடும் சமுதாயத்தைச் சேர்ந்தவரல்லர்... இந்த நூலை எரிக்க வேண்டுமென்று சொன்னது புத்தகங்களை எரிக்கும் புத்தி கில்ஜிக்கு மட்டுமில்லை ஈவெராவின் சீடகோடிகளுக்கும் உண்டு என்பதை நிரூபித்தது... ‘திராவிட’ என்பது மிகத் தெளிவாக பிராந்தியம் சார்ந்த பதமாகவும், ‘ஆரிய’ என்பது சமூக அந்தஸ்து சார்ந்த பதமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது... [மேலும்..»]

புத்தக விமர்சனம், வழிகாட்டிகள்

நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீது முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம்... மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார்... தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள்... [மேலும்..»]

அறிவியல், தத்துவம்

மலரும் பிரபஞ்சம்

மலரும் பிரபஞ்சம்

முயல்களை ஏன் வெள்ளைவாலோடு இறைவன் படைத்தார் தெரியுமா?... சிருஷ்டி-கர்த்தர் என்கிற கோட்பாட்டைத்தான் கேள்விக்குள்ளாக்கி, தெளிவாக மறுத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாவ்கிங்... இந்த உலகத்தை உருவாக்கிய இறைவன், கருணைமிக்க, சர்வசக்தி வாய்ந்த, சர்வ அறிவு பொருந்திய ஒருவர் என்பதாக நாம் கற்பனை செய்கிறோம்... பிரம்மமே இப்பிரபஞ்சமாக வடிவெடுத்தது என்றும் அது பல சுழல்களில் தொடரும் ஓர் உயிரியக்கம் என்றும் பாரத ஞான மரபுகள் ஆதித் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து சொல்லி வருகின்றன... பற்பல பிரபஞ்சங்களை சஹஸ்ரநாமம் கூறுகிறது... கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அவை உருவாகின்றன ... [மேலும்..»]

சினிமா

இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]

இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]

அவளை அறிந்த ஆண்டானிலிருந்து அடிமை வரை பலராலும் காதலிக்கப்படுவள்... ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற தன் முகத்தை அடிமைக்குக் காட்டும் கிறிஸ்தவம், அதிகாரத்துக்கான யதார்த்த வழியாக அதிகார வர்க்கத்துக்குத் தன்னை முன்வைக்கிறது. பாகனீய குருக்கள் தங்கள் உலகங்களில்... இரத்தவெறியுடன் குவியும் கிறிஸ்தவக் கும்பலைப் பார்த்து, தலைமைப் பூசாரி அதிர்ச்சியுடன் சொல்கிறார், “எங்கிருந்து இத்தனை கிறிஸ்தவர்கள் வந்தார்கள்?”... கிறிஸ்தவனாகும் முன்னால் என்னால் மன்னிக்க முடிந்தது, இப்போது ஏன் முடியவில்லை?... அவன் ஏற்றுக்கொண்ட அன்பு மதம் அவனுக்கு அளித்த பரிசு, தன் காதலிக்குத் தன் கையாலேயே... அவள் கண்டடைந்த உண்மை, இந்நிகழ்வுக்கு 1500 ஆண்டுகளுக்குப்பின் டைகோ... [மேலும்..»]

இலக்கியம், கலைகள், வழிகாட்டிகள்

நமக்கு எதற்கு வெ.சா.?

நமக்கு எதற்கு வெ.சா.?

வெசாவின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுதியாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா? எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்?” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும். [மேலும்..»]

கதைகள், சிறுவர், வழிகாட்டிகள்

ஆசிர்வதியுங்கள் அனந்த் பை

ஆசிர்வதியுங்கள் அனந்த் பை

அமர்சித்திரகதை அவை அனைத்துக்கும் மணிமகுடம். காமிக்ஸ் என்கிற சித்திரகதை வடிவத்தையும் இந்திய பண்பாட்டின் சிறந்த பொக்கிஷங்களையும் இணைத்துக் கொடுத்த ஒரு புத்துயிர்ச்சி அற்புதம். இதன் பின்னணியில் இருந்த மனிதர் அனந்த் பை. அல்லது ’பை மாமா’ (Uncle Pai) என அழைக்கப்பட்டவர்... ஒரு காமிக்ஸ் இப்படி தொடர்ந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளுடன் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது இதுவே முதல்தடவையாக இருக்கும்... அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம். [மேலும்..»]

அரசியல், இந்து மத மேன்மை, பயங்கரவாதம்

இதுவும் அறம்தான்

இதுவும் அறம்தான்

அவன் நன்றாக ஹாக்கி விளையாடுவான். ஒரு நாள் ஹாக்கியில் தங்கபதக்கம் வாங்கிக்கொடுப்பேன். என் பெயர் எல்லா பேப்பர்களிலும் வரும் என்று சொல்லுவான். அவன் பெயர், புகைப்படம் எல்லா பேப்பர்களிலும் வந்தது. அவன் பிணத்துடன் கதறி அழும் அவன் தாயின் படம் நக்கீரன் தொடங்கி எல்லா பேப்பர்களிலும் வந்தது. ஒரே மகன். [மேலும்..»]

புத்தக விமர்சனம்

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]

தோள்சீலைக் கலவரம் நடக்கத் தூண்டிய சமூக-பொருளாதார-அரசியல்-காலனிய நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மிகுந்த ஆதாரத்துடன் ஆசிரியர்கள் அடுக்குகின்றனர்... ஏன் இப்படி ஒரு பொய்யான சித்திரத்தை கட்டமைத்தார் கால்டுவெல்?... ஒசரவிளையில் அமைந்துள்ள இந்த லிங்கஸ்தானமே ஐயா வைகுண்டர் தர்மயுக அரசாட்சி நடத்துதற்குரிய அரியாசனம் எனக் கருதப்படுகிறது... சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் குறித்து ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்துக்கு இருக்கும் புறக்கணிப்பு நிலையைப் பயன்படுத்தி தேச விரோத சக்திகள் அவர்களது உரிமைக்காகப் போராடுவது போல, அவர்களை தங்கள் இந்திய விரோத நிலைப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள். [மேலும்..»]

சமூகம், சினிமா, மகளிர்

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்... ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? [மேலும்..»]