தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது…. இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்…. என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்… இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம். … இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம்.

View More தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

கிலாபத் கனவுகள்…

இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி. இவர் 2007 இல் கடலூரில் பயிற்சி ஒன்றுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலூர்? நினைவிருக்கலாம் 2004 இல் கடலூரில்தான் மனிதநீதி பாசறையின் அடிப்படைவாத முகாம்களை காவல்துறை வெளிக்கொண்டு வந்தது. … சென்னை கல்லூரி இளைஞர்கள் கிலாபத் கனவுகளுடன் மூளை சலவை செய்து வெளிநாட்டு ஜிகாத்களுக்கு அனுப்பப்படுவதும் அவர்கள் பயிற்சி பெற்ற ‘முஜாகிதீன்களாக’ இந்தியா திரும்பி இங்கே ஜிகாதி கிலாபத் வைரஸ்களை பரப்புவதும் மிகவும் சீரான நெடுநாள் திட்டத்தின் பகுதியாகும்.

View More கிலாபத் கனவுகள்…

காமிக்ஸ் படித்தீர்களா?

உலகமெங்கும் ஒடுக்கப்படும் பண்டைய பண்பாட்டு மானுட சமூகங்களுக்கான உரிமை மையமாக இருக்க வேண்டும். பங்களா தேஷில் ஒழிக்கப்படும் பௌத்த-இந்து மக்கள், குர்திஷ் சமுதாய மக்கள், திபெத்தியர், ஈழத்தமிழர், ரோமாக்கள், ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகள், ஆப்பிரிக்க ஆன்மிக மரபினர் ஆகிய அனைத்து மக்களின் ஒன்றுபட்ட மையம் ஒன்றை உருவாக்கி இம்மக்களின் மனித உரிமைகள் குறித்த அறிக்கை ஒன்றை பாரத அமைப்பு ஒன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டு வர வேண்டும்.

View More காமிக்ஸ் படித்தீர்களா?

வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்

மன்னா நான் இப்போது கேட்கப்போகும் கேள்விக்கு சரியான பதிலை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை நூறு சுக்கலாக சிதறடிப்பேன். கோபால் சுப்ரமணியத்தை உச்ச நீதிமன்ற நியமனத்தில் மோதி அரசு நீக்கியதை ஊழலில் திளைத்த காங்கிரஸ் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உடைய திமுக எதிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் …

View More வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்

தியாகி வெள்ளையப்பன்ஜி பலிதானம் – ஓராண்டு நினைவேந்தல்

தமிழ்நாடு காவல்துறையும் உளவுத்துறையும் கோவை குண்டு வெடிப்பின் பிரதான குற்றவாளி மதானி தொடங்கி அப்துல் கரீம் வரை என அனைவரையும் இத்தனை பலவீனமான குற்றச்சாட்டில் கைது செய்யும் திறமையற்றவர்கள் அல்ல என்பதும் உலகத்தரம் கொண்டவர்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அரசியல் நிர்ப்பந்தங்கள். சமூகத்தின் அக்கறையின்மை. இதற்கு நாம் கொடுக்கும் விலை இது. … வெள்ளையன்ஜி எனும் தேசபக்தரின் பலிதானத்தின் ஒன்றாம் ஆண்டு நினைவேந்தல் இன்று. இன்று இந்துக்களாகிய நாம் ஒரு உறுதி ஏற்கவேண்டும். இயக்க ரீதியாக அமைப்பு ரீதியாக இந்த வழக்குகளின் போக்குகளை தொடர்ந்து கண்காணிப்போம். ஊடகங்கள் மூலம் தொடர்ந்து நம் பலிதானிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். அந்த உணர்வை மறக்காமல் முன்னெடுப்போம். வந்தே மாதரம்!

View More தியாகி வெள்ளையப்பன்ஜி பலிதானம் – ஓராண்டு நினைவேந்தல்

மீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்

ஆம். ’ஜீவிக்கிறார்’ என கொக்ககோலா போல சந்தை பிரச்சாரம் செய்யப்படாமலே இந்த மண்ணின் தெய்வங்கள் உண்மையிலேயே ஜீவிக்கும் தெய்வங்கள். … விடுதலைக்கு பின்னான ஏறக்குறைய எழுபதாண்டு வரலாற்றில் மிகப் பெரிய சோகங்களிலெல்லாம் ஆறுதல் அளித்து பாரபட்சம் ஏதுமின்றி மானுட உயிர் காப்பாற்றும் பணியை செய்து வந்துள்ள ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களின் இந்த பணி அனுபவங்கள் அதிலிருந்து அவர்கள் பெற்ற அனுபவ படிப்பினைகள் ஆகியவை தேசிய பேரிடர் களையும் அமைப்புகளால் எந்த அளவு ஆராயப்பட்டுள்ளன? பயன்படுத்தப்பட்டுள்ளன?

View More மீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்

குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா

உதாரணமாக மிகக் கொடுமையான சாதிய சூழ்நிலை தாண்டவமாடிய திருவிதாங்கூரை எடுத்து கொள்வோம். எல்லாவிதமான சாதிய வக்கிரங்களும் நிலவிய பிரதேசம் அது. சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் எல்லாம் நிலவியது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் …

View More குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா

கலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்

எந்த அளவுக்கு நம் ஊடகங்கள், இயக்கவாதிகள், வெளிநாட்டு சக்திகள், போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள் ஒருவரோடொருவர் பின்னி பிணைந்து இந்துக்களுக்கும் இந்திய தேச நலனுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம் சஞ்சீவ் பட். மோடி எத்தகைய சூழலில் செயல்பட்டு வருகிறார் என்பதை எண்ணும் போதுதான் ஆச்சரியம் ஏற்படுகிறது. … இவருக்கு எதிராக தேசநலனை குறித்து கவலைப்படாத நம் விலை போன ஊடகங்கள், சுயநல அரசியல்வியாதிகள், மதவெறி பிடித்த அன்னிய சக்திகள் அவற்றின் உள்ளூர் தரகர்கள்… இவர்கள் வகுக்கும் வியூகங்கள்…

View More கலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்

மோடியின் வெற்றி

மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன.

View More மோடியின் வெற்றி

அவதூறுகளை எதிர்கொள்வது-2

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மீதான இந்த அவதூறு ‘ஆராய்ச்சி’ நூல் வெளிவந்த போது இந்திய பாராளுமன்றத்தில் அதை தடை செய்வது குறித்த பேச்சு கூட எழுந்தது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி செய்து வந்தது. உட்துறை அமைச்சராக விளங்கிய லால் கிருஷ்ண அத்வானி இந்த நூலை தடை செய்ய முடியாது என கூறிவிட்டார். ஆக, இந்து ’வலதுசாரிகள்’ என முற்போக்குகளால் கரித்து கொட்டப்படுவோர் கூட ஹிந்து ஞான மரபின் ஒரு மகத்தான ஞானிக்கு எதிராக செய்யப்பட்ட அவதூறை ஜனநாயக ரீதியில் சந்திக்கவே முடிவு செய்தனர்….. ஒரு நவீன ஹிந்து அமைப்பு தனக்கு எதிராக மிக மோசமாக மிக விரிவாக மிக பெரிய நிறுவன பலத்துடன் சுமத்தப்படும் அவதூறுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான சரியான ஆதர்ச எதிர்வினையாக அது அமைந்தது.

View More அவதூறுகளை எதிர்கொள்வது-2