ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8

126 போர்விமானத் தேவைக்காக ராஃபேல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற செய்திவந்த இரண்டே வாரத்திலேயே, அதாவது 2012லேயே, டசோல் நிறுவனம் பாதுகாப்புத்துறையில் பாரதத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. அப்பொழுது காங்கிரஸ் கூட்டணி [யு.பி.ஏ – ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி] பாரதத்தை ஆட்சிசெய்தது என்பதை நினைவு கூறவேண்டும்.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7

பாரதம் செவ்வாய்க்கு முதல்தடவையே கோள் மங்கல்யானை அனுப்பி வெற்றிகண்டிருக்கிறது; விண்ணில் பறந்துசெல்லும் செயற்கைக்கோளை மிஷன் சக்தி ஏவுகணைமூலம் தாக்கியழித்திருக்கிறது; கண்டம்விட்டுக் கண்டம்தாவும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது; அணுகுண்டுத் தயாரிப்பிலும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆகவே, பாரத்த்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் திறமையில், ஆய்வுத் திறனில் உலக வல்லரசுகளுக்குச் சளைத்தவர் அல்லர் என்று கண்கூடாகத் தெரிகிறது.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6

டசோல் நிறுவனம் மட்டுமல்ல, அமெரிக்க விமான நிறுவனங்களும்கூட, பாரதத்தில் எச்.ஏ.ஏல். நிறுவனத்துடன் இணைந்து விமான உற்பத்திசெய்ய முடியாது என்று தெரிவித்தபின்னர் பாரதத்தின்முன் நின்ற பெரும் பிரச்சினை இதுதான்..
முழுதாக, பறக்கும் நிலையிலுள்ள, பாரதம் விரும்பும் தொழில் நுட்பங்களுள்ள, – தாக்கும் திறனுள்ள, தளவாடங்களுள்ள, பாரத விமானப்படைத் தலைமை விரும்பும் போர்விமானமான ரஃபேலை உடனே பெறவேண்டும் என்றால் – அதை பிரெஞ்சு அரசின் மூலம்தான் அடையமுடியும் என்ற நிலைமை பாரதத்திற்கு ஏற்பட்டது.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5

2013ல் டசோல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆயினும், பட்ஜெட் தட்டுப்பாட்டினால் 2015வரை விமான ஒப்பந்தம் பற்றிய நடவடிக்கையை ஒத்திப்போடுவது என்று காங்கிரஸ் கூட்டணி அரசால் தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதிலும், டசோல் நிறுவனம் நம்பிக்கையை இழக்கவில்லை.
மூன்று ஆண்டுகள் டசோல் நிறுவனத்திற்கும், பாரத அரசுக்கும் இழுபறிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கையில், 2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை [பிரான்ஸ்வா ஹாலன்ட்] பறக்கும் நிலையுள்ள 36 ரஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly Rafale jets to India.]” என்று தனது பிரெஞ்சுப் பயணத்தின் முதல்நாளில் செய்திக் கூட்டத்தில் அறிவித்தார்.[

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4

ஹெச்.எஃப்-24 விமானத்தின் வடிவமைப்பு சிறந்து விளங்கியபோதிலும், பிரிஸ்டல் சிட்டலி ஆர்பியஸ் தயாரித்து வழங்கிய அதன் இரட்டை எஞ்சின்கள் வலிமையற்றவையாக இருந்ததால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இப்பொழுது அந்த விமானங்கள் பாரதத்தின் பல விமானதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை ஒரு வெட்கக்கேடு என்று உணர்வதால், விமானப்படைத் தலைமையகமும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனமும் பாராமுகமாகவே இருக்கின்றன

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3

இதுவரை 11,400க்கும் அதிகமாக மிக்-21 விமானங்கள் உற்பத்திசெய்யப்பட்டிருக்கின்றன. இருபதுக்கும் மேற்பட்ட வகைகளும் உண்டு. சீனா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதைப் பயன்படுத்திவருகின்றன. சீனா இதை ஜே-7 என்ற பெயரில் உற்பத்திசெய்து பல நாடுகளுக்கும் விற்றுவருகிறது.[3] இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மிக்-21எம் [MiG-21M] வகையை வடிவமைத்து உருவாக்குகிறது.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2

விமானத்தாக்குதல் வரலாற்றிலேயே, ஒரு நாட்டை மண்டியிடச்செய்த விமானம் மிக்-21ஆகத்தான் இருக்கும் எனலாம். பாரதம் தனது மிக்-21 விமானங்களை அப்பொழுதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பியது. 1971 டிசம்பர் 14ல் காலை 11 மணி அளவில் டாக்காவில் கவர்னர் மாளிகையச் சுற்றி வட்டமிட்ட அவ்விமானங்கள் குண்டுமாரி பொழியவே, கவர்னர் ஐக்கிய நாட்டு விமானத் தாக்குதல் பாதுகாப்பிடத்திற்கு ஓடி ஒளிந்துகொண்டார்.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1

அணு ஆயுதப்போர் இருநாட்டிற்குமே மாபெரும் கேட்டையும், அழிவையும், பல இலட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தையும், அணுக்கதிர்வீச்சினால் பல்லாண்டுகள் எவரும் அணுகமுடியாத நிலமையையும் விளைவிக்கும் [mutually assured destruction]. அரசு சரியாகச் செயல்பட முடியாத நிலையும் உண்டாகும். பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்க பாகிஸ்தான் காரணமாகக்கூடும் என்று டேனியல் பைமன் எழுதியுள்ளார்.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1

அருச்சுனனின் ஆத்திரம்

“நீ ஒரு கோழை.  கர்ணனுக்குப் பயந்துகொண்டு இங்கே ஓடிவந்திருக்கிறாய்.  அத்தனை அதிவில்லாளர்களையும் அடித்துத் துவம்சம் செய்த கர்ணனை — அபிமன்யுவை அநியாயமாகக் கொல்வதற்காக அவனது பின்புறமாக நின்று, வில்லைத் துண்டித்துச் செயலிழக்கச் செய்தவனை — வீரத்தில் உன்னைவிடச் சிறந்த உன் செல்வன் விழக் காரணமாவிருந்த கள்வனை — பாஞ்சாலியின் துகில் உரியக் காரணமாக இருந்த அந்த மாபாவியை விட்டுவிட்டு, இங்கென்ன செய்கிறாய்? பேசாமல் உன் காண்டீவத்தையும், வீரவாளையும் கேசவனிடம் கொடுத்துவிட்டு, அவனுக்குச் சாரதியாக இருந்துவிடு.  அவன் கர்ணனை அரைநொடியில் கொன்றுவிடுவான்” 

View More அருச்சுனனின் ஆத்திரம்

தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்

இத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன்.  கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன்.  “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார்?  பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன்?  எனவே, எனது குரு குற்றமற்றவர்!” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன.  

View More தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்