Blog Archives

காதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும்

காதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும்

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்தாலே போதும். 14-ஆம் தேதிதான் காதலே பிறப்பெடுத்தது போல கத்தல்கள். அந்த நாளில் காதலர்கள் ஒன்றுசேர்ந்து விடவேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்களோ இல்லையோ, வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் வியாபாரிகள் கூவத் தொடங்கிவிடுவார்கள். ஊடகங்களும், எஃப்.எம். ரேடியோக்களும்  ‘காதலர்கள் தினக் கொண்டாட்டங்கள்’ என்று அலறத் துவங்கிவிடும். காதலர் தினத்தை யாராவது மறுத்தால் போதும். இருக்கவே இருக்கிறது, கருத்து சுதந்திரம் என்ற ஆயுதம். காதலர் தினத்தை ஹிந்துத்துவர்கள் எதிர்த்தால் போதும்.  “இவர்கள் என்ன கலாசாரக் காவலர்களா?” என்று எதிர்க்கேள்வி எழும்.  ஹிந்து மதத்தில் காதலுக்கு இடமில்லை என்ற கூக்குரல் வேறு. உண்மையில், உலகத்தில் உள்ள மதங்களில் ஹிந்து... [மேலும்..»]

பசங்க-2: பார்க்க வேண்டிய படம்

பசங்க-2: பார்க்க வேண்டிய படம்

“பசங்க– 2 பாரு தம்பி… நல்லா இருக்கு. குழந்தைகளுக்கான படம்” என்றார் நண்பர் ஒருவர். திரைப்பட ரசிகனான எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். இரண்டையும் இணைத்து ஒரு படம் என்றால் கேட்க வேண்டுமா? ஆனால், நண்பர் சொல்லும் போது எனக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. சிறுவர்கள் நடித்து, அண்மைக் காலங்களில் வெளிவந்த பெரும்பாலான படங்களில், மார்க்சியப் புலம்பல்களும் பிரசார நெடிகளும் கலந்து ரசிகர்களை நெளிய வைத்த படங்களாக இருந்ததே எனது தயக்கத்துக்கு காரணம். இருந்தாலும், நண்பர் சொன்னாரே… எதற்கும் போய்ப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் படம் பார்க்கக் கிளம்பினேன். படம் தொடங்கிய உடனேயே கவின் என்ற... [மேலும்..»]

மாற்றான் – திரைப் பார்வை

விஞ்ஞானியான ராமச்சந்திரன், தனக்கு இயற்கையாகப் பிறக்கும் குழந்தைகளைக்கூட மரபணு முறையிலேயே பெறத் துடிக்கும் மரபணு வெறியர்... நமது நாட்டில் மரபணு விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நகரத்து மக்களிடம் இல்லை. அதை ஏதோ கிராமத்து மக்களின் வெற்றுக் கூச்சல் என்று நினைக்கிறார்கள். அது தவறு என்பதை இந்தப் படம்... இயக்குநரை பல இடதுசாரிகள் வலைத்தளங்களில் திட்டி வருகிறார்கள். திருடனுக்குத் தேள் கொட்டினால் வியர்க்கத்தானே செய்யும்? [மேலும்..»]