Blog Archives

பிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை

இதுவரை எந்த நாடும், எந்தத் தலைவரும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. சாதாரணமாக தேர்தல் முடிந்தபின் பதவியேற்றுக்கொள்வது என்பது ஒரு உள்நாட்டு நிகழ்ச்சியாக மட்டுமே கருதப்பட்டுவரும் நிலையில், அண்டைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்ததன் மூலம் உலக நாடுகள் அனைத்தையும் பாரதத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வைத்திருக்கிறார் மோதி. இதன் மூலம் தன்னை ஒரு வித்தியாசமான தலைவராக முன்னிறுத்தியுள்ளார்... தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் பாரதத்தின் தலமைச் சிறப்பையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மோதி அரசு செயல்படும் என்பது என் கருத்து. பாரதத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உலக அளவில் பாரதத்தின் நிலை உயரும் என்பது நிச்சயம். [மேலும்..»]