Blog Archives

சமூகம், பொது, வழிகாட்டிகள்

காந்தியின் (கி)ராம தரிசனம்

January 30, 2012
-
காந்தியின் (கி)ராம தரிசனம்

குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை... நோயாளிகளுக்கு ராம நாமத்தையும், சில இயற்கை வைத்திய முறைகளையுமே மருந்தாக மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.. சத்தியத்தின், அகிம்சையின் தரிசனத்தை நாம் கிராமங்களின் எளிமையில் மட்டுமே காண முடியும்... இந்தியாவில் நகரங்களின் வல்லாதிக்கம் நிகழ்கிறது. கிராமங்கள் நொறுக்கி உண்ணப்படுகின்றன. கிராமங்களை உறிஞ்சி நகரங்களை வலுப்படுத்தும் ஓர் அரசியல் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமியமனநிலை என்பதே பிற்போக்குத்தனம்...

மேலும் »

அரசியல், சமூகம், புத்தக விமர்சனம்

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்

January 16, 2012
-
பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்

ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாகப் படுகொலை செய்யப் பட்டதைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது, மரணங்கள் வெறும் புள்ளி விவரங்களாக ஆகி விட்ட நிதர்சனம் மனதைச் சுடுகிறது... கொள்கை மோகம் மட்டுமல்ல, சுய-அகங்கார நோக்கங்களும் நேருவை ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் மையல் கொள்ள வைத்திருந்தன.. 'திபெத்தில் எரிந்த நாலந்தா' அத்தியாயத்தைப் படித்து முடித்த போது, காட்டெருமையின் குளம்புகளில் சிக்கிக் கொண்ட குழந்தை என்ற வர்ணனை தான் மனதில் எழுந்தது... எல்லா சான்றுகளுமே கம்யூனிஸ்டுகளே வெளியிட்டுள்ள பல நூல்களில் இருந்தும், ரஷ்ய, சீன பதிப்புகளில் இருந்துமே தரப்பட்டிருப்பது...

மேலும் »

இலக்கியம், கம்பராமாயணம்

படிவங்கள் எப்படியோ?

January 3, 2012
-
படிவங்கள் எப்படியோ?

வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம்... இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்... ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய்... "பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்..."

மேலும் »

அரசியல், இந்து மத விளக்கங்கள், சமூகம், பொது

ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்

December 7, 2011
-
ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்

ஐரோப்பிய சிந்தனை முன்வைத்த தேசியவாதத்தையும், இந்திய கலாசார ஒற்றுமையையும் கலந்து இப்படி ஒரு சித்தாந்தத்தை சாவர்க்கர் முன்வைத்தார் என்று இன்றைய அரசியல் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும்.... ஒரு மனிதனது நாடி நரம்புகளில் மனிதகுலம் முழுவதின் ரத்தமும் ஓடுகிறது என்பதே உண்மையாக இருக்கும்.... "இது தான் ஹிந்துத்துவம்னா நான் இன்னிலேர்ந்து ஹிந்துத்துவ வாதி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்" என்று என்னிடம் அடித்துக் கூறினாள்... உலகில் ஏதோ பகுதியில் ஒடுக்கப் படும் இந்துக்களின் குரலை உலக அரங்கில் யார் கேட்கச் செய்ய முடியும்? இந்தியா மட்டும் தான்...

மேலும் »

இந்து மத விளக்கங்கள், சமூகம், பொது

ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

November 11, 2011
-
ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

நைஜீரியாவுக்கு நிகழ்ந்தது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை? ... ஒவ்வொரு பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல்... போர்னியோ தீவு பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்... புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி...

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், பொது

ஹிந்து என்னும் சொல்

November 1, 2011
-
ஹிந்து என்னும் சொல்

பொதுவாக பலர் நினைப்பது போல, ஹிந்துக்கள் தங்களை “ஹிந்துக்களாக” உணரத் தொடங்கியது பிரிட்டிஷ் காலகட்டத்தில் தான் என்பது உண்மையல்ல....ஹரிஹரர், புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது...சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள் - ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு...

மேலும் »

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

வாழும் பிள்ளை

September 9, 2011
-
வாழும் பிள்ளை

”நான் நாத்திகன். ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப்பேன்,”... திருவள்ளுவரும் அம்பேத்கரும் விவேகானந்தரும் வீரசிவாஜியும் இணைந்திருக்கும் பேனர் முதல் பிரபாகரன் டி ஷர்ட் போட்டு காவிக் கொடி பிடிக்கும் தமிழீழ ஆதரவு இளைஞர்வரை... அப்போதுதான் திலகரும், பாரதியும் கண்ட விநாயக தரிசனம் சமூக வெளிப்பாடாக மலரும்.

மேலும் »

பிறமதங்கள், வரலாறு

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

August 31, 2011
-
காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர்... இஸ்லாமுக்கு முந்தைய பழைய அரபு தெய்வ வடிவங்களில் சில இந்து தெய்வங்களைப் போன்றவையே.. குரு நானக் பின்வருமாறு கூறினார் – மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம். மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது.. இஸ்லாமின் வருகைக்குப் பின் அரேபியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இந்து அகதிகளின் நினைவுகள்...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

அண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது?

August 25, 2011
-
அண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது?

அண்ணா தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் மன்மோகன் சிங் மட்டும்.... பிரச்சினை, பொதுமக்கள் ஊமைகள் என்பதல்ல. சட்டத்தின் காவலர்கள் செவிடாகியிருக்கிறார்கள் என்பது தான்...நிறுவனங்களையும், செல்வந்தர்களையும் விடவும் ஊழல் இந்த ஏழைகளைத்தான் மிக அதிகமாகப் பாதிக்கிறது... நடுத்தர வர்க்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையேயான கண்ணியமான சமூக ஒப்பந்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது...

மேலும் »

சமூகம்

சிலுவையில் இந்தியக் கல்வி?

August 12, 2011
-
சிலுவையில் இந்தியக் கல்வி?

மிக மோசமான கல்வித் தகுதிகளும் மதிப்பெண்களும் கொண்ட பணம் கொழுத்த மாணவர்களுக்கு மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின்கீழ் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது... சராசரி இந்து மாணவரை விட சராசரி கிறிஸ்தவ மாணவருக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் அதே மடங்கு அதிகமாக... அறிவியலுக்கு எதிரான இத்தகைய கிறிஸ்தவ இயக்கங்கள் இங்கும் உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை... சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு ஆகிய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லா இந்தியர்களுமே கவலைப்பட வேண்டிய விஷயம்...

மேலும் »