லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்

லாவண்யாவின் மரணத்தை முன்வைத்து ஒரு உண்மையான சீரியசான மக்கள் பிரசினையைப் பேசிக்கொண்டிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் கசப்புகளை “மத அரசியலை” கொண்டுவருகிறதாம். எப்படியெல்லாம் சீன் போடுகிறார்கள் பாருங்கள்… இப்படித்தான் தமிழ்நாடும் ஒரே “அமைதிப்பூங்கா”வாக இருக்கிறது என்று வழக்கமாகக் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் உருவாக்கியுள்ள அகராதியில் “அமைதிப்பூங்கா” என்றால் அங்கு கிறிஸ்தவ மதமாற்றமும், கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு அராஜகங்களும், இஸ்லாமிய மதவெறி – ஜிகாதி பிரசாரங்களும் ஜகஜ்ஜோதியாக எந்த இடையூறுமில்லாமல் அரசு ஆதரவுடன் ஏகபோகமாக நடக்கும் என்று பொருள்…

View More லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்

சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி: ஒரு நேர்காணல்

இவரைப்பற்றிய செய்திகள் மற்றும் இவரது ஆங்கில உரைகள், உரையாடல்களைத் தொடர்ந்து கவனித்து வந்திருப்பதால் நன்கு அறிந்திருந்தாலும், திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் செய்துள்ள இந்த 2020 நேர்காணல் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது.. காஞ்சிப் பெரியவர் (ஸ்ரீ ஜெயேந்திரர்) “நீ இந்த நாட்டுக்காக பெரிய செயல்களை செய்து இங்கேயே புகழ்பெறுவாய்” என்று சொன்னதை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டதைச் சொல்லி “என்னிடம் பாஸ்போர்ட்டே கிடையாது” என்று மிக இயல்பாக, சிரித்துக்கொண்டே கூறுகிறார்…

View More சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி: ஒரு நேர்காணல்

ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை

டிரெய்லரில் வந்த காட்சிகளை வைத்து கிறிஸ்தவ மதமாற்ற அபாயம் அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிறு ஏமாற்றம். ஆயினும், போதைப் பொருள் பரவல், பட்டியல் சமுதாயத்தினரின் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் (PCR) துஷ்பிரயோகம், “க்ரிப்டோ கிறிஸ்டியன்ஸ்” ஏன்று பெயர்சுட்டப்பட்டும் முகமூடி கிறிஸ்தவர்கள், தேசவிரோத “போராட்ட” என்ஜிஓ அரசியல் என நான்கு பரபரப்பான சமாசாரங்களைப் போட்டுக் காய்ச்சி காட்டமான காக்டெயிலாக இப்படி ஒரு அதிரடி திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கும் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்…

View More ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை

ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

தமிழ்நாட்டின் நினைவிலேயே ஏறக்குறைய விலகிவிட்டிருந்த “திருநெல்வேலிப் புரட்சி”யையும் அதன் முக்கியப்புள்ளியான வாஞ்சிந்தாதனின் வீர வரலாற்றையும் குறித்து பல்லாண்டு கால உழைப்பைச் செலுத்தி, ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் மிகச்சொற்பமான புனைவுத்தன்மை சேர்த்து ரகமி எழுதிய நூல் இது. அச்சில் இல்லாதிருந்த இந்த நூலை, இந்த சுதந்திரப் பவள விழா ஆண்டில் பாரதி நூலகம், மறுபதிப்பு செய்துள்ளது. அதே பழைய எழுத்துருவில், படங்களுடன் சேர்த்து வெளியிருப்பது மிகச் சிறப்பு..

View More ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்

மந்திரங்களில் வசத்தில் தெய்வங்கள். அந்த மந்திரங்கள் பிராமணர் வசத்தில். அத்தகைய பிராமணர் எனது தெய்வங்கள்” – இந்த சுலோகத்தை வைத்து வழக்கம் போல இந்துமத வெறுப்பு பிரசாரங்கள் ஓடுகின்றன. ஆரிய பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக சூழ்ச்சி செய்து எழுதிவிட்டார்கள் இத்யாதி. இதைச் சரியான நோக்கில் புரிந்து கொள்வது முக்கியம்…

View More பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்

இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்

மணலில் மாடம் கட்டி, சங்குச் சிப்பிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, குருக்கத்திப் பூவாலான சின்னப் பொன் சுளகில் தேனெடுத்து உலை வைத்தோம். ஆம்பல்பூத் தீயைக் கவிழ்ந்து படுத்து ஊதி ஊதி முகம் வேர்த்துக் கிடக்கிறோம். முருகா, சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே.. திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில் வரும் அழகிய பாடல்கள் இவை. இவற்றில் என்னவொரு நெஞ்சையள்ளும் தமிழ்மணம். அதையும் தாண்டி, இப்பாடல்களில் வரும் மணல்வீடு, சிறுவீடு வெறும் குழந்தை விளையாட்டு மட்டும் தானா என்றும் தத்வார்த்தமாக, ஆன்மீகமாக யோசிக்க இடமிருக்கிறது….

View More இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்

சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்

சங்கரரைப் பற்றிய சிறப்பான அறிமுக நூல்களில் ஒன்று டி.எம்.பி.மகாதேவன் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஆங்கில நூல். ஒரு இனிய ஆச்சரியமாக, எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு மொழிபெயர்ப்பில் இதன் தமிழாக்கம் வெளிவந்து இணையத்திலும் கிடைக்கிறது (சுட்டி கீழே). தத்துவப் பேராசிரியர் எழுதிய மூலநூல், சிறந்த இலக்கியவாதியின் கவித்துவமிக்க உரைநடையில் தமிழில் ஒரு தனி மெருகைப் பெற்று விட்டது. இந்தச் சிறிய நூலில் முதல் பாதியில் சங்கரரின் வாழ்க்கைச் சரிதமும், பின்பாதியில் தத்துவ தரிசனமும் சிறப்பாக விளக்கப் பட்டுள்ளன…

View More சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்

வேதத்தில் சிவலிங்கம்

“இந்த வேதத்தில – ருத்ரம் இருக்கு, அதுல நமச்சிவாய எல்லாம் இருக்கு, ஆனா சிவலிங்கம் என்று வெளிப்படையாக இருக்கா சார்” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். கேட்டவர் ஒரு “சைவர்” என்பது சொல்லாமலே விளங்கும்… கிருஷ்ண யஜுர்வேதம், தைத்திரியாரண்யகம் கடைசி பாகத்தில் உள்ளது மஹாநாராயண உபநிஷத். இதில் ஶிவோபாஸன மந்த்ரா: என்ற பெயரில் கீழ்க்கண்ட மந்திரங்கள் வருகின்றன. சிவபெருமானின் ஐந்து முகங்களுக்கான மகாமந்திரங்களும்,ருத்ர நமஸ்கார மந்திரங்களும் உள்ளன…

View More வேதத்தில் சிவலிங்கம்

அஞ்சலி: சுவாமி ஓங்காரானந்தர்

இங்ஙனம் மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமமாக விளங்கியவர் சுவாமி ஓங்காரானந்தர். சுவாமிகள் அடிப்படையில் ஒர் ஆசிரியர். அவரது மையமான பணி என்பது நமது ஞான நூல்களை ஆழமாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்பிப்பது என்பதாகவே இருந்தது… துறவியும் ஆன்மீகத் தலைவருமாக இருக்கும் ஒருவர் இந்து தர்மத்தை அவமதிக்கும் வெறுப்பு பிரசாரங்களுக்கு எந்தவகையில் உறுதியான எதிர்ப்பையும் எதிர்வினையையும் பதிவுசெய்ய முடியும், செய்ய வேண்டும் என்பதற்கான ஆதர்ச வழிகாட்டுதலாக சுவாமிகளின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன.

View More அஞ்சலி: சுவாமி ஓங்காரானந்தர்

கானக மக்களும் மலைக்கோயில்களும்

கானக மக்களும் மலைவாசிகளும் தமக்கென்று ஒரு தனிக்கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் இந்துக்களே அல்ல – இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துக்கள் காலனியம் கட்டமைத்த வரலாறு மூலமாக புகுத்தப் பட்டன. தமிழில் உள்ள சைவ, வைணவ பக்தி இலக்கியங்களை சாதாரணமாகக் கற்பவர்களுக்குக் கூட இந்த சித்திரிப்புகள் எவ்வளவு பொய்யானவை என்பது புரியும். “கானவர் தம் மாமகளிர்” என்கிறார் சம்பந்தர். மலைக்குறவர் இனங்கள் திருமாலின் பொன்னடி வணங்கும் காட்சியைப் பாடுகிறார் பெரியாழ்வார்..

View More கானக மக்களும் மலைக்கோயில்களும்