இரு புறநானூற்றுப் பாடல்கள்

ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது… தமர் பிறர் அறியா அமர் – புறநானூற்றுப் பாடல்களை வாசித்துக் கொண்டே வரும் போது, இந்தச் சொற்றொடரைக் கண்டு திகைத்து நின்று விட்டேன். தம்மவர் என்றும் அயலார் என்றும் அறியாத போர்க்களம்…

View More இரு புறநானூற்றுப் பாடல்கள்

அஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றிருந்த இவர், ஐம்பது வயதுக்குப்பின் தனது வழக்கறிஞர் பணியை விடுத்து, முழுநேரமும் தமிழ்ப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். சைவத்திருமுறைகளின் பல பகுதிகளை ஆங்கிலத்தில் நேர்த்தியாக மொழிபெயர்த்தது இவரது மாபெரும் பங்களிப்பாகும். வாழ்நாள் முழுவதும் தீராத ஆர்வம் கொண்ட படிப்பாளியாக விளங்கிய டி.என்.ஆர் அவர்களது இலக்கத்தில் அவர் வைத்திருக்கும் தனிப்பட்ட புத்தக சேமிப்பில் 50,000க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன…

View More அஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்

கம்பர் உருவப்படங்கள்

காலத்தால் முற்பட்ட, வரலாற்று ரீதியான, ஆதாரபூர்வமான கம்பர் உருவம் என்றால் அது தேரெழுந்தூர் கோயில் சிற்பம் தான். ஆனால், கம்பன் கழகங்கள் இந்த உருவத்தை ஏதோ காரணத்தால் வேண்டுமென்றே பயன்படுத்தாமல், தாங்களாக ஒரு உருவத்தைக் கற்பித்து, அந்தப் படங்களையே பயன்படுத்தி வருகிறார்கள்..

View More கம்பர் உருவப்படங்கள்

சிவனுக்கான திருவீடு

சிவபெருமானை எழுந்தருளச் செய்ய கோபுரங்களும், விமானங்களும், மாடங்களும் கொண்ட மாபெரும் கோயில்களோ அல்லது பூஜா மண்டபங்களோ அத்தியாவசியமா என்ன? அவனை என்றும் இருத்தி வழிபடுவதற்கு உரிய உன்னதமான திருவீடு எது? மாணிக்கவாசகர், ஆதிசங்கரர், பசவண்ணர், திருமூலர் முதலான மகான்களும் அருளாளர்களும் தெளிவாகவே அதைக் கூறுகிறார்கள்…

View More சிவனுக்கான திருவீடு

நர்த்தன கணபதி

பொற்சிலம்பு வயிற்றில் அணிந்த பாம்புக்கச்சையோடு அழகாக மிளிர, வெற்றிதரும் நடனத்தைச் செய்யும் தந்தையே வியந்து பார்த்து துடி கொட்டி இசைக்க, நின்று ஆடுகின்ற ஆனைக்கன்றை நினைப்பவர்களது வினைகள் இல்லாமலாகும் என்கிறது இப்பாடல்.. ஸ்ரீ சங்கரர் இயற்றிய கணேச புஜங்கம் – இதில் முதலில் நர்த்தன கணபதியின் ஸ்வரூபமும், பின்பு யோகிகளின் தியானத்தில் வெளிப்படும் கணபதியின் சச்சிதானந்த ஸ்வரூபமும், இறுதியில் பரம்பொருளாகிய கணேச தத்துவமும் அழகுற வர்ணிக்கப் படுகின்றன. இசைஞானி இளைராஜா மிக அழகாக துல்லியமான சம்ஸ்கிருத உச்சரிப்புடன் இந்தத் துதியை இசையமைத்துப் பாடியுள்ளார்….

View More நர்த்தன கணபதி

பத்ம விருதுகள் 2021 (தமிழ்நாடு)

ஒவ்வொரு வருடமும் உண்மையான சாதனையாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்து வரும் நரேந்திர மோதி தலைமையிலான பா.ஜ.க அரசு பாராட்டுக்குரியது. “இரண்டு ரூபாய் டாக்டர்” என்று புகழ்பெற்ற வடசென்னை மருத்துவர் டாக்டர் தி.வீரராகவன், தனது அற்புதமான ஓவியங்கள் மூலம் குழந்தை இலக்கியங்களுக்கு உயிரூட்டிய கே.சி.சிவசங்கர் (அம்புலிமாமா சங்கர்) … ஸ்ரீதர் வேம்பு – Zoho மென்பொருள் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவரும் தொழில்முனைவர். கிராமிய மறுமலர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்…

View More பத்ம விருதுகள் 2021 (தமிழ்நாடு)

அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

வேதநெறியும் தமிழ் சைவத்துறையும் (2009) என்பதில் தொடங்கி சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அவரது கட்டுரைகள் தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளன. ஐயா அவர்களின் கட்டுரை ஒவ்வொன்றும் அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும், அவரது சைவசித்தாந்த ஞானத்தெளிவுக்கும், அவரது சிவபக்திச் சிறப்பிற்கும் சான்று பகர்வனவாக இருக்கும். திருமுறைகளைப் பேசுவதும் எழுதுவதும் மட்டுமல்லாது, இசைக்கவும் வல்லவர். ஆழ்ந்த கர்நாடக சங்கீத ரசனை கொண்டவர். பேராசியரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பும், தொடர்ந்து சைவ அன்பர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் கற்பித்து வந்தவர். .

View More அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

திருக்குறளும் மஞ்ச்சூரியனும்

திருவள்ளுவர் தடாலென்று வானத்திலிருந்து குதித்து தடாலடியாக 1330 குறள் எழுதிவிடவில்லை. அவரது பண்பாட்டில், சூழலில் ரிஷிகளும் முனிவர்களும் உபதேசித்து, வாழ்ந்து ஊறிய ஞானத்தைத் தான் குறளாகப் படைத்தார். ஆனால், இந்த உண்மையைச் சொன்னால் தமிழ்பேசும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்டு ஆசாமிகளும் அதைக் கற்க விரும்ப மாட்டார்கள், எதிர்ப்பார்கள். எனவே, திராவிட இயக்கம் உருவாக்கிய அந்தப் பொய் அப்படியே நீடிக்கட்டுமே. தமிழகம் “அமைதிப் பூங்காவா” இருக்கவேண்டாமா? – இப்படியும் ஒரு தரப்பு…

View More திருக்குறளும் மஞ்ச்சூரியனும்

சூரிய தரிசனம்: பாரதியார்

நிலவின் முகத்தைக் காணவேண்டும் என்று தான் மானுட மனங்கள் பொதுவாக ஆசைப்படுகின்றன. “நிலவே முகம் காட்டு” என்கிறார் ஒருவர். “நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தை” என்கிறார் இன்னொருவர். மெல்லிதயங்களும் நெகிழும் உள்ளங்களும் எழுப்பும் குரல்கள் இவை. ஆனால், உன் முகத்தைக் காட்டமாட்டாயா, நான் பார்க்கவேண்டும் என்று சூரியனை நோக்கி இறைஞ்சும் கவிமனம் இதனின்றும் முற்றிலும் வேறுபட்டது. பாரதியார் தனது பாடலொன்றில் அவ்வாறு வேண்டுகிறார். உண்மையில் சூரியனை முகம் காட்ட இறைஞ்சும் அந்தக் கம்பீரமான குரல் மிகவும் புராதனமானது. வேத ரிஷியின் குரல் அது…

View More சூரிய தரிசனம்: பாரதியார்

வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி

டாக்டர் ரங்கன்ஜி ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற சிறப்பான குறுஞ்சொற்பொழிவுத் தொடரைக் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறார். சங்க இலக்கியங்களில் வேதம், வேதியர், வேத தெய்வங்கள், வேத வேள்விகள், வேதாந்த தத்துவம், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், முருகன், சிவபெருமான், திருமால், சக்தி எனப் பலவற்றையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களையெல்லாம் எளிமையாக, அழகாக, ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கிறார்…

View More வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி