Blog Archives

அரசியல்

சீன டிராகனின் நீளும் கரங்கள்

December 24, 2011
-
சீன டிராகனின் நீளும் கரங்கள்

இந்தியாவின் மீது சீனா ஒரு போதும் படைஎடுக்காது என்று நம்பிய நேரு ஏமாந்தார்... சீனா இணைந்தால் சார்க் கூட்டமைப்பில் இந்தியாவின் பலம் வெகுவாகக் குறையும்... சீனாவின் உதவி இருப்பதால்தான், விடுதலைப் புலிகளினுடனான போரில் உலக நாடுகளின் கண்டனத்தைக் கூட இலங்கை அலட்சியப்படுத்தத் துணிந்தது என்று இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் முன்னாள் இயக்குனர் பி.ராமன் கருதுகிறார்... இதனைத்தான் இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வாளர்கள், "சீனாவின் முத்துமாலைத் திட்டம்" என்று அழைக்கின்றனர்... சீனா போன்ற நாடுகளுடன் தைரியமாக முதுகெலும்புடன் பேச இந்தியாவுக்கு நேர்மைத் துணிவுள்ள அரசியல் தலைமை தேவை...

மேலும் »

சமூகம், பொது

முதுமை – சில சிந்தனைகள்

October 1, 2011
-
முதுமை – சில சிந்தனைகள்

இந்தியாவில் பிள்ளைகளின் படிப்புச் சுமை, குடும்பச் சுமை, வயதான பெற்றோர்களின் பராமரிப்பு என்று அதிலேயே ஈட்டிய பொருள் அனைத்தும் செலவாகி, வயதான காலத்தில் பிள்ளைகளிடம் கையேந்தும் நிலையில் இருந்து விடுகின்றனர். வயது காலத்தில் பணம் தனக்கென்று காசு சேர்த்துக் கொள்ளாமல் இவர்கள் இருந்தது கூட, வயதான காலத்தில் பிள்ளைகள் தம்மை பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் என்று தோன்றுகிறது. ஆனால் முன்னெப்போதையும் விட மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் இந்த மாதிரியான திட்டமிடல் நிறைவேறாமல் போவதாகவே தோன்றுகிறது

மேலும் »

நிகழ்வுகள், பயங்கரவாதம்

தில்லி குண்டு வெடிப்பு

September 10, 2011
-
தில்லி குண்டு வெடிப்பு

யோசிக்க வேண்டிய தருணம் இது. நடந்து விட்ட தில்லி குண்டு வெடிப்பு குறித்து பச்சாதாபம், அயர்ச்சி, விரக்தி, இயலாமை, கோபம், ஆத்திரம், வெறுப்பு என்ற கலவையான உணர்ச்சிகளை பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்த நேரத்தில் உணருவது இயல்பான ஒன்றுதான். அதோடு தொடரும் இந்த பயங்கரவாத சம்பவங்கள் குறித்து சற்று விலகி நின்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

மேலும் »

சமூகம், பயங்கரவாதம், பிறமதங்கள், வரலாறு

மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா

September 9, 2011
-
மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா

இந்து மதத்தையே குற்றவாளிகளின் மதம் என்று ஆக்கிவிட்டனர்.பாகிஸ்தானில் கூட இது போன்ற இந்துக்களுக்கு விரோதமான சட்டம் இயற்றப் படவில்லை.

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்

June 5, 2011
-
ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்

ஊழலுக்கும், கறுப்புப் பணப் பதுக்கலுக்கும் எதிராக வெடித்துக் கிளம்பிய பாபா ராம்தேவின் சத்தியாக்கிரக போராட்டத்தை வன்முறையாக காங்கிரஸ் அரசு கலைக்க முயற்சித்துள்ளது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய சுவாமி ராம்தேவ் மற்றும் 25000 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது, அரசு உத்தரவின் பேரில் போலீஸ் உள்ளே நுழைந்து தடியடி நடத்தி, முப்பதுக்கும் மேற்பட்டோரை காயப் படுத்தி, கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளது

மேலும் »

கதைகள்

மாயக்கரங்கள் (சிறுகதை)

February 22, 2011
-
மாயக்கரங்கள் (சிறுகதை)

"ஆத்தா, எந்திரன் படம் பார்த்துட்டேன்." என்று கத்திக் கொண்டே வந்தான் ரஜினி முத்து. முகம் எல்லாம் கருப்பும், சிவப்புமாக வண்ணப் பொடிகள் ஒட்டி மீசையில் வேர்வை சொட்ட கோமாளி மாதிரி வந்து நிற்கிற பிள்ளையைப் பார்த்து "டேய்... " என்று கூப்பிட்டுக் கொண்டு வந்த அவன் அம்மா வசந்திக்கு சிரிப்பு வந்து விட்டது.

மேலும் »

நிகழ்வுகள், பிறமதங்கள்

விசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

February 4, 2011
-
விசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

அமெரிக்காவின் சான்ப்ரான்சிஸ்கோவில் ட்ரை-வேலி என்ற கிறிஸ்தவ பல்கலைக் கழகம் ஒன்று பல மில்லியன் டாலர்கள் பெற்றுக் கொண்டு, பலருக்கு மாணவர்கள் என்ற அங்கீகாரம் கொடுத்து விசா பெற வழி செய்து மோசடி செய்திருக்கிறது இன்றைய இணைய யுகத்தில் ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றி, அதன் தரத்தைப் பற்றி எல்லாம் வெகு எளிதாக அறிந்து கொள்ள முடியும், இதெல்லாம் தெரியாமலா அந்த மாணவர்கள் லட்ச லட்சமாக பணத்தைக் கொட்டினார்கள்?

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

ஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை

November 11, 2010
-
ஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை

ஒபாமா வந்தார். இந்தியாவை புகழ்ந்தார். காந்தியை புகழ்ந்தார். இந்திய ஜனநாயகத்தை பாராட்டினார். அமெரிக்காவுக்கு வணிக வாய்ப்புகள் பல ஒப்பந்தங்களாக கையெழுத்தாகின. இந்தியாவுக்கு சில உறுதி மொழிகள் தரப்பட்டது. நடைமுறையில் இந்த பயணத்தினால் நமக்கு ஏற்பட்ட நன்மை என்ன? ஒபாமாவின் உறுதிமொழிகள் செயலாக்கம் பெறுவது சாத்தியமா?

மேலும் »

சமூகம், நிகழ்வுகள், வரலாறு, வீடியோ

கள்ளக் காதல்

October 7, 2010
-
கள்ளக் காதல்

ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் »

அரசியல்

காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை

September 29, 2010
-
காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை

தீபிகா படுகோன் இவரைத்தான் இளைஞர்களுக்கான மிகச்சிறந்த முன் உதாரணம் என்றார். அழகிய சிவந்த தோற்றம். வழு வழுப்பான கன்னங்கள். அறிவாளி என்று பறை சாற்றும் கண்ணாடி அணிந்த பார்வை. நேரு – இந்திரா – ராஜீவ் என்ற அரச பாரம்பரியம். நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதற்கொண்டு எல்லோருடைய பாராட்டும் புகழ்ச்சியும் சொரியப் படும் ஆளுமை. ராகுல் காந்தியை ஏறக்குறைய எல்லோருமே பிரதமர் ஆவார் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர் யார்?

மேலும் »