ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்...
"நீங்கபாட்டுக்கு மாதவி வீட்டிலே போய் இருந்துட்டீங்க. அப்போ உங்க அம்மாவும் அப்பாவும் என்னைப் பாக்க வந்தாங்க. என்னைப் பாக்க வரும்போது உங்கமேலே இருந்த செமத்தியான கோவத்தை மறச்சுக்கிட்டுத்தான் வந்தாங்க. உங்களைப் பிரிஞ்சு இருக்கற என்னைப் பத்தி நாலு நல்ல வார்த்தை பேசினாங்க. நான் ஒண்ணுமே பேசல. சும்மா ஒரு புன்னகையில்லாத புன்னகைதான்...
"இப்படியே வீடு வீடாக மரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருப்பாயா? இல்லை, படிக்கவும் செய்வாயா?". "ஐயா, நான் படிக்கவும் செய்வேன், விளையாடவும் விளையாடுவேன்" என்றான் நரேன். உடனே அவனைச் சோதித்தார் கிழவர். புவியியல், கணிதம் இவற்றில் கேள்வி கேட்டார். கவிதைகள் ஒப்பிக்கச் சொன்னார். இந்தக் கடினமான தேர்வில் சிறப்பாகத் தேறினான் நரேன். கிழவர் அவனை ஆசீர்வதித்து...
மழைக்காலத்தில் ஒருநாள் இரவு வெகு நேரம் கழித்து நெடுந்தூரம் நடந்து களைத்த வழிப்போக்கர்கள் வந்தனர். அவர்கள் ஆபுத்திரனிடம் "எங்களுக்குப் பசியாக இருக்கிறது. உணவு கிடைக்குமா?" என்று கேட்டனர். மற்றவர்களின் பசியைப் பார்க்கப் பொறுக்காத ஆபுத்திரனுக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. அவனுடைய பிட்சைப் பாத்திரம் அலம்பிக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. என்ன செய்வது?
"நானும் என் மனைவியும் சேர்ந்து மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். அதை அனுபவிப்பதில் தவறென்ன?" நியாயமான கேள்விதான். நீங்கள் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் ஒவ்வொரு பொருளும், அது தேவையான மற்றொருவருக்கு விலையை ஏற்றிவிடுகிறது. உதாரணமாக, யாருக்காவது வேண்டுமோ இல்லையோ சில வீடுகளில் டி.வி, மின்விசிறி இவை ஓடியவண்ணம் இருக்கும்...