Blog Archives

வழிகாட்டிகள்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4

June 16, 2008
-
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4

"இந்த மரத்தில் ஒரு பிரம்மராட்சசன் வசிக்கிறான். இரவு நேரத்தில் காலோடு தலை வெள்ளைவெளேரென்று உடையணிந்து வருவான். பார்க்கவே பயங்கரமாய் இருக்கும்" என்றார். பெரியவர். நரேந்திரனுக்கு இது புதுச் செய்தி. பிரம்ம ராட்சதன் இரவில் உலாவருவதைத் தவிர வேறென்ன செய்வான் என்று கேட்டான்.

மேலும் »

கேள்வி-பதில்

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?

June 14, 2008
-
இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?

மனிதருக்கிடையே பழக்க வழக்கங்களில் இருக்கும் நியாயமான வேறுபாடுகளை இந்து மதம் ஏற்கிறது. அதுவுமன்றி, மாமிசம்தான் காட்டில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதல் உணவாக இருந்தது. அவரவர் குடும்ப வழக்கப்படி மாமிசம் உண்ணுவதை இந்துமதம் அங்கீகரிக்கிறது. ஆனால், அஹிம்ஸையை ஏதோ சமணமும் பௌத்தமும் மட்டுமே கண்டுபிடித்தது போலப் பேசுவது ஒரு கண்கட்டு வித்தைதான். தொடக்ககால சமணமும் பௌத்தமும் துறவறத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்தன. இந்து மதத்திலும் நான்காவது ஆசிரமமான சன்யாசத்துக்குப் போகும்போது ஊனுண்ணாமை வற்புறுத்தப்படுகிறது என்பதை நாம் காண வேண்டும். (இரண்டு மதங்களுமே மதப் பரவலின் கட்டாயத்துக்காக இல்லறத்தாருக்கும், பெண்களுக்கும் தமது மதத்தின் கதவுகளைத் திறந்துவிட்டன.) திருவள்ளுவர் உட்பட இந்து...

மேலும் »

இந்து மத விளக்கங்கள்

பல கடவுளரா, ஒரே கடவுளா?

June 9, 2008
-

வீட்டில் சுழலும் மின்விசிறி காற்று வீசுகிறது. அதே வீட்டின் குளியலறையில் இருக்கும் வெந்நீர்த் தொட்டியில் சுடுநீர் வருவதற்கும் காரணம் அதே மின்சாரம்தான். அதே மின்சாரம் ஏ.சி.யில் குளிர்ச்சியைத் தருகிறது. மின்விளக்கில் ஒளியாக இருக்கிறது. எனக்கு ஆற்றலின் இந்தப் பல வடிவங்கள் பிடிக்கவில்லை என்று சொல்கிறவன் நேரடியாக மின்சாரக் கம்பியைத் தொட்டால் ஷாக் அடித்து விழவேண்டியதுதான். மின்சாரம் நேரடியாக எந்தப் பலனையும் தருவதும் கிடையாது. குணம் குறியில்லாத இறைத்தத்துவம் எல்லாவற்றையும் கடந்தது. அது கடவுள், பிரம்மம் என்ற சொற்களுக்கும். ஏன் மனதுக்கும் கூட அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஓர் இறைவனைச் சொல் வடிவத்தில் அழைக்கும்போதே அதற்கு ஒரு பெயர் வந்து...

மேலும் »

வழிகாட்டிகள்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3

June 7, 2008
-
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3

செயல்முறை தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியோ, தாய்நாட்டின் மீது ஏற்படும் காதல் உணர்வோ அல்ல. மாறாக, சக தேசத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கான வெறி. நான் இந்தியா முழுதும் நடந்தே சுற்றியிருக்கிறேன். மக்களின் அறியாமை, துயரம், வறுமை இவற்றை என்னிரு கண்களால் பார்த்திருக்கிறேன். என் ஆன்மா பற்றி எரிகிறது. இந்தக் கொடிய நிலையை மாற்றும் பேராசை என்னை எரிக்கிறது.

மேலும் »

கவிதை

இந்து மகத்துவக் கும்மி

June 6, 2008
-

கும்மியடி பெண்ணே கும்மியடி - கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் - தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.

மேலும் »

வழிகாட்டிகள்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 2

May 29, 2008
-
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 2

"சுதந்திரம் பெறுவதென்பது, இயற்கையை வெல்வதன்மூலம்தான், ஓடி ஒளிவதன்மூலம் அல்ல. கோழைகளுக்கு வெற்றி கிடையாது. அச்சத்தையும், துன்பத்தையும், அறியாமையையும் ஓடவைக்கப் போரிட்டே ஆகவேண்டும்"

மேலும் »

கவிதை

ஹிந்து எழுச்சிப் பாடல்

May 26, 2008
-

இந்து நானென்று சொல்லடா! - நீ நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!

மேலும் »

வழிகாட்டிகள்

சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்

May 22, 2008
-
சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்

இதய உணர்ச்சி இல்லாத, வறட்டு அறிவு நிறைந்த எழுத்தாளர்களையோ, பத்திரிகைகளில் அவர்கள் எழுதுகின்ற உயிரற்ற கட்டுரைகளையோ பொருட்படுத்தாதீர்கள். நம்பிக்கை, இரக்கம்- திடநம்பிக்கை, எல்லையற்ற இரக்கம்! வாழ்வு பெரிதல்ல, மரணம் பெரிதல்ல, பசி பெரிதல்ல, குளிர் பெரிதல்ல; இறைவனின் மகிமையைப் பாடுவோம். முன்னேறிச் செல்லுங்கள், இறைவனே நமது தளபதி. வீழ்பவர்களைத் திரும்பிப் பாரக்காதீர்கள். முன்னோக்கியே சென்று கொண்டிருங்கள், மேலும் மேலும் செல்லுங்கள். சகோதரர்களே, இவ்வாறு நாம் போய்க்கொண்டேயிருப்போம். ஒருவன் வீழ்ந்ததும் மற்றொருவன் பணியை ஏற்றுக்கொள்வான்.

மேலும் »

வழிகாட்டிகள்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்

April 28, 2008
-
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்

ஒரு தலைமுறை முந்தைய பொதுவுடைமையாளர்கள் சுவாமி விவேகானந்தரை 'வீரத்துறவி' என்று புகழ்ந்து பேசுவர், எழுதுவர். "சூறாவளித் துறவி" (The cyclonic saint) என அமெரிக்கத் தாளிகைகள் அவனை வர்ணித்து மகிழ்ந்தன. அடிமைப்பட்டுத் தன்னம்பிக்கை இழந்து கிடந்த பாரதத்தின் முதுகெலும்பில் மின்னற் சாரமேற்றி நிமிர்ந்து நிற்கவைத்த தீரன் அவன். அவனுடைய வாழ்க்கை அவனுடைய தோற்றத்தைப் போலவே வசீகரமானது. அவனுடைய சொற்கள் அவனுடைய கண்களைப் போன்றே ஒளிவீசுவன. அவனுடைய அறிவு அவனுடைய தோள்களைப் போல விசாலமானது. அவனுடைய சிந்தனை அவனுடைய பார்வையைப் போன்றே ஆழமானது.

மேலும் »