Payday loans Cialis online
payday loans Car insurance

Blog Archives

இந்து மத விளக்கங்கள், கோயில்கள்

ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்

ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்

இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத் தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர். யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம்... [மேலும்..»]

இலக்கியம்

தமிழில் ரகுவம்சம்

தமிழில் ரகுவம்சம்

யாழ்ப்பாணத்து அரசகேசரி என்பார் காளிதாசரின் இரகுவம்சத்தை தமிழில் செழுங்கவிகளாக.. பெருங்காப்பியமாகப் படைத்திருக்கிறார்.. இளமைக்காலத்தைத் தமிழ்நாட்டில் கழித்த அரசகேசரி, யாழ்ப்பாண அரச வம்சத்தைச் சேர்ந்தவராதலில் தமது வம்சத்திற்கும் தெய்வீகத் தொடர்பைக் கற்பிக்க இக்காவியம் மூலம் முயன்றிருக்கலாம்.. இந்நூலில் வெளிப்படும் கவித்துவச் சிறப்புக்கும் மேலாக வித்துவச்சிறப்பு விரவியிருக்கிறது.. அரசகேசரி ஒரு கவிஞனாக, மந்திரியாக, முடிக்குரிய இளவரசனின் பாதுகாவலனாக, பக்திமானாக, இன்னும் போர்த்துக்கேய கத்தோலிக்க வெறியர்களிடமிருந்து யாழ்ப்பாண அரசை காக்க முனையும் வீரனாக பல பரிணாமங்களைப் பெறுவது... [மேலும்..»]

ஆன்மிகம், சமூகம், வரலாறு

வேல் உண்டு, பயமேன்?

வேல் உண்டு, பயமேன்?

யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது.... இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்.. யாழ். மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்.. நல்லூரில் கந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர். [மேலும்..»]

ஆன்மிகம்

கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்

கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்

புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார்... ‘எந்த விக்கிரகத்தின் வலது கால் அசைவதைக் காண்கிறாயோ, அதுவே சரியானது என்று காட்டு’ எனக் கட்டளையிட்டாள்... “ஒரு மார்பிழந்த திருமாபத்தினி” என்று போற்றப்படும் கண்ணகியின் கற்பு அவளை தெய்வீக நிலைக்கு உயர்த்தியிருக்கிறது... அம்பாள் திருவடிவத்தை கிறிஸ்துவின் அன்னையான மரியாள் என்று காட்டினார்கள். வந்தவர்கள் மகிழ்ந்து அக்கோயிலை கத்தோலிக்க மரபுப்படி மாற்றி ஜெபமாலை மாதா என்று போற்றினார்களாம்.. [மேலும்..»]

ஆன்மிகம், பண்டிகைகள்

அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்

அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்

..உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்... [மேலும்..»]

ஆன்மிகம், சைவம்

வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு

வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு

முகலாயப் படையெடுப்பாளர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புகுந்தார்களாம். அங்கே தூணில் அமைந்திருக்கிற அஷ்புஜ அக்னி அகோர வீரபத்திரரின் வனப்பையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் கண்டு... கர்நாடக நாட்டுப்புறவியலில் “வீரகசே” என்ற கூத்து மரபு உண்டு.. இலங்கையில் யாழ்ப்பாணத்து கட்டுவன் பகுதியில் வீரபத்திரக் கூத்து அப்பகுதியில் வதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் ஆடப்பட்டு... குளிர்ச்சியான இடத்தில் மட்டுமே வசிக்கும் தேள்கள் இவருக்கு மாலையாகின்றன. சிலந்திப்பூச்சி இவருடலில் விளையாடி மகிழ்கிறது... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை

பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை

சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர் எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு.. [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், வரலாறு

அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

அருணகிரிநாதரின் ஜனனம் எப்படி, எப்போது ஏற்பட்டது? தாய் தந்தையர் யாவர்? பரவலாக கூறப் படுவது போல அவர் தன் வாழ்வில் தனது பொருள், இளமை, அழகு, அறிவு எல்லாவற்றையும் பறி கொடுத்தனரா? மேலும் பல நம்பிக்கைகள், ஐதீகக் கதைகள்.. இவற்றை எல்லாம் மீள்பார்வை செய்ய தூண்டும் கட்டுரை... [மேலும்..»]

இந்து மத மேன்மை, வரலாறு

இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்

இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்

இலங்கையில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது... இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்... கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும்... இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.. [மேலும்..»]

ஆன்மிகம், சமூகம், பொது

நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்

நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்

நமது கோவில்களில் எத்தனை வகைகள் உண்டு? பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்கள் எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன? பெரும் தூண்களும், மண்டபங்களும், கலை நயத்துடன் விளங்கும் ஒழுங்கின் பின்னணி என்ன? அருளொளி வீசும் தெய்வீக நிலையங்களான கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு நாம் செய்ய வேண்டியது என்ன? [மேலும்..»]